Thursday, May 31, 2012

லொள்ளு சபா - எந்திரன் பார்ட் 2 - ? சந்தானம் பேட்டி @ விகடன்

http://i.ytimg.com/vi/a5HXKnP52rA/0.jpg 


1. 'மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 


 
''கண்டிப்பா 'எந்திரன்’தான். அந்தப் படம் பார்த்த உடனே இதை வெச்சு எப்படி எல்லாம் லொள்ளு பண்ணலாம்னு சும்மா ஜாலியாப் பேசினோம். ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கிற கதை. அதனால நிறைய புதுப் புது ஐடியாஸ் கிடைச்சது. அப்படி ஒரு ஷோ பண்ணா, கண்டிப்பா எந்திரன் 2.0தான் எங்க சாய்ஸ்!''



2. ''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''நேற்று... இன்று... நாளைனு போட்டு 'காமெடியன்கள்’னு மட்டும் போடுங்க. அதுதான் ரொம்ப சரி!


சினிமாவுல வடிவேலு, சந்தானம், அப்படி இப்படினு பேர் மட்டும்தான் மாறும். ஆனா, காமெடியன்கள் வந்துட்டேதான் இருப்பாங்க. நாளைக்கு யார்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்கிட்ட கேட்டா, எனக்கு மட்டும் என்ன ஆன்ஸர் பேப்பர் லீக் ஆகியிருக்குமா என்ன?''



3. ''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?'' 



''வேண்டாங்க... பெருசா சாதிச்ச சார்லி சாப்ளின் பட்டம் வெச்சுக்கிட்டாரா என்ன, லாரல்-ஹார்டி பட்டம் வெச்சுக்கிட்டாங்களா? மிஸ்டர் பீனுக்கு என்ன பட்டம் இருக்கு? சாதிச்ச யாருமே பட்டம் வெச்சுக்கலையே. அதனால, எனக்கும் பட்டம் வெச்சுக்கணும்னு ஆசை இல்லை. அப்போ நீ சாதிச்சுட்டியானு கோக்குமாக்காக் கேள்வி கேட்கக் கூடாது. அப்படிலாம் படத்துலதான் எங்களை நாங்களே டபாய்ச்சுக்குவோம்!''




4. '' 'இம்சை அரசன் 23ம் புலிகேசி’ இரண்டாம் பாகத்தில் நீங்கதான் ஹீரோவாமே... உண்மையா?'' 


''இதுவரைக்கும் எதுவும் உறுதி ஆகலை. பேசிட்டு இருக்கோம். எல்லாம் கூடி வந்தா பார்க்கலாம்!''  




5. ''குவார்ட்டர் இல்லாமல் உங்களால் சிரிக்கவைக்கவே முடியாதா?'' 


''எனக்கும் ஆசைதாங்க. ஆனா, 'குவார்ட்டர்’னு ஒரு டயலாக்கை ஆரம் பிச்சாதான் எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆடியன்ஸ் முகத்துல ஒரு சந்தோஷமும் மலர்ச்சியும் அந்த வார்த்தையைக் கேட்ட தும்தான் வருது. அட... காமெடி சீன் பிடிக்க டிஸ்கஸ் பண்றப்போ, அதைச் சொன்னாதான் கூட உட்கார்ந்திருக்குறவங்க முகத்துல ஒரு உற்சாகம் பொங்குது. அதனால 'புலி வால் பிடிச்ச கதையா, குவார்ட்டரை விட முடியலை. ஞாபகப்படுத்திட்டீங்க. அதனால, ஒரு குவார்ட்டர் காமெடி சொல்றேன்...


என் ஆபீஸ்ல ஒரு குவார்ட்டர் பார்ட்டி இருக்கார். அன்னைக்கு ஒரு பெரிய ட்ரீட். அவரையும் சாயங்காலம் ட்ரீட்டுக்குக் கூப் பிட்டு இருந்தோம். பார்ட்டிக்குப் போறதுக்கு முன்னாடி வார்ம்-அப் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கார். பவர்கட்டான நேரத்துல ஒரு கட்டிங்கைத் தேத்தி, ஃபிரிஜ்ல இருந்து தடவித் தடவி வாட்டர் பாக்கெட் எடுத்து மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு சத்தம் இல்லாம செட்டில் ஆகிட்டார்.


கரன்ட் வந்த பின்னாடி ஒரு நண்பர் வந்தார். அவருக்கு டீ போட்டுக் கொடுக்க ஃப்ரிஜ்ல பால் பாக்கெட் தேடுறோம். காணோம். அப்பத்தான் தெரிஞ்சது... 'வாட்டர் பாக்கெட்’னு நினைச்சு நம்ம தோஸ்த் பால் பாக்கெட்டை வெட்டி கட்டிங்ல மிக்ஸ் பண்ணியிருக்கார்னு. அவரை செம கலாய் கலாய்ச்சிட்டோம். நாங்க பார்ட்டி முடிஞ்சு வர்ற வரை அந்த கட்டிங் பார்ட்டி டாய்லெட்டைவிட்டு வெளியவே வரலை. சீதபேதி, வாந்தி பேதினு ஊர்ல இருக்குற அத்தனை பேதி யும் வந்து ஒரு காட்டு காட்டிருச்சு!''



6. ''தற்போதைய காமெடியன்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்?'' 


''இப்போ உள்ள காமெடியன்களில் எல்லாருமே எனக்கு நண்பேன்டாதான். யாரையும் குறிப்பா சொல்ல முடியாது. ஹாலிவுட் காமெடியன்களில் என் ஆல்டைம் ஃபேவரைட் மிஸ்டர் பீன்தான். சமீபத்தில் அவர் நடிச்ச ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரோட எக்ஸ்பிரஷன்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே அட்டகாச அட்ராக்ஷனா இருக்கும்!''

http://123tamilgallery.com/images/2010/09/telugu-actor-santanam-02.jpg



7. ''ஸ்கூல் நாடகங்களில் நடிச்ச காமெடி அனுபவம் சொல்லுங்களேன்?'' 


''நைன்த் படிக்கும்போது ஒரு நாடகம் போட்டோம். பூலோகத்துல இருந்து கிளம்பிப் போய் எமலோகத்துல இருக்குறவங்களை மாடர்னா மாத்துறதுதான் கான்செப்ட். எமன் வேஷம் போட்டவன் வேட்டி மாதிரி கட்டி, தலையில கிரீடம்லாம் வெச்சிருந்தான். அவன் உட்காரும்போது நான் சேரை இழுக்கணும். அவன் லேசா தடுமாறணும். அதை நான் ராங் டைமிங்ல பண்ணி சேரை முழுக்க இழுத்துட்டேன். அவன் விழுந்துட்டான்.


 தலைகுப்புற விழுந்த வேகத்துல, அவன் வேட்டி கிரீடத்துல சிக்கி, அவன் போட்டிருந்த ஓட்டை ஜட்டி அப்படியே எக்ஸ்போஸ் ஆகிருச்சு. நான் அவனுக்கு உதவி பண்றதா நினைச்சு, வேட்டியைக் கிரீடத்துல இருந்து பிடிச்சு உருவுறேன். மொத்த வேட்டியும் கையோட வந்திருச்சு. 'ஓட்டை ஜட்டி எமன்’னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் கிரீடத்தைத் தூக்கிப் போட்டுட்டு ஸ்டேஜ்லயே என்கூட மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டான். 'நான் என்ன பண்றது?’னு சமாளிச்சுப் பார்த்தேன். ஹூம்ம்... கோபம் குறையாமப் பல வருஷம் என்கூடப் பேசாமயே இருந்தான்!''



8. ''காமெடி நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?''   


''காமெடி நடிகர்கள் ஓட்டுப் போடலாம்தானே! அப்போ அவங்களுக்கும் அரசியலுக்கு வரத் தகுதி இருக்குதானே பிரதர்?! மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைச்சா, அவர் காமெடியனா இருந்தா என்ன... வில்லனா இருந்தா என்ன? ஆக்ச்சுவலி சினிமாவில் இருக்கும்போதே காமெடியன்ஸ் மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க!''



9. ''இந்தக் கேள்விக்கு மழுப்பாம, மறைக்காம பதில் சொல்லுங்க... நீங்க ஹீரோவா நடிக்கிற படத்துக்கு யாரை ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணுவீங்க?'' 


''சும்மாவே என்கூட நடிக்கிற எல்லா ஹீரோயின்களும்... 'வாங்க ஹீரோ சார்’னு கூப்பிட்டுக் கலாய்ப்பாங்க. இதுல நீங்க வேறயா? ஆனா, இதுவரை அவங்களே யாரும் 'நீங்க ஹீரோவா பண்ணப்போறீங்களா’னு கேட்டது இல்லை. அதனால, அவங்க யாரும் என் சாய்ஸ் இல்லை. என் ஆசைனு கேட்டா, கேத்ரீனா கைஃப்தான். ஆனா, அவங்க சம்மதமும் அதுல முக்கியம் இல்லையா? கேட்டுச் சொல்லுங்களேன்!''



10. ''விகடன் மேடையில் கராத்தே உடையில் உங்க போட்டோ பார்த்தேன். எத்தனை பெல்ட் வாங்கியிருக்கீங்க? எந்தக் கடையில் வாங்கு னீங்க?'' 


''நீங்க வாங்கின கடைக்குப் பக்கத்துக் கடையில வாங்கினேன்  நம்புங்க பிரதர்... கராத்தேல பிரவுன் பெல்ட் வரை வாங்கியிருக்கேன். இப்பவும் கராத்தே ஸ்டெப்லாம் ஞாபகம் இருக்கு. ரியல் லைஃப்ல ஒருத்தனைத் தூக்கிப் போட்டுலாம் மிதிச்சிருக்கேன். ஆனா, அப்போ கராத்தே கை கொடுக்கலைங்க. நாம பொறுமையா அந்த ஸ்டெப் போட்டுத் தாக்கறதுக்குள்ள நம்மளை அடிச்சுட்டுப் போயிருவாங்க.


 பழக்கதோஷத்துல நாம 'ஹோஸ்’னு குனிஞ்சு மரியாதை பண்ணும்போது, அவனுங்க பொக்குனு குத்திருவானுங்க. தெருச் சண்டை வேற விஷயம். இப்போ ரீசன்ட்டாகூட ஒருத்தன் குடிச்சிட்டு ரோட்டுல ஒரு பொண்ணைப் போட்டு அடிச்சுட்டு இருந்தான். வண்டியை நிறுத்தி சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கலை. நானும் ஃப்ரெண்டும் சேர்ந்து நாலு அப்பு அப்புனோம். அப்புறம்தான் அடங்குனான்.


 அப்பப்போ பசங்ககூட ஜாலியா ரெஸ்லிங் விளையாடுவேன். யார் முதுகு முதல்ல கீழ படுதோ அவங்க அவுட். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பார்ட்டிங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விளையாடினப்ப, விரல்ல லேசா எலும்பு முறிஞ்சிருச்சு. ஆனா, நிச்சயம் கராத்தே கத்துக்கிறது நம்ம தன்னம்பிக்கையைத் தாராளமா வளர்க்கும். உடல் வலுவைக் கூட்டுற விஷயம். அதுக்காகவே அதைக் கத்துக்கலாம்!''



11. ''உங்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகமா... ஆண் ரசிகர்கள் அதிகமா?''


''இப்போ சென்சஸ் எடுத்துட்டு இருக்காங்களே.... அவங்ககிட்ட சொல்லி அப்படியே இந்தக் கேள்விக்கும் பதில் வாங்கிருவோமா? என்ன பாஸ் இது விளையாடிக்கிட்டு இருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேருமே சமமாத்தான் இருக்காங்க. ஆனா, பசங்க பரவாயில்லை. தியேட்டர்ல விசிலடிச்சோ, கலாய்ச்சோ விட்ருவாங்க. நம்ம நம்பருக்கு ஒரு தடவை கூப்பிட்டு அதை நாம எடுக்கலைன்னா, கோபப்பட்டுவிட்ருவாங்க.


 ஆனா, சில பெண் ரசிகைகள் கால் பண்ணுவாங்க. எடுக்கலைன்னா, 'என்ன சார், கால் அட்டெண்ட் பண்ண மாட்டீங்களா?’னு ஒரு மெசேஜ் வரும். அதுக்கு ரிப்ளை பண்ண மாட்டேன். கொஞ்ச நேரத்துல 'நீ என்ன அவ்ளோ பிஸியா?’னு கோச்சுப்பாங்க. அப்புறம் 'போடா வெண்ணெ’னு ரொம்பக் கோபமா அனுப்புவாங்க. நான் எதுக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். எல்லா ரசிகர்கள்கிட்டவும் பேசணும்னு ஆசைதான். ஆனா, எவ்ளோ பேர்கிட்ட பேச முடியும்?''


- அடுத்த வாரம் 


http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/592235_156557197698928_2040420322_n.jpg


''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 


''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு... ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட் சொல்லுங்களேன்? 


டிஸ்கி - 1
- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html





7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

இங்கேயும் நான்தான் முதல் காமெடியனா?

MANO நாஞ்சில் மனோ said...

குவாட்டர்லதான் முகமலர்ச்சியே இருக்கா...?

rajamelaiyur said...

பகிவுக்கு நன்றி ..தல

rajamelaiyur said...

இன்று

தமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ?

தமிழ்மகன் said...

கூகுள்" தரும் தகவல் வகைப்படுத்தல் - http://mytamilpeople.blogspot.in/2012/05/google-introducing-knowledge-graph.html

”தளிர் சுரேஷ்” said...

நல்ல பகிர்வு!

சேகர் said...

super comedy...