Showing posts with label ஆர்யா. Show all posts
Showing posts with label ஆர்யா. Show all posts

Saturday, November 28, 2015

ஆண்களுக்கும் இது அரிய வாய்ப்பு!- ‘ரா ஒன்’ /‘இஞ்சி இடுப்பழகி’. கதாசிரியர் கன்னிகா திலோன் பேட்டி

 • கன்னிகா
  கன்னிகா
ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப் படத்தின் ட்ரைலரில், உடல் பருமன் கொண்ட பெண்ணாகக் காட்சியளித்து அதிர்ச்சி தருகிறார் அனுஷ்கா. “உடல் எடை கூடுதலாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வைச் சுற்றி நடக்கும் கதை இது.


அவள் எதிர்கொள்ளும் வாழ்க்கை யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்ததாகத் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறேன். வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வித்தை இதில் இருக்கிறது என்று கூறலாம்” என்கிறார் இந்தப் படத்தின் 29 வயது கதாசிரியரான கன்னிகா திலோன். இவர் லேசுபட்ட ஆளில்லை. எந்திரனுக்குப் போட்டியாக ஷாருக் கான் நடித்துத் தயாரித்த ‘ரா ஒன்’ படத்தின் திரைக்கதையில் பணியாற்றியவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...


திரைக்கதை எழுத்தாளராக உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது?இந்திய சினிமாவில், பெண் திரைக்கதை எழுத்தாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். நான் பல புத்தகங்கள் வாசிப்பேன். சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. நிறைய படிப்பதால், நிறைய எழுதுவேன். இரண்டு நாவல்கள் எழுதி வெளியிட்ட பின்னர், பாலிவுட்டில் ஷாருக் கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்துக்கு இயக்குநர் ஃபரா கான் உதவியாளராகப் பணியாற்றினேன். பின்னர் ‘ரா-ஒன்’ திரைப்படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறையைப் பற்றிய புரிதலும் ஆர்வமும் இருந்ததால் அங்கு தொடங்கிய பயணம் டோலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் தொடர்ந்தது. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளேன்.இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தை உருவாக்க உங்களைத் தூண்டியது எது?ஸ்வீட்டி (அனுஷ்கா) கதாபாத்திரம் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு ஏன் நம் வீட்டிலேயே நம்மோடு வாழ்கிற கதாபாத்திரம்தான். நான் சந்தித்த பெண்கள், தோழிகள், குடும்பப் பெண்கள் எனப் பலரும் தங்கள் உடல் எடை கூடுதலாக இருப்பதால் உணவுப் பழக்க வழக்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அவர்களால் நினைப்பதை ருசிக்க முடிவதில்லை. தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா எனப் பல வழிகளில் உடல் எடை குறைக்க நேரம் செலவிடுகின்றனர். சுற்றி இருப்போரின் நகைச்சுவைக்கு இலக்காக மாறிவிடுகின்றனர்.நான் பார்த்த, கவனித்த நிகழ்ச்சிகள் அவர்களைத் தாண்டி ஒரு சக பெண்ணாக என்னையும் பாதித்தன. ஒரு பெண் தன்னுடைய தோற்றத்தின் காரணமாக சமுகத்தால் எப்படிக் கையாளப்படுகிறாள் என்பது எனக்குப் புரிந்தது. அதை வைத்தே ஸ்வீட்டி கதாபாத்திரத்தைச் சித்தரித்தேன். மிக யதார்த்தமாகவும், க்யூட்டாகவும், தன் வாழ்க்கை அனுபவங்களை மிக உற்சாகமாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக அதை அமைத்தேன்.இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் காணும் பெண் பார்வையாளர்கள் மனதில் தாழ்வுணர்ச்சி ஏற்படுமா?


உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்கள் படம் பார்க்கும்போது, கண்டிப்பாக அவர்களை இது நெகட்டிவாக பாதிக்காது, புண்படுத்தாது. ஏனெனில், படம் முழுவதும் ஜாலியாகவும் துருதுருப்பாகவும் ஸ்வீட்டி வருவாள். இன்னும் சொல்லப் போனால், படத்தில் உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்ணின் பாசிட்டிவ் சித்தரிப்பாக இந்தக் கதாபாத்திரம் இருக்கும்.படம் பார்த்த பிறகு மிக உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எடை கூடிய ஒவ்வொரு பெண்ணும் தன்னை மேலும் நேசிக்கத் தொடங்குவாள். அப்படியானால் இது எடை கூடிய பெண்களுக்கான படம் மட்டும்தானோ என்று எண்ணிவிடாதீர்கள். இது நம் சமூகத்துக்குத் தேவையான படம். சிரித்துக்கொண்டே கொஞ்சம் சீரியஸாகக் கற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் தோள் மீது கைபோட்டுச் சொல்லித்தரும் படம்.


அனுஷ்கா கதாபாத்திரத்தைத் திரையில் காண்பிக்க ஸ்பெஷல் மேக் அப் தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனவா?


ஹிரோயின் என்றால் ஸ்லிம்மாகவும் மாடர்ன் ஆகவும் சித்தரிக்கப்படும் இந்தக் காலத்தில், இக்கதையைத் தேர்வுசெய்து நடித்த அனுஷ்கா பாராட்டுக்களை அள்ளுவார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைக்கதை எழுத்தாளராக நான் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாகவே அனுஷ்கா இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தி அருமையாக நடித்துள்ளார். அனுஷ்கா இந்தப் படத்தில் தன்னுடைய முழு உழைப்பைத் தந்துள்ளார்.
ஸ்பெஷல் மேக்-அப் ட்ரிக்ஸ் ஒருசில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், முகத்தில் எல்லாம் ஸ்பெஷல் மேக் அப் போட்டு சதைப்பிடிப்பான தோற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதால் ‘வர்க் அவுட்’ செய்து உடல் எடையை ஏற்றியுள்ளார். நான் கதாபாத்திரத்தைச் சித்தரித்த விதத்தை இயக்குநர் பிரகாஷ் முழுமையாக ஏற்று அதற்கேற்ப படம் இயக்கியுள்ளார்.படம் பார்த்த பிறகு ஸ்வீட்டி அனுஷ்கா மனதில் நிற்கும் கதாபாத்திரமாக இருப்பார். எடை கூடிய பெண்கள் எவ்வளவு அழகு என்பதைப் புரிந்துகொள்ள ஆண்களுக்கும் இந்தப் படம் ஒரு மயிலிறகு வருடலாக இருக்கும்.

-தஹிந்து

Sunday, May 17, 2015

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை vs 36 வயதினிலே -

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' படங்களின் இயக்குநர் ஜனநாதனின் நான்காவது படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'. ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி என மூவரும் இணைந்திருக்கும் படம் எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது?
டைட்டில் கார்டில் ஆர்யா பெயருக்கு கிடைக்காத கைத்தட்டல் விஜய் சேதுபதிக்குக் கிடைத்தது.
கைதியாக இருக்கும் ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால், ஆர்யா அதுகுறித்த எந்த சலனமும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஜாலியாக உட்கார்ந்து கடலை சாப்பிடுகிறார். நீதிபதி தீர்ப்பு கூறியதும், என்னை போர்க்குற்றவாளியாகக் கருதி சுடுங்கள் என்று ஆர்யா கேட்கிறார். அப்போதே ரசிகர்கள் சத்தமில்லாமல் படம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரி ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கில் போடும் அனுபவம்மிக்க ஊழியர் விஜய் சேதுபதியை ஷாம் தேடிப் பிடிக்கிறார். இதற்கிடையில், போராளி கார்த்திகா, ஆர்யாவை தப்பிக்க வைக்க முயற்சிக்கிறார். இதில் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
பாலு என்கிற பாலுச்சாமியாக தீவிரமான கம்யூனிஸ்ட் போராளியாக ஆர்யா கச்சிதமாக நடித்திருக்கிறார். அளவான வசனம், தீர்க்கமான பார்வை, நம்பிக்கையோடு இயங்குதல் என எல்லா தளங்களிலும் தன்னை செதுக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், மிகப்பெரிய ரயில் கொள்ளையை நடத்திய ஆர்யா எந்த இடத்திலும் புத்திசாலியாகவே காட்டப்படவில்லை.
ஷாம் சிறைச்சாலை அதிகாரி மெக்காலே கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். சட்டப்படிதான் எதையும் செய்வேன். சட்டம் தான் குற்றங்களைத் தடுக்கும். ''செஞ்ச தப்புக்கு ஏத்த மாதிரி கையை வெட்டணும், காலை வெட்டணும், தலையை வெட்டணும், தப்பு பண்ணவனை நடுரோட்டுல நிக்க வெச்சு கல்லாலயே அடிச்சு கொல்லணும்'' என்கிற ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக தீவிரமாக நடித்திருக்கிறார். நிதானமான, உறுதியான ஷாமின் நடவடிக்கைகள்தான் படத்தை நகர்த்தவே உதவுகின்றன.
தூக்கில் போடும் ஹேங்மேன் எமலிங்கம் கேரக்டரில் விஜய் சேதுபதி பக்கா ஃபிட். சென்னை பாஷை பேசிக்கொண்டு, சரக்கடித்துவிட்டு சலம்புவதும், எமோஷனில் கரைவதுமாக மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் முழுக்க ஃபெர்பாமன்ஸில் கவனம் ஈர்ப்பது விஜய் சேதுபதிதான்.
போராளியாக கார்த்திகா, குயிலி கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார். காதல், கிளாமர், டூயட் என்று இல்லாத அழுத்தமான பாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்திகாவைப் பாராட்டலாம்.
ஜனாதிபதி தேர்தலில் நின்றதற்கான காரணத்தை விஜய் சேதுபதி சொல்வது, கைதி பல வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று தெரிந்ததும் விடுதலை செய்யப்படுவதும், அந்தக் கைதி குடும்பத்தை இழந்து கண்ணீரில் கரைவதும் என சமகால சூழலை கொஞ்சம் நையப் புடைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
விஜய் சேதுபதி அறிமுகப் படலத்தில் அப்படி ஒரு பாடல் அவசியம்தானா சாரே?
படத்தின் முக்கிய மையமாக இருக்கும் ஆர்யாவின் பின்புலம் என்னவென்றே தெரியவில்லை. கார்த்திகாவுக்கும் அப்படியே.
விஜய் சேதுபதியின் பின்புலமும், கதாபாத்திர வடிவமைப்பும் நேர்த்தியாகவும், இயல்பாகவும் உள்ளது.
எல்லோரையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், ரகசியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஷாம் எப்படி விஜய் சேதுபதியை மட்டும் கண்காணிக்காமலேயே இருக்கிறார்?
ஷாம் நினைத்திருந்தால் விஜய் சேதுபதிக்குப் பின்னால் இருக்கும் அந்த கூட்டத்தையே பிடித்திருக்கலாமே?
வெள்ளை பேப்பரில் பாலில் எழுதுவது, சமஸ்கிருதத்தில் துப்பு கொடுப்பது, சட்டையில் க்யுஆர் கோடு (QR code) எல்லாம் நல்ல ஐடியா தான். ஆனால், எதுவும் அடடே என ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு க்ளிக் ஆகவில்லை.
உலகக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதைக் குறித்து உரக்கப் பேசுகிறார் ஆர்யா. அதற்குப் பிறகு யாருமே அதை கண்டுகொள்வதில்லையே. மரண தண்டனையின் நீட்சியாகவே படம் நீள்கிறதே?
ஷாமும்- ஆர்யாவும் தனியாக பேசும் காட்சி எந்த அளவுக்கு காத்திரமாக இருந்திருக்க வேண்டும்? எதைப்பற்றியும் தெளிவுபடுத்தாமல் காமா சோமோவென்று நகர்வது எந்த விதத்தில் நியாயம்? படத்தின் மொத்த பலமும் அங்கே புஸ்ஸாகிப் போய்விடுகிறது.
செல்வகுமாரின் சிறைச்சாலை செட் 'ரியல்' உணர்வைத் தருகிறது. சிறைச்சாலை குறித்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இம்மி பிசகாமல் அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால், அதே போல படத்தின் திரைக்கதையை ஜம்ப் ஆகாமல் இருக்கும்படி கவனம் செலுத்தி இருந்தால், வசன ரீதியான பிரச்சாரத்தைத் குறைத்திருந்தால் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக பட்டா போட்டு அமர்ந்திருக்கும்.
ஆனாலும், அசுத்தம், மரணதண்டனை , கருணை மனு ஆகியவற்றைப் பேசிய விதத்தில் புறம்போக்கு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம்.


ஜோதிகா
ஜோதிகா
ஜோதிகாவின் மறுவருகை என்ற ஒற்றை காரணம் போதாதா '36 வயதினிலே' படத்தைப் பார்க்க?
'மொழி‘ படத்தில் சைகைகளால் அபிநயம் பிடித்த ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். ஜோதிகாவின் வரவேற்பை ஆமோதிப்பதைப் போல தியேட்டரில் குவிந்திருந்தது பெண்கள் கூட்டம்.
'36 வயதினிலே' திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களை வசப்படுத்தியதா?
வருவாய்த் துறையில் வேலை செய்கிறார் வசந்தி தமிழ்ச்செல்வன் (ஜோதிகா). தமிழ்ச்செல்வன் (ரஹ்மான்) வானொலி அறிவிப்பாளர்.
ரஹ்மானுக்கு அயர்லாந்து செல்ல விருப்பம். அந்த விருப்பத்துக்கு வரும் சில தடைகளால் மனைவி ஜோதிகாவைத் திட்டித் தீர்க்கிறார். கண்ணை மூடித் தூங்கினா எல்லாருக்கும் கனவு வரும். அது இல்லை. வாழ்க்கையில சில உணர்வுகளால விஷனா பார்க்கிற கனவு என்று மனைவியிடம் கோபமுகம் காட்டுகிறார். அதற்குப் பிறகு கணவனாலும் சமூகத்தாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜோதிகா எப்படி சாதிக்கிறார்?
8 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் 'பேக் டு தி ஃபார்ம்' ஆகி இருக்கிறார் ஜோதிகா. சூர்யா பெயரை டைட்டிலில் போடும்போது எழும் விசில் சத்தத்தைக் காட்டிலும், ஜோ-வை திரையில் பார்க்கும்போது சத்தம் அதிகம் எழுகிறது. ஜோதிகாவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனுக்கும் பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது அதிசயம்தான்.
டிராஃபிக்கில் சிக்கி ஆபிஸூக்கு லேட்டாக வந்து திட்டு வாங்குவது, தங்கப்பன் பெயரை தங்கப்பெண் என எழுதியதால் டோஸ் வாங்குவது, கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி கூனி குறுகுவது, கிண்டல் செய்பவர்கள் மூக்கை உடைக்க பொறாமையை பொங்க வைக்கும் அளவுக்கு பில்டப் கொடுப்பது, பஸ்ஸில் பயணிக்கும் பாட்டியின் சீட்டை பிடிப்பது, சீட் வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இடித்துவிட்டு பரவாயில்லை என சொல்வது, அயன்பாக்ஸ்ல மூஞ்சியை தேய்க்கிறேன் வா என் பொண்ணா நீ என மகளிடம் கோபப்படுவது என கிடைத்த எல்லா இடங்களிலும் அளவாக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா.
ஜோதிகாவின் ஃபெர்பாமன்ஸ் ஆஹா என்று சொல்லவைக்கவில்லை. ஆனால், அவ்வளவு பொருத்தமாக அடக்கமாக இருக்கிறது.
ஜோதிகாவின் கணவராக ரஹ்மானின் நடிப்பு ஓ.கே ரகம். ஆனால் கனவு, வாழ்க்கை, லட்சியம் என்று மூச்சு முட்ட பேசுபவர் வார்த்தைகளில் மட்டு மாடுலேஷன் காட்டுறார். அதை உணர்வாக, நடிப்பாக தரவில்லை என்பதுதான் வருத்தம். எனக்குத் தெரியாதுங்கிற ஒரே ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றது இந்த உலகத்துலயே நீ ஒருத்திதான் என ரஹ்மான் ஆதங்கப்படும்போது மட்டும் கவனிக்க வைக்கிறார்.
ஜோதிகாவின் தோழியாக அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அபிராமியின் எனர்ஜி பேச்சுக்கு ரசிகர்கள் கிளாப்ஸ் அடித்தனர்.
டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பயில்வான் ரங்கநாதன், பிரேம், தேவதர்ஷினி ஆகியோர் சரியான தேர்வு.
திவாகரனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.
மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் மறு ஆக்கம் செய்திருப்பது படத்தை எந்த விதத்திலும் சிதைக்காமல் பார்த்துக்கொள்கிறது.
மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு அம்மா இருப்பதைப் போலவும், அம்மாவின் கிராமத்துக்குச் சென்று ரிலாக்ஸ் ஆகிவருவதைப் போலவும் காட்சிகள் இருக்கும். தமிழில் ஜோதிகாவுக்கு அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை.
ஒரு பெண்ணின் கனவுக்கு எக்ஸ்பைரி தேதியை நிர்ணயிப்பது யார்? ஏன்? இதுதான் படத்தின் ஒட்டுமொத்த கேள்வி.
எந்த வயதிலும் சாதிக்க முடியும். அதற்கு வயது தடையல்ல என்று சொன்னதற்காகவும், இயற்கை விவசாயம் என்பதை வலியுறுத்தியதற்காகவும் '36 வயதினிலே' படத்தை வரவேற்கலாம்.
தமிழில் இப்படிப்பட்ட படங்கள் ரீமேக் மூலமாகவாவது வருவது ஆரோக்கியமான விஷயம். முதல் நாள் வரவேற்பு நீடித்தால், தமிழ் சினிமாவில் இந்த சாதகப் போக்கு முழு பலன் தரலாம்thanx - the hindu


 • Mohanraj  
  குட்
  about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • எஸ்.கெளதம்  
   இழந்துபோனதாக நான் நினைத்த ஜோதிகா மீண்டும் தன் திறமையை நிலை நாட்ட வந்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் படத்தை பார்த்தேன். அருமை..
   about 22 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
   anandan  Down Voted
   • Rajkumar  
    அட்டகாசம்.
    a day ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
    anandan  Down Voted
    • RAJA Mani  
     4stars!!! good movie
     Points
     1220
     a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • RAJA Mani  
      I see it!!! its worth to watch ... The whole family movie!!!
      Points
      1220
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Manikandan Kpm  
       நல்ல விமர்சனம் வந்துகொண்டு இருக்கிறது தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரைஅரங்கில் படம் பார்த்தவர்களிடம் .........:)
       a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       • Labam  
        Comeback jo anni

       Thursday, December 25, 2014

       மீகாமன் - சினிமா விமர்சனம்


        

       1000  கிலோ கொக்கைன் எனும்  போதை  மருந்து  வில்லன்  கிட்டே  இருக்கு.இன்னொரு  வில்லன் குரூப்  அதை அபேஸ்  பண்ண  நினைக்குது. அதைக்கைப்பற்ற போலீஸ்  திட்டம்  போடுது. ஹீரோ  ஒரு  போலீஸ் ஆஃபீசர். 2  க்ரூப்  வில்லன்களையும்  மோத  விட்டு  பிடிக்க  பிளான், ஹீரோயின்  வழக்கம்  போல  ஒரு லூஸ். எல்லா  தமிழ்ப்படத்துலயும் அப்டித்தானே  காட்டறாங்க?தன்   வீட்டுக்கு  வாடகைக்கு  குடி  வந்தவன்  ஒரு தீவிரவாதியா? சாஃப்ட்வேர் எஞ்சினியரா?ன்னே தெரியாம  பேக்கு  மாதிரி  இருக்கு .


       வில்லன்  க்ரூப் ல   2  போலீஸ் ஆஃபீசர்ங்க  அவங்க ஆள்  மாதிரியே  சேர்ந்து வேலை செய்யறாங்க . குருதிப்புனல் ல வர்ற  மாதிரி  ஒருஆளை  கண்டு  பிடிச்சு  26  நிமிசம்  சித்ரவதை பண்ணி வில்லன்  இன்னொரு ஆள்  யாரு?னு  கேட்கறார்.இந்த   26  நிமிஷம்  சித்ரவதை செஞ்சதுக்கு  ஹன்சிகா  கூட 4  ரொமான்ஸ்  சீன்  வெச்சிருக்கலாம். தமிழன்  ஜாலியா  கிறிஸ்மஸ்  லீவைக்கொண்டாடி  இருப்பான். ஸ்டண்ட்  சீன் நல்லா  வடிவமைச்சுட்டா  போதும் , திரைக்கதை  எப்படிப்போனா  என்ன? -னு  நினைச்சுட்டாங்க  போல .


       தன்  குடும்பம் நல்லாருந்தா போதும் , தமிழன்  எக்கேடு  கெட்டா என்ன?னு  சில அரசியல்வாதிக  நினைக்கற  மாதிரி  இப்பவெல்லாம்  ஆக்சன்  படம்  எடுக்கும்  இயக்குநர்கள்  ஸ்டண்ட்  மாஸ்டரை  வெச்சு ஆக்சன்  சீக்வன்ஸ்  நல்லா  பண்ணிட்டா  படம்  தேறிடும்னு  நினைக்கறாங்க . 


       ஹீரோவா ஆர்யா. லவ் , காமெடின்னு  கலக்கிட்டு  இருந்தவர்  ஆக்சன் படத்தில்  களம்  இறங்கி  இருக்கார். அவரது  வாட்டசாட்டமான  உடம்புக்கு  ஆக்சன்  பேக்கெஜ் செமயா   ஃபிட் ஆகுது. இறுக்கமான  முகத்துடன்  படம்  பூரா வர்றாரு. நல்ல  நடிப்பு 


        ஹீரோயினா  ஹன்சிகா. ஏனோதானோ நடிப்பு.  சிம்பு  காதல் தோல்வியால  பாப்பா  ரொம்ப  மனசை  விட்டுடுச்சு  போல,


       வில்லன்  நடிப்பு சுமார் தான். ரகுவரன்  பிரகாஷ்ராஜ்  மாதிரி பல வித்தியாச ஆக்டிங்க் பார்த்த  நமக்கு இது  எல்லாம்  ஜுஜுபி       மனதைக் கவர்ந்த  வசனங்கள்       ஒரு செல்போனை ,சிம்மை ஒரு நாளுக்கு மேல் யூஸ் பண்ண மாட்டான் # மீகாமன்


       எங்கே போய் இருந்தே? 


        ஆர்யா = பொம்பளையைப்பார்க்க. 

        யாரு? 

        போலீஸ்காரன் பொண்டாட்டி

        டேய் காதல் இளவரசா ! # மீகாமன்


       3
       எதிரி நமக்குக்கொடுக்கும் வலியை அப்படியே திருப்பிக்கொடுக்கனும்# மீகாமன்


       4  நீங்க  சாஃப்ட்வேர் இஞ்சினியரா?

       அதுக்குதான் படிக்க ஆசை.ஆனா வீட்ல ரொம்ப கஷ்டம், அதனால  அக்யூஸ்ட் ஆகிட்டேன் # மீகாமன்


       5  வில்லன் = அவன்  ஃபைட்  போடும் ஸ்டைலைப்பார்தியா? 30  செகண்ட்ல  6  பேரை  அடிச்சிருக்கான். இதுல  இருந்து  என்ன  தெரியுது?#மீகாமன்
       6   நீ  ஆடறது  தற்கொலை  ஆட்டம்.

        களம் இற ங்கியாச்சு. ஆடி தான்  பார்ப்போமே?#மீகாமன்        படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்       ஓப்பனிங் ஷாட் ல ஹீரோ பிளேடை எடுக்கறாரு. ஓஹோ.இது சிம்பாலிக் ஷாட்டா?


       2
       ஹீரோயின் ஓப்பனிங் ஷாட் ல தலைக்கு மேல தென்னை மரத்தை ,தேங்காயைக்காட்றாங்க.்.ஏதோ குறியீடு போல


       3
       120 செமீ சைஸ் பனியன் போட வேண்டிய ஹீரோயின் 85 செமீ பனியன் போட்டிருக்கு.பாவம்.லோ பட்ஜெட் படம் போல


       4
       ஹன்சிகா பேசும் வசனத்தில் சிம்பு க்கு ஏதாவது மெசேஜ் கொடுப்பார்னு தமிழன் எதிர்பார்க்கறான்.பார்ப்போம்

       5  நீங்க சாஃப்ட்வேர் இஞ்சினியரா? அதுக்குதான் படிக்க ஆசை.ஆனா வீட்ல ரொம்ப கஷ்டம், அதனால அக்யூஸ்ட் ஆகிட்டேன் # மீகாமன்


       6 U/A சர்ட்டிஃபிகேட் பாத்துட்டு ஹன்சிகாவுக்குத்தான் சீன் இருக்கும்னு நம்பி வந்தா  வில்லன் அரை மணி நேரம்  போலீஸை , அடியாளை சித்ரவதை பண்றான்
       7  தடையறத்தாக்க  போலவே  இதிலும் அனல் அரசு பட்டாசைக்கிளப்பி இருக்காரு. ஆக்சன் காட்சிகள்  அதகளம்@மீகாமன்
       8  குருதிப்புனல்  டைப்ல ஒரு படம்  பண்ணனும்னு தான் இயக்குநர்  நினைச்சிருக்காரு. திரைக்கதை அந்த சாயல்ல  தான்  போகுது. ஆனா டோட்டல்  ரிசல்ட்?
       9 ஜேம்ஸ்பாண்ட்  படம்  மாதிரியே   இருக்கு, ஐ மீன்  ஹீரோ  10 நிமிசமா  சீட்டாடிட்டே  இருக்காரு.,நல்ல  வேளை செஸ்  விளையாடற மாதிரி  காட்டலை

       10 புன்னகை மன்னன்லகமல்ரேவதியைப்புரட்டிஎடுத்தமாதிரி  டான்ஸ்சொல்லித்தரும் சாக்கில் ஆர்யா ஹன்சிகாவை  என்னென்னமோ  பண்றாரு.என்ன கொடுமை சிம்பு இது?


       11   மன்மதன்  ல  வர்ற மாதிரி  ஹீரோ  தன்னை  ரேப்  பண்ண ட்ரை பண்றதா   ஹீரோயின்   கனவு  காணுது # அய்யோ  ராமா


       இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


       1  கேமரா ஆங்கிள் எல்லா  ஷாட்லயும்  ஒரு  வித்தியாசமான  படம்  பார்க்கும்  உணர்வைத்தருது. 


       2  இடைவேளைக்கு  முன் வரும்  2  ஃபைட்  சீன்ஸ் , பின் வரும்   ஒரு ஃபைட்  சீன்  மூன்றும் கலக்கல்  ரகம் .  வெல்டன்  அனல்  அரசு 


       3  காமெடி டிராக் என்ற  பெயரில்   மொக்கை போடாமல்  படம்  பூரா  ஆக்சன்  த்ரில்லர்  ட்ராக்கில்  பயணிப்பது  பிளஸ்
       இயக்குநரிடம்  சில கேள்விகள்


       1  போலீஸ் ஆஃபீசர்ஸ்  எல்லாரும்  ஐயப்ப சாமிக்கு மாலை  போட்டிருக்காங்களா? ஃபங்க்  விட்டுட்டு  தாடியோட    சுத்திட்டு  இருக்காங்க ? 


       2  ரவுடிங்க  , தீவிரவாதிங்க  எல்லாருமே   முஸ்லீமாத்தான்  இருப்பாங்களா? 


       3 ஹீரோ  வில்லன்  அடியாட்களை சுடும்போது  கூட ஸ்டைலா  கூலிங்  கிளாஸ்  போட்டுட்டே  சுடறாரு .  எப்படி  குறி  வைக்க  முடியும் ?

       4  ஹீரோ  -  ஹீரோயின்  ரொமான்ஸ்  காட்சிகள்  க்ளைமாக்ஸ்  வரும்போது  தான்  வருது . ஏன் ? சிம்பு  தடுத்துட்டாரா? முன்  பாதி  காட்சிகள் ல  மருந்துக்குக்கூட  காதல்  காட்சியே  வர்லையே? 

        
       சி  பி  கமெண்ட்  -   மீகாமன் - ஆர்யாவின்  ஃபுல் அண்ட் ஃபுல் ஆக்சன்  ஹீரோ அவதாரம்.ஸ்டைலிஸ்  மேக்கிங் - விகடன்  மார்க் = 43   , ரேட்ட்டிங் = 3 / 5 . தடையறத்தாக்க  அளவு  வர்லை . இருந்தாலும்  ஓக்கே  ரகம்,  ஏ செண்ட்டர்ல  ஓடிடும.  பெண்கள்  பார்க்க  முடியாது   . வன்முறைக்காட்சிகள்  அதிகம்       ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  43       குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே


       டிஸ்கி  - கயல்  - சினிமா விமர்சனம்


       http://www.adrasaka.com/2014/12/blog-post_58.html

       டிஸ்கி 2  கப்பல் - சினிமா  விமர்ச்னம்


       http://www.adrasaka.com/2014/12/blog-post_83.html

         டிஸ்கி - 3 வெள்ளக்காரதுரை - சினிமா விமர்சனம்

       http://www.adrasaka.com/2014/12/meegaman-stills.html        ரேட்டிங்  =  3  / 5       a
       மீகாமன் படத்தில் ஹன்சிகா வை ஹீரோயினாக போட்டதில் என்ன ரகசியம் ? -இயக்குநர் மகிழ்திருமேனி பேட்டி

       யதார்தத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல்! இயக்குநர் மகிழ்திருமேனி

       mega


       “”சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவன் உறவுகள் மூலமாக சுத்திக் கொண்டே இருக்கிறது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்… இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிஷங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் சினிமாவுக்கும் பொருந்தும். ஆமாம், இது நல்லதொரு சினிமா.” புத்தகங்கள் விரிந்து கிடக்கும் அறையிலிருந்து உதடுகள் பிரியாமல் சிரிக்கிறார் மகிழ்திருமேனி. “தடையறத் தாக்க’ தந்து கவனம் ஈர்த்தவர். இப்போது “மீகாமன்’ படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார்.       “மீகாமன்’ என்னென்ன விசேஷங்கள்….?
       மீகாமன் என்றால் கப்பலின் தலைவன் என்று பொருள். மாலுமிகளின் துணை கொண்டு கப்பலை கடலுக்குள் பத்திரமாக செலுத்தும் பொறுப்புள்ளவன். அவனுடைய வழிகாட்டுதல் இல்லையென்றால் கப்பல் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாது. எங்கேயும், எந்த இடத்திலும் இலக்கை மட்டுமே யோசிப்பவன். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு அப்படியொரு பக்குவம் கலந்த கதாபாத்திரம். அதன் குறியீடாகத்தான் படத்துக்கு “மீகாமன்’ என்ற பெயர். ரொம்பவே அடர்த்தியான ஆக்ஷன் த்ரில்லர். கூடவே ரொமான்டிக் உள்ள கதை. போதை பொருள் கடத்தல் இந்த படத்தின் பேசு பொருள்.       ஒரே மாதிரியாக வந்தாலும், ஒவ்வொரு படத்திலும் ஆர்யா “ஹேண்ட்சம்….’ இதில் எப்படி வந்திருக்கிறார்….?       ஆர்யாவுக்கு ஆக்ஷன் படங்கள் அந்நியமில்லை. ஆனால் இது தனித்து தெரியக் கூடிய படமாக இருக்கும். அவரின் “ஆக்ஷன் எபிசோடு’ பற்றி பேசும் போது இந்தப் படம் முன்னுக்கு வந்து நிற்பதை தவிர்க்க முடியாது. யாரை நடிக்க வைக்கலாம் என்பதில் எனக்கு எந்தத் தீர்மானமும் இல்லை. சில யோசனைகளுக்குப் பின் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக்தான் ஆர்யா எப்படி? என்று ஆரம்பித்தார். நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரம் ஆர்யாவுக்கு அப்படியே பொருந்தி வந்தது. ஆர்யா ரொம்பவே கலாட்டா பேர் வழி. சீரியஸ் கதையில் அவர் எப்படி…? என்கிற வாதங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவர் கதை கேட்ட விதம், இதை அவர் பக்குவமாக முடித்து தருவார் என்ற நம்பிக்கையை தந்தது. இதுதான்… இப்படித்தான் இருக்கும் என்று வருபவர்களுக்கு இன்னும் நிறைய ஆச்சரியங்கள் தர போகிறார் ஆர்யா.

       ஹீரோயின் இடத்துக்கு சமந்தா, நயன்தாரா என “செம மியூசிக்கல் சேர்’ நடந்ததே… ஆனால் சீட்டு குலுக்கி போட்டது மாதிரி ஹன்சிகாவே வந்து விட்டாரே…?
       “மீகாமன்’ என்றால் கட்டளைகள் பிறப்பிப்பவன். அதிகாரம் மிக்கவன். அவன் காதலிக்கிற பொண்ணு ஏஞ்சல் மாதிரி இருக்க வேண்டும் இல்லையா? நிறைய ஹீரோயின்கள் மனசுக்குள் இருந்தார்கள். கடைசியாக அந்த இடத்துக்கு ஹன்சிகாதான் பொருத்தமாக வந்தார். ஏற்கெனவே ஆர்யாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், சினிமாவைத் தாண்டி நண்பர்களாக பழகும் அவர்களின் தோழமை படத்துக்கு இன்னொரு பலம். காசு, பணம் தாண்டி ஹன்சிகா நல்ல உழைப்புக்கு தயாராக இருக்கிற ஹீரோயின். நேரம் கடைப்பிடித்தல், வசனங்களை முடிந்த அளவுக்குப் புரிந்து கொண்டு பேசுதல் என படப்பிடிப்பில் அசத்தி விட்டார் ஹன்சிகா. ஆர்யாவுக்கு கதையில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதில் சரி பாதி ஹன்சிகாவுக்கு உண்டு. கதையின் முழு பலத்தை தாங்கி பிடிக்கிற மாதிரி ஹன்சிகாவுக்கு இன்னும் படங்கள் இல்லாதது பெரும் குறை. அதை ஓரளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறது இந்தப் படம்.
       தீவிர புத்தக வாசிப்பாளர் என்பதால் இந்த கேள்வி… தமிழில் எவ்வளவோ நல்ல இலக்கியக் கதைகள் இருந்தும் படமாக உருவெடுப்பது இல்லையே… ஏன்…?
       சமுதாயம் மாதிரி… அரசியல் மாதிரி… இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ அரசனும் அப்படியே என்று சொல்லுவார்களே அதுபோல்தான். ஒரு தலைவனைப் போல் கலைஞனுக்கும் பங்கு இருக்கிறது. மக்கள் விரும்பும் ஆட்சி போல, மக்களுக்கு பிடிக்கிற சினிமாக்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இங்கு எது யதார்த்தம் என்று புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. எதைக் காட்டினாலும் அதன் ஒரிஜினல் முகத்தைக் காட்ட வேண்டும். ஈரான் படமான “தி செபரேஷன்’ பார்த்தால், நம்மூர் இயக்குநர்கள் மீது கோபம் வரலாம். மக்களின் வாழ்க்கையை, போராட்டங்களைக் காட்டுகிற படங்கள் ஒரு போதும் தோற்காது என்கிற நிலைமை வர வேண்டும். அதன் பின் இலக்கியத்தரம் பற்றி பேசலாம்.
       - ஜி.அசோக்

       Thursday, April 24, 2014

       ரேஸ் குர்ரம்' vs புறம்போக்கு'

       தெலுங்கில் வெளியாகியுள்ள 'ரேஸ் குர்ரம்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஷாம். அதுமட்டுமன்றி, தமிழில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜனநாதன் இயக்கத்தில் 'புறம்போக்கு' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
       இந்நிலையில் ஷாமுடன் பேசிய போது..        தெலுங்கில் வெற்றி அனுபவம் எப்படி உணர முடிகிறது?


        
       " தெலுங்கில் என்னை 'கிக்' படத்தில் அறிமுகம் படுத்தியவர் சுரேந்தர் ரெட்டி. வெற்றிப் பட டைரக்டர். அந்த'கிக்' படம் சூப்பர் ஹிட். டைரக்டர் சுரேந்தர் என் மீது அன்பு கொண்டவர். அவரது அடுத்த படமான 'ஊசுற வல்லி' படத்தில் எனக்கு ஒரு சிறு ரோல் கொடுத்திருந்தார். அது என் மேல் வைத்துள்ள அன்புக்காகக் கொடுத்த வாய்ப்பு. அடுத்து அவர் கொடுத்த அர்த்தமுள்ள வாய்ப்புதான் 'ரேஸ் குர்ரம்'. அப்படி என்றால் ’வேகமாக ஓடும் குதிரை’ என்று அர்த்தம். இன்று பாக்ஸ் ஆபிஸில் வேகம்' எடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது."
       பொதுவாக தெலுங்கு திரையுலக அனுபவம் எப்படி உள்ளது?
       ''தெலுங்கில் எனக்கு இது 3 வது படம். இரண்டாவது ஹிட்படம். அங்கு தமிழ் நடிகர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதற்கான அடித்தளம் கமல்சார், விக்ரம்சார் ஆகியோரால் போடப்பட்டு இருக்கிறது. அவர்கள் போட்டுக் கொடுத்துள்ள பாதையில் என்னைப் போன்றவர்கள் சுலபமாக நடக்க முடிகிறது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் பாணி அங்கும் தொடங்கியுள்ளது. இது ஆரோக்யமான அறிகுறி. ரவி தேஜாவும் சரி அல்லு அர்ஜுனும் சரி இணைந்து நடித்த போது ஈகோ பார்க்காமல் பேசிப் பழகி அன்பு காட்டினார்கள்.
       தமிழில் கூட ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளீர்களே?
       ''ஆம். 'புறம்போக்கு' படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கிறேன். எனக்கு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் 'இயற்கை'. அதை இயக்கிய எஸ். பி. ஜனநாதன் என்கிற திறமைசாலியின் படம்தான் 'புறம்போக்கு'. இதில் நாங்கள் மூன்று பேரும் இணைந்திருக்கிறோம். ''
       "புறம்போக்கில் உங்கள் பாத்திரம் எப்படி?"
       ''புறம்போக்கில் என் பாத்திரத்தின் பெயர் மெக்காலே. பெயர் வரும்போதே 'மெக்காலே; சட்டத்தின் ஆட்சி 'என்று வரும். அந்த அளவுக்கு சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி.சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். ஒரு வெளிநாட்டுப் பெண் தான் எனக்கு ஜோடி.
       போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம்.இதுவழக்கம் போலில்லை. இதை புதிய பரிமாணத்தில் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறார். ஸ்டைலிஷாக இருக்கும்.
       நான் சட்டத்தை மதிக்கிற பாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம். எங்கள் இரண்டு பேருடனும் அவர்தொடர்பில் இருப்பவர் .படத்தில் எங்கள் 3பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக இருக்கும். ஒன்றுக்கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவை. இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று பாத்திரங்களுமே தனித்தனி ஐடியாலஜி கொண்டவை. தான் நினைப்பதே சரி,செய்வதே சரி என்று இருப்பவர்கள் ''
       உங்களில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்?
       ''மூவருக்கும் பேலன்ஸ் செய்துதான் காட்சிகள் வைத்திருக்கிறார்.''
       ஆர்யா, விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி..?
       'உள்ளம் கேட்குமே' படம் முதல் ஆர்யா எனக்கு பழக்கம். ஆர்யா என் தம்பி மாதிரி, அவன் வீட்டில் இல்லை என்றாலும் அவன் அம்மாவிடம் உரிமையுடன் சாப்பிடும் அளவுக்கு குடும்ப நண்பன்.
       ஆர்யாவின் வளர்ச்சி எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாலா படத்துக்கு காட்டிய 3 வருட உழைப்பு சாதாரணமல்ல. 'மதராசபட்டினம்' 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ராஜாராணி' என அவனது வளர்ச்சிகள்,வெற்றிகள் சந்தோஷமாக இருக்கிறது.
       விஜய் சேதுபதியின் வளர்ச்சியும் பிரகாசமாக இருக்கிறது. அவரும் பலவருடம் போராடி இருக்கிறார். தனக்கென ஒரு இடத்தை 'பீட்சா' 'சூதுகவ்வும்' படங்கள் மூலம் பிடித்துள்ளார். எப்போதும் அவர் ஜாலி சந்தோஷ மூடில் இருப்பவர். இப்போது இனிய நண்பராகி விட்டார். எங்களுக்குள் எவ்வித ஈகோவும் கிடையாது. ஆரோக்கியமான நட்பு மட்டுமே இருக்கிறது. எங்களுக்குள் எவ்வித போட்டி பொறாமை.. எதுவுமே இல்லை. இயல்பாக சௌகரியமாகப் போய்க் கொண்டு இருக்கிறது
       .'புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவும் நானும் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமானது. ஏப்ரல் 16 முதல் விஜய் சேதுபதியுடன் சென்னையில் நடிக்கப் போகிறேன். ஜூன் மாதம் முதல் நாங்கள் மூன்று பேரும் 44 நாட்கள் இணைந்து நடிக்க இருக்கிறோம். புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக இருக்கும்.''
       '6 மெழுகுவர்த்திகள்' படத்தில் நடித்ததில் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததா?
       ''சில சூழ்நிலைகளால் தப்பான மாதிரி சில படங்கள் அமைந்தன. '6' படத்துக்கு முன் என்னைப்பற்றி மாறுபட்ட அபிப்ராயங்கள் இருந்தன. ஆனால் இப் படத்துக்குப் பிறகு ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்கிற பெயர் வந்திருக்கிறது.
       பலவிதங்களில் திறமைகாட்ட முடிகிற நடிகர் என்கிற பெயரை'6' படம் எனக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. முன்பெல்லாம் கண்ணில் படும் 10 பேரில் 2 பேர் என்னைக் கண்டு கொள்வார்கள். இப்போது 8 பேர் பேசுகிறார்கள். ஊக்கம் தருகிறார்கள். மரியாதை தருகிறார்கள் எனக்கு புது உற்சாகம் தருகிறார்கள். கௌரவம் கூடி இருப்பதாக உணர முடிகிறது. ஷாம் விளையாட்டுத்தனமான நடிகரல்ல. அவருக்கும் முயற்சி செய்கிற ஆர்வம் இருக்கிறது வாய்ப்பு கொடுத்தால் வெளிப்படுத்தும் திறமை இருக்கிறது என்று '6' படம் பேச வைத்திருக்கிறது. அதற்கான வணிகரீதியிலான பலனை இனிதான் அடைய வேண்டும்.''
       சொந்தமாக '6' படம் தயாரித்ததில் சிரமங்களை உணர்ந்தீர்களா?
       ''படம் பெரிதாக வசூல் இல்லை என்றாலும் திட்டமிட்டு எடுத்ததால் அனாவசிய செலவுகள் இல்லை. எனவே கையைக் கடிக்கவில்லை என்கிற அளவுக்கு வசூல் செய்தது. இழப்புகள் இல்லை.''
       சரியான வாய்ப்புகள் அமையாத போது நடிகர்கள் சொந்தமாக படமெடுக்கத் தொடங்குவது பற்றி...?
       ''அப்படி ஒரு சூழல் வரும் போது நிச்சயம் செய்துதான் ஆகவேண்டும். சரியான படங்கள் கதைகள் அமையாத போது நம்மை நாமே நிரூபித்துதான் ஆகவேண்டும்.''
       மீண்டும் சொந்தப் படம் எடுப்பீர்களா?
       ''தேவைப்பட்டால் எடுக்கத்தான் செய்வேன். சரியான திரைக்கதை, படப்பிடிப்பு செலவுத் திட்டத்துடன் வந்தால் செய்வேன். ராம் கோபால் வர்மாவிடம் இருந்த சுரேஷ் நல்ல கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அதை தயாரிக்கும் எண்ணம் உள்ளது.''
       இயற்கை 2, கிக். 2. எடுக்கப் படவுள்ளதாமே?
       ''எஸ். பி. ஜனநாதன் சமீபத்தில் நார்வே போய் வந்திருக்கிறார். அங்குள்ள துறைமுகம் அத்தனை அழகாக இருந்ததாகக் கூறினார். நிச்சயம்'இயற்கை 2ம் பாகம்'.. மட்டுமல்ல 'கிக். 2' ம் பாகமும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.''
       நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக இருக்க விருப்பம்?
       ''இது ஸ்கிரிட் வெற்றி பெறும் காலம். ஸ்கிரிட்தான் கதாநாயகன் என்று கடந்த 2 ஆண்டுகளாக அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் என்றும் ஒரு டைரக்டரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன். 


       thanx - the hindu 

       Wednesday, January 08, 2014

       புறம்போக்கு - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேட்டி,

       இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் 

       நான் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் இல்லை- இயக்குநர் ஜனநாதன்

        

       இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நவீன தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரலாற்று பெட்டகம். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும், பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சினிமா கலைஞர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த சிந்தனைவாதியான இவர் இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி, ஷ்யாம், கார்த்திகா கூட்டணியின் நடிப்பில் ‘புறம்போக்கு’ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். படப்பிடிப்புக்காக குலுமணாலி கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.       #அது என்ன உங்கள் படத்துக்கு ‘புறம்போக்கு’ என்று பெயர் வைத்துள்ளீர்கள்?

        
       குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றியதாக டார்வின் சொல்கிறார். இதையே ஏங்கல்ஸ் ஒரு இடத்தில், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பிறந்துகொண்டிருக்கிறான் என்று எழுதுகிறார். இன்னும் அந்த பரிணாமம் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தானே அந்த இடத்தில் குறிப்பிடுவதாக அர்த்தம். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட தேசப்பிரிவினையில் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஏன் அண்மையில் இலங்கையில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே. அப்படியென்றால் நமக்குள் குரங்கின் குணம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்தானே. அதைத்தான் இந்தப் படத்தில் கொண்டுவந்திருக்கிறேன்.        அதேபோல மனித நாகரீகம் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் வளர்ந்து வருவதற்கு நிறைய சிறைச்சாலைகள் வழியாக கடந்து வரவேண்டி யிருப்பதை நம் வரலாறு சொல்கிறது. யார் ஒருவன் இந்த சமூகத்திற்காக போராடுகிறானோ, அவன் அடக்கு முறைக்கு உள்ளாகியிருக்கிறான், கைது செய்யப்பட்டிருக்கிறான், கொலை செய்யப்பட்டிருக்கிறான். பின்னர் அவன் தியாகி ஆக்கப்பட்டிருக்கிறான். ஸ்பார்டகஸ், சாக்ரடீஸ் போன்ற நிறைய பேரை இந்த வரிசையில் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான தியாகத்தை முன்வைத்துதான் சிறைச் 

       சாலை வழியே நாகரீகம் வளர்ந்தி ருக்கிறது என்பதற்கு வரலாறு இருக்கிறது. அதை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழலைக் கையில் எடுத்துக்கொண்டு சில இளைஞர்கள் போராட முன் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் இந்த படைப்பில் படைத்திருக்கிறேன்

       .
       #இந்தச் சமூகத்திற்காக வித்தியாசமான ஏதாவது விஷயங்களை அழுத்தமாக கொடுக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

        
       நான் பிறப்பால் தமிழன் என்கிற அடையாளத்தைப் பெற்றவன். ஒரு ஓவியனாகவோ, ஒரு கவிஞனாகவோ இருந்திருந்தால் அந்த வழியே என்னோட ஆர்ட் ஃபார்ம் பிரதிபலித்திருக்கும். நான் சினிமாக்காரனாக இருக்கிறேன். என்னுடைய அடையாளத்தை இந்த வழியில் சொல்லித்தானே ஆக வேண்டும். நீங்க பணம் கொடுக்கிறீர்கள் என்பதற்காக வெறும் ஆட்டம், பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் நான் இல்லை. 


       அதற்கு பதில் வேறு வேலையை செய்வேன். இந்த சமூகத்திலிருந்து நான் ஒன்றை கற்றேன். அதை மீண்டும் என் பாதிப்பாக முன் வைக்கிறேன். இதில் விமர்சனம் இருந்தால் தாராளமாக முன் வைக்கலாம். நல்ல விஷயம் என்றால் ஆதரிக்கலாமே. என்னை இங்கே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வெற்றியாளனாகவே இருக்கிறேன். அப்படியென்றால் இப்படியான படங்கள் கொடுக்க வேண்டும். அதற்கான தேவையும் இங்கே இருக்கிறது.        #நீங்கள் தொடர்ந்து அதிகப்படியான படங்களை இயக்காததற்கு இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்புதான் காரணமா?

        
       பல்வேறு வேலைகள். அதில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக வகித்த பதவி. இதில் முழு திருப்தியா எல்லோரும் சேர்ந்து இயக்குநர் சங்கக் கட்டிட வேலைகளை முடித்திருக்கிறோம். ஒரு படத்தை எடுப்பதைப் போலத்தான் அந்த வேலையையும் நான் நினைத்தேன். இடையிடையே சின்னச் சின்ன சங்கப்பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பதவிக் காலம் முடிந்தது. அடுத்த கணமே படவேலையை கையில் எடுத்துக்கொண்டேன்.        #இந்தப் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பற்றி?

        
       அடிப்படையாக இரண்டு நாயகர்கள் படம் இது. மீண்டும் சிறந்த இயக்குநர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள இங்கே வேலை இல்லை. இங்கே எல்லாவகையிலும் அதிகமான வீச்சு அவசியமாக இருக்கிறது இவர்கள் இருவரும் மக்கள் விரும்பும் நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய ஹீரோ படம் என்றால் உடனே தியேட்டருக்கு போகிறார்கள். இதில் யாரையும் எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. சின்ன படம், நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து போவதற்குள் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது.        என்னு டைய படத்தை பெரும்பான்மையான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஆர்யாவும் விஜய் சேதுபதியும் தேவைப் படுகிறார்கள். அவர்களை வைத்து ஒரு ஜனநாதனின் படத்தைத்தான் நான் இயக்கப்போகிறேன். நாயகி கார்த்திகாவின் தேர்வும் அப்படித்தான். எனக்கு தமிழ் நன்றாக பேசும் நாயகியாக இருக்க வேண்டும். அவரால்தான் என் கதையை முழுக்க உணர்ந்து பிரதிபலிக்க முடியும் என்று தோணும். கதைக்குத்தேவையான தென்னிந்திய லுக், கலர், உயரம், உடல்மொழி எல்லாமும் அந்தப் பெண்ணிடம் இருந்தது. நம்ம ஆனந்த் இயக்கிய ’கோ’ வெற்றிப்படத்தின் நாயகி. இதெல்லாம் போதாதா. அப்படியும் ஒவ்வொரு முறையும் ஒரு இளைஞனை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளன். 


       #இவ்வளவு வேலைகளுக்கு இடையே தயாரிப்பாளர் பொறுப்பு உங்களுக்கு அவசியம்தானா?


        
       எல்லாத்துக்கும் ஒரு சுதந்திரம் இருந்தால் சிறப்பாக அமையும் இல்லையா. என்னுடைய கிரியேட்டி விட்டி சுதந்திரத்திற்காக இந்த தயாரிப்பாளர் அணிகலனை எடுத்து அணிந்திருக்கிறேன். முதல் காப்பி மட்டும் நான் ஷூட் செய்கிறேன். அதுவும் நான் நினைக்க விரும்பிய விதத்தில் படைப்பு அமைய வேண்டும் என்பதற்காக. அவ்வளவுதான். மற்றபடி எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இங்கே இடம் தேவையில்லை. இயக்குநர் மணிரத்னம் இன்றைக்கும் இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறாரே. அவரும் இந்திய அளவில் பேசப்படுகிறாரே. ஆகவே, படைப்பு சுந்தந்திரத்திற்காக தாரளமாக ஒரு இயக்குநர் அந்த வேலையை தொடரலாம். 


       #ஷூட்டிங் எப்போது?


        
       தை 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம். இவ்வளவு நாட்களாக குலுமணாலியில் பனிப்பொழிவுக்காக காத்திருந்தோம். சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டோம். சென்னையை களமாகக்கொண்டு ஏறக்குறைய இந்தியா முழுக்க ஷூட் செய்யவிருக்கிறோம். குலுமணாலியில் ஷூட்டிங் முடித்து பொக்ரான் வழியே ஜெய்ப்பூர், பின் அங்கே இருந்து ஜெய்ஷால்மர் பாலைவனம் வரைக்கும் பயணம் தொடர்கிறது. 


       thanx - tamil hindu