Thursday, September 19, 2013

மத்தாப்பூ - சினிமா விமர்சனம்

ஹீரோவோட பர்ஸ் மிஸ் ஆகி  ஒரு மிஸ் கைல சிக்குது . 2 பேருக்கும் அறிமுகம் ஆகுது . அப்புறம் பார்த்தா  ஹீரோயின் ஹீரோவோட அக்காவோட அசிஸ்டெண்ட். விடுவாரா ஹீரோ  ஹீரோயின் மனசுல டெண்ட் போட  பின்னாலயே சுத்தறார். ஆனா பாருங்க  ஹீரோயின்  நரசிம்மராவ்க்கு பேத்தி மாதிரி  ஒரு உம்மணாம்மூஞ்சி . பூரின்னா  உப்பலா  இருக்கனும் , நமீதான்னா கும்முன்னு இருக்கனும் , பொண்ணுங்கன்னா  சிரிச்ச முகமா இருக்கனும்னு சென்னிமலை சித்தர் சொன்னது பாப்பாவுக்கு தெரியல போல .விலகி விலகி போகுது .

 ஆம்பளைங்கள்னாலே பாப்பாவுக்கு ஏன் வெறுப்புன்னு  ஒரு ஃபிளாஸ் பேக் . ஒரு தலை ராகம் பட கால கட்டத்தில்  சொல்லப்பட்ட அதே டைப்  காரணம்  தான் .


ஹீரோயின்  ஆண் பெண் நட்பை சாதாரணமா  நினைக்குது , ஆனா பெற்றோர்  அடிக்கடி எச்சரிக்கறாங்க . ஆனா பாப்பா கேட்கலை . அது எதார்த்தமா பழகுது . பொதுவா பெண் நட்புன்னா ஆம்பளைங்க எல்லாருமே ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தான் . எல்லாருமே தெள்ளவேரிங்க தான் , மொள்ள மாரிங்க தான் , முடிச்சவிக்கங்க தான் அப்டினு நிரூபிக்க  ஒரு சந்தர்ப்பம் . பாப்பாவோட  கிளாஸ் மேட்  3 நண்பர்களோட சேர்ந்து  கில்மாக்கு ட்ரை பண்றான் . பாப்பா தப்பி ஓடும்போது  போலீஸ் வந்துடுது . போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்சனை போனதால அம்மாவுக்கு செம கடுப்பு , ஹீரோயினை திட்டுது.  அப்போ எடுத்த  முடிவுதான் ஆம்பளைங்க சகவாசமே வேணாம்னு  ஹீரோயின்  எடுத்தது . அந்த  முடிவை  ஹீரோ எப்படி  முறியடிக்கறார் என்பதே  கதை 

சமீப காலத்தில் வந்த   புது முக ஆண்கள் ல இந்தப்பட  ஹீரோ  ஜெயன் மனம் கவர்கிறார். அருமையான நடிப்பு. மவுன ராகம் கார்த்திக் மாதிரி  துள்ளலான , இளமையான , கலாட்டாவான நடிப்பு . சபாஷ் . நல்ல எதிர்காலம் உண்டு இவருக்கு , டய்லாக்  டெலிவரியும் அமோகம் காலேஜ் பொண்ணுங்க  இவர் பின்னால  அலைவது  உறுதி 


நடுவுல  கொஞ்ச பக்கத்தைக்காணோம் நாயகி  யப்பா பேய் மாதிரி இருக்கா மேக்கப்  புகழ் காயத்ரிதான் நாயகி . படத்துக்கு சம்ப்ளமே கிடையாதுன்னு இயக்குநர்  சொல்லீடாரா? அல்லது  தான் மட்டும் தான்  நாயகியை  ரசிக்கனும் , ஊர்ல ஒரு  பய ரசிக்கக்கூடாதுன்னு  நினைச்சாரா தெரியல  , படம்  பூரா இவருக்கு  டல் மேக்கப் . எண்ணெய்  வழிஞ்ச  முகம் மாதிரி , உர் என  முகத்தை வைத்திருப்பது  முன் பாதியில் ஓக்கே  , ஃபிளாஸ் பேக் காட்சியில் கூட  அழுது வடிவது ஏனோ? ஒற்றை  விரலில்  விசில் அடிக்கும்  மானரிசம் எல்லாம் எடுபடவில்லை . பாப்பா  ரேவதி மாதிரி ட்ரை பண்ணி இருக்கு . ஆனா பாருங்க 30 % கூட ஒர்க் அவுட் ஆகலை 


 சித்தாரா  நாயகனின் சித்தி  கேரக்டர் . ஆள் இப்பவும்  சிக்னு இருக்கார். அவருக்கு  ஜோடி இளவரசு . யதார்த்தமான நடிப்பு .ஹீரோயின்=ன் பெற்றோராக  வரும்  கிட்டி - கீதா  ஜோடி  நிறைவான நடிப்பு 
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. புதுமுக  ஹீரோ எனும் நினைப்பே  இல்லாத படி அவரை இயக்கிய விதம் . கண்ணியமான ஆடைகள்  , கவுரமான காட்சிகள் , பெண்கள் ரசிக்கும் படமாக தந்த  விதம் 


2. பாடல் காட்சிகள்  மிக நளினம் .  அடடா இதயம் பறக்கிறதே நல்ல மெலோடி ,  உன் பார்வை வெளிச்சத்திலே , யாரிடமும் சொல்லாதே( இந்தப்பாட்டில்  பிங்க்  கலர்  மிடியில்  வரும் ஒரு குரூப் டான்சர் நல்ல அழகு ) ஆகிய பாடல்கள்  எல்லாம்  ஓக்கே  ரகம் 3. தினந்தோறும்  படத்துக்குப்பின்  ஒரு  பெரிய  கேப்  விழுந்தாலும்  , போதைப்பழக்கத்திற்கு  அடிமை ஆகி மிக வறுமை  நிலையை சந்தித்து  மீண்டு  வந்து  ஒரு நல்ல படம் தந்ததற்கும் பாராட்டுக்கள் 
இயக்குநரிடம்  சில  கேள்விகள் 1. கோயில்   குருக்கள்  கோயில்ல இருக்கும்போதே  உள்ளே  சிலையை கை காட்டாமல் மேலே ஆகாயத்தில் கை காட்டி “ மேலே  ஒருத்தன்  இருக்கான் அவன் பார்த்துக்குவான் “ என்கிறாரே? அப்போ  கோயில்க்கு உள்ளே   இருப்பது  யாரு ? 2.  ஹீரோயின்   எல்லா காட்சிகளிலும்   தோழிகள் , தோழர்கள்க்கு ஹாய் சொல்லும்போது  இடது கையில்  ஹாய் சொல்வது ஏன்? 


3.  ஹீரோ  முதன் முதலாக   ஹீரோயின்  வீட்டுக்குப்போறார். அவர்  யார்னே   பெற்றோருக்குத்தெரியாது , ஆனா முதல் சந்திப்பிலேயே  ஹீரோவை  வீட்டின் கிச்சன் ரூமுக்குள் பால் காய்ச்ச அனுமதிப்பது , ஹீரோயின்  பெட்ரூமுக்கே  அவரை தனியாக பால் தர  அனுப்பவது  ரொம்ப  ரொம்ப ஓவர் . சொந்த அத்தை பையன்  தான் அப்படி உரிமையா  போக  முடியும் 


4. அந்த  3 பசங்க மேல ஏன் அட்டெம்ப்ட்  ரேப் கேஸ் போடலை ? ஹீரோயின்   மேல காயம் ஆகி இருக்கு . பேர் வெளி வராம பார்த்துக்குங்கன்னு சொல்லி   கேஸ் போட்டிருக்கலாமே? 


5. சொந்த அம்மாவிடம்    தன்னை மகள் நல்லவள் என  நிரூபிக்க காலம்  பூரா மேரேஜ் பண்ணிக்காம  இருப்பதாக  முடிவு எடுப்பது அபத்தம் , அப்போதே வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து நிரூபிச்சு இருக்கலாமே? 


6. இந்தக்கதையின்  மெயினான  முடிச்சு  ஹீரோயின் ஆண்கள் மீது கோபம் கொண்டவள் என்பது , அதுக்கான  ஃபிளாஸ்பேக் காட்சி வலுவாக  இல்லை . எவனோ  ஒருவன் செஞ்ச தப்புக்கு   இவ எப்படி  தனக்குத்தானே தண்டனை  கொடுத்துக்கலாம் ? 


7. மேலெ நான்  சொன்ன 6 வது பாயிண்ட்டை வேற யாரும் கேட்டுடக்கூடாதே என ஹீரோவின் வாயாலயே  இதெல்லாம் சப்பை மேட்டர் என கிண்டல் செய்து  சுய எள்ளல் ஆக்கி  இருப்பதும் திரைக்கதையின்  பலகீனமே 
மனம் கவர்ந்த வசனங்கள்1. ஐஸ்வர்யா ராயே இருந்தாலும் அழகை ஒருத்தன் எவ்ளவ் நேரம் தான் ரசிக்க  முடியும் ?  மன்சு தான்  முதல் தேடலா  இருக்கனும் 

2. ஹேய் , எப்படி  உன்னால  முடியுது ? நான் எங்கே போனாலும்  பின்னாலயே  வர்றே?

 யாரு நானு ? பின்ன்னால வர்றது நானா?  நீயா? 3  ஒரு  வீட்ல பிள்ளைங்க சந்தோஷமா  இருக்க முடியாத வீட்ல  பெற்றோரும்  நிம்மதியா  இருக்க  முடியாது 4.  நாம அடிக்கடி  இப்படி  மீட் பண்ணீக்கறோமே  அதுக்குக்காரணம் நீங்களோ நானோ இல்லை , அலை வரிசை , சேம்  வேவ் லெங்க்த்5  நான் உங்களுக்கேத்தெரியாம உங்களூக்குள்ளே  இருக்கும்  வைரஸ் மாதிரி . ஒரு நாள் எப்படி வளர்ந்து நிப்பேன்னு பாருங்க 6.  நோய் வந்தாத்தான்  மருந்து  கொடுத்து  குணப்படுத்தனும் , மருந்தை  கொடுத்து   நோயை வர வெச்சிக்கக்கூடாது 


7.  நான்  எவ்ளவ் பெரிய  சீரியஸ் மேட்டர் சொல்லிட்டு  இருக்கேன் ? நீ ஐஸ் க்ரீம் சாப்ட்டுட்டு  இருக்கே? 


 இது ஒண்ணும் அவ்ளவ் பெரிய  சீரியஸ்  மேட்டர்  இல்லையே? 


8. சைலண்ட்டா வாழனும்னாலே  இங்கே ஒரு வயலண்ட்  தேவைப்படுது 


9.  நடந்த எல்லாத்தையும்  மறந்துட்டா  எல்லாருக்கும் நல்லா தான் இருக்கும்  


10  உங்க ஃபிளாஸ் பேக் எல்லாம் கேட்டேன் , பைசா  தேறாது 


11  என்  கெட்டப் பார்த்து பயந்துட்டீங்களா?  

 சும்மா  உங்களைப்பார்த்தாலே   போதுமே , எதுக்கு கெட்டப் எல்லாம் ? 


12.  யார்  ஃபோனுக்காகவது வெயிட் பண்றியா?  ட்ரை பண்ரியா?  உன் முக்மே சொல்லுதே? 


13. பசங்களை புலம்ப விடறதும் , அவங்களை அலைய விடுவதும் பொண்ணுங்களுக்கு இப்போ ட்ரெண்ட் ஆகிடுச்சு 


14. எந்த அம்மா  தன்  புள்ளைங்களை கஷ்டப்படனும்னு நினைப்பா ? 

15  எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்  ஒரு இடத்துல நாம  இருக்கறதே எவ்ளவ் நல்ல விஷயம் ?
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   2.75 / 5


சி பி கமெண்ட் -  பெண்களை அதிகம் கவரும் படம்  இது , காத்லர்கள் பார்க்கலாம் . போர் அடிக்காம போகுது , புதுக்கோட்டை v/c  தியேட்டர்ல படம் பார்த்தேன் , மொத்தமே 8 பேர்தான் தியேட்டர்ல 1 comments:

'பரிவை' சே.குமார் said...

மத்தாப்பூ பாக்கலாம்ன்னு சொல்றீங்க...
டவுண்லோட் போட்டாச்சு...