Thursday, September 05, 2013

சிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன்சிகா சிலிர்ப்பு பேட்டி

 

 

சிம்புவுடன் காதல் பூ பூத்தது எப்படி ?ஹன்சிகாவின் சிலிர்ப்பு அனுபவம்

Hansika shares how she fall in love with Simbu
நயன்தாரா விவகாரத்துக்கு பின், சிம்புவைக் கண்டாலே நடிகைகளுக்கு பயம். "அவருடன் நடித்தால், காதல் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கும். அதனால், தங்கள் மார்க்கெட்டும் பாதிக்கும் என, கோலிவுட்டில் பேச்சு இருந்ததால், பல முன்னணி நடிகைகள், விலகியே நின்றனர். இந்நிலையில், "வாலு, வேட்டை மன்னன் படங்களுக்கு, சிம்புவுடன் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானபோது கூட, நயன்தாராவுடன் அவர் காதல் கொண்டு பிரிந்த விஷயத்தை சொல்லி, பல அபிமானிகள் ஹன்சிகாவை எச்சரித்தனராம். அதனால், சிம்புவுடன் நடிக்கத் துவங்கிய போது, அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கியே நின்றாராம் ஹன்சிகா. 

ஆனால், போகப் போக சிம்புவின் நாகரிகமான நடவடிக்கையும், பேச்சும், ஹன்சிகாவை கவர்ந்ததாம். அதன்பின் தான், மெல்ல மெல்ல புன்முறுவல் பூக்க ஆரம்பித்துள்ளார். இப்படி ஏற்பட்ட நட்பு தான், நாளடைவில் காதலாக மாறியதாம். இதை தன் நட்பு வட்டாரங்களிடம் சொல்லி சிலிர்க்கும் ஹன்சிகா, இத்தனை நாளும் மற்ற ஹீரோக்களை மாதிரி தான், சிம்புவும். அவர் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை என்று சொல்லி வந்தார். ஆனால், காதலை ஒப்புக் கொண்ட பின், "சிம்பு எனக்கு எப்பவுமே, "ஸ்பெஷல் தான் என்று, வெட்கத்துடன் சொல்கிறார் ஹன்சிகா.


சிம்புவுடன் எப்போது திருமணம்....? ஹன்சிகா எக்ஸ்குளூசிவ் பேட்டி!

After 5 years I will marry simbu says Hansika
கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்களாக இருந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...

என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார். 

சிம்பு ஹன்சிகாவை காதலித்தாலும் எதிர்க்க மாட்டேன்! டி.ஆர்.,

If simbu loves hansika i will not  opposition says T.Rajendar
 சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். மன்மதன், வல்லவன், கெட்டவன் என்று வலம் வந்த சிம்பு இப்போது என்னடான்னா இமயமலை, காசி என ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது அப்பாவோ இப்போதும் யங் ஸ்டார் மாதிரி இளம் நடிகைகள் உடன் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ராம.நாராயணனின் இயக்கத்தில் ஆர்யா சூர்யா என்ற படத்தில், கவர்ச்சி நடிகை முமைத்கான் உடன் ‘‘தகடு த‌கடு மந்திரிக்க வாடி...’’ என்ற பாடலுக்கு செம்மையாக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். டி.ஆரின் ஆட்டத்தை பார்த்து மும்மைத்கான் மட்டுமல்ல ஆர்யா சூர்யா பட யூனிட்டே வாயடைத்து போய் இருக்கிறது. அந்தளவுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் அதுவும் யூத்பூல்லாக.

எப்படி இந்தளவுக்கு உங்களால் ஆட முடிகிறது என்று டி.ஆரிடம் கேட்டால், எனக்கு சிவன் அருள் இருக்கிறது. அவரது அருளால் இந்த தாடி ஆடுகிறான் என்று கூறுகிறார். தனது மகனின் திருமணம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது எனது மகளுக்கு திருமணத்திற்கான நேரம் கூடி வந்துள்ளது. அவளது திருமணம் முடிந்ததும் சிம்புவின் திருமணம் நடக்கும். சிம்பு காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகா

ஆமா... நாங்க லவ் பண்றோம்...! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா

Simbu - Hansika Love confirmed
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை... காதலிக்கவில்லை... என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்‌கிறேன். ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்‌களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள்  வெளிவருகின்றன. இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது...!!


thanx - dinamalar0 comments: