Friday, September 06, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 9 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. வருத்தப்படாத வாலிபர் சங்கம்- திருநெல்வேலி:ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் நடிப்பில் எனது திறமையை வெளிப்படுத்துவேன் என வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதாநாயகன் சிவகார்த்தியேன் தெரிவித்துள்ளார்.


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் 6ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரையிலர் காட்சிகள், 2 பாடல்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த காட்சிகளையும், பாடல்களையும் நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக சென்று வெளியிட்டு வருகிறார்.

நெல்லை டவுன் ரத்னா தியேட்டரில் பாடல் மற்றும் டிரைலர் காட்சிகள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதற்காக தியேட்டருக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் மற்றும் தியேட்டர் நிர்வாகம் சார்பில் வெடிவெடித்தும், மேள தாளம் முழங்க மாலை அணிவித்தும் வரவேற்றனர். அப்போது நிருபர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:

"திருநெல்வேலி' இனிப்பான ஊர். நெல்லை "அல்வா' வை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும், கருத்துக்களையும் நேரடியாக ரசிகர்களிடமும், மக்களிடம் சென்று தெரிவிக்கவேண்டும் என்பதற்காக தான் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். படத்தின் பாடல்களை யூ டியூப்பில் 30 லட்சம் பேர் பார்த்து, கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர். படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாலு பேர் நம்மை என்ன நினைப்பார்கள் என்பதற்காக தான் நம்மில் பலர் வாழ்க்கை நடத்துகிறோம். அதைத் தான் படத்தில் கதையாக 2 கேரக்டரில் வைத்துள்ளோம். படத்தில் 90 சதவீதம் காமெடிகள் உள்ளன. படத்தின் டிரையிலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல எதிர்பார்ப்பும், வரவேற்பும் உள்ளது. ரசிகர்கள் எனக்கு பேராதரவு வழங்கி வருகின்றனர். நெல்லை ரசிகர்களின் வரவேற்பு என்னை பிரமிக்க வைத்துள்ளது.

எனது ரசிகர்களின் ஆதரவை சுய நலத்திற்காக பயன்படுத்த மாட்டேன். ரசிகர்களை ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல படங்களையும், எனது திறமையையும் நடிப்பில் வெளிப்படுத்துவேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு கருத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளோம். கல்யாண வயது வருவதற்குள்ளாகவே சில பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து வடுகின்றனர். அவர்களுக்கு சில உணர்வு பூர்வமான விஷயங்கள் உள்ளன. திருமணத்திற்கு அவசரப்படாமல் அவர்களின் தேவைகளை, உணர்வுகளை பூர்த்தி செய்து திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்பது தான் அந்த கருத்து.

போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களுக்கு எது தேவையோ அதைச் செய்தால் அவர்களுக்கு அது பிடிக்கும். நல்ல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர், நடிகராகி விட்டாரே என்ற வருத்தமும் ரசிகர்களில் சிலருக்கு உள்ளது. படத்தில் நான் போஸ் பாண்டி என்ற கேரக்டரிலும், நடிகர் சத்தியராஜ் சிவபாண்டி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளோம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வரியில் ஒரு பாடலையும் எனது சொந்தக் குரலில் பாடியுள்ளேன். இந்த படம் வெற்றிப்படமாக நிச்சயம் அமையும். ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கவேண்டும்.

இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.

பேட்டியின் போது ரத்னா தியேட்டர் உரிமையாளர் ரவிசங்கர், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ், விநியோகஸ்தர் வக்கீல் ரத்னராஜ் உடனிருந்தனர்.


கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் வசூல் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உயர்த்தும் என்கிறது கோலிவுட். படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் சுமார் 10 கோடியாம்.

அப்படத்தினைத் தொடர்ந்து, எப்போது வெளியீடு என்று தெரியாமல் இருந்த 'எதிர் நீச்சல்' படத்தினை ஏப்ரல் வெளியீடு என்று அறிவித்து இருக்கிறார்கள்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்து இருக்கும் 'எதிர் நீச்சல்' படத்தினை மணிகண்டன் இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட்.

அதுமட்டுமன்றி சத்தமன்றி சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இயக்குனர் ராஜேஷிடம் பணிபுரிந்த ராம்.ஜே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். நாயகியாக BUS STOP என்ற தெலுங்குப் படத்தில் நடித்த ஸ்ரீவித்யா நடித்து வருகிறார்.

ராஜேஷ் இப்படத்திற்கு வசனங்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இப்படமும் முழுநீள நகைச்சுவை படம் தான். படத்தின் தலைப்பு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இப்படத்தினையும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தினைத் தயாரித்த மதனே தயாரித்து வருகிறார்.

ஈரோடு   ராயல் , அன்னபூரணி , சீனிவாசா  வில்  ரிலீஸ்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்-சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_4124.html


2.ஆர்யா சூர்யா -ராம.நாராயணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் 126-வது படத்துக்கு 'ஆர்யா சூர்யா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. விஷ்ணபிரியன், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், கோவை சரளா, நட்சத்திரா, ருத்ஷா, நளினி, ஆர்த்திகணேஷ், முகைத்கான் ஆகியோர் நடிக்கின்றனர்.

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருவர் சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் வழியில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது. அந்த இரண்டில் எதை தேர்ந்தெடுத்து முன்னோர்கள் என்பதே கதை. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படமாக தயாராகிறது என்றார் ராம.நாராயணன்.

இதில் பேராசிரியர் சொந்தோ எழுதிய ‘முமைத் முமைத் முமைத்’ என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடி நடித்துள்ளார். ஐந்து நாட்கள் ஐந்து அரங்குகளில் இருபத்தைந்து நடன அழகிகள் மற்றும் முமைத்கானுடன் அவர் நடனம் ஆடி நடித்துள்ளார். இப்பாடல் காட்சி டி.ஆர். கார்டனில் பெரிய அரங்கு அமைத்து படமாக்கப்பட்டு உள்ளது.

ஒளிப்பதிவு: கே.எஸ்.செல்வராஜ், இசை: ஸ்ரீகாந்த் தேவா, பாடல்: பிறைசூடன், விவேகா, கானாபாலா, நடனம்: பிரேம்ஜி, காதல் கஞ்தாஸ், திருமால் முருகன், ஸ்டண்ட்: சூப்பர் சுப்பராயன், எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, வசனம்: புகழ்மணி. மத கஜ ராஜா’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால் அந்த படம் வெளியாக இருந்த தியேட்டர்களில், ‘ஆர்யா, சூர்யா’ படம் நாளை ரிலீஸ் ஆகிறது. விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ள படம், ‘மதகஜராஜா’. சுந்தர்.சி இயக்கி இருந்தார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்க வேண்டியது. பிரச்னை காரணமாக படம் சிக்கலில் மாட்டியது.

 இதையடுத்து இந்தப் படத்தை நடிகர் விஷால், தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் ரிலீஸ் செய்ய முன்வந்தார். படம் இன்று வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக நேற்றும் நேற்றுமுன்தினமும் வினியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமூக முடிவு எட்டாததால் படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை.

இதையடுத்து ‘மத கஜ ராஜா’ ரிலீஸ் ஆவதாக இருந்த தியேட்டர்களில், ‘ஆர்யா, சூர்யா’ படம், நாளை (7,ம் தேதி) ரிலீஸ் ஆகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ராம.நாராயணன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த காமெடி படத்தில் டாக்டர் சீனிவாசன், டி.ராஜேந்தர், விஷ்ணுப்ரியன், ருத்ஷா, நட்சத்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்.3.THOOFAN-கடந்த, 1973ல், இந்தியில், அமிதாப் பச்சனும், ஜெயா பச்சனும் இணைந்து நடித்த, "ஜாஞ்சீர் என்ற இந்தி படத்துக்கு, புதிய முலாம் பூசி, தற்போது, இதே பெயரில் இந்தியிலும், "தூபான் என்ற பெயரில், தெலுங்கிலும் படம் எடுத்துள்ளனர். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நிழல் உலக தாதாவின் சதியால், பொய் வழக்கில் சிக்கி, ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து, நிழல் உலக தாதாவை பழிவாங்குவதற்காக அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான், படத்தின் பரபரக்க வைக்கும் கதை. போலீஸ் அதிகாரியாக, ராம்சரண் தேஜாவும், அவரது மனைவியாக, பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளனர். வில்லனாக, பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தெலுங்கு படங்களுக்கே உள்ள, அனைத்து விதமான மசாலா அயிட்டங்களும் படத்தில் இருப்பதால், ரொம்பவும் நம்பிக்கையுடன் இருக்கிறார், படத்தின் இயக்குனர், அபூர்வ லகியா

 Theater in erode : SRI KRISHNA

2000 மற்றும் 2004ல் வந்த ரிட்டிக் சீரிசில் இது மூன்றாம் பகுதி. இந்த பிரபஞ்சம் முழுதும் உள்ள பல கிரகங்களால் தேடப்படும் ஒரு கெரகம்புடிச்ச பயபுள்ளதான் இந்த ரிட்டிக். Bounty hunterகளால் பிடித்துவரப்பட்டு பல ஏலியன்கள் இருக்கும் கிரகத்தில் விடப்படும் ரிட்டிக் அங்கிருந்து எப்படி தப்பித்து எதிரிகளுக்கு ரிவிட் அடிக்கிறான் என்பதுதான் கதை. கிராஃபிக்ஸ் கலக்கலாக உள்ளதாம் .வெள்ளாவி தேவதை டாப்ஸிக்கு பாலிவுட்டில் டப்பிங் பேச அழைப்பு வந்துள்ளது. தமிழில் ஆடு­களம் படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. இதில் டாப்ஸிக்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசினார். தமிழ், தெலுங்கில் பிஸியாக இருக்கிறார் டாப்ஸி .

இப்போது தமிழில் 'முனி3', 'ஆரம்பம்' என இரு படங்களிலும், தெலுங்கில் 'ஷேடோ', 'சாகசம்' என இரு படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் சித்தார்த்துடன் 'சாஷ்மி பத்தோர்' எனும் இந்திப் படத்தில் நடித்தார். படமும் ஹிட்டானது. இப்போது பாலிவுட்டிலும் ராசியான நடிகை ஆகிவிட்டார் டாப்ஸி.

இந்த சமயத்தில் பாலிவுட்டில்  இருந்து டாப்ஸிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இது நடிப்பதற்காக இல்லை. டப்பிங் பேசு­வ­தற்காக.  'ரிட்டிக்' என்ற ஹாலிவுட் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி­களில் டப்பிங் செய்­யப்­பட்டு வெளி­யாக உள்­ளது. இதில் ஹீரோயின் கேரக்­ட­ருக்கு இந்­தியில் டப்பிங் பேசும்­படி டாப்­ஸிக்கு அழைப்பு வந்­துள்­ளது.

டாப்ஸியும் இதை சந்­தோ­ஷ­மாக ஏற்றுக் கொண்­டு உள்ளார். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்­பு­க­ளுக்கும் டாப்ஸியையே டப்பிங் பேச வைக்­க­லாமா என ஹாலிவுட் படக் குழு யோசித்து வருகிறதாம்.  Riddick
is an upcoming 2013 American
science fiction action film, the third installment in the The Chronicles of Riddick film series. Produced by and starring Vin Diesel as the title character, Riddick is written and directed by David Twohy, who previously wrote and directed the first two installments, Pitch Black (2000) and The Chronicles of Riddick (2004)

Betrayed by the Necromongers and left for dead on a desolate planet, Riddick fights for survival against alien predators and becomes more powerful and dangerous than ever before. Soon, bounty hunters from throughout the galaxy descend on Riddick. Only to find themselves pawns in his greater scheme for revenge. With his enemies right where he wants them, Riddick unleashes a vicious attack of vengeance before returning to his home planet of Furya to save it from destruction.

Theater in erode  : VSP
நன்றி:
  
   தினமணி, தினகரன், மாலைமலர் மற்றும் இதர சினிமா இணையதளங்கள் 


1 comments:

Unknown said...

thangameenkal thookitaangala :( ?