Thursday, February 16, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (17.2.2012) 6 படங்கள் முன்னோட்டம்

பிப்ரவரி 14இல் வரவேண்டிய லவ் சப்ஜெக்ட் படங்கள் கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் பிரகாரம்  வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது.. 

http://www.padalai.com/ak/wp-content/uploads/2012/01/KSE_01.jpg


1. காதலில் சொதப்புவது எப்படி? - கலைஞர் டி வி நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அபார வரவேற்பை பெற்ற குறும்படம்.. யூ டியூப்பில் லட்சக்கணக்கான ஹிட்ஸை அள்ளியது.. சித்தார்த்- அமலா பால் ஜோடி.. இந்தக்கால இளைஞர்கள் காதலை எப்படி லைட்டா எடுத்துக்கறாங்க?எப்படி எல்லாம் ஃபிகர்ங்களுக்கு நூல் விடறாங்க? என்பதை காமெடியா சொல்லி இருக்கற படம்.. 

இயக்குனர் ஷங்கரின்  எந்திரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘இரும்பிலே ஓர் 
இருதயம்’ பாடலின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக  அறிமுகமானவர்  வைரமுத்துவின் வாரிசான கார்க்கி.

குறுகிய காலத்தில் கோ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என்னமோ ஏதோ’, எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெற்ற “ நெஞ்சில் நெஞ்சில்”, 180 படத்தில் இடம் பெற்ற ‘நீ கோரினால்’உள்ளிட்ட பல வெற்றிப்  பாடல்களை இவர் எழுதியுள்ளார்.

சமீபத்தில் தன் ட்விட்டர்  தளத்தில் தன் 50-வது பாடலை இயற்றிய செய்தியை தனது  ரசிகர்களுடன்  பகிர்ந்துகொண்டுள்ளார் கார்க்கி.

சித்தார்த், அமலா பால்  நடிப்பில், தமன் இசையில், இயக்குனர் பாலாஜி இயக்கி, ஓய் நாட் நிறுவனம் தயாரிக்கும் ‘காதலில் சொதப்புவது எப்படி' என்ற முழுநீள நகைச்சுவை காதல் படத்திற்கு  கார்க்கி தன்  50-வது பாடைல எழுதியுள்ளார்.

 படத்துக்கான மார்க்கெட்டிங்க் செம, அந்தக்கால குமுதத்தில் வந்த படக்கதைகள் போல ரொம்ப எளிமையா , புதுமையா விளம்பரம் செஞ்சு இருக்காரு.. படம் காதலர்கள், இளைஞர்களை கவரும் என்பது உறுதி..ஈரோடு அபிராமியில் ரிலீஸ்

http://123tamilcinema.com/images/2011/10/muppozhudhum_un_karpanaigal_movie_poster.jpg

2. முப்பொழுதும் உன் கற்பனைகள் - எல்ரெட் குமார் இயக்கத்தில் ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் தயாரித்துள்ள முப்பொழுதும் உன் கற்பனைகள்  ஒரு சைக்கோ லவ் த்ரில்லர் மாதிரி தோணுது..

இயக்குநர்கள் கவுதம் மேனன் மற்றும் கே வி ஆனந்த் இசைத் தகட்டை வெளியிட்டனர்.

அதர்வா, அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு காதல் கதை. எனவே காதலைக் கொண்டாடும் விதத்தில் அரங்கத்தை அலங்கரித்திருந்தனர்.

இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு ட்ரெயிலரை திரையிட்டுக் காட்டினர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படமாக்கப்பட்ட பாடல் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.

ருக்மினியின் பாலே நடனமும், படத்தின் பாடல்களை பாபா செகல், மாயா, சிதாரா ஆகியோர் மேடையில் பாடியதும் ரசிகர்களைக் கவர்ந்தன.

எல்ரெட் குமார் முதல் முறையாக இயக்கியுள்ள படம் இது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகும் முன்பே பாடல்கள் ஹிட்... படத்தோட ட்ரெய்லர்ல ஒளிப்பதிவும், லிக்கேஷன் செலக்‌ஷனும் கலக்கல்.. ஈரோடு ஆனூர், ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்

http://4.bp.blogspot.com/-hGKKSkLdrS0/TlKMyBqrXNI/AAAAAAAALz4/hBxA2zqTqxE/s1600/Tamil+3d+movie+ambuli+images_thumb%255B15%255D.jpg

3.  அம்புலி - 3 டி -
கே.டி.வி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் நிறுவனத்துக்காக லோகநாதன் தயாரிக்கும் 3டி படம், அம்புலி. முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அஜெய், ஸ்ரீஜித் ஹீரோக்கள். சனம், ஜோதிஷா ஹீரோயின்கள். இசை: கே.வெங்கட் பிரபு சங்கர், சாம் சி.எஸ்., சதீஷ், மெர்வின். ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண் இணைந்து இயக்குகின்றனர்.


இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் பாடல்களை வெளியிட்டனர். பிறகு இப்பட நிறுவனம் சார்பில், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர்.
இயக்குனர் சேரன் பேசியதாவது:


மை டியர் குட்டிச்சாத்தான் 3 டி படத்துக்குப் பிறகு விஜயகாந்த் நடித்த அன்னை பூமி 3 டி படம் வந்தது. டெக்னிக்குகள் நிறைய வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழில் ஏன் அதிகமாக 3 டி படங்கள் உருவாகவில்லை என்று தெரியவில்லை. நானும் 3 டி படம் இயக்கப் போகிறேன். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டேன். கலையை ரசிக்கும் எண்ணம் மாறி, பொழுதுபோக்கிற்காக மட்டுமே ரசிகர்கள் படம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வௌ;வேறு புதிய முயற்சிகள் செய்து, எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். மாறி வரும் ரசனைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு படங்கள் தர வேண்டும். இவ்வாறு சேரன் பேசினார்.
விழாவில் பார்த்திபன், நமீதா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், யுடிவி தனஞ்செயன், டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஈரோடு ஸ்டார், அன்னபூரணியில் ரிலீஸ்


 4. உடும்பன் -
 'உடும்பன்'படத்திற்கு தடை உத்தரவு
சென்னை, பிப்.2 (டிஎன்எஸ்)  மாடர்ன் சினிமா சார்பில் s ஜெகநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'உடும்பன்'. இப்படத்தின் எழுத்து, இயக்கம், இசை s.பாலன். இதில் இந்தியாவின் பிரபல பைக் ரேசர் திலிப் ரோஜர் ஹீரோவாக நடிக்கிறார். அடுத்த மாதம் வெளிவர தயார் நிலையில் உள்ள இப்படத்திற்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

சென்னை, சூளை சார்ந்த செல்வராஜ், வனவிலங்கு ஆர்வலர் சிட்டி சிவில் கோர்ட்டில் புகார் அளித்து அதில் அழியும் இனமான உடும்பு இனத்தை கொடுமைப்படுத்தி இருப்பதாக புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதி லக்ஷ்மிகாந்தன் தடை உத்தரவு போட்டுள்ளார். இதை கேட்டறிந்த தயாரிப்பாளர் s .ஜெகநாதன் அதிர்ச்சியுற்றார்.

"நங்கள் படபிடிப்பிற்க்கு முன்னால் முறையாக வனவிலங்கு நலவாரிய துறையிடம் (ANIMAL WELFARE BOARD OF INDIA )அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம், மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு (CENSOR BOARD ) " U "சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆகவே இந்த தடை உத்தரவை முறையாக எல்லா ஆவணங்களையும் செலுத்தி, இந்த தடைகளை சட்டபூர்வமாக அகற்றி திட்டமிட்டபடி படத்தை வெற்றிகரமாக திரையிடுவோம்" என்று தயாரிப்பாளர் s .ஜெகநாதன் கூறியுள்ளார். (டிஎன்எஸ்).. ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் ரிலீஸ்
 http://www.heyuguys.co.uk/images/2012/01/the-woman-in-black-vintage-poster.jpg

5. THE WOMAN IN BLACK -   ஹாரி பாட்டர் நாயகன்  டேனியல் ரேட் க்ளிப் நடிச்ச படம்.. திகில் கம்  பேய்ப்படம். இளம் வக்கீலா வர்றார்.. ஒரு கிராமத்துக்கு ஹீரோ வர்றார்.. அங்கே இருக்கும் பழி வாங்க துடிக்கும் ஒரு பெண் பேயை சந்திக்கிறார். ( பொதுவா எல்லா பேய்ப்படங்கள்லயும் ஏன் பெண்களே பேயா வர்றாங்க? ஹி ஹி , நாம படம் எடுத்தா ஆம்பளை பேயை காட்டனும் ) ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

http://static.guim.co.uk/sys-images/Guardian/About/General/2011/10/18/1318946094652/Still-from-The-Woman-in-B-006.jpg


6. காட்டுப்புலி -  அர்ஜுன் நடிப்பில் பாலிவுட்டில் புகழ்பெற்ற சண்டைக்காட்சி இயக்குனர் டினு வர்மா இயக்கத்தில் காட்டுப்புலி மும்பை மற்றும் அதனைச் சுற்றிய காட்டுப் பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்டு திகில் நிறைந்த காட்சிகளாக உருவாகியுள்ளது.

http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/09-02-12/kaattu-puli-movie-news.JPG

சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளான அரசியல், காவல் மருத்துவம் ஆகியவற்றில் புனிதமான துறையாகக் கருதப்படும் மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர்.


முழுக்க முழுக்க நரமாமிசம் உண்பவர்கள் (Cannibals) மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜுனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள் அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள் கொலைகள் அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜுன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் கதை. 

அர்ஜுனுக்கு ஜோடியாக பிரியங்கா தேசாயும் அவர்களது மகளாக தான்யாவும் நடித்திருக்கிறார்கள். இதில் மூன்று ஜோடிகளாக ராஜ் நீஸ், சாயாலி பகத், அமீத்- ஹனயா, ஜாஹன், ஜெனிபர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


மூன்றாவது ஜோடியாக வரும் காதலர்களுக்கிடையே வரும் லிப் டு லிப் முத்தக்காட்சியில் பதினான்கு கட் சென்சார் கொடுத்துள்ளது. . …அந்த கிறங்கடிக்கும் காட்சியை சில நொடிகளுக்கே வருமாறு குறைக்கப்பட்டதில் இயக்குனருக்கு வருத்தம் எனினும் அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.


டினு வர்மா தனது கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் காட்டு புலிக்கு இசை விஜய் வர்மா. காட்டு புலி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது.

http://cinesouth.com/images/new/26052011-THN12image1.jpg


டினு வர்மா தனது சிறந்த சண்டைக் காட்சிகளுக்காக 7 முறை பிலிம் ஃபேர் விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்

3 comments:

ராஜி said...

அவசியமான தகவல்களை கொடுத்து இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி

RAMA RAVI (RAMVI) said...

இந்த வாரம் இவ்வளவு படங்களா ரிலிஸ்??

நாளைக்கு நீங்க எத்தனை படங்கள் பார்க்க போறீங்க?

நீங்க எடுக்கபோகிற படத்துல வர ஆண் பேய எப்படீன்னு பார்க்க ஆவலா இருக்கு,சீக்கிரமாக படம் எடுங்க.

shabi said...

நெஞ்சில் நெஞ்சில் பாடல் இடம் பெற்ற படம் எங்கேயும் காதல் ...... எங்கேயும் எப்போதும் தவறு