Thursday, September 12, 2013

WE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா சினிமா) 30 +

தினமலர் விமர்சனம்

மெக்ஸிகோவிலிருந்து யுனைடெட் ஸ்டேட்ஸிற்கு டன் கணக்கில் போதைப் பொருட்களை கடத்தும் இலக்கில், தன் குழுவினருடன் டேவிட் கிளார்க் (ஜேசன் சுடைகீஸ்) அமெரிக்காவை விட்டு கிளம்புகிறார்.  மெக்ஸிகோவிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி சாதித்து வந்தால் இவருக்கு கிடைக்கப்போவது கோடி கோடியாக பணம், மாட்டிக்கொண்டால் இருபத்தைந்து வருடம் சிறை தண்டனை.  செய்தே தீரவேண்டும் எனும் கட்டாயத்தில் ஜேசன் அமெரிக்காவை விட்டு கிளம்புகிறார்.

இந்தக் கதையை கேட்கும் போது இது என்னவோ பாஃஸ்ட் அண்டு பியூரியஸ் சீரிஸ்களைப் போல் ஆக்ஷன் சரவெடி என்றோ, இல்லை ஓஷன்ஸ் சீரிஸ் போன்ற ஹீஸ்ட் திரில்லர் என்றோ உருவகம் செய்து கொண்டால் பிம்பிளிகி பிளாபி தான்.

இது சரியான காமெடி படம். ஹாங்க் ஓவர் படத்தில் கண்ணாடி அணிந்து அம்மாஞ்சி போல் காமெடியாக வரும் டேவிட் கிளார்க் இப்படத்தில் ரக்கட் லுக்குடன் போக்கிரி போல் வருகிறார்.  இவர் சேர்த்து வைத்த காசெல்லாம் களவாடப்படுகிறது, போதை மருந்து விற்கும் வியாபாரியாக விளங்கும் இவர் கடனடைக்க வழி ஏதுமின்றி ஸ்மக்ளிங் செய்து தரும் டீலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
 


மெக்ஸிகோவிற்கு தனியே சென்றால் கண்டிப்பாக ஜெயிலில் களி தின்ன வேண்டியது தான் எப்படியாவது ஒரு குடும்பஸ்தன் என்ற அந்தஸ்தில் சென்றால் தான் எஸ்கேப் ஆக முடியும் என்று  முடிவெடுக்கிறார். பாரில் ஸ்ட்ரிப்பராக வேலை பார்க்கும் ஜெனிஃபர் அனிஸ்டோனை தன்  மனைவியாகவும், ரோட்டில் உள்ள டெலிபோன் பெட்டிகளை உடைத்துத் திருடும் பெட்டி தீஃப் எம்மா ராபர்ட்ஸை தன் மகளாக நடிக்க இணைத்துக் கொள்கிறார்.  ஓசியில் வந்து ஒட்டிக் கொள்ளும் வில் பால்டரை தன் மகனாக நடிக்க வைக்கிறார்.

மெக்ஸிகோ செல்லும் இந்நால்வர் அங்கே எக்குத் தப்பாக மாட்டிக் கொள்கின்றனர்.  பணத்திற்காக கூடிய இந்நால்வருக்குள் ஓர் பந்தமேற்பட்டு குடும்பத்தினராய் மாறுகின்றனர்.  இதன்பின் இந்நால்வர் மெக்ஸிகோவிலிருந்து போதைப் பொருட்களைக் கடத்தி தப்பித்துக் கரை சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

நாடோடிகள் ஓர் குடும்பமாய் மாறுவது தான் கதை என்றாலும் யாரும் இதை ஒரு குடும்பப் படம் என நினைத்து ஏமாறவேண்டாம்.  இது சரியான அமெரிக்கன் அடல்ட்ஸ் காமெடித் திரைப்படம்.  வசனங்களில் டபுள் மீனிங் வைத்து நாசூக்காக கூறுவதெல்லாம் கிடையாது.  நேரடியாக ஒரே பொருள்.  சில இடங்களில் நகைச்சுவை நம்மை இருக்கையில் அமர விடாமல் குலுங்கடித்து விடுகிறது. 
 
 


இதே கதையை ஜேசன் ஸ்டேதம் விண்டீசல் முதலிய நடிகர்களை வைத்து இயக்கி இருந்தால் மிரட்டலான ஆக்ஷன் படமாய் மாறியிருக்கும். ஜெனிபர் ஆணின்ஸ்டன், டேவிட் கிளார்க் முதலிய நடிகர்களின் வெள்ளந்தித்தனம் கலந்த விடலைத்தனமான நடிப்பு இதை ரசிக்கத்தக்க காமெடியாக மாற்றியிருக்கிறது.  கேஸ்டிங் டைரக்டர் ஸ்பெஷல் பாராட்டு பெறுகிறார்.

மொத்தத்தில்: வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பஞ்ச தந்திரம் போன்ற படங்களின் வகையில் விழுகிறது வீ ஆர் தி மில்லர்ஸ்.  கண்டிப்பாக விரைவில் காப்பியடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஹேங்க் ஓவர் படத்தின் உல்ஃப் பேக்கினைப் போல் இந்த மில்லர்ஸ் குழுவும் காமெடி சீரிஸில் சீரியஸாகப் பார்க்கப்படும் எனத் தோன்றுகிறது.
 
 


thanx - dinamalar


  • நடிகர் : ஜேசன் சுடைகீஸ்
  • நடிகை : ..ஜெனிஃபர் அனிஸ்டோன்
  • இயக்குனர் :ராசன் மார்சல் டர்பர்

2 comments:

Unknown said...

மேட்டர் இருக்கா இல்லையா

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் நன்று...