Showing posts with label விகடன் INTERVIEW. Show all posts
Showing posts with label விகடன் INTERVIEW. Show all posts

Thursday, January 03, 2013

பூலோகம் - ஜெயம்’ ரவி, த்ரிஷா -இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர். பேட்டி

 http://kollycafe.com/wp-content/uploads/2012/09/boologam-movie-onlocation05.jpg
 
 
வடசென்னையின் ரிங் கிங்!

கி.கார்த்திகேயன்
 
நான் பக்கா மெட்ராஸ்காரன். நான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும். வடசென்னையோட விருப்பமான விளையாட்டு என்னன்னு சொல்லுங்க?'' - எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டவர், பதிலுக்குக் காத்திருக்காமல் அவரே சஸ்பென்ஸ் உடைத்தார். ''ஃபுட்பால், கபடி, கில்லி... இப்படித்தானே யோசிப்பீங்க. அதெல்லாம் இல்லை... பாக்ஸிங்தான் அவங்களோட நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலேயும் ஊறின விளையாட்டு. இதை நான் சும்மா என் அனுபவத்தை மட்டும்வெச்சுச் சொல்லலை. அரை நூற்றாண்டு வரலாற்று
 
 
 
ஆதாரங்களோட சொல்றேன்'' என்று குறுந்தாடி தடவிப் புன்னகைக்கிறார் கல்யாண கிருஷ்ணன். 'பூலோகம்’ படத்தின் இயக்குநர். அறிமுக வாய்ப்பிலேயே 'ஜெயம்’ ரவி, த்ரிஷா எனக் கவனிக்கவைக்கும் காம்பினே ஷனுடன் களம் இறங்கி இருப்பவர், இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர்.  
 
  ''ஆச்சர்யமாத்தான் இருக்கும். ஆனா, அதுதான் வட சென்னையின் முகம். நாட்டு மருந்து வைத்தியர் பரம்பரை, சார்பேட்டா பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை... இப்படி வட சென்னையில ஏகப்பட்ட குத்துச் சண்டைப் பரம்பரைங்க இருக்கும். அவங்களுக்கு சாப்பாடு, தண்ணி, பொழுதுபோக்கு, தொழில், காதல் எல்லாமே பாக்ஸிங்தான். வருஷம் முழுக்க புஷ்டியான சாப்பாடு சாப்பிட்டுட்டு குஸ்தி போட்டுட்டே இருப்பாங்க.



நிறைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்ல, 'வட சென்னையில் மாபெரும் குஸ்திப் போட்டி’னு போஸ்டர்கள் பாஸிங்ல போகும். எந்தப் பரம்பரை வீரர் சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு ஏரியாவுல மவுசு. அப்படி ஒரு பரம்பரையைச் சேர்ந்த 'ஜெயம்’ ரவி, ஏரியாவுக்குள்ள அவருக்கு இருக்கிற பிரச்னைகள், த்ரிஷாவுடனான காதல், சர்வதேச சவால்கள்னு... ஒரு வாழ்க்கையையே சினிமா ஆக்கியிருக்கேன்!''




''ஜனநாதன் ரொம்ப சின்சியரான சினிமா பண்ணுவார். அவர்கிட்ட இருந்து வந்த உங்ககிட்ட ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் தெரியுதே?''



''சினிமாவில் என் குரு, ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே ஜனா சார்தான். நான் 20 வருஷமா சினிமாவுல இருக்கேன். என் அப்பா, அம்மா எல்லாருமே சினிமாவில் இருந்தவங்கதான். அதனால ஒரு தொழிலா சினிமாவைப் பார்த்துட்டு இருந்தவனுக்கு, 'அது ஒரு கலைடா... அது ஒரு வாழ்க்கைடா’னு புரியவெச்சவர் ஜனா சார்தான்.



அப்புறம் சினிமாவை நான் பார்த்த பார்வையே வேற. 'இயற்கை’, 'ஈ’, 'பேராண்மை’ படங்களின் திரைக்கதையில் என் உழைப்பும் இருக்கு. அதுக்கு மதிப்புக் கொடுத்தோ என்னவோ, 'பூலோகம்’ படத்தின் கதைக்கு ஜனா சாரே வசனம் எழுதுறார். அந்த வகையில் ஜனா சாரோட தாக்கம் இந்தப் படத்தில் நிச்சயம் இருக்கும். சொல்லப்போனா, அவர் எடுத்ததைவிட சீரியஸ் சினிமா எடுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனா, ஒரு முதல் பட இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு இது எல்லாத்தையும் கணிக்கிறப்போ, 'பூலோகம்’ தான் எனக்கு பெஸ்ட் ஓப்பனிங்!''

 http://redcapsica.com/gallery_images/original/image_3174.jpg


'' 'உனக்கும் எனக்கும்’ படத்துல 'ஜெயம்’ ரவி - த்ரிஷா ஜோடி ஜாலி கேலியாக் குறும்பு பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ ரெண்டு பேருமே வேற மோல்டுல இருக்காங்க. அவங்களுக்கேத்த ஹோம் வொர்க் கொடுத் தீங்களா?''



''நிச்சயமா! ஒரு பாக்ஸர் இன்டர்நேஷனல் கேம்ல ஜெயிக்கணும்னா, 20 வருஷம் போரா டணும். அந்த 20 வருஷப் போராட்டம் ஒரு பாக்ஸரை எப்படி மாத்தியிருக்கும்? அந்த மாற்றங்களை ரெண்டே மாச பாக்ஸிங் பயிற்சி யில் ரவி கொண்டுவந்தார். ஹூக், அப்பர்-கட் பஞ்ச்னு டெக்னிக் கத்துக்கிட்டதுல இருந்து, உடம்பை இரும்பாக்குறது, பார்வையைக் கத்தி ஆக்குறதுனு பயங்கரமா சீசன் ஆகிட்டாரு.
 
 
 
 
 சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற கேரக்டர் இல்லை த்ரிஷாவுக்கு. படத்துல ஒரே ஒரு பாட்டுலதான் ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுவாங்க. அது செம கிக்கா இருக்கும். மத்தபடி ஏரியாவுக்குள்ள சுத்திட்டு இருக்குற ரவியை 'ரிங் கிங்’ ஆக்குவதில் த்ரிஷாவுக்கும் சமமான பங்கு உண்டு!'' 


நன்றி - விகடன்


http://www.southdreamz.com/wp-content/uploads/2012/05/Trisha-Hot-in-Dammu-Stills-1.jpg

ராணா , சசி தரூர் உடன் அடிக்கடி சந்திப்பு ஏன்? த்ரிஷா இடம் சுட்டிப்பொருள் விளக்கிய பேட்டி

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/05/Trisha-hot-in-Saree-10.jpg 

ஐ லைக் சமந்தா"
க.ராஜீவ்காந்தி
 
 
10 வருஷம்... 10 வருஷம்னு மத்தவங்கதான் சொல்லிட்டே இருக்காங்க. ஆனா, 'சமர்’ பட ரிலீஸை நினைச்சா ரெஸ்ட்லெஸா இருக்கு... ஏதோ முதல் படம் ரிலீஸ் ஆகுற மாதிரி'' விழிகளும் வார்த்தைகளும் படபடக்கின்றன த்ரிஷாவிடம். அழகில் இயல்பு, வார்த்தைகளில் தெளிவு, அணுகுமுறையில் சிநேகம்... 10 வருட அனுபவங்களுக்குப் பிறகு, இது த்ரிஷா வெர்ஷன் 2.0.  



 ''இப்போ ட்ரெண்ட்ல ஒரு ஹீரோயின் 10 வருஷம் தாக்குப்பிடிக்கிறது பெரிய விஷயம்... எப்படி முடிஞ்சது?''


 
''நேர்மையா சொல்லணும்னா, முதல் படம் நடிச்ச பிறகு ஆறு மாசம் கூட நான் சினிமாவில் தாக்குப்பிடிக்க மாட்டேன்னுதான் நினைச் சேன். ஆனா, இத்தனை வருஷம்... நான் நினைச்சே பார்க்கலை. அதுவும் ரசிகர்களுக்கு என்னை எப்படிப் பிடிச்சதுனு இப்போ வரைக்கும் தெரியலை. இப்பவும் சினிமால என் எதிர்காலம்பத்தி எந்தத் திட்டமும் இல்லை. காலைல எந்திரிச்சா ஷூட்டிங் கிளம்புற ஆர்வம் இருக்கிற வரை நடிப்பேன். நல்ல ஸ்க்ரிப்ட், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைச்சிட்டே இருந்தா, இன்னொரு 10 வருஷம்கூட நடிக்க ஆசைதான்.



இப்பெல்லாம் படம் தேர்ந்தெடுக்கிறதில் ரொம்பக் கவனமா இருக்கேன். அதனாலதான், 2012-ல தமிழ்ல என் படம் ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, இந்த இடைவெளியும் நல்லதுதான். தமிழ்நாட்டு ரசிகர்கள் என்னை நல்லா மிஸ் பண்ணட்டும். எல்லாத்துக்கும் சேர்த்து, 2013-ல் நாலைஞ்சு படம் வரும். எல்லாமே நல்ல படங்கள், நல்ல நல்ல ரோல்கள்!''



''த்ரிஷாவுக்கு ரீ ப்ளேஸ்மென்ட் யார்?''



''பதில் சொல்றது கஷ்டமாச்சே. நான் நடிக்க வந்தப்ப, சிம்ரனுக்கு ரீ ப்ளேஸ்மென்ட்னு சொன்னாங்க. ஆனா, இப்பவும் சிம்ரன்னா சிம்ரன்தானே! இப்ப நிறையப் பேரு முதல் படத்துலயே அசத்துறாங்க. எனக்கு சமந்தாவை ரொம்பப் பிடிக்குது. ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா இருக்காங்க. நேச்சுரலா நடிக்கவும் செய் றாங்க. என் சாய்ஸ் சமந்தா!''



''ஆஹா... நீங்க சமந்தா சூப்பர்னு சொல்றீங்க. ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியைவிட 'என்.இ.பி.’ நித்யாதான் பெஸ்ட்’னு சமந்தா சொல்லியிருக்காங்களே?''



''மாட்டிவிடணும்னு பாக்கறீங்க? நான் இன்னும் 'நித்யா’வைப் பார்க்கலை. ஆனா, சமந்தா சொன்னா சரியாத்தான் இருக்கும். ஏன்னா, ஜெஸ்ஸி, நித்யா ரெண்டு ரோலுமே அவங்க பண்ணியிருக்காங்க. நான் ஜெஸ்ஸி மட்டும்தானே பண்ணியிருக்கேன்!''



''ஹீரோயின்களில் யார் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்?''



''எல்லார்கிட்டயும் நல்லாப் பேசுவேன். நயன்தாரா ரொம்ப வருஷமா நல்ல பழக்கம். தமன்னா, இலியானா, வரூ எல்லாருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்னு சினிமாவில் யாரும் இல்லை. 20 வருஷம் முன்னாடி க்ளோஸா இருந்தவங்கதான் இப்பவும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்!''



''கிசுகிசுக்கள்..?''


  ''இத்தனை வருஷத்துல பக்குவப்பட்டுட்டேன். நானோ, ராணாவோ எதையும் சீரியஸா எடுத்துக்கிட்டதே இல்லை. எங்களைப் பொறுத்தவரை கிசுகிசுக்களை ஜோக் மாதிரி எடுத்துக்குவோம். படிச்சுட்டு சிரிச்சுக்குவோம்!''



''கல்யாணம்?''


''எனக்கே தெரியாம எனக்கு ஏகப்பட்ட தடவை கல்யாணம் ஆகிடுச்சே! ஆனா, இப்ப வரை எனக்கு அப்படி ஒரு ஐடியா வரவே இல்லை. நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன், கரெக்டான ஆள் கிடைச்சதும்!


ஆளும் கிடைக்கலை, பண்ணிக்கிற மனநிலையும் இல்லை. ரெண்டும் செட் ஆச்சுன்னா பார்க்கலாம். ஆனா, எனக்கு லவ் மேரேஜ்தான்!''



''திடீர்னு சசி தரூரைச் சந்திக்கிறீங்க. எதிர்காலம் அரசியலிலா?''


''ஐயோ, அதெல்லாம் வேணாங்க... இப்ப சினிமாவும் அரசியலும் கலந்துடுச்சு. அதனால சினிமால இருக்கிற வரை அரசியல்பத்திப் பேசாம இருக்கிறதுதான் நல்லது!''



thanx - vikatan 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfbNdUVE1BPnstHfGJuLk1D57woUqLkcALgHXOb6O8ex6CZ-M0o01bmcSuGR5uI_SdLzXTaa0Q1BuvL4n8f7RqXwjnLO9ktpBCe6Ifk0-_9ic4Jvqm5UI-D556IHM5BR7AjzDixGhL1PE/s1600/Trisha_Latest_Hot_Stills,_Images,Photo_Gallery,_Wallpapers.jpg

Sunday, May 27, 2012

கும்கி -ஒரு மாறுபட்ட சினிமா

''நடிக்கிற ஆசை எனக்கு இருக்குனு அப்பாவுக்குத் தெரியும். அதை நானா எப்போ சொல்லப்போறேன்னு என்னை ஆழம் பார்த்துட்டே இருந்தார். ஒருநாள் தயங்கித் தயங்கிச் சொன்னதுமே, 'இதோ பார் தம்பி, இன்னார் பேரன், இன்னார் மகன், எப்படி நடிப்பாரோங்கிற எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனா, அதைச் சமாளிக்கணுமேங்கிற பயமோ, தயக்கமோ இல்லாம இயல்பா நடி. ஒவ்வொரு சீனுக்கும் உன் உழைப்பைக் கொட்டு. எல்லாம் நல்லபடியா நடக்கும்’னு வாழ்த்தினார். எல்லாம் நல்லபடியா நடந்துட்டு இருக்கு!''- தன் சினிமா அறிமுகம் குறித்து கண்கள் மின்னப் பேசுகிறார் விக்ரம் பிரபு.


 அன்னை இல்லத்தின் மூன்றாவது தலைமுறையும் வெள்ளித் திரை தொடுகிறது. நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன், 'கும்கி’யின் கதை நாயகன்... விக்ரம் பிரபு!

 ''லிங்குசாமி சார்... எங்க குடும்பமே மதிக்கும் இயல்பான மனிதர். 'இனி சினிமா தான்’னு முடிவு பண்ணினதும் அவரைத் தான் சந்திச்சேன். 'என்ன மாதிரி படம் பண்ணலாம்?’னு ஆரம்பிச்சு, 'இந்த மாதிரி இருக்கணும், இப்படிலாம் இருக்கக் கூடாது’னு நிறைய விஷயங்களைப் புரியவெச்சார். பிரபு சாலமன் சார் படத்தில் கமிட் ஆனதும், 'நம்ம புரொடக்ஷன்லயே படம் பண்றீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு சொல்லி என்னை அணைச்சுக்கிட்டார். எனக்குக் கிடைச்ச நல்ல அண்ணன் அவர்!''

''காடு, யானைனு முதல் படத்துலயே நிறைய சவால் போல..?'

'
''நிச்சயமா! ஒரு யானைப் பாகனாகவே வாழ வேண்டிய கேரக்டர். 'நம்ம ஹீரோ மாணிக்கத்தை முதல்ல ஃப்ரெண்ட் ஆக்கிங்கோங்க’னு பிரபு சாலமன் சார் சொல்லிட்டார். சும்மா ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புனா, அக்செப்ட் பண்ற ஆளா மாணிக்கம்? மாணிக்கம் என்ற யானையை ஃப்ரெண்ட் பிடிக்க கேரளா போனேன். மாணிக்கம் மேல் எப்படி ஏறுவது, இறங்குவது, அவர் நடக்கும்போது எப்படி ஃபேலன்ஸ் பண்ணி உட்கார்றதுனு பதினஞ்சு நாள் பயிற்சி. மாணிக்கத்தோட பாகன் அதை மலை யாளத்தில் பழக்கியிருந்தார்.


 அதனால அதுக்குத் தெரிஞ்ச மலையாள வார்த்தை களை நானும் கத்துக்கிட்டேன். யானைகள் ரொம்ப ஸ்மார்ட். நம்ம கண்ணுல பயம் தெரியாத வரைக்கும்தான் நாம சொல்ற தைக் கேட்கும். 'இவன் பயப்படுறான்’னு அதுக்குத் தெரிஞ்சுட்டா... அவ்வளவுதான். அதனால உள்ளுக்குள்ள உதறுனாலும் வெளிய காமிச்சிக்காம கொஞ்ச நாள்லயே மாணிக்கத்தை நல்ல ஃப்ரெண்ட் ஆக்கிக்கிட்டேன்!''

''நடிக்க வர்றதுக்கு முன்னாடி ரஜினி, கமலைச் சந்திச்சு வாழ்த்து வாங்கினீங்களே... என்ன சொன்னாங்க?''


''கமல் சார் எனக்கு என்னென்ன தெரியும்னு முழுசாக் கேட்டுட்டு, இன்னும் என்னென்ன தெரிஞ்சுக்கணும்னு டீடெய் லாப் பேசினார். 'எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கணும்... ஒரு படத்தை எப்படிப் பார்க்க ணும்னு அவர் சொல்லிக்கொடுத்த எல்லாமே சினிமா பாடங்கள்.


 'முதல் படத்திலேயே ஹீரோயிசம், பெர்ஃபார் மன்ஸுனு மாட்டிக்காம எல்லாத்தையும் கலந்து பண்ணுங்க. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நம்மை அவங்க எப்படி ஏத்துகிறாங்கங்கிறதைப் பொறுத்து அப்புறம் முடிவு பண்ணலாம்’னு ரஜினி சார் சொன்னார். ரெண்டு பேருமே அவங்கவங்க சக்சஸ் ஃபார்முலாவையே எனக்கு சொல்லிக் கொடுத்ததாத் தோணுச்சு!''

''சினிமா குடும்பப் பின்னணியோட நடிக்க வர்றதும், முதல் வெற்றியும் ஈஸிதான். ஆனா, அதைத் தக்கவெச்சுக்கிறது வாழ்நாள் போராட்டமாச்சே...


''
''உண்மைதான்! ஆனா, அதுக்கு நான் தயாரா இருக்கேன். கலிஃபோர்னியா சாண்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தியேட்டர் பெர்ஃபார்மன்ஸ்ல ஆரம்பிச்சு, கார்பென்டரி, ஆடை வடிவமைப்பு, இயக்கம், நடிப்புனு சினிமா தொடர்பா 'ஏ டு இசட்’ கத்துக்கிட்டுதான் வந்திருக்கேன்.


'சர்வம்’ படத்தில் விஷ்ணுவர்தன் சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன்.என்னை சினிமாவுக்காக எப்படியும் வளைக்கலாம்கிற அளவுக்கு மாத்திக்கிட்டேன். தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். நேர்மையா உழைச்சா எந்த விஷயமும் சாத்தியம்னு நம்புறவன் நான்!''