Tuesday, February 28, 2012

கேரளா TO சேலம் சித்த வைத்திய சாலை( ஜோக்ஸ்)

Gud cooool mrng fr every 1!! Hve a nice*** romantic day***!!!
1. கோடீஸ்வரர் நிகழ்ச்சில சூர்யா கலந்துக்கறது தப்பா? ஏன்? 

ஏற்கனவே அவர் கோடீஸ்வரர் தானே? வேற யாராவது ஏழைக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.. 

--------------------------------

2. ஷார்ட் கட் பிரெய்ன் சண்முகம்னு தலைவரை பாராட்றாங்களே. ஏன்?

குறுக்கு புத்தி குதுப்மினார் மண்டையன்னு  ஓப்பனா திட்ட முடியுமா?

------------------------------

3.  புரோக்ராம் ஆர்கனைஷேஷன் இண்ட்டர்வியூக்கு வந்த என்னை எதுக்காக லொள் லொள்..    வவ் வவ்னு கத்த சொல்றீங்க? 

இது TALK ஷோ அல்ல, DOG ஷோ தொகுப்பாளர்

-------------------------------------

4. ஏர் பஸ்ல போய் இருக்கியா? 

எந்த டவுன் பஸ்ல ஏறுனாலும்  ஜன்னல் ஓர சீட்ல தான் உக்காருவேன், அப்போ அது ஏர் பஸ் தானே?

----------------------------------------

5. தலைவர்க்கு பழசை ஞாபகப்படுத்துனது தப்பா? ஏன்? 

பிக்பாக்கெட் அடித்த PIGகே!னு பேனர் வெச்சா? ( pig = பன்றி)

---------------------------------------
6. தலைவர் எதையும் முறைப்படி தான் செய்வார்.. 

அதுக்காக பஞ்சாமிர்தம் சாப்பிடனும்னாக்கூட பழநிதான் போவேன்னு  அடம் பிடிக்கனுமா?

---------------------------------------

7. சாமியார் மேல உனக்கு எப்படி டவுட் வந்தது?

ஆசிரமத்துக்கு வர்ற தம்பதிகள்ல மனைவி கிட்டே நீ மாசமாயிடுவே,ன்னும், கணவன் கிட்டே நீ மோசம் போயிடுவேன்னும் சொன்னாரே?

------------------------------------

8.  சகலகலா வல்லவன் யாரு? 

சகளை VS ரகளை ல சகல -சின்னி ஜெயந்த் ,

கலா - மானாட மயிலாட கலா,

 வல்லவன் - சிம்பு 

-------------------------------------

9. ராகுல் காந்தி, ராகுல் டிராவிட் என்ன வித்தியாசம்?

இந்தியாவுக்கு கிடைச்ச சீனப்பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் , இத்தாலிக்கு கிடைச்ச இந்தியப்பெருஞ்சுமை ராகுல் காந்தி

-------------------------------------

10.  டாக்டர், என் மனசுல இருக்கறதை என் லவ்வர் கிட்டே வார்த்தையால விளக்க முடியல.. 

ம்க்கும், ஸ்கேன் ரிப்போர்ட்ல மட்டும் தெரிஞ்சுடுமாக்கும்?

---------------------------------------


11. பொருளாதாரத்தடை என்பது என்ன?  

ஆர்ட்ஸ் காலேஜ்ல பி ஏ எக்கனாமிக்ஸ் கோர்ஸை தடை செய்வது??

----------------------------------

12.  தலைவரே, வாரா வாரம் ஹேர் கட் பண்றீங்களே, ஏன்?

முடிவு எடுக்கத்தாமதம் ஆகுதுன்னு என் மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு, இனி முடி எடுக்க தாமதம்னு எவனும் சொல்லிட முடியாதே?

-----------------------------------------

13.  ஜல்லிக்கட்டு தடை செய்யப்படனுமா?

தேவை இல்லை, ஏற்கனவே ரிலீஸ் ஆன படத்தை இனி ஏன் தடை பண்ணனும்?

---------------------------------------------
14. கேரளாவுல இருந்து பல மலையாளத்தலைவர்கள்  சேலம் சித்த வைத்திய சாலைக்கு வந்தாங்களா?


ஏன் கேட்கறே?


கேரள அரசியல்வாதிகள் பலவீனமாக உள்ளனர்னு அறிக்கை விட்டீங்களே?


----------------------------------------


15.  குடியை ஒழிச்சாச்சுன்னு தலைவர் குதூகலமா இருக்காரே, மது விலக்கை அமல் படுத்தியாச்சா?


அவர் சொல்றது மன்னார் குடியை

----------------------------------------------

 

5 comments:

முத்தரசு said...

வணக்கம்

Unknown said...

9 வது டாப்புங்கோ!

ராஜி said...

ட்வீட்லாம் கலக்கல்

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஜல்லிகட்டுக்கு செம விளக்கம்

Marc said...

ராகுல் காந்திய நல்ல கலாய்க்குறீங்க.அருமை பதிவு வாழ்த்துகள்