Sunday, September 29, 2013

இரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட்டி

வழக்கமான காதல், மோதல், காமெடி என்னும் வட்டத்தைத் தாண்டி, ‘நான் கடவுள்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் ஆர்யா. கதாபாத்திரத்துக்காக எத்தகைய சவால்களையும் எப்போதும் ஏற்க விரும்புவதாகச் சொல்லும் ஆர்யா, கோடம்பாக்கத்தின் தற்போதைய காதல் இளவரசனாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார். ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியிலிருந்து... 



ஆர்யா என்றால் ‘தமிழ் சினிமாவின் பிளேபாய்’ என்ற பிம்பம் முன்னால் வந்து நிற்கிறது. ஊடகங்கள் மீது உங்களுக்குக் கோபமே வராதா?


 
இது மீடியாவுக்கும் எனக்குமான கொடுக்கல் வாங்கல். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவர்கள் எழுதுவதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தானே செய்கிறது. அந்தக் கொஞ்ச உண்மையை, சமயங்களில் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தி எழுதும்போது ஷாக்காக இருக்கும். அதெல்லாம் செய்தியைப் படிக்கும் அந்த நிமிடத்தில்தான். அதன் பிறகு கூல் ஆகிவிடுவேன். அவர்கள் என்னைப் பற்றி நன்றாக எழுதும்போது, நான் என்ன பொக்கேவா அனுப்புகிறேன்? என்னதான் பிளேபாயாக என்னைக் காட்டினாலும், நான் நடிக்கும் படங்கள் நன்றாக இல்லையென்றால் மக்கள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள். 



நயன்தாரா விஷயம்...

 
நயனுக்கும் எனக்கும் நடுவுல நட்பைத் தவிர எதுவுமில்லே. இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லணும்னா, விஷால் எப்படி எனக்கு க்ளோஸ் ஃபிரெண்டோ அப்படித்தான் நயன்தாராவும். நீங்களாவது கொஞ்சம் தெளிவா போடுங்க. ஏன்னா நயன்தாரா அவ்வளவு நல்ல பொண்ணு. ராஜா ராணிக்கு படத்துக்கு லீட் ஹீரோயின் யார்னு முதல்ல எனக்கு சொல்லவே இல்ல. நான் நஸ்ரியாதான் லீட் ஹீரோயின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஒருநாள் திடீர்ன்னு நயன்கிட்ட இருந்து போன்.. “ ஆர்யா.. நீதான் ஹீரோவா பண்றியா.. சொல்லவே இல்ல!? ரொம்ப கம்ஃபர்ட்டா ஃபீல் பன்றேண்டா”ன்னு சொன்னாங்க. பாஸ்கரன் படத்துல கிடைச்ச ‘நண்பேண்டா!’ நட்பு இது. அப்புறம் ராஜா - ராணி படத்துல எங்க ஜோடி நடிப்பு, ரொம்ப டாமினேட்டிங்க இருக்கும். அது கதைக்காக நாங்க காட்டின இன்வால்வ்மெண்ட். 

 

நயன்தாரா உங்களைத் தேடி உங்க வீட்டுக்கே வந்தாங்களாமே?

 
அதுல என்ன தப்புன்றீங்க? என்னோட வீட்டுக்கு பூஜா வந்திருக்காங்க, த்ரிஷா வந்திருக்காங்க. இந்த வரிசையிலத்தான் ஒரு தோழியா, என்னோட அப்பா அம்மாவைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவ்வளவுதான். 



ஆக, ஆர்யாவுக்கு அப்பா அம்மா பார்க்கிற பெண்தான்னு முடிவாகிடுச்சா?


 
அதை உறுதியா என்னால சொல்ல முடியல. ஆனால் நாம கல்யாணம் செஞ்சுக்கப் போற பெண்ணையாவது அப்பா - அம்மா சூஸ் பண்ணட்டும்னு விட்டா, அதுல தப்பில்ல. ஏன்னா நமக்கு எது நல்லதுன்னு அவங்களுக்கு தெரியும். அவங்க பார்க்குறது மொக்க ஃபிகரா இருந்தாலும் ஓகேதான். அப்புறம் கல்யாணத்துக்கு டைம் லைன் பிக்ஸ் பண்ண முடியாது. எப்போ பொண்ணு கிடைக்குதோ, அப்பதான் கல்யாணம். இப்போ என்னோட கவலையெல்லாம்... நான் சிக்குறதுக்கு முன்னாடி என் நண்பன் விஷாலுக்கு ஒரு நல்ல பெண் கிடைச்சு அவன் சிக்குணும்கிறதுதான்! 

 

நான் கடவுள் மாதிரி ஒரு படத்துல நடிச்சீங்க. அதுக்குப் பிறகு அந்த மாதிரி ஆர்யாவைப் பார்க்க முடியலையே!


 
அவன் இவன்ல ‘கும்பிடுறேன் சாமி’ உங்க கண்ணுல படலையா? அப்புறம் சந்தோஷ் சிவனோட உருமியில ஒரு காட்சின்னாலும் நறுக்குனு தைக்கிற மாதிரி நடிச்சிருக்கேன்னு கேரளால ரிவ்யூ கொடுத்தாங்க. ஆனா லவ் , ஆக்‌ஷன் களத்துல டிராவல் பண்ணினாதான் ஆல் கிளாஸ் ஆடியன்ஸ் நம்மள மறக்காம இருப்பாங்க. அதே மாதிரி நான் லவ் பண்ணி , பைட் பண்ணினாத்தான் படம் பார்ப்பேன்னும் ஆடியன்ஸ் அடம்பிடிக்கவும் மாட்டாங்க. ஒரே மாதிரி நடிச்சும் அவங்கள போரடிக்கக் கூடாது! அப்புறம் நிறைய மல்டி ஸ்டாரர் படங்கள்ல நடிக்க விருப்பமா இருக்கேன். இதுமாதிரிப் படங்கள்ல நடிக்கும்போது, அது பெரிய பட்ஜெட் படமா இருக்கு! ஒவ்வொரு ஸ்டாருக்கும் தனித்தனியா இருக்க ரசிகர்கள், எல்லாம் திருவிழா மாதிரி தியேட்டர் கூடிருவாங்க. 


ஆரம்பம் படத்துல ஒரு வித்தியாசமான ஆர்யாவைப் பார்க்கலாமா?


 
கண்டிப்பா! விஷ்ணுவர்த்தனோட நான் பண்ற நாலாவது படம் இது. அவரை மச்சான்னுதான் கூப்பிடுவேன். அவர் என்னை வில்லனா நடின்னு சொன்னாலும் நடிப்பேன். வேற எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். ஆனா, ஆரம்பம் படத்துல என்ன கேரக்டர்னு மட்டும் கேட்காதீங்க. இந்தப் படத்துல தல அஜித்கூட நடிச்சதுனால, இது எனக்கு ஸ்பெஷல் படம். இந்தப் படத்துல என் கேரக்டர் கண்டிப்பா அதிர்ச்சியா இருக்கும். அதேமாதிரி ஒரு காட்சியில் 110 கிலோ வெயிட்டோட வர்ற மாதிரி, ஒரு கெட்அப்ல நடிச்சுருக்கேன். அதுவும் புதுசா இருக்கும். 

 

இரண்டாம் உலகம் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கே? அதுவும் 50 கோடி பட்ஜெட்டுன்னு சொல்றாங்களே?


 
இதுல கவனிக்க வேண்டிய விஷயம், இந்த 50 கோடி ஆர்யாவுக்காக இல்ல. கதைக்காக. கதைக் களத்துக்காக. இதுதான் ஹெல்தியான பட்ஜெட். மார்க்கெட் வேல்யூ ஒரு ஹீரோவுக்கு இருக்குன்றதுக்காக கன்னாபின்னான்னு செலவு செஞ்சு படம் எடுத்தா, அது ஆடியன்ஸுக்கு பிடிக்காம போயிடலாம். ஆனா கதை கேட்டுதுன்னா, நம்ம காட்டுற உலகத்தை ஆடியன்ஸ் நம்பனும்னா அதுக்காக எவ்வளவு வேணா செலவு செய்யலாம். செல்வா ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்துட்டு ஆர்டினரி டைரக்டர் இல்ல, கண்டிப்பா, அவர் இயக்கத்துல நடிச்சா எனக்கு நல்லது நினைச்சேன். மனுஷன் சொல்லி வெச்ச மாதிரி “ஆர்யா ஒரு கதை இருக்கு கேக்குறியா?” கூப்பிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்துல அவர் முன்னாடி இருந்தேன். கதை கேட்டு முடிச்சதும் , வேற ஒரு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீல். என்கிட்ட கதையா சொன்னதை விட 50% கூடுதலா விஷுவலைஸ் பண்ணியிருக்கார். 



செல்வராகவன் நட்சத்திரங்கள்கிட்ட ரொம்ப டெரர் காட்டுற மனிதர்னு சொல்றாங்களே?


 
இந்த மாதிரி கதையக் கையாளும்போது டெரராத்தான் இருக்கணும். செல்வா ரொம்ப கூலான ஆள்! ஆனா படத்துல நடிச்ச அனுபவம், ரொம்ப டெரிபிக்கா இருந்தது. தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போற, படம்னு சில பேர் அளந்து விடுவாங்க. ஆனா நிஜமாவே நம்ம சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போற படம். தமிழ் சினிமா, கோடாம்பாக்கத்து செட்டை விட்டு, கோபிச்செட்டி பாளையத்தை விட்டு, சுவிஸ் பனிமலைகளை விட்டு வேற ஒரு உலகத்துக்கு அழைச்சிட்டு போற படம். எனக்கு பிஸிகல் ஸ்டிரைன் அதிகமா கொடுத்த படம். 



கதையப் பத்தி யாரும் வாயே திறக்க மாட்டேன்றீன்களே?

 
கதைய சொல்லிட்டா இந்தப் படத்தை பார்க்குற ஆர்வமே போயிடும். இந்த மாதிரி ஃபேண்டஸி படங்களுக்கு இருக்குற ஆபத்து அதுதான். இருந்தாலும் உங்களுக்காக முதன்முதலா வாய திறக்குறேன். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில ரொம்ப அழகான காதலர்கள். அவங்க ரெண்டு பேரும் இன்னொரு உலகத்துல மருவன் - வர்ணாங்கிற வேற ரெண்டு கேரக்டர்ஸா மீட் பண்றாங்க. எதுனால இப்படி நடந்தது? அந்த இன்னொரு உலகத்துல அவங்க அனுபவம் எப்படி இருந்துச்சுங்கிறதுக்காக, அந்த கேரக்டர்ஸுக்கும் ஆடியன்ஸுக்கும் த்ரில்லான அனுபவமா அமையப் போகுது. என்ன பாஸ், பதில் சொல்றதுல ஒரு டைரக்டர் ரேஞ்சுக்கு தேறிட்டனா? 



அடுத்து நீங்க நடிக்கிற படம் தலைப்பு பிரச்சினையில சிக்கியிருக்கே?


 
அதை எஸ்.பி.ஜனநாதன் சார் பார்த்துக்குவார். ஆனா ஒரு விஷயம். படத்தோட தலைப்பு ‘புறம்போக்கு’ன்னு இருக்குறதால என்னோட கேரக்டரை அதோட ரிலேட் பண்ணிக்காதீங்க. இது கதையோட சம்பந்தப் பட்டது. இந்தப் படம் தவிர மகிழ்திருமேனி இயக்கத்துலயும் நடிக்கிறேன். அதுக்கு இன்னும் தலைப்பு ரெடியாகல. இந்த ரெண்டு படத்துக்கு அப்புறம், ஆர்யா படம் 100 கோடி வசூலுக்கு மாறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு! 


thanx - the hindu 


a



டிஸ்கி - நான் ஒரு ஆணாதிக்கவாதின்னு ஒரு தப்பான அபிப்ராயம் ஆங்காங்கே பரவிக்கிடக்கு. ஆனா பாருங்க ஆர்யா பேட்டில கூட அனுஷ்கா ஸ்டில்லுக்குத்தான்  முன்னுரிமை , பின்னுரிமை , சைடு உரிமை எல்லாம் கொடுத்திருக்கேன் , இதில் இருந்து தெரிய வரும் நீதி - சி பி பெண்மையை போற்றுபவர் , பெண்களை மதிப்பவர் . இதை எல்லாம் நீங்க ஊர்ல போய் சொல்லனும் ;-))

0 comments: