Monday, February 20, 2012

உடும்பன் - தனியார் கல்வி எதிர்ப்பு வேள்வி - சினிமா விமர்சனம்

http://www.cineikons.com/wp-content/uploads/2012/02/udumban.jpg

ஹீரோ கழக எம் எல் ஏ மாதிரி ஒரு சாதா திருடன்.. அவனுக்கு ஆ ராசா மாதிரி பல்க்கா கொள்ளை அடிக்கனும்னு ஆசை வந்துடுது.. உடனே என்னா பண்றான்.. ஈரோடு  என் கே கே பி ராஜா ஈரோடு ராயல் தியேட்டரை வளைச்சுப்போட ஐடியா செஞ்சாரே அது மாதிரி திருடுன பணத்தை எல்லாம் சேர்த்து ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கறான்.. அதாவது கட்டறான்..

ஹீரோவுக்கு ஒரு அண்ணன்.. அவனும் ஒரு திருடன் கம் ரவுடி தான் . பின்னே மொள்ள மாரிக்கு அண்ணன் ஒரு முடிச்சவுக்கியாத்தானே இருக்க முடியும்? ஹீரோ சரியா மாமூல் தராததால் போலீஸ் பிடிச்சு ஜெயில்ல போட்டுடுது.. இப்போ அந்த ஸ்கூல்க்கு அண்ணன் தான் இன்சார்ஜ்.. 

அண்ணன் ராகுல் காந்தி மாதிரி ஒண்ணுமே தெரியாம இருந்தவர் திடீர்னு அஞ்சா சிங்கம் அழகிரி மாதிரி செம டேலண்ட் ஆகி மக்கள்ட ஃபீஸ்ங்கற பேர்ல கொள்ளை அடிக்கறார்.

ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆன தியாகி ஹீரோ உடனே அண்ணனை போட்டுத்தள்ள வீராவேசமா கிளம்பறார்.. அப்போ அவங்கம்மா வந்து தடுத்து ஒரு சொம்பு பால்ல கை அடிச்சு சத்தியம் வாங்கிக்கறாங்க, எந்த சூழ்நிலையிலும் நீ அண்ணனை எதுவும் செய்யக்கூடாதுன்னு..


http://123tamilcinema.com/images/2012/02/7c284d18-3f35-47dc-aed4-c36e4cee8a0e_S_secvpf.jpg

கலைஞர் - அழகிரி - ஸ்டாலின் - தயாளு அம்மாளை நக்கல் அடிக்கறாங்களா?அல்லது தனியார் கல்வி மையங்களை காய்ச்சறாங்களா? அப்டின்னு முடிவு எடுக்கறதுக்குள்ள படம் முடிஞ்சுடுது அவ்வ்வ்வ்வ்

ஹீரோ ஏதோ பைக் வீரராம் பேரு திலீப்பாம்.. சுமாரா நடிப்பு எட்டி பார்க்குது.. ஆனா அவர் தன் எக்சசைஸ் பாடியை காட்டறதுக்கு காமிரா ஆங்கிள்ல 13 டைம் க்ளோசப்ல கட் பண்ணி கட் பண்ணி காட்றது ரொம்ப ஓவருங்கோவ்.. தானைத்தலைவி கும்மீதா சாரி நமீதாவைக்கூட அப்டி கட்னது இல்ல அடச்சே காட்னது இல்ல ..

படத்துல நமக்கு புதுசு அந்த உடும்புதான்.. உடும்பு பிடின்னு நாம கேள்விப்பட்டிருப்போம் .. ஆனா அது பாருங்க ஒரு பெரிய பில்டிங்க் மொட்டை மாடில கயிற்றுல கட்டி தூக்கிப்போட்டா கெட்டியா பிடிச்சுக்குது. ஹீரோ இன்னொரு முனையை பிடிச்சு ஏறிடறாரு.. அவ்ளவ் வெயிட் எப்படித்தான் தாங்குதோ..? லாஜிக் மிஸ்டேக்ல இதையும் சேர்த்திருப்பேன், நல்ல வேளை ஒரு உயிரியல் நிபுணர்ட்ட கேட்டேன், ஆமா அப்டி தாங்குனுட்டாரு.. ( நல்ல வேளை நான் பல்பு வாங்கலை.. )

ஹீரோயின் ஏதோ சனாவாம்.. எனக்கே பிடிக்கலை.. ( பொதுவா 40 மார்க் ஃபிகரைக்கூட நாம நல்லாலைன்னு சொல்ல மாட்டோம் ஹி ஹி )பாப்பா தேமேன்னு கடனுக்கு வந்துட்டு போகுது.. 

படத்துல செம காமெடி என்னன்னா ஹீரோயின் மாறு வேஷத்துல வருது.. எப்படின்னா தேங்காய் எண்ணெய் தலைக்கு தேச்சு அழுந்தப்படிய  தலை வாரி சேலை கட்டுனா டீச்சர்.. தலைக்கு குளிச்சு சுடிதார் போட்டிருந்தா டார்ச்சர் டூ வில்லன்.. அடங்கப்பா சாமி முடியல..

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9079&option=com_joomgallery&Itemid=78

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடி  எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று சொல்ல வந்த விஷயத்தை நயன் தாரா பச்சை குத்தியது போல் பதியும் படி சொன்னது..

2.  உடும்பு பற்றி ஓரளவு பதிவு செய்த முதல் தமிழ் படம் என்ற பெயர்..

3. தனியார் நிறுவனக்கல்வி நிறுவனங்களை நேரடியாக தாக்கிய முதல் தமிழ்ப்படம் என்ற அளவில்.. ( ஜெண்ட்டில்மேனில் லைட்டாக)

4. வசனகர்த்தா நறுக் சுருக் வசனங்கள்..

5. வானுக்கு நிலவு வேண்டும், வாழ்வுக்கு புகழ் வேண்டும்.. பாட்டு, ஓரம் கிழிஞ்சாலும் பாட்டு, காற்றினில் தான் இன்பம், பள்ளிக்கூடம் 1 மணிக்கே பாடல் 4ம் கேட்கற அளவு இருக்கு.. 


http://www.newsonweb.com/newsimages/February2012/bdc443ee-6e0c-455b-92e8-5f8fdd12e8711.jpg

இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்


1.  ஹீரோ ஒரு இடத்துல 100 பவுன் நகையை கொள்ளை அடிக்கறான், அப்போ போலீஸ் மாமூல் கேக்குது, என்னமோ கர்ண மகாராஜாவுக்கு தம்பி மாதிரி அப்படியே குடுக்கறார் ஹீரோ.. போலீஸ்னா அதிக பட்சம் 40% குடுத்தா போதாதா? ஈரோடு மாவட்டம் எவ்லவோ தேவலை ஹி ஹி

2. எந்த கேனயனாவது 2 ஃபிகர்சை ஒரே டைம்ல கரெக்ட் பண்ண பார்த்து 2 பேர்ட்டயும் மாட்டுவானா? இந்த படத்துல ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஜிகிடி கிட்டே பூ தர்றான்.. அவ தலையை குனிஞ்சிருக்கும்போதே அவ தோழிக்கும் தந்து மாட்டிக்கறான்.. கேட்டா காமெடியாம் அவ்வ்வ்வ்வ்வ்

3.  இன்ஸ்பெக்டர் தங்கச்சி படு கேவலமா இருக்கற ஹீரோ ஃபிரண்டை பார்த்து அப்படி வழியுதே.. பாப்பா ஆம்பளைங்களையே பார்த்திருக்காதா?

4. ஹீரோயின் ஹீரோ கிட்டே எதோ லெட்டர் தருது.. லவ் லெட்டர்னு டெம்போ ஏத்தறாங்களாம்.. அப்புரம் பார்த்தா.  “ பள்ளிக்கூடத்தில் சமூக விரோத செயல் நடை பெறுகிறது” அப்டினு எழுதி இருக்கு.. இந்த ஈர வெங்காயத்தை நேர்லயே சொல்றதுக்கு என்ன? வாய்ல கொழுக்கட்டையா?


5. வில்லன் கொலை பண்ற சீனை ஹீரோயின் மரத்துல செல் ஃபோனை ஃபிட் பண்ணி வெச்சுட்டு 10 அடி தூரம் நடக்கறா.. டக்னு ஹீரோயின் கைல அதே ஃபோன் வந்துடுது அது எப்படி?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Sana/sana-udumban-actress-065.jpg

6. வில்லனுக்கு டவுட்.. ஹீரோயிண்ட்ட இருக்கற செல் ஃபோனை வாங்கி செக் பண்ண கேட்கறான். டக்னு ஹீரோ அதே மாடல் செல்ஃபோனை தன் கிட்டே இருந்து எடுத்து கை மாத்தி விடறான்.. அது எப்படி அவனுக்கு முன் கூட்டியே தெரியுமா?

7. வில்லன் ஹீரோயினை துரத்திட்டு வர்றான்,, ஹீரோயின் சேலை கட்டி இருக்கா.. ஒரு இடத்துல வந்து சுடிதார் மாத்திட்டு வர்றா.. அப்போ அடையாளம் தெரியாதா?  டக்னு செல் ஃபோன் ரிங்க் டோன் கேட்குது.. உடனே தான் வில்லன் கண்டு பிடிக்கறான்.. அடங்கோ..

8,  நாக்கை பிடுங்கிட்டு சாவுன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம்.. நிஜமாவே ஃபீஸ் குடுக்க முடியாம ஒருத்தர் நாக்கை புடுங்கிட்டு சாகிற மாதிரி ஒரு சீன்.. சில டாக்டர்களிடம் கேட்ட போது அப்படி சாக சான்ஸ் இல்லங்கறாங்க. அப்படியே செத்தாலும் வாய்ல ரத்தம் ஒரு சொட்டு கூட வராம இருக்குமா?

9. வில்லன் கிட்டே இருக்கற அடியாளுங்க 4 பேரும் நம்பியார் கணக்கா ஓவர் ஆக்டிங்க் பண்ணிட்டு அங்க சேஷ்டை எல்லாம் பண்ணிட்டு முறைக்கறாங்க.. 100 பேட்டா வாங்கிட்டு எதுக்கு 1 லட்சம் ரூபா நடிப்பு?

10. காதல்ங்கறது தானா வரனும்.. ஆனா ஹீரோயின் வியாபாரம் பேசறா.. உங்க அண்ணன் செய்யற கல்வித்திட்ட மோசடிகளை அழி.. அப்போதான் லவ்வுவேன்கறா.. அதுக்கும் ஹீரோ ஓக்கேங்கறார் இதுதான் உங்க ஊர்ல =லவ்வா?


11. ஹீரோ ஓப்பனிங்க்ல ஹீரோயினை கவர டான்ஸ் போட்டில கலந்துக்கிட்டு  டான்ஸ் ஆடாம எதுக்கு ஜிம்னாஸ்டிக் வேலை எல்லாம் செய்யறாரு?

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9086&option=com_joomgallery&Itemid=78

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 

சி .பி கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம்


ஈரோடு அண்ணா தியேட்டர்ல பார்த்தேன்

படத்தில் உள்ள சாட்டையடி வசனங்கள் தனிப்பதிவாக விரைவில்

http://www.tamilkurinji.in/images_/udumban-poster-10_1328195612.jpg

10 comments:

அஞ்சா சிங்கம் said...

ஹலோ ப்ரதர் அது அஞ்சா நெஞ்சன் அழகிரி ..
அஞ்சா சிங்கம் இல்லை ....என் பெயரை ரிப்பியர் ஆக்கிருவீங்க போல

ராஜி said...

கலைஞர் - அழகிரி - ஸ்டாலின் - தயாளு அம்மாளை நக்கல் அடிக்கறாங்களா?அல்லது தனியார் கல்வி மையங்களை காய்ச்சறாங்களா? அப்டின்னு முடிவு எடுக்கறதுக்குள்ள படம் முடிஞ்சுடுது அவ்வ்வ்வ்வ்
>>
உங்களுக்கே புரியலையா சிபி சார். அப்போ எங்களுக்கெல்லாம் மட்டும் புரிஞ்சுடுமாக்கும்

சுதா SJ said...

பாஸ் விமர்சனம் சூப்பர்..... இந்த வாரம் என்ன விமர்சன வாரமோ!!!!! அவ்வவ்

Riyas said...

ஹீரோயின் நல்லாயில்லன்னு சொல்லிட்டு ஏய்யா குளோசப் போட்டோவெல்லாம் போட்டு தொலைக்கிறிங்க,, பயமாயிருக்குங்க!

ஸ்ரீராம். said...

:)))

Anonymous said...

விமர்சனம் சூப்பர்...கலக்குங்க சிபி...

பால கணேஷ் said...

வேட்டி கட்டினா அண்ணன், பேண்ட் போட்டா தம்பின்னு மட்டும் நடிச்சு ரெட்‌டை வேஷத்துல புரட்சி பண்ணின அண்ணன் டி.ஆர்தான் ஹீரோயினுக்கு ரோல்மாடல் போல! ஹீரோயின் பாக்க ரொம்ப சுமார்ன்னு சொல்லிட்டு, இவ்வளவு படத்தைப் போட்டு எங்களைப் பயமுறுத்தறீங்களே செந்தில்... அவ்வ்வ்வ்!

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்றாக இருக்கு.டி.வி. ல் போட்ட பார்த்துக்கலாமா? ஓ.கே.

Yoga.S. said...

ஹீரோயின் புடிக்கலியா???மூணாவது,அஞ்சாவது ஸ்டில்லில நல்ல"எடுப்பா"தானே தெரியுறா????

Unknown said...

ஓய்வில இருக்குற அரசியல்வாதிகளையெல்லாம் கிண்டல் பண்றீங்க! ரொம்ப பின் ஜாக்கிரதை தானுங்!