Wednesday, February 08, 2012

சீன் படம் பார்த்த மினிஸ்டர் - கில்மா செமஸ்டர் - காமெடி கும்மி

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல்போனில், ஆபாச படம் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த, பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் உற்சாகமாகப் பார்த்தார்.


சி.பி - யோவ், அது கர்நாடகா சட்டசபையா? ஈரோடு நடராசா தியேட்டரா? ந்கொய்யால.. மக்கள் வரிப்பணத்துல அங்கே போய் உக்காந்துட்டு பிட்டுப்படம் பார்த்துட்டு இருந்திருக்கானுங்க ராஸ்கல்ஸ்.. 

கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம்,எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார்.


சி.பி - அண்ணன் நம்ம கலைஞர் மாதிரிதான், மின்வெட்டு அதிகமா இருக்குன்னா அதுக்கு பதில் தர மாட்டார்.. எங்கெங்கே எல்லாம் மின் வெட்டு இருக்குன்னு புள்ளி விபரம் குடுத்து சமாளிப்பார்.. 

இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.


சி.பி - ம்க்கும், இந்த ஆள் தான் பெண்கள் நலத்துறை அமைச்சரா? வெளங்கிடும்.. நாடு.. 

முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில், "அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும்.


சி.பி - கறுப்பு தினம் உங்களுக்கு.. நீல தினம் அவங்களுக்கு ஹி ஹி 

அமைச்சர் லட்சுமண் சவதி, அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என்றார்.


சி.பி - என்ன நடவடிக்கை எடுத்திடப்போறாங்க? இனிமே இப்படி பப்ளிக்கா பிட்டுப்படம் பார்க்க மாட்டேன், முக்காட்டை போட்டுட்டு வீட்லயே பார்த்துடறேன்னு பம்புவான்.. 

 பிட்டுப்படம் பார்த்த அட்டுப்பசங்க

கர்நாடகா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக அமைச்சர்கள்.............!! #Karnataka #BJP #MLA's

கர்நாடக அமைச்சர் லட்சுமண் சவதி குறிப்பிடுகையில், "மொபைல் போனில் ஆபாச படம் எதுவும் பார்க்கவில்லை. அதை பார்த்ததில் தவறு எதுவுமில்லை. என்னிடம் இருந்தது என் மொபைல் போனல்ல. நான் பார்த்தது, டாக்குமெண்ட்ரி படம். இதை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தேன் என்று கூறுவது சரியல்ல. அமைச்சர் கிருஷ்ண பலேமர், இந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதை பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கிருஷ்ண பலேமருக்கு யாரோ அவரது மொபைல் போனுக்கு "எம்.எம்.எஸ்.,' அனுப்பியுள்ளனர்' என்றார்.


சி.பி - பார்த்தது பிட்டுப்படம், இதுல என் செல் ஃபோன் இல்ல, அவருதுன்னு ஒரு சப்பைக்கட்டு வேற.. இது எப்படி இருக்குன்னா கொலை செஞ்சு கையும் களவுமா மாட்டிக்கிட்டவன் குத்துன கத்தி என்னுது இல்லை, கடைக்காரனுதுன்னு சொல்ற மாதிரி.. 

இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். 

 மக்கள் கருத்து 

1. அந்த மான் - மனுநீதி பாண்டியன் -அரசியல் வாதிகள் அதிகாரம் இருக்கும் தெம்பில், பயமில்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் நியாய படுத்துகின்றனர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க தண்டனை கிடைத்தால் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். பாரதிய ஜனதா , காங்கிரஸ் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டை எங்கு கொண்டு போய் விட போறார்களோ தெரியவில்லை, அதற்குள் மக்களாகிய நாம் அனைவரும் விழித்து கொள்ள வேண்டும்.

சி.பி - ம்க்கும் தூங்குனாத்தானே விழிக்க, இன்னைல இருந்து 8 மணீ நேரம் கரண்ட் இருக்காது,, பெக்கே பேக்கேன்னு முழிச்சுட்டே இருக்க வேண்டியதுதான்


2. ஆரூரன், சென்னை - சட்டசபை உறுப்பினர்களை அவ்வபொழுது குஷிப் படுத்த "சீர் கேர்ள்ஸ்களை" ஆட விடலாமே. அரசவை நடனங்கள் நம் நாட்டுப் பாரம்பரியம்தானே? இருவர் மட்டும் ரகசியமாக படம் பார்த்தால்தானே தவறு?

சி.பி - அது சட்ட சபையா? செட்டப் சபையா? விட்டா தொழில் நடத்த சொல்வாரு போல.. 

3. மதுரை விருமாண்டி - தொலைபேசி நிறுவனத்தில் இருந்து மாண்புமிகு அமைச்சரின் தொலைபேசியிலும், தொலைபேசி அலைவரிசையிலும் டெக்னிகல் கோளாறு ஏற்ப்பட்டதற்கு உரிய சான்றுகளும், மாண்புமிகு சபாநாயகரிடமும், மாண்புமிகு முதலமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன...பொய் வீடியோ எடுத்து பிரசுரித்த சானல் மீது, மாண்புமிகு அமைச்சரின் அலுவல்களில் அத்து மீறி நுழைந்ததாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு சபாநாயகர், மாண்புமிகு முதல்வரின் அனுமதி கேட்டுள்ளார்... மாண்புமிகு முதல்வர் இதை எதிர்க்கட்சிகளின் சதியாக இருக்கும் என்று நம்புகிறார்...கேஸ் குளோஸ்டு..

சி.பி - அது சரி.. ஐடியா எடுத்துக்குடுக்கறீங்களா? அதுதான் நடக்கப்போகுது ஹூம்.. 

4. ராஜா , யுனைட்டட் கிங்க்டம் - அப்புடி போடு போடு போடு போடு.. இப்படி போடு மொபைலிலே..

சி.பி - சிச்சுவேஷன் சாங்க்?ஒரு மந்திரி இப்போ வந்தார் கில்மாவா.. அவர் சீன் படம் பார்த்தார் செல் ஃபோனில் ஒரே ஜொள்மாவா..

5. அருள், சிங்கப்பூர் - ரொம்ப போரியடிக்குதுன்னு நாளைக்கு ரெண்டு குட்டிகள தள்ளிகிட்டு வந்துடாம. மானம்கெட்ட மக்கள் நல அக்கறை இல்லாத அமைச்சர்கள். இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யனுமின்னு தெரியலப்பா

சி.பி - சொல்ல முடியாது, மாறு வேஷம் போட்டு கூட்டிட்டு வந்தாலும் வந்துடுவாங்க.. 

6. கோவிந்த் - டெல்லி - காங்கிரஸ் N D திவாரி ஆந்திரா ராஜ் பவனுக்குள் பலான பெண்களை கூட்டி கொண்டு போய் கூத்தடித்தது வீடியோ ஆதரங்களுடன் வந்தது. அய்யா இங்க பிஜேபி யை சேர்ந்த இரண்டு வெத்துவேட்டுகள் செய்த தவறை யாரும் சரி என்று சொல்ல வில்லை. இவர்களை மிக கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்பது தான் என் வாதம். அதே நேரத்தில் 2G , 4G அதில் 1 76 ஆயிரம் கோடி , 2 இலட்சம் கோடி என்று தவறு செய்து நாட்டை சுரண்டும் காங்கிரஸ் முன்னர் இந்த இரண்டு பேரும் எம்மாத்திரம். அவர்கள் சபைக்குள் இருந்து கொண்டு படம் பார்த்தது தான் தவறு. அதற்காகவே அவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் இந்த செய்கையினால் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படவில்லை என்றாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டும்....

சி.பி - பி ஜே பி.னா  பயங்கர ஜொள்ளு பார்ட்டின்னு ப்ரூஃப் பண்ணிட்டாங்க..

 இனி ஜோக்ஸ் 

1. ஜட்ஜ் - செல்ஃபோன்ல சீன் படம் பார்த்தீங்களாமே? ஏன்? 


எம் பி - என் லேப்டாப் ரிப்பேர் யுவர் ஆனர்

----------------------------------

2. ஜெ - இனி மின்வெட்டு தினசரி 8 மணி நேரம்..

மக்கள் - பிரமாதம் மேடம்,கலைஞரை விட நீங்க பல மடங்கு டேலண்ட் தான்

-----------------------------

3. இன்று முதல் காலை 6-9 மதியம் 12-3 மாலை 6-7 இரவு 8-9 அறிவிக்கப்பட்ட மின்வெட்டு

தமிழ் நாடு மின் வாரியம்  சினிமா தியேட்டர் மாதிரி ஆகிப்போச்சு.. 

-----------------------------

16 comments:

கோவை நேரம் said...

அடுத்த பதிவு அந்த கில்மா சீன் பத்தி விமர்சனம் பண்ணி விடுவீங்களே ....அதானே

Astrologer sathishkumar Erode said...

உங்களுக்கு தகுந்த மாதிரி வகையா மாட்டிகிட்டானுக ஹாஹா

Astrologer sathishkumar Erode said...

சூப்பர் ஹிட் போஸ்ட்...நல்லாருக்கு

முத்தரசு said...

வணக்கம்

முத்தரசு said...

உங்களுகுனே வந்து மாட்றானுங்க

முத்தரசு said...

சி பி கே கில்மாவா??

முத்தரசு said...

பிட் பட கூட்டணியை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு
அகில உலக சி பி கில்மா பேரவை

இந்திரா said...

//சீன் படம் பார்த்த மினிஸ்டர் - கில்மா செமஸ்டர் - காமெடி கும்மி //

இந்த மாதிரி தலைப்பெல்லாம் எப்படி தான் உங்களுக்குத் தோணுதோ??

ராஜி said...

இந்திரா said...

//சீன் படம் பார்த்த மினிஸ்டர் - கில்மா செமஸ்டர் - காமெடி கும்மி //

இந்த மாதிரி தலைப்பெல்லாம் எப்படி தான் உங்களுக்குத் தோணுதோ??
>>>
சிகப்பு கலர் சட்டை போட்டு கூலிங்க் கிளாஸ் போட்டால் இப்படிதான் சிந்திக்க தோணுமாம்.

கும்மாச்சி said...

சி.பி. படம் பார்த்து விமர்சனம் போடும் முன்பு கில்மா படம் பார்த்த கர்நாடக மந்திரிகளை கழுவில் ஏற்றவேண்டும்.

K.s.s.Rajh said...

//////சீன் படம் பார்த்த மினிஸ்டர் - கில்மா செமஸ்டர் - காமெடி கும்மி ////

ஹி.ஹி.ஹி.ஹி. அவர் பார்தது மட்டும் இல்லாமல் பக்கத்தில் உள்ளவரும் பார்த்துக்கொண்டு இருந்திருக்கார்

ஹி.ஹி.ஹி.ஹி..... வெளங்கிடும் அவ்வ்வ்வ்வ்வ்வ்

Yoga.S. said...

என்னத்தச் சொல்ல?வூட்டுல தான் நிம்மதியில்லைன்னா,இங்கயுமா????

நாய் நக்ஸ் said...

TIMING COMEDY-YA????

Unknown said...

இனி கர்நாடக சட்டசபை...நிர்வாணபிட்டுபட சபை என்று அழைக்கப்படும்....

மன்மதகுஞ்சு said...

அந்த பிட்டு படம் லிங்கை கொடுக்க மறந்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..மக்களால் அனுப்பப்பட்ட எம் பிக்கள் எல்லாவற்றையும் மக்களுடனும் சேர் பண்ணிக்கொள்ளவேண்டும் என்ற கடப்பாட்டை மறந்துவிட்டனரா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே....