Thursday, September 26, 2013

2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி

தமிழக மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசு மீது மோடி தாக்கு



மத்திய அரசின் பலவீனத்தின் காரணமாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிப்பதாக, பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


திருச்சியில் இன்று நடந்த பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், குஜராத் மீனவர்கள் அவ்வப்போது பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளாகின்றனர். அதைப் போலவே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த இரு மாநில மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் அண்டை நாட்டுப் படையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலைக்கு, மத்திய அரசின் பலவீனமே காரணம். நாட்டின் குடிமக்களுக்காக நடவடிக்கை எடுக்க வலுவற்ற மத்திய அரசை தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும்.


கடந்த கால வரலாற்றில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் தமிழக மீனவர்கள் பெருமளவில் இலங்கைப் படையினரால் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்” என்றார் மோடி.




பிரதமருக்குக் கண்டனம்...


ஜம்முவில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைச் சுட்டிக்காட்டிய மோடி, "சொந்த நாட்டு மீனவர்களை அண்டைநாட்டுப் படையினர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளால் நம் படையினர் கொல்லப்படுகிறார்கள். அண்டை நாடுகளால், சொந்த நாட்டு மக்களுக்கு இவ்வாறாக மிகப் பெரிய அளவில் இன்னல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற வேளையில், அதே அண்டை நாட்டின் பிரதமருடன் வெளிநாட்டிலே உணவருந்திருக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?


பிரதமர் மன்மோகன் சிங் எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார். இந்த நாட்டின் கெளரவத்துக்கா? பாதுகாப்புக்கா? அல்லது வேறு நிர்பந்தங்களுக்காக பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதற்கா? எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார்?" என்றவர், பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.


மேலும், "நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், அந்த நாட்டின் அரசைத் தூக்கி எறிய வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது" என்றார்.


பொருளாதார வீழ்ச்சி...


ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை மேற்கோள்காட்டி, நாட்டின் பொருளாதர நிலை குறித்துப் பேசியவர், "இந்த ஆட்சி தொடர்ந்து இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்குமானால், இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று வீதியிலே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நம் நாட்டின் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.


மத்திய அரசின் கொள்கை காரணமாக, தொழிலதிபர்கள், நிறுவனங்கள், இங்குள்ள பெல் நிறுவனம் என அனைத்துத் தரப்பும் பிரச்சினையில் இருக்கிறது. ஆனால், முதல் 50 இடங்களில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு சாதகமாக இருந்து வருகிறது. சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது.


ஆதார் அட்டை



ஆதார் அட்டை விஷயத்தில் இந்த அரசு ஆனந்த கூத்தாடும் வேளையில், அந்த அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆதார் அட்டைக்கு ஆன செலவையும், அதன் பின்னணியையும் பகிரங்கப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
ஆதார் அட்டை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள கேள்விகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரதமரிடம் கேட்டிருக்கிறேன். ஆதார் அட்டை கொடுப்பதால், மாநிலத்தின் பாதுகாப்புக்கே பிரச்சினை என்று சொன்னேன். ஆனால், இப்போதுதான் உச்ச நீதிமன்றம் உத்தரவால் மத்திய அரசுக்கு புரிந்திருக்கிறது.



அரசியல் ஆதாயத்துக்காகவும் நாடகத்துக்காகவும் ஆதார் அட்டை வடிவில் நாட்டின் பல கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது" என்றார் மோடி.


மக்களைப் பிளவுபடுத்தும் காங்கிரஸ்



காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீட்டி, அதைச் செயல்படுத்தி வருகிறது. அக்கட்சியிடம் மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.



இந்த நாட்டில் உள்ள மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ஜம்மு காஷ்மீருக்கென தனிச் சட்டம் என்பது போன்ற மக்கள் விரோதச் செயல்களை காங்கிரஸ் செய்து வந்திருக்கிறது.



இதேபோல், நதிநீர் பிரச்சினையைக் கொண்டு மாநிலங்களுக்கு இடையில் மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் இந்தப் பிரிவினை காங்கிரஸ், நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாதிரியான பிளவு மனப்பான்மை உள்ள காங்கிரஸ், நகர மக்களுக்கும் கிராம மக்களும் இடையே வேறுபாட்டை உண்டாக்கி இருக்கிறது" என்றார் மோடி.


thanx - the hindu


DINAMALAR  READERS  COMMENTS

1. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று அதிகார பூர்வமாக அறிவிக்க பட்ட பிறகு, மோடி இன்று முதல் முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார்..... 1. இதுவரை 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் நடுகடலில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து அவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும் , படகு மற்றும் மீன்களை பிடுங்கி அவர்களை சிறையில் அடைப்பது பற்றியும், பாஜக அரசு அமைந்தால், சிங்கள அரசின் மீது என்ன நடவடிக்கை எடுப்போம் என்று பேசுவாரா ??? 2. தமிழ் ஈழம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் தமிழ் ஈழமே தீர்வு என்றும் அதற்கு அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு, தமிழக சட்டமன்றத்தில் மசோதாவை முன்மொழிந்தது... இதை பற்றி பேசுவாரா ??? 3. மத்திய காங்கிரஸ் அரசால் தொடர்ந்து வஞ்சிகபட்டு , உரிமைகள் மறுக்கப்பட்டு , தேவைகள் அலைகழிக்க பட்டு, மாற்றான் தாய் மனபான்மையுடன் நடத்தப்படும் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் பற்றி பேசுவாரா ??? இன்று என்ன பேச போகிறார் மோடி ??? தமிழர்களின் நலன்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் ??? காங்கிரஸ் , பாஜக இரண்டும் வேறு வேறு என்று எப்படி தமிழர்களுக்கு உணர்த்த போகிறார் ??? தமிழக முதல்வரின் நிர்வாக திறனை பற்றி என்ன சொல்ல போகிறார் ??? நமது கேள்விக்கான விடையை எதிர் நோக்கி... காத்திருப்போம்...


2. இந்தியாவில் உள்ள கட்சிகளில் ஜனநாயக முறையை ஓரளவுக்காவது பின்பற்றுவது BJP யும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான்.மற்றவை எல்லாம் மன்னராட்சி,பரம்பரை ஆட்சியாக மாறி விட்டன. கட்சியிலுள்ளவர்களும் கொத்தடிமைகளாக தான் செயல் பட்டு கொண்டிருக்கின்றனர்..இவர்கள் மாற வேண்டும் அல்லது நாம் மாற்ற வேண்டும்.நாம் என்ன செய்கிறோம்.நம் கட்சி தலைவர் சொல்லி விட்டால் கண்ணை மூடி கொண்டு ஓடுகிறோம். அவர் எதை செய்தாலும் ஆதரித்து சப்பை கட்டு கட்டுகிறோம். தவறு யார் செய்தாலும் தவறு தான் என்ன செய்வது,எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சமாதான படுத்தி கொள்வதிலும் பயனில்லை.இன்று BJP யும் MODI யும் நல்லது செய்வார்கள் என்று நம்புகிறோம்.அதற்கு காரணம் சென்ற முறை வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடந்த ஆட்சி மற்றும் ஐந்து மாநிலங்களில் இப்பொழுது அவர்கள் தலைமையில் நடை பெறும் ஆட்சி.எனவே இப்பொழுது பிஜேபி யை ஆதரிப்போம்.


//மதம்,மொழி,பாகுபாடின்றி மோடி செயல்பட்டால் //// < இந்த வரியே தவறு. என் இந்தக்கேள்வியை மற்ற கட்சிகளை பார்த்து கேட்கவில்லை? இட ஒதுக்கீட்டு கொள்கையில் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு சாதகமாக ஆந்திராவில் செயல்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது கையாலாகாத காங்கிரஸ் பற்றி என்ன சொல்லுவீர்கள். காஸ்மீர் அகதிகளாக டெல்லியில் வாழும் காஷ்மீரி பண்டிட்களுக்கு எதுவுமே செய்யாத, செய்ய நினைக்காத கையாலாகாத காங்கிரஸ் பற்றி பேசுவீர்களா? இவ்வளவுக்கும் நேரு குடும்பமும் காஷ்மீரி பண்டிட் குடும்பம்தான்....


இங்கே கருத்து சொல்லும் எல்லோருக்கும் America தமிழின் சார்பாக ஒரு வேண்டுகோள். மோடியுடன் கூட்டு வைக்க அம்மாவிடம் ஒரு விண்ணப்பம் செய்யவும். இதை Facebook அல்லது வேறு வழியில் ஒரு இயக்கமாக தொடங்கி 'ஜயா' விடம் சொல்லவும். நம்மால் நினைத்தால் முடியும். நாங்களும் எங்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் நேரம் வராதா என்ற எங்கள் கனவு நினைவாகும். இதை


நேற்றிலிருந்து தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பாரதிய ஜனதா/மோடி ஆதரவாளர்கள் அதிர்ப்தியில் உள்ளனர். அதற்கு காரணம் மோடிக்கு அட்வைஸ் கொடுத்த இல கணேசன் பற்றிய செய்தி. திமுவுடனும் கூட்டணிக்கு தயார் என்றால் பிஜேபிக்கு அழிவு காலம் தான். திமுகவுடன் பிஜேபி கூட்டணி என்று வந்துவிட்டால் பிஜேபியின் வாக்கு கண்டிப்பாக சரிவது நிச்சயம். மோடியால் திமுகவுக்கு சற்று வாக்குகள் கூடுமே தவிர, தற்போதுள்ள நிலையில் பிஜேபி கடும் நஷ்டத்தை சந்திக்கும். இல கணேசன் ராங் அட்வைஸ் கொடுக்க கூடாது. தற்போதுள்ள சூழ்நிலையில் மோடியா ஜெயாவா என்றால் திமுக மோடி அருகில் இருந்தால் மக்கள் ஜெயா பக்கம் தான் நிற்பார்கள்.


6  திரு மோடி, அவர்களே... தமிழுக்கும் தமிழர்க்கும் நன்மை செய்பவர். பிறப்பால் தமிழனாக இல்லாவிட்டாலும் தமிழர்கள் அவனை தமிழனாகவே ஏற்றுக்கொள்வார்கள். இன்று உங்களை விட்டால் எங்களுக்கு ஆதரவில்லை. தமிழர்கள் இந்தியாவிற்கு நன்றியுடன் இருப்பதை உணர்ந்து எங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கொணர்ந்தால் பாஜக தமிழகத்தில் நிலைபெருவதொடு இந்தியாவின் வருங்கால வளர்ச்சியை கருதி உங்களயே பிரதமராக்க என்றென்றும் பாடுபடுவோம். சொன்னதை செய்வான் தமிழன் நம்புங்கள்.


கோயமுத்தூரு கிச்சு.....மோடிக்கு என்றுமே அதிமுக ஆதரவளிக்க தயாராய் உள்ளது. அது பிஜேபி எப்படி திமுகவிடம் நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பிஜேபி ஆதரவாளர்கள் முதலில் அம்மா சப்போர்ட்டர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிஜேபி எப்போது திமுக என்ற சாக்கடையில் சங்கமிக்கிறதோ அன்றே பிஜேபி ஆதரவாளர்கள் வாக்கு அம்மா கட்சிக்கு சென்றுவிடும். காரணம் திமுக மேல் அவ்வளவு வெறுப்பில் மக்கள் உள்ளனர். தொடர்ந்து 14 வருடமாக மத்திய மாநில அரசுகளில் பங்கேற்று திமுக சாதித்தது என்ன ??? அவுங்க சொத்து பட்டியல் ஏறி அடுத்தவன் குழிக்குள் போனது தான் மிச்சம். அரசியலில் யாராவது சந்நியாசி உண்டா....


பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மோடி அவர்களே வருக வருக. கூட்டணி ஆட்சி அமைத்து வரலாறு காணாத வகையில் கூட்டுக்கொள்ளை அடித்த நிலையை தாங்கள் மாற்ற வேண்டும். இந்திய இறையான்மை கேலி கூத்து ஆக்கப்பட்டு இருப்பதை மாற்ற வேண்டும். ஓட்டுக்காக சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லியே, சிறு பான்மை பெரும்பான்மை இரண்டையும் ஒரு சேர உருக்குலைத்த செயலை மாற்றி ஆக வேண்டும். இந்தியா நம் தாய் நாடு என்ற உணர்வே இல்லாத சில ஜென்மங்களை திருத்த வேண்டும். மொத்தத்தில் இன்று முதல் புதிய பாரதம் உதயமாக தங்கள் வருகை சிறப்பாக அமையட்டும். வாழ்க பாரதம்.


ஓட்டுக்காக சிறுபான்மை மக்களுக்கு எல்லாத்தையும் இந்த அரசு அள்ளி கொடுத்துவிட்ட மாதிரி எழுதி இருக்கிறார்.அரசு வேலை வாய்ப்பில் சிறுபான்மையினர் பாதிக்கு மேல் இருப்பார்களா? அல்லது நிறைய சலுகைகள் வழங்கப்பட்டு எல்லா சிறுபான்மயினரும் வசதி வாய்ப்போடு இருக்கிறார்களா? எந்த அர்த்தத்தில் சிறுபான்மையினரை வம்புக்கு இழுக்குறீர்கள். உண்மை நிலை என்னவென்றால் அரசு அமைத்த சச்சார் கமிட்டியின் அறிக்கைபடி பின்தங்கிய வகுப்பாரை விட சிறுபான்மையினர்தான் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளார்கள் என்று கூறுகிறது.குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்த கதையாக உள்ளது உங்கள் அறிக்கை..


10  மோடியை பற்றி தெரியாதவர்களுக்கு அல்லது தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ........... எதுவெல்லாம் சாத்தியமோ அதுவெல்லாம் சாத்தியமல்ல என்று தொடர்ந்து இந்தியர்களாகிய நாம் நம்பவைக்கப்பட்டு வருகிறோம். அந்தப் பட்டியல் மிக நீளமானது. குடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா? முடியவே முடியாது நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறதே அதை எப்படித் தீர்க்கமுடியும்? எல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா? அது எப்படி முடியும்? 


மின்சாரம் என்ன மரத்திலா விளைகிறது? விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? சாத்தியமே இல்லை. நதிகளை இணைக்க முடியுமா? நதிகளையாவது, இணைக்கிறதாவது? ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா? அதெல்லாம் நடக்காது. ஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா? வாய்ப்பே இல்லை. அரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா? அதுவும் ஒரே நாளில்? கனவிலும் சாத்தியமில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.



 ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில். புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர். மக்களைக் கொண்டே, அவர்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை அடையச் செய்யும் நரேந்திர மோடி அரசின் சூத்திரங்களை நாம் விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. அவை, நமது நம்பிக்கைகளை மீட்டெடுக்க உதவுவதோடு, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உலகில் ஜொலிப்பது சாத்தியம்தான் என நம்மை நம்ப வைக்கிறது.



 இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்...சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.



 நரேந்திர மோடி சொல்வதைப் போல், நமது கனவுகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யட்டும். வாருங்கள், குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு பார்வை பார்ப்போம். குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. இது பத்திரிக்கையில் பணம் கொடுத்துப் போடப்பட்ட விளம்பரம் அல்ல. அரசியல்வாதிகளின் பிதற்றலும் அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.



 அதுவும் மும்முனை மின் இணைப்பு. 2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும்மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்தக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் இருக்கலாம் அல்லது எளிதில் மின் இணைப்பு வழங்க முடியாத பகுதியில் இருக்கலாம்....இது மட்டுமல்ல, அங்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது யாரும் ஸ்டெபிலைசர்களை வாங்குவதில்லை.




 யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றுக்கு குஜராத்தில் வேலையே இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் பிற தொழிலுக்கு விவசாயிகள் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு விவசாயத்தின் பரப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மாநில விவசாயிகளுக்குக் கிடைக்கும் தடையில்லாத, தரமான மின்சாரம்....இதே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு முதலமைச்சர்களின்கீழ் வேலை செய்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மட்டும் எப்படி அவர்களால் திட்டங்களைத் திட்டமிட்ட சமயத்திலோ அல்லது முன்னதாகவோ முடிக்க முடி கிறது?



 எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது? எப்படி அவர்களால் கடினமான பணிகளைக்கூட எளிதாக முடிக்க முடிகிறது? எப்படி அவர்களுக்கு, திடீரென்று குஜராத்தை முன்னேற்றியே தீரவேண்டும் என்கிற உறுதி வந்துள்ளது? எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது? ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது? எப்படி அவர்களுக்குள், முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் திறன் வந்தது? எப்படி அவர்களுக்கு, அரசு வேலையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது? அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில், நரேந்திர மோடி என்பவரின் தன்னிகரற்ற தலைமை என்பதுதான். நரேந்திர மோடி குஜராத்தை ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் கம்பெனிபோல் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். 



இது அவரது நுணுக்கமான, திடமான திட்டமிடலைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்....பொதுவாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், எல்லாருமே, ‘இது நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்காணிக்கிறார். இத்திட்டத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாகவேண்டும். அதற்குத் தேவைப்படும் எந்த உதவிகளையும் மோடி செய்வார்’ என்பதாகும். ..........இது ஒரு சிறிய தொகுப்பு தான்...இதே போன்று தான் குஜராத்தின் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு திட்டமும் செயல் படுத்தப்படுகிறது...


THANX - DINAMALAR

0 comments: