Wednesday, September 04, 2013

UNIVERSAL SOLDIER -DAY OF RECKONING - சினிமா விமர்சனம்

 

ஹீரோ கோமா ஸ்டேஜ்ல இருக்காரு. ஹாஸ்பிடல்ல அவர் கிட்டே ஸ்டேட்மெண்ட் வாங்க  எஃப் பி ஐ ( FBI) காத்திருக்கு . ஆனா அவருக்கு கொஞ்சம் கொஞ்சம் தான்  நினைவு  இருக்கு . நினைவு  தெரிஞ்ச வரை என்ன நடந்ததுன்னா  ஹீரோவுக்கு  ஒரே ஒரு சம்சாரம் , ஒரு பெண் குழந்தை . ஒரு நாள்  3 பேர் கொண்ட கும்பல்  அவர்  வீட்டுக்கு  வந்து  சிரியாவை சின்னாபின்னப்படுத்தும்,  அமெரிக்கா மாதிரி  அவர்  குடும்பத்தையே நிர்மூலம் ஆக்கிடுது .


 பழிக்குப்பழி வாங்கத்துடிக்கறார். தன் குடும்பத்தை சிதைச்சது யார்?னு கண்டு பிடிக்க விசாரனையில் இறங்கறார். அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கு. 

 அதாவது கவர்மெண்ட்டே  இப்படி  ஒரு ஏற்பாட்டை பண்ணி  இருக்கு .  அவர்  நினைவில்  இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததா  மூளையில் பதிவு பண்ணி வைக்குது . உண்மையில் அப்படி  ஒரு சம்பவமே நடக்கலை . வெறும் பிம்பம் மட்டுமே அவர்  மூளைல பதிவாகி  இருக்கு . அதாவது பதிவு செய்யப்பட்டிருக்கு 


எதுக்காக கவர்மெண்ட் இப்படி பண்ணுச்சு ?  ஹீரோ  இதுக்கெல்லாம் எப்படி பதிலடி தர்றாரு? என்பதை எந்த அளவு வன்முறையும் , ரத்தமுமா சொல்ல முடியுமோ அந்த அளவு வல்கரா  சொல்லி  இருக்காங்க .

ஹீரோ Scott Adkins   ஆள் ஜம்முன்னு  இருக்கார் . ஜிம் பாடி . ஃபைட் சீன்ல கலக்கி எடுத்துட்டார் . பாடி லேங்குவேஜ் ல இன்னும்  சுறு சுறுப்பு காட்டி இருகலாம் . குழந்தையுடன்   கொஞ்சும் காட்சிகள் , மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் காட்சிகள் இன்னும் நல்லா சொல்லி இருக்கலாம். அப்போதான் அவங்க இறந்ததன் பாதிப்பு ஆடியன்சுக்கு  பாதிப்பா  உணர வைக்க முடியும் . வில்லனா சூப்பர் ஸ்டார்  ஜீன் கிளாடு வேண்டம் . இவர் ஹீரோவை விட செம எக்சசைஸ் பாடி .  ஃபைட் சீனில்  பொறி பறக்குது . 


 ஹீரோயின் , அந்த  குழ்ந்தை  எல்லாரும்  கச்சிதமான நடிப்பு . 


இன்னொரு  ஹீரோயின்  நம்ம ஊர்   இலியானாவுக்கே அக்கா மாதிரி  ரொம்ப ரொம்ப  மெல்லிய  தேகம் ,. அய்யோ பாவம் . காம்ப்ளான்  அவங்கம்மா குடுக்கவே இல்ல போல
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  1.  ஒரு ஆக்‌ஷன் படம் , சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி பேஸ் ல சொல்லப்பட்டாலும் மிக நிதானமான அணுகுமுறை திரைக்கதை ல தெரியுது . வெல்டன் . பொதுவா இந்த மாதிரி கதைல ட்ரீட்மெண்ட் ஃபாஸ்ட்டா  இருக்கனும்னு  நினைப்பாங்க . இவர் வித்தியாசமா  ஸ்லோவா சொல்லி இருக்கார்2. படத்தில் 2 இடங்களில்   யூகிக்க முடியாத   திருப்பங்கள்      வருது . குட்3.   வில்லன்  ஜீன் கிளாடு வேண்டம்க்கு அளிக்கப்பட்ட அதீத  முக்கியத்துவம் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் , கேப்டன் பிரபாகரன்  மன்சூர் அலிகான்  மாதிரி .காக்கிச்சட்டை சத்யராஜ் மாதிரி . ஒரு படத்தில்  வில்லன்  ரோல் பிரமாதமாக பேசப்பட்டால்  ஆட்டோமேட்டிக்காக் அது மக்கள் மனதில் தங்கி விடும் சாத்தியக்கூறுகள் அதிகம்  
இயக்குநரிடம்  சில  கேள்விகள்:1. ஹீரோவுக்கு   எந்த பழைய நினைவுமே  வரவில்லை . முதன்  முதலாக   அவர் நுழையும் ஒரு வீட்டில்     எந்த இடத்தில்  எந்த சுவிட்ச் இருக்கு  என்பதை துக்ல்லியமாக  தெரிந்து வைத்திருப்பது எப்படி? 2. சிவப்பு  கலர் கார் ஒன்றை  ஹீரோ அபேஸ் பண்ணி பல இடங்களுக்கு போறார் . அந்த கார்  ஓனர்  ஹீரோவை சத்தம் போடறார் . அவ்வளவுதான், அட்லீஸ்ட் போலீஸில்  கூட புகார் தர மாட்டாரா? எப்படியோ போய்ட்டு போகுதுன்னு அநாமத்தா விட அது என்ன சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரா?


3.  ஹீரோவுக்கு  ஒரு குழப்பம் . தன் மனைவி  , மக்ள்  கொல்லப்பட்டாங்களா? எல்லாம் டிராமாவா? அப்டின்னு . ஏன் அவர் கல்லறை போய் செக் பண்ண எந்த முயற்சியும் எடுக்கலை? 


4.  அரசாங்கம் ஏற்பாடு செஞ்ச ஹாஸ்பிடல்லயே ட்ரீட்மெண்ட் எடுக்கும்  ஹீரோ உண்மை  நிலவரம் அறிய  ஏன் வேற பிரைவேட்  ஹாஸ்பிடல் ல போய் தன்னை  செக் பண்ணிக்கலை ?5.  கோபமாக   இருக்கும்  ஹீரோவை சந்திக்க வரும்  உயர் அதிகாரி  கையில் எந்த ஆயுதமோ , வேறு பாதுகாப்போ இல்லாம தனிமையில் அவரை சந்திச்சு சாவது எப்படி? 


6.   தேவைக்கு மேல   ரொம்ப ஓவரா  வன்முறை , ரத்தம்   எதுக்கு ?

மனம் கவர்ந்த வசனங்கள்


1. வாழ்த்திக்கொடுத்த சாபத்தை   வரமா மாத்திக்கிட்டோம் 


2. இங்கேயே  இரு . 10  நிமிஷத்துல நான்  வந்துடறேன்

 அப்படி வர்லைன்னா ?

 மறுபடி  ஒரு 10  நிமிஷம் இரு3. ஞாபகங்கள் எப்பவும் நம்மை துன்புறுத்திட்டுத்தான்  இருக்கும்ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-40 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - ஆக்‌ஷன்  , சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி  விரும்பிகள் பார்க்கலாம் . பெண்கள் , மைனர்கள் , மாணவ , மாணவிகள் தவிர்ப்பது நல்லது . குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள்  அவசியம் தவிர்க்க வேண்டிய படம்டிஸ்கி -  படத்துல  3  சீன்  இருக்கு , ஆனா  தியேட்டர்ல பார்த்தா   நோ யூஸ் , சிங்கம் ல அனுஷ்கா வுக்கு  கலர் கலரா என்னமோ அடிச்சு மறைச்ச மாதிரி  திரைல ஏதோ புள்ளி மாதிரி காட்டி மறைச்சுட்டாங்க , டிவிடி ல பாருங்க

1 comments:

Dhuvan said...

டிஸ்கி இருந்தா வீட்ல DVD'ல பாத்தா பிஸ்கி ஆகிடுமே பாஸ்...