Wednesday, February 29, 2012

ஃபிகர் என்ற வார்த்தையை ஒய் ரிப்பீட்டிங்க்? - அட்ரா சக்க சி பி பதில்கள் பாகம் 3

http://www.cineikons.com/wp-content/uploads/2012/01/kajal-agarwal-stills-085.jpg
26.   நீங்க இது வரை விட வேண்டும் என்று நினைத்து விட முடியாத

 கெட்ட பழக்கம் எது? (ஒண்ணு சொல்லுங்க போதும்) - சுதா, பெங்களூர்



 எனக்கு என்னவோ 75 கெட்ட பழக்கம் இருக்கற மாதிரியும், அதுல ஏதோ 

ஒண்ணு சொல்லுங்கன்னு கேட்கற மாதிரியும் இருக்கே? உலகத்துக்கே 

தெரியும் எனக்கு சிகரெட், தண்ணி (சரக்கு), காஃபி, டீ, அசைவம் என எந்த கெட்ட

 பழக்கமும் இல்லைன்னு.. என் கிட்டே இருக்கற ஒரே கெட்ட பழக்கமா அம்மா 

, அப்பா சொல்றது சினிமா ஒண்ணு விடாம பார்க்கும் ஆளா

 இருக்கான்கறதுதான்.. அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ஒவ்வொரு

 மனிதனுக்கும் ஒரு ரிலாக்ஸ் வேணும், அதுன் எனக்கு சினிமாவா இருந்துட்டு

 போகுது.. இப்போ என்ன?

----------------------------------



27.  நாளுக்கு இரண்டு பதிவு வீதம் பதிவு போடுறீங்களே, உங்கள் பதிவை 

நீங்கள் திரும்ப படிச்சு பார்க்க நேரம் இருக்கா ?         



 நான் போக்கிரி விஜய் மாதிரி, ஒரு தடவை போஸ்ட் பொட்டுட்டா என்

 போஸ்ட்டை நானே படிக்க மாட்டேன்.. ( ஏன்னா ஆல்ரெடி 3 தடவை படிச்சு

 பார்த்துட்டு, மிஸ்டேக் எல்லாம் கரெக்ட் பண்ணிட்டுதானே  பப்ளீஷ் 

பண்றேன்?)


-----------------------------------------

28. டிவிட்டில் சிலசமயம் சிலரை அளவுக்கு அதிகமா கிண்டல் செய்து அவங்க

 பீல் செய்தா காணமல் போயிடுறீங்க ?உங்க ஆக்சுவல் ரியாக்சன் என்ன?      


    

எனக்கு கிடைக்கற நேரம் ரொம்ப கொஞ்சம்.. கேப் கிடைச்சா 5 ட்வீட்

 போட்டுட்டு போயிடுவேன்.. அந்த கேப்ல என்னை காணாதவங்க கிசு கிசு

 பரப்புவாங்க .. பிரச்சனைன்னா ஓடிடறான் .. ஆண்கள் கேள்வி கேட்டா பதில் 

சொல்றதில்லைன்னு.. இவங்களா கிளப்பி விடறதுதான்.. ஆனா சில சமயம்

 குறிப்பிட்ட பெண் பதிவர்களை நகைச்சுவையா கிண்டல் செயுய்யறப்ப அது

 ஓவர் டோஸ் ஆகி அவங்க மனம் வருத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு, என் 

மேல் தப்பு இருந்தா டைம் லைனில், டி எம்மில் மன்னிப்பு கேட்க 


தயங்கியதில்லை.. 

-------------------------------------------



     29. சில கீச்சர்கள் பற்றி கற்பனை பதிவு போட்டீங்களே,கொஞ்சம் வரம்பு 

மீறியதா தோணலையா ? by @jroldmonk  




ஆமா, கோவை, சிங்கப்பூர் ட்வீட்டர்களை பற்றி தலா ஒரு பதிவு போட்டேன்.

. 2ம் காமெடிக்காகத்தான்.. ஆனால் அதில் ஒரு பதிவு தங்கள் குடும்பத்தை

 மனம் வருத்தம் செய்ய வைத்து விட்டது என்று அந்த ட்விட்டர் சொன்னதும்


அந்த பதிவை அகற்றி விட்டேன்.. 

--------------------------------------------


30.  புதியதாக பதிவு எழுத வருபவர்களுக்கு தங்களின் அட்வைஸ்? :- By

 @Prabhu_B         


நிறைய படியுங்க.. நீங்க ஒரு போஸ்ட் போடனும்னா 10 போஸ்ட் 

படிச்சிருக்கனும்.. நீங்க 10 பேர்க்கு போய் படிச்சு கமெண்ட் போட்டு , ஓட்டு 

போட்டுட்டு வந்தாத்தான் அதுல பாதிப்பேராவது உங்க பதிவுக்கு வருவாங்க.

. அதாவது நீங்க உங்க வீட்டு விஷேஷத்துக்கு மொய் வரனும்னு நினைச்சா

 ஆல்ரெடி நீங்க மொய் வெச்சிருக்கனும்.. எழுதுவது எல்லாருக்கும் 

உபயோகமாக இருக்கனும், மனம் களிக்கும்படி இருக்கனும், மற்றவங்க முகம் 

சுளிக்கும்படி இருக்கக்கூடாது

----------------------------------------



31. இந்த தீராத கலைதாகம்(!) உங்களுக்கு எப்டி,எப்பருந்து வந்துச்சு...? உங்க

 இன்ஸ்பிரேஷன் யாரு?  by @siva_says 



 நான் எப்பவும் வெய்யில்லயே சுத்திட்டு இருப்பேன், ஏன்னா என் வேலை

 அப்படி , வெளீல அலையற வேலை.. அதனால வீட்டுக்கு வந்ததும் செம தாகம்

 எடுக்கும். கொஞ்சம் தண்ணீர் குடிச்சுட்டு போஸ்ட் போட ரெடி ஆகிடுவேன் 


 ( ஏய்யா கேள்விக்கு இடைல ஆச்சரியக்குறி போட்டுட்டா கலாய்க்கறதா


 ஆகிடுமா?)





எனக்கு இன்ஸ்பிரேஷன் சேட்டைக்காரன், குசும்பன்,பன்னிக்குட்டி

 ராம்சாமி,சிரிப்புப்போலீஸ் உட்பட நகைச்சுவையா யார் எல்லாம்

 எழுதறாங்களோ அவங்க எல்லாம்..

 ( இப்போ லேட்டஸ்ட் ஹிட்டர் கட்டதுர கூட எனக்கு இன்ஸ்பிரெஷன் தான்.. )


-------------------------------------




 32.  உங்களை ஃபிகர் என்று அழைக்கலாமா??    By @RealBeenu         



 ஒரு ஃபிகரே என்னை ஃபிகர் என்று அழைக்குதே அடடே..!! 

 ஹலோ.. பொதுவா பொண்ணுங்க  திட்டுனாலே நாங்க சிரிப்போம், 

பாராட்டுனா கேட்கவா வேணூம்.. நீங்க என்னை செம கட்டை, சூப்பர் ஃபிகர் 

இப்படி எப்படி கூப்பிட்டாலும் கோபமே பட மாட்டேன்.. ஏன்னா நாங்க 

நல்லவ்ங்கங்க ங்க 


--------------------------------------------




33. மென்ஷன்களுக்கு இப்போதெல்லாம்  பதில் போடுவதில்லை ஏன் ?       

                       .சிலரிடம் மட்டும் பேசுகிறீர் அது ஏன் ? காரணம் ?   By @soniaarun     

      

மென்ஷன் பார்க்கவே கொஞ்ச நாளாத்தான் கத்துக்கிட்டு இருக்கேன்.. இனி முடிஞ்ச வரை போடறேன்.. எனக்கு டைம் ரொம்ப கம்மி.. இருக்கற கொஞ்ச நேரத்துல ட்வீட்ஸ் போடனும், பிளாக் போஸ்ட் போடனும், கமெண்ட்க்கு ரிப்ளை போடனும், மொய் வைக்கனும்( பிளாக்ல) 

சிலர்ட்ட மட்டும் பேசறேன்னா - யார் நம்ம வேவ் லெங்க்த்க்கு செட் ஆகறாங்களோ அவங்க கூட பேசறேன்.. இப்போ உங்களை என்ன திட்டுனாலும் உங்களூக்கு கோபம் வராது.. கலாய்ச்ச்சாலும் ஜாலியா எடுத்துக்குவீங்க, சீரியஸ் ஆக மாட்டீங்கன்னா உங்க கிட்டே பேசுவேன்.. வீட்டை விட்டு வெளீல வர்றப்பவே சண்டைக்கு தயாரா வாளோட வந்தா..? ( வாள் பொண்ணை சொல்லலை.. )

-------------------------------------------

34. பிகர் , கில்மா என்ற வார்த்தைகள் தான் உங்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தைகளா?

கூகுள் சர்ச்ல மக்களால அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ன?னு ஒரு கணக்கெடுத்தேன். அதுல நாகரீகமான வார்த்தைகள் இந்த ரெண்டும் தான்.. இந்த வார்த்தைகலை என் பிளாக்ல  ட்வீட்ஸ் ல அதிகம் பயன் படுத்தறப்போ கூகுள் சர்ச்ல என் பிளாக் தட்டுப்படும் , அது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக் வேற ஒண்ணும் இல்லை  

-------------------------------

35.    டைம் லைனில் ஒருவர் போடும்  ட்வீட்டை வைத்தே பல ட்வீட் போடுகிறீரே அது எப்படி ? ஏன் இப்படி எல்லாரையும் கலாய்க்கிறீங்க, அதுவும் மென்ஷன்  போடாமலேயே ?     

சொந்தமா சரக்கு இருக்கறவன் வந்தமா ட்வீட்ஸ் போட்டமா போனோமான்னு போயிடுவான், இல்லாதவன் மற்றவங்க போடற ட்வீட்ஸ்ல இருந்து ஒண்ணு புதுசா உருவாக்குவான்  ரீமிக்ஸோ டெக்னாலஜின்னு அதுக்கு பேரு ஹி ஹி 

 மென்ஷன் போட்டு கலாய்ச்சா சண்டை வந்துடும். பொதுவா சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க, கேட்டாலும் எஸ் ஆகிடலாம்.. நாங்க எல்லாம் அட்டாக் பண்றப்பவே ஓடறதுக்கு ரோடு எங்கே இருக்குன்னு பார்க்கற ஆளுங்க ஹி ஹி 


-  தொடரும் 


http://searchandhra.com/english/wp-content/uploads/2009/11/Kajal-Agarwal-Photo-Gallery-1-48.jpg


டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


14 comments:

குரங்குபெடல் said...

அப்புறம் அதென்னைய்யா ஜிகிடி ?

கோவை நேரம் said...

மென்சன் அப்படின்னா என்னா பாஸ்

RAMA RAVI (RAMVI) said...

கேள்விகளுக்கு உங்க பதில்கள் சுவாரசியமாகவும், வேடிக்கையாகவும் இருக்கு. நன்றாக இருக்கு.

எப்படி நீங்க எல்லாத்தையும் சுலபமாக எடுத்துக்கறீங்க?

முத்தரசு said...

வணக்கம்

8 t0 9 சர்தான்

காங்கேயம் P.நந்தகுமார் said...

கேள்வியும் அதற்கு உங்களின் பதிலும் பாராட்டும் படி அமைந்தது.

ராஜி said...

பதில்கள் சுவாரஸ்யமா இருக்கு. கலைத்தாகம் பற்றிய உங்க பதில்கள் செம்ம்ம காமெடி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

டிஸ்கிகள் ரொம்ப பிடிச்சிருக்கு(து).

ஸ்ரீராம். said...

அது சரி...சமீப காலங்களில் உங்கள் ட்வீட்களை விகடனில் பார்க்க முடியவில்லையே...என்ன விஷயம் சி பி?

சசிகுமார் said...

மாப்ள பழைய பதிவுகளை படிச்சுட்டு இதுக்கு வரேன்...

Anonymous said...

You are so sportive...Hats offf to you CP...

இப்படியே இருங்கள்...

Anonymous said...

You are so sportive...Hats offf to you CP...

இப்படியே இருங்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் இன்ஸ்பிரேசனா இன்ஸ்பிரேசன்..... இருக்கட்டும் இருக்கட்டும்......

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னைக்கு நைட் போன் பண்றேன். சுமாரா நூறு கேள்விகள் வரை கேட்கணும்.

அபி said...

நீங்க இப்படி தான் எப்பவுமா இல்ல எப்பவுமே இப்படி தானா...!
பதில்கள் நகைச்சுவை உணர்வுடன் அமைந்துள்ளது