Showing posts with label சந்தானம். Show all posts
Showing posts with label சந்தானம். Show all posts

Thursday, November 05, 2015

திருப்பதியில் சந்தானம், ஆஷ்னா சாவேரிதிருமணம்!?

இணையத்தில் வெளியான சந்தானம் புகைப்படம் | ட்விட்டர் தளத்திலிருந்து
இணையத்தில் வெளியான சந்தானம் புகைப்படம் | ட்விட்டர் தளத்திலிருந்து
இன்று (அக்டோபர் 4) காலையில் முதல் திருமணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் வதந்திகளுக்கு சந்தானம் தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.
'இனிமே இப்படித்தான்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் தயாரிக்கிறார். 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இப்படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குநராக அறிமுகமாகிறார்.
இன்று (நவம்பர் 4) காலை முதலே வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நடித்த ஆஷ்னா சாவேரியை சந்தானம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியானது. திருப்பதியில் சந்தானம், ஆஷ்னா இருக்கும் புகைப்படமும் வெளியானது.
இதுகுறித்து சந்தானம் தரப்பில் விசாரித்த போது, "நவம்பர் 15ம் தேதி முதல் சந்தானம் சார் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எப்போதுமே நாயகனாக ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வது சந்தானம் சாரின் வழக்கம்.
புதிய படம் ஆரம்பிக்க இருப்பதால், இன்று படக்குழுவினரோடு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை இப்படி தவறான செய்தியாக பரப்பிவிட்டார்கள். ஆஷ்னா சாவேரி அப்படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.
மேலும், சந்தானம் நாயகனாக நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் ஆஷ்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-தஹிந்து

  • Subbu  from India
    லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா -- எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் எனது பலநாள் எதிர்பார்ப்பு... சந்தனத்தின் நக்கல் நையண்டிஎல்லாதுக்கும் அவர் தன பிள்ளையார் சுழி போட்டது ...
    885
    about 16 hours ago
     (1) ·  (0)
     
    Satish Up Voted
    • PKPradeep Kumar  from India
      காத்திருப்போம். கத்திரிக் காய் முளைத்தால் கடைத் தெருவிற்கு வந்து தானே ஆகனும்.

    Saturday, June 13, 2015

    பாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக் ரீமிக்ஸ் தான் இனிமே இப்படித்தான்?

    நூறு படங்களில் காமெடியனாக நடித்த சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்துக்குப் பிறகு தனி ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம் 'இனிமே இப்படித்தான்'.
    தான் செய்யும் காமெடிக்கு ஸ்கிரிப்ட் எழுதும் முருகன் - ஆனந்த் என்ற இரட்டையர்களை ஒரே படத்துக்கு இயக்குநர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார் சந்தானம்.
    ஆஷ்னா ஸவேரி மீண்டும் சந்தானத்துடன் நடித்துள்ள படம் என்ற இந்த காரணங்களே இனிமே இப்படித்தான் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
    எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா? சந்தானத்துக்கென்று இருக்கும் ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்துக்கொண்டாரா?
    ட்ரெய்லரை ஒரு முறை ஓட்டிப் பார்த்துவிடலாம்.
    ''என்ன லவ் பண்ண வந்தியா?''
    ''பின்னே லாண்டரிக்கு துணி போடவா வந்தேன். டிரஸ் பண்ணி வந்திருக்குறதைப் பார்த்தா தெரியல...''
    *
    ''திரும்பிப் பார்க்கிறாளா பாரு...''
    ''இல்லையே...''
    ''இப்போ... ''
    ''சட்டை கூட பண்ணலை...''
    ''அப்போ கன்ஃபார்மா லவ் தாண்டா ''
    ''திரும்பிப் பார்த்தாதானே லவ்வு...''
    ''எப்படியும் அவ திரும்பிப் பார்க்க மாட்டா. எதுக்கு மனசு கஷ்டப்படணும். அதான் நமக்கேத்த மாதிரி மாத்திக்க வேண்டியதுதானே... ''
    *
    ''உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையா...''
    ''வெளியே போறேன்னு எங்க அப்பா வாங்கினு போய் இருக்காரு...''
    *
    ''ரெண்டு பொண்ணுங்களை மெயின் டெய்ன் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?''
    ''அதை விட கஷ்டம் உன் மூஞ்சை கிட்ட பார்க்குறது...''
    *
    இது ஒரு ரொமான்டிக் காமெடி படம் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆனால், கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக ட்ரெய்லரில் சில நகாசு வேலை செய்திருக்கிறார்கள். ட்ரெய்லரில் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் கதைக்குள் அப்படியே பிரதிபலிக்கவில்லை.
    கதை?
    மூன்று மாதத்துக்குள் சந்தானத்துக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்கிற 'பெரிய' நோக்கத்தில் சந்தானத்தின் பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கின்றனர். இடையில், சந்தானத்துக்கு ஆஷ்னா ஸ்வேரியுடன் காதல் முளைக்கிறது. அந்த தருணத்தில் அகிலா கிஷோருடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இருவரில் சந்தானம் யாரை கல்யாணம் செய்துகொள்கிறார்? என்ற 'பெரிய?' ட்விஸ்ட்டுடன் படம் முடிகிறது.
    வேலை வெட்டிக்குப் போகாமல் ஜாலியாய் சுற்றும் தமிழ் சினிமாவின் வழக்கமான 133-வது ஹீரோவாக சந்தானம். சந்தானத்தின் என்ட்ரிக்கு வழக்கம்போல கைதட்டல் கிடைத்தது.
    விசில் அடிக்கும் அளவுக்கு பன்ச் பேசுவது, ஸ்டைலிஷாக நடப்பது என்று ஹீரோ மெட்டீரியலாக முயற்சித்திருக்கிறார் சந்தானம். அது ரசிகர்களிடத்திலும் எதிரொலித்தது. ஆனால், ரொமான்டிக் கதையில் புன்னகை கூட செய்யாமல் உம்மென்று இருக்கிறார்.
    ஃபாஸ்ட் பீட் டான்ஸில் சமாளிக்கும் சந்தானம் ஸ்லோ பீட் மூவ்மென்ட்களில் திணறுகிறார். சண்டைக் காட்சியில் சந்தானத்துக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.
    ஆனால், சந்தானம் நடிப்பில் எந்த முதிர்ச்சியும் இல்லை. எமோஷன் காட்சிகளிலோ, ரொமான்ஸ் காட்சிகளிலோ சந்தானத்திடம் எந்த வளர்சிதை மாற்றமும் இல்லை. இதனால் ரசிகர்களிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.
    "நாங்க லவ் பண்றோம்னு நிரூபிக்க என்னென்னவோ பண்றோம். நீங்க லவ் பண்ணலைன்னு நிரூபிக்க மாட்டீங்களா? பசங்கதான் பண்ணணுமா?" என சந்தானம் ஆஷ்னாவிடம் கேட்கும்போது பசங்க கைதட்டலும், விசிலும் அரங்கத்தை அதிரவைத்தது. ரசிகர்கள் அதிக நேரம் கைதட்டி கொண்டாடியது இந்த காட்சியில் மட்டும்தான்.
    மேக்கப் அப்பிய முகத்துடன் 'ப்ப்பா...' சொல்ல வைக்கிறார் ஆஷ்னா ஸவேரி. துடுக் வெடுக் கோபமும், ''லவ் யூ ... கொடு'' என்று கேட்பதுமாக ஜீவனே இல்லாமல் நடித்திருக்கிறார். ஆஷ்னா ஸவேரியின் லிப்ஸ்டிக் கூட அலற வைக்கிறது.
    அகிலா கிஷோர் கேரக்டருக்கேற்றார் போல வந்து போகிறார். இன்னும் நடிக்க மெனக்கெட்டிருக்கலாம்.
    போகிற போக்கில் தம்பி ராமய்யா தான் சில இடங்களில் சிரிக்க வைத்து ரிலாக்ஸ் செய்கிறார்.
    தந்திர சமையல் செய்யும் கும்பலும், சிங்கமுத்துவும் கூட காமெடி என்கிற பெயரில் போங்காட்டம் ஆடி இருக்கிறார்கள்.
    அந்த இடைவேளை ட்விஸ்ட் நன்றாகவே எடுபடுகிறது. ரசிகர்கள் நல்ல பிரேக்ல என்று சொல்ல வைக்கிறார்கள்.
    சந்தானம் காமெடியனாக நடிக்கும்போது வர்ற சிரிப்பு, ஹீரோ ஆகி காமெடி பண்ணும்போது வரலை மச்சான் என்று சீரியஸாக என்னிடம் ஸ்நாக்ஸ் கொறித்தபடி இடைவேளையில் குயிக் ரிவ்யூ கொடுத்தார் நண்பர். கதைன்னு எதுவுமே இல்லையே. இனிமேவாச்சும் வருதான்னு பார்ப்போம். சந்தானத்துக்கு ரொமான்ஸ் வரவே இல்லையே என்று அவரது தோழி தன் பங்குக்கு கமெண்ட் செய்தார்.
    இடைவேளை முடிந்ததும் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
    சம்பந்தமே இல்லாமல் பாடல் காட்சிகள் வந்துபோய்க்கொண்டிருந்தன.
    விடிவி கணேஷ் பேசும் டோன் வருகிற சிரிப்பையும் காணாமல் போன பட்டியலில் சேர்த்து வைக்க வழிசெய்தது.
    நரேன், பிரகதி, லொள்ளு சபா மனோகர், புஜ்ஜி பாபு ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை கொடுத்துவிட்டு அக்கடா என்று ஆகிறார்கள்.
    சந்தோஷ்குமார் தயாநிதி இசையில் பாடல்கள் சுமார் ரகம். எந்த பாடலும் பெரிதாய் ஒட்டவே இல்லை. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு ஃப்ரெஷ் லுக் தருகிறது. ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் பளபள என இருப்பது உறுத்துகிறது.
    ஆண்டனி எல்.ரூபன் இன்னும் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.
    அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் போதும் போதும் என்கிற அளவுக்கு பொறுமையை, சகிப்புத்தன்மையை ஏன் எல்லாவிதமான இம்சையையும் வரவழைக்கிறது.
    படம் முடிந்ததும் அவசர அவசரமாக தியேட்டரை விட்டு வெளியேறியபோது, "ப்பா.. எந்த லாஜிக்கும் இல்லை... கதையும் இல்லை... காமெடி இருந்தா போதும்னு மொக்கை பண்ணிட்டாங்களே' என்று ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் கருத்து சொல்ல எல்லாரும் புயலென புறப்பட்டது போல் ஒரு மாயை.
    'இனிமே இப்படித்தான்' என்று சொல்லியிருக்கிறார் சந்தானம். 'இனிமே இப்படித்தான்'னு இனி இன்னொரு படம் பண்ணிடாதீங்க ப்ளீஸ் என்றுதான் கேட்கத் தோணுது.
    அப்புறம்... இந்தப் படத்தின் கடைசி காட்சிகளைப் பார்த்தபோது எனக்கு ஏன் பாக்யராஜின் 'சின்னவீடு' படம் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை.


    நன்றி  - த  இந்து

    Saturday, March 28, 2015

    நண்பேன்டா - நயன் தாராவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது எப்படி - உதயநிதி பேட்டி

    “ஆறு மாதத்துக்கு முன் 'நண்பேன்டா' படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற போது நயன்தாராவைப் பார்த்தது. ஆனால் இப்பவும் கிசுகிசு எழுதிகிட்டே இருக்காங்க. கிசுகிசுக்கள் என்னோட படத்திற்கு விளம்பரம்தானே. அதனால் நான் எதையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் எனக்குக் கொடுக்கும் விளம்பரம், கோடி ரூபாய் செலவழித்தாலும் கிடைக்காது" எனச் சண்டை காட்சி படப்பிடிப்பு இடையே கெத்தாகப் பேசத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
    மறுபடியும் ஒரு வெற்றி தேவை என்பதை மனதில் வைத்து உருவான படம் மாதிரித் தெரிகிறதே?
    என்னோட கடந்த இரண்டு படங்கள் மாதிரிக் குடும்பம், சென்டிமெண்ட் எதுவும் எல்லாம் இல்லாமல் முழுக்கக் காமெடியைப் பின்னணியாகக் கொண்டு தொடக்கப்பட்ட படம்தான் ‘நண்பேன்டா'.
    'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானம் என்னோடு முழுக்க இருப்பார். இந்தப் படத்தில் நான், சந்தானம், நயன் எல்லாருக்குமே சரிசமமா இருக்கோம். சந்தானத்துடன் நான் செய்திருக்கும் காமெடி கலாட்டா மக்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன். தமன்னா ஒரு சின்னக் கதாபாத்திரம் பண்ணியிருக்காங்க.
    தொடர்ச்சியாகச் சந்தானத்தோடு கூட்டணி அமைக்க என்னக் காரணம்?
    எனக்கு யாரோடு படப்பிடிப்புக்குப் போனால் ஜாலியாக இருக்குமோ அவர்களோடு பயணிக்கிறேன். அவ்வளவுதான். இப்போது 'கெத்து' படத்தில் கருணாகரனோடு நடிக்கிறேன். இந்தப் படத்தில் சந்தானம் கிடையாது. கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை இயக்குநரின் பார்வைக்கு விட்டு விடுகிறேன். ‘நண்பேன்டா' படத்தில் சந்தானம் பண்ணியிருக்கும் பாத்திரத்தை வேறு யார் பண்ணினாலும் சரியாக வராது.
    ‘நண்பேன்டா' படத்தில் நடனம், சண்டை என அடுத்த கட்டத்திற்குப் போயிருக்கிறீர்களாமே?
    அதற்குக் காரணம் சந்தானம்தான். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்துக்கு நடனம் சொல்லிக் கொடுத்தால், "அய்யோ.. நடனமா இதெல்லாம் வேண்டாம்பா" என்று சொல்லிவிடுவார். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் பார்த்தேன்.
    நாயகன் என்றவுடன் நடனத்திற்கு நிறைய பயிற்சிகள் செய்து அவ்வளவு சூப்பராக நடனமாடிவிட்டார். அப்படி என்றால் நான் சும்மா இருக்க முடியுமா? நானும் நடனப் பயிற்சி எல்லாம் எடுத்து, இந்தப் படத்தில் சந்தானத்துக்குச் சரிசமமாக நடனமாடி இருக்கிறேன்.
    நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
    நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
    உங்களது வீட்டில் உங்களது படங்களை விமர்சனம் செய்பவர் யார்?
    என் மனைவிதான். நான் நடிக்கும் எல்லாப் படங்களின் கதையும் அவங்களுக்குத் தெரியும். படம் முடிந்தவுடனே போட்டுக் காண்பிப்பேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' பார்த்துவிட்டுச் சூப்பர் என்றார், ‘இது கதிர்வேலன் காதல்' பார்த்துவிட்டு முந்தைய படம் மாதிரி காமெடி இல்ல என்றார்.
    அவங்கதான் எனது முதல் விமர்சகர். அதற்குப் பிறகு என்னோட பசங்க, என்னோட தங்கை பசங்க. இப்பவும், சந்தானம் என்று பேச்சை எடுத்தால், அவர் பெயர் பார்த்தா, சந்தானம் கிடையாது என்கிறார்கள். அந்தக் கதாபாத்திரம் அந்தளவிற்குப் பதிந்துவிட்டது.
    கெத்து' படத்தில் ஆக் ஷன் அவதாரம் எடுத்துவிட்டீர்கள் போல?
    கண்டிப்பாகக் கிடையாது. ‘நண்பேன்டா' படத்தில் சண்டை காமெடியாக இருக்கும். இந்தப் படத்தில் ரோப் எல்லாம் கட்டி சண்டை போட்டிருக்கிறேன். இரண்டு சண்டைக் காட்சிகள். என் முந்தைய படங்களை விட கெட்அப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். கதாநாயகி ஏமி ஜாக் ஸன், காமெடிக்கு கருணாகரன், இயக்குநர் திருக்குமரன், ஒளிப்பதிவாளர் சுகுமாரன் எனப் புதிய கூட்டணி, புதிய களம்.
    ஒரே மாதிரியான படங்கள் பண்ணுவதைவிட, அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணியிருக்கிறேன். ‘கெத்து' ஒரு ஆக் ஷன் த்ரில்லர் வகையில் இருக்கும். இப்படத்தை முடித்துவிட்டு, இயக்குநர் அஹமத்துடன் ‘இதயம் முரளி' பண்றேன். அப்படம் ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். அமெரிக்காவில் நடப்பது போன்ற கதை.


    நன்றி - த இந்து


    Sunday, May 18, 2014

    அரண்மனை -பேய்ப் படத்துக்கு மூன்று அழகான கதாநாயகிகள் எதுக்கு?: இயக்குநர் சுந்தர்.சி பேட்டி

    காமெடிதான் இன்றைய டிரென்ட் என்று சொன்னாலும் பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பதில்லை. ஆனால் காமெடிக்கு கேரன்டி தரும் சுந்தர்.சி போன்ற இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் மிகக் குறைவு. தற்போது மூன்று முன்னணிக் கதாநாயகிகளை வைத்து ‘அரண்மனை' படத்தை ஒரே மூச்சில் இயக்கி முடித்திருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து... 



    அரண்மனை படத்தில் என்ன ஸ்பெஷல்? 


     
    நான் பண்ற முதல் பேய்ப் படம் இது. முன்னால் எல்லாம் பேய்ப் படங்கள் அப்படின்னாலே பார்க்கவே மாட்டேன். திடீர் பார்த்தா இந்தப் பேய்ப் படங்களுக்கு எல்லா இடத்துலயும் ரொம்ப வரவேற்பு. குடும்பத்தோடு படம் பார்க்குறவங்களைச் சொல்லலாம். என்னோட குடும்பமே ஒரு உதாரணம். எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது பேய்ப் படங்கள் டிவிடியில பிளே பண்ணிட்டு ஒவ்வொரு செகண்டுக்கும் பயப்படுற மாதிரி உட்கார்ந்து ரசிப்போம். நானும் அவங்ககூட உட்கார்ந்து பேய்ப் படங்கள் பார்த்து பார்த்து ரசிகனாகிட்டேன். அந்தப் பாதிப்பில் உருவானதுதான் ‘அரண்மனை' படம். அரண்மனை வீட்ல இருக்குறவங்க ஒருத்தர் உடம்புல பேய் இருக்கு. அந்தப் பேய் யாரு அப்படிங்கிறதுதான் கதையை நகர்த்திக்கிட்டு போற சஸ்பென்ஸ். 

     

    அப்போ உங்க பாணி காமெடி இதில் இருக்காதா? 


     
    முழுக்க பயமுறுத்தினா நல்லா இருக்காது. அதனால காமெடி, கலர்ஃபுல் பாடல்கள் இப்படி எல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான ஒரு ஜாலியான படம்தான் ‘அரண்மனை'. பூர்வீக அரண்மனை வீட்டை விற்பதற்காக வெவ்வேறு ஊர்கள்ல வாழுற ஒரே ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, அரண்மனைக்கு வந்து தங்குறாங்க. அப்போ என்ன நடக்குதுங்கிறதுதான் படம். குடும்பத்தோட வந்தாங்கன்னா சிரிக்கவும், பயப்படுவதற்கும் இதில நிறைய ஸ்கோப் இருக்கு. 



    ஒரு பேய்ப் படத்துக்கு ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்னு எதுக்கு மூணு அழகான ஹீரோயின்ஸ்? 



    மூணு பேரோட கேரக்டருமே புதுசா இருக்கும். ஹன்சிகான்னாலே துறுதுறு, பப்லி இப்படிதான் இருக்கும். இதுல அந்த மாதிரி இல்லாத ஒரு ஆச்சரியமான வில்லேஜ் கேரக்டர். அதே மாதிரி ஆன்ட்ரியா இந்தப் படத்துக்கு கிடைச்ச ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ். இதுல எல்லா கேரக்டருமே முக்கியம்தான். ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், நான், வினய், சந்தானம், கோவை சரளா இப்படி எல்லாருமே முக்கியமான கேரக்டர். 

     

    முதல்ல இயக்குநர், அப்புறம் ஹீரோ, இப்போ இயக்கி ஹீரோவா நடிச்சிருக்கீங்க. அடுத்து என்ன திட்டம்? 


     
    எனக்கு எந்தத் திட்டமும் கிடையாது. அடுத்த படம் என்ன அப்படின்னுதான் யோசிப்பேன். ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘கலகலப்பு' படங்கள்ல நான் நடிக்கிற மாதிரி எந்த ஒரு பாத்திரமும் கிடையாது. ‘அரண்மனை' கதைல நான் நடிக்கிற மாதிரி ஒரு கேரக்டர் இருந்துச்சு. நடிச்சேன். இந்த படத்தைப் பொறுத்தவரை நான் ஹீரோ கிடையாது. எனக்கு லவ், டூயட் எதுவுமே கிடையாது. அடுத்து நான் பண்ற ரெண்டு படங்களுமே வெறும் இயக்கம்தான். 

     

    உங்க படங்கள்ல வர்ற காமெடி மட்டும் பெரிய வெற்றிபெற என்ன காரணம்? 


     
    30 படங்கள் இயக்கியிருக்கேன், முழுநீள காமெடி படங்கள்ன்னா 3 அல்லது 4 சொல்லலாம். என்னோட படங்கள்ல காமெடி ஏன் பேசப் படுதுன்னா, எனக்குப் படங்கள்ல காமெடியைத் தனி டிராக்கா உபயோகப் படுத்துறதுல உடன்பாடு இல்ல. கதை நகர்த்துவதற்கு நான் காமெடியை யூஸ் பண்ணிக்கிறேன். காமெடி பெரிய அளவிற்குப் பேசப்படுறதுனால காமெடி படம்னு முத்திரை குத்துறாங்க. ஆனா நான் ‘அன்பே சிவம்' பண்ணியிருக்கேன். ‘கிரி' மாதிரி கமர்ஷியல் படங்களும் பண்ணியிருக்கேன். ‘வின்னர்' பார்த்தீங் கன்னா அது காமெடி படமே கிடையாது. அது ஒரு பயங்கரமான மசாலா படம். சண்டைக் காட்சிகள் எல்லாம் அவ்வளவு மெனக்கெட்டு பண்ணியிருப்போம். ஆனா அதுல வைச்ச காமெடி பெருசா பேசப்பட்டதுல காமெடி படம் ஆயிடுச்சு. 



    உங்க பெண்ணை நாயகி ஆக்கிற திட்டம் ஏதும் வைச்சுருக்கீங்களா? 


     
    அதெல்லாம் கிடையாது. அவங்க விருப்பம்தான். தகப்பனா நல்ல படிப்பு கொடுக்கணும், நல்ல வசதிகள் பண்ணிக் கொடுக்கணும். அது மட்டும்தான் என்னோட கடமை. 

     
    நீங்களும் அரசியலுக்கு வர்ற திட்டம் இருக்கா? 

     
    வீட்டுக்கு ஒருத்தர் போதும்ன்னு நினைக்கிறேன். 

     
     a



    நன்றி - த இந்து

    Saturday, May 10, 2014

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்

     

     26 வருடங்களுக்கு  முன்  ஹீரோவோட அப்பா சொந்தக்காரனை  ஒரு பகைல வெட்டிடறாரு. பழி வாங்கக்காத்திருக்கு வெட்டு வாங்குன குடும்பம். ஆனா அவங்க கிட்டே ஒரு விநோதமான பழக்கம் .அவங்க  வீட்டுக்குள்ளே யாரையும் வெட்ட மாட்டாங்க . சினிமா நடிகைங்க எல்லாம் கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிருக்கற மாதிரி கத்தி குத்த இவங்களும் ஒரு எல்லை வெச்சிருக்காங்க . 


    பழி வாங்கும் பகைமை குடும்பத்தில்  ஹீரோயின் . பலி ஆகப்போகும் ஆடு  ஹீரோ . 26 வருசம் கழிச்சு அவங்க  வீட்டுக்கு வர்றாரு. வந்த பின் தான் அவருக்கு இந்த மேட்டர் எல்லாம்  தெரியும் . வீட்டை விட்டு வெளில போனா காத்திருக்கு கண்டம் . ஆகிடுவார் கண்ட துண்டம். அவர் எப்படி சமாளிக்கறார் என்பதை 144 நிமிடங்கள்  மொக்கை காமெடியா சொல்லி  இருக்காங்க .


     தெலுங்கு ல மெகா  ஹிட் ஆன மரியாதை ராமண்ணா என்ற படத்தின் ரீ மேக்  தா இது . ஆந்திரா மக்களை விட தமிழ் மக்கள் ரசனைல பல படி உயர்ந்தவர்கள் என்பதை இந்தப்பட ரிசல்ட் சொல்லும் . 

    ஹீரோவா சந்தானம் . ஓப்பனிங்க் சாங்கில் அவர்  விஜய் , ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் தர்றார் . முடியலை . எம் ஜி ஆர் மாதிரி கருத்துள்ள வரி எல்லாம் பாடறார் . பொதுவா சந்தானத்தின் பிளஸ் பாயிண்ட்டே அவர்  ஹீரோவை கலாய்ப்பதும் , கவுண்ட்டர் டயலாக்  கொடுப்பதும் தான் . இந்தப்படத்தின் திரைக்கதை அதுக்கு கை கொடுக்கலை . அதையும்  மீறி அவர் பல இடங்களில் பஞ்ச் கொடுக்கறார் . ஆனா   பேசிக்கா திரைக்கதைப்படி அவர் பயந்து  ஓட வேண்டிய கேரக்டர் என்பதால் வடிவேல் மாதிரி பாடி லேங்குவேஜை நம்ப வேண்டிய கட்டாயம் . அதுதான்  அவருக்கு வரவில்லை . ஆனால் முதல் பட ஹீரோ என்ற அளவில் பாஸ் தான் ( அறை எண் 305 இல் கடவுள் படத்தில் 2 ஹீரோவில் இவர் ஒருவர் . இதில் தான் சோலோ  ஹீரோ ) 




    ஹீரோயின் ஆஷ்னா சவேரி .  (சவுரி அல்ல)பாந்தமான  முகம் . திருத்தப்படாத, ஆனா திருத்தப்பட வேண்டிய அடர்த்தியான புருவங்கள் .அவரது நாசியும் , உதடுகளும் கனகச்சிதம் .அகல நெற்றி என்பதால்  ஓவர் ஆல் ஃபேஸ் கவர்ச்சி கொஞ்சம் கம்மிதான். ஆனாலும் லட்சுமிகரமாய்த்தான் இருக்கார் . 


    பவர் ஸ்டார்  ஒரு சீனில் வர்றார் . இதெல்லாம் பத்தாது . சோலார் ஸ்டார் வேற . ஆனா படத்தில்  மனம் விட்டு சிரிக்கும் காட்சிகள்  குறைவு . 


     படம்  முழுக்க ஒரே வீட்டில் நடப்பதால் கொஞ்சம்  போர் அடிக்கிறது .  காட்சிகள்  மிக மெதுவாகவும் , எந்த திருப்பமும் இல்லாமலும் நகர்வதால் ஏதோ மெலோ டிராமா பார்ப்பது  போல் ஒரு சலிப்பு வருவதைத்தவிர்க்க  முடியவில்லை 


     நாயகியின் மாமா வாக கட்டிக்கப்போகும் பையனாக வருபவர் அவ்வளவு இளிச்சவாய்த்தனமாய்  மாமன் மகளை தாரை வார்ப்பது நம்பும்படி இல்லை


     
    இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


    1. அடுத்தவாரம் 16 5 2014 இல்  ரிலீஸ் ஆகவேண்டிய படம். கோச்சடையான் வராததால் கடைசி நாளில்  ரெடி பண்ணி  திடீர் என  ரிலீஸ் செய்த சாமார்த்தியம்


    2 சுடு தண்ணீர்  ஊற்ற வரும்  மொட்டையனிடம் ஹீரோ என்னப்பா அக்குள்-ல கட்டியா? என கேட்க அவர் இல்லையே என கையை தூக்கிப்பார்க்கும்போது அவர் தலையில் கொட்டும் காட்சி காமெடி களேபரம்


    3 சந்தானத்தின்  சைக்கிள்  டி ஆர் மாதிரி மிமிக்ரி குரலில் பல காட்சிகள் பேசுவது நல்ல கற்பனை . ஆடியன்ஸ் ரசிக்கிக்றார்கள்  சிம்பு கடுப்பாகிடுவார் . வளர்த்த கடா 

    4   ஹீரோ அந்த  வீட்டில் மாட்டிக்கொண்டதும்  ஏற்படும் 20 நிமிட காமெடி காட்சிகள் சிரிக்கலாம் 





    இயக்குநரிடம் சில கேள்விகள் 


    1. படத்தோட  ஓப்பனிங் சீன்ல  ஹீரோ சென்னை செண்ட்ரல் ஸ்டேஷன்ல சைக்கிளை ஸ்டேண்ட் ல விடும்போது அதுக்கு  ஒரு நாளுக்கு 50 ரூபா கேட்பது மாதிரியும்  அதுக்கு அவர் சைக்கிள் விலையே 150 ரூபா தானே என்பது மாதிரியும் காட்சி வருது . ஆனா   ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல பைக் பாசே ஒரு நாள்க்கு 10 ரூபா தான் . சைக்கிள்க்கு 5 ரூபா . சென்னை ல அதிக பட்சம்  ரூபா தான்  இருக்கும் 


    2 ஹீரோ தன் பர்சைக்காணோம்னு  சொன்னாலே போதுமே. எதுக்கு தன் பர்சை எடுத்து அந்த இடத்தில்  ஒளிக்கனும் ? 


    3 லாஜிக் படி ஹீரோ  வீட்டில்  இருந்தா  கொல்ல முடியாது . அவர்  நைட் டைம்  தூங்கிட்டு  இருக்கும்போது அவரை அலேக்கா த்துக்கிட்டு போய் ஏன் கொல்லலை? 


    4 ஹீரோ தன் அம்மா  ஃபோட்டோவை  பார்த்து அது சொந்தக்காரங்க  வீடுன்னு கண்டு பிடிக்கறார். அவர் சொந்தக்காரங்களை ஏன் அடையாளம் கண்டு பிடிக்கலை ? அம்மா  வீட்டில் ஃபோட்டோக்கள்  இருந்திருக்குமே? 


    5   என்னதான்  சினிமான்னாலும்  முறைப்பெண்ணை கண்டுக்காமயா ஒரு மாமன் மகன்  இருப்பான் ? 





    மனம் கவர்ந்த வசனங்கள்


    1 ஏ ம்மா , நீ ஸ்கூல் படிக்கும்போது  யார் ரசிகை?

    கமல் 

     காலேஜ் போறப்ப?

     மாதவன்

     இப்போ ?

     சிம்பு 

     டேய் , நீ யார் ரசிகன்?

     அப்பவும் , இப்பவும், எப்பவும் ரஜினி தான் 

     பார்த்தீங்களா > மக்களே ! எப்பவும் பொண்ணுங்க  தங்கள் ரசனையை, காதலனை மாத்திக்கிட்டே  இருப்பாங்க , ஆனா பசங்க எப்பவும் மன்சை மாத்திக்கவே மாட்டாங்க

    2.சந் =7 மணி சங்கை 8 மணி நியூஸ் ல கேட்ட மாதிரி ஏன்டா இப்டி கத்திப்பேசறீங்க? # வபுஆ

    3.சந் = ரசம் வைக்கறவன் எல்லாம் ரஹ்மான் மாதிரி மியூசிக் போட்டுட்டுப்போறானே.அடேய் # வபுஆ



    5.ச = மறியலுக்குத்தான் ரயிலை நிறுத்துவாங்க.பொரியல் கொண்டாரதுக்குக்கூடவா? # வபுஆ

    6.நாயகி = உங்க கூட பேசிட்டிருந்தா நேரம் போறதே தெரியல.அதனால உங்களை டைம் பாஸ்னே கூப்பிடறேன் # வ பு ஆ ( விகடன் டைம் பாஸ் க்கு ஐஸ் ?)

    7.சந் = பொண்ணுங்க ஏன் லவ் பண்றாங்க? எப்படியும் பேரன்ட்ஸ் பிரிச்சு வெச்சுடுவாங்கங்கற தைரியத்தில் தான் # வபு ஆ

    8.என்னது? உன் சொந்த ஊரு காக்காத்தோப்பா? 



    ஆமா.அதுக்கேண்டா பஸ் ஸ்டேன்ட் பாத்ரூம்க்குள்ளே போறவன் மாதிரி மூஞ்சியை சுளிக்கறே? # வபுஆ

    9.யோவ் மொட்டை.மொட்டை அடிச்ட்டு குளிக்க மறந்துட்டியா? உடல் பூரா இவ்ளோ முடி? 


    அது என் உடம்புல இயல்பா வளரும் முடிங்க # வ பு ஆ

    10.ச = இவ்ளோ வாயில்லா ஜீவன் களை வாழை இலைல ஒரு சேர இன்னைக்குத்தாங்க பாக்கறேன் ( கறி விருந்து) # வ பு ஆ

    12.ச= அவனை சிரிக்கவேணாம்னு சொல்டா.அசிங்கமா இருக்கு.


     அவன் சிரிக்கறதே உன்னை அசிங்கப்படுத்தத்தான் .


    அவன் மூஞ்சி சிரிக்கும்போது அசிங்கமா இருக்கு

    13.சேட்டு = காசில்லாம எதுவுமே வாங்க முடியாது



     சந்தானம் = ஏன்? கடன் வாங்கலாமே?

    14.கல்யாணம் பண்ணிக்கத்தான் பசங்க லவ்வே பண்றாங்க.ஆனா கல்யாணம் ஆனவனைத்தான் பொண்ணுங்க லவ் பண்றாங்க # சந்தானம்

    15.நீ என் ஒரு முகத்தைத்தான் பாத்திருக்கே.எனக்கு இன்னொரு முகமும் இருக்கு 


    சந்தானம் = அந்த மூஞ்சியாவது பாக்கற மாதிரி இருக்குமா?

    16.எந்த அட்ரஸ் சொலரதா இருந்தாலும் டாஸ்மாக்கை லேன்ட்மார்க்கா வெச்சு சொல்லனும் - சந்தானம்


     1 7 நம்ப முடியாத சில விஷயங்கள் நம்ம வாழ்க்கைல நடக்கும்போது வாழ்வு அழகாகிடும் # வபுஆ
    actress-ashna-zaveri-



    படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

    1.பாடிலேங்குவேஜில் காமெடி செய்யவேண்டிய இந்தக்கதை வடிவேலுக்கே பொருத்தம்.டைமிங் பஞ்ச் அடிக்கும் சந்தானத்துக்கு பொருந்தலை# வபுஆ
     

    2.சந்தானத்தின் 18 டைமிங் பஞ்ச் ,6 மொக்கை ஜோக் உடன் இடை வேளை வரை படம் சராசரி தான் # வபுஆ

    3.சென்னை எக்ஸ்பிரஸ் ல வர்ற மாதிரி முதல் 40 நிமிசம் ஹீரோ ஹீரோயின் ரயில் பயணம் லயே படம் போகுது # வ பு ஆ



    4 .விஜய்க்கு இணையான ஓப்பனிங் சாங் டூ சந்தானம்.ஆனா எடுபடலை

    5  .வ பு ஆ =144 நிமிடங்கள் @ ஈரோடு அபிராமி.










    சி பி கமெண்ட் -வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் = பி சி சென்ட்டர் ரசிகர்களுக்கான மொக்கைக்காமெடி மெலோ டிராமா = விகடன் மார்க் =40 ,ரேட்டிங் = 2.25 / 5. வடிவேலுவின் தெனாலி ராமன் க்கு  இது  மோசம் இல்லை., ஆனாலும் இன்னும்  நல்லாப்பண்ணி  இருக்கலாம்


    எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40





    குமுதம் ரேட்டிங்க் = ok


     ரேட்டிங் 


    டிஸ்கி - காமெடி த்ரில்லர்  மூவி - யாமிருக்க பயமே - சினிமா விமர்ச்னம்

    http://www.adrasaka.com/2014/05/blog-post_7181.html

    Friday, February 14, 2014

    இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

    பொதுவா பொண்ணுங்க பொசுக் பொசுக்னு புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க .ஹீரோவோட அக்கா  தன் வீட்டை எதிர்த்து செஞ்சுக்கிட்ட லவ் மேரேஜ்லயும் சின்ன விஷயத்துக்கு  கோவிச்சுக்கிட்டு மதுரையில்  இருக்கும் அம்மா வீட்டுக்கு வர அக்கா வீட்டுக்காரரை சமாதானப்படுத்த கோவை  போறாரு ஹீரோ . 


     எதிர் வீட்டில் ஹீரோயின் . பார்த்ததும் கட்டுனா இவளைக்கட்டனும் ,இல்லைன்னா கட்டினவன் காலை த்தொட்டுக்கும்பிடனும்னு முடிவு பண்ணி ரூட்  விட்டுட்டு இருக்காரு 


     ஹீரோயின் கூடவே  ஒரு ஃபிரண்ட் கழுகு மாதிரி சுத்திட்டு இருக்கான்.  எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு அவன் வெயிட்டிங்க் . ஹீரோ அவனைப்பத்தி எச்சரிச்சும்  ஹீரோயின் நம்பலை . பொதுவா பொண்ணுங்க நல்லவனை நம்ப மாட்டாங்க .


    இவங்க 2 பேர் காதல் சக்சஸ் ஆச்சா? என்பதை காமெடி , ஃபேமிலி செண்டிமெண்ட் ஸ் கலந்து சொல்லி  இருக்காரு  சுந்தர பாண்டியன் இயக்குநர் 



     ஹீரோவா உதயநிதி ஸ்டாலின். இவர் தான் தயாரிப்பாளரும்  கூட . இவர் கிட்டேப்பிடிச்சதே தான் ஒரு தயாரிப்பாளரா இருந்தும்  கூட இந்த  பஞ்ச் டயலாக் , ஓப்பனிங்க் பில்டப்  சீன் எல்லாம் வைக்காம எதார்த்தமான கேரக்டர்ல வருவது  தான் . சபாஷ் . முதல் படத்தை  விட நல்ல முன்னேற்றம் . பாடல் காட்சிகளில் நடன அசைவுகளில்  சமாளிக்கிறார். டயலாக் டெலிவரியும்  ஓக்கே. சில காட்சிகளீல்  காமெடி  கூட ட்ரை பண்ணி  இருக்காரு . 


     ஹீரோயின் நயன்  தாரா .மாமழை போற்றும் , பல  மாநிலம் ஏற்கும், மாநிற அழகி .  குடும்பப்பாங்கான தோற்றத்தில்  யாரடி  நீ மோகினி யில் வந்தவர் அதே பாணியில்  கண்ணியமாக வந்து  போகிறார். நடிப்புக்கான  ஸ்கோப் கம்மி என்றாலும்  வந்தவரை  ஓக்கே . பாடல் காட்சிகளில் கோடம்பாக்க விதிகளின் படி  கிளாமர்  டிரஸ் .


     ஹீரோவுக்கே உண்டான பில்டப்புடன் அரங்கம் அதிரும் கரகோசத்துடன் ஓப்பனிங்க் சாங்குடன் வரும் சந்தானம் இதில்  வழக்கம் போல்  ஹீரோவுக்கு நண்பன் . காதலுகு ஐடியா  குடுக்கும் ஐடியா அய்யா சாமி.  ஓக்கே ஓக்கே வில் 117  ஜோக்குகளுடன் கலகலப்பு  ஊட்டியவர் இதில் 47 ஜோக்ஸ் உடன் நிறுத்திக்கொண்டதுக்குக்காரணம் இயக்குநர்  ஃபேமிலி எண்ட்டிமெண்ட்ஸ்க்கு காட்சிகள் ஒதுக்கியதே . இவருக்கு  ஒரு ஜோடியும் உண்டு 


     தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி  ஹீரோயின்  தோழியாக வரும் கேரளா பொண்ணு  ஹீரோயினை விட அழகாக இதிலும்  இருக்கார் . இவர் சந்தானத்துக்கு  ஜோடி . இவர்களுக்கு ஒரு பாட்டு  சீன் வெச்சிருக்கலாம் , ஜஸ்ட்  மிஸ்டு 


    மயில் சாமி க்ளைமாக்ஸ்  டிராமா மிமிக்ரிக்கு வர்றார் . ஓக்கே . 



    படத்தில் வரும்  கேரக்டர்  ரோல்ஸ் எல்லாரும் நல்லா பண்ணி இருக்காங்க . குறிப்பா சரண்யா வெரிகுட். 



    ஹாரிஸ்  ஜெயராஜ்  இசை   மெலோடி சாங்க்ஸ் ஆக போட்டிருக்கார். எல்லாம் ஓக்கே . ஆனா பின்னணி  இசை  ரொம்ப சாதாரணமா  இருக்கு . ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . கதைக்களம் கோவை , மதுரை என்பதால்  பரிச்சயமான இடங்களைப்பார்ப்பது  கொங்கு மண்டல ரசிகர்களுக்குப்பிடிக்கும் 

    ஒரு பாடல் காட்சியில் ( அன்பே அன்பே ) தாமரைக்குளத்தில்  தாமரை  இலை  மீது  சிட்டுக்குருவி நிற்பது கண் இமைக்கும் நேரத்தில்  மின்னி மறையும் ஓவியக்காட்சி , பிரமாதம் 


     நச் டயலாக்ஸ் 


    1/.  நடை சாத்துன பிறகு கோயிலுக்குப்போலாம்னு கூப்பிடறதும் ,கடை சாத்துனபின் கட்டிங் அடிக்கலாமா?னு கூப்பிடறதும் உன் பழக்கம்டா #,சந்தானம்



    இப்பவெல்லாம் பொண்ணுங்க பொய்யா கவிதை சொல்றவனைத்தான் நம்புதுங்க # சந்தானம்



    3 பொண்ணுங்க புடவை மாத்தத்தான் லேட் பண்றாங்க.டக் டக் னு பையனை ஈசியா மாத்திடறாங்க - சந்தானம்



    4 புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கனும் ,பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கனும் # சந்தானம்


    5வேற ஒருத்தன் உஷார் பண்ணின பொண்ணுங்க ளைக்கூட கரெக்ட் பண்ணிடலாம் , ஆனா எப்பவும் உஷாரா  இருக்கும் பொண்ணை கரெக்ட் பண்றது  ரொம்ப கஷ்டம்






     படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 



    1. தமிழ் நாட்டின் அடுத்த சி எம் மே! னு ஒரு குரல் # நயன் தாரா இன்ட்ரோ # இது கதிர் வேலன் காதல்



    2 பகுத்தறிவுப்பகல்வர் தமிழ் இனத்தலைவர் பேரன் ஆஞ்ச நேய பக்தராக ஓப்பனிங் சீன் லயே சாமி கும்பிடற இன்ட்ரோ # தமிழா தமிழா



    3 அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் சந்தானம் இன்ட்ரோ.ஓப்பனிங் சாங் உடன் .பல்லாக்கு தேவதை # இ க கா



    4 நயன் வரும்போதெல்லாம் மெல்லிய இசை # ஹாரீஸ் ராக்ஸ்


    5  ஹலோ டைரக்டர் சார்.எந்த கேரளா பிகர் சந்தனக்கலர் ஜரிகைக்காட்டன் சேலைக்கு சம்பந்தமே இல்லாம சிவப்பு ஜாக்கெட் போட்டதைப்பாத்தீங்க?



    6  இயற்கை தேவதை அளித்த அழகிய புருவத்தை ட்ரிம் பண்ணி அழகைக்குறைப்பது ஏனோ? #நயன் ன் திருத்தப்பட்ட புருவம்



    7 டைரக்டர் கம்யூனிஸ்ட்டா? எல்லா லேடி கேரக்டர்சும் சிவப்பு ஜாக்கெட்டா போட்டுட்டு வராங்க?



    8 திருடா திருடி மன்மதராசா டான்ஸ் ஸ்டெப் எல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. உதயநிதி சார்.



    9 இது கதிர் வேலன் காதல் @ இடை வேளை .இதுவரை டைம் பாஸ்.ஓகேஓகே பாகம் 2 ,ம் ம்


    10  ஹீரோயின் நயனை விட தோழியா வரும் கேரளா பிகர் 10 மார்க் கூட


    11 ஹாரீஸ் இசையில் எல்லாப்பாட்டும் மெலோடி.நல்லா தான் இருக்கு.ஆனா தியேட்டர்ல கத்தறாங்க # தமிழேண்டா ஏண்டா?


    சில  கேள்விகள் 



    1.  மயில் சாமி மிமிக்ரி டிராமா   ரொம்ப ரொம்ப நாடகத்தனமா  இருக்கு . என்ன தான்  எதிர்  வீடுன்னாலும்  இந்த  வீட்டு  ஹால் ல பேசுவது அங்கே கேட்பது , மனம் மாறுவது  நம்ப  முடியல ( ஆனா ஆடியன்ஸ்  ரசிக்கறாங்க )


    2  கூடவே  ஒரு வருசமா பழகிட்டு வர்ற ஆள் பார்வை , நோக்கம் பற்றி  நயனுக்குத்தெரியாம  இருக்குமா? பொண்ணுங்களுக்கு இயற்கையாகவே  ஒரு விழிப்புணர்வு , ஜாக்கிரதை உணர்வு இருக்குமே?


    3 சும்மா கரெக்ட் செஞ்சா போது , நோ லவ் நோ மேரேஜ்-னுஇருக்கும்  வில்லன்  நயனுக்கு  ஈசியா  போதை மருந்து கலந்து  கொடுத்தோ, மயக்க மருந்து  செலுத்தியோ  எண்ணத்தை  நிறைவேற்றி   இருக்கலாமே? ஏன்  அழகிரியைத்துரத்தி  விட்டு கேப்டனுக்கு தூண்டில் போட்ட கதையா சுத்தி வளைக்கனும்  ?




    சி பி கமெண்ட் - இது கதிர்வேலன் காதல் - ஓகே ஓகே  2 +  செண்ட்டிமெண்ட்ஸ், சராசரிக்காதல் கதை , லேடீஸ்க்குப்பிடிக்கும் 



    எதிர்பார்க்கும் விகடன் மார்க் =41 ,



    ரேட்டிங் =2.75/5


     குமுதம் ரேங்க்கிங் = ஓக்கே


    ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

    Friday, January 10, 2014

    வீரம் - சினிமா விமர்சனம்


    ஒட்டன்சத்திரம் - இந்த ஊர் ல  ஹீரோ தன் தம்பிங்க 4 பேர் கூட கட்டை பிரம்மச்சாரியா வாழ்றாரு.மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற மனைவி குடும்பத்தைப்பிரிச்சுடுவா என்பதால் அவர் மேரேஜே பண்ணிக்கலை. ஆனா தம்பிங்க 4 பேரும் ஆளுக்கு ஒரு பிகரை  தனித்தனியா லவ் பண்றாங்க .இப்டியே  அண்ணனை விட்டா  அவர்  நம்ம எல்லாரையும்  பிரம்மச்சாரியாவே ஆக்கிடுவார் என்பதால் அவருக்கு  ஒரு ஃபிகரை கோர்த்து விடலாம்னு சந்தானம்  கூட சேர்ந்து  ஐடியா பண்றாங்க. இவங்க பண்ற கலாட்டாக்கள் , கோர்த்து விடல்கள் என இடைவேளை வரை படம்  ஜாலியாப்போகுது .


    இவர் ஊருக்கே  எஜமான் மாதிரி , அடிதடி ரகளைன்னு வாழ்ந்தவர் . இவருக்கு ஜோடி சேர்ந்த பொண்ணு அமைதியான டைப்.அவங்கப்பாவும்  அமைதியை விரும்பும் ஆள். அவங்க ஊருக்கு ஹீரோ  நல்லவர் மாதிரி அமைதியாப்போறாரு.போகும்போது  ரயில் ல  ரவுடிகள்  தாக்க வரும்;போது ஹீரோ  செம ஃபைட் போடறதைப்பார்த்து அந்தம்மா ஆடிப்போகுது. ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கைப்பார்த்து  ஷீலா தீட்சித் மாதிரி .இடைவெளை.


    அதுக்குப்பின்  ஹீரோ அவங்க கிராமத்தில் போய் தங்கி நல்ல பேர் எடுக்கறாரு. ஹீரோயின் குடும்பத்துக்கு வேற ஒரு பகை வருது.அவங்க கிட்டே  இருந்து அவங்களைக்காப்பாத்தி எப்டி  கரை சேர்க்கிறார்? என்பதே  மிச்ச மீதிக்கதை 


    ஆரம்பம் அதிரடிப்படம்  கொடுத்து அடுத்த 70 வது நாளில்  ஒரு  வில்லேஜ் சப்ஜெக்ட் செய்ய துணிச்சல் வேணும். ஏன்னா நம்ம  கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் செம்மல்கள்  ஒரு ஹீரோ  படம்  ஹிட் ஆகிட்டா அதே பாணில 25 படம் வரிசையா கொடுக்க நிர்ப்பந்திப்பாங்க . அந்த பாணியில் இருந்து  விலகி அஜித் இதில்  விநாயகம் கேரக்டரில்  நடிச்சுப்பட்டையைக்கிளப்பி இருக்கார் . 


    இவர் வசனம் பேசும் காட்சிகளில்  பொறுத்து, நிறுத்தி நிதானமாப்பேசுவதும் , அடிக்குரலில் செந்தூரப்பூவே  கேப்டன் போல் கனத்த குரலில் பேசுவதும் அஜித்க்குப்புதுசு. நல்லாப்பண்ணி  இருக்கார். 

    என்ன தான் மைசூர்பாக் ஸ்வீட்டா இருந்தாலும் தொடர்ந்து  3 சாப்பிட நேரும்போது  கொஞ்சம் மிக்சர் சாப்ட்டுட்டு அடுத்த ஸ்வீட்டை சாப்ட்டா தித்திப்பு திகட்டாது, அது மாதிரி அஜித்க்கு சால்ட்& பெப்பர்  லுக் மங்காத்தா , ஆரம்பம் 2ல் நல்லா எடுபட்டுச்சு என்பதற்காக  தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டைலில் செய்தால் போர் அடிச்சுடும் , ஒரு படம் அப்படி , அடுத்த படம் இப்படி என மாத்தனும் .


    டூயட் காட்சிகளில்  நெளிய வைக்கிறார். வேட்டி போட்டு கோட் போட்டு வரும் காட்சியைத்தவிர்த்து இருக்கலாம். அதே போல் பாடல்களுக்கான நடன அசைவுகளும் டூயட்களில் எடுபடவில்லை. தனிக்குத்தாட்டப்பாட்டு  ஓக்கே . 


    சந்தானம்  இதிலும்  கோல் அடிச்சிருக்கார், வழக்கமா அவர் எந்தபப்டத்தில் வந்தாலும்  ஹீரோவை நேருக்கு நேர் கலாய்ப்பவர் இதில் பம்மி  இருப்பது ஏனோ? அவர் அடிக்கும்  ஒன் லைனர்கள் பரவாயில்லை. வழக்கம் போல் பழைய ஜோக்ஸ்களை உல்டா செய்வதும் இதில்  தொடருது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல .


     இடைவேளைக்குப்பின் தம்பி ராமையா காமெடி பேலன்ஸ் செய்யுது, 

    தமனா தான்  ஹீரோயின் . பெரிய வாய்ப்பு தான், ஆனாலும் அதிக திறமை காட்ட வாய்ப்பில்லை என்ப்தால்  முடிந்த வரை  கண்ணீயமாக கிளாமர் காட்டி இருக்கார் (கிளாமரில் என்னய்யா கண்ணியமான கிளாமர், கண்ணியம் இல்லா கிளாமர் ? ) 


    விதார்த் உட்பட்ட 4 தம்பிகள் நடிப்பும் ஓக்கே . கஜினி வில்லன் தான் இதிலும் வில்லன், பெரிசா எதுவும் செய்யலை. நாசர் நடிப்பு கன கச்சிதம் . 


    இடைவேளைக்குப்பின் வரும் திரைக்கதை தடுமாறுது. எப்படி  சுவராஸ்யமாய்க்கொண்டு போவது என  தெரியாமல்  காமெடிக்காட்சிகளை வெச்சு  ஒப்பேத்தி  இருக்காங்க . 



    சபாஷ் சத்யா 


    1. படத்தில்  அஜித் வரும் காட்சிகளில் வரும் தீம் மியூசிக் வழக்கம் போல் கெத்து. மழையில்  குடையுடன்  வரும்  மாஸ்  சீன் , ரயில்  ஃபைட்டுக்கான ஓப்பனிங்க் பில்டப் , க்ளைமாக்ஸ் பஞ்ச் வசனங்கள் எல்லாம் அருமை 



    2. ஹீரோ அண்ட்  கோ அமைதியான குடும்பம் என அறிமுகப்படுத்தி எல்லோரும் சாப்பிட உட்காரும்போது செல் ஃபோன்  ரிங்க் டோனாக “அட்ரா அட்ரா நாக்கு முக்க “ பாட்டு ஒலிப்பதும் நாசர்   திகைப்பதும்  செம காமெடி 



    3. ஹீரோ , ஹீரோயின் இருவரின்  ஓப்பனிங்க் காட்சிகளில் சமாதானப்புறா பறக்க விடுவது , ஒரு காட்சியில்   நிர்மூல வானத்தின் பின்னணியில் கழுகு ஒன்று மேலே பறக்க அஜித்க்கு  கிரவுண்ட்   ஷாட் ஆங்கிளில்  பில்டப்  கொடுப்பது எல்லாம் அக்மார்க்  அஜித் ஸ்டைல் பிராண்ட்.விநாயகம்  என்ற பெயரில்  தீப ஒளிவிளக்கு வரிசை வருவது  வீரா படத்தில் மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே பாட்டின் ஓப்பனிங்க் லீடில்  இருந்து  உருவப்பட்டிருந்தாலும்  நேர்த்தியான காட்சி 


    4.  ஃபேமிலி ஆடியன்சை கவரும் வகையில் இடைவேளை வரை கலகலப்பாக நகரும்  குடும்பக்கதை படத்துக்கு பெரிய பிளஸ். ஆல் செண்ட்டர் ரசிகர்களும் ரசிக்கும்படி முன் பாதி அமைஞ்சிருக்கு 


    சொதப்பல் சொப்னா 


    1. பெட்ரோல் பங்க்கில் மோதி கார் வெடிக்கும் காட்சி  மிக மோசமான கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ் ஒர்க் . இன்னும் மெனக்கெட்டு  இருக்கலாம் . 


    2. பின் பாதியில்  வரும் காட்சிகள்  சோர்வைத்தருது. என்ன நடக்கப்போகுது என்பதை எளிதில்  யூகிக்க முடியுது . அஜித் மாதிரி  ஒரு மாஸ்  ஹீரோவை பின் பாதியில்  ரொம்ப அடக்கி வாசிக்க வைத்தது  இரிட்டேட்டிங்க்.


    3.அஜித்க்கு பாடல் காட்சிகளில்   அணிவித்த  கூலிங்க் கிளாஸ் ஃபிரேம்  மேட்ச் ஆகலை . ரேபான் மெல்லிய ஃபிரேம் தான் செம கெத்து 


    4. எஜமான் , சின்னக்கவுண்டர் படங்களில்  வில்லன்கள் ஏதாவது பெரிய சதி வேலைகள் செய்வாங்க, அதை  ஹீரோ முறியடிப்பார். இதில் அது மாதிரி  சுவராஸ்ய   முடிச்சுகள்  இல்லை 


    நச் டயலாக்ஸ் 


    சந்தானம்


    1.  இங்கே பாருங்க வக்கீல் சார்.....

     அங்கே எல்லாம் பார்க்க  முடியாதுங்க , யூ புரொசீட்



    2.  மழை வர்றதுக்கு முன்னே காய வெச்சிருக்கும் துணிகளை எடுத்துவிடுவது மாதிரி , மூஞ்சில அடிக்கும்  முன்  முன் ஜாமீன் எடுத்து வெச்சுடுவோம் 


    3.  ஆடு அரிவாளை வாய்ல கவ்விட்டு வந்து  என்னை வெட்டு வெட்டுங்குது 


    4.  சாரி அக்கா , என்னை மறந்துடு


     என்னது ? அக்காவா?

     பின்னே, பொண்ணுங்க மட்டும் தன்னைக்காதலிச்சப்பையனை கழட்டி விடும்போது அண்ணன், தம்பி அப்டினு சொல்ற மாதிரி பசங்க ஏன் காதலியை கழட்டி விட அக்கா, தங்கைன்னு அள்ளி  விடக்கூடாது? 



    5.  நாங்க போறோம்.

     ஏன்? பம்பு செட்ல போய் இரண்டு பேரும் மீதிக்குளியலைப்போடறதுக்கா? 



    6.  ரொம்ப நேரமா உன் மூஞ்சியைப்பார்த்துட்டு  இருக்க முடியலை, சீக்கிரம் சொல்லு உன் ஃபிளாஸ்பேக்கை 




    7. பைலைப்போடுங்கடா கீழே 


     போலீசைப்போட வேணாமா?

     அட, கலவரத்துக்குப்பிறந்தவங்களா!


    8. வாசக்கதவைச்சாத்திட்டியா?

    லேடி - ம் 


    கொல்லைக்கதவை?

     ம்

     ஜன்னல் கதவை?

     பீரோக்கதவைக்கூட சாத்தியாச்சு , வாங்க 


    9. நான்  சொன்னபடி செய்யலை, இன்னைக்கு ராத்திரி நீ திராட்சை சாப்பிட முடியாது  ( டபுள் மீனிங்க் )



    10 உன்னை அசிங்கப்படுத்தறதுல ஒரு அரசாணையே வெளியிடலாம் போல 


    11 முதன் முதலா எங்கண்ண,ன் கண்ணாடியைப்பார்க்கறாரு 

     அப்போ இத்தனை நாளா செங்கல்லைப்பார்த்தா ஷேவிங்க் செஞ்சாரு ? 


    12  டேய், கடைசி வரை நீங்க அண்ணி கையால சாப்பிடவே மாட்டீங்க , இந்தப்பன்னி கையால தான் சாப்பிடுவீங்க 



    13  ஏண்டா, தம்பிங்க எனும் போர்வைல நீங்க எல்லாம் மாமா வேலை தானே பார்த்துட்டு இருந்திருக்கீங்க ?


    14   வண்டியைத்தள்ளி ஸ்டார்ட் பண்ணத்தேவை இல்லை போல, தானா ஸ்டார்ட் ஆகிடும் போல ( டபுள் மீனிங்க் ) 


    15  அதெப்பிடிடா இஞ்செக்சன் போட்டுக்கற குழந்தை மாதிரியே மூஞ்சியை வெச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியுது ? 
    டேய்  பிசையறதை  நிறுத்துடா , கண்  கொண்டு பார்க்க முடியலை 


    16  பீடி ஊதற வாயை வெச்சு பீ பீ ஊத வெச்சுடுவான் போல  இருக்கே?


    17   ஆடத்தெரியாத  சிலுக்கு  கால்லசுளுக்குன்னாளாம்


    18.  பறவை மேல இவ்ளவ் பாசத்தைக்காட்ட காரணம் ?


     டேஸ்ட் தான் 


    19  ஐ  கோழி 

     பின்னே வீராட் கோலின்னா சொன்னேன்?


    20   நீங்க ஒரு நல்ல குடும்பப்பொறுக்கின்னு பாப்பா சொல்லுது 


    21  வீட்ல விளக்கேத்தலை ?

     லாரி டிரைவர் பின்னால போய் இருக்கார் ,வந்ததும் எல்லா விளக்கையும் ஏத்திடுவார் 


    22  தமனா - விளக்கேத்த  ஹெல்ப் பண்ணுங்களேன் 


    அஜித் - டியூப் லைட் போட்டுக்குங்க , நல்ல வெளிச்சம்  கிடைக்கும் 


    23 , அவங்க என்ன குழம்பா ஊத்தறாங்க? போதும் போதும்னு சொல்ல? பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கடா 


    24  மாலை போடச்சொல்லிக்குடுத்தாங்களே, ஜட்டி போடச்சொல்லிக்குடுத்தாங்களா?


    25   எங்கண்ணன்  கெஞ்ச ஆரம்பிச்சார்னா அனக்கோண்டாவே அழும் 


    26  அவரைக்குத்து மதிப்பா எடைப்போட்டுடாதீங்க . குத்து - மதிப்பா எடை போடுங்க  


    27 அந்தக்காலத்துலயே எங்கப்பா தினமும் 1000பேருக்கு சோறு போட்டவரு. சந்தானம் - ஏன்? உங்கப்பா ஹோட்டல்ல சர்வரா இருந்தவரா? # ஜோக் உ ராஜாஜி @ சாவி

    28 எல்லாரும் மூட்டையைக்கட்டுங்க. சந்தானம் - ஏன் ? துணி துவைக்கப்போறியா?

    29 சந்தானம் - நைன்ட்டி ( கட்டிங்) அடிச்ச ஆன்ட்டியைக்கூட நம்புவாங்க.நைட்டி போட்ட உன்னை மாதிரி ஆம்பளையை நம்ப மாட்டாங்க

    30 தலைகால் புரியாம ஆடிட்டேன்.இப்போ தான் தல எது ? வால் எது?னு தெரியுது # வில்லன்


    அஜித் பஞ்ச்

    சந்தோஷம் வந்தா நாலு பேரோட பகிர்ந்துக்கனும்.கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கனும்.அவன் தான் மனுசன்

    2 இது என் குடும்பம்.இவங்களை அடிக்கனும்னா என்னைத்தாண்டி தாஆஆண்டி த்தொட்றா பாக்கலாம்

    3 சுடுகாட்டுக்கு எப்டிப்போகனும்னு கேட்டாங்க.நான் வழி சொன்னேன்.இந்நேரம்் போய்ச்சேர்ந்திருப்பாங்க

    4 நீ கண்ணை மூடி 8 வரைக்கும் எண்ணு அதுக்குள் அங்க்கிள்் எல்லாரும் ஒளிஞ்சுக்குவாங்க

    நம்ம கூட இருக்கறவங்களை நாம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருப்பவன் நம்மைப்பாத்துக்குவான் # 2014 ன் முக்கிய வசனம்

    பொண்ணு னு ஒருத்தி நம்ம வாழ்க்கைல வந்துட்டா அவளுக்காக நாம் மாற வேண்டி இருக்கும்.ஏன் இந்த கஷ்டம்? நாம் நாமாவே இருப்போம்

    7 நான் ம் னு சொன்னா 4 பேரும் உன்னை உழுதுடுவாங்க

    8 எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

    9 4 பேர் தான் இருக்கீங்க. 5 பேர் னு சொல்றே.யார் அந்த அஞ்சாவது ஆள் ? 
    யாருக்கும் அஞ்சாத ஆள் !

    10 நீ எந்த ஜாதின்னு நினைக்கறயோ அந்த ஜாதி. உழைக்கிற ஜாதி

    11 இனி விதைச்ச விவசாயி தான் ரேட்டை நிர்ணயம் செய்வான்

    12 சாப்பாடு போட்டு அதுக்கப்புறம் ஏன் வெளுத்து வாங்கறீங்க? ஏன்னா அடி வாங்க உடம்பு ல தெம்பு இருக்கனும் இல்ல




    படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


    1. வீரம் ,ஜில்லா 2 ம் சரி விகிதத்தில் + - இருப்பதால் 2 ம் ஒரே ரேட்டிங்கில் .மக்கள் தீர்ப்புக்காக ஐ ஆம் வெய்ட்டிங்.என்ன நான் சொல்றது?

    2 அஜித் அடிக்குரலில் வசனம் பேசும் ஸ்டைல் செந்தூரப்பூவே வில் கேப்டன் பேசுவது போல். குட்

    3 ரசிகர்கள் அல்லாத பொது ஜனங்களைக்கவர்வதில் ஜில்லாவை விட வீரம் முன்னிலை # இடை வேளை வரை

    4 வீரம் இடைவேளை வரை சந்தானம் காமெடி ,அஜித் ஷார்ப் டயலாக் டெலிவரி னு ஜாலியாப்போகுது.பேமிலி ஆடியன்சை அதிகம் வர வைக்கும் கதை சம்பவங்கள்+

    இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ரயில் பைட்டுக்கான ஓப்பனிங் பில்டப் தீனா பட காபி ஷாப் பைட்க்கு இணையான சீன்

    6 தமனாவை குட்டைப்பாவாடையில் பாடல் காட்சியில் பார்த்ததும் GOOD டைப்பாவாடை என தோணுது

    7 பைக் ஓட்டும்போதும் கை தட்னாங்க.மாட்டு வண்டி ஓட்னாலும் தட்றாங்க

    8 அஜித் தமனா ஜோடிப்பொருத்தம் சுமார் தான் னு சொல்றவங்க தயிர் சாதம் VS லெமன் பிக்கிள் காம்பினேசனை கிண்டல் பண்ற மாதிரி # லெமனா வந்த தமனா

    9 இனி ஏறுமுகம் தான் என்பதை சிம்பாலிக்கா சொல்வது மாதிரி தமனாவுக்கு ஓப்பனிங் ஷாட் கிரேன் ஷாட்

    10 இன்னொரு டெண்டர் இருக்கு டயலாக் முடிந்ததும் கொட்டும் மழையில் குடையுடன் அஜித் வரும் காட்சி மாஸ் சீன்

    11 ஒட்டன் சத்திரம் வெற்றிச்சித்திரம்

    12 அஜித்தின் ஓப்பனிங் சீன் எஜமான் ரஜினி மாதிரி .சமாதானப்புறாக்கள் பின்னணி ல வருதே அது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?

    13 விஜயா புரொடக்சன் டைட்டில் ஐடியா சூப்பர்.எம் ஜிஆர் ,ரஜினி வரிசையில் அஜித்



    சி பி கமெண்ட்ஸ் 

    வீரம் - பேமிலி ஆடியன்சைக்கவர்ந்திழுக்கும் முன் பாதி , யூகிக்க வைக்கும் திருப்பங்கள் இல்லாத பின் பாதி - 


    விகடன்மார்க் =43


    குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


    ,ரேட்டிங் =3.25 / 5

    ரஜினிக்கு ஒரு எஜமான்.கேப்டனுக்கு ஒரு சின்னக்கவுண்டர் .அஜித்துக்கு ஒரு வீரம்

    திருப்பூர் டைமண்ட் தியேட்டர் . வீரம் . மதியம் 1 மணி ஷோ .திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் உடன் பார்த்தேன்


    டிஸ்கி: ஜில்லா-சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2014/01/blog-post_10.html