Showing posts with label TWEET UP. Show all posts
Showing posts with label TWEET UP. Show all posts

Monday, June 04, 2012

அப்பாடேக்கர் ட்வீட்டரின் பேட்டி -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 7

சென்னையில் நடந்த மெகா ட்வீட்டப்ல வாழை அமைப்பு பற்றி திவ்யா மேடம் பேசிய உரை தான் இந்த பதிவுல முதல்ல வந்திருக்கனும்.. ஆனா தமிழனான நான் தமிழ் சினிமா பார்த்து பார்த்து கெட்டுப்போனதால கருத்து சொல்றதை ஓப்பனிங்க்ல வெச்சுக்கறது இல்லை.. இடைவேளைக்குப்பிறகுதான் .. அவர் பேசியதின் சாராம்சம்


வாழை

சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த இயந்திர வாழ்வில், பள்ளிப்பருவத்தின் முக்கியம் அறியாத கிராம குழந்தைகளுக்கு வழிகாட்டியாக சிலர் செயல்படுகிறார்கள் என கேள்விப்பட்டேன். வார இறுதி ஓய்வுநாளை எப்படி செலவு செய்வதென்று அறியாமல் பல இளைஞர்கள் உள்ளனர். வாழையை பற்றி அறியாதவரை நானும் அப்படிதான் இருந்தேன்.


நம் சமுதாயத்தை எப்படியாவது மாற்றவேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் செயல்படவேண்டுமென தெரியாமல் இருப்போம். நமக்கும் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது நம் வாழை. நம் சமுதாயத்தில் அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைத்தால் போதும், இந்த சமுதாயமே மேன்படும். இதனை அடைவதற்கு வாழை சிறந்த செயல்முறையை வரையறுத்துள்ளது, நம்முடைய பங்கு இதனை செயல்படுத்துவதில்தான் உண்டு.

மாதம் ஒரு முறை கல்வி பட்டறைக்கு செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் பட்டறை செயல்படுத்த தேவைப்படும் மூலபொருளை தயார்படுத்தி இருப்பர் (வரப்போகிற பட்டறைகளுக்கு நாமும் உதவலாம்), நாம் அதனை செயல்படுத்த உதவினால் போதும். அந்த பட்டறையில் கல்வி மற்றும் soft skills பற்றிய sessions இருக்கும்.

கல்விக்கு மேல் குழந்தைகளுக்கும் நமக்கும் ஒரு அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை உறவை வாழை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த உறவு பட்டறை முடித்து நாம் வீடு திரும்பிய பிறகும் தொடரும். அவர்களுடன் கடிதத்தின் மூலமாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாகவோ தொடர்புகொண்டு அவர்களின் முன்னேற்றத்தை நாம் அறிந்து கொள்ளலாம், மேலும் அவர்களை ஊக்குவிக்கவும் செய்யலாம்.
வாழை நம்மிடம் எதிர்பார்ப்பது:

1. நம்முடைய நேரம் (மாதம் ஒருமுறை கிராமத்திற்கு சென்று கல்வி புகட்ட)

2 குழந்தைகளிடம் செலவிட சில நேரம் (வாரம் ஒருமுறை அவர்களிடம் தொலைபேசியில் பேச)

3  வருடத்தில் 12 முறை பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும்

4 வாழை யாரிடமும் கட்டாயமாக பணம் எதிர்பார்பதில்லை, விருப்பப்பட்டவர்கள் வருட சந்தாவோ அல்லது நன்கொடையோ அளிக்கலாம்

5 . கல்வி பட்டறைக்கு சென்று வர பேருந்து சந்தா.

வாழைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்


இவங்க பேசி முடிச்ச பின்னால நான் கொஞ்சம் ஹால்க்கு வெளீல வந்தேன்.. அப்போ பல்லவ மன்னன் அங்கே நின்னுட்டு இருந்தாரு..அவர் கிட்டே பேசுனது..


 “ யோவ்.. என்னய்யா நயன் தாராவை பறி கொடுத்த சிம்பு மாதிரி பம்மிக்கிட்டு நிக்கறீங்க? உள்ளே தானே ட்வீட்டப் மீட்டிங்க் நடக்கு.. இங்கே என்ன பண்றீங்க? “


 இல்லை மாப்ஸ்.. என்னை பிளாக் பண்ணிட்டாரு ஒரு பிரபல ட்விட்டர்... அவர் இப்போ இங்கே வந்திருக்காரு. அவர் கிட்டே  ஏன் என்னை பிளாக் பண்ணிட்டீங்க?ன்னு கேட்கலாம்னு வந்தேன்..


இதெல்லாம் சப்ப மேட்டர்.. அவர் என்ன இண்ட்டர் நேஷனல் ஃபிகரா? அவர் பிளாக் பண்ணுனா என்ன லாஸ் உங்களுக்கு? ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்த மடம்.. “இவர் போனா வேற ஒருத்தர் வந்துட்டு போறாருன்னேன்..


அவர் உடனே சொன்ன ஃபிளாஸ்பேக் ( இதில் அவன் இவன் என அவரைப்பற்றி இவர் குறிப்பிடுவது ஒரு உரிமையிலும், பழக்கத்திலும்)


ஆரம்பத்தில் நானும் அவனும் நல்ல முறையில் தான் நட்போடு இருந்தோம்.. அவனோட ஸ்பெஷாலிட்டி டைமிங்காக காமடி பண்ணுவது தான்.. அவன் மூலமாக தான் எனக்கு பிரீயாவுடு டேவிட் அறிமுகம் ஆனார். ஒருநாள் திடீர் என்று அவன் டுவீட்ஸ் வராததை கண்டு அவன் ப்ரோபைல் பேஜை கிளிக் செய்தேன்.

அப்போது தான் அவன் ப்ளாக் செய்தது தெரிய வந்தது.. நாம எதுவும் அவன திட்டவோ கிண்டலோ செய்யலையே எதுக்கு ப்ளாக் செஞ்சான் என்ற ஆதங்கம் இருந்தது..

அப்போது தான் ரியல்பீனு புதிதாக டுவீட்டார் வந்த நேரம். அந்த பெண் அவரிடம் மேன்ஷன் போட்ட போது ஸ்டுபிட் என்று பதில் அளித்தார் DKCBE.

பிரீயாவுடு டேவிட் ,வாலிபன் ஷேக் போன்றவர்களுக்கு போன் செய்து கேட்டதில் அவர்களும் சொன்னார்கள் தீபக் எப்போ ப்ளாக் பண்ணுவான் எதுக்கு ப்ளாக் பண்ணுவான் என்றே தெரியாது அவன் ரொம்ப சென்சிடிவ் என்றார்கள்.

எனக்கு முன் புரட்சிகனல்SGR என்பவரை ப்ளாக் செய்தார் தீபக். அப்போது SGRக்காக நான் தீபக்கிடம் கேட்டபோது his tweets are stereotypic என்று பதில் அளித்தார்..

ஒருநாள் திடீர் என்று எனக்கு தீபக் மேன்ஷன் போட்டு "yes I have unfollowed and going to block riyazdentist " grow up kids .. U are not replying my mentions 

என்ற டுவீட் போட்டார். அதுக்கு நான் பதில் சொன்னேன் நான் எந்த ஒரு mentionக்கும் பதில் அளிக்காமல் இருந்ததில்லை.. ஒருவேளை groupப்பாக ரயில் வண்டி சாட் நடக்கும் போது தவறி இருக்கலாம் என்றேன். போனில் தொடர்புகொன்டாலும் பிக்கப் பண்ண மாட்டான்.

கோவை டுவீடப் நடந்த போதும் அதை தொடர்ந்து திருச்சி டுவீட்டப் போதும் நான் கால் பண்ணி அவன் எடுக்கவே இல்ல .

இப்போ அபோ நேரில் சந்தித்து கேட்டேன்., அதுக்கு அவன் பதில் " I don't like your tweets so blocked" that is my wish  ஃபிளாஸ்பேக் ஓவர்

இதானா மேட்டர்... விடுங்க கேட்டுடலாம்.. அப்டின்னேன். இங்கே ஒரு விஷயம் நல்லா கவனிங்க.. டாக்டர் ரியாஸ் அந்த பிரபல ட்வீட்டரை நண்பர் என்ற முறையில் பழகிய பழக்கத்தை வைத்துத்தான் அவன் இவன் என்ற நடையில் பேசி இருக்கார்..இப்போ அந்த பிரபல பிளாக் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ஒரு பேட்டி 


அண்ணே, வணக்கம்னே... கின்னஸ் ரெக்கார்டுல இடம் பிடிக்கற அளவு  ஏகப்பட்ட பேரை பிளாக் பண்ணி இருக்கீங்க.. என்ன ரீசன்னு சொன்னீங்கன்னா உங்களுக்குப்பின்னால வர்ற  இளம் சந்ததியினர் திருந்துவாங்க, பல விஷயம் தெரிஞ்சுக்குவாங்க.
எனக்கு இங்க்லீஷ்ல ட்வீட் போட்டா பிடிக்காது.. நான் கலைஞர் மாதிரி பயங்கரமான தமிழ்ப்பற்றாளன். அதனால இங்க்லீஷ்ல யார் ட்வீட் போட்டாலும் உடனே பிளாக் தான்..ஒருத்தன் எனக்கு குட்மார்னிங்க்னு ட்வீட் போட்டான், உடனே அவனை பிளாக் பண்ணிட்டேன்

 அண்ணே, நீங்க பண்றது அநியாயம்... GM  னு இங்க்லீஷ்ல போடறது ஈசியா? காலை வணக்கம்னு போடறது ஈசியா? அதுவும் இல்லாம அவர் மொபைல் ட்வீட்.. தமிழ் விசை ஒர்க் ஆகலையாம்.. பார்த்து மன்னிச்சு விட்டுடுங்கண்ணே

அதெல்லாம் முடியாது.. நான் கலைஞர் மாதிரி, கொண்ட கொள்கைல இருந்து என்னைக்கும் மாறவே மாட்டேன்


ஓஹோ.. உங்க ஆட்டோகிராஃப் இந்த டைரில போட்டுக்கொடுங்கண்ணே...


இந்தா. பொழச்சுப்போ..


அண்ணே.. இப்போதான் தமிழன்.. தமிழ் என் மூச்சு... பேச்சுன்னு சொன்னீங்க.. உங்க பேரைக்கூட இங்க்லீஷ்ல தான் போடறீங்க, அது ஏண்ணே?


 அது வந்து.....  வந்து.. ம் எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காது. மென்ஷன்க்கு பதில் சொல்லலைன்னா பிடிக்காது. உனக்குக்கூட மென்ஷன் போட்டு ஒரு கேள்வி கேட்டேன், நீ பதில் சொல்லலை, உடனே பிளாக் தான்..


 அப்டி என்னண்ணே கேள்வி கேட்டீங்க. நான் கவனிக்கலை. மன்னிச்சுடுங்கண்ணே.. இப்போ அதே கேள்வியை திருப்பிக்கேளுங்க.. பிரமாதமா பதில் சொல்றேன்....

 உனக்கு மூளை இருக்கா?
 ம்க்கும்.. இதான் அந்த கேள்வியா?இந்த மாதிரி கேள்விஎல்லாம் டைம் லைன்ல கேட்டா எபப்டி பதில் சொல்ல? டி எம் ல கேட்டிருந்தா “ இல்லை”ன்னு டக்னு சொல்லி இருப்பேன்..


 நான் தான் உன்னைக்கண்டுக்கவே இல்லையே. எதுக்கு வலியனா வந்து என் கிட்டே பேசறே.. ? அண்ணே.. எல்லாம் ஒரு பொதுசேவை தான்.. மக்களுக்கு பல விபரங்கள் போய்ச்சேர வேணாமா? அது இருக்கட்டும்.. இந்த மெகா ட்வீட்டப்க்கு தோராயமா  120 பேரு வந்திருக்காங்கன்னு அட்டெண்டென்ஸ் ரிஜெஸ்டர் சொல்லுது.. ஆனா நீங்க மட்டும் தான் நடமாடும்  சாராயமா வந்திருக்கற மாதிரி தெரியுது. அது ஏன்?


சரக்கடிக்காமல் ஒரு நாளும் இருக்க வேணாம் - இதுதான் என் பாலிஸி.. அது என் பர்சனல் மேட்டர். அதைக்கேட்க நீ யார்டா வெண்ணே..

அண்ணே. சரக்கடிச்சு நீங்க குப்புறக்கா, அப்புறக்கா உங்க வீட்லயோ, ரோட்லயோ கிடந்தா எவன் கேட்குறான்.. பொது இடத்துல மப்போட வந்திருக்கீங்களே.. அது சரியா?ன்னு கேட்கறேன்...


 நான் வந்து யார் கிட்டேயாவது தகராறு பண்ணேனா? யாருக்காவது டிஸ்டர்பா இருந்தேனா? நான் பாட்டுக்கு ஓரமா விழுந்து கிடந்தேன், என் மப்பு என் சரக்கு என் உரிமை.....


சாரிண்ணே.. ஓக்கே .. இனி ஏதும் கேட்கலை.. பை..


கடைசில சாப்பாடு.. பிரமாதமா இருந்துச்சு.. அருமையான சமையல்.. ஏற்பாடுகள். சுடச்சுட பரிமாறுனாங்க.  குலோப்ஜாமூன் 2 , ஒரு வெஜிடபிள் சூப்.. வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி.. தயிர் சாதம் என ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு நிகரான கலக்கலான  டிஃபன் ஐட்டம்ஸ்.  ரூ 160 மதிப்புள்ள உணவு என அறியத்தகவல்...

 பல உற்சாகமான அனுபவங்களை மறக்க முடியாத ஞாபகங்களை இந்த சந்திப்பு தன்னகத்தே கொண்டது.. கருத்து வேற்றுமைகள், சில மனஸ்தாபங்கள் எழுந்தாலும் இந்த சந்திப்பு வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பாக இருந்தது..

 மீண்டும் ஒரு முறை விழா ஏற்பாட்டாளர்கள்  எக்ஸ்பர்ட் சத்யா, கரையான், பரிசல்காரன், கேசவன், பாலு அனைவருக்கும் நன்றிகள்.. விழாவை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துகள்.. 


டிஸ்கி-

இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html


Monday, May 28, 2012

பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 6

ஒவ்வொரு மனுஷனுக்கும் மறுபக்கம்னு ஒண்ணு உண்டு.. இதை படிச்சுட்டு இருக்கற நீங்களும் சரி, இதை டைப் அடிச்சுட்டு இருக்கற நானும் சரி, இதுக்கு விதி விலக்கல்ல.. விமர்சனம் எப்போ வரும்னா ஒரு மனிதனின் இருண்ட பக்கம், அல்லது அவனது கறுப்பு முகம் மத்தவங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறப்ப.. 

விவாஜி என்ற நண்பர் கம் ட்வீட்டர் 4 நாட்களுக்கு முன்னால டைம் லைன்ல ஒரு ட்வீட் போட்டார்.. “ கவர்ச்சிகரமான , கிளாமர் நடிகைகளின் ஸ்டில்களை வெளியிடும் அட்ரா சக்க வில் இந்த ------------ பெண் ட்வீட்டரின் ஃபோட்டோவும் வந்திருக்கு, நடிகைகளின் தர வரிசையில் வந்த அவருக்கு என் வாழ்த்துகள்” அப்டின்னார்.. 

அந்த பெண் ட்வீட்டரின் பெயரையும் அதில் மென்ஷன் பண்ணி இருந்தார்.. நான் உடனே கேட்டேன்.. சார், நீங்க அந்த பெண் ட்வீட்டரின் குடும்ப நண்பர் கம் வெல்விஷர். நீங்க டைம் லைன்ல இப்படி சொல்லலாமா?

 அதுக்கு அண்ணன் ரிப்ளை பண்ணுனாரு “ அதை ஆல்ரெடி நாங்க பேசிட்டோம்.. இப்போ பொது வெளில கேட்கறேன் பதில் சொல்லுங்கன்னாரு. ‘

வாக்குவாதத்தை தவிர்க்கவும், தேவை இல்லாமல் அந்த பெண் ட்வீட்டருக்கு மன உளைச்சல் வரக்கூடாது என்பதற்காகவும் நான் பதில் ஏதும் தர்லை, விட்டுட்டேன்.. அன்று இரவு 9 மணியில் இருந்து 12 மணி வரை அந்த பெண் ட்வீட்டரும் , அண்ணன் விவாஜி அவர்களும் வாக்குவாதம் செஞ்சாங்க .. இப்போ நான் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.. 


அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான முதல் கேள்வி - அட்ராசக்க பிளாக் டபுள் எக்ஸ் படம் எல்லாம் போடும் கேவலமான பிளாக்.. அதுல கவுரமான ஸ்டில் உள்ள ஒரு போஸ்ட்டை காட்டு பார்க்கலாம். நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்.அந்த பிளாக்கில் போடப்படும் ஃபோட்டோக்கள் எல்லாமே மோசமானவை. கவர்ச்சிகரமானவை.. ஒரு நல்ல போஸ்ட் நான் பார்த்ததில்லை..  (
additionally, with XX pics for marketing.) எனது பதில்  - அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு, தருமரின் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாருமே நல்லவங்களா தெரிஞ்சாங்களாம், துரியோதனன் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாரும் கெட்டவங்களா தெரிஞ்சாங்களாம்.. அந்த மாதிரி நீங்க கில்மா ஸ்டில் உள்ள படங்களா தேடித்தேடி போய் பார்த்திருக்கீங்க. அதான் அப்படி நினைக்க வெச்சிருக்கு. நான் இதுவரை 1357 போஸ்ட் போட்டிருக்கேன்.. அதுல சினிமா விமர்சனங்கள் போஸ்ட் 287... சினிமா நடிக நடிகைகளின் பேட்டி 146 , ஆக மொத்தம் 433 போஸ்ட்டில் மட்டும் தான் கிளாமர்  ஸ்டில்ஸ் வந்திருக்கு,, நான் போஸ்ட் போடற பேட்டர்னல டெயிலி காலைல ட்வீட்ஸ்களின் தொகுப்பா ஒரு போஸ்ட் போட்டுட்டு வர்றேன்.. அதுல நல்ல விதமான இயற்கை காட்சிகள், பறவை இனங்கள் ஃபோட்டோ எல்லாம் இருக்கு.. தயவு செஞ்சு அதை பார்க்கவும். 


எனது 1000 வது பதிவில் எங்கம்மா ஃபோட்டோ போட்டிருக்கேன். எனது 789 வது பதிவில் எனது குடும்ப பெண்களின் ஃபோட்டோ போட்டிருக்கேன். அதை எல்லாம் நீங்க பார்க்கலையா? கிளாமர் ஸ்டில் ஆல்ரெடி ஏதாவது போஸ்ட்டில் போட்டிருந்தால் மற்ற லேடீஸ் ஃபோட்டோ போட்டா கேவலமா?


அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான 2வது கேள்வி - கிளாமரான நடிகை ஃபோட்டொக்கள் போடும் ஒரு பிளாக்கில் கவுரமான, குடும்ப பெண் ஃபோட்டோ போட்டாலும் பார்ப்பவர்கள் தவறா தான் நினைப்பாங்க . 
எனது பதில் - ஆனந்த விகடன் இதழில் கிளாமரான நடிகை ஃபோட்டோகள் வரவில்லையா? கலகலப்பு பட ஸ்டில்லான அஞ்சலி , ஓவியா ஃபோட்டோகள் வந்த போது நீங்க அதை பார்த்து ரசிக்கலையா?ஆனந்த விகடனில் இதுவரை 887 கிளாமர் ஸ்டில்ஸ் 1998 இலிருந்து 2012 வரை வந்திருக்கு.. அப்படி கிளாமர் ஸ்டில் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் நல்ல குடும்ப பெண்ணின் ஃபோட்டோ வந்தால் அவரும் தவறாகத்தான் பார்க்கப்படுவாரா?


இதே ஆனந்த விகடனில் வலையோசை பகுதியில் அண்ணன் விவாஜியின் வலைப்பக்கம் பற்றி அறிமுகம் வந்தது.. மகிழ்ச்சி.. அப்போ அண்ணனும் அதை கொண்டாடுனார்.. தன் சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.. எனக்கும் மகிழ்ச்சியே. ஆனா கிளாமர் ஸ்டில்ஸ் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் தன் பிளாக்  அறிமுகம் வந்துடுச்சேன்னு அவர் ஏன் வருத்தப்படலை?மாறாக பெருமை தான் பட்டார்..  காரணம் ரொம்ப சிம்ப்பிள்..  அந்த கிளாம்ர் ஸ்டில் வந்தது அந்த கட்டுரை அல்லது செய்திக்கு மேட்சாக.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.. 


6 லட்சம் பேர் படிக்கும் ஒரு பத்திரிக்கைக்கு ஒரு நியாயம். 2000 பேர் தினசரி படிக்கும் வெப்சைட்டுக்கு ஒரு நியாயமா?


3. அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான  3 வது கேள்வி -பிளாகில் சி பி மார்க்கெட்டிங்க்காக கவர்ச்சிகரமான டைட்டில்களை வைக்கிறார். என்பது..


 அவர் கேள்வியிலேயே பதில் இருக்கு.. ஒருசினிமாப்படம் ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு ஒட்டப்படும் போஸ்டர் ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி ஒரு பதிவு போட்டா அதுக்கு மக்களை கவரக்கூடிய தலைப்பு முக்கியம்.. அதனால தான் அப்படி போடறேன், அதுல என்ன தப்பு இருக்கு?அண்ணன் மற்றும் குடும்ப நண்பர் விவாஜி அவர்களின் அறிவுபூர்வமான ட்வீட்ஸ்

1.  I say it is wrong. தொடையும் தொப்புளும் இருக்கிற பதிவுல இந்தப் பெண்ணோட படத்துக்கு என்ன வேலை


2.  Didnt I try to explain this yesterday? I am saying you are not wrong, you pictures are place in wrong place


3. Respect are all not to mention in Public, thats different. I say you should whom you are dealing with4.  Oh coming to Character Assassination, let it be.நான் இப்படித்தான்

5,சொல்லனுமா? மகா மட்டமான/ cheap title பதிவுகளா போட்டா எவன் மதிப்பான்? 


6. உங்க மத்த பதிவுகள்ல நல்ல படங்கள் போட்டிருக்கீங்களா? #பனைமரம் #கள். 


அண்ணன் விவாஜியிடம் எனது கேள்விகள்1. மேலே சொன்ன 2 பாயிண்ட்சை விடுங்க.. உங்க குடும்ப நண்பர் ஃபோட்டோ என் பிளாக்ல வந்தது உங்களுக்கு பிடிக்கலை.. ஓக்கே ஒத்துக்கறேன்.. நேர்மையான, அவர் மேல் அக்கறை உள்ளவரா இருந்தா நீங்க என்ன செஞ்சுருக்கனும்? எனக்கு ஒரு ஃபோனை போட்டு அந்த ஃபோட்டோவை எடுத்துடுப்பா என்றால் மேட்டர் ஓவர். ஏன் எனக்கு ஃபோன் பண்ணலை?அல்லது உங்க குடும்ப நண்பரிடம் ஃபோனிலோ, டி எம்மிலோ அதை சொல்லி இருந்தாலும் மேட்டர் ஓவர். அதை ஏன் நீங்க செய்யலை?


2. ஒரு முறை குறும்படம் பற்றி டைம்லைன்ல ஒரு ட்வீட் போட்டீங்க. அதுக்கு நான் பதில் போட்டேன். நீங்க கதையோட  ஒன்லைன் சொல்லி அதுக்கு திரைக்கதை அமைக்க முடியுமா?ன்னீங்க..  செய்யறேன்னேன்.. அது சம்பந்தமான உரையாடலில் நீங்க ஐ எஸ் டி  கால் போட்டு எனக்கு 19 நிமிசம் பேசுனீங்க.. உங்க வேலை ஆகனும்கறதுக்காக செலவு பண்ணி ஃபோன் பண்ற நீங்க உங்க குடும்ப நண்பருக்காக 2 நிமிஷம் செலவு பண்ண முடியலையா? ஏன்?


3. உங்களுக்கு ஒரு தங்கை அல்லது அக்கா இருந்து இப்படி ஒரு ஃபோட்டோ நான் போட்டிருந்தா  அவங்க பேர் வெளீல வராம ஃபோன் பண்ணி சொல்லி இருப்பீங்களா? அல்லது இப்படி டைம் லைன்ல பேசி அவங்க பேர் வெளில வரட்டும்னு செஞ்சு இருப்பீங்களா?நம்மால பிரச்சனை எதுக்கு? என நான் அந்த ஃபோட்டோக்களை எடுத்துட்டேன். உடனே ஒரு பிரபல புத்திசாலி ட்வீட்டர் “ என்ன அந்த போஸ்ட்ல இருந்த ஃபோட்டோக்களை காணோம்? காக்கா தூக்கிட்டு போயிடுச்சா? என கேட்டார் .. காமெடியாம்.. ஹா ஹா சிரிச்சாச்சு. பெண் குயின் என்ற போஸ்ட் போட்டப்ப அந்த போஸ்ட்டில் பெண் ட்வீட்டர்களை  ஜாலியா கலாய்ச்சு அவர்கள் மனம் நோகா வண்ணம், அவர்களும் ரசிக்கும்படியாகத்தான் பட்டப்பெயர் வெச்சு எழுதி இருந்தேன். அப்போது ஏதும் சொல்லாத ஒரு பிரபல ஆண் ட்வீட்டர் 3 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டருக்கு ஃபோன் போட்டு டார்ச்சர் செய்து இருக்கிறார்.. “ உன்னை பற்றி வர்ற லைன்ஸை எடுக்க சொல்லு.. எதுக்காக உன் பேரு வருது? “ என 


அவர் டி எம்மில் கேட்டார், நான் உடனே எடுத்துட்டேன். அப்படி மிரட்டிய பிரபல ட்வீட்டரிடம் நான் கேட்பது “ உங்க தோழியிடம் உண்மையிலேயே அக்கறை உள்ள நல்லவர் எனில் ஏன் போஸ்ட் போட்ட அன்னைக்கே அதை சொல்லலை? அதை நீங்க படிக்கலைன்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. அந்த போஸ்ட் போட்ட அன்னைக்கே மாலை 6 மணிக்கு நீங்க அந்த போஸ்ட் பற்றி உங்க நண்பர்களிடம் டிஸ்கஸ் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தது என்றதும் உங்க ஈகோ தலை தூக்கி.. “ ஓஹோ. நீ என்னை இப்படி மடக்கிறியா?நான் எப்படி உன்னை மடக்கறேன் பாரு? என்ற ஈகோ தான் அதுல தெரியுதே தவிர தோழி மீது நீங்க வெச்ச நட்புக்காக செஞ்ச மாதிரி எனக்கு தெரியல .. 


ட்வீட் உலகின் நாட்டாமை என்று அழைக்கப்படும் ஒரு பெரியவர் கேட்கும் புத்திசாலித்தனமான கேள்வி

பிரச்சனை இவ்வளவு பெருசானப்பறமும் , அவர் இல்லை இவர் இல்லைன்னு வழவழகொழகொழன்னு இல்லாமா யாருன்னு சொல்லணும்

இல்லனா அவர் சொன்னது அனைத்தும் கட்டுக்கதை....விளம்பரத்துக்காக செய்தது..அவ்வளவே 


 அவருக்கு நான் கூறும் பதில் 


ட்வீட்டப்பில் நடந்த மேட்டர் பற்றிய போஸ்ட்டில் ஒரு பெண் ட்வீட்டரின் படம் போட்டதுக்கே இவ்வளவு எதிர்ப்பும், தாக்குதலையும் அந்த பெண்கள் சந்திக்க வேண்டி வரும் அவலமான இந்த சூழலில் நான் அந்த பெண் ட்வீட்டர் பெயரை சொன்னா என்ன ஆகும்னு உங்களுக்குத்தெரியாதா? சம்பந்தப்பட்ட பிரபல ட்வீட்டர் அந்த பெண்ணை போட்டு தாளிச்சிட மாட்டாரா?


தனி மனித  தாக்குதலில் எனக்கு விருப்பம் இல்லை.. எல்லோரிடமும் நட்புடன் பழகவே  ஆசை.. எனவே தான் பெயர் சொல்லவில்லை.. சொல்ல வந்த கருத்து என்ன என்பதை சொல்லியாச்சு.. 


நான் இதுவரை யாரையும் அன்ஃபாலோ செய்யவில்லை, யாரையும் பிளாக் செய்யவில்லை.. அதை எப்படி பண்றதுங்கறதே நிஜமா எனக்குத்தெரியாது.ஆனா சிலர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. அது பற்றி எனக்கு கவலை இல்லை.சும்மா ஒரு தகவலுக்காகத்தான் இதை சொல்றேன்.. 

 இன்னும் சில பிரபலங்கள் காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு இவர் ட்வீட்டை தேடிப்பிடிச்சாவது ஆர் டி பண்ணிடனும், ஆர் டி க்காக பிச்சை எடுக்கக்கூடாது, டைப் அடிப்பதெல்லாம் படைப்பு அல்ல , என்ற தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.. அவர்களுக்கு என் நன்றிகள்


நான் தனி ஆள்.. எனக்குன்னு எந்த குரூப்பும் கிடையாது.. ஆனால் சிலர் செட் சேர்த்துக்கிட்டு வேணும்னே டைம் லைன்ல என்னை நக்கல் அடிச்சு ட்வீட் போடறாங்க. அவர்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. நல்ல தெளிவு பெற அவர்கள் என் சென்னை ட்வீட் பதிவுகளை பொறுமையாக முழுவதுமாக படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்டாக்டர் ரியாஸ் உட்பட 187 பேரை பிளாக் செய்து புகழ்பெற்ற ஒரு ட்வீட்டரின் பேட்டி  பாகம் 7 லும், வாழை பற்றியும், மெகா ட்வீட்டப்பில் நடந்த பிரமாதமான சாப்பாடு, உபசரிப்பு,நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சத்யா, கரையான், பரிசல்காரன்,கேசவன் அவர்களுக்கு நன்றி சொல்லி பாகம் 8ம்  அடுத்தடுத்த நாட்களில் வரும்.


டிஸ்கி-

இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html

Wednesday, May 23, 2012

ஒரு தன்னிலை விளக்கம் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 5

பிரச்சனையை திசை திருப்பறதுல தமிழனை அடிச்சுக்க உலகத்துலயே ஆள் கிடையாது.. தானைத்தலைவர் , தமிழ் இனத்தலைவர்  டாக்டர் கலைஞரும் சரி ,ஒரு நாக்கு, ஒரு சொல் என வாழும் டாக்டர் ராம்தாசும் சரி ,பிரியமான தோழியை உள்ளே வெளியே சீட்டு ஆட்டம் மாதிரி கட்டம் கட்டி விளையாடும் புரட்சித்தலைவியும் சரி,நாட்ல என்ன பிரச்சனை நடந்தாலும் அதை அவங்களுக்கு சாதகமா ஆக்கிக்க , தமிழனை ஏமாற்ற ஏதாவது ரீல் விட்டு அறிக்கைங்கற பேர்ல காமெடி பண்ணுவாங்க.. அந்த மாதிரி தான் இருந்துச்சு என்னோட ஆர் டி பற்றிய நேற்றைய பதிவுக்கான விளைவுகள், எதிர் ட்வீட்கள்

நான் சொல்ல வந்த மேட்டர் என்ன? படைப்பு நல்லா இருந்தா அதை ஆர் டி பண்ணுங்க.. ஆளை பார்க்காதீங்க.. அதை யார் ட்வீட் பண்ணி இருந்தா என்ன? இதுதான் சொல்ல வந்தது.. அதை விட்டுட்டாங்க.. யார் அந்த பிரபல ட்வீட்டர்? மாயவரத்தானா? அதிஷாவா? லக்கிலுக் யுவ கிருஷ்ணாவா? அப்டின்னு கேட்டு ஆளாளுக்கு டி எம் பண்றாங்க, ஃபோன் பண்றாங்க.. அதை சொல்ல விருப்பம் இருந்தா நான் பதிவுலயே சொல்லி இருக்க மாட்டேனா?பேசாம அண்ணன் கானா பிரபாவை இதுல இழுத்துவிட்டுலாமா?ன்னு மீ யோசிச்சிங்க்.. ஏன்னா அவரும் என் ட்வீட்ஸ் ஆர் டி பண்ணதில்லை.. :0


 ஒரு பிரபல ட்வீட்டர் கம் பதிவர் வாலண்ட்ரியா ,வாண்ட்டடா ஜீப்ல ஏறி அது நானா? அப்டினு டைம்லைன்ல அவர் பங்குக்கு காமெடி பண்றார்.. ஆக்சுவலா அது அவர் அல்ல.. ஆனாலும் அவர் விசுவாசிகள் கம் நண்பர்கள் சப்போர்ட் பண்றோம்கற சாக்குல பிரச்சனையை திசை திருப்பறாங்க.. 


என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அதற்கான என் விளக்கங்களும்


1. பிரபல பதிவர் பொண்ணுங்க கிட்டே கடலை போடறது சி.பிக்கு பிடிக்கலை.. பொறாமைல தான் அப்படி வேணும்னே கற்பனையா புனைந்து சொல்றாரு .. -


இது தான் செம காமெடி.. தினமும் 18 மணி நேரமும் கடலை போடுவது ஒன்றையே தன் வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருக்கும் கடலை மன்னன் கட்டதுரையை விடவா அந்த பதிவர் பெரிசா கடலை போட்டுட்டார்? அவர் மேல் வராத பொறாமையா எனக்கு இவர் மேல் வந்துடப்போகுது?விடிகாலைல 3 மணிக்கு ஆரம்பிச்சு மிட் நைட் 12 வரை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்னு 3 பாஷைல 23 பேர்ட்ட கடலை போடறாரே குவிஸ் மன்னன் ரவி அவர் போடாத கடலையா இவர் போட்டாரு? நம்ம தல செந்தில்நாதன் 19 மணி நேரம் ஆன் லைன்லயே இருக்காரு.. அவர் போடாத கடலையா?அவ்ளவ் ஏன்?என்னையே எடுத்துக்குங்க , நான் போடாத கடலையா?

 இப்போ பொறாமைன்னா எப்படி வரும்னா நம்மை விட ஒருத்தர் டேலண்ட்டா இருக்கனும், அவருக்கு வந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காம இருக்கனும், அப்போ தான் பொறாமை வரும்.. என்னமோ நான் கடலையே போடாத மாதிரியும், அண்ணன் கடலை போட்டதால் தான் எனக்கு பொறாமை வந்த மாதிரியும் பேசறது எப்படி ஒத்துக்க முடியும் ?


2. திருப்புற சுந்தர கவர்மெண்ட்னு ஒரு ட்விட்டர் போட்ட எதிர் ட்வீட்டின் சாராம்சம் - ஏன் இதை செஞ்சே?ன்னு கேக்குறது எப்படி அத்து மீறலோ அதே போல் ஏன் இதை செய்யலைன்னு கேட்கறது அராஜகம்..


அண்ணன் என்ன சொல்ல வர்றார்ன்னா யார் கிட்டெயும் நீ போய் ஏன் ஆர் டி பண்ணலைன்னு கேக்காதே.. அது தனி மனித சுதந்திரம்.. அவங்கவங்க விருப்பம்.. பிடிச்சிருந்தா ஆர் டி பண்றாங்க, பிடிக்கலைன்னா விட்டுடறாங்க.. 


அவர் கருத்தை 100% நான் ஒத்துக்கறேன்.. இப்போ என் கேள்வியை அவர் சரியா புரிஞ்சுக்கலை.. அதாவது என் ட்வீட்டை ஏன் ஆர் டி பண்ணலை? என்பது என் கேள்வி அல்ல.. என் ட்வீட் எதுவும் ஆர் டி பண்ணாதவரு என் ட்வீட்டை பெண் பெயரில் போட்டதும் ஏன் ஆர் டி பண்ணாரு? என்பதுதான் கேள்வி..


3. இன்னொரு பிரபல ட்வீட்டர் சொன்னது - நிஜ‌மாக‌வே ----------தான் அவ‌ர் சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சா ஓட‌விட்டு ஒட்டு துணி இல்லாம‌ அவுத்துடுவேன் அவுத்து

  ஹா ஹா ஏன் இந்த கொலை வெறி? இப்போ என்ன ஆகிடுச்சு? கருத்து சுதந்திரம் இல்லையா? ஏதாவது சொன்னா உடனே டாக்டர் ராம்தாஸ் மாதிரி வன்முறைல இறங்கிடுவீங்களா? 


 4. ஒரு பிரபல பெண் ட்வீட்டர் சொன்னது - சாத்தான் வேதம் ஓதுது.. 


  ஏன் , ஒரு நல்ல விஷயத்தை நல்லவன் தான் சொல்லனுமா? கெட்டவன் சொல்லக்கூடாதா?( அதுக்காக நான் கெட்டவன்னு அர்த்தம் இல்லை) உங்க பேச்சுக்கே வர்றேன்.. எய்ட்ஸ் பற்றிய பிரசார கூட்டத்துக்கு ஒருத்தன் வர்றான் பாதுகாப்பான உறவு தேவை, சோ காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொல்றான்னு வைங்க.. உடனே ஆடியன்ஸ்;ல ஒருத்தன் எழுந்து “ உனக்கே எய்ட்ஸ் இருக்கு.. நீ எங்களை எச்சரிக்க என்ன தகுதி இருக்கு?ன்னு கேட்கற மாதிரி இருக்கு.. அவனுக்குத்தான் அதிக தகுதி இருக்கு.. அங்கே போகாதே  பாழுங்கிணறு இருக்குன்னு ஆல்ரெடி கிணத்துல விழுந்து அடி வாங்குனவனுக்குத்தான் சொல்ல அதிக தகுதி இருக்கு.. நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன? சொல்லப்படற விஷயத்தை மட்டும் பாருங்க
 5இந்தியாவின் நெம்பர் ஒன் ட்வீட்டரும்,5572 ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கறவருமான  அண்ணன் கார்க்கி போட்ட ட்விட்டர் லாங்கருக்கு என்  பதில் 


 நீங்க‌ எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்கிற‌ ஆளு. அப்ப‌டி இப‌ப்டின்னு உஷாரா டிஸ்க்ள‌ய‌ம்ர் போட்டு ஆர‌ம்பிக‌க்ணும்ன்னு தோண‌ல‌ சிபி. நீங்க‌ ப‌ரிச‌ல‌தான் சொல்ற‌தா இருந்தா நேரிடையா சொல்ல‌லாம். அது போல‌ அந்த‌ பெண் ட்விட்ட‌ர் யாரு, எந்த‌ ட்வீட்டுன்னு நேரிடையா சொல்லலாம். 


அந்த பிரபல பதிவர் பரிசல் அல்ல.. அதே போல் எனக்கு உதவி செய்த அந்த பெண் ட்வீட்டரை  அவங்க பேரை நான் ஏன் சொல்லனும்? அது தேவை இல்லாத பல பிரச்சனைகளை கொண்டாந்து விடும்..
அத‌ விட்டுட்டு ஏதோ கிசு கிசு ரேஞ்சுக்கு எழுதி இருப்ப‌த ர‌சிக்க‌ முடிய‌ல‌. முத‌ல்ல‌ நீங்க‌ மெகா ட்விட்ட‌ப்ல‌ பேசின‌ப்ப‌வே ஏன் யாரும் அவ‌ர த‌டுக்க‌ல‌, அட்லீஸ்ட் பேசி முடிச்ச‌ப்பின்ன‌ அது ப‌த்தி பேச‌லைன்னு கேட்டுட்டு இருந்தேன். உங்க‌ ஆர்டி ப‌ஞ்சாய‌த்து காமெடியா இருக்கு. யார் யார் எத‌ எத‌ ஆர்.டி ப‌ண்ண‌னும்ன்னு நீங்க‌ லிஸ்ட் போடுறீங்க‌. அதையும் சில‌ர் ம‌ன‌சுல‌ ப‌ட்டத‌ பேசுறீங்க‌, தேர்ந்த‌ ஜெய‌காந்தன் ந‌டைன்னு காமெடி ப‌ண்றாங்க‌. 


அண்ணே, நீங்க தான் காமெடி பண்றீங்க.. கூட்டத்துல மனசுல பட்டதை பேச எல்லாருக்கும் உரிமை இருக்கு.. சட்ட திட்டம் போட்டு இது இதுதான் பேசனும்னு ஏதாவது ரூல்ஸ் சொல்லி இருந்தீங்களா?  நான் எதை ஆர் டி பண்ணனும்னு லிஸ்ட் போடலீங்கோவ்.. நல்லா படிங்க.. அந்த போஸ்டடை,, என் பாயிண்ட்.. என்னோட நல்ல ட்வீட்டை ஆர் டி பண்ணாம என்னோட குப்பை ட்வீட்டை ஒரு பெண் பெயரில் போட்டப்ப மட்டும் ஏன் ஆர் டி பண்ணாரு? என்பதுதான்.. அதுக்கு பதிலை காணோம்.. சம்பந்தம் இல்லாம ஏண்ணே சண்டைக்கு வர்றீங்க? அண்ணே அந்த அளவு நான் ஒர்த் இல்லீண்ணே..புதுசா வ‌ர்ற‌வ‌ங‌க்ள‌ நிறைய‌ பேர் ஃபாலோ ப‌ண்ண‌ மாட்டாங்க‌. அத‌னால‌ அவ‌ர் ட்வீட்ஸ் பல‌ரும் ப‌டிக்க‌ வாய்ப்பு இருக்காது. அதையே நிறைய‌ ஃபாலோய‌ர்ஸ் இருக்கிற‌ ஆளு ஆர்.டி ப‌ண்ணும்போது அவ‌ரோட‌ எல்லா ஃபாலோய‌ர்ஸூக்கும் அந்த‌ ட்வீட் க‌ண்ணுல‌ ப‌டும். அப்ப‌ உட‌னே ஆர்.டி ப‌ண்ணுவாங்க‌. இந்த‌ சின்ன‌ லாஜிக் கூட‌ தெரியாம‌ க‌ல்யாண் ஜுவ‌ல்ல‌ர்ஸ் பிர‌பு ரேஞ்சுக்கு குர‌ல‌ உய‌ர்த்தி சீமான் ரேஞ்சுக்கு முஷ்டி ம‌ட‌க்கி நீங்க‌ அன்னிக்கு க‌த்தின‌தெல்லாம் ஹார்ட்கோர் காமெடி.ஹா ஹா ஹா அப்போ நீங்க என் போஸ்ட்டை முழுசா படிக்கலைன்னு அர்த்தம்.. ஏன்னா அண்ணன் டைம் லைன்ல இருக்கறப்ப தான் நான் ட்வீ்ட்ஸே போட்டேன்


அன்னைக்கு பெண் ட்விட்ட‌ர்க‌ள் அமுக்க‌ல் அம‌ராவ‌தி அது இதுன்னு எழுதின‌ப்ப‌வே யாராச்சும் வ‌ம்புக்கு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சிருப்பீங்க‌.


 அண்ணே, உங்களுக்கு இன்னும் விபரம் பத்தலண்ணே... சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டர், அவர் கணவர் அங்கீகாரம் கொடுத்த பின் தான் அப்படி எழுதுனேன்.. ஹய்யோ அய்யோ ஜில்னு மோர் சாப்பிடுங்கண்னே.. சரி ஆகிடும்
 
 அது ச‌ப்புன்னு போயிடுவே‌ இத‌ ஆர‌ம்பிச்சீங்க‌. அடுத்து ஏதோ பிளாக் மேட்ட‌ராமே.. உங்க‌ இந்த‌ அட்டென்ஷ‌ன் சீக்கிங் ப‌ரிச‌ல்தான் டேமேஜ் ப‌ண்ணியிருக்கு. தெரிஞ்ச‌வ‌ங்க‌ ப‌த்தி க‌வ‌லையில்லை. சில பேரு உங்க ப‌திவ‌ ப‌டிச்சுதான் ட்விட்ட‌ருக்கான‌ இல‌க்க‌ண‌த்தையே தெரிஞ்ச‌ மாதிரி க‌மென்ட் போட்டிருப்ப‌தால் நான் ப‌தில் சொல்ல‌ வேண்டியிருக்கு. ஃபாலோ செய்ற‌து, ந‌ல்லா ட்வீட்டாவே இருந்தாலும் அத‌ ஆர்டி ப‌ண்ர‌து அவ‌ங்க‌ இஷ்ட‌ம் என்ற‌ எல்.கே.ஜி டைப் அட்வைஸ‌ சொல்ற‌துக்கு என‌க்கே அருவ‌ருப்பா இருக்கு.

சி.பி - நான் யாருக்கும் அட்வைஸ் பண்னலையே, எனக்குத்தோன்றியதை நான் என் பிளாக்ல போடறேன்.. அதை என் வாசகர்கள் படிக்கறாங்க.. அது தப்பு, என்ன போஸ்ட் ட்விட்டப் பற்றி போட்டாலும் என் கிட்டே அப்ரூவல் வாங்கித்தான் போடனும்னு சொல்ல வர்றீங்களாண்ணே?

ஜோக் எழுத‌றேன்னு ஜோக் அடிக்கிற‌தோட‌ நிறுத்திக்கொங்க‌. தேவையில்லாம‌ ப‌ரிச‌ல்கிட்ட‌ பிர‌ச்சினை மாதிரி இனியும் செய்யாதீங்க‌.  


சி.பி -இது என்னமோ மிரட்டற மாதிரி இருக்கு.. நான் டம்மி பீசுண்ணே.. சாதாரண  ஆள்.. உங்க ரேஞ்சுக்கு பெரிய ஆள் கூட மோதுங்கண்ணே.. 


மொத்தமாக என் கருத்துக்கு ட்விட்டர் உலகில் 12 பேர் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.. ஆனா ஆதரவா 187 பேர் கருத்து சொல்லி இருக்காங்க? அப்போ 12 பெரிசா? 187 பேரு பெரிசா? கருத்துக்கணிப்பு எடுங்க..டிஸ்கி-

இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

 

 

Tuesday, May 22, 2012

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4

 

சமூக வலைத்தளங்களுக்கு வர்றவங்க பல வகை.. டைம் பாஸ்க்காக வர்றவங்க,வீட்டில், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மனத்தாங்கல்கள், நெருக்கடிகளை மறக்க வருபவர்கள்,முகம் தெரியாத நட்பை விரும்புவர்கள்,மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க இதை ஒரு கலனாக ,களனாக கொள்பவர்கள் என சொல்லிக்கிட்டே போகலாம்.. 


நான் முதன்முதலா பிளாக் உலகத்துக்கு வந்தது 2010 ஜூலை 17...அப்போ ட்விட்டர் பற்றி எதுவும் தெரியாது.. பிளாக்கிற்கான லிங்க்கை ஷேர் பண்றதுக்கு மட்டுமே அதை யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..ஆனந்த விகடன் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்களின் ட்வீட்ஸ் தான் என்னை ட்விட்டர் உலகத்துக்கு கொண்டு வந்தது. குறிப்பாக ஆல் தோட்ட பூபதி எனும் கரூர் ஜெகனின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது.. 

2011 ஜனவரி மாசம் ட்விட்டர் உலகத்துல நான் எண்ட்டர் ஆனேன்.. கிட்டத்தட்ட 18 வருஷங்கள் நான் பத்திரிக்கைத்துறையில் பணி ஆறியதால் ஐ மீன் ஜோக்ஸ் எழுதி வந்ததால் அந்த பழக்கம் அப்படியே வந்தது.. ஜோக் ஃபார்மேட் எனக்கு நல்லா செட் ஆச்சு.. 2 பேர் பேசிக்கற மாதிரி மேட்டர் தான் எனக்கு வந்தது,.,. 

 ஆனா ட்விட்டர் ரொம்ப அட்வான்ஸ்.. நறுக் சுருக் என ஹைக்கூ வடிவத்தில் 140 எழுத்துக்களில் படிப்பவரை கவர வேண்டும் என்ற சவால் என்னை பார்த்து எள்ளி நகையாடியது.. ஆரம்பத்துல ரொம்பவே சிரமப்பட்டேன்.. ( படிக்கறவங்க அதை விட சிரமப்பட்டாங்க)


 இன்னொரு மேட்டர்.. எனக்கு டெக்னிக்கல் நாலெட்ஜ் சுத்தமா இல்லை.. மென்ஷன் பார்க்கத்தெரியாது.. டி எம் அனுப்ப, பார்க்க தெரியாது.. மெயில் ஐ டிக்கு வர்ற டி எம் தான் பார்ப்பேன். ரிப்ளை பண்ணத்தெரியாது.. அதனால ஆரம்பத்துல சிலர் “ இவன் தலைக்கனம் பிடிச்சவனா இருக்கான்.. நோ ரிப்ளை டூ அதர்ஸ்”னு ஒரு டாக் இருந்துச்சு.. 


2011 ஏப்ரல்ல இருந்து தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் கத்துக்கிட்டேன்.. ராஜன் என் ட்விட் ஒண்ணை RT  பண்ணுனாரு.. கலைஞரை நக்கல் அடிக்கும் ட்வீட் அது.. ஆனந்த விகடன்ல வந்த முத ட்வீட் அதுதான்..  அதுக்குப்பிறகு ட்வீட்ஸ்ல  ஒரு ஃபார்முலா வெச்சுக்கிட்டேன். அதாவது கரண்ட் நியூஸ் ஏதாவது 2 லைன்ல எடுத்து போட்டு அதை  பற்றி ஒரு கமெண்ட் அடிப்பது... காதல் கவிதை அல்லது ஏதாவது ஒரு தத்ஸ் , மூணாவதா நம்ம மனசுல என்ன நினைக்கறோமோ அதை அப்படியே எந்த விதமான அலங்காரங்களோ இல்லாம  சொல்றது.. 

 எனக்கு என்ன பிரச்சனைன்னா எங்க வீட்ல நெட் கிடையாது.. ஆஃபீஸ் டைம்ல டைப் அடிச்சாத்தான்.. சமீபத்துலதான் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்குனேன்.. அதுவரை பேசிக்  மாடல் சாதா ஃபோன் தான்.. 


 ட்விட்டர் உலகை கூர்மையா கவனிச்சதுல எனக்குத்தோன்றியதை அப்படியே உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கறேன்.. நல்ல படைப்பு எப்போ வந்தாலும், அதை யார் படைச்சு இருந்தாலும் உடனே அதை மற்றவங்களுக்கு ஷேர் பண்ணிக்குங்க. அதாவது  RT பண்ணுங்க.. நம்மாளுங்க பண்ற 2 மிஸ்டேக்ஸ் என்னான்னா ஐ ஆம் கார்க்கி, பாரத் பாரதி ,ஆல் தோட்ட பூபதி இந்த மாதிரி பிரபல ட்வீட்டர்கள் RT பண்ணுன பிறகு  அவங்களும் RT பண்ணறாங்க.. 

 அது தேவையே இல்லை.. நமக்குப்பிடிச்சிருந்தா உடனே அதை ஆர் டி பண்ணனும்.. ரெண்டாவது நம்ம டைம்லைன்ல ஏதாவது படைப்புகள்  RT ஆனா நம்ம ஆளுங்க அதை படிச்சுட்டு அப்படியே விட்றாங்க. ஆர் டி யின் முக்கிய நோக்கமே புதிய படைப்பாளியை அறிமுகம் செய்வதுதான்.. நல்ல படைப்பு நம்ம டைம்லைன்ல வந்தா உடனே நாம செய்ய வேண்டியது அந்த படைப்பாளியை  ஃபாலோ பண்றதுதான்.. ஆல்ரெடி நாம ஃபாலோ பண்ணி இருந்தா நம்ம ஃபாலோயர்ஸ்க்கு இவர் இந்த வகைல கெட்டிக்காரர், இவரை ஃபாலோ பண்ணுங்க  அப்டின்னு சொல்லிடனும்.. 


ட்விட்டர்ல புது ஃபார்மேட்ல யார் யார் -யார் யாரை ஃபாலோ பண்றாங்க அப்டி ஸ்டேட்டஸ் காட்டுனப்போ ஒரு பிரபல பெண் ட்விட்டர் நக்கலா கமெண்ட் அடிச்சாங்க “ பொண்ணுங்களா தேடித்தேடி போய் ஃபாலோ பண்றாரு”ன்னு.. நான் கேட்டேன்” அதுல என்ன தப்பு? தமிழனின் மொய்க்கு மொய் ஃபார்முலா தெரியுமா? நம்மை யார் ஃபாலோ பண்றாங்களோ அவங்களை நான் ஃபாலோ பண்றேன்.. இதுல கிண்டல் பண்ண என்ன இருக்கு?  என்னோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கைக்கும் ஃபாலோயிங்க் எண்ணிக்கைக்கும் 524 தான் வித்தியாசம்.. எத்தனை பேரு அப்படி ஃபாலோ பண்றாங்க? 3000 ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கற பல ட்வீட்டர்ஸ் 300 பேரைக்கூட ஃபாலோ பண்ணாம இருக்காங்க.. அதுக்காக  நான் சொல்ல வர்றது அவங்களை எல்லாமே ஃபாலோ பண்ணனும்கற அர்த்தம் இல்லை.. அது அவங்கவங்க விருப்பம்.. டைம் லைன் நம்பிக்கும்..(நிரம்பிடும்) ஒரு குறிப்பிட்ட அளவு தான்  ஃபாலோ பண்ண முடியும்.. 

நான் ஒரு சாதாரண ஆள் தான். என் ட்வீட்ஸ் எல்லாம் சுமாராத்தான் இருக்கும். இதுவரை 21,900 ட்வீட்ஸ் போட்டிருக்கேன்னா அதுல நல்லாருக்குன்னு தேறுனது 345 தான்.. அதிக  RT பெற்றவை அதாவது 10 டூ 15 ஆர் டி ஆன ட்வீட்ஸ்னு கணக்கெடுத்தா 212 தான் இருக்கும்.. மீதி எல்லாமே மொக்கை தான் .. சும்மா ஜாலிக்கு டைம் பாஸ்க்கு போட்டவை தான்.. 

நான் பாராட்டுக்கோ, அங்கீகாரத்துக்கோ அலையற ஆள் இல்லை.. எல்லாரும் நம்மை , நம்ம படைப்பை பாராட்டனும்னு வெறி இல்லை.. ஆனாலும் மத்தவங்க நம் படைப்பை பாராட்ட்டுனா ஆர் டி செஞ்சா ஒரு சந்தோஷம்.. மன திருப்தி அவ்ளவ் தான்.. 

 ஒரு படைப்பாளிக்கு அதிக  மன திருப்தியை தருவது முகம் அறியாத அன்பு உள்ளங்களின்  அங்கீகாரமும், பாராட்டுமே.. ஏன்னா நம்ம வீட்ல இருக்கறவங்க பெரும்பாலும் நம்ம படைப்பை கண்டுக்க மாட்டாங்க . நம்மையே கண்டுக்க மாட்டாங்க .. அதனால  மத்தவங்க பாராட்டும்போது ஒரு அல்ப சந்தோஷம் அவ்ளவ் தான் .. 

இந்தியாவின் நெம்பர் ஒன் ட்வீட்டர் ஐ ஆம் கார்க்கி என் ட்வீட்ஸ் 18 ஐ இதுவரை ஆர் டி பண்ணி இருக்கார். கமர்ஷியல் ட்வீட்டர் ராஜன் இதுவரை 14 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்..தோட்டா 12 ,  குடத்தில் இட்ட  விளக்குகளை குன்றில் ஏற்றிய தீபங்களாய் ஆக்கும் பாரத் பாரதி இதுவரை 43 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்.. ஆனா ரொம்ப நாளா ஒரு குறை எனக்கு.. ஒரு பிரபல ட்வீட்டர் மட்டும் இதுவரை என் ஒரு ட்வீட்டைக்கூட ஆர் டி செஞ்சதே இல்லை .. அதாவது என் தனிப்பட்ட ட்வீட்.. ( பிளாக் லிங்க் ஷேர் அல்ல )

நானும் இதை முதல்ல கவனிக்கலை.. எனக்கு ஒரு  டவுட்.. நாம தான் ரொம்ப மொக்கை போடறோமா? அல்லது அவர் டைம் லைன்ல இல்லாதப்ப போடறதால அவர் கவனிக்கலையோன்னு .. அதனால நான் என்ன செஞ்சேன்.. அவர் டைம் லைன்ல இருக்கறப்போ ட்வீட் போட ஆரம்பிச்சேன்.. ஆனா அவர் கண்டுக்கலை.. எனக்கு புரிஞ்சிடுச்சு.. அண்ணன் பாலிடிக்ஸ் பண்றார்னு..  இதை அப்படியே விட்டிருப்பேன்.. ஒரு நாள் என்ன செஞ்சாரு? அண்ணன் டைம் லைன்ல “  என்னய்யா ட்வீட் போடறே? ரொம்ப மொக்கையா இருக்கே?” அப்டின்னு கேட்டாரு.. வழக்கம் போல நான் ஸ்மைலி போட்டுட்டு கிள ம்பிட்டேன்.. 

 இது ஒரு டைம் 2 டைம் இல்லை 7 முறை நடந்தது.. அதாவது லேடீஸ் எல்லாம் டைம் லைன் இருக்கற டைமா பார்த்து வேணும்னே நோஸ்கட் பண்ண வேண்டியது.. எனக்கு செம கடுப்பு ஆகிடுச்சு.. என்னை மொக்கைன்னு சொன்னதுக்காக இல்லை.. 

 ஏன்னா என்னை ஆல்ரெடி ட்வீட் உலகின் வெற்றி மாறன் ஐ கிருஷ், கார்க்கி,ராஜன் உட்பட பலர் அப்படி சொல்லி இருக்காங்க.... அவங்க மேல ஏன் எனக்கு வருத்தம் இல்லைன்னா என் நல்ல படைப்பு வந்தப்ப அவங்க ஆர் டி பண்ணி இருக்காங்க.. அவங்க தான்யா உண்மையான் நண்பன்க்கு அடையாளம்.. படைப்பு நல்லா இருக்கறப்போ அங்கீகாரம் கொடு.. நல்லா இல்லைன்னா  திட்டு .. வேணாம்கலை.. 

ஒரு படைப்பாளியை பாராட்டனும்னா அவனை டைம்லைன்ல பாராட்டு.. அவனது குறைகளை சுட்டிக்காட்டனும்னா டி எம் ல சொல்லு.. என் ஃபோன் நெம்பர் இருக்கு மெசேஜ் பண்ணு.. அல்லது கால் பண்ணி சொல்லு.. அதை விட்டுட்டு டைம் லைன்ல எதுக்கு கேவலப்படுத்தனும்?

 அண்ணன் ரெகுலரா கடலை போடும் ஒரு பிரபல பெண் ட்வீட்டர் கிட்டே என் ஆதங்கத்தை டி எம் ல சொன்னேன்.. அவங்க ஒத்துக்கவே இல்லை... அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. பலரது ட்வீட்சை ஆர் டி பண்ணி இருக்காரு அப்டின்னங்க.. நானும் அதை ஒத்துக்கறேன். ஆனா என் ட்வீட்ஸ் அவர் ஏன் ஆர் டி பண்ணலை?ன்னு கேட்டேன்.. வாக்குவாதம் வளர்ந்தது... 

 நான் சொன்னேன்.. சரி . நான் இதுவரை போட்ட கேவலமான, ரொம்ப மொக்கையான ட்வீட்ஸ் 2 தர்றேன் அதை உங்க ஐ டி ல போடுங்க.. அண்ணன் என்ன பண்றார்?னு பார்க்கலாம்னேன்.. அவங்க  அதுக்கு ஆரம்பத்துல சம்மதிக்கலை.. உங்க ட்வீட்ஸை நான் எப்படி போட முடியும்? அதுவும் என் பேர்ல? வேணும்னா உங்க ட்வீட்டை நான் ஆர் டி பண்ற மாதிரி போடவா?ன்னாங்க


 ம்ஹூம் அது சரிப்படாது.. எனக்குத்தெரிய வேண்டியது./. அவர் படைப்பை பார்த்து ஆர் டி பண்றாரா?  அல்லது ஆளை பார்த்து ஆர் டி பண்றாரா? என்பதே அப்டின்னேன்.. 


 நீண்ட யோசனைக்குப்பின் அந்த பெண் ட்வீட்டர் என் மொக்கையான, படு கேவலமான ட்வீட்ஸ்  ரெண்டையும் போட்டார்.. அந்த ட்வீட்ஸ் 2ம் எவ்வளவு கேவலம்னா தினத்தந்தி குடும்ப மலர்ல கூட வராது அவ்ளவ் கேவலம்,,. அவர் பேருல போட்டுட்டாரு.. 


 ட்வீட் போட்ட 4 வது நிமிஷத்துல அந்த 2 ட்வீட்ஸ்ல ஒண்ணை அண்ணன் ஃபேவரைட் பண்ணினாரு.. ஒண்ணை ஆர் டி செஞ்சாரு,.. சும்மா இல்லை முன் குறிப்பா அவேசம் ட்வீட்  அப்டின்னு.. ஹய்யோ அய்யோ 

 அந்த பெண் ட்விட்டர்க்கு முகமே இல்லை.. எனக்கு படு திருப்தி.. அவரது முக மூடியை கிழிச்சதுல.. இப்பவும் நான் அவர் பேரை குறிப்பிட முடியும்.. ஆனா அப்புறம் அவருக்கும் , எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.. நான் சொல்ல வருவது  மற்றவர்களை மற்றவர் முன்னிலையில் பாராட்டுங்கள், குறைகளை டி எம்மில் சொல்லுங்கள் என்னும் கருத்தைத்தான்.. மற்றபடி அவரை குறை கூறும் எண்ணம் இல்லை.. 


அடுத்த பதிவில் மதுரை டாக்டர் ரியாஸ் உட்பட 167 பேரை பிளாக் செஞ்ச பிரபல ஆண் ட்வீட்டர் பற்றிய ஒரு அலசல்.. 


சினிமா விமர்சனத்தில் இயக்குநர் பற்றி அவர் படைப்பை பற்றி நீ மட்டும் குறை சொல்லலாமா? என கேட்டுடாதீங்க .. அது வேறு, இது வேறு..அதுவும் இல்லாம சினிமா விமர்சனத்துல இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள், ரசித்த வசனங்கள் எல்லாம் சொல்லிட்டு கடைசியாத்தான் இயக்குநரிடம் சிலகேள்விகள் என லாஜிக் மிஸ்டேக்ஸ் பற்றி கேட்டிருப்பேன்
இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
 Monday, May 21, 2012

பெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3ஓப்பனிங்க்லயே ஒரு விஷயத்தை ஓப்பனா சொல்லிடறேன் ( சட்டை பேண்ட் போட்டிருக்கேன் ) நாங்க எல்லாம் ஒண்ணாங்கிளாஸ் டூ அஞ்சாங்கிளாஸ் படிச்ச காலத்திலயே  கோ எட் படிச்சவங்க.. அப்புறம்  ஆறாங்கிளாஸ் டூ 10 வது வரை  பசங்க மட்டும் படிக்கற ஸ்கூல்.. அப்புறம் பிளஸ் 1 , பிளஸ் 2 ,  படிக்கறப்ப மீண்டும் கோஎட்.. இந்த கால கட்டத்துல என் படிப்பு கிராஃப் பார்த்தீங்கன்னா கோ எட் படிச்சப்ப மட்டும் என் ரேங்க் பிரமாதம்.. ஹி ஹி 

 பெண்கள் என்றால் ஒரு உற்சாகம் தான்.. எதிர் பால் ஈர்ப்பு வருவது மனித இயல்பு.. சிலர் அதை மென்னு முழுங்குவாங்க.. நான் தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிட்டேன்.. அவ்ளவ் தான் வித்தியாசம்.. மெகா ட்வீட்டப்னு சொன்னதும் நான் சந்திக்க விருப்பப்பட்ட பெண் ட்வீட்டர்கள் யார்னு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடலாம்.. 

 ஆரம்ப கட்டத்துல  ட்விட்டர்க்கு வந்த புதுசுல டைம் லைன் கான்வர்சேஷனை வாட்ச் பண்ணுனப்ப திங்கள் கிழமை காலைல 11 மணிக்கு டி பி கேடி ( இவர் கேடி அல்ல, இனிஷியலே அப்படி ) என்பவர் கூட ஒரு பொண்ணு வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தது.. அப்புறம் எதேச்சையா வெள்ளிக்கிழமை சாயங்காலம் பார்த்தப்ப இன்னும் அதே பாப்பா அதே ஆள் கிட்டே சண்டை போட்டுட்டு இருந்தது.. அடேங்கப்பா... 

 அதுக்கப்புறம் தான் நோட் பண்ண ஆரம்பிச்சேன்.. பாப்பாவுக்கு பார்ட் டைம் ஜாப்பே  ஃபைட் போடறதுதான்ன்னு.. கன் ஃபைட் காஞ்சனான்னு பேர் வெச்சாங்க ட்விட்டர்ல .. ( யார்னு கேட்காதீங்க அது  சிதம்பர ரகசியம் ).. இவங்க என்ன பண்ணுவாங்கன்னா  டைம் லைன்ல அவங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு கேள்வியை கேட்டுட்டு  கிளம்பிடுவாங்க.. இருக்கறவங்க விக்கி பீடியா , ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி, எல்லாம் ரெஃபர் பண்ணி பதில் சொல்வாங்க .. ஆனா ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல மாட்டார்..

 அமஸ் மேடம்

டைம் லைன்ல யாருக்காவது பிறந்த நாள், 1000 ஃபாலோயர்ஸ் அப்டின்னா ஊரே கூடி தேர் இழுக்கும்.. பாப்பா கண்டுக்காது. யாரையும்... தன்மானத்தை  விட்டு நம்மாளுங்க  “ மேடம்.. எனக்கு பிறந்த நாள் வாழ்த்துங்க”ன்னு கேட்டு வாங்கி பாயாசம்  சாப்பிடுவாங்க.. அதுக்குப்பின் “ தாமதமான பி நா வா” ( பயப்படாதீங்க.. பிறந்த நாள் வாழ்த்து என்பதைத்தான்  அவங்க அப்படி சொல்றாங்க ) சொல்ற லேட் பிக்கப்  லேகா அவங்க 

   டைம்லைன்ல பெண்களை மட்டம் தட்டி, அல்லது கிண்டல் பண்ணி யாராவது  ட்வீட் போட்டா உடனே எம் ஜி ஆர் மாதிரி ஆலமர விழுதெல்லாம் பிடிக்காமயே டைம் லைன் ஆஜர் ஆகி அவன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கும் வைஜயந்தி ஐ பி எஸ் கம் லேடி எம் ஜி ஆர்.. 

 அப்பேர்ப்பட்ட அப்பாடேக்கர்   அஞ்சலி பாப்பா மாதிரி எதுக்கெடுத்தாலும் அவங்கப்பா கிட்டே பர்மிஷன் கேட்கற பச்ச மண்ணுங்க.. 

 மெக ட்வீட்டப் ல கலந்துக்க அவர் அவங்கப்பா கிட்டே பேசறாங்க 

 டாடி.. ட்வீட்டப் நடக்குது.. சென்னை போகனும்.. 

 எத்தனை பேர்ம்மா கலந்துக்கறாங்க?

 200 பேர் டாடி.. ஒரே டைம்ல 200 பேர் கிட்டே சண்டை போடலாம்.. ஜாலி ஜாலி ப்ளீஸ் டாடி போய்ட்டு வர்றேன்.. 

 வேணாம்மா.. இன்னொரு டைம் போய்க்கலாம்..  நானும் கூட வந்தா நல்லாருக்கும்.. போன த டவை  ஆஃபீஸ் ஃபிரண்ட் மேரேஜ்க்கு போனப்ப டி டி ஆர் கூட நீ போட்ட சண்டைக்கே இன்னும் விடை தெரியலை..,. 

 அய்யய்யோ டாடி.. அப்புறம் என் இமேஜ்  என்னாகறது? எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க.. 


 நீ ஏம்மா அப்படி சொல்றே? வழக்கமா ஏதாவது பொய் சொல்வியே ஆஃபீஸ்ல ஒர்க் இருந்துச்சு, லீவ் கிடைக்கலை அப்டி ஏதாவது சொல்லி சமாளி..

 அவங்க விஷயத்தை விடுவோம்.. இப்போ ட்வீட்டப்ல யார் வந்தாங்கன்னு பார்ப்போம்..
 ஹால் ல  நாங்க எல்லாம் கூடி கும்மி அடிச்சுட்டு இருந்தோம்.. அப்போ முதன் முதலா 2 பொண்ணுங்க வந்தாங்க..  அப்போ இலவசமா  கிடைச்சா எதையும் விட்றாதே அங்க்கிள் சூடம் கொளுத்தாம சத்தியம் பண்ணுனாரு.. இவங்க யாரோ புது ட்வீட்டர்.. ரெகுலரா நாம கடலை போடற ஆள் கிடையாதுன்னு.. 

 அவர் சொன்னது உண்மைதான்..  திவ்யான்னு பேரு.. வாழை என்ற அமைப்பை சேர்ந்தவங்க போல .. அவங்க முன் வரிசைல போய் உக்காந்துட்டாங்க.. 

அடுத்தது அமஸ் அப்டினு ஒரு மேடம் வந்தாங்க. டி பில ரெட்டை  ஜடை மாதிரி இருந்தாங்காட்டி நாங்க எல்லாம் டீன் ஏஜ் கேர்ள்னு நினைச்சோம் .. அவ்வ்.. ஆனா அவங்க எல்லார் கிட்டேயும் சகஜமா பேசி ஸ்மைலிங்க் ஃபேஸ் உடன் இருந்தாங்க.. 

ரைட்டர் சுபா தேசிகன் வந்தாங்க.. இவங்க அதிகமா பழக்கம் இல்லை.. இவரோட கணவர் புதிய தலை முறை  இதழில் பணி ஆற்றுபவர்.. அவங்களோட ஃபோட்டோ எடுத்துகிட்டேன்.. 


இப்போ நம்மாளுங்க வருத்தம் எல்லாம் என்னான்னா ரெகுலரா பேசிட்டு இருக்கற லேடி ட்வீட்டர்ஸ் யாரும் வர்லையே என்பதுதான்.. நல்ல வேளை அப்புறமா 3 பேர் ஒண்ணா வந்தாங்க ..


அதீஷாவை பார்ப்பது லேடி ரைட்டர் சுபா தேசிகன், மைக்கர் அதீஷா,யுவகிருஷ்ணா


 மெடிக்கல் ஷாப் மேனகா .. இவரோட கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீசர்... வீட்டில்  தன் மனைவி  கிட்டே கஷ்டப்படற ஆஃபீசர்.. டைம் லைன்ல எல்லா லேடீஸ்க்கும் சமையல் குறிப்பு பிரமாதமா கொடுப்பார்.. ஆனா சமையல் ஹா ஹா ஹா  அதை எப்படி என் வாயால சொல்வேன்? அவர் கணவர் ஒரு டைம் கேட்டிருக்கார்.. சமையல் டிப்ஸ் எல்லாம் பிரமாதம்.. ஆனா  சமையல் ஏன் இப்படி? என்றால் அதுக்கு அவர் பதில் “ சமைத்துப்பார்” ஜஸ்ட் லுக் இட் .. ஒய் ஈட்டிங்க்? அப்டின்னாராம் .. 

 அவரோட கணவர் எனக்கு க்ளோஸ் ஃபிரண்ட்.. அந்த மேட்டர் மேனகாவுக்குத்தெரியாது.. அடிக்கடி ஃபோன்ல அவர் பண்ற அட்டூழியங்கள், கலாட்டாக்கள் எல்லாம் சொல்லிடுவார்.. 

 இவரோட பிளஸ் பாயிண்ட் என்னான்னா  எல்லார்ட்டயும் சகஜமா பழகறதுதான்..  அவர் வர்ற வரை பெண் ட்வீட்ட்ரகள் பலர் கொஞ்சம் ஃபிலிம் காட்டிட்டு இருந்தாங்க.. இவர் வந்த பின் தான் எல்லாரும் கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க.. இவர் எல்லா நண்பர்களிடமும் ஒரே மாதிரி பழகுவார்.. 

 ஆரம்பத்துல  கடலை மட்டும்  போட்டார்.. இப்போ நல்ல ட்வீட்ஸ் எல்லாம் போடறார்.. இவர் மங்கை என்ற பெயரில் இன்னொரு ஐ டியில் கீச்சுவதாக நம்பத்தகாத வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல் ஹி ஹி

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், க்கும்ப்பா, ம்க்கும், அஸ்கு புஸ்கு ஸ்பெஷலிஸ்ட்.. ஆனந்த விகடனில் இவர் ட்வீட்ஸ் வந்த அன்னைக்கு அக்கம் பக்கம் எல்லா வீட்டுக்கும் விகடன் புக் வாங்கிக்குடுத்து படிக்கச்சொல்லி எல்லாரையும் டார்ச்சர் செஞ்சதா அருகம் பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு வழக்கு இருக்கு.. 

 இப்பேர்ப்பட்ட தல புராணம் கொண்ட மேனகா  லைட் ரோஸ்  கலர் சுடிதார்ல வந்தார்..தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீக்கு பொன்னுக்கு வீங்கி வந்தா எப்படி கன்னம் வீங்கி இருக்குமோ அப்படி இருந்தாங்க .. இவங்க ட்விட்டர் ஹேண்டில் “ ராஜகுமாரி” அதுக்கான காரணம். அவரோட ஹவுஸ் ஓனர் ஐ மீன் அவரோட ஆத்துக்காரர் செல் ஃபோன் ரிங்க் டோன் “ ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி” அந்த பாட்டு தன்னை நினைச்சுத்தான் வெச்சிருக்கறதா அவருக்கு ஒரு நினைப்பு


 பியூட்டி பார்லர்ல இருந்து நேரா வந்துட்டார் போல .. ஹய்யோ அய்யோ .. மெடிக்கல் ஷாப் மேனகா பெயர்க்காரணம் - 24 மணி நேரமும் ட்விட்டர்லயே இருப்பவர்..  பயங்கரமான விஜய் ரசிகை.. இவரை சீண்டனும்னா அஜித் பற்றி ஒரு ட்வீட் போட்டா போதும்.. 27 வருஷமா வாக்கிங்க் போகும் பழக்கம் உள்ள இவரது கணவர் மேரேஜ்க்குப்பின் வாக்கிங்க் கூட போறதில்லை.. ஏன்னா நடப்பது அஜித்தின் ஸ்பெஷல்.. அதனால் அவங்க தான் விஜய் ரசிகை ஆச்சே.. எப்படி நடப்பதை அனுமதிப்பார்?

அவங்க பாட்டுக்கு நல்ல பொண்ணு மாதிரியே அமைதியா சீட்ல உக்காந்துட்டாங்க.. எந்த படமும் போடலை.. யார் கிட்டேயும் சரியா பேசலை.. ( அப்புறமா நிகழ்ச்சி முடிஞ்சு சாப்பிடறப்போ பேசுனாங்க.. காரணம் கேட்டதுக்கு வந்த வேலையை முடிக்காம என் கவனத்தை எதுலயும் சிதற விட மாட்டேன்னாங்க )- வந்த வேலை = ஓ சி சாப்பாடு

3வது திருச்சி திருப்பாச்சி, மலைக்கோட்டை மரப்பாச்சி.. ரியல் ரீனு.. இவங்க ட்வீட்ஸ் எல்லாம் செம காமெடியா இருக்கும்.. ஆஃபீஸ்ல நடக்கற அனுபவங்களை, பல்பு வாங்குன அனுபவங்களை சொல்வார். இவரே பல்பு சைஸ் தான்  இருக்கார்..

 இவர் ஸ்கூட்டி பியூட்டி.. .. திருச்சில செகன்ஸ்ல 21 ஆவது ஆளா கை மாறுன ஒரு ஸ்கூட்டியை வெச்சு இது வரை 89 ட்வீட்ஸ் போட்டிருக்கார்..  சென்னை ட்வீட்டப்க்கு வந்த லேடீஸ்லயே அதிக மேக்கப் இவர் தான்.. ஃபேரன் லவ்லி, பேத்தி ஜிவ்லி, ரோஸ் பவுடர்,  மிஸ் பவுடர் எல்லாம் போட்டு ஐ டெக்ஸ் மை டப்பா காலி ஆகற அளவு கண்ல மை வெச்சுக்கிட்டு வந்திருந்தாரு.. ஸ்மைலிங் ஃபேஸ்.. எனக்கு இப்போதான் ஒரு டவுட் வந்தது.. இவங்க பாட்டுக்கு வந்தாங்க.. உக்காந்திருக்காங்க. யாரும் எதும் கண்டுக்கலையே.. நம்மாளுங்க அம்புட்டு நல்லவங்களா?னு யோசனை பண்ணி ஸ்டேஜ் பின் பக்கமா போய் ஸ்க்ரீன் ஓரமா நின்னு  ஆடியன்சை ஏரியல் வியூ பார்த்தேன்.

 அவங்க 3 பேரும்  ( லேடீஸ்) செல் ஃபோன்ல என்னமோ பண்ணிட்டு இருந்தாங்க... சரி ட்விட்ஸ் தான் போடறாங்க.. ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாங்கன்னு நினைச்சேன்.. என் ஃபோனை எடுத்து  ட்விட்டர் டைம் லைன் பார்த்தா அவங்க 3 பேர் ட்வீட்ஸ் எதும் வர்லை.. யார்தும் ஆர் டியும் பண்ணலை ..

 அப்புறமாத்தான் கண்டு பிடிச்சேன்.. அவங்க  செல் ஃபோன்ல அவங்க ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் கிட்டே சேட்டிங்க்னு..
அப்புறம் நிகழ்ச்சி முடியற டைம்ல  பஃபே சிஸ்டம்ல சாப்பாடு போட்டாங்க.. அவங்க எல்லாம் நாசூக்கா சாப்பிட்டாங்க... ரொம்ப கம்மியா. ...பார்த்தா கண் பட்டுடும்னு..

நான்  பெண்களை கண்டுக்காத ஆள் என்பதாலும்,  தாலி கட்டிய மனைவியைத்தவிர வேறு எந்தப்பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்கக்கூடாது என்ற மனோபாவமும்  உள்ளவன் என்பதால் நான் அவங்களை கண்டுக்கலை.. ( அவங்க ளும் என்னை கண்டுக்கலை... தானிக்கு தீனி சரியாப்போச்சு )

சின்னவள்


 இந்த ட்வீட்டப்பில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கபட்ட பிரபல பெண் ட்வீட்டர்கள் ( மக்களால் மீன்ஸ் என்னால் ஹி ஹி )


1. எப்போ பாரு காலேஜ்க்கே போகாம ஓ பி அடிக்கும் டோரா புச்சி பாப்பா ( டி பில  டோரா புச்சி பாப்பா வெச்சதால எனக்கு மக முறை ) ”சிரி”க்காதே வித்யா

2.  இப்போதான் மேரேஜ் ஆன பெண் என்பதால் எந்த கிண்டலும் பண்ண முடியாத சூழலில்  எஸ் ஆன அந்தா இந்தா  பிருந்தா

3. நூறு நாளில் 1000 ஃபாலோயர்ஸ் பெறுவது எப்படி? என்று மணிமேகலைப்பிரசுரத்துக்காக புக் எழுதும் இன்னல் சுதா சாரி மின்னல் சுதா
4. கணவர் லேப்டாப் தராததால்  கோபிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போய் அடம் பிடிச்ச கவிதை வேங்கை மங்கை ( இவங்க வீட்டுக்குப்போனா ஏகப்பட்ட காலண்டரும், பழைய பாட்டுபுக்ஸும் நிறைஞ்சு இருக்கும்... இன்ஸ்பிரேஷன்... ஹி ஹி )

5. கல்யாண வீட்ல ஒரே நாள்ல 3 புடவை மாத்திடற மாதிரி ட்விட்டர் வரலாற்றில் முதல் முறையாக 3 மாதத்தில் 87 தடவை டி பி மாற்றிய  கேரளத்துக்கிளி மேஹா ஓவியா ( கலகலப்பு ஓவியா நஹி களவாணி ஓவியா )


6. பஸ்ஸில் பிரயாணம் செய்யறப்ப தன் பின்னே ஜஸ்ட் நின்ற ஒரு ஆளை 4 இஞ்ச் நீளமுள்ள கொண்டை ஊசியால் நறுக் என குத்திய வீராங்கனை அய்யய்யோ தமிழச்சி ( மேட்டர் கேள்விப்பட்டதும் மீ அன் ஃபாலோ  ஹெர்.. ஹி ஹி )


7. ஸ்விஸ்-ல் வாழ்ந்தாலும் அடிப்படையில் இலங்கைப்பெண் என்பதால்  எப்போ பாரு கவிதையில் சோக ரசத்தை பிழிந்து புலம்பல் புனிதவதி ஆக இருந்து மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி மாப்பிள்ளை கிட்டே வந்ததும் என்ன நடக்குது அங்கேன்னு ஸ்டேட்டஸ் கேட்டா கமுக்கமா கம்முனு இருக்கும் அமுக்கல் அமராவதி


8. எகத்தாளம் எஃப் எம்  தன்யா - விடிகாலைல 3,.30 டூ 5 இவங்க டைம் லைன் பார்த்தா நீங்க இங்கிலீஷ் கோர்ஸே போகத்தேவை இல்லை.. எனக்கு எதும் புரியாது.. ஆனாலும் குட்மார்னிங்க்.. ஹவ் டூ யூ டூ, ஐ ஆம் பிஸி இப்படி 4 வார்த்தை வெச்சு சமாளிச்சிங்க்..


9. பல்லவ மன்னன், இலவசமா எது கிடைச்சாலும் விட்றாத மாமா இருவரையும் தாடி விட வைத்த லேடி  “ பசு அறிவு”ஊ1 )- ஃபிகருக்கு மே 25 மேரேஜாம்...ட்விட்டர் துக்க நாளா மதுரையும், நெல்லையும் கொண்டாடறாங்களாம்:((


10. அமலா படம் போட்ட டி பி வெச்சிருக்கும் பிரபல பெண் ட்வீட்டர் ( சென்னைல தான் இருக்கார், ஆனா யாருக்கோ மொட்டை அடிக்க திருப்பதி போய்ட்டார்)

11. சென்னையில் வசித்து இப்போது சேலத்தில், கேரளாவில் ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கும்  அஹானா, சஹானா,கஹானா. ( இவர் கிட்டே 180 கேள்விகள் கேட்டா 2 வருஷம் கழிச்சு ஹாய் அப்டினு ரிப்ளை வரும்)


12. புதுசா பிரபலம் ஆகிவரும் தேவ சீமா, சங்கீதா,அர்த்த ராத்திரி லேடி டாக்டர்

13.. தன் பையன் கிட்டே வாங்குன பல்ப்ஸ் வெச்சே  ட்வீட்ஸ் தேத்தும் லெமன் ரைஸ் ஸ்பெஷலிஸ்ட் சிங்கை சாந்தி ( இவர் லெமன் ரைஸ் பண்றப்ப மட்டும் கணவர் ஹோட்டல் கோயிங்)

14. தமிழ் பெண் ட்வீடர்களிலேயே அதிக ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கும் கோவை பாவை அரட்டை கேர்ள்

15. மதுரை உமா கிருஷ்

16. ஆர் டி தோழி எனும் ஃபேக் ஐடியில் உலா வரும் ஒளிக்கதிர், தூத்துக்குடி சாத்துக்குடி, நல்லா பாத்துக்குடி ஜீன்ஸ் போட்ட பீன்ஸ்/.


17. ஆனந்த தொல்லை , அம்மா பிள்ளை, புரோட்டா புவனா ( லவ்வர் கூட எங்கே போனாலும் 8 புரோட்டா சாப்பிடுவாராம் அவ்வ்வ் )


18.  ஐ ஆர் எட்டின் தோல்வி ( இவங்க ஒரு டீச்சர்.. டீச்சர்னாலே மீ பயம்.. ரீசன் ஆல் ஆல்ரெடி யூ நோ.. மை அக்கா, மம்மி, ஹோம் மினிஸ்டர் ஆல் டீச்சர்ஸ்.. சோ நோ வம்பு வித் ஆல் டீச்சர்ஸ்)

19.  டால்ஃபின் குட்டி, ரேணுகா ரெயின்,குந்தவை அனு,ஃபேஸ்புக்கில் 7 மணீ நேரம் டெயிலி குடி இருக்கும் உமா கணேஷ்


20. தலைவன் மொழி என்ற பெயரில் நம்மை எல்லாம் கொலையா கொன்னெடுத்த  வானதி நடனம் ( டெயிலி டான்ஸ் ஆடிக்கிட்டே வாக்கிங்க்கும் போவாங்களாம்) மேரேஜ் இப்போ தான் ஆச்சு


 உஷ் அப்பாடா.. இவங்க போக மீதி இருக்கும் , டைம் லைனில் உலா வரும் அனைவரும் ஃபேக் ஐ டிகள் தான்.. ஏமாந்து விடாதீர்கள் நண்பர்களே..( மொத்தம் 127 பெண் ஐ டி கள் இருக்கு, அதுல ஒரிஜினல்  46 மட்டுமே... எனக்கு பழக்கமானவர்கள் 17 பேர்தான்.. விடு பட்டவர்கள் மன்னிக்க


 ஆல் தோட்ட பூபதி கரூர் ஜெகன் எப்படி ஹால்க்கு வராம பக்கத்துல இருக்கற ஹோட்டல்ல தங்கி அவர் விருப்பப்பட்ட பிரபல ட்வீட்டர்களை மட்டும் செலக்ட் பண்ணி ரூம்க்கு வர வெச்சு சந்திச்சாரோ அதே மாதிரி கனடா டாக்டர் ஐ மம்மி மீ டம்மி, யூ ஜிம்மியும் செஞ்சார்.

 ஏதோ மேரேஜ் அட்டெண்ட் பண்ண தமிழ் நாடு வந்தவர் ஹால்க்கு எவ்ளவ் வற்புறுத்தியும் வரவே இல்லை.. இந்த பதிவில் மற்ற பெண் பதிவர்கள் அவங்க ஃபோட்டோ போட வேணாம் என்று சொல்லீட்டாங்க...


டிஸ்கி -0


இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

டிஸ்கி -1 ட்விட்டரில் நடக்கும் பாலிடிக்ஸ்,  சில அதி மேதாவிப்பதிவர்களின் ( கம் ட்விட்டர்)அதிகப்பிரசிங்கித்தனம் பற்றிய என் ஆதங்கங்கள், ட்வீட்டப்பில் நான் பேசிய சர்ச்சையை கிளப்பிய பேச்சு பாகம் 4 ல் செவ்வாய் அன்று.


டிஸ்கி 2 - நாளை வெளி வர இருக்கும் ட்வீட்டப் பாகம் 4 யார் மனதையாவது புண் படுத்தினால் அதுக்கு இப்பவே அட்வான்ஸ் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. இப்படிக்கு எதையும் முன் கூட்டியே செஞ்சிடும் முன் ஜாக்கிரதை முத்தம் அண்ணா  (துரை)


டிஸ்கி 3 - விடு பட்ட பெண் ட்வீட்டர்கள் பெயர்கள் நினைவு படுத்தினால் சேர்க்கப்படும்.. அதுக்காக டால்ஃபின் குட்டி போலவோ, ரேணுகா ரெயின் போலவோ டி எம்மில் மிரட்டத்தேவை இல்லை :) மீ பயந்த சுபாவம்.. ஹி ஹி


டிஸ்கி - 4 - நேரடியாக மோத தைரியம் இல்லாத சில வீரப்பிரதாபர்கள் சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டர்களை டார்ச்சர் பண்ணியும், திட்டியும் இந்த தளத்தில் இடம் பெற்ற சில படங்களை , சில தகவல்களை  நீக்கச்செய்து விட்டார்கள்..அவர்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் வாழ  வாழ்த்துகிறேன்


Wednesday, May 16, 2012

சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 2

 
 அடக்க ஒடுக்கமாக கை கட்டி நல்லவரை போலவே காட்டிக்கொள்ளும் மன்னர் கசிவு எனும் அவினாசி ஆதீனம் கம் ராஜன் லீக்ஸ்  மி, இலவசமா விட்டுட்டே இரு மாமு 

ஒரு விழாவை வெற்றிகரமா நடத்தி முடிக்கறது சாதாரண காரியம் இல்லை.. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப்பார் வரிசையில் இலக்கியக்கூட்டம் நடத்திப்பார் என்பதும் பொருந்தும்... ட்வீட்டப், பதிவர்கள் சந்திப்பு இவையும் இலக்கிய  கூட்டம் போலத்தான் .. என்ன ஒரு வித்தியாசம்னா இலக்கியக்கூட்டத்துல பேசுறது பாதி புரியாது.. இங்கே கொஞ்சம் ஜாலியா, ஜனரஞ்சகமா இருக்கும்.. ஆனா அதுக்காக செய்யப்படும் உழைப்பும், வேலையும் ஒண்ணுதான்..


 நான் நெல்லையில் உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை பதிவர் சந்திப்பு,  ஈரோடு கதிர் நடத்திய ஈரோடு சங்கமம் -தமிழகம் தழுவிய பதிவர்கள் சந்திப்பு  என இந்த ஒரு வருட பதிவுலக வாழ்க்கையில் 2 விழாக்களை சந்தித்தேன்.. இது  3 வது.. மூன்று விழாக்களிலும் நான் பெற்றுக்கொண்ட பாடங்கள், நட்புகள், அனுபவ அறிவு இவை அதிகம்..


எக்ஸ்பர்ட் சத்யா, செந்திலநாதன், கரையான் , பரிசல் இவர்களை முதலில் வாழ்த்தி விடுகிறேன்.. ஏன்னா யாரையாவது பாராட்டனும்னு தோணுச்சுன்னா நம்ம மனசு மாறுவதற்குள் பாராட்டிடனும்கறது  என் கொள்கை. பரிசல் ட்வீட்டப் நடப்பதற்கு முன் ட்விட்டர்ல “ பெண்கள் பயம் இல்லாமல் ட்வீட்டப்பில் கலந்து கொள்ளலாம்”னு ஒரு ட்வீட் போட்டப்ப நான் கூட மனசுல நினைச்சேன்.. அது சாத்தியம் தானா? என்னா கூட்டம் சேர்ந்த பின் மனிதனின் நடத்தை ஒரு மாதிரியும், தனியா இருக்கறப்ப வேறு மாதிரியும் இருக்கும்.. அது சைக்காலஜி..


பெரிதும் துணை நின்ற ராவணன் சார்ஆனா பரிசல் சொன்னதை செஞ்சு காட்டினார்.. ஒரு காலேஜ் லெக்சரர் போல கூட்டத்தை கட்டுப்படுத்தினார்.. அவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்.. அதே போல் கூட்டத்துக்கு வந்திருந்த 120 பேரும் கண்ணியமாகவே நடந்து கொண்டனர்..  யாரும் தண்ணி அடிச்சுட்டு வர்லை.. யாரோ சிலர் விழாவில் கைதட்டலுடன் விசிலும் அடித்த போது  நம்மாளுங்க நோ விசில் என அதையும் கட்டுப்படுத்தினர்.. சபாஷ்..


ஓக்கே  லெட் அஸ் கம் டூ த மேட்டர்.. விழாவில்

1. திவ்யா அவர்களின்  வாழை இயக்கம் பற்றிய அறிமுக உரை ( இது பற்றி பாகம் 4-ல்)


2. செல்வகணபதி வர்களின் “ என்னால் முடியும்” குழந்தைக்கல்விக்கான இயக்கம் பற்றிய அறிமுகம்.. அவர்கள் பணீ பற்றி ஒரு பார்வை ( இது பற்றி பாகம் 5-ல்)


3. ட்விட்டர்களின் சுய அறிமுகம்.


4. க்ரேசி கோபாலின்  டாக்டர் டி ஆர் எம் செல் ஃபோன் - கலாய்ப்பு நிகழ்ச்சி

5. எம் ஜி ரவிக்குமார் - க்ரேசி கோபால் மிமிக்ரி நிகழ்ச்சி


6. கருப்பையாவின் கவிதை வாசிப்பு
 இந்த 6 நிகழ்ச்சிகளும் போன பதிவில் பார்த்தோம்.. இதை ஏன் நான் ரிவிசன்  பண்றேன்னா எங்க குடும்பமே ஒரு டீச்சர் ஃபேமிலி.. அம்மா, அக்கா, மனைவி, ஹவுஸ் ஓனர் பொண்ணு.. இவங்க கூட தினம் பழகி பழகி எனக்கும் டீச்சர் பிளட் லைட்டா ஓடுது. அதனால அதே சாயல் தொத்திக்குச்சு..  ( ஹவுஸ் ஓனர் பெண் பற்றி தனிப்பதிவு ஹி ஹி )


எல்லாரும் சரியா படிச்சுட்டு வர்றீங்களா? ஏன்னா 6 பாகம் முடிஞ்ச பின் கேள்வி எல்லாம் கேட்பேன்.. கரெக்டா பதில் சொல்லனும்..


ஈரோடு தங்கதுரை  திடு திப்னு வந்து 18 நிமிஷம் ஒரு கலக்கு கலக்கிட்டார்.. . எந்த விதமான தடுமாற்றமும் இல்லாம மனுஷர் பட படனு பேசித்தள்ளீட்டார்/.. மதுரை முத்து, ஈரோடு மகேஷ் பாணியில் வெகு சரளமான நகைச்சுவையில் அவர் பேச்சு இருந்தது.. அவரோட கான்செப்ட் திண்டுக்கல் ஐ லியோனி “ மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது பழைய பாடல்களா? புதிய பாடல்களா? “ பாகம் 1. 2 ,3 என 1999 ல வந்த ஆடியோ கேசட்ல இருந்து கொஞ்சம், மதுரை கு ஞானசம்பந்தன் எழுதிய  சிரிக்கலாம் வாங்க, கவலையை மறக்கலாம் நீங்க என்ற புத்தகத்தில் இருந்து கொஞ்சம், வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய ஜோக்ஸ் டைரி புக்கில் இருந்து கொஞ்சம் எடுத்தாளப்பட்டு இருந்தாலும்  மிக இயல்பான  பேச்சாக இருந்தது..  ( இது பற்றி முழு விபரம் பாகம் 6 -ல் )


 ஆடியன்சின் ஆரவாரமான கை தட்டல் இவருக்கு கிடைத்தது.. பொதுவா திறமையானவரை கை தட்டி ஊக்குவிக்கும் தமிழன் அந்த திறமையானவர் நமக்கு பழக்கமானவர், நண்பர் என்ரால் இரு மடங்கு ஆர்வத்துடன் பாராட்டுவான்..

அவர் தன் சொந்த செலவிலோ, அல்லது புதிதாக அவர் ஈரோட்டில் சேர்ந்திருக்கும்  கம்பெனியின் ஸ்பான்சர் மூலமாகவோ விழாவுக்கு வந்த அனைவருக்கும்  அழகிய பேனா பரிசாக கொடுத்தார்.. அதுல அவர் பேர் போட்டு இருந்தது.. இதுவும் தமிழனின் பாரம்பரிய பழக்கம் தான்.. எப்படின்னா கோயில்களில் அந்தக்காலத்திலேயே டியூப் லைட் தானம் செய்தால் அந்த லைட்டில் உபயம் மாடசாமிக்கவுண்டர் என்பது மாதிரி ஒரு விளம்பரம் இருக்கும்.. இது சகஜம் தான்..

கூட்டத்துக்கு வந்த 120 பேர்ல இந்த ஐடியா யாருக்கும் தோணலை பாருங்க.. அங்கே தான் நிக்கறார் தங்கதுரை..

அடுத்து பாட வந்தாரு கிரி... இவர் ஆள் பார்க்கத்தான் ஒரு மார்க்கமா இருப்பார்..  ட்விட்டர் வி பில வில்லன் ஃபோட்டோ வெச்சிருந்தாலும் ஆள் கிராமத்து மண்.. பிரமாதமான குரல்..   அவர் பாடல்களுக்கு அபார வரவேற்பு கிடைத்தது..  அவரது ரெகுலர் ரசிகைகள் ஃபாரீனில் இருப்பதால், இங்கே வர முடியததால் நேரில் காண முடியவில்லை அவர்களால்..


நிகழ்ச்சி லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.நம்மாளுங்க அப்பப்ப ட்வீட் போட்டு ரகளை பண்ணுனாங்க.. சரியா தெரியலை.. இருட்டா இருக்கு.. அப்டின்னு.. ஹால்ல பெரிய அளவில்
 பிரகாசமான அளவில் லைட் வசதிகள் இல்லாததால் தான் தெரியலைன்னு நினைக்கறேன்.. நோ பிராப்ளம்.. 


ஆனந்த விகடன், ஜீ தொலைக்காட்சியிலிருந்து நிகழ்ச்சியை கவர் செய்ய வந்திருந்தனர். சமூக வலைத்தளங்கள் இளைஞர் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற தலைப்பில் 26 பேரிடம் பேட்டி எடுத்தார்கள்... ( அந்த விபரம் பாகம் 5 -ல் )


அடுத்து நம்மாளு கோமாளி செல்வா பற்றி சொல்லனும்.. ட்விட்டர் உலகில் செல்வு எஃபக்ட் என்ற புதிய புரட்சியை கொண்டு வந்தவர்.. அதாவது நம்ம எல்லார் மனசுலயும் ஒரு முட்டாள் ஒளிஞ்சுக்கிட்டு இருப்பான்.. பிக்குளித்தனமா சில காரிங்கள் நாம செய்வோம்.. ( என்னை மாதிரி ஆளூங்க எப்பவும் அப்படித்தான் ஹி ஹி )

அதை முன்னிலைப்படுத்தி ட்வீட் போடுவார்.. மேலோட்டமா பார்க்கறப்ப மொக்கை போல் தோணும்.. ஆனா அவை உணர்த்தும் கருத்துக்கள் அற்புதம்.. அவர் கோபியில்  வசிக்கிறார், பாரியூரில் காதல் கணக்கு வைத்திருக்கிறார் ( ஃபிகர் பாரியூருங்கோவ் ) திருப்பூரில் பணி.. இவரது லட்சியம் ரேடியோ ஜாக்கி ஆவது.. சமீபத்தில் ஆனந்த விகடன் வலை ஓசையில் இவரது பிளாக் பற்றிய விபரம் 2 பக்கங்கள் வந்தது.. 

 ( எல்லாருதும் விகடன்ல வலை ஓசைல வருது, ஏன் உன்னுது மட்டும் வர்லை? என கேட்பவர்களூக்கு, கேட்க நினைப்பவர்களுக்கு, எள்ளி நகையாடுபவர்களுக்கு.... 1. கண்னியமான, கவுரமான தளங்களுக்கு மட்டும் தான் அங்கே அனுமதி.. 2. நாமளே பாதி போஸ்ட் விகடன்  காபி பேஸ்ட் போஸ்ட் தான் ஹி ஹி )
 கோபியர் கொஞ்சும் செல்வா , கோபியர் போல் மிமிக்ரி செஞ்சு கலாய்க்கும் கோபால்

அப்படிப்பட்ட செல்வா தன் ட்வீட்களை தொகுத்து செல்வு எஃபெக்ட்ஸ் என புத்தகமா வெளியிட்டார்.. கரையான் அவர்கள் தான் அதை , அந்த புக் வெளீயீட்டுக்கான பிராசஸ் ஒர்க் கவனித்தார்.. அந்த புக் வெளீயீட்டுக்கு பெண் கீச்சர் @amas32   செல்வாவுக்கு  தனிப்பரிசு கொடுத்தார்.. அடடா வடை போச்சே என நினைச்சுக்கிட்டேன்.. நான் அவர் கிட்டே தனியா போய் “ எக்ஸ் க்யூஸ் மீ மேடம்.. எனக்கு அதே பரிசு 1000 ரூபா கொடுங்க, நான் அடுத்த வருஷம் புக் போடறேன் அப்டின்னேன்.. அவங்க நீங்க போடுங்க, அப்போ பார்க்கலாம்னு நழுவிட்டார்.. நற நற .. 

 இவர் யாருன்னு அடையாளம் தெரியாதவங்க ட்விடர்  டி பி ல ஹெல்மட் மாதிரி ஒரு கேப் போட்டிருப்பார். மேடம் மேல் மருவத்தூர் ஆதி பரா சக்தி பக்தைன்னு நினைக்கறேன் ( சிவப்புக்கலர் டிரஸ்)

 மீரான் (@karaiyaan) தொகுத்த தமிழ் ட்விட்டர்கள் கையேடு (Tamil Twits தளத்தில் வந்த தகவல்களின் தொகுப்பு) வெளியிடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு காப்பி இலவசமாக வழங்கப்பட்டது. ஃபிரியாக்கொடுத்தா நாங்க தான்.. ஹி ஹி வாங்கிக்கிட்டோம்.. அனைத்து ட்வீடர்களிடமும் இருக்க வேண்டிய உபயோகமான கையேடு.. 

 இந்த இடத்துல கரையான் அவர்களை பற்றி சில வரிகள்.. இவர் ஆனந்த விகடன் மற்றும் மற்ற பத்திரிக்கைகளில் வரும் ட்வீட்ஸ் பக்கங்களூக்காக எதையும் கீச்சுவதில்லை.. மக்களுக்கு உபயோகமான லிங்க்ஸ், படைப்புகள் மட்டுமே பகிர்கிறார்.. சுயநலம் என்றால் என்ன? என்று கேட்பவர்.. மிகச்சிறந்த மனிதர்.. ஏன்னா இந்தக்காலத்துல நல்ல மனுஷங்களை பார்ப்பதே அபூர்வம் தான்.. 
மெகா ட்வீட்டப் நடப்பதற்கு முன் ட்விட்டரில் எக்ஸ்பர்ட் சத்யா  நீங்க ட்வீட் போட்டதுலயே நல்ல ட்வீட்சை எனக்கு மெயில் பண்ணுங்கன்னார்.. அதுல இருந்து தேர்வான சில ட்வீட்ஸ்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில் நடந்த சில ஹை லைட்ஸ்1.பிரபல ட்வீட்டர் - எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம், எப்படின்னா டி எல் ல யார் கூடவும் கடலை போடவே மாட்டேன், ஜஸ்ட் ஆப்போசிட் டூ கட்டதுரை-------------------------------

2. ட்வீட்ஸ்களில் கலக்கும் ஐ ஆம் கார்க்கியும், ராஜன் லீக்ஸும் மெகா ட்வீட்டப்பில் அடக்கி வாசித்தது அவர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம்


---------------------------

3. பிரபல ட்வீட்டர் - எனக்கு கூச்ச சுபாவம், அதனால தான் ரூமை விட்டு வரவே இல்லை # அடடே, உங்க மேரேஜ் அப்போ மண்டபத்துல 1800 பேர் வந்தாங்களே?


----------------------------

4. கேசவன் ஒரு மிக்சர் ஸ்பெஷலிஸ்ட் என ராஜன் சொன்னபோது நான் நம்பவில்லை, நேற்று நேரில் கேசவனை பார்த்ததும்...... ஹி ஹி


---------------------------

5. பிரபல ட்வீட்டர் - நான் ரூம் நெம்பர் ---- ல் தங்கி இருக்கேன். நான் ஹால்க்கு வர மாட்டேன், ஆனா என்னை பார்க்க விரும்பறவங்க ரூம்க்கு வரலாம் :)----------------------------

6. டாக்டர்னா கோட் போட்டிருக்கனும், அல்லது நர்ஸ் கூட வரனும், ரியாஸ் விதியை மீறிட்டார்


--------------------------

7. மெகா ட்வீட்டப்பில் கலந்து கொண்டவர்களில் கள்ளங்கபடம் அற்ற கறுப்பழகன் அண்னே ஒரு விளம்பரம், சிவப்பழகன் எம் ஜி ஆர் ரவிக்குமார்


----------------------------

8. தான் மட்டும் தனியாவே வந்த மாதிரி காட்டிக்கிட்ட நெல்லை அல்வா பார்ட்டி ஃபிரியா விட்டுட்டே இரு மாமுவின் டேலண்ட்டை கண்டு நான் வியக்கேன்


---------------------------
 கிரி வேணும்னே அப்படி முறைக்கறாரு, ஹோம் மினிஸ்டர் முன்னால பம்முவாரு


9. இவர் இல்லாதப்ப என்னென்னெமோ நடந்தது, அப்போ எல்லாம் மிக்சர் சாப்பிட்டுட்டு, வேடிக்கை பார்த்து கோடை விட்டுட்டு , இப்போ கேள்வி கேட்கறாரு:)


---------------------------

10. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத நமக்கே அவ்லவ் காஸ்ட்லி பேனா பரிசா தந்தார்னா ஈரோடு தங்கதுரை அந்த ரயில் மயில்க்கு என்ன கொடுத்தாரோ>


-----------------------------

11. ட்விட்டர் டைம் லைனில் தல தல என அழைக்கும் மண்டபத்தில் அடக்கி வாசித்தது ஏனோ? :)


-------------------------

12. ட்விட்டப்க்கு வந்த மச்சக்காரன் கடைசி வரை தன் மச்சத்தை யாருக்கும் காட்டவே இல்லை :)


----------------------------

 13. மெகா ட்வீட்டப்க்கு சோனியா வந்தார், மங்கை வரவில்லை,அடுத்த வருட ட்வீட்டப்க்கு மங்கை வருவாராம், சோனியா வர மாட்டாராம் ஹி ஹி-----------------------------

14.  கேபிள் சங்கர்,மெட்ராஸ் பவன் சிவக்குமார், ஃபிலாசபி பிரபாகரன்,  போன்ற பிரபல பிளாக்கர்ஸ் வந்தார்கள்...  ஆனா கடைசி வரை இருக்கலைன்னு நினைக்கறேன்..


--------------------------------

15. மன்மதன்  அம்பு கமல் கெட்டப்பில் இருக்கும் ரவி அல்லோலகல்லோலப்படுத்தினார் ( அல்லோல கல்லோலம்னா என்ன>)


----------------------------

16. லா ஓ சி () சந்து, திருட்டுக்குமரன் ( இருட்டுக்குமரியும், திருட்டுக்குமரனும் கடலை போட்டால் என இவர் பற்றி ஒரு போஸ்ட் போட்டேனே ) இவர்கள் மறக்க முடியாதவர்கள்


-------------------------------

17. ராவணன் சார் நிகழ்ச்சிக்காக பெருந்தொகை கொடுத்தது பாராட்டுக்குரியது.. அவருக்கு அனைத்து ட்விட்டர்கள் சார்பாக நன்றிகள்

 கேபிள் சங்கர், அருகே சுரேகா அவர்கள், அண்ணே ஒரு விளம்பரம்---------------------------------

பெண் ட்வீட்டர்கள் பற்றி எதுவுமே சொல்லலையே..  சி பி பிளாக்னா லேடீஸ்  இல்லாமயா? என கேட்பவர்களுக்கு வெயிட் 24 அவர்ஸ்.. பாகம் 3-ல் கல கலப்பான, கலக்கலான கலாய்ப்புகளுடன்.........முழுக்க முழுக்க பெண்கள் பற்றிய பார்வை பாகம் 3 -ல்


டிஸ்கி - முதல் பாகம் படிக்கம எஸ் ஆனவர்கள் படிக்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
  மன்மதன் அம்பு கமல் ரவி உடன்Tuesday, May 15, 2012

சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 1ஈரோடு தங்கதுரை பேருக்கு முன்னால தான் ஈரோடு வெச்சிருக்காரே தவிர  ஆளை ஈரோட்ல பார்க்கவே முடியாது.. ஒசாமா பின் லேடன் மாதிரி ஆள்மறைஞ்சுட்டே இருப்பாரு.. எப்பவாவது ஈரோடு வந்தாக்கூட நைஸா மீட் பண்ணாம எஸ் ஆகிடுவாரு..  அப்பேர்ப்பட்ட நல்ல மனுஷனே எனக்கு ஃபோன் பண்ணி சென்னைக்கு 2 பேரும் ஒண்ணா போலாம்னு சொன்னதும் நித்திக்கு ஆதீனம் பதவி கிடைச்சதும் ஜிஞ்சிதா எப்படி சந்தோசப்பட்டாஙகளோ அந்த அளவு சந்தோசப்பட்டேன்.;. போதாததுக்கு மதுரை டாக்டர் ரியாஸ் கூட சென்னைல காலைல மீட் பண்ணி 3 பேரும் ஒரே ஹோட்டல்ல தங்கறதா பேச்சு..


விழா தொகுப்பாளர் பரிசல்காரன்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் நைட்  9 மணிக்கு.. அண்ணன் தங்கதுரை சாயங்காலம் 6 மணிக்கு ஃபோன் பண்ணி ஹோட்டல் சிவரஞ்சனில  இருக்கோம்.. சாரி இருக்கேன்னாரு.. அப்பவே அண்ணன் தடுமாறுகிறாரே?ன்னு நான் உஷார் ஆகி இருக்கனும்.. யதார்த்தமா நினைச்சுட்டேன்.. அப்புறம் ஒரு பிட்டுப்போட்டாரு.. நீங்க ரயில்ல முன்னால போங்க.. நான் பஸ்ல பின்னாலயே வர்றேன்னு சொல்லிட்டாரு.. சரி.. ஹோட்டல்ல எங்கே தங்கி இருக்கீங்க? ரூம் நெம்பர் என்ன? னு கேட்டேன் , அண்ணன் சொல்லலை.. பாவம் என்ன தர்மசங்கடமோ.. யார் கூட வந்தாரோ? சரி.. அது  அவர் பர்சனல் மேட்டர்.. நமக்கு என்ன போச்சுன்னு  நான் கிளம்பிட்டேன்..


நைட் 8.45 க்கு தங்கதுரை ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்க்கு வந்து வழியனுப்பினார்.. ( அவர் மட்டும்  தனியாதான் வந்தாரு)காலைல  4 மணிக்கு  சென்னை போயாச்சு.. ஆக்சுவலி டைம் 4.30க்குத்தான் போகனும்.. அட்வான்ஸா போயிடுச்சு..


அப்புறம் நான் பாண்டி பஜார் சரவணா ஹோட்டல்ல தங்குனது, மெட்ராஸ் பவன்  பிளாக் ஓனர் காரு சிவக்குமாரை மீட் பண்ணுனது, இயக்குநர் எஸ் எஸ் குமரன், அவர் அஸிஸ்டெண்ட் டைரக்டர் முருகன் மீட் பண்ணுனது எல்லாம் அப்புறம் பார்ப்போம்.. மதியம் 2.45 க்கு அடையாறு போய் சேர்ந்துட்டேன்.. அப்போ தான் ஒரு புண்ணியவான் ( ஐ திங்க் யோகா குணச்செல்வன்) ட்விட்டர்ல அப்டேட் பண்ணுனாரு, அடையாறு டிப்போ ஸ்டாப்னு./. நல்ல வேளை.. அடையாறுலயே இறங்கி இருப்பேன்.. இறங்கி யூத் ஹாஸ்டல் எங்கே?ன்னு விசாரிச்சா வழி சொன்னாங்க... ரைட் கட் பண்ணி பெட்ரோல் பங்க் தாண்டி அரை பர்லாங்க் தூரம் வாக்கபிள் டிஸ்டேன்ஸ் தான் ( இந்த வாக்கபிள் டிஸ்டேன்ஸ்க்கு ஏதாவது வரை முறை இருக்கா? ஆளாளுக்கு வாக்கபிள் டிஸ்டேன்ஸ்னு சொல்லிக்கறாங்களே?)


 கறுப்புத்தங்கம்  அண்ணே ஒரு விளம்பரம்,வேதாளம் அர்ஜீன், எம் ஜி ரவிக்குமார்


 யூத் ஹாஸ்டல் வந்தாச்சு.. முத ட்வீட்டர் செந்தில்நாதன்.. பைக்கை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டுட்டு இருந்தார்.. இவர் ரைட்டர் சி எஸ் கேவோட க்ளோஸ் ஃபிரண்ட்.. ரைட்டர் சி எஸ் கே எல்லாருக்கும் தெரியும்,, இருந்தாலும் தெரியாதவங்க ஈசியா அடையாளம் கண்டுக்கனும்னா டெயிலி காலைல 7.47 AM க்கு  ட்விட்டர்ல கவிதை லிங்க் ஷேர் பண்ணுவாரு.. யாருக்காக இந்த சேவைன்னு கேட்டா எல்லாம் உங்களுக்காகத்தான்னு சொல்வாரு.. பாவம் நல்ல மனுஷன்.. பொய்யே பேச மாட்டாரு.. இவர் ராஜன் லீக்ஸ்ன் பங்காளி.. எதுலன்னு கேட்கக்கூடாது.. 

உள்ளே எண்ட்டர் ஆனா ஆல்ரெடி ஒரு பெரிய கேங்க்கே அங்கே இருக்கு.... அவங்களை பார்த்ததும் எனக்கு செம உற்சாகம்.. ஸ்கூல் ஃபிரண்ட்சை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ற மாதிரி ஒரு ஃபிலிங்க்.. பறவைகள் பல விதம் படத்துல ராபர்ட் ராஜசேகரன் இந்த மாதிரி ஒரு சீன் வெச்சிருப்பாரு..

 பாலாஜி தான் முதல்ல என்னை அடையாளம் கண்டு பிடிச்சு  மாப்ஸ் நீங்க கூலிங்க் கிளாஸ் இல்லாம வரலாமா?ன்னு அவர் ஓசில வாங்கி வெச்சிருந்த கூலிங்க் கிளாசை எனக்கு ஓசில கொடுத்தாரு.. வழக்கமா எனக்கு ஓ சி வாங்கி பழக்கம் இல்லை.. ஆனா மேத்ஸ் ல மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ்ங்கற மாதிரி ஓசி இண்ட் ஓசி சொந்தம்ங்கறதால வாங்கிக்கிட்டேன்..

 ஈரோடு தங்க துரை, நவீன்


ட்விட்டர் டி பி ல 2 கைலயும் குழந்தையோட இருப்பாரே அப்பாவி பையன் செந்தில் சே அவர் ஒரு கைல ஹெல்மட்டும், இன்னொரு கைல பேக்கும் வெச்சுக்கிட்டு நின்னாரு.. யோவ் உன் 2 கைக்கும் ரெஸ்ட்டே கொடுக்க மாட்டியாய்யா?ன்னு கேட்டா முறைக்கறாரு..

அப்புறம் என்ன? ஒரே ரகளை தான்.. எல்லாரும் சேர்ந்து ஃபோட்டொ  எடுக்கறதும், கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொல்றதும், ஒருவரை ஒருவர் அறிமுகம் செஞ்சுக்கறதும் செம ஜாலிதான்.. ஏன்னா எல்லாருக்கும் இதுதாம் முதல் சந்திப்பு.. எல்லாரையும் படைப்பின் மூலமாவும், ட்விட்டர் டி பி வாயிலாகவும் தான் தெரியும்..


விழா ஏற்பாட்டாளர்கள் எக்ஸ்பர்ட் சத்யா,  மிக்சர் ஸ்பெஷலிஸ்ட் கேசவன், பரிசல்காரன், கரையான் மிகச்சிறப்பா எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி இருந்தாங்க.. விழா 3 மணிக்குன்னு அழைப்பிதழ்ல இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியப்படி ஒரு மணி நேரம் கழிச்சு விழா துவங்குச்சு..

வாழை என்ற அமைப்பை சேர்ந்த  திவ்யா என்பவர் சமூக விழிப்புணர்வு ஊட்டும் அந்த அமைப்பு பற்றி 17 நிமிடங்கள் பேசினார்.. பின்னர் நம்மால் முடியும் என்ற அமைப்பை சேர்ந்தவர் குழந்தைகள் கல்வி பற்றி பேசினார்.. அவை விரிவாக பின்னர்..

 வலம் இருந்து இடமாக குட்டி சாகசன், மீ, கருப்பையா , --------------??


பிறகு ட்விட்டர் அறிமுகம்.. மைக்கை அவங்க கிட்டேயே கொடுத்து அவங்களை பற்றி ஒரு சுய அறிமுகம்.. இது நல்ல ஐடியா.. எப்படின்னா  மேடை ஏறி பேசச்சொன்னா 2 டிரா பேக்.. 1. பலருக்கு மேடை பயம் அல்லது மேடைக்கூச்சம் இருக்கும்..  2.  சராசரியா 160 பேர் கலந்த இந்த விழாவுல வ்வொருவரையும் மேடை ஏத்துனா  ஒரு ஆள் மேடை ஏறி இறங்கவே 1 நிமிஷம் நு கணக்கு போட்டாலும் 160 பேருக்கு  2 மணி நேரம் 40 நிமிஷம் வேஸ்ட் ஆகி இருக்கும்..

ராவணன் என்ற சீனியர் பதிவர் தான் முதல்ல வந்திருந்தார்.. நான் ராமன் என்ற ஹேண்டில் வந்திருந்தா செம ஜாலியா கலாய்ப்பா இருந்திருக்கும், அவர் வர்லை.. சின்னப்பையன் என்ற ஹேண்டில் என் அப்பா வயசுல இருந்தார்.. அவர் தான் அறிமுகத்தில் அதிக கைதட்டல் பெற்றவர்..
அறிமுகங்கள் முடிஞ்சதும் எம் ஜி ஆர் ஃபோட்டோவை டி பி ல வெச்சிருக்கும் ரவிக்குமார் எம் ஜி மிமிக்ரி பண்ண மேடை ஏற்றப்பட்டார்.. ஆள் செம கலர்.. விழாவுக்கு வந்த பசங்கள்லயே அவர் தான் செம கலர்.. பவுடர் போடாமயே தக தகன்னு மின்னறார். பெண் ஃபாலோயர்ஸ் இந்நேரம் எகிறி இருக்கும்... அவர் பலகுரல்களில் மிமிக்ரி செஞ்சார்.. ஜாலியா இருந்துச்சு.. கிரேசி கோபால் ஊடால புகுந்தாரு.. அவர் ஆல்ரெடி சன் டி வி ல நைட் 10.30 க்கு மிமிக்ரி செய்யறவர் தான்.. இது முன் பின் ரிகர்சல் ஏதும் இல்லாமல் ஆன் த ஸ்பாட் நடந்த விஷயம்.. ரவி என்ன பேசுனாரோ அதுக்கு டக் டக்னு இவர் கவுண்ட்டர் கமெண்ட் கொடுக்க விழா களை கட்டியது.. கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது..

 இந்தியாவின் நெம்பர் ஒன் தமிழ் ட்விட்டர் ஐ ஆம் கார்க்கியுடன்


 அப்புறம் கிரேசி கோபல்ட்ட டாக்டர் டி ஆர் எம் பல்பு வாங்குன நிகழ்ச்சி.. அதாவது கோபால்க்கு என்ன ஹாபின்னா பிரபல ட்வீட்டர்களுக்கு ஃபோன் பண்ணி பெண் குரல்ல அவங்களை கலாய்க்கறதுதான்.. ஆனானப்பட்ட ராஜன் லீக்ஸே அவர் கிட்டே ஏமாந்துட்டாராம்.. ( ஏமாந்து என்ன செஞ்சார்னு சரியான தகவல்கள் இன்னும் வர்லை.. )

அடுத்து கருப்பையா கவிதை வாசிக்க வந்தாரு... ஆள் பேரு தான் கருப்பய்யா.. ஆனா வெள்ளய்யா,, லுக் லைக் என்னத்தை கன்னைய்யா.. அவர்  வாசிச்ச கவிதை..


 கரையான் உடன்என்னை தொலைத்த நான் :

ஒரிரு நாட்களாய் என்னை

கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

என் வீட்டின் கதவு திறந்ததும்
எதிர்வீட்டின் கதவு
தயக்கத்தோடு அடைக்கப்பட்டது

அலைபேசியில்... வராத அழைப்பிடம்
பேசுவதாக பாசாங்கு செய்தபடியே
என்னை பதட்டத்தோடு கடக்கிறார்
பக்கத்து ஃப்ளாட் "ரகு" அண்ணா

தொலைவில் இருந்தால்
முத்தத்தை பறக்கவிட்டும்
அருகிலிருப்பின்
காதோரம் "இச்" என்ற
சத்தத்தோடும்
முத்தம் தரும் "வித்யா குட்டி"
என் எதிர்வந்தும்
அவள் தாயின் இறுகப்பற்றிய
அரவணைப்போடே
ஏற்றப்படுகிறாள்
பள்ளி வண்டியில்

சமீப காலமாய்
புன்னகையும் வெட்கமும் கலந்து
காதல் பார்வை வீசிய
எதிர்வீட்டு குமரியை
காணவே முடிவதில்லை

என் முன்னே பேச்சை மறந்து
பின் சென்றதும் குசுகுசுப்போடு
பேசும் சிலரின் சத்தமும்
காதில் கேட்டது

கார்த்திக் என்ற என் பெயரை
"காத்திக் சாப்" என
மொழிமாற்றம் செய்து
விளிக்கும் கூர்க்காகூட
"நமஸ்தே"வை மறந்துவிட்டு
ஏளனப் பார்வை ஏந்தி
என்னை எளிதாய்
கடந்து சென்றான்

இப்படியாக கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

ரயில்நிலையம்போல்
எப்போதும் சலசலத்திருக்கும்
கையேந்திபவனும்
எனை கண்டதும்
சலசலப்பு அடங்கி
மயான நிசப்தத்தை
தற்காலிகமாய் கடன்
வாங்கியிருந்தது

குழப்பத்தினூடே அலுவலகம்
சென்று அலுவல் முடிந்து
மாலை மீண்டும் விரைந்தேன்
என் குடியிருப்பை நோக்கி

நான் சென்றுசேர்ந்ததும்
வந்து சேர்ந்தது
"குடியிருப்பு செயலாளரின்" அழைப்பு

என் வணக்கத்தோடும்
அவர் வரவழைத்திருந்த தேநீரோடும்
இனிதாய் ஆரம்பித்தது
எங்களின் சந்திப்பு

(பேச்சில் தேர்ந்த அவர்
சந்திப்பு ஆரம்பித்த கணம்தொட்டே
என் தலையின் மேல்
ஆணியை வைத்து அடிக்கத்
தொடங்கியிருந்தார்)

இனிதாய் ஆரம்பித்த எங்களின் சந்திப்பு
"உங்க ஃப்ளாட் ஓனர்கிட்ட பேசிட்டேன்.
எப்ப ஃப்ளாட்டை காலி செய்கிறீர்கள்?"
என்ற அவரின் கேள்வியோடு
முடிவுக்கு வந்தது

ஏன் இத்தனை மாற்றங்கள்
என்ற காரணம்
சற்று தாமதமாகவே
தெரிய வந்தது

தெரியவந்த கணம் அதிர்ந்தேவிட்டேன்

அண்மையில் பெய்த அடைமழையில்
கிராமத்து நினைவில் நான்
குதித்து நனைந்ததை
கண்ட சிலபேர்
என் மனநிலை குறித்து
எழுப்பிய சந்தேகங்களே
அனைத்தின் காரணமென்று
தெரியவந்தது

ஆம் எனக்கு "சைக்கோ"
என்று பெயரும்
வைத்திருந்திருக்கிறார்கள்

நான்கு சுவற்றுக்குள் "ஷவரின்" கீழ்
குளிப்பதென்பது மழைக்குளியல் அல்ல என்பதை
எப்படி புரியவைப்பதென தெரியவில்லை
நகரத்து மக்களுக்கு

மழைநீர் சேகரிப்பு தொட்டியில்
சேகரிப்பதென்றும்
மறுநாள் காலையில்
சாலைநிரம்பி போக்குவரத்து
நெரிசலாகும் என்ற அளவுக்கே
மழையை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்
நகரத்து மக்கள்

மழை குறித்த தவறான புரிதலை
எண்ணி கொட்டித்தீர்க்கிறது
மேகமும் மழையாய்...

யாரேனும் சொல்லுங்கள்
மழையில் நனைவதென்பது
அத்தனை பெரிய
குற்றமா நகரத்தில்???
 விழாவின் சில ஹைலைட்ஸ்- தொடரும்


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html