Sunday, February 19, 2012

அம்புலி 3டி - திக் திக் திகில் பக் பக் பகீர் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLJs3_5j4rQ6BDALEtNy4nir82fOFkmZOFoG6c5YKZL7WKxtOYsdhf9IP0mDvMGr6DbCsCe1dBnGVLUQucVWzcDzfhfE95I7BCCfbawtO_4KyX9J3bWzIkE7EusnC1m6FK28qCI2qCU4A/s1600/20x10.jpgதமிழ்ல ஏகப்பட்ட படங்கள்  ஹாலிவுட் படங்கள்ள இருந்து திருடி வந்தாலும் ,  3டி யா வந்த படம் மை டியர் குட்டிச்சாத்தான்.. 18 வருஷங்களுக்கு முன்னால நான் சின்னக்குழந்தையா இருந்தப்ப வந்த படம், அதுக்கப்புறம் அன்னை பூமின்னு கேப்டன் கேவலமான ஒரு படத்துல நடிச்சாரு.. இப்போ வந்திருக்கற இந்தப்படம் ஓரளவுக்கு நல்ல திகில் படமா , ஆர் பார்த்திபன் குணச்சித்திரமா நடிக்க பல புது முகங்களை வெச்சு எடுத்திருக்காங்க.. நல்ல முயற்சி.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அங்கே சோளக்காட்டு பொம்மை இருக்கற வயக்காடு ஏரியா.. அங்கே யாரும் போக வேணாம்.. அம்புலி அடிச்சுடும்னு ஒரு பேச்சு இருக்கு.. நம்மாளுங்க வேணாம்னு சொன்னாத்தான் வேணும்பான்,,

ஒரு லவ் ஜோடி... ஹீரோ அந்த வழியாப்போறப்ப  அவனை அம்புலி துரத்துது.. எஸ் ஆகி வந்து பகல்ல அம்புலி பற்றி விசாரிக்கறாரு..

1957 - ல  வெலிங்க்டன் காலேஜ்ல ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சில மனிதனோட ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டு பிடிக்கறாரு.. அந்த காலத்துல எல்லாம் மனிதனோட சராசரி ஆயுள்  100 ஆண்டுகள் ( இப்போ 60 டூ 70) .ஆனா அவர் கண்டு பிடிச்ச மருந்தை சாப்பிட்டா  150 வருஷங்கள் வாழலாமாம்.. 


http://vanavilfm.com/wp-content/uploads/2011/07/ambuli-300x199.jpg

அவர் ஆராய்ச்சிக்கு சோதனை எலியா  கணவன் இல்லாத ஒரே ஒரு பையன் மட்டும் உள்ள கர்ப்பிணிப்பெண்ணை தேர்ந்தெடுக்கறாரு..மருந்தை அந்த பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தறாரு/..

ஏதோ ஒரு மிஸ்டேக்கால அந்த குழந்தை எசகு பிசகா ராட்சசன் போல பிறக்குது.. அம்மா பிரசவத்துல அவுட்.. சூரிய கிரஹணத்தன்னைக்கு பிறந்ததாலதான் அப்படி இருக்குன்னு ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க.. ( சூரியன்னாலே தமிழ் நாட்டுக்கு கிரஹனம் தான்.)

 அந்தக்குழந்தை தான் அம்புலி.. ஊர் மக்களை அடிச்சு சாப்பிடுது.. நைட் டைம்ல மட்டும்  அதனால பேய்னு மக்கள் நினைக்கறாங்க.. ஆர் பார்த்திபன் தான் அந்த அம்புலியோட அண்ணன்.. 

2 லவ் ஜோடிகள் எப்படி அந்த அம்புலி கிட்டே இருந்து தப்பிக்கறாங்க .. அம்புலியை யார் போட்டுத்தள்ளுனாங்க என்பது க்ளைமாக்ஸ்,.. 

படம் போட்டு முதல் 20 நிமிஷம் ஒண்ணும் புரியலை.. படம் ஊத்திக்கிச்சோன்னு நினைக்கறப்ப 20 நிமிசத்துக்குப்பின் தான் கதை ஸ்டார்ட் ஆகுது.. 

அம்புலியின் அம்மாவாக வருபவர் உமா ரியாஸ்.. கர்ப்பிணிப்பெண்னாக  ஒரு படத்துல நடிச்சாலும் நடிச்சார், எல்லா படமும் அதே ரோல் தான் இனி தருவாங்க போல பாவம்.. ஆனா நல்ல நடிப்பு.. 

ஆர் பார்த்திபன் மொத்தமே 6 சீன்ல தான் வர்றார்.. நடிக்கவெல்லாம் வாய்ப்பு இல்லை.. 

அஜய், ஸ்ரீஜித், சனம் , திவ்யா நாகேஷ் இவங்க தான் படம் பூரா வர்ற காதல் ஜோடி.. குறை சொல்ல முடியாத நடிப்பு.. கதை நடக்கறது  1978 -1979 கால கட்டம் என்பதால் அதே கால கட்ட உடை நடை பாவனைகள், நடனம் எல்லாம் ஓக்கே.. 

http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/big/13476B_amb08.jpg

இயக்குநர்கள் (2 பேர்) பாராட்டு பெறும் இடங்கள்

1. திரைக்கதையில் தொய்வில்லாமல் செம விறு விறுப்பாக கதையை நகர்த்திய விதம்.. 

2. பெரிய நடிகர்கள் யாரையும் நம்பாமல் கதையின் மீதும் , இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெரும்பாலும் புது முகங்களை வைத்தே எடுத்தது.. 

3. திருட்டு டி வி டி யை தடுக்க 3 டி யில் படம் எடுத்தது. ( ஒரே கல்லுல 2 மாங்கா.. பர பரப்புக்கு பரபரப்பு.. காசுக்கு காசு)

4. தமிழில் அம்புலி என்றால் நிலா என்ற அர்த்தத்தை மாற்றி யோசித்தது..

5. சந்திர முகி படத்துக்குப்பிறகு ரசிக்கும்படியான ஒரு திகில் படத்தை கொடுத்தது.. 


http://www.mysixer.com/wp-content/gallery/ambuli-first-3d-movie-in-tamil-gallery/jothsha-sanam-setty.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய இடங்கள் +  லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  நான் கடவுள் வில்லன் ஆண்டவன் தன் 8 வயசு சிறுமியுடன் காட்டுவழியில் நடக்கும்போது அதுவும் இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்க அவர் மகளிடம் நீ இங்கேயே இரு என்று அவரை அம்போ என விட்டுட்டு தனியா போறார்.. அம்புலி அவர் மகளை கொன்னுடுது.. எந்த அப்பாவாவது அப்படி செய்வாங்களா?

2.  எல்லா காலேஜிலும் லீவ் 2 மாசம் தான்.. அதிக பட்சம் ரெண்டரை மாதம்.. ஆனால் படத்தில் ஹீரோ படிக்கும் காலேஜில் 4 மாசம் லீவ் அவ்வ்வ்வ்

3.  சோளக்காட்டு வழியா போனா ஆபத்துனு ஊர் எச்சரிச்சும் அது எப்படி சொல்லி வெச்ச மாதிரி எல்லா பக்கிகளும் முறை வெச்சு போய் மாட்டிக்கறாங்க..?

4. மிட் நைட்ல காதலியை யாருக்கும் தெரியாம ரகசியமா சந்திக்க வர்ற காதலன் சத்தம் இல்லாம வந்த வேலையை பார்த்துட்டு போவானா? புல்லாங்குழல் எல்லாம் ஊதிட்டு காட்டிக்கொடுப்பானா? ( கமுக்கமா இருக்க வேணாமா கணேசா? )

5.  தன் குழந்தை அசுரனா, அவலட்சணமா பிறந்தா ஒரு அம்மாவுக்கு 2 வழி இருக்கு 1. எங்காவது அநாதை ஆசிரமத்துல விடுவது.அல்லது பிறந்த இடத்துலயே விட்டுட்டு நைஸா ஓடி வந்துடறது  2.. அந்த குழந்தையை கொலை செய்து விடுவது.. இதெல்லாம் செய்யாம யாராவது தூக்கு போட்டு சாவாங்களா? தான் செத்துட்டா தன் 8 வயசு பையன் அநாதையா மாறிடுவானே?ன்னு நினைக்க மாட்டாங்களா?

6. ஆர் பார்த்திபன் நினைச்சா தன் தம்பியை சின்ன வயசுலயே கொலை செஞ்சிருக்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு பெரிய ராட்சசனா வளர்ந்து ஊர் மக்களை எல்லாம் அடிச்சு உலையில் போடறதை வேடிக்கை பார்த்துட்டு, க்ளை மாக்ஸ்ல ஏன் கொலை செய்ய பார்க்கறார்?

7. அந்த கிராமத்துல அத்தனை பேர்  அநியாயமா செத்தும் போலீஸ் ஏன் எட்டிப்பார்க்கலை? ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செஞ்சும் போலீஸ் ஃபோட்டோ ஆதாரம் கேக்குதே ஏன்?

8. காதலை சொல்லி ஒரு நாள் கூட ஆகலை, அதனால நோ கிஸ் அப்டினு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஆனா அதை தொடர்ந்து வர்ற பாட்டில் மெயின் மேட்டர் தவிர எல்லா வேலயையும் ஹீரோ செஞ்சுடறார் எப்டி?

9. ஹீரோ சோளக்காட்டு வழில போறப்ப சைக்கிள விட்டுட்டு ஓடி போறாரு
.. அப்புறம் வேற ஒரு ஃபிரண்டை கூட்டிட்டு அதே இடத்துக்கு பயந்து பயந்து ஏன் வரனும்? காலைல வந்துடக்கூடாதா?

10. கதை 1978 -80 ல நடக்குது.. அடிக்கடி சொதப்பிட்ட என்ற வசனம் வருது.. அந்த வார்த்தை புழக்கத்தில் வந்ததே 2006ல தான் ( வசனத்தில் சொதப்பியது எப்படி?)
http://www.virakesari.lk/cinema/cine-news-img/ambuli/ambuli-_32_.jpgமனம் கவர்ந்த வசனங்கள்

 1.  காதல்ங்கறது....

டேய் ரோமியோ.. போதும்டா அடக்கி வாசி.. 

2. நான் ஊருக்குள்ள வர்றதை வேட்டு வெச்சு கொண்டாடறாங்க போல.. 

நாய், நரிக்கு கூட அப்படித்தான் செய்யறாங்க.. 

3.  டியர்.. என் ரூமை எப்படி கண்டு பிடிச்சீங்க?

ரோமியோ ஜூலியட் காலத்துல இருந்தே ஹீரோயின் ரூம் மாடில தானே?

4. எதுக்காகடா இங்கே வந்தீங்க?

 சும்மா உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.. 

நான் என்ன உங்க அத்தை பொண்னா?

5. நான் பூங்காவனத்தோட க்ளோஸ் ஃபிரண்டுங்க..

என்னை விட க்ளோஸா?

6.  டேய்.. வாடா அம்புலியோட அண்ணன் வாரான், போய் ஒளிஞ்சுக்கலாம்.. 

அந்த கட்டிலுக்கு அடில பாம்பு வளர்த்தறேன், பார்த்து கடிச்சுடப்போகுது.. 

7. ஊருக்கே ஊது பத்தி விக்கறவங்க நாங்க,எங்களுக்கே தூபமா?

8. உன் ஸ்கூட்டரை குடு..

ம்ஹூம்

 ம், பெரிய கர்ணனோட கசின் பிரதர்...

9.. டியர்.. நான் எதுக்கு வந்தேன்னு சொல்லு பார்க்கலாம்.. 

 என் கிட்டே உதை வாங்கவா?

10.  மான் கறி சாப்பிடறீங்களா?

அய்யய்யோ நான் சைவம்.. 

மான் கூட சைவம் தான்

11. டியர்,, நீ அங்கே போகாதே அது இனிஷியல் ஸ்டேஜ்ல லவ் பண்றவங்க போக வேண்டிய இடம்.. நாம இங்கே போவொம் ஹி ஹி ஹி 

12. கடவுளை நாம அணுக காரணமே  அவர் மேல எந்த தப்பும் இல்லாம இருக்கறதால தான்.. 


http://cinema.natpu.in/wp-content/gallery/ambuli/29_full.JPG


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சந்திரமுகி, காஞ்சனா மாதிரி திகில் பட ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.. குழந்தைகளும் பார்க்கலாம்.. 

ஈரோடு ஸ்ரீசண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - 1 - 3டி கண்ணாடியை போட்டு படம் பார்க்கரது செம ஜாலி.. வலது கண்ணை மூடி பார்த்தா எல்லாம் பச்சையாவும் , இடது கண்ணை மூடிப்பார்த்தா எல்லாம் சிவப்பாவும் தெரியுது.. அதுல ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.. தியேட்டர்ல எல்லாரையும் கண்ணாடியோட பார்க்க செம காமெடி.. 

டிஸ்கி 2 - படம் விட்டு போறப்ப நைஸா அந்த கண்ணாடியை சுடலாம்னு பலர் ஐடியா பண்னாங்க. ஆனா தியேட்டர் வாசல்ல நின்னு கவனமா கலெக்ட் பண்ணிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 3 - படம் போட்டு டைட்டில்ல எழுத்து ஓடுனப்ப எனக்கு எழுத்தே தெரியல.. பக்கத்துல ஒரு லவ் ஜோடி உக்காந்திருந்தது./. உங்களுக்கு தெரியுதா ஏதாவதுன்னேன்.. சாரி நாங்க படம் பார்க்க வர்லைன்னாங்க.. அடங்கோ.. 

டிஸ்கி 4 - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர் நான் இந்தப்பட டைரக்டரா இருந்தா அந்த அம்புலி கேரக்டரை பெண் கேரக்டர் ஆக்கி ஸ்பீசஸ் 2 படத்துல வர்ற மாதிரி அம்புலி அந்த வழியா வர்ற ஆண்களை ரேப் பண்ணி கொலை பண்ற மாதிரி காட்டி இருப்பேன் கில்மாக்கு கில்மா, சுவராஸ்யத்துக்கு சுவராஸ்யம்  ஹி ஹி

http://mmimages.mmnews.in/gallery/2012/Feb/2053_L_galvpf.gif

17 comments:

Astrologer sathishkumar Erode said...

விமர்சனம் நல்லா இருக்கு..படம் பார்க்கனும்

கூடல் பாலா said...

டிஸ்கி 2 : அவ்வவ்வ்வ்வ்

ஹாலிவுட்ரசிகன் said...

விமர்சனம் நல்லாயிருக்கு பாஸ். நமக்கு தான் பார்க்க முடியாது. அவ்வ்வ்

ஹாலிவுட்ரசிகன் said...

// 18 வருஷங்களுக்கு முன்னால நான் சின்னக்குழந்தையா //

உண்மையாவா?

// 3டி கண்ணாடியை போட்டு படம் பார்க்கரது செம ஜாலி.. வலது கண்ணை மூடி பார்த்தா எல்லாம் பச்சையாவும் , இடது கண்ணை மூடிப்பார்த்தா எல்லாம் சிவப்பாவும் தெரியுது.. அதுல ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம் //

இதப் பார்த்தா இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கிறா மாதிரி தெரியுது. ஹி ஹி

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல விமர்சனம்,இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால்தான் தமிழில் மேலும் பல 3-டி படங்கள் வரும்!

Cable சங்கர் said...

புல்லாங்குழலை சத்தமில்லாம வாசிக்கிறேன் என்று உதடுகளில் வைக்காமல் வாசிப்பது போல பாவனையாய்த்தான் ஆரம்பிப்பார்கள். டைரக்டர்கள் டச்..:)) அடுத்த வாட்டி இன்னும் நல்லா பாருங்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

விமர்சனம் நல்லா இருக்கு...

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்றாக இருக்கு.

3டி கண்ணாடிக்கு இங்கே 100 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் திரும்பி போகும் பொழுது கண்னாடிய வாங்கிண்டு பணத்தை திருப்பிக்கொடுக்கறாங்க.

Yoga.S. said...

விமர்சனம் நல்லா இருக்கு,ஸ்டில்ஸ் நல்லாருக்கு!படம் பாக்கணும்கிற ஆவல தூண்டுது,ஹி!ஹி!ஹி!!!!

Unknown said...

படம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றார்ப்போல உண்டு என்று சொல்லவருகிறீர்! சரிதானே!

சக்தி ரேவதி said...

நல்ல விமர்சனம்..

தட்சிணாமூர்த்தி said...

கில்மா இல்லாம உம்மால ஒரு பதிவு கூட போடமுடியாதா ? தல.….நாம வேணும்னா அம்புலிய வேற மாதிரி.…அதான் லேடி கேரக்டரா மாத்தி எடுக்கலாமே ! புரொட்யூசர் நீங்கதான்.
கில்மாக்கு கில்மா காசுக்கும் காசு.

அந்த தியேட்டர்ல ஒரு 3டி காணாம போயிடுச்சாமே ! குடுத்துடுங்க தல.….பாவம் தியேட்டரு ஒனரு.….

ஹி ஹி ஹி ஹி
செம பதிவு தல.….

தட்சிணாமூர்த்தி said...

கில்மா இல்லாம உம்மால ஒரு பதிவு கூட போடமுடியாதா ? தல.….நாம வேணும்னா அம்புலிய வேற மாதிரி.…அதான் லேடி கேரக்டரா மாத்தி எடுக்கலாமே ! புரொட்யூசர் நீங்கதான்.
கில்மாக்கு கில்மா காசுக்கும் காசு.

அந்த தியேட்டர்ல ஒரு 3டி காணாம போயிடுச்சாமே ! குடுத்துடுங்க தல.….பாவம் தியேட்டரு ஒனரு.….

ஹி ஹி ஹி ஹி
செம பதிவு தல.….

ரா.ரமணன் said...

அம்புலி வேடத்துக்கு தவளை நடித்தால் எப்படி இருக்கும். நல்ல இருக்குமா இல்லையா? என்ன தவளையின் தொப்பையை மறைக்க CG Use பண்ண வேண்டி இருந்து இருக்கும்!

சுதா SJ said...

வண்ணக்கம் சிபி அண்ணா... எப்படி இருக்கீங்க..... :)
ஆஹா.... நான் படம் பப்படமாக்குமில்ல என்று நினைச்சேன்.... அப்போ பார்க்கலாம் போலே இருக்கே.... பார்த்துடுறேன் :)

சுதா SJ said...

சூரியன் பற்றி "அவங்கள"த்தான சொல்லுறீங்க??? ஹா ஹா

ASHOK said...

சின்ன வயசிலேயே அம்புலி யை பார்த்திபன் கொன்னு இருந்தால் படம் ஒரிரு ரீல்‍‍ லயே முடிஞ்சு இருக்காதா....அவ்வ்வ்வ்