Thursday, September 08, 2016

இம்பாசிபிள்னு தெரிஞ்சும் ஏன் இப்டி இம்போசிஷன் எழுதிட்டு இருக்கீங்க?


1 இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட மிகப்பெரிய நாட்டுக்கு, 78 அமைச்சர்கள் என்பது அதிகப்படியானது அல்ல-,-வெங்கையா நாயுடு:  #  'சிறிய அமைச்சரவை சிறந்த நிர்வாகம்'னு பெருமிதமா பேசியது யாரு?


===============
'2 உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு சதவீதம் குறைந்தால், கட்சி கலைக்கப்பட்டு, பா.ஜ.,வுடன் சேர வாய்ப்பு உள்ளது' என விஜயகாந்த் பேசி   உள்ளார்-சந்திரகுமார் # நீங்க எதுக்கு அவங்க கட்சி ரகசிய ஆலோசனைக்கூட்டத்துக்குப்போனீங்க?


=================


3 டில்லியில், பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., மீது போலீசார் வழக்குப் பதிவு # கட்சி பேரை கெடுக்கறதுக்குன்னே யாராவது அப்பப்ப எதாவது செஞ்சுடறாங்க

=======================
4  மத்திய அமைச்சர்களில் 72 கோடீஸ்வரர்கள்:ரூ.113 கோடியுடன் அருண் ஜெட்லி முதலிடம் # சுருக்கமா ஒரு கண்ட்டெய்னருக்கு சொந்தக்காரர்னு சொல்லலாம்


====================


5  கருப்புப் பணத்தை அறிவித்த ரகசியம் பாதுகாக்கப்படும்:வருமான வரித்துறை

# தயவு செஞ்சு வரி கட்டிடுங்கப்பா.ரொம்ப கெஞ்சறாங்க


=============

6 இங்கிலாந்தில் வேறொரு பெண்ணிடம் முத்தம் வாங்கிய காதலனின் வாயை அறுத்த காதலி எந்த "வாய்"ப்புக்கிடைத்தாலும் வேணாம்பாரு

=============

7 மதிமுகவின் புதிய சேனல் மதிமுகம் டிவி- வைகோ தொடங்குகிறார் # இதுக்கான செலவு உத்தேசமா 1500 கோடி இருக்குமா?

============

8 கொடைக்கானல், விழுப்புரம், தருமபுரி என தொடரும் போதை சாக்லேட்டுக்கள் பறிமுதல்!# அரசுக்கு கசப்பான செய்தி


============
9 தேமுதிகவில் குடும்ப அரசியல் நடப்பதால் திமுகவில் இணைகிறேன் - மா.செ. ராஜன் # சுத்த சைவம் தான் சாப்பிடுவேன்் மிலிட்ரி ஹோட்டல் எங்கே?


===========
10 சிறுமி கடத்தல் வழக்கில் கோப்புகள் மாயம்.ி குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு!# அட்லீஸ்ட் இந்த தீர்ப்பு கோப்பாவது பத்திரமா பார்த்துக்குங்க


================

11 காய்கறி, பழங்கள் சந்தோஷத்தை கொடுக்கும்: புதிய ஆராய்ச்சியில் தகவல் # இது பழம் பெரும் தகவல் ஆச்சே?


==========

12 தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்: ராகுலை சந்தித்த பிறகு குஷ்பு பேட்டி # இனி குஷ்பூ வீடு அரண்மனை தான்


===============

13 தமிழகத்தில் அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு முடிவு: # பாவம்.ராம் தாஸ் அய்யாவும் கலைஞரும்.அரசியல் பண்ண இதுல வழி இல்ல

===============

14 குளிர் பிரதேச பகுதிகளில் மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமில்லை-பொன் ராதா # அப்போ ஊட்டி, கொடைக்கானல்,காஷ்மீர் மக்கள் நாசமாப்போனா பரவால்லையா?

===============


15 தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் என்னை நியமிக்க கட்சி மேலிடம் ஆசைப்பட்டால், ஏற்க தயார் தான்; ஆனால், சாத்தியம் இல்லை.-குஷ்பூ # இம்பாசிபிள்னு தெரிஞ்சும் ஏன் இப்டி இம்போசிஷன் எழுதிட்டு இருக்கீங்க?

==============

16 நிலக்கரி ஊழல் வழக்கில் திருப்பம் # கோப்புகள் எல்லாம் காணாம போயிடுச்சா? இது நமக்குப்புதுசா என்ன?

================


17 புனித கங்கை நீர் விற்பனை துவக்கம் # எப்போ ஒரு பொருள் விற்பனைக்கு வருதோ அப்பவே அதன் புனிதத்தன்மை போயிடும்

==============


18 உள்ளாட்சித்தேர்தல்- ஒரு ஓட்டின் விலை ரூ.200 : தி.மு.க. திட்டம் # எப்படியோ சம்பாதிச்ச பணம் வெளில வந்தா சரி


==============

19 தி.மு.க.,வில் ஐக்கியம் ஆனார் விஜயகாந்தின் ஆலோசகர் # இது விஜய்காந்த்தின் ஆலோசனையா? சந்திரகுமார் ஆலோசனையா? தெரியலை


============

20 ஐகோர்ட்டில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு : முதல் மனைவியின் மகன் வெறிச்செயல் # ஒன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம்,சம்சாரம்,செல்


============

0 comments: