Saturday, September 03, 2016

இனிமே யாரும் கவிதை எழுதிட முடியாதா? கவிதைக்காதலர்கள் அதிர்ச்சி

1  ADMK,DMK வை தோற்கடிக்க வேண்டும் .-ஜி.ராமகிருஷ்ணன் # 42% + 41% வாக்கு வங்கி கட்சி யை எதிர்க்க அட்லீஸ்ட் 17% வாக்கு வங்கி உள்ள கட்சிகளும் ஒண்ணு சேரனும்

==============


2 கறுப்பு பணத்தை மீட்க உதவுங்க! ஆடிட்டர்களிடம் பாரிக்கர் வலியுறுத்தல் # நாட்டில் உள்ள அனைத்து ஆடிட்டர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினால் கறுப்புப்பணம் பிடிபடும்


=================


====================

4  அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம்!
#MONEY கண்டன் விடாக்கண்டன் கொடாக்கண்டன் ஆக இருந்திருப்பாரு.ஊழல் ல ஷேர் கொடுக்கலை போல


============


5   லட்சிய தி.மு.க., அரசியலில் இதுவரை ஒதுங்கியிருந்தது. இனி வரும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.-டி.ராஜேந்தர்:# உங்க ஃபேமிலில இருக்கும் 5 பேர் போக மீதி ஆட்களுக்கு என்ன செய்வீங்க?===================
6  தேர்தல் கூட்டணி என்பது வேறு; மாற்று அரசியல் என்பது வேறு. தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் வரும், போகும்.-மகேந்திரன்:  # நாகரீகமா சொன்னா இது சந்தர்ப்பவாதம், ஓப்பனா சொன்னா மொள்ளமாரித்தனம்
================
7  போலீசாருக்கு பொதுமக்கள் உதவி செய்தாலே, 90 சதவீத குற்றங்களை தடுக்க முடியும்-போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் # உதவி செஞ்சா உபத்திரவம் செய்வீங்க
=====================
8  போலீஸ் சைக்கிளில் சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது சரி வருமா?-கருணாநிதி-# மோட்டார் சைக்கிள் என்பதை சுருக்கி ட்டோம்னு சமாளிப்பாங்களோ?================
9 இளங்கோவன் ஒரு நாகரிகமான அரசியல்வாதி அல்ல.-இளங்கோவனின் தம்பி இனியன் சம்பத் # தமிழக அரசியலில் அண்ணன் - தம்பி -ன்னாலே அடிதடி தான் போல. போட்டி, பொறாமை
=======================10  பொய் வாக்குறுதிகளின் 'போஸ்டர் பாய்' மோடி கிண்டல் அடிக்கிறது காங்., இணையதளம் # காங் பொய் முகத்தின் வேஸ்டர் கேர்ள்-னு அவங்க சொல்வாங்களே=============11 பிச்சைக்காரர்கள் இல்லா டில்லி:ஆம் ஆத்மி திட்டம் # அம்மா தாயே ஓட்டுப்போடுங்கன்னு எந்த அரசியல்வாதியும் பிச்சை எடுக்க மாட்டாங்களா? இனி. சபாஷ்=================12 தேவாங்கு என திட்டியதால் வெட்டிகொன்றேன் ஸ்வாதி கொலையில் ராம்குமார் வாக்குமூலம் # தேவாங்குன்னு திட்டுனா உயிரை வாங்குனு சொல்லிக்குடுத்தாங்களா?=======================================
14  உள்ளாட்சி தேர்தலில் ம ந  கூ  தொடரும்  . தே.மு.தி.க.,வின் நிலை குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்,- வைகோ # ஒரு ஃபோன் போட்டு நீங்களே கேட்டுச்சொல்லுங்க பார்ப்போம்


===================

15  கைதான ராம்குமார் அம்பு மட்டுமே.சுவாதி கொலையில் தீவிர விசாரணை தேவை-H  .ராஜா  # இதை நாம சொன்னா வம்பு, அரசியல்வாதிகள் சொன்னா விசாரணை நடக்கும்


=================


16 'சரக்கு' விற்ற 6 பெண்கள் கைது:200 பாட்டில்கள் பறிமுதல் # ஒரு பெண்ணின் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம்


===================

17 பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வரும் ஒரே இயக்கம், தி.மு.க.-ஸ்டாலின் # லோக்சபா எலக்சன்ல திமுக சார்பா 2 பெண்களுக்கு மட்டும்தானே இடம் கொடுத்தீங்க?

========================

18 . தமிழகத்தில் நாங்கள் வேரூன்றி விட்டோம்; ஆனால், ம.தி.மு.க.,வோ கோலுான்றி நடக்கக்கூட முடியாத, பரிதாப நிலையில் உள்ளது.-தமிழிசை # வேரோட சாய்ச்சிட்டாரு இல்ல?

===================

19  

ராணுவத்தில் மகளிர் படைப்பிரிவு:மனோகர் பாரிக்கர் யோசனை # பொண்ணுங்க நல்லா சண்டை போடுவாங்கன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு=============


20 

0 comments: