Wednesday, September 04, 2013

ஹாலிவுட் கிசுகிசு கார்னர்

ஹாலிவுட் போஸ்ட்

1 • சமீபத்தில் நியூயார்க்கில் ஆய்வு செய்யப்பட்ட ஹாலிவுட் சினிமா நடிகர்களின் சம்பளப்பட்டியலில், உலக நடிகர்களிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டார். போதாதா...? ஆளாளுக்கு "அவர் நடிப்பு அப்படி... இல்லை இல்லை அவர் கவர்ச்சிக்குத்தான் அதிக சம்பளம்... அட அவர் நடந்தாலே பார்க்க படம் பிச்சுக்குமே... என்று ஏகப்பட்ட புகழுரைகள். அப்படித்தானே புகழ்வார்கள். இந்திய மதிப்பில் சுமார் 180 கோடி ரூபாய் சம்பளமாச்சே. முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களில் ஜெனிபர் லாரன்ஸ் (150 கோடி), கிறிஸ்டின் ஸ்டுவார்டு (125 கோடி) உள்ளனர். உலக நாயகிகள்!  2. • பிரபல பாடகர் ஜஸ்டின் பீபரை பார்க்க, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே கூட்டம் கூடிவிட்டது. அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். கூட்டத்தைப் பார்க்க ஹோட்டல் பால்கனிக்கு வந்த பீபர், அவர்களைப் பார்த்து எச்சிலைத் துப்பிவிட்டாராம். இதில் ரசிகர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ரசிகர்கள் கூச்சல் போட்டதைப் பார்த்து, பயந்துபோய் உள்ளே போய்விட்டராம். அதன் பிறகு ஒரு டிவி நிறுவனத்தை அழைத்து பேட்டி கொடுப்பதுபோல, "இன்று காலை நான் தூங்கி எழுந்து பார்த்தபோது நிறைய ரசிகர்கள் எனக்காக காத்திருந்ததைப் பார்த்தேன். உலகிலேயே சிறந்த ரசிகர்கள் இவர்கள்தான்' என்று ஐஸ் மலையையே இறக்கியிருக்கிறார். துப்புறது எச்சில்; பேச்சில் ஐஸ்ô?3. • ஹாலிவுட்டில் குழந்தைகள் படங்கள்தான் வசூலை வாரிக் குவிக்கின்றன. அதிலும் குறிப்பாக அனிமேஷன் படங்கள்தான் இந்த லிஸ்டில் முன்னணி வகிக்கின்றன. "ஸ்மர்ஃப்ஸ்' என்ற படத்தின் முதல்பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தற்போது வந்துள்ள "ஸ்மர்ஃப்ஸ்-2' சக்கை போடு போட்டுள்ளது. சின்ன சின்ன உருவங்கள் செய்யும் சாகசங்கள் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் கவர்ந்துவிட்டன. முதல் பாகம் கொடுத்த வசூலும் நம்பிக்கையும் இரண்டாம் பாகத்தில் தொடர்ந்திருப்பதில் சோனி பிக்சர்ஸýக்கு ஏக மகிழ்ச்சி.
 
 
 
 முதல் பாகத்தை இயக்கிய ராஜா கோஸ்நெல்தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அப்புறம் என்ன மூன்றாவது பாகத்துக்கு தயாராக வேண்டியதுதானே? 
 
 
 
4.• போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்ட லின்ட்சே லோஹன், தற்போது மறு வாழ்வு மையத்தில் சீர்திருத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம். ஆனால் இப்படிப்பட்ட கறை தன் மீது விழுந்துவிட்டதே என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கும் லின்ட்சே லோஹன், எப்படியாவது அந்தக் கறையைத் துடைத்தெறிய வேண்டும் என்று நினைக்கிறார். தான் தாயானால் இதைச் சரி செய்துவிடலாம் என்று முடிவு செய்து, "யாராவது எனக்கு விந்தணுக்களை தானம் தரமுடியுமா?' இப்படி வலைதளத்தில் கேட்டிருக்கிறார். "ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' என்று லின்ட்சே கூறினாலும், யாரும் அவரைத் திருமணம் செய்ய முன் வரவில்லை என்பதே உண்மையாம். ஒரு கறையைத் துடைக்க, இன்னொரு கறையா?   
 
 


5. • வார்னர் பிரதர்ஸ் "மேன் ஆஃப் ஸ்டீல்' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறது. சூப்பர்மேனுடன் பேட்மேனும் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார். ஆனால் அதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. "பேட்மேன் பிகின்ஸ்", "த டார்க் நைட்", "த டார்க் நைட் ரைசஸ்" ஆகிய பாகங்களில் பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேய்ல் இனிமேல் இந்தப் பாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதைக்கு முன்னால் புதிய புதிய பேட்மேனை தேடியாக வேண்டுமாம். இரும்பு மனிதனாகத் தேடுங்க...6.• மேகன் ஃபாக்ஸ், பிரைன் ஆஸ்டின் கிரின் இருவரும் ஹாலிவுட்டில் நல்ல காதல் ஜோடியாக வளம் வந்து, திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களின் காதலுக்கு அடையாளமாக முதல் குழந்தை பிறந்தபோது, "என்னுடைய வாழ்நாளில் நான் விரும்பியது குழந்தையைதான். என்னுடைய வாழ்க்கையை குழந்தைக்காக அர்ப்பணிப்பேன்' என்று உணர்ச்சிவசப்பட்டார் மேகன். இப்படிச் சொல்லி ஒரு வருடம்கூட ஆகவில்லை. இன்னொரு குழந்தைக்குத் தாயாகிவிட்டார் மேகன். இந்த முறையும் உணர்ச்சி வசப்படல் தூக்கலாகவே இருந்தது. போதாக்குறைக்கு "இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று வேறு கூறிவருகிறார். ஏதேது..? இன்னொரு ஏஞ்சலினா ஜூலி ஆகிவிடுவார் போலிருக்கிறதே!
 
 நன் றி -தினமணி 


0 comments: