Tuesday, September 06, 2016

சண்டைத்தோழி!

அரிதான கொலை வழக்கு என்பதற்காக மாநில முதல்வர் அது பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை


===========
2 கொலையாளி பொருளாதார ரீதியில் பலவீனமாக இருப்பதால் இந்த கேசில் சட்டம் தன் கடமையை சரியாகச்செய்து உரிய தண்டனை தரும் என்பது ஒரு ஆறுதல்=============3 எல்லா ரயில்நிலையத்திலும் கேமரா வைக்கப்பட்டு விட்டால் இனி கொலை யாளி உஷார் ஆகி கேமரா இல்லாத இடங்களை கொலை நடத்தும் இடமாக தேர்ந்தெடுக்கக்கூடும்
===========
4 ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தில் குற்றவாளியின் கைரேகை இல்லாதது வழக்கின் திசைக்கு பின்னடைவு
============5 காயம் அடைந்த நிலையில் குற்றவாளியை நீதிபதி நேரில் சந்திப்பது அனுதாபத்தை தீர்ப்பில் புகுத்தி விடக்கூடும் அவரையும் அறியாமல்
===========6 சாதாரண ஏழை கொலையாளியாக இருக்கும்போது 8 நாட்களில் பிடித்த போலீஸ்க்கு பாராட்டுகள்.அதே சமயம் அரசியல் கொலை வழக்குகளில் மெத்தனத்துக்கு கண்டனம்==========7 தான் கொலை செய்த பெண்ணின் செல் போனை எடுத்து வந்து அதை ஆன் பண்ணா லொக்கேசன் காட்டிக்கொடுத்துவிடும் என்பது படித்த நபருக்கு தெரியாதா?=============

8 குற்றவாளியை எப்படி சாமார்த்தியமாக பொறி வைத்துப்பிடித்தோம் என்பதை போலீஸ் விளக்கும்போது அடுத்த கட்ட குற்றவாளிகள் உஷார் ஆகின்றனர்


===============9 எந்தக்குற்றவாளியும் தான் எப்படி சாமார்த்தியமாக போலீசை ஏமாற்றினம் என்பதை தண்டோரோ போட்டுக்கொள்வதில்லை==============10 சுவாதியின் போனில் வேறு ஏதோ முக்கியத்தடயம் சிக்கி அதைக்கைப்பற்ற யாராவது ராம்குமாரை பலி ஆடாக ஆக்கி இருக்க வாய்ப்பு உண்டு
============11 ஒரு தற்கொலை முயற்சியை நேரில் கண்ட இன்ஸ்பெக்டரே திகைப்படைஞ்சு 1 நிமிசம் நின்னாராம்.ஸ்வாதி கொலையை நேரில் கண்ட பொதுஜனம் திகைத்ததில் என்ன தவறு?
===========12 ராம் குமார் கற்றுத்தந்தது இஞ்சினியரிங் படிச்சா ஆடு மாடு மேய்க்கும்போது கூட இந்த உலகம் அவனை சுதந்தரமா விடாது என்பதே
==============13 கொலையாளி மும்பை ,கல்கத்தா என ரயில் ஏறி தப்பிச்செல்லாமல் சொந்த ஊரில் சொந்த வீட்டில் தங்கி ஏன் மாட்டிக்கொண்டான்?
===========14 கொலையாளி தற்கொலை முயற்சி செய்தார் என சொன்னா போதாதா?எதுக்கு போட்டோ ,வீடியோ ஆதாரம் வெளியிடனும்?
============15 எந்த நடிகையோட போட்டோவை எந்தப்பெண் ட்வீட்டர் வெச்சாலும் நம்மாளுக பூரா ஒரே பார்முலா தான் =மிஸ் /மேடம் டிபி ல இருப்பது உங்க போட்டோவா?

============

16 ராம் குமாரின் தற்கொலை முயற்சி வழக்கை ஈசியா உடைக்கலாம்.போலீஸ் தான் உண்மை பேசவிடாமல் அப்டி செய்ததுனு பிளேட்டை திருப்பிப்போட வாய்ப்பு இருக்கு

=============

17 காதலி கிட்டே ஆர் யூ ஆன் ;லைன்?ன்னு கேட்கத்தேவை இல்லை, குட் நைட் சொன்னா ஓடி வந்து டேய், அதுக்குள்ளே என்ன அவச”ரம்பா”


===============

18 உள்ளூர் ல ஷூட்டிங்னா சாதா ஸ்டார்

அண்டை மாநிலத்தில் ஷூட்டிங் னா மீடியம் ஸ்டார்.

அண்டை நாடுகளில் ஷூட்டிங்னா அல்ட்டிமேட் ஸ்டார்.

============

19 அழ வெச்சவங்களே கண்ணீரைத்துடைத்து விடுவதுதான் தர்மம், ஆனால் நடைமுறையில் இல்லை. உதா - வெங்காயம், நீ


=============

20 அருகில் இருக்கையில் ஏதேனும் சண்டை போடுவாய், விலகி வந்து விட்டால் ஏன் விலகினீர்கள் என்று சண்டை போடுவாய், நீ ஒரு சண்டைத்தோழி!


===================0 comments: