Monday, September 02, 2013

காந்தாரி vs சம்சாரி

1. ராமர் மாதிரி புருசன் வேணும்னு எல்லா பொண்ணுங்களும் நினைக்கறாங்க , இதுல சோகம் என்னான்னா ஊர்ல நம்ம பயலுக எல்லாரும் கிருஷ்ணன்கதான்


----------------------


2.  பள்ளித்தோழிகள் யாரை இப்போ சந்தித்தாலும் " அவசியம் குடும்பத்தோட வீட்டுக்கு வரனும் கறாங்க.தனியா வரக்கூடாதுனு அர்த்தம் போல-----------------------


3. காதலிக்கு கடன் கொடுத்தா அது திருப்பதி உண்டியல் ல போட்ட மாதிரி.நண்பனுக்கு கடன் கொடுத்தா எம் எல் எம் ல போட்ட இன்வெஸ்ட்மென்ட் மாதிரி--------------------


4. விரல் நகக்கண்ணில் ஊசி ஏற்றியது போல வலி கண்டேன் உன் நிராகரிப்பில்


-------------------------


5. கிருஷ்ண ஜெயந்தி க்கு கோயிலுக்கு வந்த பெரும்பாலான பொண்ணுங்க ப்ளூ கலர் சேலை தான் கட்டிட்டு வர்றாங்க.இன்னைக்கு என்ன படம் பார்ப்பாங்களோ?


----------------------------


6. கோவிலில் பிரசாதம் வாங்கப்போகும்போது ஒரு டிபன் பாக்சும் கொண்டு போய்ட்டா பார்சல் கொண்டாந்துக்கலாம் # டிப்ஸ்-------------------


7. லாட்ஜ் ல சிங்கிள் காட் ரூம்னா சிங்கிள் மீனிங் ,டபுள் காட் ரூம்னா டபுள் மீனிங் ட்வீட்சும் போடுவாங்க என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!்---------------------


8. 2 பொண்டாட்டி கட்டுன சாமிகளை பொண்ணுங்க விழுந்து விழுந்து கும்பிடறாங்க.ஆனா 2 பொண்டாட்டி கட்டின ஆசாமிகளை ஏறி மிதிக்கறாங்க.------------------------9/ ஐயப்பா சாமியை அவமதிப்பது போல் இருப்பதால் ஷங்கரின் ஐ பட டைட்டிலுக்குத்தடைனு யாரும் இன்னும் கிளம்பலையா?
----------------------


10. கோபியர் கொஞ்சும் ரமணா = கோபிச்செட்டிபாளைய பிகர்கள் மனம் கவர்ந்த கேப்டன் # சபாஷ் துபாஷ்
------------------------11.ஓட்டுப்பிச்சைக்காகவும் ,கூட்டணி சுயநலத்துக்காகவும் வாய் கூசாமல் புரட்டு பேசுவதில் வல்லமை கொண்டவர்கள் டாக்டர் அய்யாவும் மு க வும்்--------------------12. ஏகப்பட்ட MONEY இருக்கறதால மணிமேகலைனு சோனியாவை தமிழ் இனத்தலைவர் வாழ்த்தி இருப்பாரோ?--------------------


13.  பசியைப் போக்கும் மணிமேகலையாகத் திகழ்கிறார் சோனியா -மு கருணாநிதி # ராகுல்,ப்ரியங்கா 2 பேருக்கும் சோறு போட்டதை சொல்றாரோ?------------------------------14. ஃபிகர் பேரு  டிம்ப்பிள் -னு  இருந்தா  டி-ன்னு கூப்ட்டாலும்  கோவிச்சுக்க முடியாது, சுருக்கி வரைஞ்சுட்டோம்னு சமாளிச்சுக்கலாம்


-----------------------------


15. சிறை மாதிரியே தெரியவில்லை. ஒரு ஆசிரமம் போன்று தான் இருந்தது.-பவர் ஸ்டார்  # அப்டியா? ரஞ்சிதா வகையறாக்கள் நடமாட்டம் எல்லாம் இருந்துதா?
-------------------------
16. தூய தமிழ் பேச விரும்பும் குடிகாரர்கள் கவனத்திற்கு- பீர் = வாற்கோதுமை கள்


-------------------------
17 சொப்பனத்தில் கூட உன் சொல் பேச்சு கேட்கும் சுந்தரன் நான்.


=---------------------------------


18. 6யா ,9 தாரா வை நினைவு வெச்சுக்கிட்டா அது தான் டாலர் ன் ரூபாய் மதிப்பு # 69 ரூபா .பை 24 மணி நேரமும் சினிமா சிந்தனையில் வாழ்வோர் சங்கம்


-----------------------------------


19. இந்தக்கால பொண்டாட்டிகளுக்கு காந்தாரி மாதிரி கண்ணை கறுப்புத்துணில கட்டி பின் கடைவீதி அழைத்துச்செல்வதே சம்சாரியின் பர்சுக்கு பாதுகாப்பு


---------------------------------


20. மீனவர்கள் விடுதலையில் மத்திய அரசு மவுனம்: ஜெ குற்றச்சாட்டு; பிரதமருக்கு கடிதம் # மவுனம் அதுல மட்டும்தானா?- பி எம் கேள்வி


-------------------------------------

0 comments: