Friday, September 06, 2013

. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்தா என்ன அர்த்தம் ?

மனதில் மமதை
துருவாய் வளர்ந்ததை
வலிமை என்றெண்ணித்
துள்ளிய வேளையில்
காலம் ஒரு விரலால்
சுண்டிச் சீண்டிட
பொசுக்கென தானே 
பொடிந்து போவோமே 
மமதை அழிவின் துவக்கம் 
அதில் சிக்காமல் 
நடை போட்டால் 
வெற்றி நமதே..!!

-அபி
1. நாளிதழ்களின் பார்வையில் ஒரு கல்யாணம் பண்ணவன் கல்யாண மாப்பிள்ளை.பல கல்யாணம் பண்ணினவன் கல்யாண மன்னன்--------------------2. மழை பொய்த்தாலும் ,கடலை விவசாயம் மட்டும் செம சாகுபடி--------------------


3. காதலிகள் கிடைக்கப்பெற்ற‌ பசங்களுக்குத்தான் தெரியும், ஜீன்ஸ் பேன்ட்டை விட ,சுடியை விட புடவை தான் சவுகர்யம்் என்று!--------------------


4. நான் சின்னப்பையனா இருக்கும்போது ஷ்கீலா (LAW)ன்னா ஏதோ சட்டக்கல்லூரி பேருனு நினைச்சுட்டிருந்தேன்---------------------


5. உலக மகா பொண்டாட்டி தாசன் முதல் இரவுல முந்திக்கிட்டு தானே பால் காய்ச்சி ரூம்க்கு கொண்டு போறவன்தான்--------------------------------எனைத் திரு(கி)டியே
தன்னை கூர்மையாக்கிக்கொள்கிறது
உன் பென்சில் முனைப்பார்வை
Photo: எனைத் திரு(கி)டியே
தன்னை கூர்மையாக்கிக்கொள்கிறது
உன் பென்சில் முனைப்பார்வை
6. டேமேஜர் டீன் ஏஜ் பையன் கணக்கா ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தர்றார்.கடலை போட வா-ங்கறாரோ?


------------------------


7. பொண்டாட்டி சேலையை பகல்ல மொட்டை மாடில துவைக்கும்போது லுங்கி யால் சேலையை போர்த்தி கல்லில் அடிக்கனும் # நமக்கு கவுரவம்தான் முக்கியம்-----------------------------8/ ஒரே ஒரு முத்தத்துக்கு மட்டுமே அனுமதி என்றாள்.ஒத்தைப்படை காதலுக்கு எதிரி என்று கதை கட்டி விட்டேன். நம்பி விட்டாள் ;-))


-------------------------9 முன்னே பின்னே பார்த்திராத பொண்ணு கிட்டே போன்ல ஒருத்தன் " உன் வாய்ஸ் அனுஷ்கா மாதிரி இருக்கு"னு அடிச்சு விடறான் #,டேய்


---------------------


10. அஞ்சலி போஸ்டர்களை கண்கள் எளிதில் கடப்பதில்லை.------------------------
11. கோமாளியாய் இருக்கிறேன்;என்னால் என் குடும்பமே சந்தோசமாய் இருக்கிறது


-----------------------12. எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்கியே.கொஞ்சம் என்னைக்கொஞ்சினா என்ன? என்றேன்.ஏன்? நீங்க கொஞ்ச மாட்டீங்களா? என அடுத்த சண்டை
-------------------------


13. இவனுங்க பாட்டுக்கு ரேப் பண்ணிட்டுப்போய்டுவானுங்களாம்.மைனர் என்பதால் 3 வருசம் சீர்திருத்தப்பள்ளில இருந்தா போதுமாம் .
------------------------


14. இளவயது குற்றங்களைக்குறைக்க 18 வயது வரை பெற்றோருக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் மீறினால் சிறை என சட்டம் வேண்டும்


--------------------


15. பெருகி வரும் மக்கள் தொகையைக்கட்டுப்படுத்த எல்லா ஆண்களும் இரவு 8 டூ காலை 8 வாசல் திண்ணையில் தான் படுக்க வேண்டும்.அரசு அதிரடி அறிவிப்பு-----------------------Photo: மழைமொட்டில்
மலர்கிறாய்
நீ..
16. ட்விட்டரில் நான் கற்றது.அவசரப்பட்டு நாம கா வ சொல்லக்கூடாது.ஏதாவது ஒரு பொண்ணு கா வ சொன்னா அதை ஆர் டி பண்ணிடனும் # 2 இன் 1


----------------------


17.ஒருத்தன் அவனோட சம்சாரம் கையை இறுக்கமா பிடிச்சுக்கிட்டெ வாக் போறான்.விட்டா ரன்னிங்ல கூட கை கோர்த்துட்டேதான் போவான் போல
--------------------


18. காதல் மரத்துக்கு எல்லா ஊர்களிலும் கிளைகள் உண்டு


-------------------


19. ஒரு வீணாப்போனவன் பைக்லயே கிரவுண்டை 2 ரவுண்ட் அடிச்ட்டு போறான்.கேட்டா வாக் போக மூடு இல்லையாம்.டச் விட்டுப்போகக்கூடாதாம் # அடேய்----------------------


20. பொங்கல் ,தீபாவளி மாதிரி பண்டிகை நேரத்தில் பெரிய பெரிய தலைங்க படம் மோதறது சகஜம்தான்னாலும் ஜெயிக்கப்போவது ஒரே ஒரு தல தான்


--------------------------------Photo: ஒரே வார்த்தைதான் 
வேறு வேறு குரல்களில்
வாளெடுத்து வீசிப்போகிறது 

நேற்றையவனின் வார்த்தை
இரவினைத்தொட்டு 
இன்றும் தனை எழுதிக்கொண்டிருக்க
ஏதோ ஒரு பிழையில் 
தப்பித்து வெளியேறுகிறது
கொடுக்கப்பட காத்திருந்த முத்தங்களுக்கான
மன ஒத்திகை..

நிதானித்து திரும்புவதற்குள் 
இன்னுமொரு புன்னகை 
அதே போலொரு பேச்சென
முந்தயதின் தடமொன்றை விட்டுச்செல்கிற 
நியாபக 
நியாயங்களைத்தாண்டி
வேறு வேறாய் போர்த்திக்கிடக்கும் 
முகங்களுக்குள் 
வியர்த்திருப்பதெல்லாம் விரசமெனும் 
புழுக்கம் மட்டுமே..


-Reva

3 comments:

சேக்காளி said...

//இரவு 8 டூ காலை 8 வரை வாசல் திண்ணையில் தான் படுக்க வேண்டும்//
காலை 8 டூ இரவு 8 வரை வீட்டுக்குள்ள பால் காய்ச்ச முடியாதா?

சேக்காளி said...

//காதலிகள் கிடைக்க பெற்ற பசங்களுக்குத்தான் தெரியும்.ஜீன்ஸ் பேண்ட்டை விட,சுடியை விட புடவைதான் சவுகர்யம் என்று//
இப்பல்லாம் காதலிக்கும் போதே துவைச்சு கொடுக்க சொல்றாங்களா.
//லுங்கியால் சேலையை போர்த்தி கல்லில் அடிக்கணும்//
அப்ப சரிதான் புடவைதான் லுங்கியால் போர்த்தி அடிக்க சவுகர்யமா இருக்கும்.

சேக்காளி said...

//காதலிகள் கிடைக்க பெற்ற பசங்களுக்குத்தான் தெரியும்.ஜீன்ஸ் பேண்ட்டை விட,சுடியை விட புடவைதான் சவுகர்யம் என்று//
இப்பல்லாம் காதலிக்கும் போதே துவைச்சு கொடுக்க சொல்றாங்களா.
//லுங்கியால் சேலையை போர்த்தி கல்லில் அடிக்கணும்//
அப்ப சரிதான் புடவைதான் லுங்கியால் போர்த்தி அடிக்க சவுகர்யமா இருக்கும்.