Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Tuesday, July 17, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 15

ட்விட்டர் நண்பர் அனுப்பிய மடல் - அண்ணே எனது கேள்விகள் (மெயில் அனுப்ப வழி இல்லை, அதான் இங்கே, கேள்விகளை எடுத்து கிட்டு இங்கே இருந்து அழிச்சிடுங்க) [Kannamoochi (Vijay) in Twitter]


இதுக்கெல்லாம் ... டக்கு டக்கு ன்னு ஒன்னு ரெண்டு வார்த்தைல பதில் சொல்லணும் ....

சி.பி - டக் டக் ( duck)னா வாத்து மாதிரி பதில் சொல்லனுமா?



1. ஆஸ்கர் அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போல நீங்கள் கொடுத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?




வழக்கமா எனக்கு வாங்கித்தான் பழக்கம் , கொடுத்து பழக்கம் இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன் - அட்ராசக்க அட்ராக்‌ஷன் அவார்ட்ஸ்


2. உங்கள் முதல் திரைப்படத்தின் தலைப்பு என்று எதவாது யோசித்து வைத்துளீர்களா?


கதை, திரைக்கதை தயார்- கோவை ப்ரீத்தி கொலை வழக்கு - உண்மை சம்பவம்- அமரர் சுஜாதாவின் காயத்ரி நாவல் போல் சாயல் இருக்கும், ஆனால் 100% கோவையில் நடந்த உண்மைச் சம்பவம்.. சிறுகதையாக ஆல்ரெடி எழுதி இருக்கேன் http://www.adrasaka.com/2011/10/kovai-preethi-murder-case.html



3. ஈரோட்டில் உங்களுக்கு பிடித்த தியேட்டர்?


ஆனூர் தான். ஏன்னா ஏ சி போடும் ஒரே தியேட்டர் ஈரோட்ல அதுதான். அபிராமி முதல்ல சூப்பரா இருந்துச்சு. இப்போ நிர்வாகம் சரி இல்லை, ஏ சி போடுவதே இல்லை, அதே போல் ஃபேனை அடிக்கடி ஆஃப் பணிடுவாங்க. கேண்ட்டீனில் கொள்ளை லாபம் அடிக்கறாங்க 



நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில் ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில்  ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....


4. தாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம்?


எனக்கு சரியா நினைவில்லை, எங்கப்பா கிட்டே கேட்டபோது ஏதோ ஒரு எம் ஜி ஆர் படத்துக்குத்தான் கூட்டிட்டுப்போனதா சொன்னார்.. அநேகமா அது மலைக்கள்ளன் அல்லது மதுரை வீரன் என நினைவு. அப்புறம் வயசுக்கு வந்த பின் பார்த்த முதல் கில்மா படம் சென்னிமலை அண்ணமார் - பவுர்ணமி ராத்திரியில் ரதி தேவி ( அப்போ பகல்ல மூதேவியா?).. இந்தப்படத்துல இருந்துதான் கேரளா பெண்கள் குளீப்பதில் எவ்வளவு ஆர்வம் மிக்கவர்களாக இருக்காங்க என்ற ஜெனரல் நாலெட்ஜை அறிந்தேன், படத்துல செம சீன் இருந்துது






5. பிடித்த விளையாட்டு?



செஸ் தான். பாரதியார் யுனிவர்சிட்டி செஸ் சாம்ப்பியனாக 3 வருடங்கள் இருந்தேன்.. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் காலேஜ்க்கு போகும்போது என் கால்கள் முதலில் செல்வது விளையாட்டு மைதானம்.. அங்கே எப்பவும் ரெடியா 3 குரூப் செஸ் ஆடிக்கிட்டே இருப்பாங்க.. அங்கே போனா டைம் பாஸ் ஆவதே தெரியாது.. 12 பேர் சேர்ந்து ஆளாளுக்கு ஐடியா குடுப்பாங்க.. நான் ஒருத்தனே 12 பேர் ஐடியாவுக்கும்  யோசிக்கனும்././ நல்லா டெவலப் பண்ணி இருந்திருக்கலாம்.. எனக்கு செஸ் கேம் யோசிச்சு யோசிச்சு தலை ஹீட் ஆச்சு// அதனால அதை விட்டுட்டேன்././  இப்போ செஸ்க்கு பதிலா அதே அலைவரிசையில் உள்ள இன்னொரு விளையாட்டு அதுவும் இண்டோர் கேம் தான்.. ஐ மீன் கேரம்


6. நீங்கள் நன்றாக சமைக்க கூடிய உணவு?



தக்காளி சாதம், ஆனியன் தோசை .( வெங்காயத்தை முதல்லியே தாளிச்சு வெச்சுக்குவேன் ) சமையல்ல நான் ஸ்பெஷலிஸ்ட்.. அதே போல் ஒரு உணவை அல்லது சாம்பாரை ருசித்துப்பார்க்காமல் வாசம் நுகர்ந்தே அதுல உப்பு , உரைப்பு எல்லாம் சரியா இருக்கா? என்பதை உணர்வதில் திறமை  உண்டு.. எந்த ஹோட்டலுக்குப்போனாலும் உணவில் நிறை இருந்தால் அதை அனைவர் முன்னிலையில் மாஸ்டரை புகழ்ந்தும், குறை இருந்தால் அவரிடம் தனிமையில் அழைத்தும் சொல்வேன்..



7. வைரமுத்து / கண்ணதாசன் - உங்கள் சாய்ஸ் ?


நம்ம காலகட்டத்துக்கு வைரமுத்து ஒரு லெஜண்ட் என்றாலும் கண்ணதாசன் சாதனைகளை மறந்துவிடக்கூடாது.. எதுக்கு பிரிக்கனும்? நான் எல்லாரையும் ரசிப்பேன்.. எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என திறமை எங்கிருந்தாலும் அங்கே ரசிப்பு உண்டு.. வைரமுத்து பாட்டில் என்னை கவர்ந்தது - கண்ணுக்கு மை அழகு , கண்ணதாசன் - பார்த்தேன், சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன்



8. நீங்கள் எதனை கண்டு அதிகம் பயப்படுவீர்கள்?


சாலை விபத்துக்கள் தான்.. ஏன்னா மனிதனின்  எதிர்பாராத மரணத்துக்கு சாலை விபத்துக்கள் தான் காரணம். நோய் மூலம் வரும் மரணத்துக்கு மனிதன் பொறுப்பாகிறான்.. குடி, புகை, பெண்கள் சகவாசம் என அவனும் அதற்கான காரணி ஆகிறான், தற்கொலை , கொலைக்கும் மனிதன் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாகிறான்.. வயோதிகத்தின் காரணமாக மரணம் வந்தால் நோ பிராப்ளம்.. அது இயற்கையின் நியதி.. 
 ஆனால் இந்த தவறுமே செய்யாமல் மற்றவர்கள் அஜாக்கிரதையால் விபத்து நிகழும்போது சம்பந்தமே இல்லாமல் நடக்கும் மரணங்கள் என்னை பாதிக்கின்றன, பயம் கொள்ளச்செய்கின்றன..


9. அரசியலில் நுழையும் எண்ணம்?

 சுத்தமா கிடையாது, இந்த விஷயத்தில் நான் துக்ளக் சோ போல் இருக்க ஆசைப்படறேன்.. மக்களுக்கு அரசியல்வாதிகளின் கறுப்புப்பக்கத்தை அவ்வப்போது அறிமுகம் செய்து வெச்சா போதும்.. ஆனா அவரைப்போல் பி ஜேபி , அதிமுக அனுதாபி அல்ல.




10. தாங்கள் மிகவும் எதிர்ப்பார்த்து ஏமாந்த திரைப்படம்?


ஆபாவானனின் மூங்கில் கோட்டை - வரும் வரும்னாங்க. வராமயே போயிடுச்சு.. ஊமை விழிகள் மெகா ஹிட்டின்  2ம் பாகமாக வந்திருக்க வேண்டியது, ஏதோ சில காரணங்களால் வராம போயிடுச்சு. மற்றபடி எந்த படத்தையும் அதிகமா எதிர்பார்ப்பதில்லை.. ஏன்னா தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் தோல்வியைத்தான் தழுவுகின்றன.. 



 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை   
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன்  :)   
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html    
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html    
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  
 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html   டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html   டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html   டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html  
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html   டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html   டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html   டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html   டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/14.html
ஒளியிலே தெரிவது..........? தேவதையா?????

Wednesday, July 11, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 14

வறுமை - இளமையில் கொடியது-யுவா
 காலேஜ் போய் என்னத்தை பெரிசா கிழிச்சேன்னு பேரன்ட்ஸ் கேட்டிருப்பாங்க போல 
Blogger முத்துசிவாவின் 9 கேள்விகள்
 
 
1.  உங்களுடைய திரைப்பட விமர்சனங்களை போல (முழு கதை வசனத்துடன் 5 பக்கத்திற்கு) வேறு எவரேனும் விமர்சனம் எழுதினால் அதை நீங்கள் படிப்பீர்களா?   
நிச்சயம் படிப்பேன், இணையத்தில் வரும் அனைவரின் விமர்சனங்களும் படிப்பேன், அப்போத்தான் ஒவ்வொருவர் ஸ்டைலையும் உணர முடியும், எல்லாரிடமும் இருக்கும் பிளஸ் பாயிண்ட்டை எடுத்துக்கொண்டு, நம்ம கிட்டே என்ன மைனஸ் என்பதை உனர முடியும், இது விமர்சனத்துக்கு மட்டும் அல்ல, எல்லா துறைக்கும் பொருந்தும், ஒரு துறையில் சாதிக்க நினைப்பவர்கள் அதே துறையில் சாதித்தவர்கள் வெற்றிக்கு காரணம் என்ன? எனவும் பார்க்கனும், சாதிக்காதவர்கள் தோல்விக்கு என்ன காரணம்னும் பார்க்கனும்.. நீங்க கேட்ட கேள்வில ஏதாவது உள்குத்து இருந்தா அதுக்கான பதில் வசனம் படிக்க இஷ்டப்படாதவங்க 25% பேர் இருக்காங்க, அவங்க அதை ஸ்க்ரோல் பண்ணிக்குவாங்க, நோ பிராப்ளம் ..   2.முன்பு நீங்கள் எழுதிய பதிவுகள் எதயாவது திரும்ப வாசிக்கும் பழக்கம் உண்டா?

இதுக்கு விஜய் பஞ்ச் டயலாக் இங்கே பொருத்தமா இருக்கும், நான் ஒரு  தடவை போஸ்ட்டை ரிலீஸ் பண்ணிட்டா என் போஸ்ட்டை  நானே படிக்க மாட்டேன், ஏன்னா போஸ்ட் போடும் முன் 3 முறை எழுத்துப்பிழைகள் இருக்கா?ன்னு செக் பண்றேன்.. மிக அரிதாக யாராவது உங்க போஸ்ட் இந்த இடத்துல செமயா இருந்துச்சுன்னு சொன்னாங்கன்னா மீண்டும் ஒரு முறை படிப்பேன்..
 3. உங்கள் பதிவுகளை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறீர்களா அல்லது பதிவு போட்டாக வேண்டும் என்ற கட்டாயதிற்காகவோ, தமிழ்மணம் தரவரிசையை தக்கவைப்பதறகாகவோ எழுதுகிறீர்களா?
படிக்கனும்கறதுக்காகத்தான் எழுதறேன். அதே போல் நான் படித்து ரசித்த பயனுள்ள கதைகள், கட்டுரைகளையும் அனைவரும்  படிக்கனும்னு தான் ஷேர் பண்றேன்,.. தமிழ்மணம் தரவரிசையை தக்க வைக்க அவசியம் இல்லை, ஏன்னா இப்போ நான் அதுல இல்லை.. என்னை விலக்கி விட்டார்கள்.. காப்பி பேஸ்ட் போஸ்ட் போடக்கூடாது என்ற அவர்கள் புதிய விதியை என்னால்  ஃபாலோ பண்ண முடியல..அதனால அவர்கள் விலக்கிட்டாங்க..
கொடுமடா சாமீ
 
வீடு கூட்டனும்னா பாப்பாவை வாக்கிங்க் போகச்சொன்னா போதும் போல 
 4. நீங்கள் எழுதிய ஜோக்குகளை படித்து தங்களுக்கு எப்போதாவது சிரிப்பு வந்திருக்கிறதா?  
இது நிச்சயம் உள்குத்து கேள்விதான்.. எல்லா ஜோக்கும் சிரிக்க வைக்கும்னு சொல்ல முடியாது, சிலது மொக்கையா இருக்கும், பலது டாப்பிக்கல் மேட்டரா இருக்கும்.. இன்னைக்கு ஒரு சூழல்ல எழுதும் ஜோக்  நாளைக்கு இதே ஃபீலிங்கை தரும்னு சொல்லிட முடியாது. கிரேசி மோகன், எஸ் வி சேகர்  மாதிரி எப்ப படிச்சாலும் சிரிப்பை வர வைக்கும் கலையை கொஞ்சம் கொஞ்சமாத்தான் கத்துக்கனும்
 5. தங்கள் பதிவுகளுக்கு வந்து பதிவை பற்றி எதுவும் கூறாமல், "வணக்கம்ணே" "வந்தாச்சு" "ஓட்டு போட்டாச்சு" என்று பின்னூட்டமிடும் பதிவர்களை பற்றிய தங்கள் கருத்து என்ன?  
அவங்க எல்லாம் என் ஃபிரண்ட்ஸ். அட்டண்டன்ஸ் போட்டுட்டு போறாங்க.. உங்களுக்கு ரொம்ப கஷ்டம்னா சொல்லுங்க. வேற மாதிரி கமெண்ட் போடச்சொல்லிடறேன்
 6. நீங்களும் மற்றவர்கள் பதிவுகளில் "முதல் வெட்டு" "கெடா வெட்டு" என்று கமெண்ட் போடுகின்றீர்களே.. அது பதிவை படித்து விட்டு போடுகின்றீர்களா அல்லது பதிவை படிக்காமல் அவர்கள் உங்களுக்கு இட்ட பின்னூட்டங்களுக்காக நீங்கள் திருமப இடும் பின்னூட்டங்களா?  
நான் ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 10 பேரின் பதிவுகளாவது படிக்கறேன்.. சாண்டில்யன் நாவலையே வரி விடாம படிக்கறவன்  இங்கே எழுதப்படும் பதிவுகளை படிக்க மாட்டேனா? மொய்க்கு மொய் வைப்பது தமிழனின் பாரம்பரியம்.. உங்களுக்கு யாராவது வணக்கம் சொன்னா நீங்க என்ன சொல்வீங்க? பதில் வணக்கம் சொல்வீங்க தானே? அந்த மாதிரி தான் மொய்க்கு மொய் கமெண்ட்டும்.. டைம் இருக்கறப்போ மொய் வைப்பேன்,இப்போ 5 மாசமா கரண்ட் அடிக்கடி கட் ஆகறதால மொய் வைக்க முடியல.. 
 7. தாங்கள் இதுவரை எழுதிய ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுகளில் மிக தரமான பதிவுகள் என்று தாங்கள் கருதுபவை எவை? (ஹிட்ஸ் அடிப்படையில் அல்ல) ஒரு மூன்று பதிவுகளை குறிப்பிடுங்கள்   

1.ஈரோடு ஹாஸ்பிடலில் நடந்த நூதன மோசடி-http://www.adrasaka.com/2010/12/blog-post_02.html




2.ஈரோடு தனியார் வங்கியில் நடந்த செக்ஸ் மோசடி http://www.adrasaka.com/2010/12/blog-post_10.html

3.புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்http://www.adrasaka.com/2011/01/blog-post.html

 8. தங்கள் வலைக்கு வந்து செல்லும் வாசகர்களை ஏமாற்றாத வண்ணம் உங்கள் பதிவுகள் அமைகின்றது என எண்ணுகின்றீர்களா? 

கண்டிப்பா.. காலையில் ஜோக்ஸ் அண்ட் ட்வீட்ஸ் போஸ்ட், மதியம் ஏதாவது ஒரு சினிமா விமர்சன போஸ்ட், மாலை அரசியல் நிகழ்வு போஸ்ட், நைட் தேவைப்பட்டா ஏதாவது ஒரு சிறுகதை - இலக்கியம், பொழுதுபோக்கு, சினிமா  என எல்லா ஏரியாவும் கவர் பண்றேன்
, இன்னும் ஏதாவது ஆலோசனை இருந்தா யார் வேணாலும் சொல்லலாம், பரிசீலக்கப்படும்
9. மற்ற வலைப்பதிவுகளில் இல்லாமல், உங்கள் வலையில் இருக்கும் தனித்தன்மை என எதை நீங்கள் கருதுகின்றீர்கள்?

எல்லாரும் அவரவர்க்கென்று ஒரு தனிப்பாதை வெச்சு இருக்காங்க.. எனக்குன்னு நானும் ஒரு தனிப்பாதை வெச்சிருக்கேன்..பரப்பான அரசியல் நிகழ்வுகள் எது நடந்தாலும் உடனுக்குடன் அது பற்றிய காரசாரமான ஒரு பதிவு, வெள்ளிகிழமை ஆனா ரிலீஸ் ஆகும் புதுப்பட விமர்சனம், இப்படி போய்க்கிட்டு இருக்கு.. படத்தில் வரும் மனம் கவர்ந்த வசனங்கள் இதுவரை யாரும் முயற்சிக்காதது.இதுக்கு மேல படிக்கறவங்க தான் சொல்லனும்.. நானே லிஸ்ட் போட்டா அது தம்பட்டம் அடிக்கற மாதிரி ஆகிடும்

- முத்துசிவா

 

 10.நான் படிச்ச வரை உன்க்க சினிமா விமர்சனத்துல எல்லா படத்துலயும் எதாவதொரு குறை சொல்லி இயக்குனர்கிட்ட ஆலோசனையும், சந்தேகமும்ன்னு ஒரு பாரா போட்டிருப்பீங்க. எந்த ஒரு சின்ன குறையுமே கண்டுப்பிடிக்க முடியாத எந்த ஒரு படத்தையும் நீங்க பார்த்ததில்லையா? அப்படி பார்த்திருந்தால் அந்த படத்தின் பேரை சொல்லுங்க.


மகேந்திரனின் உதிரிப்பூக்கள் .. லாஜிக் மிஸ்டேக்கோ ,சினிமாத்தனமோ இல்லாத நல்ல படம், விரைவில் இதன் விமர்சனம் போடுவேன்



11. முதல்வன் படத்துல வர மாதிரி ஒரு நாள் முதல்வரா மாத்திட்டா பதிவுலகத்துக்கும் சினிமா உலகத்துக்கும் நீங்க என்ன செய்வீங்க.?



பதிவர்கள் அனைவரையும் கவர்மெண்ட் ஆஃபீசர்ஸ் ஆக்கிடுவேன், அப்புறம் யாரும் கவர்மெண்ட் ஆஃபீசர்ஸ் எல்லாம் என்னத்தை கிழிக்கறாங்கன்னு கேட்க முடியாது, ஏன்னா யாராவது டெயிலி அவங்களூக்குப்பிடிக்காத பதிவரை போட்டு கிழி கிழின்னு கிழிச்ச்ட்டுதான் இருப்பாங்க




சினிமா உலகத்துக்கு என்ன செய்வேன்னா - படத்துல கொஞ்சமாச்சும் கதை இருக்கனும், அது ஃபாரீன் பட டி விடி ல இருந்து சுட்டு இருக்கக்கூடாது, எழுத்தாளர்களின் நாவலில் இருந்து படம் எடுத்தா வரி விலக்கு..





12. சினிமா விமர்சனம், ஜோக்குலலாம் மேட்சிங், டிரெஸ்சென்ஸ் பத்தி டிப்ஸ் அள்ளி விடும் நீங்க மட்டும், சிவப்பு, புளூன்னு கண்ணை நொள்ளையாக்குற மாதிரி புரொஃபைல் போட்டோ போட்டிருக்கீங்களே ஏன்?



சிவப்பு என்ன சொல்ல வருதுன்னா சி பி ஓ பாசிடிவ் ரத்த வகைக்காரர், ரத்த தானம் செய்பவர்

 நீலம் - ஆகாயத்தை குறிக்கும்.. பரந்து விரிந்த மனசுக்காரர்னு அர்த்தம்.. மற்றபடி வேற ஏதும் இல்லை.. டார்க் கலர் தான் ஃபோட்டோவுக்கு நல்லாரு



13. இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான ஜோக்ஸ் எழுதி பத்திரிகைக்கு அனுப்பி, 10,000 க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் பத்திரிகைல ஜோக்ஸ் வெளிவந்திருக்குன்னு ஒரு பேட்டில சொல்லியிருக்கீங்க. அது இல்லாம கதை, கவிதைலாம் எழுதி திரும்பி வந்திருக்குன்னு சொல்லியிருக்கீங்க. அப்படி திரும்பி வந்த பேப்பர்களை என்ன பண்ணீங்க?


பப்ளிக் பப்ளிக்.. எல்லா பேப்பர்ஸையும் காலேஜ் அரியர்ஸ் பேப்பர்ஸோட சேர்த்துட்டேன் ஹி ஹி 




14 ஈரோடுல இருக்குற ஒரு தியேட்டர் விடாம வாராவாரம் விசிட் அடிக்குறீங்களே!? சென்னிமலை முருகன் கோவிலுக்கும், பவானி ஆற்றாங்கரை அம்மன் கோவிலுக்கும் மாசம் ஒரு முறையாவது விசிட் அடிக்கும் பழக்கம் உண்டா? 


கடைசி 5 கேள்விகள் - காணாமல் போன பிளாக் சாரி காணாமல் போன கனவுகள் ராஜி




எங்கப்பா இறந்ததில் இருந்து எனக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சு.. ஆனா கோயிலுக்கு போவேன்,, பிரசாதத்துக்காகவும், ஐ சர்வீஸ்க்காகவும்.. இனிமே வாரா வாரம் ட்விட்டர்ல , ஃபேஸ் புக்ல கோயில் அப்டேட்ஸ் ஃபோட்டோ போடறேன்

 


 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை 
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)   
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html  
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html  
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  
 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html  
டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html
டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html
டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html
டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html
டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html
டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html
டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html அ