Friday, February 24, 2012

சென்னை வங்கிக்கொள்ளை என் கவுண்ட்டரும், மக்கள் கருத்தும்

:
சென்னையை கலக்கிய 'என்கவுண்டர்' 
கொள்ளையர் தங்கிய வீட்டை பார்க்க ஆர்வம்

சென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது போன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


சி.பி - போலீஸ் ஒழுங்கா வேலை செய்ய 60 வருஷங்கள்  ஆகி இருக்கு..

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் : துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார். நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


சி.பி - இந்த என்கவுண்ட்டர் மேட்டர்ல திரை மறைவு வேலைகள் ந்டந்ததா சொல்றாங்க.. எப்படி இருந்தாலும் நடந்தது நல்லதுக்கே.. இனி  கொஞ்சமாவது பயம் இருக்கும், கொள்ளைக்காரங்களுக்கு.. இதை விட்டுட்டு நீதி, விசாரணைன்னு இழுத்துட்டு இருந்தா அவனுங்க சிரிச்சுக்கிட்டே ஃபோட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு இருப்பாங்க..

அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்: கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர்.நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.


சி.பி - இதெல்லாம் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள்.. என்ன நடந்ததோ?


வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்: சென்னை பெருங்குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. 

சி.பி - தமிழ்நாட்டில் கரண்ட் கட் மேட்டர் பரபரப்பா பேசப்பட்டு கெட்ட பேர் ஏற்படுத்தி இருப்பதால் அரசு மக்கள் கவனத்தை திசை திருப்ப இப்படி ஒரு என் கவுண்ட்டர் செய்ததாக கூறப்படுகிறது.. 


பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.

 சி.பி - எல்லாம் தெரிஞ்சிருக்கும், நமக்கு எதுக்கு வம்புன்னு இருந்திருப்பாரு. சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் வட மாநில மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப்பகுதியி்ல் கூறி வந்துள்ளனர். 


சி.பி - வீடு வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் எல்லாம் ஜாக்கிரதையா இருந்துக்கனும்..  ஆள் சிக்குனா போதும் அட்வான்ஸ், வாடகை வந்தா போதும்னு வீடு குடுத்தா நாளைக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்தா மாட்டிக்க வேண்டி வரும்.. 


மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள் : என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை செனட்ரல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீலி (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் : சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே  போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர்போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.


சி.பி -  தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர்ன்னா அது வீரப்பன் என்கவுண்டர்தான்.. செம பரப்ரப்பு


இரவோடு இரவாக தப்பிக்க திட்டம் : சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர்.சி.பி - சினிமால வர்ற மாதிரி கொள்ளைக்காரனா இருந்தாலும் அவங்க நேர்மை.. ஹி ஹி 

 அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது : சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத் , சகி‌கரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் வங்கிகளில் கொள்ளை நடத்த திட்டம் தீட்டியதும் தெரிவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பீகாரில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. இதற்காக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் ரூ. 20 ஆயிரம் அட்வான்‌ஸ், மாதம் ரூ.5000 வாட‌கை பேசி தங்கியிருந்தனர்.

சி.பி - பீகார்ல குமார்னு முடியற பேரு அதிகம் நான் கேள்விப்பட்டதே இல்லையே. அது தமிழ் நாட்டுப்பேராச்சே..?


பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி கொள்ளை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வங்கி கொள்ளையன் பற்றி 1 நிமிடம் ஓடக்கூடிய பரபரப்பான வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீசை மற்றும் குறுந்தாடியுடன் காட்சி அளிக்கிறார். இளம் சிவப்பு, கறுப்பு வெள்ளை கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்துள்ள அவர் ஜீன்ஸ் பேண்டு போட்டுள்ளார். அவரது கையில் பேனா போன்ற தோற்றத்தில் ஒரு பொருளும் உள்ளது. வங்கியினுள் அங்கும், இங்கும் சென்றவாறு நாலா புறமும் அவர் நோட்டமிடு வது தெளிவாக தெரிகிறது.

தென்சென்னை பகுதியில் உள்ள வங்கி கேமிரா ஒன்றில் இருந்து இந்த காட்சியை போலீசார் பதிவு செய்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை யும், கொள்ளையனின் போட் டோக்களையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி களுக்கு போலீஸ் கமிஷனர் திரிபாதி வழங்கினார். பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் மொத்தம் 1,300 வங்கிகள் உள்ளன. இவற்றில் சுமார் 400 வங்கிகளில் தான் காமிரா பொருத்தப்படாமல் உள் ளது. பெருங்குடி வங்கி கொள்ளை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் உள்ள வங்கிகளில் கேமிராக்களை ஆய்வு செய்தோம். அப்போது வீடியோவில் காணப்படும் வாலிபர் பல்வேறு வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வாலிபரின் போட்டோவை பிரிண்ட் எடுத்து பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி ஊழியர்களிடம் காட்டினோம். அவர்கள் கொள்ளையர்களில் ஒருவன் இதுபோன்ற தோற்றத்தில் இருந்ததாக தெரிவித்தார் கள். இதனால் இந்த வாலிபர் மீது வலுவான சந்தேகம் ஏற்பட்டது.

இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. இந்த போட்டோக்களை சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வெளி மாநிலங்களுக்கும் இந்த போட்டோக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த வாலிபர் பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் நாங்கள் அறிவித்த கட்டண மில்லா 24 மணி நேர தொலைபேசி எண்களில் தகவல்களை தெரிவிக்கலாம்.

நள்ளிரவு 12 மணி: வேளச்சேரியில், கொள்ளையர்களில் ஒருவன் வீட்டில் இருப்பதாக கிண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல்.


12:10 மணி: உயர் அதிகாரிகள் வருகை, தகவலை உறுதிப்படுத்த போலீசாரை அனுப்புதல்.
12:20 மணி: போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டினுள் இருப்பது கொள்ளையர்கள் தான் என்பதை உறுதிப்படுத்திய பின், அப்பகுதியில் எப்படி கொள்ளையர்களை பிடிப்பது என்பதை நோட்டமிடல்.
12:30 மணி: துணை கமிஷனர் சுதாகர் தலைமையில், 14 பேர் கொண்ட டீம் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
12:45 மணி: கொள்ளையர்கள் இருக்கும் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இரவு 1 மணி: கொள்ளையர்கள் இருக்கும் வீட்டை வெளியில் பூட்டியதும், வீட்டில் இருந்த கொள்ளையர்கள் உஷாரடைந்து போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது.

1:10 மணி: போலீசார் எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால், கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
1:30 மணி: துப்பாக்கிச் சூடு முடிந்தது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுதல்.
2:00 மணி: கொள்ளையர்கள் மற்றும் காயமடைந்த போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுதல்.


2:15 மணி: கொள்ளையர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து, அரசு பொதுமருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.


ஆறு பிரிவுகள் கீழ் வழக்கு


இந்த சம்பவத்தில், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொள்ளையர்கள் மீது, துணை கமிஷனர் புகாரின் பேரில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு: வங்கி கொள்ளையர்கள், "என்கவுன்டரில்' கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, சென்னை, தி.நகர், போலீஸ் துணை கமிஷனர், மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, நேற்று விளக்க அறிக்கை அனுப்பினார். அவ்வறிக்கையின் அடிப்படையில், ஆணையத்தின் புலனாய்வு பிரிவு, இந்த "என்கவுன்டர்' சம்பவம் பற்றி விசாரித்து, நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மக்கள் கருத்துக்கள்

1. கார்த்தி , பாரிஸ்-ஒருகும்பலை சுற்றி வளைத்துவிட்டால் அவர்களை காவலர் பக்கத்திலும் அக்கம் பக்கத்திலும் பிணைகைதிகள் இருந்தால் அவர்களுக்கும் பாதிப்பு வராமல் இருக்க, காவலர்களின் இருப்பதை திருடர்களுக்கு போன் மூலமோ அல்லது ஸ்பீக்கர் அறிவித்து விட்டு அனைவரும் தூரத்தில் (சுட்டாலும் படாமல்) பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அவர்களிடம் மீண்டும் போன் மூலமோ அல்லது ஸ்பீக்கர் மூலமோ சரணடைய கூறி சொல்லிவிட்டு அவர்கள் களைப்படையும் வரையில் மணிக்கணக்கில் நாள் கணக்கில் காத்திருப்பதே நடைமுறை. 72 மணி நேரம் 96 மணி நேரம் கூட ஷிபிட் மூலம் காத்திருந்து உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். ஒரு 24 மணிநேரத்தை தாண்டினால் தூக்கம் கெட்டு கலைத்து வழிக்கு வந்து விடுவார்கள். தயார் செய்யப்பட்ட தீவிர வாதிகளாயிருந்தால் அவர்களே தங்களை மாய்த்துக்கொள்ள வாய்ப்புண்டு. பிணைகைதிகள் அவர்களுடன் இருந்தால் சுமார் இரண்டுநாளில் அவர்கள் அயரும் போது சரியாக இருப்பிடங்களை தெரிந்து கொண்டு திடீர் என்று திபு திபு என்று பயிற்ச்சிபெர்றவர்கள் புகுந்து சுட்டு பிடிப்பது வழக்கம்.


2. தங்கராஜா - சவுதி அரேபியா -போலீசார் தங்கள் மேல் ஏற்றப்பட்டிருந்த கடும் சுமையை இறக்கி வைத்திருப்பது அவர்களையும் அரசையும் பொது மக்களையும் பொறுத்தவரை சரிதான் என்றாலும் இதோடு இந்த என்கவுண்டர்கள் நிற்குமா தன் எதிரிகளை தீர்க்கவும் பயன்படுமா என்று தெரியவில்லை. அரபு நாடுகளில் உள்ள சட்டத்தை போல கொள்ளை காரனின் கையை துண்டிப்பது தான் அவனுக்கு படிப்பினையை தருவதோடு திருட நினைப்பவனையும் பயமுறுத்தும். இறைவன் கொடுத்த உயிரை உயிருக்கு பகரமாக மட்டுமே எடுக்க வேண்டும் என்பதிலும் அதையும் கூட பாதிக்க பட்டவனின் மன்னிப்பு மாற்ற முடியுமென்பதை இங்கு பார்த்து வருகிறோம். அரச ஆட்சி நடக்கும் நாட்டிலேயே இந்த வரைமுறைகள் இருக்கும் போது பூரண ஜனநாயக நம் நாட்டில் ஒரே நேரத்தில் ஐந்து பேரை சாமான்ய மக்களின் ரேஞ்சுக்கு சுட்டு கொல்வதென்றால்......சாரி ஜீரணிக்க முடியவில்லை.


3. லாமனபாபா - நியூயார்க் -கொலை கொள்ளை நடந்து கிரிமினல்கள் வெற்றி பெற்றால்,, உடனே "சட்டம் ஒழுங்கு சரியில்லை " என புலம்புவார்கள். போலீஸ் வெற்றி பெற்றால் உடனே மனித உரிமை பற்றி பேசுவார்கள். சரி, போலீஸ், ராணுவ இலாக்காவை மூடுங்கள். அப்பத்தான் இவங்களுக்கு புத்தி வரும்....

4.  ரவிஷங்கர் - கோவை -என்கௌன்ட்டர் இல்லமால் உயிருடன் பிடித்திருக்க வேண்டும். காவல் துறை அவசரப்பட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. கொலையாளியின் போட்டவை போட்டவுடன் எப்படி என்கௌன்ட்டர் சாத்தியம் ஆகும்? கிரஹிக்க முடியாத செயலாக உள்ளது....


5. ராமன், மும்பை - அம்மா பதவி ஏற்றதை அறிந்து தமிழ் நாட்டில் உள்ள கொள்ளையர்கள் எல்லோரும் பயந்து வெளி மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் இப்போதோ, வெளி மாநில கொள்ளையர்கள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளார்கள். ஆட்சியை பிடிக்க இந்த அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். கொள்ளையர்களை நமது காவல்துறையினர் சுட்டுக் கொன்றது பாராட்டுக்குரியது. இருப்பினும், அவர்களை உயிருடன் பிடித்து இருந்தால் இன்னும் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். அதன் மூலம் அவர்களது பின்புலத்தை ஆராய்ந்து இருக்கலாம். சில சமூக ஆர்வலர்கள் கூறுவதைப் போல, இந்த என்கவுன்டரில் ஏதேனும் உள் நோக்கம் உள்ளதோ ஏதோ ஓர் உண்மை மறைக்கப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகமும் எழவே செய்கிறது...

-நன்றி - தினமலர்

1.பிரச்சனைகள் ஆவதும் பெண்ணாலே, சேர்த்து வெச்ச சொத்தெல்லாம் அழிவதும் பெண்ணாலே # உன்னாலே உன்னாலே போண்டியாய் ஆனேனே!


-----------------------------------------

2. கூடங்குளத்தில் 100நாட்களாக போராடும் மக்களை ஜெ ஏன் சந்திக்கவில்லை-கேப்டன்# அங்கே என்ன பை எலக்‌ஷனா நடக்குது? - ஜெ

--------------------------------

3. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது-மத்திய உள்துறை அமைச்சகம்# முதலியாரான நான் அதே இனத்துல பொண்ணு கட்டக்கூடாதா?


----------------------------

4. அரசியல்வாதி அனைவரும் என்கவுன்டர்ல போடனுமே, ஏன் அதைப்பத்தி பேசமாட்றீங்க?


 அவனுங்களும் பதவில இருக்கற கொள்ளைக்காரனுங்க தானே?

----------------------------------

5. தமிழன் அதிர்ஷ்டசாலி, டெயிலி மெல்ல புதுப்புது அவல் அவனுக்கு கிடைச்சுடுது:)

------------------------------

 6. என்னமோ நாட்டுக்கு நல்லது செஞ்ச தியாகிங்க செத்த மாதிரி ஆளாளுக்கு கவலைபப்டறாங்களே?கொள்ளைக்காரன் தானே செத்தான்?#என்கவுண்ட்டர்

------------------------------------

.7.கொள்ளையடிக்கறவனுங்களை இப்படி போட்டுத்தள்ளுனாத்தான் பயம் இருக்கும், வெண்ணெய் வெச்சு நீவிட்டு விசாரணை செஞ்சுட்டு இருந்தா எஸ் ஆகிடுவான்

------------------------------

8. என்கவுண்ட்டர் என்றால் என்ன? அரசு தரப்பிலோ, அதிகாரிகள் தரப்பிலோ செய்யப்படும் தவறுகள் மக்களுக்குத்தெரியாமல் மறைக்க உதவும் கொலை!


---------------------------------

9. இந்த வார விஜய் டி வி நீயா? நானா? வில் என்கவுண்ட்டர் பற்றிய கேனத்தனமான கலந்துரையாடலை எதிர்பார்க்கலாம்

------------------------------


10. நிருபர் - மேடம், நீங்க ஏன் என்கவுண்ட்டரை எதிர்க்கலை?


 நடிகை- ஏன்னா நான் முதலியார்

-----------------------------------

 11. . ஏம்மா பூனம் பாண்டே, ட்விட்டர்னா ஏதாவது ட்வீட் போடனும், இப்படி டெய்லி ஒரு பிட்டு படம் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கக்கூடாது


--------------------------------


--------------------------------

டிஸ்கி - ட்விட்டர் நண்பர் @k7classic  கேசவன் அவர்கள் ஒரு அழகிய மழலை தேவனை பெற்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.. பெயர் நிகிலன்.. அகிலம் போற்ற வாழ வாழ்த்துகள்

வீனைக்கு வீனைக்குஞ்சு. நாதத்தின் நாத பிஞ்சு விளையாட இங்கு வந்து விட்டது http://pic.twitter.com/OAQJxkFJ


16 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

செய்தியும் சிந்தனையும் அருமை! என்கவுண்டர் அப்ப என்முதலியார்னு மாத்திடலாமா?

சாகசன் said...

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் //

ஆமாம் பண்ணுனது எகத்தாளம் , இதுல வெட்டி நியாயம் வேறயாக்கும்

தல உங்க டச் , டயலாக் நச் !!

#டிஸ்கி : மீ த பஸ்ட்

சாகசன் said...

தல , கமெண்ட் மாடரேசன் வச்சுருக்கீங்க ??

அவ்வ்வ்வ்வ்வ்

சாகசன் said...

தல ஒரு சின்ன கிலாரிபிகேசன்

கேசவனுக்கு பிறந்திருப்பது தேவதை அல்ல தேவதன் (ஆண் குழந்தை தல)

ஹிஹிஹி

Unknown said...

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...கமன்ட் போட்டால் என்னை திட்டுவதால் பாட்டு போட்டேனுங்க...இம்மாம் பெரிய பதிவை நேரம் இருக்கும் போது வாசிக்கிரேனுங்க சாரி சார்!

Unknown said...

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...இங்கே நீ சிரிக்கும்..கமண்டு போட்டால் திட்டுவதால் பாட்டு போட்டேன்!..அண்ணே ஒரே பிஸ்,,பிஸ் அப்புறமா இந்த நீளமான பதிவ படிக்கிரேன் சாரிங்கோ!

மகேந்திரன் said...

நீண்ட நாட்களாக நடந்துவரும் கொள்ளைச் சம்பவத்துக்கு
முடிவு இல்லாமல் போய்க்கொண்டு இருந்தது..
இதோ என்-கௌண்டர் என்கிற பெயரில், ஒரு முடிவு
வந்தது என நினைத்தேன்.
அதிலேயும் தில்லுமுல்லு..

அவர்கள் உண்மையான திருடர்களாய் இருப்பார்களேயானால்..
சுட்டுத் தள்ளுவது தவறில்லை..
சிறு பொருளுக்காக கழுத்தறுத்து கொலை செய்பவர்கள்
சாவதில் தவறில்லை.

மகேந்திரன் said...

நண்பர் கேசவனுக்கு வாழ்த்துக்கள்
சேயுடன் நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.

Unknown said...

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்! அவர் தமிழ்நாட்டுக் காரராண்ணே!என்னை உஷார் பண்ணிட்டு இப்படி பூந்து விளையாடறீங்களே,வெள்ளை வேன் ஏதாவது வரப்போகுது!

Unknown said...

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்! அவர் தமிழ்நாட்டுக் காரராண்ணே!என்னை உஷார் பண்ணிட்டு இப்படி பூந்து விளையாடறீங்களே,வெள்ளை வேன் ஏதாவது வரப்போகுது!

மன்மதகுஞ்சு said...

போட்டோ வெளியானவுடன் எப்படி என்கவுண்டர் ரெடியாகும் என்பவர்கள் இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்கவுண்டர் டீம், புலனாய்வு டீம் என்றால் 10 ம் கிளாஸ் படிச்சவங்க எண்டு.முதல்ல அதை தெரிஞ்சு கொள்ளூங்கப்ப,எத்தனை சினிமாவில காட்டியிருப்பாங்க, உங்க வீட்டில கொள்ளையடிச்சிருந்தா இப்படி சொல்லுவீங்களா. இந்த என்கவுண்டரை நடத்தி முடித்த பொலிஸாருக்கு என் வாழ்த்துக்கள். இது இனிமேல் கொள்ளையடிக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கட்டும்

Jayadev Das said...

\\சி.பி - சினிமால வர்ற மாதிரி கொள்ளைக்காரனா இருந்தாலும் அவங்க நேர்மை.. ஹி ஹி \\ அதெல்லாம் ஒண்ணுமில்லை, வாடகை பாக்கி போக மீதமுள்ள அட்வான்ஸைக் கொடுன்னு கேட்டிருப்பானுங்க... ஹி......... ஹி...........

Jayadev Das said...

\\இந்த சம்பவத்தில், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொள்ளையர்கள் மீது, துணை கமிஷனர் புகாரின் பேரில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.\\ செத்தவன் மேல கூட கேசு போடுரானுன்களா... பேஷ்...பேஷ்....

Jayadev Das said...

\\வங்கி கொள்ளையர்கள், "என்கவுன்டரில்' கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. \\ கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கும் போதெல்லாம் இவனுங்க வாயில..... கொழுக்கட்டைதான் இருக்கும், முடிச்சவிக்கி மொள்ளமாரிகளுக்கு எதாச்சும் ஆச்சுன்னுன்னாதான் இவனுங்க டான்னு அங்கே வந்திடுவானுங்க.

RAMA RAVI (RAMVI) said...

நல்லதொரு அலசல்.உங்க கமெண்டுகள் சுவாரசியமாக சிரிக்கும் விதமாகவும் இருக்கு.

கேசவன் குடும்பத்தினருக்கும், குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.

Chandru said...

//என்னமோ நாட்டுக்கு நல்லது செஞ்ச தியாகிங்க செத்த மாதிரி ஆளாளுக்கு கவலைபப்டறாங்களே?கொள்ளைக்காரன் தானே செத்தான்?


கொள்ளையடிக்கறவனுங்களை இப்படி போட்டுத்தள்ளுனாத்தான் பயம் இருக்கும், வெண்ணெய் வெச்சு நீவிட்டு விசாரணை செஞ்சுட்டு இருந்தா எஸ் ஆகிடுவான்.// மௌனமாக இருப்பதைப் பார்த்தால் எல்லாம் உங்கள் கருத்தாக ஏற்றுக் கொள்ளலாமா?