Wednesday, February 01, 2012

அறுபடை வீடு கொண்ட கில்மா தலைவர்!!!!!!!!! ( joks)

http://3.bp.blogspot.com/-bIuAFFE8c78/Tu2ucKLDiGI/AAAAAAAAJ3E/gyaC9V9_6gg/s00/amy-jacksan-stills-008.jpg1. டியர்! இனிமே உன் மனசு புண்படற மாதிரி நான் பேசமாட்டேன்.

நிஜமா? தாங்ஸ்.

எங்கம்மாதான் இன்சார்ஜ் அதுக்கு இனிமே! அவங்க திட்டுவாங்க.

---------------------------------------

2. கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்.

அப்போ எதுவுமே எடுக்காதவன் சாகவே மாட்டானா?

------------------------------------------

3. சென்சார்ல ஒரு சீனைக் கூட வெட்டலையாமே?

ஆமா! அவங்களுக்குத் தனியா ஒரு அமவுண்ட் வெட்டிட்டமே!

-------------------------------------------

4. ப்ரீவ்யூ ஷோ பார்த்த புரொடியூசர் கண்கலங்கிட்டார்.

படம் ஊத்திக்கும்-னு கண்டுபிடிச்சுட்டாரா?

---------------------------------------

5.சிம்பு, ஆண்ட்ரியா, திவ்யா ஸ்பந்தனா நடிக்கும் ‘வட சென்னை’ துவக்கம்.

மசால் வடை ஆண்ட்ரியா, மெதுவடை திவ்யா, வடை எனக்கே என கூவுபவர் சிம்பு!

-----------------------------------------

6. பீச்சுல சுண்டல் விற்கறவங்களோட நிலைமை என்ன ஆகுது?-ங்கறதுதான் மெரீனா - பாண்டிராஜ்.

படத்தோட டைட்டில் கில்மாவா இருக்கு கதை knot கொல்மாவா இருக்கே?

-----------------------------------------

7. ரெய்டு வர்ற மேட்டர் தலைவருக்கு தெரிஞ்சிருச்சு போல!

எப்படி சொல்றே?

ரெய்டு பண்ண வந்த சி.பி.ஐ ஆஃபீச்ரே! வருக! வருக!-னு பேனர் வெச்சிருக்காரே?

--------------------------------------------

8. டாக்டர்! என் பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்.

போஸ்ட் பெயிடு சிம்மா? பிரீ பெய்டு சிம்மா?

------------------------------------------

9. தலைவர் செம ஜொள் பார்ட்டி.

எப்படி சொல்றே?

லேடி போலீஸ் பாதுகாப்பு வேணும்-னு கேட்கறாரே?

-----------------------------------------

10. கப்பல் மேல் தளத்துலதான் உங்களுக்கு வேலை.

அய்யய்யோ! இது நீர்மூழ்கி கப்பல் ஆச்சே?

--------------------------------------------

http://3.bp.blogspot.com/_sCN6jFNlTec/TFFAznhRnZI/AAAAAAAAACk/-WHvFN36b-M/s640/Madhurima.jpg

11. லைட்னிங் ஸ்பீக்கர் LIGHTNING SPEAKER அப்டிங்கற பட்டப்பேரு தலைவருக்கு எப்படி வந்துச்சு?

சொடக்கு போடற நேரத்துல கடலையை போட்டு முடிச்சிடறவன் தான் மின்னல் வீரன் என்றழைக்கப்படுவான்.

-------------------------------------------

12. தலைவருக்கு 6 சின்ன வீடு இருக்கு.

ஓஹோ! அறுபடை வீடு கொண்ட கில்மா தலைவரா?

-----------------------------------------

13. புலால் உணவில் மட்டும்தான் மூளை வளர்ச்சிக்கு துணை புரியும் வைட்டமின் B12 இருக்கு....

டாக்டர்... அப்போ சைவமா இருக்கும் மனுஷனை விட அசைவமா இருக்கற சிங்கம் புத்திசாலியா இருக்குமா?

-----------------------------------------

14. தலைவர் பையன் சினிமால நடிக்கறாராம்.

கிங் காங் பார்ட்-2 எடுக்கறதா ஐடியாவோ!

---------------------------------------

15. ATM மிஷின்ல கொள்ளை அடிச்சவன் ரூல்ஸ் 4 ரெகுலேஷனை ஃபாலோ பண்ணி இருக்கான்.

எப்படி?

ரூ. 25,000 மட்டும் எடுத்திருக்கான்.

------------------------------------

16. டியர்! உலகின் 9-வது அதிசயம் நீ தான்...

நிஜமாவா? தாங்ஸ்... அப்போ 8-வது?

ஹி... ஹி... உன் தங்கச்சி...

--------------------------------------------

17. டைரக்டர் சார்! ஹீரோ & கோ படத்துல சாப்பிடறப்ப மடில பிளெட்டை வெச்சுக்கறாங்க. வில்லன் & கோ தரைல பிளேட் வெச்சு சாப்பிடறாங்க. ஏன்?

மேல் தட்டு மக்கள், கீழ் தட்டு மக்கள்-னு வெரைட்டி காட்றாங்க.

-----------------------------------------

18. மாப்ளை ரொம்ப மரியாதை தெரிஞ்சவர்-னு எப்படி சொல்றே?

பெண் பார்க்க வந்தப்பவே பொண்ணோட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாரே?

----------------------------------------

19. உங்களுக்கு நாவடக்கம் ஜாஸ்தியாமே?

ஆமா! மேரேஜ்க்கு விறகு என் மனைவியோட சமையலால் என் நாக்கே செத்துப் போச்சு. அடக்கம் பண்ணிட்டேன்.

----------------------------------------------

20. என் மனைவி கூட சண்டை வர்றப்ப சரணாகதி ஃபார்முலாதான் ஃபாலோ பண்றேன்...

அடடா...  ஏன்?

இல்லைன்னா என் கதி அதோ கதிதான்.

----------------------------------------

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/12/Amy-JAckson-s.jpg

13 comments:

கும்மாச்சி said...

அறுபடை வீடு கொண்ட கில்மா தலைவரா? சரியான ஆரோக்கியசாமிதான்.

கும்மாச்சி said...

தமிழ்மணத்தில் சேர்த்துட்டேன் தல.

Anonymous said...

ஜோக்ஸ் மழையில் நனைந்தேன்...

ராஜி said...

கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்.

அப்போ எதுவுமே எடுக்காதவன் சாகவே மாட்டானா?
>>>
இந்த பிளாக் படிச்சா போதும்.வாழும் ஆசையே போய்டும்

sutha said...

good ones - funny

உணவு உலகம் said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

16.ஜொள்ளும் சிபி.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!பத்தொன்பதாவது ஜோக்கில,மனைவியோட சமையலுக்கு "விறகு"......அப்புடீன்னு போட்டிருக்கு.சமைக்கிறதுக்கு நம்மூர்ல கூட விறகு தான் யூஸ் பண்ணுவாங்க!இதுல என்னத்த கண்டுட்டேள்????ஹி!ஹி!ஹி!!!

ஹேமா said...

கடைசி இரண்டும் ... உங்க வீட்லயும்தானே சிபி !

Unknown said...

11வதும் 20வதும் டாப்பு ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

தலைவரு மகன் சினிமால செம காமெடி!

விஸ்வநாத் said...

8.prepaid SIM முழுங்கிட்டா talk time முடிஞ்சவென்ன பேச்சு வராதோ ?

Mohamed Faaique said...

2,4,10,15,16 செம... ரொம்ப ரசித்தேன்....