Saturday, September 07, 2013

ஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்துமதிப்பீடா? இயக்குநர் ராம் பர பரப்பு குமுறல்

 சி பி செந்தில் குமார் ஆகிய என் கருத்து 


ஆனந்த விகடன் தங்க மீன்கள் படத்துக்கு 44 மார்க் கொடுத்தது தரமான படங்களை எடுப்பவர்களுக்கு மிகவும் பின்னடைவு. ஏன்னா   விகடன்  விமர்சனம் சராசரியா  5 லட்சம்  வாசகர்களை போய்ச்சேருது. வாய்வழி  விமர்சனம் எனப்படும் மவுத் டாக் மூலம்  விகடன்  விமர்சனம்  50 லட்சம் பேரை போய்ச்சேரும்  என உத்தேசமாக கணிக்கிறேன் 


  பொதுவாக   கோடம்பாக்கத்தில்  விகடன் மார்க் எவ்வளவு  என்பதை உன்னிப்பாக பார்க்கிறார்கள் , என்பது அனைவரும்  அறிந்ததே .  ஆனானப்பட்டஷங்கர் , மணி ரத்னம்  கூட விகடன்  மார்க்  பற்றிய தங்கள் எதிர்பார்ப்பு பற்றி தனித்தனி பேட்டிகளில்  சிலாகித்தது உண்டு 


 அப்படிப்பட்ட ஆனந்த  விகடன் சமீப காலமாய் அதாவது  5 வருடங்களாக   சாதா படங்களுக்கெல்லாம்  மார்க்குகளைஅள்ளி இறைக்கிறார்கள் , நல்ல படங்களுக்கு   சுமாரான மார்க்கே போடறாங்க 


 முதலில் எல்லாம் விகடனில்  40 மார்க் வாங்கினாலே  அது நல்ல படம் தான். குடும்பத்தோட போய்ப்பார்க்கலாம்  என  மதிப்பிடலாம் . 

விகடனில்  50 மற்றும்  50 க்குமேல்  மார்க் வாங்கிய படங்க:ள் 




1  பதினாறு  வயதினிலே  -  61.5
2. .  நாயகன்  -  60


3. ஹேராம் - 60 


4. உதிரிப்பூக்கள்  - 60


5. பசங்க -58 


6. பரதேசி  - 56  


7. ஹரிதாஸ் - 45

8 கிழக்குச் சீமையிலெ" - 54


9. தவமாய் தவமிருந்து - 53

இப்படிஅதிக மார்க் வாங்கிய படங்கள்  வியாபார ரீதியாக  பெரும் வெற்றி பெறாமலும்  போய் இருக்கின்றன . விகடனில் மார்க் வந்தால் மட்டும் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆக்கி விட முடியாது . ஆனால் நான்  சொல்ல  வருவது லோ பட்ஜெட்டில்  எடுக்கப்படும்  தரமானபடங்களுக்கு    விமர்சனங்கள் பாசிட்டிவாக   அமைந்தால்  அது அதிகமான மக்களிடம்  போய்ச்சேரும் , அதுஆரோக்கியமான  சினிமாவை ரசிப்பவர்களுக்கு நல்லது 


  இந்த தங்க  மீன்கள் படத்தில் குறைகள் இல்லாமல்  இல்லை . இருந்தாலும்   இதுக்கு  50மார்க்  போட்டிருக்கலாம் என்பதே   எனது கருத்து
ராமின் மரமேசையிலிருந்து : 10.
(ஆனந்த விகடன் மதிப்பெண்ணும் சர்ச்சையும்)

வணக்கம்,

வழக்கம் போல் இன்றும் அதிகாலை 3 மணிக்குதான் எழுத முடிகிறது.

ஆனந்த விகடன் குறித்த உங்கள் மின்னஞ்சல்களைப் படித்து முடித்தேன். நண்பகலில் கோவை, தஞ்சை யிலிருந்தும் நண்பர்கள் அழைத்து ஆனந்த விகடன் குறித்து முறையிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாமா என்று கேட்டார்கள்? நீங்களும் மின்னஞ்சலில் இதைத்தான் கேட்டிருக்கிறீர்கள்.

சென்னையில் ஆனந்த விகடன் வியாழன் அன்றுதான் வெளிவரும் என்பதால் நான் ஆனந்த விகடன் அலுவலகத்திற்குச் சென்று ஆசிரியரைச் சந்தித்து உங்கள் அழைப்புகளைக் குறித்துச் சொல்லி ஆனந்தவிகடன் படிக்கத் தரும்படி கேட்டேன்.

கடைசி இரண்டு பத்திகள் தவிர மற்றவை சிறப்பாகவே இருந்தன. இரண்டாம் பத்தியில் அவர்கள் குழம்பியதையும் அவர்கள் கவனிக்கத் தவறியததையும் தர்க்கப்பூர்வமாய் சுட்டிக் காட்டினேன்.

இத்தனை நன்றாக எழுதிவிட்டு ஏன் 44 மார்க், டிவிடி பார்த்து எடுத்தப் படங்களுக்கு 50 மார்க் போடும் நீங்கள் எப்படி ஒரு original அய் புறக்கணிக்கிறீர்கள். 

கற்றது தமிழுக்கும் இதையேதான் செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டு தங்கமீன்கள் குறித்த விளக்கங்களையும் தந்தேன். மதிப்பெண்கள் கொடுத்த அறுவர் குழு அலுவலகம் விட்டு சென்றிருந்ததால் சந்திக்க இயலவில்லை. ஒரு கோரிக்கை வைத்து திரும்பி இருக்கிறேன். ஆசிரியர் திரு.ரா.கண்ணண் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குள்ளாக தங்கள் முதலாளியிடம் பேசிவிட்டு கோரிக்கையை ஏற்க முடியுமா முடியாதா என்று சொல்லிவிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

எனவே நீங்களும் 11 மணி வரை பொறுத்திருங்கள்.
கோரிக்கை ஏற்கபடாவிடின் நானே என் மறுப்பை வெளியிடுகிறேன்.

அதுவரை எந்தக் கருத்தும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிரியங்களுடன்

ராம்.
 
 
ஆனந்த விகடன் ஆசிரியர் வரும் வார ஆனந்த விகடனில் ஆனந்தவிகடன் விமர்சனம் குறித்தும் அதன் மதிப்பெண்கள் குறித்தும் என் விமர்சனத்தைப் பதிவுசெய்வதாய் சொல்லியிருக்கிறார்.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை
இன்னும் ஒரு வாரம் காத்திருப்பதில் தவறில்லை
என்று சொல்லுகிறது.

பிரியங்களுடன்

ராம்.
  •  விகடன்  விமர்சனம்


    தன் மகளை 'தங்க மீனாக’ வளர்க்க ஆசைப்படும் தந்தையின் கதை!   


    நிலையான வேலையும் நிரந்தர வருமானமும் இல்லாத ராம், தன் மகள் சாதனாவை தேவதையாக வளர்க்க ஆசைப்படுகிறார். அச்சு எழுத்துகளுக்கு அஞ்சும் சாதனாவுக்கோ, மலை, குளம், பறவைகள், மீன்கள் என செயல்வழிக் கற்றலில்தான் ஆர்வம். பள்ளியில் அவள் மட்டம் தட்டப்பட, 'மகளுக்கு ஃபீஸ் கட்டக்கூட வக்கில்லையே’ என்று வீட்டில் ராம் குத்திக்காட்டப்பட... இருவரும் தங்கள் அடையாளத்தைத் தக்கவைக்கிறார்களா என்பதே படம்!


    கல்விக் கட்டணங்கள், ஓர் ஏழைக் குடும்பத்தை அலைக்கழிக்கும் கதையை கையில் எடுத்ததற்கும், அப்பா-மகள் பாசத்தை முதல் புள்ளியாக வைத்து சமூகத்தின் பல இழைகளைப் பின்னிய துணிச்சலுக்கும்... இயக்குநர் ராமுக்கு வாழ்த்து.

    அல்லாடும் தந்தையாக 'நடிகர்’ ராம் அறிமுகம். 'எதுக்கு நாயை அடிச்சீங்க?’ என்று மனைவி கேட்க, 'அப்போ வேற யாரைத்தான்டி நான் அடிக்கிறது’ என்று தன் இயலாமையில் வெடிக்கும்போதும், 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுனு காக்கா வந்து உங்ககிட்ட சொல்லுச்சா மிஸ்’ என்று பள்ளிக்கூடத்தில் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் குமுறும்போதும்... மனதில் பதிகிறார். சமயங்களில் பெரிய மனுஷித்தன்மையோடு பேசினாலும், தெற்றுப் பல் சிரிப்பிலும், மழலை உச்சரிப்பிலும் குட்டி தேவதையாக மனம் ஈர்க்கிறாள் சாதனா.


    தன்னை எவிட்டாவாகப் பாவித்து, 'அவ தங்க மீனாகிடுவா’ என்று தோழியிடம் கதை சொல்லும் இடம்... க்ளாஸிக்! 'நானும் செல்லம்மா மாதிரிதானேங்கே’ என்று கணவனிடம் இறைஞ்சுவதும், 'விளையாட்டுக்குக்கூட அவளை 'திருடி’னு சொல்லாதீங்க மாமா’ என்று மாமனாரை அதட்டுவதும், மாமியார், மாமனார், கணவன் என்று அனைவரிடமும் வாங்கும் இடிகளுக்கு ஒருகட்டத்தில் பொறுமை இழந்து மகளிடம் வெடிக்கும்போதும்... ஒவ்வோர் உணர்விலும் உருக்கம் சேர்க்கிறார் ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர். 'நான் நாளைக்கு சாகுறேனே... ஏன்னா, இன்னைக்கு எங்கம்மா பூரி பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்காங்க’ என்று குறுகுறுக்கும் சாதனாவின் குட்டித் தோழி சஞ்சனா தோன்றும் காட்சிகளில் எல்லாம் உள்ளம் கொள்ளை கொள்ளுகிறாள்.

    'அப்போ தாத்தாதான் காக்காவா?’,  'காசு இல்லாதவன்லாம் முட்டாப் பயனு நினைக்காதீங்கடா’, 'விளம்பரம் போடும்போது, 'இதைப் பணம் இல்லாதவங்க பார்க்காதீங்க’ன்னா போடுறாங்க?’, 'கிறிஸ்துமஸ் தாத்தா சொன்னா ஜீசஸ் கேப்பார்... ஹெட் மாஸ்டர் கேப்பாரா?’, 'விளம்பரத்துல நாய் வந்ததுல இருந்து சிம்கார்டு வித்துச்சோ இல்லையோ, நாய் நல்லா விக்குது’, 'அவன் ரொம்ப நல்லவன்... கொஞ்சம் கெட்டவனாத்தான் திரும்பி வரட்டுமே’, 'உங்ககிட்ட நான் விட்டுட்டுப்போன குழந்தையைக் கொன்னுட்டீங்க’ - சூழலுக்குப் பொருத்தமான சுளீர் வசனங்கள் கோபம், ஏக்கம், சோகம், கலகலப்பு சுமந்து படம் நெடுகப் பரவிக்கிடக்கின்றன.


    ஓட்டுத் தாழ்வார வீடு, மலை, குளம், ரயில், சைக்கிள், படகு இல்லம் என ஒவ்வொரு தளத்தையும் ஒவ்வொரு பாத்திரமாக மனதில் பதியவைக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா. பரந்து விரியும் பச்சைப் பசேல் மலைப்பரப்போ, இருள் கவிழ்ந்த ஒற்றை அறையோ இருப்பிடம் கொண்டு சேர்க்கிறது ஒளிப்பதிவு. பாடல்களில் 'ஆனந்த யாழ்’ மீட்டிய யுவன், பின்னணி இசையில் உயிர் உருக்குகிறார். அர்த்தம் செறிந்த வசனங்களுக்கு இணையாக ஸ்கோர் செய்கிறது பிரவாகமான யுவனின் பின்னணி இசை.

    ராம் - சாதனா கதாபாத்திரங்கள்தான் பிரதானமென்றாலும், படத்தின் ஒவ்வொரு கேரக்டர் செதுக்கல்களிலும் தேர்ச்சி. குறிப்பாக, எவிட்டா மிஸ்! க்ளைமாக்ஸ் காட்சி தவிர வசனங்கள் இல்லை, பாடல்கள் இல்லை,  சோகம் ததும்பும் சூழல்தான்... ஆனாலும் 'எவிட்டா மிஸ்’ஸாகக் கலங்கடிக்கிறார்  பத்மப்ரியா.



    பத்மப்ரியாவின் கணவர் நள்ளிரவில் ராமை எதிர்கொள்ளும் சூழலும், சில நிமிடங்களில் மனம் தெளிந்து ராமின் தோள் பிடித்து அரவணைப்பதும்... நெகிழ்ச்சியான சிறுகதை! 'நல்லாசிரியர் விருது’ பெற்ற பூ ராமு, மருமகளின் மீது கோபமும் பாசமும் பொழியும் ரோகினி, 'டேய் என் அண்ணன் வாங்கிக் கொடுத்த சாக்லேட்... எனக்கும் குடுடா’ எனும் தங்கை ரம்யா, பார்வையிலேயே அதட்டல் போடும் ஸ்டெல்லா மிஸ் லிஸ்ஸி... நம்மோடு குடியிருக்கும் நம்மைக் கடந்து செல்லும் ஆளுமைகளே ஒவ்வொரு ஃப்ரேமும்... அழகு!

    இத்தனை 'நல்லன எல்லாம்’ பார்த்துப் பார்த்துச் சேகரித்திருக்கும் ராம், பின்பாதி மையச் சரடில் குழம்பியது ஏன்? பள்ளிக் கட்டணம் 2,000 ரூபாய் மட்டும்தான் ராமுக்கு சிக்கல். ஆனால், 2,000 ரூபாய் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் இருக்க, கேரளா சென்றவர், பிறகு 22 ஆயிரம் ரூபாய் 'நாய்’ என்று இலக்கு வைத்து காடு, மலை, மேடேறுவதெல்லாம்... வழி தவறிய பயணம்!


    எவிட்டா டீச்சரின் சந்தேகப் புத்திக் கணவனின் இயல்பை வார்த்தைகளே இல்லாமல் பதிவுசெய்த இடம், சாதனா - சஞ்சனா இருவரிடையிலான குழந்தை நட்பை அச்சு அசலாகப் பிரதியெடுத்த சித்திரிப்புகள்... அந்த அத்தியாயங்களின் நேர்த்தியைப் பின்பாதியிலும் புகுத்தியிருக்கலாம் ராம்!

    ஆனாலும், கண்ணாடித் தொட்டிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல், குளத்தின் நீள அகலத்துக்கு வளையவரும் இந்தத் 'தங்க மீனி’ன் உற்சாகத்தை ரசிக்கலாம்!


    - விகடன் விமர்சனக்  குழு



    நல்ல கதை கரு.அருமையான இசை ,கேமரா, எல்லாம் இருந்தும் குழப்பமான திரைகதை சொதப்புகிறது. எல்லா பாத்திரங்களின் எதார்த்த நடிப்பு மனதை நிறைக்கும் போது,கதாநாயகனின் வெற்று ஆர்ப்பாட்டம் பல சமயங்களில் எரிசலடைய வைக்கிறது. 'கொள்கைவாதி' எப்போதும் குழப்பவாதியாகவே இருக்க வேண்டும் என்பது என்ன விதியோ???

    என்னங்க இது அநியாயமாக இருக்கு... இந்த படத்துக்கு 60 மேலே மதிப்பெண்கள் கொடுப்பதை விட்டு விட்டு வெறும் 44 தான் கொடுக்குறீங்களே....

    ராம் நல்ல படைப்பாளி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஆனால் கணினி துறையை சாடுவது அவரின் எல்லா படங்களிலும் பொதுவாகிறது! திடீர் பணக்காரன்.. படோபமாக வாழுவது கணினித்துறையில் மட்டுமா நடக்கிறது.. சினிமாத்துறையில் நடக்காத கூத்துக்கலா? தன் படங்களில் அதை படமாக்கவோ விமர்சிக்க முயல்வாரா ராம்!

    நல்ல படம். ஆனால், வீட்டை விட்டு பணம் சம்பாதிக்கப் போகும் பகுதிகள் முட்டாள்தனமானது யதார்தமற்றது. இந்த இயக்குனருக்கு ஒரு இயலாமை உள்ளது, கையறு நிலை. அதனாலேயே, தாரே ஜமீர் பர் பாதிப்பில் உல்டா அடித்தாலும் அப்பன் வழக்கம் போல் கொஞ்சம் நட்டாக காட்டியது.

    பின்பாதி மையச் சரடில் குழம்பியது ஏன்? கற்றது தமிழிலும் இதே பிழை( சம்மந்தமே இல்லாமல் கணினி துறையை சாடியது). நல்ல படைப்பாளி நல்ல கதை சொல்லியாக இருக்கின்ற நீங்கள் இந்த விஷயத்தில் மேலும் கவனம் செலுத்துங்கள். உலக தர தமிழ் சினிமாவை உங்களை போன்றவர்களிடம் இருந்துதான் எதிர் பார்க்கிறோம். பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த மற்றுமோர் அறிய படைப்பாளி !!! வாழ்த்துக்கள் ராம்.
    • Jegadeesh

    ...படத்தின் முன்னோட்டமே கண்களில் கண்ணீர் முட்ட வைத்தது... குட்டி பெண் நமது வீடுகளில் இருக்கும் சேட்டை செய்யும் குட்டி பெண்களை நினைவுட்டுகிறாள்...
    • R.BALAMURUGESAN
    கண்ணாடித் தொட்டிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல், குளத்தின் நீள அகலத்துக்கு வளையவரும் இந்தத் 'தங்க மீனி’ன் உற்சாகத்தை ரசிக்கலாம்!
    • satheesh
    வாழ்த்துகள் ராம். மென் மேலும் வளர்க. நல்ல படங்களை இதுவரை தந்து விட்ட நீங்கள், உங்களுக்கென ஒரு பாதையையும் இடத்தையும் பிடித்துவிட்டீர்கள். இனிமேல் போக வேண்டிய தூரத்தை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும், உங்களுக்கு தெரியாதது இல்லை, கெட்ட சினிமா உலகம் இது.

    யுவன் உங்களை எப்போதும் கை விட்டதில்லை, இந்த படத்திலும் அப்படியே, ஆனந்த யாழ் சூப்பர். அவருடன் மீண்டும் வேலை செய்ய நேர்ந்தால், மறந்தும் யுவனை பாட வைத்துவிடாதீர்கள்.
    • E

    நண்பர்களே .... ரொம்ப நாளைக்கு பிறகு வெளிவந்திருக்கும் ஒரு மிக தரமான திரைப்படம். தயவு செய்து பாருங்கள்.
    எனக்கும் இரு பெண் குழந்தைகள் உண்டு. ஆனால் எல்லோருக்கும் முரண்பட்டால் தனியாக தெரிவோம் என்பதற்க்காக சொல்லவில்லை. என்னைபொருத்தவரை இது பெண்ணின் அங்கங்களை காட்டி ஏமாற்றுவது போல் இது அப்பா-மகள் பாசத்தை மிகைப்படுத்தி மக்களை ஏமாற்றும் படம்.

    எனக்கு திருவிளையாடலில் நக்கீரனார் சொல்வதாக வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. "ஒரு சரியான பாடலுக்கு என் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதனைப்பார்த்து மகிழ்ச்சியடைபவன் நான்தான். ஒரு பிழையான பாட்டிற்க்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்த்து வருத்தப்படுபவனும் நான் தான்." என்பது போல இந்த படத்தை இரானிய படத்தினிடமோ அல்லது ஜப்பானிய அகிரா குரோசோவா படத்தினிடமோ, நம்மூர் சத்யஜித் ரே படத்தினிடமோ ஒப்பீட்டு பார்க்க வேண்டாம்.

    என்னைக்கேட்டால் இந்த படத்தில் protoganist -ன் தங்கை கேட்ட கேள்வி , "செல்லம்மா 5 -ஓ அல்லது 50 லட்ச ரூபாயோ மதிப்புள்ள கார் கேட்டிருந்தால் தந்தை எந்தளவு stretch செய்ய வேண்டும்" என்பது மிகச்சரியான கேள்வி என்பேன்.

    இந்த படம் ஒரு பண்படாத மனிதனின் பிதற்றல் என்பது என் தாழ்மையான கருத்து.
    • a

    பாஸ், தலைவா படத்தை விட இது 1000 டைம்ஸ் பெட்டெர் தானே...அப்புறம் ஏன் பாஸ் எவ்வளுவு நல்லா பரீட்சை எழுதினாலும் மார்க் மட்டும் கம்மியா போடுற தமிழ் வாத்தியார் மாதிரியே மார்க் போடுறிங்க......
    இது அநியாயம் பாஸ்... இது கண்டிப்பா 48-50 மார்க்கு தகுதியான படம் தான்.. பொங்கு அடிக்காதிங்க

    44 toooo less.. 60 எதிர்பார்த்தேன்..
    • வேல்
    கஞ்சப் பிசாசுய்யா நீங்க . வெறும் 44 ? போங்கடா !
    ஆயிரம் நல்ல விஷயம் சொல்லிட்டு வெறும் 44 தானா?

    கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும் இது போன்ற படங்களை...
    • அசோகன், சிங்கப்பூர்
    • 1

    நல்ல படமா இருக்கும் போலிருக்கு! பார்க்க வேண்டும். ஆனால், என் இவ்வளவு குறைந்த மார்க்?
    \

    அடேடே விகடன் 42 மார்க்குக்கு மேல போட்டா பாக்கலாம் போலருக்கே.
    • S
    44 மதிப்பெண் மிகவும் குறைவு

1 comments:

ILA (a) இளா said...

ஆட்டோகிராஃபிற்கு 52ன்னு நினைக்கிறேன். சரியா தெரியல