Tuesday, February 14, 2012

ஒரு நடிகையின் வாக்கு மூலம் - சோனியா அகர்வாலின் ஷாக் நீலம் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9kij9b_LweF5mtBc-FFau0_VPs1SbXh9c8JIxFPYB4gRNLMppjRKXw6BnTaKNkW1WyMPkJz9AvMwoRx-R150A417YwoNDK1p82st9GofmxtahoXOjUTyRIxxwQV3xCF08uX6-UpkQuEs/ 

இந்தப்படம் புக் ஆகும்போதே செல்வராகவன் வயிற்றில் புளியை கரைச்சிருக்கும்.. என்னென்ன சொல்லப்போறாரோ?ன்னு.. ஆனா செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு இன்னும் சான்ஸ் இருக்கறதா சோனியா நினைச்சாரோ என்னவோ அவர் சொந்தக்கதை எதுவும் சொல்லலை.. படத்தோட டைரக்டர் பூடகமா பாரதிராஜா, குஷ்பூ, சிம்பு, நயன் தாரா, பிரபு தேவா  எல்லார் கதையையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில் கதை ரெடி பண்ணிட்டார். ஆனா திரைக்கதைல வேகம் இல்லை.

சோனியா அகர்வாலோட அப்பா கிராமத்துல  நாடக கலைஞர்.. நலிவடைஞ்ச நாடகக்கலையால அவர் பழசெல்லாம் மறந்துட்டு இருக்கறப்ப ஊர் ஜனங்க அவர் பெண்ணை ஹீரோயினா போட்டு நாடகம் எடுக்க சொல்றாங்க.. அவரும் ரெடி பண்றார்.. திடீர்னு வேற ஒரு ட்ரூப்பை வெச்சு நாடகம் நடத்திடறாரு ஊர்த்தலைவரு.. ஆக்சுவலா இந்த சீன்ல அப்பா கேரக்டர் தானே கோபப்படனும்? ஆனா அம்மா கேரக்டர் கோபம் அடைஞ்சு ஜெ கேப்டன் கிட்டே சட்டசபைல சவால் விட்ட மாதிரி கிராமத்துக்கே சவால் விடறாரு.. என் மகளை நாடறஞ்ச அழகிய நடிகை ஆக்கி காட்றேன்னு.


கட் பண்ணா  சிட்டி..  THE DIRTY PICTURE  படத்துல வர்ற மாதிரி சான்ஸ் கேட்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவா அலையறாங்க.. அப்போ ஒரு லேடி ஆடம்பரமா வாழ, சான்ஸ் கிடைக்க உன்னை நீ இழக்கனும்கறாங்க.. கேட்கற நமக்கே ஷாக்கா இருக்கற அந்த சீன்ல என்னமோ கைல வெச்சிருக்கற கடலை பர்பியை கேட்டதும் இந்தா என தர்றது மாதிரி அவங்க கில்மாவுக்கு ஓக்கே சொல்றாங்க. ( இந்த சீன்ல டைரக்டர் ஹீரோயின் சோனியாவோட அம்மா கேரக்டர் மெழுகுவர்த்தி மாதிரினு காட்ட நினைச்சிருக்கார் எடுபடலை.. )

தன் கற்பை ஏலம் விட்டும் கூட  சோனியாவோட அம்மாவால மகளுக்கு ஹீரோயின் சான்ஸ் வாங்கித்தர முடியலை.. கடைசில ஒரு டைரக்டர்ட்ட சான்ஸ் கேட்கறாங்க ( படத்துல ராஜ்கபூர் நடிச்ச இந்த கேரக்டர் பாரதிராஜா மாதிரி காட்றாங்க) அவர் சோனியா அகர்வாலை கேட்கறாரு. நடிகை ஆக்குவதே லட்சியம் (!!!!??) என்பதால் அதுக்கும் ஒத்துக்கறாங்க... அட தேவுடா. 

இனிமே சொல்லப்போற கதை சிம்பு, நயன் நினைவில் கொள்ளவும்.. சோனியா அகர்வால் ஹீரோயினா நடிச்ச படம் ஹிட் ஆகுது.. காட்சி மாறுது.. அவரை அறிமுகம் செஞ்ச டைரக்டருக்கே அவரோட அடுத்த பட கால்ஷீட் கொடுக்க முடியாத அலவு பிசி.. இவருக்கு போட்டியா ஒரு நடிகையை களம் இறக்கறார் ( ஹன்சிகா மோத்வானி மாதிரி சாயல் )

சோனியா அகர்வால் ஒரு டைரக்டரை லவ் பண்றாரு..  ( நயன் தாரா சிம்புவை லவ்வின மாதிரி)  அந்த டைரக்டர்  சோனியாவை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு  திடீர்னு மார்க்கெட்ல வந்த புது நடிகையை  கரெக்ட் பண்றாரு.. புதுசு பிக்கப் ஆனதும் பழசை மறக்கறாரு ( பிரபுதேவா நயனை கழட்டி விட்டுட்டு ஹன்சிகா மோத்வானியை கரெக்ட் பண்ணுன மாதிரி )

இதை எல்லாம் பார்த்து வெறுத்துப்போன ஹீரோயின் ஆசிரமத்துக்கு போய் செட்டில் ஆகிறாரு ( ரஞ்சிதா மாதிரி )

அவ்ளவ் தான் கதை. இப்போ படத்தோட புரொடியூசர் புன்னகைப்பூ கீதா .. அவர்க்கு மனசுக்குள்ள ஆசை, இந்தப்படத்துல நடிக்கனும்னு.. உடனே டி வி  மேனேஜிங்க் டைரக்டர் ரோல்ல வந்து நடிகை சோனியாவை பேட்டி எடுக்கற மாதிரி 2  ரீல் ரெடி பண்ணி அட்டாச் பண்ணிட்டார்.

படத்துல முதல் பாராட்டு சோனியா அகர்வால்க்கு அம்மாவா நடிச்ச நடிகை. ஊர்மிளா உன்னி . செம அக்டிங்க்.. வறுமைல இருக்கறப்ப பம்முவதும், பணம் வந்ததும் காட்ற கித்தாப்பும், ஆடம்பர பாடி லேங்குவேஜும் அசத்தல். 

2 வது பாராட்டு டைரக்டராவே வர்ற ராஜ்கபூர்..  நடிகைகளை வலை வீசி பிடிப்பதையே தொழிலாக கொண்டவர் கேரக்டர் செம பொருத்தம். 

சோனியா அகர்வால் மென் சோக உணர்வுகளை மட்டும் பிரமாதமாக காட்டி நடிக்க தெரிந்த நடிகை, அவ்ளவ் தான்,, மற்றபடி அவரிடம் நவ ரச நடிப்பை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. முகத்தில் முற்றல் தெரியுது. ஓவர் மேக்கப்.. குறைச்சுக்கனும்.. 

http://tamil.oneindia.in/img/2011/11/30-sonia-agarwal5-300.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  பிரச்சனை வரும் என்று தெரிந்தும் தைரியமாக பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி என சினிமா பிரபலங்களின் பர்சனல் கதைகளை ஆங்காங்கே கோர்த்து விட்டிருப்பது.. ( புரிந்து விடாமல் மக்கள் தடுமாறக்கூடாது என வாரமலர் கிசு கிசு பாணியில் சில க்ளூஸும் தர்றார்.. )

2.  சுமாரான இந்தக்கதைக்கு சோனியா அகர்வாலை புக் பண்ணுனது

3. புன்னகைப்பூ கீதா வரும் காட்சிகளில் எல்லாம் இவர் தான் படத்தோட தயாரிப்பாளர் என டமாரம் அடிக்காத குறையாக அவருக்கு லைம் லைட் அடித்து விட்டது..  ( அவர் போட்டு வரும் நெக்லஸ்  டிசைன் சூப்பர் )

4. பாடல்களில் போவது யாரு? தேவதை பாரு பாட்டும், டோண்ட் டச் மீ பாடும் தேறுகிறது. 


5. இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் காட்டியது..உண்மையில் இது தெலுங்கு டப்பிங்க் படம்


http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3666.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ், அவரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல டி வி மீடியா ஒர்க்கர்ஸ் எல்லாரும் ஐ டி கார்டோட மீட்டிங்க்  வர்றாங்க, ஆனா புன்னகை பூ கீதா மட்டும் ஐ டி கார்டு போடலை.. ஏன், அவர் தயாரிப்பாளர் என்பதாலா?

2.  சோனியா அகர்வாலின் ஹேர் டிரஸர் ( சிகை அலங்கார நிபுணர்)க்கு வயசு 45 இருக்கும், கீதாவுக்கு 25 இருக்கும், ஆனா அவரை இவர் வா போ என மரியாதை இல்லாமல் பேசறாரே?

3.  ஜோதிலட்சுமி சோனியா அகர்வால் அம்மா கிட்டே நீங்க கற்பை இழக்கத்தயாரா? என கேட்கும்போது யோசிச்சு சொல்றேன் அப்டினு கூட சொல்லாம உடனே ஓக்கே சொல்றது எப்படி?

4.  ஆல்ரெடி பலரிடம் கற்பு பறி போன ஒரு நடிகையை கரெக்ட் பண்ண ஒரு ஹீரோ எதுக்காக டிரிங்க்ஸ்ல மயக்க மருந்தோ, போதை மருந்தோ கலந்து தர்றார்? அவர் என்ன கன்னிப்பெண்ணா?

5.  கதைப்போக்கு டைரியை படிக்கற மாதிரி வருது.. அதாவது ஒவ்வொரு காட்சிலயும் சோனியா அகர்வால் வரனும், ஆனா அவர் இல்லாம பல காட்சிகள் வருது.. அது எப்படி அவர் டைரில எழுதி இருக்க முடியும்?

6. கோவை சரளா சான்ஸ் கேட்டு வரும் ஒரு புது முகத்தோட அம்மா, ஆனா பல படங்கள் ஹிட் கொடுத்த தயாரிப்பாளரை அவரது வேலையாள் போல் பப்ளிக்காக நடத்துவது எப்படி? ( ஏன்னா சினிமா புரடியூசருங்க எல்லாம் தனியா எப்படி இருந்தாலும் பப்ளிக்ல இமேஜ் மெயிண்ட்டெயின் பண்ணுவாங்களே?)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEintZ8JdSJmj1fCehYJU8u2RhoRaUVtXx9BiwRaA8bj0fTVSZ8oc9gekmmPJtvjmXORC8k-YAzlaDvoxIfkONytbQau18RbA-HwRttD4OhA-XAk6v8-8hZdTtE9nVZCVSbQ_50TVOqMzg-E/s1600/65684786Sonia-Agarwal-and-Selvaraghavan.jpg

7. க்ளைமாஸ்ல சோனியா அகர்வால் என்னமோ தவணை முறை தற்கொலை திட்ட அமைச்சர் மாதிரி 20 நிமிஷத்துக்கு ஒரு முறை தூக்க மாத்திரை 10 போடறார்.. கொஞ்ச நேரம் ஷூட்டிங்க்ல கலந்துக்கறார்.. மறுபடி 10 மாத்திரை சாப்பிடறார்/.. வாழ்வை வெறுத்தவங்க தனி அறைல ஒரே மூச்சாகத்தானே தற்கொலை செய்வாங்க?

8.  ஹீரோயின் சோனியா அகர்வாலோட பள்ளித்தோழி தன் மேரேஜ் இன்விடேஷனை கொடுக்க வர்றப்ப சோனியா வீட்ல இல்லை, அவங்கம்மா கிட்டே கொடுக்கறாங்க.. போயிடறாங்க.. அவங்கம்மாவுக்கு சோனியா அந்த மேரேஜ்ல கலந்துக்க இஷ்டம் இல்லை.. அதனால சொல்லலை.. அப்போ அவங்க அந்த பத்திரிக்கையை ஒளிச்சோ எரிச்சோ வெச்சிருக்கலாம், ஆனா 20 நாளா டேபிள்லயே இருக்கு.. 

9. அந்த கல்யாண பத்திரிக்கையை பார்த்த  20 நாள் கழிச்சு லேட்டா  பார்த்த சோனியா  தன் அம்மா கிட்டே “ ஏன் மறைச்சே? அவளுக்கு நான் என்னெ என்னெ எல்லாம் செய்ய நினைச்சேன்னு  1 பக்கம் கோப வசனம் பேசறாரே?ஏன்? அவர் செய்ய நினைச்சதை மேரேஜ் முடிஞ்ச பின் செய்யக்கூடாதா?கண்டுக்காம விட்றாரே?

10. சான்ஸ் கேட்கப்போகும் நடிகைகள் எல்லாரும் தயாரிப்பாளர், அல்லது டைரக்டர் கூட படுத்துக்கறாங்க என்று சொல்ல வர்றதைக்கூட ஒரு வகைல ஏத்துக்க்கலாம்.. ஆனா எல்லாருமே எந்த பாதுகாப்பும் இல்லாம மாசம் ஆகறது காமெடி..

11. சோனியா அகர்வாலோட பெயர் கதைப்படி அஞ்சலி. அதைக்கேட்ட ராஜ்கபூர் சினி ஃபீல்ட்ல ஆல்ரெடி ஒரு அஞ்சலி இருக்காங்க, அதனால உன் பேரை மாற்றனும்கறார்.. ஆனா அதே பேர்ல தான் கடைசி வரை இருக்கார்.. ஏன்?

12.. செம பரபரப்பா, விறு விறுப்பா எடுத்து இருக்க வேண்டிய இந்தக்கதையை ஏன் அவ்ளவ் ஸ்லோவா டிராமா மாதிரி கொண்டு போகனும்?

http://4.bp.blogspot.com/-wOc_qUlI9do/TtZncnsm8dI/AAAAAAAAWeg/4PwTTp3jfjs/s1600/Oru+Nadigayin+Vakku+Moolam+Shooting+Spot+Stills+%252838%2529.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 ( ஆனா விகடன்ல விமர்சனம் போட மாட்டாங்க, சும்மா படத்தோட மதிப்பீட்டுக்காக மார்க்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - யார் யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி மற்றும் கிசு கிசு செய்திகளை ஆர்வமாக படிக்கும் வம்படி வனஜாக்கள்,வரதராஜன்கள் மட்டும் பார்க்கலாம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

15 நாட்கள் ஓடும்..

http://www.filmics.com/tamil/images/stories/news/Sep_2011/24.09.11/sonia_agarval.png

12 comments:

ராஜி said...

காதலர் தின ஸ்பெஷலா ஒரு மணி நேரத்துக்கு ஒரு பதிவு போடனும்ம்னு முடிவு பண்ணீட்டீங்க போல.

சசிகுமார் said...

கலக்குறீங்க.......

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆல்ரெடி பலரிடம் கற்பு பறி போன ஒரு நடிகையை கரெக்ட் பண்ண ஒரு ஹீரோ எதுக்காக டிரிங்க்ஸ்ல மயக்க மருந்தோ, போதை மருந்தோ கலந்து தர்றார்? அவர் என்ன கன்னிப்பெண்ணா?
சிபி அண்ணா பாவம் டைரக்டருக்கு அந்த இடத்துல மூளை வேலை செய்யல போல?
யார் யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்?பாரதிராஜா, குஷ்பூ, பிரபு தேவா, நயன் தாரா , சிம்பு, ஹன்சிகா மோத்வானி மற்றும் கிசு கிசு செய்திகளை ஆர்வமாக படிக்கும் வம்படி வனஜாக்கள்,வரதராஜன்கள் மட்டும் பார்க்கலாம்
அண்ணா அப்புறம் நீங்க போய் பார்த்திருக்கீங்களே?

ராஜ் said...

சார்,
படம் கொக்கையா இருக்கும்ன்னு தெரியும்... ஆனா இவ்வளவு மொக்கையா இருக்கும்னு சத்தியமா எதிர் பார்க்கல...
பாண்டியராஜன் மேல இருந்த நம்பிக்கையில உங்களலோட மெரினா விமர்சனத்தை தப்பா புரிஞ்சுகிட்டேன். ஆனா உண்மையிலேயே மெரினா படம் படு மோசம் சார். இண்டர்வெல் மேல பார்க்க முடியல. கரெக்டா சொல்லிடேங்க. மெரினா மொக்கைன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தப் படம் எப்படியோ நீங்க போட்ட படம் ஹி....ஹி......!

Anonymous said...

16 நாள் ஓடும்...

இது புது யூகம்...

ஸ்ரீராம். said...

கதையைச் சொல்லிட்டீங்கங்கரதால பதினாலு நாள்தான் ஓடும்!

மாதேவி said...

"யார் யார் எல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்" செம :)))

காட்டான் said...

தம7 ஹா ஹா வேற என்னங்க செய்ய!!

கோவை நேரம் said...

என்னது.....பிரபு தேவா இப்போ ஹன்சிகா கூடவா...? அரிய தகவல் தந்தமைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

செம :))
செம :))
செம :))
செம :))
செம :))
செம :))
செம :))

MARI The Great said...

ரைட்டு ............!