Wednesday, February 15, 2012

உனக்கென நான், எனக்கென நீ - சிறுகதை - பிப்ரவரி 14 ஸ்பெஷல்

நான் எங்க ஊருல இருக்கும் மருத்துவமனைக்கு எனக்கு தெரிஞ்ச டாக்டரை பார்க்க போய் இருந்தேன். அங்க 35 வயசு மதிக்கத்தக்க பெண் ஒருத்தங்க தன் பிள்ளைகளோட டாக்டரை பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப கலகலப்பா சிரிச்சு பேசிக்கிட்டு எதோ பிக்னிக் வந்த மாதிரி சந்தோஷமா இருந்தாங்க. அவங்களை பார்க்கும்போது யாருக்கும் எந்த வியாதியும் இருக்குற மாதிரி தெரியலை. எனக்கு என்னன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்துச்சு. 


அவங்க போனபின் டாக்டர்கிட்ட அவங்க யாரு? என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டதால் இப்படியும் ஒரு  உறவா? அந்த உறவால யாருக்கு என்ன லாபம்ன்னு புரியலை. அதேப்போல அந்த உறவு சரியா? தவறா? இதன் முடிவு என்னன்னு புரியாம குழம்பியிருக்கேன் .





இப்போ டாக்டர் சொன்னது....
 
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்துக்கு  காயத்திரி  என்ற 30 வயதான பெண் தற்கொலைக்கு முயன்று, உறவினர்களினால் அழைத்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும்போது இங்க அழைச்சுக்கிட்டு வந்தாங்க. எப்படியோ போராடி அவங்களை காப்பாத்திட்டோம்.

 அவங்க கணவர்கிட்ட பேசும்போது என்ன காரணம்ன்னு விசாரிச்சேன். 

 தெரியலை சார். ஏன் இப்படி செஞ்சுகிட்டா-னு புரியலை. 


சரி உங்களுக்குள் உறவு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ?

உண்மையை சொல்லனும்ன்னா எங்களுக்குள் உறவு அந்தளவுக்கு சரியில்லை சார். என்னை கிட்டவே நெருங்க விட மாட்டேங்குறா. அப்படியே இருந்தாலும் ஏதொ மரக்கட்டை போல இருக்கா. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை சார். நீங்க வேணும்ன்னா என்னன்னு கேட்டு சொல்லுங்க சார்ன்னு  சொன்னார்.


இதே பதிலைத்தான் அந்த பொண்ணோட மாமனார், மாமியார், அப்பா அம்மா எல்லாரும் சொன்னாங்க. காயத்திரிக்கு 10வயசுல ஒரு பொண்ணும், 8 வயசுல ஒரு பையனும் இருந்தாங்க. குழந்தைகள் காயத்திரி ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரை அவங்களை விட்டு நகரல. அந்த பாசமான குழந்தைகளை விட்டுட்டு சாகனும்ன்னு அந்த பொண்ணு எப்படி துணிஞ்சுதுன்னு எனக்கு குழப்பமா இருந்துச்சு. அதனால் அந்த பொண்ணுக்கு கவுன்சிலிங்க் குடுக்க தீர்மானிச்சேன்.



கவுன்சிலிங்க் குடுக்க ஆரம்பிச்சேன். எது கேட்டாலும் அழுகை மட்டுமே பதில். 

”கணவர் கார்ப்பரேட் கம்பெனில கைநிறைய சம்பளம் வாங்குறார். நீங்க பிறந்த வீடும் வசதிக்கும் அன்புக்கும் குறைச்சலில்லாத வீடு. அப்புறம் ஏன் தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க”


அப்பவும் பதிலில்ல. அப்பதான் அவங்க பொண்ணு மாடிப்படிக்கட்டுகளில் இறங்கும்போது கால் தவறி விழுந்து எங்க ஆஸ்பிட்டலயே சேர்த்தாங்க. அப்போ காயத்திரிதான் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிட்டங்க. அப்படி பார்த்துக்கிட்டாலும் சில சமயம் தனிமைல அவங்க அழறதை நான் கவனிச்சேன். அப்போதான் எனக்கு ஒண்ணு தோணுச்சு.

காயத்திரியை தனியா அழைச்சு

 “நீங்க தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க. நீங்க ஒருவேளை செத்து போய் இருந்தால் இப்போ உங்க பொண்ணை, மகனை  யார் பார்த்துக்குவாங்க. அப்படியே யாராவது பார்த்துக்கிட்டாலும் தாய் போல வருமா?”ன்னு

 அவங்க தாய்மை உணர்ச்சியை தூண்டிவிட்டேன். அழுதுக்கிட்டே தன் கதையை சொன்னாங்க.

 காயத்ரியின் ஸ்டேட்மெண்ட் 

என் கணவர் சுந்தரத்தை கல்யாணம் பண்ணிக்கும்பொது எந்தவித எதிர்பார்ப்புமில்லாமதான் கட்டிக்கிட்டேன். அவர் முன்னமே வீட்டுக்கு தெரியாம ஒரு பொண்ணு கூட குடித்தனம் பண்ற விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு. மத்த பெண்களுடன் தொடர்பு இருப்பதும் எனக்கு தெரிய வந்துச்சு. அதனால் அப்பா அம்மா கவுரத்துக்காக ஒட்டாமதான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். எனக்கு கருத்தரிக்கலை. அதனால, அவரோட மூத்த சம்சாரம் ஒரு பெண்குழந்தையை பெத்து போட்டுட்டு செத்துட்டாங்க. 


 அந்த குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுமில்லாம அவருக்கு  சந்தேகம், நான் சந்தோஷமா இருக்குறது பொறுக்காத சாடிஸ்ட் குணம், வெளில எங்கயும் கூட்டி போகாம அடைஞ்சு கிடந்தேன். நான் தத்தெடுத்துக்கிட்ட என் பொண்ணுதான் எனக்கு மிகப்பெரிய ஆறுதல் அவ அன்புலதான் எல்லத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ பழகிட்டேன்.



எனக்கும் ஒரு பையன் பிறந்தான். அப்போதான் எனக்கு வேலை கிடைச்சது. முதல் நாள் ஜாயின் பண்ணும்போது எல்லார்க்கிட்டயும் பேசுவதுப் போல்தான் தமிழரசன்கிட்டயும் பேச ஆரம்பிச்சேன். மெல்ல மெல்ல எங்களுக்குள் பழக்கம் அதிகமாகி அவங்கவீட்டுக்கும் நானும் எங்க விட்டுக்கும் போய் வரும் அளவுக்கு ஃப்ரெண்ட்சானோம். அவங்கம்மவுக்கு நான் இல்லாம எந்த வேலையும் ஓடாது.



என் கதையை கேட்டவர் எனக்காக பரிதாபப்படுவார். என் புருசனோட குணத்தை கண்டு என்கிட்ட யாருமே ஃப்ரெண்டா இல்லாதப்போ தமிழோட அன்பும் ஆதரவும் எனக்கு இதமா இருந்துச்சு.எங்களுக்குள்ள உடல் ரீதியா எந்த தப்பும் நடக்கலை, ஆனாலும் மனசளவில் நாங்க காதலர்கள் மாதிரி ஆகிட்டோம்.


அப்புறம் கணவன் மனைவிக்குள் கூட அவ்வளவு அன்னியோன்யம் இருக்குமான்னு தெரியலை. அவ்வளவு பாசமா இருந்தோம். நான் தமிழை முழுசா நம்பினேன். அவன் எனக்கே எனக்குன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். அவங்க வீட்டுல அவனுக்கு பெண் பர்க்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருசமா பெண் பார்த்தாங்க. பார்க்கும் பெண்ணையெல்லாம் எதேதோ காரணம் சொல்லி வேண்டாம்னுட்டான். அவன் என்னை மனசுல நினைச்சுக்கிட்டுதான் இப்படியெல்லாம் மறுக்குறான்னு நினைச்சுக்கிட்டேன்..  


 அப்போதான் நான்  கல்யாணம் பண்ணிக்க போறேன்னு குண்டை தூக்கி போட்டான். ஏண்டா நான் இல்லாம நீயிருப்பியான்னுலாம் கேட்டேன். ஏதேதோ காரணம் சொல்லி என்னை சமாதானம் படுத்தி  பெண் பார்க்கவும் என்னை கூட்டி போனான். நான் செலக்ட் பன்ற பெண்ணைதான் கட்டுவேன்னு சொல்லி பரிதாபமா நின்னான். அப்புறம் அவன் கல்யாணத்துக்கு சேலை எடுத்து குடுத்தது முதற்கொண்டு ஆரத்தி தட்டு வரை ரெடி பண்ணி கொடுத்த்து வரை நான் தான்.



எல்லாம் செஞ்சும் எனக்கு அவனை விட்டு தர மனசில்லை. அதனால, நான் திருமணத்துக்கு முதல் நாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். எப்படியாவது என் பிள்ளைகளுக்காக என் மனசை மாத்துங்க சார்..

 டாக்டர் சொல்றார்..

என்ன சொல்வதுன்னே தெரியலை.. அவன் முகத்திரையை கிழிச்சாதான் இந்த பொண்ணுக்கு அவன்மேல் இருக்கும் மயக்கம் தெளியும்னு 


”உங்க நல்வாழ்வுக்காய் அவன் கவுன்சிலிங்க் வருவானா?”ன்னு கேட்டேன்

. ஏன்ன, இதுப்போல இல்லீகல் காண்டாக்ட்ல இருக்குறவங்க தன் முகத்தை காட்ட மறுப்பாங்க. அதுலயும் அவன் புதுசா கல்யாணம் ஆனவன் தன் எதிர்காலம் பாழாயிடப்போகுதுன்னு அவன் வரமாட்டான். அப்பவே அவன் சுயரூபம் பாதி தெரிஞ்சு போகும்ன்னு பிளான் பண்ணி வரும் செவ்வாய் கிழமை அவனை வரச் சொல்லும்மான்னு சொன்னேன். அவன் வரமாட்டான்ற நம்பிக்கையில்.....,


செவ்வாய் கிழமை..., 

தமிழரசன் ஸ்டெட்மெண்ட்

ஹலோ சார் நான் தான் காயத்திரி சொன்ன தமிழ், அவளோட கவுன்சிலிங்க்காக  என்னை பார்க்கனும்ன்னு சொன்னதாய் சொன்னாள். அதான் வந்தேன். சொல்லுங்க சார், என்னால் என்ன ஹெல்ப் பண்ணனும்ன்னு சொல்லுங்க. காயத்திரிக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்


சார், அவங்களை முதன்முதலில் எங்க ஆபீசுலதான் பார்த்தேன் சார். அவங்களாவே என்கிட்ட வந்து அறிமுகப்படுத்திக்கிட்டு லொடலொடன்னு பேச ஆரம்பிச்சாங்க. அது மாதிரி பேசுறவங்களை எனக்கு பிடிக்காது. அதனால  எனக்கு அவங்களை பிடிக்காம போச்சு. அப்புறம், அவங்க மத்தவங்க கிட்ட பழகும் விதம் உதவும் குணம் கண்டு எனக்கு அவங்களை பிடிச்சு போச்சு. அவங்க குழந்தைகள் அவங்களோடது  இல்லைன்னும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்ன்னும், அவங்க புருசன்கிட்ட அவங்க படும் பாடு அம்மாக்கிட சொன்னதை கேட்டு அவங்க மேல் பரிதாபம் வந்துச்சு. அந்த பரிதாபம் மெல்ல மெல்ல அன்பா மாறிடுச்சு.


ரெண்டு பேர் வீடும் ஒரே ஏரியா என்பதால் வீட்டுக்கு  ஒண்ணாவே போவோம். வருவோம். ஆபிசுலயும் ஒண்ணாவே சாப்பிடுவோம். அவங்க எல்லார்க்கிட்டயும் சகஜமா பேசுறதால இதை யாரும் தப்பா எடுத்துக்கல. ஆபீஸ் லீவு நாள்ல எங்க வீட்டுலயோ இல்ல அவங்க வீட்டுலயோ ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம். என் அம்மாவுக்கு அவங்க நல்ல ஃப்ரெண்டானாங்க. அவங்க பிள்ளைகள் என்கிட்ட பாசமா ஒட்டிக்கிச்சு.


 என் அம்மாவை எவ்வளவு நேசிக்குறேனோ அதே அளவு அவளையும் நேசிச்சேன். அவங்க பிள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க.  அதே நேரத்தில் என்னையும் ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சங்க. என் மேல வெச்ச பாசம் ரொம்ப தீவிரமா மாற ஆகி அவங்க புருசனை தள்ளி வைக்கும் நிலைக்கு வந்துட்டாங்க.

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா நேசிக்க ஆரம்பிச்சோம். ஒருவர் இல்லாம ஒருத்தர் இருக்க முடியாதுன்ற லெவலுக்கு வந்துட்டோம். காயத்திரிக்கு என் மேல் பொசசிவ்னெஸ் வளர ஆரம்பிசது. யார்கிட்டயாவது ஃப்ரெண்டிலியா பேசினாலும் அவ முகம் மாறுவதை கவனித்தேன். 


அப்போதான் என் வீட்டுல எனக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. நிஜமாவே காயத்திரி மனசுல இருந்ததால் எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கலை. எல்லாரையும் எதாவது காரணம் சொல்லி  அவாய்ட் பண்ணிட்டேன். அப்புறம்தான் எங்க நிலை புரிய வந்தது. இதே நிலை நீடித்தால் பிள்ளைங்க எதிர்காலம், எங்க ரெண்டு பேர் குடும்ப கவுரவம்லாம் லேட்டாதான் உறைக்க ஆரம்பிச்சது. அவளை என்னோடு கூட்டிக்கிட்டு போறது ஈசி. ஆனால், அவளால் அங்க வந்து பிள்ளைங்க, அவ பெற்றொர்களை பிரிந்தும், என் குடும்பத்தை பிரிந்து நானும் நிம்மதியா வாழ்ந்துட முடியுமா?


 இல்லை இதே நிலை நீடித்தால் காய்த்திரியோட எதிர்கால வாழ்க்கை என்னாகும்ன்னு நீண்ட யோசனைக்குப்பின்.., அதிரடியா சில நடவடிக்கைகள் எடுக்கனும்ன்னு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். 



காயத்திரி மனசு என்ன படு படும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை. சார். இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்பவும் காயத்திரியை நேசிக்கிறேன். எப்பவும் என் தாயை விட என் மனைவியை விட அவளத்தான் நேசிக்குறேன். ஆனால் யதார்த்தம்ன்னு ஒண்ணு இருக்கே. அதனால் என் அன்பை மறைச்சு வெச்சுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனால், எந்த சூழ்நிலையிலும் காயத்திரியை விட்டு குடுக்க மாட்டேன் நல்ல நண்பனாக. 

என்று சொல்லி முடித்தான்.


காயத்திரிக்கு தீவிர கவுன்சிலிங்க் குடுத்தபின் இப்போ அவங்க தமிழ் மேல் கொண்ட காதல் மறைஞ்சு தூய்மையான நட்பு மட்டுமே இருக்கு. ஆனால், ஒருவருக்காக ஒருவர் வாழும் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தும், ஒருவர் இன்ப துன்பங்களில் அடுத்தவர் பங்கேற்கும் பக்குவமும் வந்து சேர்ந்துடுச்சு.

 காயத்திரி வீட்டு நல்லது கெட்டதுகளில் தமிழ் கலந்துக்குறதும் தமிழோட மனைவி சீமந்தத்துக்கு எந்த வித பொறாமையும் இல்லாம ஒரு தோழியா போய் எல்லா வேலையும் முன் நின்று நடத்தி குடுக்க காயத்திரியால் முடியுதுன்னு  இருக்குன்னு சொல்லி முடிச்சார் டாக்டர்.. 


உறவுகள் விசித்திரமானவை.. ஏன் டாக்டர்? தாம்பத்ய வாழ்க்கைல எதனால சலிப்பு வருது.. ? எதனால நிறைய கள்லக்காதல்கள் ஏற்படுது?


மனவியல் நிபுணர்கள் கூற்றுப்படி  80% திருமணங்கள்ல மேரேஜ் ஆகி 4 வருடங்களில் துணை சலித்து விடுமாம்.. சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு துணை தேட இரு பாலினரும் முயல்வாங்களாம்.. 


இதை தடுக்க என்ன வழி டாக்டர்? 


வருடம் இரு முறை மெக்கானிக்கல் லைஃப்ல இருந்து விடு பட்டு தம்பதிகள் டூர் போகனும் ,மன்ம் விட்டு பேசனும்,, ரொமான்ஸ் என்பது லவ் பண்றப்ப மட்டும் இல்ல மேரேஜ்க்கு பிறகும் அது இருக்கு  என்பதை உணரனும்.. 


அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.. 


சில வாரங்கள் கழித்து அவர் வீட்டுக்கு வேறொரு வேலையாக போனேன்.. வீட்டில் அவர் இல்லை.. அவர் மனைவி மட்டும் தான் இருந்தார்.. 


டாக்டர் இல்லையா மேடம்?


ஹூம்.. எங்கே ? எப்போ பாரு.. டியூட்டி ஹாஸ்பிடல்னு அலைஞ்சுட்டே இருக்காரு.. குடும்பத்தை கவனிக்கறதே இல்லை


மேடம், உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?


4 வருஷம், ஏன் கேட்கறீங்க?


 சும்மாதான்.

10 comments:

ராஜி said...

கதை நல்லாதான் இருக்கு சிபி சார்

ப.கந்தசாமி said...

இது மாதிரி ஒரு கேஸ் எங்க ஊர்ல. ஆனா விபரீதமா முடிஞ்சு போச்சு. அந்தப் பொண்ணு அந்தப் பையனோட, தன் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிப்போனாள்.

பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

Unknown said...

அண்ணே கதை நல்லா இருக்குன்னே...தெரிஞ்சிகிட்ட நீதி என்னன்னா - அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றவங்க தங்கள சரியாய் கவனிச்சிக்கறது இல்ல...ஹிஹி சரியாண்ணே!

RAMA RAVI (RAMVI) said...

சிறப்பாக இருக்கு கதை.சிந்திக்க வைக்குது.
கடைசில ஒரு சின்ன டிவிஸ்ட், எல்லோருக்கும் கவுன்ஸிலிங் கொடுக்கற டாக்டருக்கே பிராபளம்..நன்னாயிருக்கு.

வைகை said...

விக்கியுலகம் said...
அண்ணே கதை நல்லா இருக்குன்னே...தெரிஞ்சிகிட்ட நீதி என்னன்னா - அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றவங்க தங்கள சரியாய் கவனிச்சிக்கறது இல்ல...ஹிஹி சரியாண்ணே!///


யோவ்.. தக்காளி இப்ப ஏன்யா சிபிய குத்தி காமிக்கிற? :-))

வைகை said...

நல்லாயிருக்கு... ஏதோ தெரிஞ்சவங்களோட உண்மை சம்பவத்தின் தாக்கம் மாதிரி தெரியுது? :-))

Anonymous said...

இது கதை மாதிரியே தெரியலை, ஏதோ உன்மை சம்பவம் போல தெரியுது சார், எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி நிரைய நடந்துருக்கு. ஆனா கடசில அந்த டிவிஸ்ட் நல்லா இருக்கு...

கடம்பவன குயில் said...

உண்மை சம்பவம் போலவே கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். மர்மக்கதை ட்விட்ஸ்ட் போலவே முடிச்சிருக்கிறீர்கள். கதை விறுவிறுப்பாய் இருக்கிறது.

Sathish said...

அருமையான கதை ..

Angel said...

கதை நல்லா இருக்கு .கடைசில ட்ரீட்மென்ட் கொடுக்கற டாக்டருக்கே கவுன்சலிங் தேவை என்பது சிந்திக்க வைத்தது