Tuesday, September 10, 2013

RIDDICK- சினிமா விமர்சனம்

A


ஹீரோ  ஒரு  வேற்றுக்கிரகவாசி .தன்னோட   கிரகத்துல இருந்து  வேற  ஒரு கிரகத்துக்கு  வந்து  சிக்கிக்கறான், நாஞ்சில் சம்பத் , அனிதா குப்புசாமி  எல்லாம் அதிமுக ல வந்து மாட்டிக்கிட்ட மாதிரி .  அந்த  கிரகத்துல   ஓவர்  ஹீட் சஹாரா பாலைவனம்  மாதிரி  .. 


அந்த   கிரகத்துல  வேற  உயிர் இனங்கள்  இருப்பதா   ஒரு  ஒளிகாட்டி  தகவல் அனுப்புது , அது  போக   2 விண்கலங்களை  அது இயக்குது .


 அந்த  2 விண்கலங்களில்   ஒரு   விண்கலத்துல   கூலிப்படை ஆட்கள் இருக்காங்க , அவங்க  ஹீரோவை  பிடிக்க வந்தவங்க 

 இன்னொரு விண்கலத்துல  இருப்பது  ஹீரோ  கூட ஆல்ரெடி  ஒர்க் பண்ணின ஆள்-ன் தலைமைல   ஒரு குழு 


இந்த  2  குரூப்பும்  ஹீரோவை வளைச்சுப்பிடிக்க  அந்த  கிரகத்துல   தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கறாங்க 



அப்போ திடீர்னு மழை  வருது , பனி பெய்யுது , புயல் அடிக்குது . பதுங்கி இருந்த   சில உயிர் இனங்கள் வெளில வருது . ஹீரோ , 2 குரூப் எல்லாரையும்   தாக்க ஆரம்பிக்குது . அதுக்குப்பின் யார் யார்  தப்பிச்சாங்க ? யார் மாடினாங்க என்பதே கதை . 

 இதே  கதையை நம்மாளுங்க  எடுத்திருந்தா   படு  மொக்கைன்னு சொல்லி இருப்பாங்க  , ஆனா  ஹாலிவுட் படம் ஆச்சே ? ஆஹா  ஓஹோன்னு  சொல்வாங்களோ? ஆனா என்னைப்பொறுத்தவரை படம்  செம  மொக்கை


 ஹீரோஒ வின்  டீசல் . ஆள் ஆளவந்தான்  கமல் மாதிரி ஜிம் பாடியோட  , மொட்டைத்தலையோட   வர்றார் . படம்  போட்டு  முதல்  23  நிமிடங்கள் அவருக்கு வசனமே இல்லை . நாய் மாதிரி  தோற்றம்  உடைய   ஒரு  மிருகம் , இவர் 2 பேர் மட்டும் தான் . கொஞ்சம்  போர் அடிக்க ஆரம்பிக்குது . 


 விண்கலங்கள் இவரைத்தேடி  வர ஆரம்பிச்சதும்  படத்தில் பர பரப்பு  பத்திக்குது 


 அந்த  குரூப்பில்   ஒரு  லேடியை  புகுத்தியது  இயக்குநரின் சாமார்த்தியம் . ஹீரோ  ஹீரோயின்   இருவருக்குமான   உரையாடல்கள்   காமெடி  கில்மா . 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  வில்லன்  அடிக்கடி  ஹீரோ கிட்டே “ உன்  தலையை  ஒரு  பெட்டில   எடுத்துட்டுப்போகாம  இங்கிருந்து கிளம்ப மாட்டேன் “ அப்டினு பஞ்ச் அடிப்பான் . ஆனா  ஹீரோ சேர் ல கைகள் கட்டப்பட்ட நிலைல   தனக்கு முன் இருக்கும்  வில்லனின்  தலையை  என்னமோ பாதாம் அல்வா வை கட் பண்ற மாதிரி   தலையை எடுக்கும் காட்சி   கொஞ்சம்  கோரம் என்றாலும் அபாரம் . அப்ளாசை அள்ளிய காட்சி 


2.  ஒளிப்பதிவு   , கிராஃபிக்ஸ்  காட்சிகள்  படத்தை  ரசிக்க  வைக்குது , பின்னணி  இசை எனப்படும்  பி ஜி எம்  சுமார்  தான் என்றாலும்  அது பெரிய  குறையா  தெரியலை .



3. படம்  2 மணி நேரம்  ஓடினாலும்   ஓப்பனிங்க் ல 20 நிமிடம் காட்சிகள் தவிர  மீதி எல்லாமே பர பரப்பான  திரைக்கதை நகர்த்தல்களே




A



இயக்குநரிடம்  சில  கேள்விகள்



1. வேற்றுக்கிரக வாசிக்கும்   ரத்தம் சிவப்புக்கலர்ல தான்  இருக்கனுமா?மனிதனுக்கும்  , ஏலியனுக்கும் எந்த வித்தியாசமும்  இருக்காதா? 


2. வேற்றுக்கிரகம் என்ன தமிழ் நாடா? அங்கேயும்  மின்சாரப்பற்றாக்குறை , அதை சேமித்தல் , திருடுதல்னு எல்லாம் காட்சிகள்  வருதே?


3.   ஹீரோவைக்கொலை பண்ணுவதே  அந்த   2  குழுவின்  நோக்கம் . ஆள் மாட்டியதும் டக்னு   கொலை செய்யாம   கட்டிப்போட்டு  ராமாயணம் பேசிட்டு இருப்பாங்களா? யாராவது ?


4. ஒரு  குழுவில்    8 பேரு  இருக்காங்க , அதுல  ஒரு லேடியும் ஒண்ணு . இன்னொரு குரூப் தலைவன் ஆட்கள் பற்றாக்குறை , அவன் அடக்கி வாசிக்க மாட்டானா?  அந்த லேடி கிட்டே வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்குவது பெண்ணாதிக்கமா இருக்கு .பலம்  குறைந்த  நிலையில்  இருக்கும்  ஒருவன் அப்படி பெண்களிடம்  வம்புபண்ணி மாட்டிக்க மாட்டான்


5.  ஹீரோ மேல  குண்டு பாய்ஞ்சா அவனுக்கு எதுவும் ஆகாது, அது தெரிஞ்சும்  எதுக்கு அந்த எதிரி குரூப் சுட்டுட்டே இருக்காங்க?


a
  மனம் கவர்ந்த வசனங்கள்

1. இரை இல்லாம வேட்டை ஆட முடியாது.இறை இல்லாம மன நிம்மதி கிடையாது


2. ஆபத்து வரும்்போது தைரியசாலிகள் மட்டுமே போராட முன் வர்றாங்க



3. ஒரு ஆம்புலன்சைக்கூப்பிட இன்னொரு ஆம்புலன்சுல போற மாதிரி இருக்கு நாம செய்யும் சில காரியங்கள்



4. பயந்து போகும் மிருகம் எப்பவும் தன் இருப்பிடமான குகைக்குத்தான் எப்படியும் வரும்



5. ஏதோ ஒரு கட்டத்துல நாம எல்லாருமே ஓய்வெடுக்க வேண்டியவங்கதான்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 39 ( ஹாலிவுட் படத்துக்கு மார்க் போடமாட்டாங்க , இருந்தாலும் ஒப்பீட்டுக்காக )



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2.5 / 5


சி பி கமெண்ட் - RIDDICK- டீசல் விலை ஏறிட்டே இருக்கு.வின் டீசல் படம் ரேட்டிங் இறங்கிட்டே இருக்கு.சுமார் தான். HBOல போட்டா பாருங்க, தியேட்டர்ல பார்க்கும்  அளவு  ஒர்த் இல்லை

0 comments: