Showing posts with label SANTHANAM. Show all posts
Showing posts with label SANTHANAM. Show all posts

Friday, September 19, 2014

அரண்மனை - சினிமா விமர்சனம்


 தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹிட் பேய் சினிமா ஜெகன் மோகினி.பின் முனி காஞ்சனா, ,சந்திரமுகி,யார்?,யாமிருக்கபயமே.திகில் கம் பேய்ப்படங்க்க்ளுக்கு எப்போதும் மினிமம் கேரண்டி உண்டு.உருட்டுக்கட்டை காமெடி ஸ்பெசலிஸ்ட்டான சுந்தர் சி முதன் முதலாக திகில் கம் பேய்ப்படத்துக்கு வந்திருக்கார்.எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்குன்னு பார்ப்போம்.


பேய்ப்படத்துக்கு எப்பவும் ஒரே கான்செப்ட் தான். ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு வீடு அல்லது பங்களாவுக்கு  யாராவது குடி வருவாங்க.அங்க ஒரு பேய் குத்த வெச்சுக்காத்திருக்கும்

கோவை சரளா அரண்மனை வாரிசு.   அரண்மனைல இருக்கும் வேலைக்காரனான மனோபாலாவை இழுத்துக்கிட்டு  ஓடிடுது.ஆளைக்கண்டுபிடிச்சு மாளிகைக்கு கூட்டிட்டு வராங்க.

 அங்கே ஜமினின் மத்த வாரிசான ஆண்ட்ரியா புருசன் வினய்  கூட  இருக்காரு

அந்த  மாளிகை ல ஏதோ பேய் நடமாட்டம்  இருக்கு . காமெடி வேணுமேங்கறதுக்காக  சந்தானம் ஆஜர் ஆகறாரு . பேயைக்கண்டு பிடிக்கும் வக்கிலா  சுந்தர்  சி  வர்றாரு.


இவங்க  பண்ணும்  காமெடி அலப்பறைகள்  தான்  இடைவேளை வரை . 


ஃபிளாஸ் பேக் 

வினய் யை காதலிக்கும்  ஹன்சிகா  ஊர்ப்பெரியமனுஷங்க  செய்யும்   கோயில்   கொள்ளையைப்பார்த்த  சாட்சி . அவங்க  4 பேரும்  சேர்ந்து   ஹன்சிகாவைக்கொலை பண்ணிடறாங்க . 

ஹன்சிக  பேயா  மாறி வர்றதுக்குள்ளே   வினய்க்கு ஆண்ட்ரியா  கூட மேரேஜ் ஆகிடுது . 

 சூரிய  கிர\ஹணத்து அன்னைக்கு வினய் கூட பேய் “சேர்ந்தா”   நிரந்தரமா   அவர்  கூடவே  இருக்கலாம். இதுதான்  பேயோட  பிளான் . 


காசா? பணமா? 2 பேரும் சேர்ந்துட்டுப்போறாங்கன்னு விடாம  கொஞ்சம்  கூட  மேனர்சே  இல்லாம   பூசாரிங்க   கூட சேர்ந்து   சுந்தர்  சி எப்படி அந்த   கில்மா  பிராசஸ் சை தடுக்கறார்?  என்பதுதான்   க்டுப்படிக்கும்  க்ளைமாக்ஸ் ( சிரிப்புதான் . கில்மாவை யார்  எங்கே எப்போ  தடுத்தாலும்   நாம  கடுப்பாகிடுவோம் . சீன் போச்சே? ) 


சந்திர  முகி படம் எனும்   மயிலைப்பார்த்து   வான் கோழி    ஆட்டம்  போட்ட கதை  தான் . ஆனா   வான் கோழி  காமெடி ல பழம்  தின்னு   கொட்டை  போட்ட சுந்தர்  சி என்பதால் ஏ பி சி  என எல்லா  செண்ட்டர்ல யும்  மீடியம்   ஹிட் ஆகும் அளவு  குவாலிட்டி 

ஹீரோவா   வினய் . இவர்  ஆண்ட்ரியா  , லட்சுமிராய்  , ஹன்சிகா    என   3   ஹிரோயின்களோடு  சுத்துவது  , கமெண்ட்  அடிப்பது  எல்லாம்  நம்மைக்கடுபடிக்கிறது  (   யாரோ   ஒரு பொண்ணு  கூட  ஒருத்தன்   கடலை  போட்டாலே   தமிழன்  கடுப்பாவான் . அட்டர்   டைம்ல  3  பேர்   கூட   கடலை  போட்டா? ) 


லட்சுமிராய்  இந்தப்படத்துக்கு   ஊறுகாய்  மாதிரி . சும்மா  வந்துட்டு காட்டிட்டுப்போகும்   ஷோ கேஷ்  கேரக்டர் . சும்மாவே  பாப்பா காட்டு காட்டுனு காட்டும் . கிளாமர்  ரோல்-னா  கேட்கனுமா?  பின்னுது . 


ஹன்சிகா  தான்ன் பின்  பாதி  நாயகி .   ரொம்ப  பாவமான   கிராமத்து  கேரக்டர் .  நோ  கிளாமர்  . அய்யோ  பாவம் .  ஒரு வேளை  சிம்பு  கண்டிஷன்  போட்டிருப்பார்  போல . காத்துல   கூட  முந்தானை  விலகலை . அட போங்கப்பா


 லிப்  லாக்  லெஜ்ண்ட்   ஆண்ட்ரியா  தான்   படத்தின்   மெயின் குயின் . குற்றாலத்துல    மெயின் ஃபால்ஸ்  மாதிரி  . பேயாக   மாறியதும்   அவர்  நடிப்பு  பிரமாதம் . அதுவும்  க்ளைமாக்சில்    வினயை  ரேப்ப அவர் எடுக்கும்   முயற்சிகளுக்கு  ஆடியன்சிடையே அமோக ஆதரவு . ஆ ஆ அப்படித்தான்   விடாதே   ரேப்பு ரேப்பு  அப்டிங்கறாங்க . அய்யோ ராவணா !! 


காமெடி  சூப்பர்  ஸ்டார்  சந்தானம்  தான்   படத்தின்   ரிலாக்ஸ் க்கு . படம்  நெடுக   வந்து   பஞ்ச்  பேசறார் , அங்கங்க  சூரிக்கு  கவுண்ட்டர்  தர்றார் 


படத்தில்   2 பாட்டு  சுமாரா  இருக்கு .இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   சுந்தர் சி , வினய் , ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய்  சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், இயக்குனர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், , சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளத்தை சரியாக வேலை  வாங்கியது


காமெடி சூப்பர்  ஸ்டாரான சந்தானம் இதுல ஒரு ரோல் பண்ணி இருப்பது படத்தின் பெரிய +.


3 அரேபியன் குதிரை  என வர்ணிக்கப்படும்  லட்சுமிராய் வரும் காட்சிகள் எல்லாம் திகிலால் பயந்த ரசிகனுக்கு பஞ்சாமிர்தம் சாப்பிட்டதிருப்தி

4   போஸ்டர்   டிசைன்  , டி வி  ப்ரமோ  என   அனைத்து  மார்க்கெடிங்  உத்திகளும்  ஓக்கே ரகம் 
இயக்குநரிடம் சில கேள்விகள் 

1   நீண்ட நாட்களாகப்பூட்டப்பட்ட  பங்களா வில்   புறாக்கள்  பறப்பது  எப்படி ? 


2  சந்தானம்  அண்ட்  கோ   மாளீகை வெளில  எல்லார்ட்டயும்   பேசிட்டு இருக்கும்போது   பகல் . சூரிய  வெளிச்சம் . அப்பவே அப்படியே   கேமரா   அரண்மனை  உள்ளே  போகும்போது  இருட்டு ஆல் லைட்ஸ் ஆன். எப்படி?


3  கோடிக்கணக்கான      சொத்துக்கு  வாரிசான  ஜமீன் பார்ட்டி  வில்லன் சரவணன்  எப்படி  சாதா  நோக்கியா 1100 மாடல் போன் வெச்சிருக்கார்  ? 


4   படத்தில்  உள்ள அனைவருக்கும்    ஆண்ட்ரியா  உடம்பில்  ஹன்சிகா  பேய்  இருக்குனு தெரியுது. ஆனா   காதலன் வினய்க்கு மட்டும்  தெரியலையே? எப்படி ? 


லிப் லாக்  லெஜெண்ட்  பேய் ஆண்ட்ரியா விடம் சில  கிளு  கிளு கேள்விகள் 1 . ஏம்மா   ஜெகன் மோகினி . ஹன்சிகாவா  இருக்கும்போது   உன்னை  கொலை பண்ணிட்டாங்க  செத்துட்டே . ரைட் . பேயா மாற 2 வருசம் ஆகுமா? வினய்க்கு மேரேஜ் ஆகும்போது ஏன் தடுக்கல?


2   வினயை  அடையனும்க்றதுதான்  உங்க  லட்சியம்னா ஆண்ட்ரியா வா  சத்தம்  இல்லாம  மேட்டரை  முடிக்காம  ஏன் ஆர்ப்பாட்டம்  பண்ணி     காட்டிக்குடுக்கறிங்க ?


3   வந்த  வேலையே   வினயை  ரேப் பண்றதுதான் . அதுக்கு அதிக பட்சம்  10 நிமிசம் ஆகுமா? எதுக்கு   மெனெக்கெட்டு அத்தனை நாள் அந்த  பங்களாவில்  தங்கி  எல்லாரையும் பயமுறுத்திட்டு  இருக்கே? 4  பேயா  வரும்போது    கோயில் உள்ளே  போக  முடியலை . ரைட்டு . ஆனா  குங்குமம் மட்டும்  வெச்சது எப்படி ? 

மனம் கவர்ந்த வசனங்கள்

பாட்டிக்கு ஸீரியஸ்.ஆம்புளன்ஸ்க்கு போன் போடு.
சந்தானம் =108  க்கு போன் போட்டா ஏண்டா 1008 தடவை  இம்சை பன்றீங்கங்கறாங்க

சந்தானம் டூ மனோபாலா = முருங்கைக்காய் சாப்ட்டா மூடு வரும்பாங்க.முருங்கைக்கா மாதிரி இருந்துட்டு  மூடு வந்தவனை இப்போதான் பாகறேன்

எல்லாரும்  காதலிச்சு பைத்தியம் ஆவாங்க இவன் பைத்தியம் ஆகி   இப்ப லவ் பண்றான் -,சந்தானம் டூ மனோபாலா

லட்சுமிராய் = அத்தை.பின்னால கொஞ்சம் பாருங்க
கோவை சரளா = கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு
அய்யோ.என் பின்னால் இல்ல.எனக்குப்பின்னால் பாருங்க

மனோபாலா = எல்லாரும்  நினைக்கற மாதிரி நான் சண்டை போட கம்பெடுக்கலை.நிக்க முடியல.ஒரு சப்போர்ட்டுக்கு இந்த கம்பு

சுந்தர் சி = சாப்பிட என்ன இருக்கு?
சந்தானம் = குஷ்பூ இட்லி இருக்கு

சந்தானம் பஞ்ச் = கெட்ட பையன்  சார் இந்த  பால் பாண்டி

சந்தானம்  உள்குத்து பஞ்ச் டூ சூரி
=,இவன்லாம் எனக்கு காம்ப்ப்ட்டிசனே கிடையாது.ஏதோ கேப் ல வந்துட்டான்

உலகத்துல இருக்கற எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு வீக் பாய்ன்ட் இருக்கும்

லட்சுமிராய் = இங்கே பாத்ததை வெளில சொல்லிட மாட்டியே?
சந்தானம்.=,சத்தியமா சொல்ல லை்.டவுட்னா நீ கட்டி இருக்கும் டவலை கழட்டிப்போடு.தாண்டறேன்

காதல் விசயத்துல மட்டும் நீ கஜினி முகமதா மாறனும்
சந்தானம் =மாயா இந்து தானே? நான் ஏன் முஸலீம் ஆகனும் ?

சந்தானம் = என் பாட்டி சாதா பாட்டி அல்ல????
ஜமீன் தார்க்கு வைப்பாட்டி

சந் = குழந்தைக்கு பாடம் சொல்லித்தாடான்னா  கிட்டப்பார்வைனு அளப்பே.இப்ப்போ 500 அடி தொலைவில் நிற்கும் பிகரோட இடுப்பு மச்சம் மட்டும் தெரியுதா?

சந் = டேய்.என்னடா பண்றே?
காதலி மேல கல் எறிஞ்சு விளையாடறேன்
சந் = அவ என்ன குளமா? கிணறா?,கல் போட்டு விளையாட?

பேயைப்பாத்தா செவுள் ல அடிப்பேன்னியாமே?
சந் = அய்யோ.இல்லீங்.பந்தைக்கூட சுவத்துல அடிச்சது இல்ல.என்னை விட்டுடுங்க
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  

சிவப்பு பனியன் போட்ட லட்சுமிராய் ஓப்பனிங் அசத்தல்கள் 

வினய் தான் ஹீரோவாம்.அதைக்கூட ஜீரணிச்சுக்கலாம்.ஜோடி லிப் லாக் லெஜெண்ட்  ஆன்ட்ரியா.அய்யய்யோ

காரைப்பல் கட்டழகர் வினய்  சிரிக்கறாரு.அடடே

அரண்ம்னை = லட்சுமிராய் ,ஆன்ட்ரியா கிளாமர் ,சந்தா னம் காமெடி ,மனோபாலா காமெடி யுடன் கலகலப்பான இடைவேளைசி பி கமெண்ட்-அரண்மனை - முன் பாதி  காமெடி  , பின் பாதி கதை , கிளாம்ர். ஏ பி சி  யில்  மீடியம்  ஹிட் - விகடன்  மார்க் = 41  , ரேட்டிங்க் =  2.5 /5எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41

குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =    2.5 /  5
  

நெய்வேலி  மகாலட்சுமியில்  படம் பார்த்தேன்


ஆடாம ஜெயிச்சோமடா  - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2014/09/blog-post_28.html

 a
a


 a

a
Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

பொதுவா பொண்ணுங்க பொசுக் பொசுக்னு புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க .ஹீரோவோட அக்கா  தன் வீட்டை எதிர்த்து செஞ்சுக்கிட்ட லவ் மேரேஜ்லயும் சின்ன விஷயத்துக்கு  கோவிச்சுக்கிட்டு மதுரையில்  இருக்கும் அம்மா வீட்டுக்கு வர அக்கா வீட்டுக்காரரை சமாதானப்படுத்த கோவை  போறாரு ஹீரோ . 


 எதிர் வீட்டில் ஹீரோயின் . பார்த்ததும் கட்டுனா இவளைக்கட்டனும் ,இல்லைன்னா கட்டினவன் காலை த்தொட்டுக்கும்பிடனும்னு முடிவு பண்ணி ரூட்  விட்டுட்டு இருக்காரு 


 ஹீரோயின் கூடவே  ஒரு ஃபிரண்ட் கழுகு மாதிரி சுத்திட்டு இருக்கான்.  எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு அவன் வெயிட்டிங்க் . ஹீரோ அவனைப்பத்தி எச்சரிச்சும்  ஹீரோயின் நம்பலை . பொதுவா பொண்ணுங்க நல்லவனை நம்ப மாட்டாங்க .


இவங்க 2 பேர் காதல் சக்சஸ் ஆச்சா? என்பதை காமெடி , ஃபேமிலி செண்டிமெண்ட் ஸ் கலந்து சொல்லி  இருக்காரு  சுந்தர பாண்டியன் இயக்குநர்  ஹீரோவா உதயநிதி ஸ்டாலின். இவர் தான் தயாரிப்பாளரும்  கூட . இவர் கிட்டேப்பிடிச்சதே தான் ஒரு தயாரிப்பாளரா இருந்தும்  கூட இந்த  பஞ்ச் டயலாக் , ஓப்பனிங்க் பில்டப்  சீன் எல்லாம் வைக்காம எதார்த்தமான கேரக்டர்ல வருவது  தான் . சபாஷ் . முதல் படத்தை  விட நல்ல முன்னேற்றம் . பாடல் காட்சிகளில் நடன அசைவுகளில்  சமாளிக்கிறார். டயலாக் டெலிவரியும்  ஓக்கே. சில காட்சிகளீல்  காமெடி  கூட ட்ரை பண்ணி  இருக்காரு . 


 ஹீரோயின் நயன்  தாரா .மாமழை போற்றும் , பல  மாநிலம் ஏற்கும், மாநிற அழகி .  குடும்பப்பாங்கான தோற்றத்தில்  யாரடி  நீ மோகினி யில் வந்தவர் அதே பாணியில்  கண்ணியமாக வந்து  போகிறார். நடிப்புக்கான  ஸ்கோப் கம்மி என்றாலும்  வந்தவரை  ஓக்கே . பாடல் காட்சிகளில் கோடம்பாக்க விதிகளின் படி  கிளாமர்  டிரஸ் .


 ஹீரோவுக்கே உண்டான பில்டப்புடன் அரங்கம் அதிரும் கரகோசத்துடன் ஓப்பனிங்க் சாங்குடன் வரும் சந்தானம் இதில்  வழக்கம் போல்  ஹீரோவுக்கு நண்பன் . காதலுகு ஐடியா  குடுக்கும் ஐடியா அய்யா சாமி.  ஓக்கே ஓக்கே வில் 117  ஜோக்குகளுடன் கலகலப்பு  ஊட்டியவர் இதில் 47 ஜோக்ஸ் உடன் நிறுத்திக்கொண்டதுக்குக்காரணம் இயக்குநர்  ஃபேமிலி எண்ட்டிமெண்ட்ஸ்க்கு காட்சிகள் ஒதுக்கியதே . இவருக்கு  ஒரு ஜோடியும் உண்டு 


 தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி  ஹீரோயின்  தோழியாக வரும் கேரளா பொண்ணு  ஹீரோயினை விட அழகாக இதிலும்  இருக்கார் . இவர் சந்தானத்துக்கு  ஜோடி . இவர்களுக்கு ஒரு பாட்டு  சீன் வெச்சிருக்கலாம் , ஜஸ்ட்  மிஸ்டு 


மயில் சாமி க்ளைமாக்ஸ்  டிராமா மிமிக்ரிக்கு வர்றார் . ஓக்கே . படத்தில் வரும்  கேரக்டர்  ரோல்ஸ் எல்லாரும் நல்லா பண்ணி இருக்காங்க . குறிப்பா சரண்யா வெரிகுட். ஹாரிஸ்  ஜெயராஜ்  இசை   மெலோடி சாங்க்ஸ் ஆக போட்டிருக்கார். எல்லாம் ஓக்கே . ஆனா பின்னணி  இசை  ரொம்ப சாதாரணமா  இருக்கு . ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . கதைக்களம் கோவை , மதுரை என்பதால்  பரிச்சயமான இடங்களைப்பார்ப்பது  கொங்கு மண்டல ரசிகர்களுக்குப்பிடிக்கும் 

ஒரு பாடல் காட்சியில் ( அன்பே அன்பே ) தாமரைக்குளத்தில்  தாமரை  இலை  மீது  சிட்டுக்குருவி நிற்பது கண் இமைக்கும் நேரத்தில்  மின்னி மறையும் ஓவியக்காட்சி , பிரமாதம் 


 நச் டயலாக்ஸ் 


1/.  நடை சாத்துன பிறகு கோயிலுக்குப்போலாம்னு கூப்பிடறதும் ,கடை சாத்துனபின் கட்டிங் அடிக்கலாமா?னு கூப்பிடறதும் உன் பழக்கம்டா #,சந்தானம்இப்பவெல்லாம் பொண்ணுங்க பொய்யா கவிதை சொல்றவனைத்தான் நம்புதுங்க # சந்தானம்3 பொண்ணுங்க புடவை மாத்தத்தான் லேட் பண்றாங்க.டக் டக் னு பையனை ஈசியா மாத்திடறாங்க - சந்தானம்4 புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கனும் ,பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கனும் # சந்தானம்


5வேற ஒருத்தன் உஷார் பண்ணின பொண்ணுங்க ளைக்கூட கரெக்ட் பண்ணிடலாம் , ஆனா எப்பவும் உஷாரா  இருக்கும் பொண்ணை கரெக்ட் பண்றது  ரொம்ப கஷ்டம்


 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 1. தமிழ் நாட்டின் அடுத்த சி எம் மே! னு ஒரு குரல் # நயன் தாரா இன்ட்ரோ # இது கதிர் வேலன் காதல்2 பகுத்தறிவுப்பகல்வர் தமிழ் இனத்தலைவர் பேரன் ஆஞ்ச நேய பக்தராக ஓப்பனிங் சீன் லயே சாமி கும்பிடற இன்ட்ரோ # தமிழா தமிழா3 அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் சந்தானம் இன்ட்ரோ.ஓப்பனிங் சாங் உடன் .பல்லாக்கு தேவதை # இ க கா4 நயன் வரும்போதெல்லாம் மெல்லிய இசை # ஹாரீஸ் ராக்ஸ்


5  ஹலோ டைரக்டர் சார்.எந்த கேரளா பிகர் சந்தனக்கலர் ஜரிகைக்காட்டன் சேலைக்கு சம்பந்தமே இல்லாம சிவப்பு ஜாக்கெட் போட்டதைப்பாத்தீங்க?6  இயற்கை தேவதை அளித்த அழகிய புருவத்தை ட்ரிம் பண்ணி அழகைக்குறைப்பது ஏனோ? #நயன் ன் திருத்தப்பட்ட புருவம்7 டைரக்டர் கம்யூனிஸ்ட்டா? எல்லா லேடி கேரக்டர்சும் சிவப்பு ஜாக்கெட்டா போட்டுட்டு வராங்க?8 திருடா திருடி மன்மதராசா டான்ஸ் ஸ்டெப் எல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. உதயநிதி சார்.9 இது கதிர் வேலன் காதல் @ இடை வேளை .இதுவரை டைம் பாஸ்.ஓகேஓகே பாகம் 2 ,ம் ம்


10  ஹீரோயின் நயனை விட தோழியா வரும் கேரளா பிகர் 10 மார்க் கூட


11 ஹாரீஸ் இசையில் எல்லாப்பாட்டும் மெலோடி.நல்லா தான் இருக்கு.ஆனா தியேட்டர்ல கத்தறாங்க # தமிழேண்டா ஏண்டா?


சில  கேள்விகள் 1.  மயில் சாமி மிமிக்ரி டிராமா   ரொம்ப ரொம்ப நாடகத்தனமா  இருக்கு . என்ன தான்  எதிர்  வீடுன்னாலும்  இந்த  வீட்டு  ஹால் ல பேசுவது அங்கே கேட்பது , மனம் மாறுவது  நம்ப  முடியல ( ஆனா ஆடியன்ஸ்  ரசிக்கறாங்க )


2  கூடவே  ஒரு வருசமா பழகிட்டு வர்ற ஆள் பார்வை , நோக்கம் பற்றி  நயனுக்குத்தெரியாம  இருக்குமா? பொண்ணுங்களுக்கு இயற்கையாகவே  ஒரு விழிப்புணர்வு , ஜாக்கிரதை உணர்வு இருக்குமே?


3 சும்மா கரெக்ட் செஞ்சா போது , நோ லவ் நோ மேரேஜ்-னுஇருக்கும்  வில்லன்  நயனுக்கு  ஈசியா  போதை மருந்து கலந்து  கொடுத்தோ, மயக்க மருந்து  செலுத்தியோ  எண்ணத்தை  நிறைவேற்றி   இருக்கலாமே? ஏன்  அழகிரியைத்துரத்தி  விட்டு கேப்டனுக்கு தூண்டில் போட்ட கதையா சுத்தி வளைக்கனும்  ?
சி பி கமெண்ட் - இது கதிர்வேலன் காதல் - ஓகே ஓகே  2 +  செண்ட்டிமெண்ட்ஸ், சராசரிக்காதல் கதை , லேடீஸ்க்குப்பிடிக்கும் எதிர்பார்க்கும் விகடன் மார்க் =41 ,ரேட்டிங் =2.75/5


 குமுதம் ரேங்க்கிங் = ஓக்கே


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

Friday, June 14, 2013

தீயா வேலை செய்யனும் குமாரு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaxiyKaqNX92IP6Yoq5b8cPQYPrEFQKnes6LCLIi1xR586vHMe4MZuUVgn3pyuRhoQWPO2eahBqH-o6QOGPe4xU4OAdRxFeS9jctlQhURpfkrbjANcO-3qkI64-jhLPBlxnMOvRa8hsBO7/s1600/Theeya+Velai+Seiyyanum+Kumaru+Movie+Latest+Posters+cinesandadi+(2).jpg

உண்மையா லவ் பண்றவனை இந்தக்காலப்பொண்ணுங்க ஏத்துக்க மாட்டாங்க. பிளான் பண்ணி தில்லு முல்லு , கோல்மால் பண்ணி திட்டம் போட்டுக்கவுக்கறவங்களுக்குதான் காலம். இதுதான் படத்தோட  ஒன் லைன் . 

ஒரு கல் ஒரு கண்ணாடி கான்செப்ட் ல  வடிவேலுவின் தங்கச்சி பேக்கரி காமெடியை மிக்ஸ் பண்ணி ஒரு உல்டா திரைக்கதை அமைச்சா அதுதான் தீ வேசெகு.

ஹீரோ சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க எதுவும் செட் ஆகாம வளர்ந்தவன் ( கவனிங்க , ப்ளூரல்) பெரியவன் ஆனதும் ஒரு நல்ல ஃபிகரா கரெக்ட் பண்ண வீணாப்போன ஐடியா அய்யா சாமி கிட்டே ஐடியா கேட்டு கேட்டு லவ் பண்றாரு. ஆல்ரெடி வேற ஒரு கொலீக் லவ் பண்ற ஹீரோயினை பிளான் போட்டு தன் பக்கம் இழுக்கறாரு. 

 இந்த இடத்துலதான் ஒரு ட்விஸ்ட். அந்த ஐடியா கொடுத்த அய்யாசாமியோட தங்கச்சி தான் ஹீரோயின்.இப்போ அவர் ஹீரோவுக்கே வில்லன் ஆகறாரு. எப்படி கலாட்டாக்கள் நடக்குது என்பதுதான் காமெடி கலக்கல் திரைக்கதை, சுந்தர் சி ராக்ஸ். 

http://static.sify.com/cms/image/ndmsI2afegj_medium.jpg


படத்தோட ஹீரோ சித்தார்த் அப்டின்னா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையானு தீவிர சந்தானம் ரசிகர்கள் எல்லாம் கொலை பண்ண வந்துடுவாங்க, அதனால உண்மையை ஒத்துக்கறேன். ஹீரோ சந்தானம் தான். அவர் வரும் ஓப்பனிங்க் காட்சி ரஜினி , அஜித் , விஜய் ரேஞ்சுக்கு தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது. ஸ்லோ மோஷன்ல பைக்ல வர்ற முத சீன்ல இருந்து க்ளைமாக்ஸ் வரை அவரோட ஆட்சி தான். 

இந்தப்படத்துல சந்தானத்தின் சொந்த டயலாக்ஸ் கம்மி. சுந்தர் சி யின் ஸ்கிரிப்ட் ல என்ன இருக்கோ அதைத்தான் பெரும்பாலும் பேசி இருக்காரு. ரசிக்க வைக்குது. ஆங்காங்கே கவுண்டமணி மாதிரி கவுண்ட்டர் டயலாக்ஸ் அடிக்கவும் தவறவில்லை. வெல்டன் சந்தானம் . 


 இரண்டாவது ஹீரோ சித்தார்த். விளக்கெண்ணெய் வடியும் முகம். நல்ல பர்சனாலிட்டி என பெண்களால் கொண்டாடப்படும் இவர் ஏன் இப்படி உம்மனா முகமா வர்றார்னு தெரியலை . சந்தானத்துடன் காம்பினேஷன் காட்சிகள் வரும்போது இவர் டம்மியாகத்தெரிவது இவர் தவறல்ல . ஆனானப்பட்ட ஆர்யாவுக்கே நேர்ந்த கதிதான் ( பாஸ் எ  பாஸ்கரன்)

Hansika Motwani hot photos (29)


 பாடல் காட்சிகளில் , சின்ன சின்ன நடன அசைவுகளில் இவர் பம்மல் கே சம்பந்தம் கமல் மாதிரியும்  , இதய தாமரை கார்த்திக் மாதிரியும் இமிடேட் பண்ணி இருப்பது அப்பட்டமாதெரியுது .  இவர் சொந்த சரக்கே போதும், எதுக்கு இந்த எச்சுப்பண்ணாட்டு? 

ஹீரோயின் ஹன்சிகா மெத் மெத்வா நீ வாணி ( வாணி தேனி வா நீ! # கவித கவித ) கொழுக் மொழுக் சந்தன பொம்மை .சும்மா சும்மா குலுங்கி குலுங்கி நடப்பதும் , கெக்கே பிக்கே என சிரிப்பதும் தான் இவர் வேலை , அதுக்கே சம்பளம் 75 லட்சம் ரூபா. தொப்பை விழுந்துடுச்சுன்னு பக்கத்து சீட்காரர் சொன்னார். நான் கவனிக்கலை . பொண்ணுங்களை கழுத்துக்குக்கீழே நாங்க பார்க்கறது இல்லை . 


இவங்க 3  பேரைச்சுத்தித்தான் கதை நகருது என்பதால் ஆங்காங்கே ஓக்கே ஓக்கே சாயல் அடிப்பதை தவிர்க்க முடியலை . அது தெரிஞ்சே தான் சுந்தர் சி அந்த ஃபிளாஸ்பேக் சீன்ல சந்தானம் தங்கச்சி தான் ஹன்சிகா என்ற ட்விஸ்ட்டை வெச்சிருக்கார் போல . இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1. வீட்டோட மாப்ளையa வரும் பாஸ்கி ஓப்பனிங்க் சீன்ல  மனைவியை காரில் ஏற்றும் சஸ்பென்ஸ் காட்சி கலக்கல் காமெடி 


2. சித்தார்த்தின் பப்பி லவ் ஸ்டோரியில் அவரைப்போன்ற முகச்சாயலுடன் ஒரு பையனை அச்சு அசலாய்த்தேர்ந்து எடுத்தது 


3. டப்பா ஸ்கூட்டரில் ஹீரோவை ஏற்றிக்கொண்டு பாஸ்கி சொதப்பும் சீன் உழைப்பாளி ரஜினியின் காமெடியை சுட்டிருந்தாலும் ரசிக்கலாம் 


4. படம் முழுக்க அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கும் சந்தானம் பிராண்ட் மொக்கை காமெடி வசனங்கள் . 64  ஜோக்ஸ் தேறுது . தியேட்டரில் 18 இடங்களில் செம அப்ளாஸ் . படம் நெடுக சிரிப்பலைகள் வந்துட்டே இருப்பது பெரிய பிளஸ் 


5. சந்தானம் ஃபிளாஸ்பேக் காட்சியில்  சிவாஜியை இமிடேட் செய்வதும் , அந்தக்கால பாட்டை பின்னணியில் ஒலிக்க விடுவதும் லொள்ளு சபாவில் ரசிக்க வைத்த டெக்னிக் , எடுபடுது , ஓக்கே 


6. சேட்டை பட விமர்சனத்தில் கிழி கிழி என கிழித்த ரேடியோ ஜாக்கியை சமார்த்தியமாக ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தது  ( அவர் விமர்ச்னத்துல இதை நல்லாலைன்னு சொல்ல முடியாது ) 

7. நட்புக்காகவோ , வேற எதுக்காகவோ மெழுகு ஃபிகர் சமந்தாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தது . விஷால் கூட ஒரு சீன்ல வர்ராருப்பா..


8. சூது கவ்வும் இயக்குநர்  நலன் குமார சுவாமியை படத்தின் திரைக்கதை வசனத்தில் உதவி பெற்றது


9.  தக்காளி பாடல் காட்சியில் ஹன்சிகாவுக்கு  மேக்சிமம் கிளாமரை வர வைத்தது  


10 டி வி விளம்பரங்களில் , க்ளிப்பிங்குகளில் நல்ல புரோம்மோ குடுத்தது 
இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் ஹன்சிகாவிடம் முதன் முதலில் பிரப்போஸ் பண்ணும் ஆஃபீஸ் கொலீக்கின்  செல்ஃபோனை சந்தானம் திட்டப்படி ஆஃபீஸ் பொண்ணு வாங்கி அந்த ஃபோன்ல ஹன்சிகாவின் பெயரை டெலீட் பண்ணி ஃபிகர் நெம்பர் 6 அப்டினு மாத்திடுது . அது அந்த கொலீக்குக்கே தெரியாமல் போவது எப்படி? அடிக்கடி ஹன்சிகாவுக்கு அவர் ஃபோன் பண்ணும்போது மானிட்டரில் டி்ஸ்பிளே ஆகி இருக்குமே? 2. ஹன்சிகா எதெச்சையாய் அவர் கிட்டே ஃபோனை வாங்கி தன் நெம்பருக்கு கால் பண்ணும்போது ஃபிகர் 6 என வருவதைப்பார்த்து வெறுப்பது நம்பவே முடியலை . அப்படி அவர் பண்ணி இருந்தா ஹன்சிகாவிடம் செல் ஃபோனை தருவாரா? தத்தி ஹீரோயின் யோசிக்கலையா? 


3. என் ஃபோனை காணோம் , உங்க செல்லுல இருந்து ரிங்க் விடுங்க என்றதும் பொதுவா நாம தான் ரிங்க் விடுவோம். இப்படி யாராவது தன் ஃபோனைக்குடுப்பாங்களா? 


4. முதல் காட்சியில் தனிமையில் ஆஃபீஸ் கொலீக் ஹன்சிகாவிடம் லவ் பிரப்போஸ் பண்ணும்போது ஹன்சிகா “ யோசிக்க டைம் வேணும்”கறார், அடுத்த காட்சியிலேயே ஒரு பார்ட்டியில் எல்லோர் முன்னும் லவ் பிரபோஸ் பண்ணும்போது ஓக்கே சொல்றார். எப்படி? நேத்துத்தானே சொன்னேன், டைம் வேணும்னு அப்டினு ஹீரோயின் ஏன் கேட்கலை? 

5. தன்னிடம் லவ் பிரப்போஸ் பண்ணின ஆஃபீஸ் கொலீக் நல்லவர், ஹீரோவின் சதியால் தான் அப்படி ஆச்சு என்றதும் ஹீரோயினுக்கு அவர் மேல் சிம்ப்பதியும் வர்லை , அவர் கிட்டே மன்னிப்பு கேட்கவும் தோணலை, ஏன்? 


6. அண்ணன் தங்கச்சி செண்ட்டிமெண்ட் காட்சியில் கூட ஹன்சிகாவுக்கு லோ கட் ஜாக்கெட்டில் குனியும் காட்சி , ஒரு ரசனையே இல்லாம  மனதில் நின்ற காமெடிகளில் நினைவில் நின்றவை 


1. இந்தக்காலத்துப்பொண்ணுங்களை காமெடியா ஏமாத்த முடியாது.சீரியசாத்தான் ஏமாத்தனும்2. தட்டுல அல்வா விழுந்தாலும் ,ஐஸ்க்ரீம் விழுந்தாலும் யோசிக்காம நக்கிடனும்


3. காசு இருக்கற யார் வேணாலும் போட்டுடலாம் நிலத்துக்கான பட்டா. ஆனா எல்லாருக்கும் கிடைச்சுடாது இந்த துப்பட்டா


4. நாகூர் பிரியாணி உளுந்தூர்ப்பேட்டை நாய்க்குத்தான் கிடைக்கனும்னு இருந்தா யாராலும் அதை மாத்த முடியாது.லவ் பண்ற பொண்ணும் அப்டித்தான்


5. அவ கிட்டே எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல .


சந்தானம் - நான் வேணா 4 அய்யர்ங்களை அனுப்பறேன்.கணபதி ஹோமம பண்ணி ஆரம்பிச்சுடலாம்்


Hansika Motwani hot photos (27)


6. FREE TOP UP பண்ணி விடறேன்னு சொன்னா போதும்.பொண்ணுங்க தாழ்ப்பாளை உடைச்சுட்டு ஓடி வந்துடுவாங்க


7. பொண்ணுங்க கிட்டே லவ் அப்ரோச் பண்ண ஏண்டா தயங்கறீங்க? மீறி மீறிப்போனா ஒரு திட்டு .ஒரு பளார்.அவ்ளவ் தானே


8. பசங்க நல்லவன் மாதிரி நடிக்கக்காரணமே பொண்ணுங்க கிட்டே கேவலப்படக்கூடாதுன்னுதான்.ஒரு பொண்ணு கிட்டே அறை வாங்கிட்டா சரியாபோய்டும்


9. மேனேஜர் சார்.எதுக்கு என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றீங்க ? 


அப்போதான் வீட்டுக்குப்போகவே வெறுப்பா இருக்கும்.ஆபிசே கதினு வேலையைப்பார்ப்பீங்க


10. என் மேரேஜ்க்கு யாரும் வர மாட்டீங்ளா ஏன் ? 
என்னைக்கேட்டா நீயே உன் மேரேஜ்க்குப்போகாத.ஒரு பொண்ணோட வாழ்க்கையைக்காப்பாத்துன மாதிரி இருக்கும்11. நோகாம நொங்கு திங்க முடியாது.கூசாம கிச்சு கிச்சு மூட்ட முடியாது


12. அழகான பையனை லவ் பண்றது ஆபத்துடி.மேரேஜ் ஆனவன்னு பார்க்க மாட்டாங்க.பொண்ணுங்க அவனையெ சுத்தி சுத்தி வருவாங்க13. ஒயின்ஷாப் போகாத பசங்க கூட இருக்காங்க.ஆனா காபி ஷாப் போகாத பொண்ணுங்களே இல்ல


14. எதுக்காக எனக்கு ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புனீங்க ? மிஸ். பிடிக்கலைன்னா திருப்பி அனுப்பிடுங்க


15. தேங்கா வேணும்னா தென்னை மரத்துல ஏறித்தான் ஆகனும் குமாரு


16. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ஹேர் ஸ்டைலை மாத்தற மாதிரி மாசா மாசம் ஆளை மாத்திடறாங்க


17. அந்த ராஸ்கல் என்னை ஏமாத்திட்டாண்டி.


யாரு ராஜேஷா ? அது போன மாசம் .இது இந்த மாசம் .ரகு.ஹி ஹி


18. சுல்தானே காஞ்சு கிடக்கும்போது குதிரை குலோப்ஜாமூன் கேட்டுச்சாம்


19. டிராபிக் போலீஸ் - ஸ்கூட்டர்ல நெம்பர் பிளேட்டே இல்லையே?  


பாஸ்கி - அது இருந்தா ஆளாளுக்கு கேஸ் எழுதிடறாங்க சார்


20. பசங்களுக்கு காதல் வந்துட்டா மண்வாசனை காந்திமதி மாதிரி பொண்ணுங்க கூட கரீனாகபூர் மாதிரி தெரிவாங்க


Hansika Motwani hot photos (30)
சி பி கமெண்ட் - தீயா வேலை செய்யனும் குமாரு - ஹீரோ சந்தானத்தின் மொக்கை காமெடிக்காக - பார்க்கலாம். விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு வரி , சுந்தர் சி யின் ரெகுலர் டைப் காமெடி இதுல மிஸ்சிங்க் .கோஸ்ட் ரைட்டர் மாதிரி கோஸ்ட் டைரக்டர் ஒருத்தர் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சு மேற்பார்வை டைரக்‌ஷன் மட்டும் இவர் போல , எப்படியோ படம் ஹிட் தான்


விகடன் எதிர்பார்ப்பு மார்க் -41


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே


ரேட்டிங்க் - 3.25 / 5


diSki -

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/06/blog-post_15.html

Wednesday, January 23, 2013

கே பாக்யராஜ் VS சந்தானம் - ஜெயிக்கப்போவது யாரு?

லட்டு யாருக்குச் சொந்தம்?

வெடிக்கும் பாக்யராஜ்... துடிக்கும் ராம நாராயணன்...
பொங்கலுக்கு வந்த படங்களில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வசூலை வாரிக் குவிக்கிறது. அந்த லட்டு யாருடையது என்பதுதான் இப்போது பிரச்னை! 


''என்னுடைய 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதைதான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இது கலைத் திருட்டு'' என்று போலீஸில் புகார் செய்தும் கோர்ட்டில் வழக்குப் போட்டும் அதிரடி கிளப்பி இருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

aபாக்யராஜை சந்தித்துப் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆரோட 'நீரும் நெருப்பும்’ படத்தைத் தயாரிச்ச டெகரானி என்ற நார்த் இண்டியன்தான் என் 'இன்று போய் நாளை வா’ படத்துக்குத் தயா ரிப்பாளர். டெகரானியிடம் இருந்து ஓ.கே.மணி என்பவர் நெகட்டிவ் உரிமையை வாங்கினார். இது, முதலில் எனக்குத் தெரியாது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் சேது, 'அண்ணே இது உங்க படத்தோட கதை’ என்ற தகவலைச் சொன்னபோது அதிர்ந்துபோனேன். பிறகு, சந்தானமும் சீனிவாசனும் சேர்ந்து கொடுத்த ஒரு பேட்டியில், 'நாங்கள் நடிப்பது, 'இன்று போய்  


நாளை வா’ படத்தோட கதைதான்!’ என்று ஓபனாகச் சொன் னார்கள். திடீரென ஒரு நாள், ராம நாராயணன் என்னுடைய வீட்டுக்கு வந்தார். 'உங்களோட 'இன்று போய் நாளை வா’ படத்தை நாங்க ரீ-மேக் செய்றோம். எவ்வளவு வேணும்னு சொல்லுங்க’னு கேட்டார். 'இதுவரை சாந்தனு நடிச்ச படம் எதுவும் ஹிட் ஆகவில்லை. அதனால், நானே அந்தப் படத்தை சாந்தனுவை வைத்து இயக்கப்போறேன்’ என்று சொன்னேன். 


'உங்க படத்தோட உரிமம் புஷ்பா கந்தசாமிகிட்ட இருக்கு. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்’னு கிளம்பி விட்டார். அதன்பிறகு வந்த புஷ்பா கந்தசாமி, படத்தோட உரிமம் தன்னிடம் இருப்பதாகப் பத்திரங்களைக் காட்டினார். 'நெகட்டிவ் ரைட்ஸ் உங்களிடம் இருந்தாலும், படத்தோட கிரி யேட்டர் நான்தான்’ என்பதை அவரிடம் தெளிவாகச் சொன்னேன். 'என் அனுமதி இல்லாமல் படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்பதையும் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
 
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மகள்தான் புஷ்பா கந்தசாமி. 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்


ராம நாராயணன். இந்த இருவருக்குமே நெகட்டிவ் ரைட்ஸ் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது எப்படித் தெரியாமல் போனது? என்னிடம் பேசியதை மறைத்து, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டனர். ஷூட்டிங் நடக்கும்போதே நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தேன்.


 நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். 'பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை’ என்கிறார் புஷ்பா. ராம நாராயணனோ, 'நான் படத்தோட தயாரிப்பாளர் மட்டும்தான். கதையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்னுடைய படம். படத்தின் வசூலில் எனக்குப் பங்கு தரவேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்று கொந்தளித்தார்.


படத்தின் தயாரிப்பாளர் ராம நாரா யணன் என்ன சொல்கிறார்? ''ஒரு படத்தை அதே மொழியில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கினால் போதும். படத்தின் தயாரிப்பாளர் டெகரானியிடம் புஷ்பா கந்தசாமி உரிமம் பெற்று இருந்தார். அவரிடம்  அனுமதி வாங்கிய பிறகுதான் நாங்கள் படம் எடுத்தோம். நானும் இயக்குநர்தான். 100 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறேன். அத் துடன் என் வேலை முடிந்து விடுகிறது. படத்தின் உரிமை தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ரஜினி நடித்த 'பில்லா’ படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடித்தார். அதற்கான உரிமத்தை தயாரிப்பாளர் பாலா ஜியிடம்தான் வாங்கினார்கள். 'முரட்டுக்காளை’ ரீமேக் செய்தபோது, ஏ.வி.எம். நிறுவனத்திடம்தான் உரிமம் வாங்கினார்கள். கட்டிய கட்டடத்தை விற்பனை செய்த பிறகு, வீடு எனக்குச் சொந்தம் என்று சொல் வதைப்போல இருக்கிறது பாக்யராஜ் சொல்வது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதிகம் பேசுவது சரியாக இருக்காது'' என்பதோடு முடித்துக் கொண்டார்.தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் இந்த விவகாரம் பற்றி பேசினோம். '' 'இன்று போய் நாளை வா’ படத்தின் நெகடிவ் உரிமையை ஓ.கே.மணி என்பவரிடம் அதன் தயாரிப்பாளர் டெகராணி விற்று விட்டார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன், நான் அவரிடம் இருந்து படத்தின் உரிமையை வாங்கினேன். ராம நாராயணன் என்னைச் சந்தித்து படத்தை ரீ மேக் செய்வதாகச் சொன்னார். நானும் ரீ மேக் செய்ய அனு மதித்தேன். பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை. விஷயம் நீதிமன்றம் வரை போய் இருக்கிறது. எனவே, நான் அதைப்பற்றி பேசுவது முறையல்ல'' என்றார்.தியேட்டரில் காமெடியாய் ஓடும் படம், வெளியில் சீரியஸ் ஆகிவிட்டது!மக்கள் கருத்து 


1. Dr A.Shyam Sundar5 Hours ago
இவையெல்லாம் தமிழ்த்திரையுலகின் கற்பனை வறட்சியை சுட்டிக்காட்டுகின்றன.

ரீமேக்குக்காகாவும், கோடிகளில் சம்பளம் கேட்க்கும் நடிகர்களுக்கும் காத்திருக்காமல் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். 
2. Suresh8 Hours ago
நான் வேலை செய்யும் கம்பனியின் வியாபாரமாக்கப்பட்ட பல பொருட்களில் என்னுடைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அதற்கு எனக்கு சம்பளம் தந்துவிட்டார்கள். நான் அந்த கம்பனியின் உரிமையாளர் அல்ல. அந்த கம்பனி அவர்களுடைய பொருளை யாருக்கும் எவ்வளவு விலைக்கும் விற்க உரிமை உண்டு. அதில் போய் நான் எப்படி பங்கு கேட்க முடியும்? ஆனால் பாக்யராஜ் அதை தான் கேட்கிறார். இது நியாயமாக எனக்கு படவில்லை.
3. Sridhar7 Hours ago
சந்தானம் சன் டிவி பேட்டியில் இது நாங்கள் அப்படி டிஸ்கஸ் பண்ணி இப்படி டிஸ்கஸ் பண்ணி கதையை ரெடி செய்தோம் என்று சொன்னார்............... ஊருக்கே தெரியும் இது எந்த கதை என்று..........?.......... சந்தானம் திரையில் காமெடியன் , நிஜத்தில் வில்லனோ ...??!!
4. அசோகன், சிங்கப்பூர்7 Hours ago
பாக்யராஜுவுக்கு இது கசப்பு லட்டு... படம் வெற்றிபெற்று வாசூல் சாதனை செய்தவுடன் புலம்புபவர், பிரச்னையின் ஆரம்பத்திலேயே தனது மகனைக்கொண்டு போட்டியாக இதே கதையை வைத்து படம் தயாரித்திருக்கலாமே?!... தான் தயாரித்திருந்தால் இவ்வளவு சாவாரசியமாக படம் பண்ணமுடியாது என்பது தெரிந்திருக்கலாம்...
5. Venky7 Hours ago
இதில் பாக்யராஜ் குறை கூறி தன்னை தரம் தாழ்த்திகொண்டார் என்றே தோன்றுகிறது. தயாரிப்பவருக்கே எல்லா உரிமையும் உண்டு - இதனை சினிமா பாடல்களில் கண்டு இருக்கிறோம்.
ரஹ்மான் வந்த பிறகே அந்த பாடல்களின் உரிமத்தை தராமல், உபயோக்கிக்கும் அனுமதி (லைசன்ஸ்) தரும் முறை அறிமுகமானது என்று எண்ணுகிறேன்.

ஆனால் கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஒட்டு மொத்தமாக இன்றும் தயாரிப்பாளர்களின் வசமே தரப்படுகிறது. சட்ட ரீதியாக பாக்யராஜ் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. இது, இந்த செய்தி வசூலுக்கு உதவியது. அட 'இன்று போய் நாளை வா' - வா என்று படம் பார்த்த பலரின் நானும் ஒருவன். இல்லை எனில் சந்தானத்தின் வசன இமேஜூக்கு (அத்துடன் யார் சார் அந்த ஹீரோ?) யாராவது இந்த படத்தை பார்க்க போய் இருப்பார்களா என்ன? 
6.
Prathap Venugopal7 Hours ago
கண்ணா லட்டு தின்ன ஆசையா..இன்று போய் நாளை வாவில் உள்ள காமெடியில் பாதி அளவு கூட இல்ல.. கவலைப் படாதீங்க பாக்யராஜ்!
7.
Appan8 Hours ago
சினிமாவில் இதெல்லாம் சகஜம். இதன் தயாரிப்பாளர்கள் பாகியராஜிர்க்கு பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
 நன்றி - ஜூ வி  Tuesday, January 15, 2013

பவர் ஸ்டார் VS சந்தானம் லடாய்? - நடந்தது என்ன?

klta-movie-stills-032.jpg (700×468)பவர் ஸ்டாருக்கு கிடைக்கும் கிளாப்சால் சந்தானம் கடுப்பாவதாக தகவல் , இனி அவருடன் நடிக்க மாட்டாராம் # பொறாமை.எதிர்காலத்துல காமெடில அவர் கலக்கிட்டா இவருக்கு டேஞ்சர் தானே?பவர் ஸ்டார் தன் பொறுமை , சகிப்புத்தன்மையால் நீயா? நானா ? கோபினாத் , சந்தானம் இருவர் தொடுத்த பூமாரங்கை திருப்பி விட்டு பூமாலையாக்கிட்டார்.சந்தானம் விஜய் டி வி யில் பல வருடம் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கார். காமெடி ஸ்கிரிப்ட் சொந்தமா எழுதுவார்.அதனால எந்த நாலெட்ஜும் இல்லாம பவர் ஸ்டார் திடீர்னு அமோக வரவேற்பு பெற தானும் ஒரு காரணம் ஆகிட்டமேன்னு நினைச்சிருக்கலாம்சந்தானம் VS பவர் ஸ்டார் - காமெடி அலப்பரைகள் @ க ல தி ஆ

tamil-cinema-kanna-laddu-thinna-aasaiya-photos01.jpg (575×385)

1. அண்ணன் வாழ்க்கை 'பாழா' போகுதே,-  அப்ப உன் வாழ்க்கை என்ன தயிராகபோகுதா,- 
--------------------------


2.  நான் காமடியன்னு தெரிஞ்சு தான் வாழ்றேன் நீ காமடியனு தெரியமாலே வாழ்றியே?

-----------------------3. அடுத்தவன் ஃபிகருக்கு ஆசை படுபவனுக்கு அவனோட ஃபிகர் மொக்கையா தான் தெரியும்-----------------------------4. பிஸ்தா ஆகனும்னா பிஸ்தாப்பருப்பு சாப்பிடனும்


 யோவ், இது பனியன் விளம்பரம். கூட்டத்துல ஒரு மொக்கை ஃபிகரைப்பார்த்ததுக்கே இப்படியா? 

---------------------------------5. டேய் . நாயே . சங்கு ஊதச்சொன்னா  ஐ பி எல் மேட்ச் கீதம் வாசிச்சிட்டு இருக்கே , இழவுக்கு வந்த கூட்டம் எல்லாம் மேட்ச்  பார்க்கப்போயிடப்போகுது. ஒழுங்கா ஊதுடா 
---------------------------6. பொணம் பின்னால போகுதுன்னு கொஞ்சம்  கூட  கவலைப்படாம  ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணிட்டு இருக்கான் பாருங்க.. இவன் தான் கே கே 
------------------------------7.  ஸ்கூல் , காலேஜ் , ஐ டி எல்லா இடங்கள்ல யும் இந்த பவர் கலாய்ப்பாண்டா 


--------------------------8. சின்னப்பசங்க கூட என்ன பேச்சு ? 

 அப்படிக்கேளுங்க//  நான் கேட்டது அவங்க கிட்டே . உன்னை மாதிரி சின்னப்ப்பசங்க கூட எதுக்கு சகவாசம்  வெச்சுக்கனும்? ---------------------
9. அப்பன் மேரேஜ்;ல போய் போஸ் குடுத்து அவன் பொண்ணுக்கு ரோஸ் குடுத்துட்டு வந்திருக்கே,... 
--------------------------10. பட்டி மன்ற பேச்சாளர் ராஜா - நாட்ல பிச்சைக்காரன் கூட  100 ரூபா டெயிலி சம்பாதிக்கிறான் அப்பா. உங்கப்பா உனக்கு ராஜான்னு பேர் வெச்சார், ஆனா நீ பிச்சைக்காரங்க பின்னாடி போய்  அவங்க டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்திருக்கே.. 
--------------------11. டேய்.. இது என்னடா நாய் செயின் மாதிரி கழுத்துல தொங்குது?


 ஸ்டைல் 

 ஓ கங்கனம் ஸ்டைல் மாதிரி நாய் ஸ்டைல் பண்ணனும்னு கங்கணம் கட்டிட்டு அலையறியா?

------------------------12. டேய்// வாய் அப்படி அண்ணாந்து திறக்காதே . ஆந்தை ஆய் போயிடப்போகுது 

--------------------


13.  டேய்.. இந்தப்பல்லை வெச்சு பட்டாணி கடலை மட்டும் இல்லை , பாறாங்கல்லையே சாப்பிடலாம் ---------------------------


14. எனக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பழக்கம் தான். ஒரு ஃபோன் பண்ணினா டக்னு ஓடி வந்துடுவார் .. ஜாக்கிரதை  அப்படியா?  அவரை ஒரு குவாட்டரும் , ஒரு அர்ச்சனா ஊறுகாயும் கொண்டாரச்சொல்லு 
------------------------15. தேவதர்ஷினி  - டேய். அவர் மேல கை வெச்சீங்களே. என் மேல கை வெச்சுடு பார்ப்போம்.. அய்யய்யோ கை வெச்சுட்டானே/   செயினையும் கட் பண்ணிட்டானே.. 


 நிஜமா? 

 ஆமா , கவரிங்க் தானே.. நீங்க எந்தக்காலத்துல கோல்டு எடுத்துக்கொடுத்தீங்க? 
---------------------


kanna_laddu_thinna_aasaiya_tamil_movie_hot_stills_1012120918_079.jpg (1024×685)
16.  நாம முதல்ல போய்  ஃபுல் போதை ஏத்த சரக்கு அடிக்கறோம் , அப்புறமா . வந்து இவங்களை அடிக்கறோம் 

-
--------------------------17.  வணக்கம்ங்க .. நான் பக்கத்து வீட்ல இருக்கேன்


 கோவை சரளா - அடப்பாவி , அப்போ உங்க வீட்ல இல்லை? 


 அதாவது உங்க வீட்டுக்குப்பக்கத்து வீடு ஹி ஹி 
-------------------------


18. நியூஸ் பேப்பர் நாங்க வாங்கறதே இல்லை 


 ஏன்?

 அதான் ஆல் இண்டியா நியூஸ் ரீடர் நீங்க இருக்கீங்களே?
--------------------------------19.  ஃபாஸ்ட் ஃபுட் கடைக்குப்பக்கத்துலயே டாஸ்மாக் இருக்கற மாதிரி பக்கத்து வீட்லயே  தொக்கா ஒரு ஃபிகர் வந்திருக்கு . கரெக்ட் பண்ணிட வேண்டியதுதான் 
---------------------------20.  ஏண்டா இவ்ளவ் லேட்டா எந்திரிக்கறீங்க? கோழி கூட விடிகாலைல எந்திரிச்சுடுது  அந்தக்கோழிக்கு நைட் ஒரு குவாட்டர் வாங்கிக்கொடுங்க  குப்புறப்படுத்துக்கும் 

------------------------------------------


21.  சரக்கு ஓக்கே , தம் ஓக்கே இதெல்லாம் ஃபிரண்ட்ஸ் கூட ஒண்ணா பண்ணிக்கலாம், ஆனா ஃபிகரை உஷார் பண்ற மேட்டர் எல்லாம் தனியா பண்ணிக்கனும் 
---------------------------22.  நீங்க எல்லாம் போதி தர்மர் காலத்து ஆள். எப்படியோ எமனை ஏமாத்தி இன்னும் உயிர் வாழ்ந்துட்டு இருக்கீங்க.. 
-------------------------23. அடையாளம் தெரியாம உங்க வீட்டு நாயே உன்னை ஒரு நாள் கடிச்சு வைக்கப்போகுது பாரு 
----------------------24.  உனக்கு மண்டையை விட மணிக்கட்டுல ஏகப்பட்ட முடி இருக்கு . அதை ஷேவ் பண்ணி மண்டைல ஒட்டி வெச்சுக்கோ 

--------------------------


25. நட்புன்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு ? தளபதி படம் பார்த்தியா ? அதுல மம்முட்டிக்காக ரஜினி ஒருத்தனை நடு ரோட்ல அடிச்சு  கொல்லுவார். அதான் நட்பு 

 ஏன் ரோட்டோரமா அடிச்சா ஒத்துக்க மாட்டீங்களா? நடு ரோட்ல தான் அடிக்கனுமா? 
-----------------------------26. மண் லாரின்னா பிரேக் பிடிக்காது, ஃபிரண்ட்ஸ் கூட சுத்துனா எந்த அப்பனுக்கும் பிடிக்காது # சந்தானம்
---------------------------------27. நானும் எவ்வளவு நாளைக்கு தான் ஊரான் காதலை ஊட்டி வளர்ப்பது ? கொஞ்சம் என் காதலையும்  வளர்த்துக்கறேனே? 
---------------------


28.  என் கிட்டே அழகு இல்லையா? அறிவு இல்லையா? 


 என் கிட்டே அரிவாள் இல்லை , உன்னை வெட்ட 
-----------------------


29.  சில பேரை பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும் , ஆனா இந்த பவரை பார்த்த உடனே பிடிக்கும் 

---------------------------


30.   எல்லாப்பொண்ணுங்களுக்கும் 2 விஷயம் நல்லதா அமைஞ்சடனும். 1. பெற்றோர்  2 புருஷன் . அம்மா, அப்பா தானா அமைவது ,. புருஷன் நாமா பார்த்து தேர்ந்தெடுக்கனும்
--------------------------


Kanna-Laddu-Thinna-Aasaiya-Movie-Audio-Launch-+(4).jpg (1024×1538)


31.  டீ சாப்ட்டுட்டு போப்பா 


 சரி குடுங்க 


 போய்க்கடைல சர்க்கரை , டீத்தூள் , பால் வாங்கிட்டு வந்துடு 
---------------------


32.  நீ  மைசூர்ப்பாக்குத்தூள் வாங்கத்தானே வந்தே? 

 என்னைப்பார்த்தா உனக்கு அப்டியா தோணுது? 

 பின்னே மைசூர் பேலசையா நீ வாங்கப்போறே? 
------------------------


33.  அப்பாவோட தொண்டை ஏம்மா  ஆட்டோட தொண்டை மாதிரி இருக்கு ?ம் , அழுக்கு இருக்கும் , அதான் 


 டேய் என்னடா பண்றே?


 அழுக்கை போக்க ஆசிட் ஊத்தறேன் 

 அடப்பாவி , அது கக்கூஸ் கழுவறதுக்கு வெச்சிருக்கேன் ------------------------------


34.  எல்லாருக்கும் தென்னையைப்பெத்தா இளநீரு , சிலருக்கு  பிள்ளையைப்பெத்தா கண்ணீரு ,  ஆனா பிள்ளையைப்பெத்தா  எனக்கு மட்டும் பினாயிலு 
------------------------------


35.  குருநாதா! என்னை ஏன் உளுத்தம்பருப்பு மாதிரி  ஊற வெச்சிருக்கே? -----------------------36. இப்படியே நல்லா சாதகம் பண்ணினா சுதி ( ஸ்ருதி ) சீக்கிரம் வந்துடும்
 . சந்தானம் - ஓஹோ , அவங்கப்பா கமல் ஹாசன் வந்துடமாட்டாரே? 
------------------------


37. டேய் கொட்டாங்குச்சி வாயா .  இங்கே எப்படி வந்தே? 


இதென்னடா கார்ப்பரேஷன் கக்கூஸ் மாதிரி 

------------------------


38. ,அதா  பாரு ஆடிய பாதமும் அலாவுதீன் பூதமும்  சேர்ந்து வருது 
--------------------


39. சாரீரம்னா என்ன? 

 குரல் வளம் , அதுதான் உன் கிட்டே இல்லையே? 
-------------------------------40.  ஃபர்ஸ்ட் நைட்ல கூட மீந்து போனதைத்தான் குடிப்பான் போல 

 கழுதைப்பாலா 

அமலாப்பால்
--------------------41.  எம் பி ஜி சிலிண்டர் மாதிரி போறான் பாரு .  டேய் இங்கே வா. உன் பென்சில் கூரா இருக்கு . அதோ அவன் பேக் பெருசா இருக்கு ஏத்து பார்க்கலாம் --------------------42 அவுட் கோயிங்கே போகாத  ஃபோன்ல என்ன பேசறே? எப்படி பேசறே? 
---------------------43. உனக்கு மிமிக்ரி நல்லா வருமாமே? 

 ஆமா, தலைக்கறி கூட வரும் 
------------------------


44.  இவன் ஏன் இப்படி  நடந்து வர்றான்? கக்கா போயிட்டு கழுவாம வர்றானா? 
-----------------------45.  எங்கம்மா மேல சத்தியமா இந்த மேட்டரை உன்னைத்தவிர வேற யார் கிட்டேயும் சொல்லலை 


 ம்க்கும் , இப்படியே 3 பேர்ட்டயும் சொல்லிட்டு ... 
--------------------------


Kanna-Laddu-Thinna-Aasaiya-Audio-Release-Posters-11.png (599×960)


46.  காபி சூப்பர்ங்க


 காலைல என் சித்தி போட்டது , நான் சூடு பண்ணிக்குடுத்தேன் , அவ்வளவுதான்
-------------------------


47.  சித்தப்பா வெளில போயிருக்கார்


 தெரியும்


 அப்போ ஏன் வந்தீங்க? 

 அது வந்து .. ஹி ஹி 
-----------------------


 48.  நான் அப்பாட்டக்கரு  இந்தா வாங்கிக்க லவ் லெட்டரு 

--------------------49. அவன் சைனா மேடு . இவன் பக்கா ஃபிராடு 
-------------------


50 . நீங்க குடுத்த லவ் லெட்டர்ல ஒண்ணுமே எழுதலையே? அதான் பாட்டாவே பாடிட்டனே ? 
------------------------51.  எத்தனை நாளுக்குத்தான் நாமளும் காமெடியனாவே இருக்கறது?
-------------------------


52.  நீங்க 5 மணிக்கு வரச்சொன்னிங்க , நான் 4 மணிக்கே வந்துட்டேன் 


 நான் காலைல இருந்தே இங்கே தான் இருக்கேன் 


 காலைக்கடனை முடிக்க வந்திருப்பே. இங்கேயே செட்டில் ஆக வந்தவன் மாதிரி பேசாதே -----------------------


53.   இங்கே பாருங்க அவன் ஒரு மணி நேரம் முன்னால வந்திருக்கான் . இவன் 12 மணி நேரம் முன்னால வந்திருக்கான் , நான் மட்டும் தான் உங்க பேச்சை மதிச்சு கரெக்ட் டைமுக்கு வந்திருக்கேன் , நீங்க என்னைத்தான் லவ் பண்ணனும் ---------------------------------


54.  மானாட மயிலாட ஜட்ஜ் மாதிரி சும்மா பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்? ---------------------


55.  ரோட்ல  எச்சை துப்புனா தப்பு 

 உன் முஞ்சில துப்பலாமா? 
----------------------


56. எனக்கு உன்னைப்பிடிச்சிருக்கு, ஆனா பிடிச்சவங்களை எல்லாம் லவ் பண்ண முடியாது , நம்மைப்புரிஞ்சவங்களைத்தான் லவ் பண்ன முடியும் 
------------------------57.  இதை சரக்குனு சொல்லக்கூடாது , அரிச்சந்திரன் டானிக்னு தான் சொல்லனும் , ஏன்னா இதை அடிச்சவன் பொய்யே சொல்ல மாட்டான் 
------------------------------58.  வயசான தலைக்கு டை அடிக்கலாம், ஆனா ஃபிரண்ட்ஸ்க்குள்ளே  அடிச்சுக்கக்கூடாது 
------------------------------


59.  லவ்ல ஜெயிச்சு ஷங்கர் படம் மாதிரி பிரம்மண்டமா பார்ட்டி கொடுப்பதை விட காதல்ல தோத்து ராம நாராயணன் படம்  மாதிரி சிம்ப்பிளா பார்ட்டி கொடுக்கறவன்  தாண்டா நண்பன் 
-----------------------


60  செல் பில்லுக்கோ  , கோல்டு பில்லுக்கோ வயசுப்பசங்க அழக்கூடாது 
---------------------kanna-laddu-thinna-aasaiya-klta-dr-srinivasan-santhanam-visakha-stills-3-586x356.jpg (586×356)


61. மிஸ் . உங்களுக்காக ரத்தம் கொடுத்துட்டேன் . இன்னும் என்னென்னெ ஸ்பேர் பார்ட்ஸ் வேணுமோ எல்லாம் எடுத்துக்குங்க.. எல்லாம் உங்களுக்காகத்தான் 
---------------------------------


62.  என்னது? நீ ரத்தம் குடுத்தியா? 


 பின்னே? நர்ஸ்க்கு முத்தம் குடுத்தேனா? 
-------------------------


63.  ஆமா , நீ சண்டே தானே குடிச்சே , மண்டேவுமா? 

 அடப்பாவி , ஃபிகருக்கு முன்னால என்னைக்காட்டிக்குடுத்துட்டியே? 

-------------------------------64.  எங்கேடா இருக்கே? 


 நயாகரா ஃபால்ஸ் பக்கம் லுங்கி துவைச்சுட்டு இருக்கேன், கேட்கறான் பாரு கேள்வி. வீட்ல தாண்டா இருக்கேன் 
--------------------------65.  என் கண்ணை நானே குத்திக்குவேனா? 

 பின்னே , இதுக்கு சம்பளத்துக்கு ஆள் வெச்சுக்கவா முடியும்? 

-----------------------


66. லவ் மேட்டர்ல ஹீரோயிசம் , காமெடி எடுபடாது , செண்ட்டிமெண்ட்டா டச் பண்ணனும் # பவர் ஸ்டார்

---------------------------67  அவனுக்கு பண பலம் இருந்தா ? அவன் மூஞ்சி பழுத்த பப்பாளி மாதிரி இருக்கு
----------------------------


68.  பணத்தைக்காட்டி அவளை விலைக்கு வாங்கிடுவாளோன்னு பயமா இருக்கு 


 டேய்.  பணத்துக்கு விலை போக சவுமியா என்ன சேமியாவா? ----------------------


69.  அவன் ரொம்ப காஞ்சு போய்க்கிடக்கான், பொண்ணு இல்லை, பொண்ணு ஓட்டுன சைக்கிள் கிடைச்சாக்கூட அதை ஓட்டிட்டுப்போயிடுவான் 

----------------------70  என்ன திடீர்னு? பெல் அடிக்கலாம் இல்லை?

 பெல் அடிச்சுட்டு வர நான் என்ன சைக்கிளா? 
----------------------------71.  டேய் தேங்காப்பூத்தலையா . உன் முகத்தைப்பார்க்க முடியாமத்தான் திரும்பி உக்காந்திருக்கேன் 
--------------------------72.  குழாய்ல தண்ணி வரும்போதே குடத்தை வைப்பதுதான் புத்திசாலித்தனம், அவன் கிழவன் ஆகறதுக்குள்ளே மேரேஜ் பண்ணி வெச்சுடுங்க 
-------------------------------- 73.  டேய்,. என்ன தவ்விதவ்வி வந்துட்டு இருக்கே? படிக்கட்டு முடிஞ்சு 10 நிமிஷம் ஆகுது . ஒழுங்கா நடந்து வாடா 
------------------------------74. கூட இருந்துட்டே குழி பறிச்சுட்டியே?  
சந்தானம் - பின்னே , குழி பறிக்காம கொய்யாக்காயா பறிக்க முடியும் ? 
-----------------------------


75.ஒலிம்பிக்ல பொய் சொல்ற போட்டி வெச்சா பொண்ணுங்க தான் ஜெயிப்பாங்க   
----------------------------Vishakha_Singh_Hot_Navel_Show_Images+%282%29.jpg (1024×685)


76.  என்னடி நீ? உன் வயசுல நான் 30 பேரை ஏமாத்தி இருக்கேன் .
------------------- 77. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும்


 டேய் தெரியும்டா, பின்னே ஒருத்தரை ஒருத்தர் சொறிஞ்சுக்கனும்னா சொன்னேன் 
-----------------------78.   விஷாகா - நானும் சிம்புவும் லவ் பண்றோம் பவர் - என் கிட்டே இல்லாதது அப்படி  சிம்பு கிட்டே என்ன இருக்கு? 
-----------------------------


79.  டேய் , பொணம் எங்கே ?

 வந்துட்டே இருக்கு


 நடந்தா? -----------------------80.  டேய் நாயே சந்தைல ஊதுபத்தி விக்கறவன் மாதிரி ஒரு தொண்டையை வெச்சுக்கிட்டு  சங்கீத சக்ரவர்த்தி மாதிரி பேசாதே 
----------------------------81/  அய்யய்யோ என்னங்க இது ? அரிசி மூட்டைய முத்திரை குத்தற மாதிரி இப்படி குத்தி வெச்சிருக்காங்க ?
------------------------82.  அதானே .. ஏய்யா. ஒரு வித்துவானை இப்படியா  மொத்துவாங்க?
------------------------83.  இது என்ன வீடா? பெரிய ஆஸ்பத்திரி வார்டா?   ஒரே பேஷ்ண்ட் கூட்டமா இருக்கு? 
------------------------------------84.  என்ன கைல பேக்? ஊருக்கு போறியா? அய்யய்யோ ,அப்போ என் வீட்டு வேலை எல்லாம் யார் செய்வா? ----------------------


85.  நீ சண்டை போட்டுட்டுப்போன பின் வீடே இருண்டு போச்சு 

 ஆமா, நான் போகும்போது சாயங்காலம் மணி 6.30 
-----------------------86.  மல்லு கட்ட வேணாம்னு பார்க்கறேன் 


 உனக்கு பல்லு கட்டற வயசு 
---------------------
 87.  நமக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம் 


 கீழே ஏதோ பர்பி விழுந்துச்சு 


 எங்கே எங்கே 


 சும்மா . ஏதோ கவுரம்னீங்க,. ஒரு பர்பிக்கு குடும்பமே குனிஞ்சு தேடிட்டு இருக்கீங்க?------------------------88.  ஒவ்வொரு பார்லயும் நம்மளை மாதிரி லவ் ஃபெயிலியர் 4 பேர் இருப்பாங்க 

-------------------


89.  லவ் பண்ன பொண்ணையே மெரேஜ் பண்ணி அவங்களால டார்ச்சர் ஆகி பார் வர்றவங்க தான் அதிகம் 

-------------------------90. பவர் - எனக்கு நைட் பூரா தூக்கமே இல்லை .
 சந்தானம் - ஏன் ? மத்தியானமே தூங்கிட்டியா? 
-----------------------------


3c2AOH9c0t.jpg (500×335)


91.  உன் வாயை க்ளோசப்ல பாரு அழும்போது , எப்படி இருக்கு? 

 நல்லாவே இல்லை 

 அப்புறம் ஏண்டா இப்படி பண்றே? 
---------------------------------


92.  உட்காருங்க 

 பெரியவர் நீங்க ஏன் நிக்கறீங்க, உக்காருங்க பவர் - அவ்வ்வ்வ்வ்
---------------------------93.  அப்பாவுக்கு பயப்பட்டு தான் தயக்கமா? நான் வேணா வீட்டுக்கு வந்து  பொண்னு கேட்கவா முறைப்படி ? செருப்படி
-------------------------------


 94.  இதை நான் வழி மொழிகிறேன்


 நான் காரி உமிழ்கிறேன் 
------------------------------ 
95.  தமிழ் நாட்ல சிம்புவை கடத்த யார் இருக்கா? 


 ஒருத்தன் இருக்கான் , ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி பார்ட்டி 

------------------------------96.  காலைலயே வருவேனு  பார்த்தேன்  காலைலயே வர நான் என்ன கக்கூசா?
----------------------


 97.  டேய் , யார்றா இவன் காதோரம் கார்ப்பெட் ஒண்ணை விரிச்சு வெச்சுட்டு வர்றான் , ஓ அதுதான் கிருதாவா? 
0----------------------------


 98.  போட்றலாமா? 


  போட்ரலாம்  நேத்து வாங்கி மீந்து போனது குப்பைல போட்றலாமா? 
--------------------------99.  ஆமா, மாலை கீலைனு பேசிட்டு இருந்தீங்களே? அப்பா செத்துட்டாரா? 

----------------------100. நீங்க யாரையோ கடத்தனும்னு சொல்லி ஒரு சி டி குடுத்தீங்களே, அதுல சிம்பு படமா வருது , யாரை கடத்தனும்


சுத்தம் ,  சிம்புவைத்தான் கடத்தனும் 
------------------------------101 .  ஒரு ஹீரோவை எப்படி கடத்த?


 ஏன்? ராஜ் குமாரை கடத்தலை? 
-------------------------102.  நீங்க தான் எங்கக்காவை மேரேஜ் பண்ணிக்கப்போகும் தாத்தாவா? 
------------------------


103 . பவர் - எனக்கு குழந்தை பிறந்தா சவுமியான்னு அவ பேரைத்தான் வைப்பேன் .சந்தானம் - பிறந்தா.... ம் . பிறந்தா  வெச்சுக்கோ  
-------------------------


104 .  அவ்வையாரே அண்ணா னு கூப்பிடற வயசுடா அவனுக்கு 
--------------------------


 105.  பிரச்சனைன்னு ஒண்ணு வர்றதே நம்ம திறமையை வெளிக்காட்டும் சந்தர்ப்பம் தான் 
-----------------------------27719518Visakha_Singh_Photo_Shoot_Stills_(15).jpg (954×1437)106. வாழ்க்கைல தோத்துட்டான்னு கூட யாரும் நம்மை சொல்லலாம், ஆனா பயந்து ஓடிட்டான்னு சொல்ல விடவே கூடாது # 

------------------------------


107.  கடைசில என்னையும் ஃபைட் பண்ண வெச்சுட்டீங்களேடா? ----------------------------------
டிஸ்கி - மொத்தம் உள்ள 114 ஜோக்ஸ் ( மொக்கை) களில் 7 நினைவில் இல்லை. விடுபட்டவை நினைவில் உள்ளவர்கள் குறிப்பட்டால் அவர்கள் பெயருடன் சேர்த்து வெளியிடப்படும் 
இதை படிக்கும்போது சிலருக்கு ரொம்ப மொக்கையாகத்தெரியலாம். படம் பார்த்துட்டு வந்து மறுபடி படிச்சா அப்படித்தெரியாதுன்னு நினைக்கறேன்
vishaka-singh-photo-gallery-biography-movies-wallpapers1.jpg (191×320)