Monday, September 16, 2013

மதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்

 

 

பெண்களுக்கான ரேஸில் நான் இல்லை! விஷால்

சினிமா நடிகன் என்ற அடையாளத்தை துடைத்தெறிந்து விட்டு பேசுவது விஷாலின் வழக்கம். பத்து வருடங்களை நிறைவு செய்த அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் வந்து விழுகிறது.... சினிமாவில் பத்து வருட நிறைவு பெரிய சாதனையான விஷயம்தான்.... வெளிப்படையாக சொல்லுங்கள்... எந்த இடத்துக்கு ஆசைப்பட்டீங்க...? இதுவரைக்குமான அனுபவம் எப்படியிருக்கு...?    லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ்!  "செல்லமே' படத்தில் நடிக்கலாம் என யோசித்ததே கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். இயக்குநர் லிங்குசாமி சார்தான் ""விஷால் ஒரு கதை இருக்கு. நீ கேளு. பிடித்திருந்தால் நடி..''ன்னு சினிமாவுக்கு அழைத்து வந்தார். 
சின்ன வயதில் உள்ளுக்குள் இருந்த சினிமா ஆசையை புரிந்துக் கொண்ட என் அப்பா, அர்ஜூன் சாரிடம் சேர்த்து விட்டார். அங்குதான் உதவி இயக்குநராக, மாணவனாக சினிமா படித்தேன். என்ன நினைத்தாரோ திடீரென்று ஒரு நாள், ""விஷால் உன் ஹைட்டு க்கும், வெயிட்டுக்கும் நீ ஹீரோவானால் என்ன?‘' என்று கேட்டுப் போனார். அது முதல் உள்ளுக்குள் ஒரு பரபரப்பு. மனசுக்குள் எதையோ தேடிப் போகிற வெளிச்சம். அந்த வெளிச்சத்தை தேடி வந்து என்னை ஹீரோவாக்கினார் லிங்குசாமி சார்.


 இப்படி ஒரு புதையல் கிடைக்கும் என்று தெரியாமல்தான் போனேன். கதையை சொன்னார். பயம் வந்து விட்டது. ""சார் முதல் படமே இப்படி ஆக்ஷன் நிறைய இருக்கு''ன்னு சொன்னேன். ஏதோ ஒரு தைரியம். ஒரு கை பார்க்கலாம் என இறங்கி வந்து விட்டேன். அந்தப் படத்தின் வெற்றி, என்னை பெரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்த்ததை நான் எதிர்பார்க்கவில்லை. இத்தனை நாள்கள் கடந்து போன வெற்றி, தோல்விகளுக்கு அந்த முதல் வெற்றிதான் காரணம்.

 
முன்னணி இடங்களில் எல்லாம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. எனக்கு இப்போது வந்துள்ள பக்குவம் என்னையே வியக்க வைக்கிறது. அக்கறையான மனிதர்கள் இப்போது என் பக்கத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.    சில நேரங்களில் எடுக்கிற எல்லா முடிவுகளின் கணக்கும் தவறிப் போனதாக உணர்ந்த நேரங்கள் இருக்கும்தானே...?  நிறைய தவறு செய்திருக்கிறேன். அது எதிர்பார்க்காத ஒன்றுதான். கதைகள் சரி வரக் கேட்காமல் தவறு செய்திருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சில இடங்களில் அதை சரி செய்துக் கொள்ள வேண்டும் என தோன்றியது உண்டு. திடீர்ன்னு ""விஷால் அவ்வளவுதான். காலி''ன்னு ஒரு வார்த்தை வந்து விடக் கூடாது என்பதில் விழிப்பாக இருந்தேன்.அதற்காக எந்த எல்லைக்கும் சென்று உழைக்கவும் காத்திருந்தேன். என்னை உரசிப் பார்த்த சில தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அது இன்னும் உத்வேகம் கொடுத்தது. நான் எப்போதும் சினிமாவைக் கொண்டாடிச் செய்கிறேன். வீண் மரியாதைகள் எனக்கு தேவையில்லை. ஆனால் துளியும் பயம் கிடையாது. வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், சின்ன மார் தட்டல் வந்து விடும். அதனால் சில தோல்விகளும் தேவைப்படுகிறது. இப்போது என் சினிமாவுக்கு, என் நடிப்புக்கு இன்னும் உயிர் வந்திருக்கிறது.


அருமையான கதை, பெரிய படம் என்று ஆச்சரியமான இடங்கள் நிச்சயமாக காத்திருக்கிறது.    இப்போது இருக்கிற சினிமா சூழலில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கீங்களே... எல்லாவற்றையும் பார்க்கும் பக்குவம், அனுபவம் என நிறைய தேவைப்படுமே...?  நிறைய காரணங்கள் இருக்கிறது. சினிமாவில் சில நேரங்களில் காசு, பணமெல்லாம் பார்க்க முடியாது. ஒரு தோல்வி வந்தால் சென்டிமெண்டில் போட்டு தாக்கி விடுவார்கள். ஆனால் அந்த சென்டிமெண்டுகளை போட்டுத் தாக்குவதுதான் என் வேலை. இங்கே வெற்றிகள் மட்டும்தான் பேசும். ஒரு சினிமா விழாவுக்கு போனா, வெற்றி ஹீரோவா போனாதான் மரியாதை. அதற்காக எப்போதுமே வெற்றியின் பக்கத்தில் இருக்க முடியாதே? ஒரு ஹீரோவா என் படங்களையே ரிலீஸ் செய்ய நான் சிரமப்பட்ட காலம் உண்டு.

"சமர்' படம் வெளிவந்த நேரத்தில், தயாரிப்பாளராக இறங்க வேண்டிய நேரம் இதுதான் என்று தோன்றியது. அதற்காகதான் இந்த "விஷால் ஃபிலிம் பேக்டரி'. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் "பாண்டிய நாடு' படத்தை தயாரித்து நடிக்கிறேன். நம்ம பணம், நம்ம காசு போட்டு நடிக்கும் போது, இன்னும் கொஞ்சம் பொறுப்பு அதிகமாகிறது. அப்படியென்றால் இது நல்ல விஷயம்தானே.    தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பிடித்த ஹீரோவாகவும் இருக்கீங்க... அதே சமயம் அர்ஜூன் ஐஸ்வர்யா தொடங்கி வரலெட்சுமி, நயன்தாரா வரைக்கும் எல்லோருக்கும் நீங்கள் ஃப்ரெண்ட்லி... எப்படி சாத்தியப்படுகிறது...? நிறைய பேர் இதைக் கேட்டார்கள். என்ன பதில் சொல்லுவதென தெரியவில்லை. பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ். சினிமா அதை இன்னும் அதிகமாக்கி விட்டது. இந்த பத்து வருட அனுபவங்களில் இதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ஆர்யாவை ரொம்பவே பிடிக்கும். "நான் கடவுள்', "பாஸ் என்கிற பாஸ்கரன்', இப்போ கூட "ராஜா ராணி'ன்னு அவரும் பெண்களுக்கான இடத்தில்தான் இருக்கார். ஆர்யா உண்மையில் நல்ல உயரம், மனுஷன், ரொம்பவே மேன்லி. ஆர்யாவுக்குதான் சினிமாவில் அதிகம் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதைப் போலவே நடிகைகளுக்கும் ஆர்யாவைத்தான் ரொம்ப பிடிக்கிறது. அந்த ரேஸில் இருந்து இப்போது நான் கொஞ்சம் விலகி வந்திருக்கிறேன்.
    பட படவென தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் வந்து விட்டார்கள்....? யார் ரொம்ப உயரத்துக்கு போக தகுதியுடையவர் என்று நினைக்கிறீர்கள்...?  ஒவ்வொருத்தரும் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள். நிறைய பேசாமல், உபதேசம் பண்ணாமல் கதைக்கு ஏற்றாற்போல், தன்னை மோல்ட் செய்துக் கொள்ளும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர்., ரஜினி வந்த விதம் பார்த்தா, வளர்ந்த விதம் பார்த்தா பளீச்சென ஒரு உண்மை புரியும். மக்கள் மனதில் நிலைத்து அதன் பின் கொடுத்த வெற்றிகளை, இப்போது வந்தவர்கள் புரட்டிப் போடுகிறார்கள். நல்ல உழைப்பு இருந்தால் முதல் படமே ஹிட் கொடுக்கிற அளவுக்கு மக்களும் தயாராகி விட்டார்கள்.


 இப்போது எல்லாமே வேறு மாதிரி இருப்பது நல்லது. ஆனால் சில நேரங்களில் அவர்கள் எல்லாம் அதிகமாக வெளிப்பட்டு நிற்கிறார்களோ என்று தோன்றுகிறது. நல்லது நடந்தால் சரி.    கொஞ்சம் கொஞ்சமாக சினிமாத்துறையின் பொது விஷயங்களிலும் உங்கள் பெயர் அடிபடுகிறது... "விஸ்வரூபம்' பிரச்னையிலிருந்தே... உங்கள் பேச்சு கவனிக்கப்படுகிறது....? என்ன ப்ளான்...?  ஆமாம், நிறைய விஷயங்கள் இருக்கு. இப்ப அது எதற்கு? பேச நிறைய விஷயம் இருக்கிறது. ஆனால் அதற்கு இது உகந்த நேரம் இல்லை. தனி மனித கோபம்தான் சில முக்கிய தீர்வுகளுக்குக் காரணமாக இருக்கும். இது அந்த விதத்தில் இருக்கலாம். எப்படியிருக்கும் என்று எனக்கே தெரியவில்லை. வரும் விநாயகர் சதுர்த்திக்கு "மதகஜராஜா' ரிலீஸ். அதற்கான வேலைகளில் இப்போது இருக்கிறேன். நேரம் வரும் பேசலாம்.    சினிமாவில் சில  நேரங்களில் காசு,  பணமெல்லாம்  பார்க்க முடியாது.  ஒரு தோல்வி வந்தால்  சென்டிமெண்டில் போட்டு தாக்கி  விடுவார்கள்.


 a

a


than = dinamani

0 comments: