Monday, September 05, 2016

ஏன் டாஸ்மாக்கிற்கு மட்டும் அம்மா டாஸ்மாக்னு வைக்கலை?

வேந்தர் மூவிஸ் மதன் விசாரணை-் தவறு நிகழ்ந்தால், வழக்கு CBIகு மாற்றப்படும் : நீதிமன்றம் எச்சரிக்கை # சிபிஐ தவறு செய்தால் கிடப்பில் போடப்படும்============2 நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்- அமைச்சர்களுக்கு் மோடி அறிவுரை # அப்போ நாங்க வேற பொழப்பைப்பார்த்துக்கறோம்?பாங்களே==========3 திமுக தோற்கவில்லை

வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது -கலைஞர்# ஊழல் வழக்கில் கனிமொழி ஜெயிலுக்குப்போனப்பக்கூட சிறையைப்பார்வையிடப்போனார்ம்பாரே?

==========

4 கோயம்பேடு- பணிக்கு தாமதமாக வந்ததை கண்டித்த இன்ஸ்பெக்டரை தாக்கிய ஏட்டு பணியிடை நீககம் # ஏட்டு.ஏய்யா லேட்டு?ன்னு கேட்டதுக்கு எதுக்கு பைட்டு


===========

5 வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் கிண்டி பொறியியல் கல்லூரி. # எக்சாம் பீசை விட இதுல தான் லாபம் ஜாஸ்தி வரப்போகுது


===========

6 மெட்ராஸ் ஐகோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு- பெயர் மாற்றம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் # டூ லேட்.மெட்ராஸ் எப்போ சென்னை ஆச்சோ அப்பவே மாத்தி இருக்கனும்

==========

7 தொண்டை மறுத்தாலும் தொண்டாற்றுவதை நிறுத்த மாட்டேன் - கருணாநிதி # இப்டி பேசிப்பேசியே மக்களைக்கவர்ந்து சம்பாதிச்ட்டார்

============

8 ஸ்மிருதி ராணி ஜவுளித் துறைக்கு மாற்றம் # ஜவுளித்துறையை விட்டு வெளில வரமாட்டேன்னு அடம் பிடிப்பாரோ இனி


==========

9 ரூ.25,000 கோடியில் குளச்சல் துறைமுகம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல் # எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் குடைச்சல் தர இனி வழி இல்லை


===========

10 பிரதமர் சதியால் திமுக தோற்றது: திருவாரூர் கூட்டத்தில் கருணாநிதி பேச்சு # திமுக வின் தலை விதி யால் தான் இந்த கதி என்பதை உணரமாட்டார் போல


==============

11  தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் திராவிட இயக்கம் வளரும்-கருணாநிதி: # அப்படியே  ஊழல் , வன்முறை, அண்ணன் -தம்பி சண்டை வளரும்கறதையும் சொல்லிடுங்க

======================

12  தானியங்களை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியதால் தான், பருப்பு விலை உயர்ந்துள்ளது.- சவுந்தரராஜன்: :  # உள்ளூர் விவசாயியை ஒழுங்கா கவனிச்சா நாம ஏன் அந்நியர்களிடம் கையேந்தனும்?

===================

13    ''முதல்வர், பிரதமர் பதவி வகித்தேன்; ஆனால் பணம் மட்டும் சம்பாதிக்கவில்லை,- தேவகவுடா # இவ்ருக்கும் கலைஞர் , ஜெ போல் சம்பாதிக்கலைன்னு அங்கலாய்ப்பு வந்துடுச்சு போல

====================


14  சி.பி.ஐ., விசாரணையில் ரகசியம் வெளிவரும்: * ரூ.570 கோடி குறித்து ஸ்டாலின் பேச்சு # அப்டியே அந்த 200 கோடி ,  1.75 லட்சம் கோடி க்கும் ஒரு விடிவு காலம் வந்தா தேவலை

======================


15  தமிழகம் முழுவதும் 'கஞ்சா சாக்லேட்' வேட்டை # டூ லேட்.ஆல்ரெடி ஊர் ஊருக்கு பரவிக்கிடக்கு.இப்”போதை”க்கு கட்டுப்படுத்த முடியாது

=====================


16 நெடுஞ்சாலைகளில் 'அம்மா மோட்டல்?' : அரசு பரிசீலிக்க வாய்ப்பு # எந்தத்திட்டம் தீட்டினாலும் அதுக்கு அம்மா பேர் தானா? ஏன் டாஸ்மாக்கிற்கு மட்டும் அம்மா டாஸ்மாக்னு வைக்கலை?

==============


17  
கல்வியில் அரசியல் கட்சிகளின் தலையீடு கூடாது-பிரகாஷ் ஜாவடேகர்  # அரசியல்வாதிகளுக்கும் ,படிப்புக்கும் என்ன சம்பந்தம்?கறாரா? கறாரா!

=======================

18  

மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?வெங்கய்ய நாயுடு விளக்கம் # கட்சியினர் எல்லாரும் சம்பாதிக்கனும் இல்ல========================

19  

ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தால் இருதரப்பு உறவு மேம்படும்:பிரதமர் மோடி நம்பிக்கை # இந்தியாவுடனான உறவு மேம்பட நீங்க முதல்ல டூர் புரோகிராமை முடிங்க, முடியல


================20  

0 comments: