Thursday, February 02, 2012

வெட்கப்பட்ட ஜெ, கோபப்பட்ட கேப்டன், பாவப்பட்ட மக்கள் - காமெடி கும்மி



 கேப்டன் மேல் ரொம்ப நாளாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு எதிர்க்கட்சி போல் அவர் நடக்கவில்லை, பம்முகிறார் என்பதே.. 6 மாசம் போகட்டும், அதுவரை பொறுமை என சால்ஜாப் சொல்லி வந்தார்.. நேற்றோடு அந்த விரதம் முடிந்தது போல..


சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இடையே, நேற்று அனல் பறக்கும் வாக்குவாதம் நடந்தது. அ.தி.மு.க., உறுப்பினரை, கையை நீட்டி ஆவேசமாக விஜயகாந்த் பேசிய விதத்தை கண்டதும், ""எதிர்க்கட்சித் தலைவர், அருவருக்கத்தக்க வகையில், கீழ்த்தரமாக நடந்து கொண்டார். இவர்களுடன் சேர்ந்து, தேர்தலை சந்தித்ததற்காக வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது,'' என, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.


சி.பி - 80 வயசான கவர்னரையே தப்பா பேசுனவர்தானே இவரு.. இவ்ளவ் ரோஷம் இருக்கறவரு ஏன் கூட்டணி வைக்கனும்? தில் இருந்தா சட்டசபையை கலைச்சிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு அப்புறமா வீராப்பு பேச வேண்டியதுதானே?


சட்டசபையில் நடந்த விவாதம்:

சந்திரகுமார் - தே.மு.தி.க: மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போல் தெரிகிறது. மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயருக்குத் தான் கருத்து கேட்பு கூட்டம் நடப்பதாகவும் வெளியில் பேசிக் கொள்கின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், மின் கட்டணத்தை நீங்கள் உயர்த்தப் போவதாக தகவல்கள் வருகின்றன.


சி.பி - பஸ் கட்டண உயர்வு வந்தப்பவே  மின் கட்டண உயர்வும் முடிவாகிடுச்சே..

முதல்வர் ஜெயலலிதா: அடிப்படை விவரம் இல்லாமல் உறுப்பினர் பேசுகிறார். மின் கட்டணத்தை நிர்ணயிப்பது அரசு கிடையாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான், மின் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில் புதிய மின் கட்டணத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயிக்கும். ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தான், எல்லாமே நடக்கின்றன. தான் தோன்றித்தனமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கவில்லை. இதையெல்லாம் தெரியாமல் பேசுவது, உறுப்பினரின் அறியாமையைத் தான் காட்டுகிறது.

சி.பி  - அதானே,  தான் தோன்றித்தனமாக நாட்ல ஒருத்தர் மட்டும் தான் பேசனும், எல்லாரும் பேச ஆரம்பிச்சா அம்மாவுக்கு கோபம் வராதா?

பதில் சவால்: பால் விலை உயர்வு மற்றும் பஸ் கட்டணம் உயர்வு குறித்து, ஏற்கனவே பலமுறை விளக்கி விட்டோம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக உயர்த்த வேண்டியது தானே என்று சவால் விடும் வகையில் உறுப்பினர் பேசுகிறார். வேறு வழியில்லாமல் தான், இந்த கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று வருத்தப்பட்டு, நானே மக்களிடம் "டிவி' மூலமாக விளக்கினேன்.


சி.பி -ஏன்   வேற வழி இல்லை? பெரிய பெரிய தொழில் அதிபர்ங்க கிட்டே வரி போடலாம்.. சினிமா, சிகரெட், டாஸ்மாக் சரக்கு டபுள் மடங்கு ஏத்தலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு நடுத்தர மக்கள்ட்ட பிச்சை எடுக்கறீங்களே, வெட்கமா இல்ல?

திராணியிருக்கிறதா? இருப்பினும், உறுப்பினர் சவால் விட்டு பேசுகிறார். அவருக்கு, நான் பதில் சவால் விடுக்கிறேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு திராணியிருந்தால், தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்திய பின் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் முடியுமா என்பதை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.

சி.பி - சட்ட சபைல போய் மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி ஏதாவது செய்வாங்க, பேசுவாங்கனு பார்த்தா இவங்க எல்லாம் அஞ்சாங்கிளாஸ் பசங்க மாதிரி  அடிச்சுக்கறாங்களே? 

விஜயகாந்த்: 2006ல் இருந்து, 2011 வரை பல இடைத்தேர்தல்கள் வந்தன. அந்த இடைத்தேர்தல்களில், ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து, நான் சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன், ஜெயிப்பேன் என்று சவால் விடுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் அவர்கள் (தி.மு.க.,) எப்படி ஜெயித்தனர் என்பது, அவர்களுக்குத் தெரியும். இப்போது, நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்பதும் தெரியும். (இவ்வாறு விஜயகாந்த் பேசியதும், அமைச்சர்கள், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சல் போட்டனர். பதிலுக்கு, தே.மு.தி.க., உறுப்பினர்களும் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதனால், சபை ஒரே அமளியாக காணப்பட்டது. தே.மு.தி.க., உறுப்பினர்கள், சபையின் முன்பகுதிக்கு வந்து, அ.தி.மு.க., உறுப்பினர்களை பார்த்து ஆவேசத்துடன் பேசினர்.)


சி.பி - இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை.. இதை எல்லாம் ஒரு மேட்டரா ஜெ சொல்லக்கூடாது.. 





முதல்வர்: தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர், தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்.

சி.பி - ஜெயிக்கப்போறது நீங்களா? அவரா? என்பது தெரில, ஆனா தோக்கப்போறது அப்பாவி ஜனங்க தான்.. நீங்க ஏதாவது நல்லது பண்ணுவீங்கங்கற நம்பிக்கைல  அவங்க பாவம் வரிசைல நின்னு ஓட்டு போடறாங்க..

விஜயகாந்த்: நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கேட்டதற்கு மட்டும் தான் பதில். சங்கரன்கோவிலை பற்றி பேசும் நீங்கள், பென்னாகரத்தில் ஏன் தோற்றீர்கள்; அதில், நாங்கள் தான் இரண்டாவது இடம். பென்னாகரத்தில் டெபாசிட் காலியானது ஏன்? மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது ஏற்கனவே குறை கூறிய நீங்கள், இப்போது அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

சி.பி - சும்மாவே கேப்டன் ஆடுவாரு, இன்னைக்கு சரக்கு வேற அடிச்சுட்டு போய்ட்டார் போல.. அவ்வ்வ் 

சபையில் கொந்தளிப்பு: விஜயகாந்த்தின், இந்த தொடர் கேள்விகளால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும், மாறி, மாறி ஆவேசமாக பேச, சபை ஒரே கூச்சல், குழப்பமாக காணப்பட்டது. அப்போது, அ.தி. மு.க., உறுப்பினர் ஒருவர், விஜயகாந்த்தை பார்த்து சைகை செய்து ஏதோ பேச, விஜயகாந்த் கடும் ஆவேசத்துடன், பதிலுக்கு கையை நீட்டி கடுமையாக பேச, சபையில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது.

சி.பி - கேப்டன் பிரபாகரன் படத்துல கோர்ட் சீன் தான் ஞாபகம் வருது.. நேத்து ஹாட் டாபிக் கேப்டன் தான், சமூக வலை தளங்களான ட்விட்டர்ல, ஃபேஸ் புக்ல கேப்டன் திடீர் ஹீரோ ஆகிட்டாரு.. 

கூண்டோடு வெளியேற்றம்: இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும், சபையில் இருந்து வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே, சபைக் காவலர்கள் நுழைந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினர். வெளியேறும் போது, தே.மு. தி.க., உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் போட்டபடி சென்றனர். அதன்பின், அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது, ""சட்டசபை மரபுக்கு மாறாக, சினிமா பாணியில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்டார். தரக்குறைவான முறையில், அவரது செயல்கள் இருந்தன. அவர் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


சி.பி - என்னய்யா பேச்சு இது.. தமிழ் நாட்டின் சி எம் ஒரு சினிமா நடிகை ( முன்னாள்) எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சினிமா ஹீரோ.. பின்னே எந்த மாதிரி சபை நடவடிக்கைகள் இருக்கும்? சுதந்திரப்போராட்ட தியாகிகளா சட்ட சபைல இருக்காங்க?  

உரிமை மீறல் குழுவுக்கு...: அதன்பின், சபாநாயகர் கூறும்போது, ""எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சி உறுப்பினர்களும், சபைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பிற வகைகளிலும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். எனவே, சபை விதி 226ன் கீழ், இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன்'' என்றார். மார்க்சிஸ்ட் சட்டசபை தலைவர் சவுந்தர்ராஜன் பேசும் போது, ""சபையில் இதுபோன்ற விவாதம் பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொன்றையும், உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவது சரியாக இருக்காது'' என்றார். அதற்கு, ""அவர்கள் (தே.மு. தி.க.,) நடந்து கொண்ட விதத்தை அனுமதிக்க முடியாது. தெருச்சண்டை போல் சண்டை போட்டனர்'' என, சபாநாயகர் கூறினார்.

சி.பி - சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்ட்டி சாரி  ஆண்டி கதையா அவங்க பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாங்க.. தூண்டி விட்டது ஜெ தான்..

இதன்பின் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இன்று, எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான பேச்சுக்கள் இவற்றையெல்லாம், இங்கேயே அமர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; அனைவரும் பார்த்தனர். தே.மு.தி.க.,வினருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர்த்து, குறைந்தபட்ச நடவடிக்கையாக, இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக, சபாநாயகர் கூறியிருக்கிறார். சபாநாயகர் தன் முடிவை அறிவித்தபின், வேறு எந்த உறுப்பினரும், அதைப்பற்றி கேள்வி கேட்க விதிகளில் இடம் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. 


சி.பி - எம் ஜி ஆர் கூட இதே மாதிரி சொன்னார்..  ”தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர்?”னு, அதை ஜெ கொஞ்சம் நினைச்சுப்பார்க்கனும்?

இந்த நேரத்தில், ஒன்றை சொல்கிறேன். கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளின் காரணமாக, நிர்வாக சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக, மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினர். அ.தி.மு.க.,விற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதே முடிவைத் தான் நாங்கள் பெற்றிருப்போம்.


சி.பி - அவ்வளவு நம்பிக்கை இருக்கா? உங்க கணக்கு தப்பு.. சோவின் ஆலோசனையின் பேரில் வேற வழி இல்லாம தான் நீங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டீங்க..  காரியம் ஆகற வரை காலை பிடி, காரியம் ஆன பிறகு கழுத்தைப்பிடிங்கற கதையா நீங்க இப்போ அவங்களை உதாசீனப்படுத்தறீங்க.. 


அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துவது என, மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதன்படி தான், கடந்த தேர்தலில் முடிவுகள் அமைந்தன. தே.மு.தி.க.,வின் அதிஷ்டம், எங்களுடன் கூட்டணி சேர்ந்தனர். அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனால் தான், இத்தனை உறுப்பினர்கள், அக்கட்சிக்கு கிடைத்திருக்கின்றனர். இந்த கூட்டணியில், எனக்கு சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். 


சி.பி - அவ்வளவு நல்லவரா இருந்தா இதே ஸ்டேட்மெண்ட்டை தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லி இருக்கலாமே?  இது ஒரு விருப்பம் இல்லாத கூட்டணீன்னு?

என் கட்சியினரை திருப்தி செய்வதற்குத் தான், இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன். இந்தக் கூட்டணி அமையாவிட்டாலும், அ.தி.மு.க.,விற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. தே.மு. தி.க.,விற்கு கொடுத்த இடங்களிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். நிதர்சனமான இந்த உண்மையை, இந்நேரத்தில் அவர்களுக்கும் புரிய வைக்கிறேன்; அனைவருக்கும் புரிய வைக்கிறேன். அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., சேர்ந்ததால் தான், அவர்களுக்கு அதிகமான உறுப்பினர்கள் கிடைத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தும், தகுதியும் கிடைத்தது. அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேராவிட்டால், கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட, தே.மு.தி.க.,விற்கு கிடைத்திருக்காது என்பது தான் உண்மை. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அ.தி. மு.க., தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது நான் வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், அவருடைய கட்சி உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது, ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு வர வேண்டிய ஏற்றம்; வரக்கூடிய ஏற்றம் எங்களால் அவர்களுக்கு வந்து முடிந்து விட்டது. இனிமேல், அவர்களுக்கு இறங்கு முகம் தான். அதை சரித்திரம் சொல்லும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


சி.பி - சரித்திரம் சொல்லுதோ இல்லையோ உங்களூக்கு இனி தரித்திரம்தான்

"அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்,'' என, விஜயகாந்த் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.


சி.பி - ஆஹா , கேப்டன் தத்துவமா பொழிய ஆரம்பிச்சுட்டாரெ? 


சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் காரசாரமான விவாதத்திற்கு பின் வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி: ஊர்கூடி தேர் இழுத்தது போல் நாங்கள் ஒன்று சேர்ந்ததால்தான் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது என, எங்கள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் சட்டசபையில் தெரிவித்தபோது, "எங்களால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள்' என, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் தெரிவித்தனர். "சங்கரன் கோவில் தொகுதியில் தனித்து போட்டியிடுவீர்களா?' என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். இதற்கு நான் பதிலளிக்க முயன்றபோது, எதிர்கட்சித் தலைவரான என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் விரல் நீட்டி மிரட்டுகிறார். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? 


 சி.பி - அவங்க விரல் நீட்டி மிரட்னாங்கன்னா நீங்களூம் அப்படி செஞ்சா அவங்களுக்கும், உங்களூக்கும் என்ன வித்தியாசம்? நல்ல தலைவர் என்பவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், தன் தொண்டர்களை மட்டுப்படுத்தவும் தெரிஞ்சிருக்கனும்..

அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை கொண்டுவந்த பிறகு, சங்கரன் கோவில் தேர்தலை நடத்திக் காட்டட்டும். அப்ப சவாலை சந்திப்போம். யாருக்கு திராணி இருக்குன்னு அன்னைக்கு பார்ப்போம்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடு செய்ய முடியும். அதன் மூலம்தான் தி.மு.க., ஜெயித்தது என முன்பு சொன்னார்கள். இப்போது அதே இயந்திரத்தைத்தான் இவர்களும் பயன்படுத்துகின்றனர். அப்போது தவறு செய்திருந்தால், இப்போது செய்ய முடியாதா? கடந்த ஐந்து வருடத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., ஜெயித்திருக்கிறதா? பென்னாகரத்தில் டெபாசிட் பறிபோனது. பர்கூரில் தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் தானே முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.

சி.பி - அவரும் தோற்றவர்தான்.. நீங்களும் தோற்றவர் தான்.. இனிமே ஜெயிக்கப்போறது யார்?னு காலம் தான் தீர்மானிக்கும்.. 

 மக்கள் கருத்து 

1. வசந்தி - ராஜன் மக்களின் எண்ணங்களை அருமையாக பிரதிபலித்துள்ளார். ஆளும் வர்க்கம் இது போன்று இணைய தளங்களை பார்த்து அவ்வப்போது மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, விஜய காந்தின் முகபாவனைகளை சரியில்லை. இருந்தாலும், ஆளுங்கட்சி விலை வாசி பற்றி பேசும்போது ஏன் மிரட்டி அதை பேச விடாமல் தடுக்க வேண்டும்?

தகுதி பற்றி பேசும் அம்மா எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவரை நிதி அமைச்சர் ஆக்கி உள்ளாரே, அது சரியா? ஜெய்லலிதா திருந்தவில்லை என்றால் கோர்ட் திருந்த வைக்கும் (சமச்சீர் கல்வி, சாலைப்பணியாளர் வேலை, தலைமைச்செயலக கட்டிடம்...), இல்லை மக்கள் 2014 ல் திருந்த வைப்பார்கள். கடவுள் அதற்கு முன் பெங்களூர் கோர்ட் வழியாக திருந்த வைக்கலாம்

2.  மகிழ்நன் -தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

விஜயகாந்தை குறித்து...ஜெயா...மம்மி..

சரிங்க மம்மி,,,

நீங்க என்ன தகுதியில பதவிக்கு வந்தீங்க...மக்களுக்கு தொண்டு செய்தா? மத்தவங்களை பேசும்போது கவனமா பேசுங்க...சுயவிளக்கம் கொடுப்பது போலவே இருக்கு

3. யுவா - ரெண்டு பேரும் எப்படின்னு அவங்கவங்களுக்கு தெரியும். மக்களுக்கும் நல்லாவே தெரியும். எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்த நிலையில் இவங்களை ஜெயிக்க வைத்ததன் பலன் தான் இது. ஆமாம்பா, ஒரு ச.ம.உ. நாட்டுநடப்பு பத்திக் கேள்வி கேட்டால் என்ன எகத்தாளமா பதில் சொல்றது? கேட்ட கேள்விக்குச் சரியான பதில் மட்டும் அளித்துவிட்டு விட வேண்டியது தானே? அப்புறம் என்ன அப்பென்டிக்ஸ் மாதிரி தகுதி பத்தி கருத்து? என்னவோ இவுகளுக்கு ரொம்பத் தகுதி இருக்கிற மாதிரி. நீங்க எப்படி அரசியலரங்கில் நுழைந்தீர்கள் என்று நல்லாவே தெரியும்.


3 முறை முதல்வர் ஆனதும் எந்தத் தகுதியின் அடிப்படை? முதல்ல உங்க கட்சி ச.ம.உ. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது என்ன தகுதி பார்க்கறீங்க? கேட்டா சசி மேல பழியைப் போட்டுட்டு உத்தமி வேஷம் கட்டுவீங்க? அப்படி சசி தான் எல்லாத்துக்கும் காரணம்னா, முந்தா நாள் தான் தெரிஞ்சதா? உங்க நாடகம் எல்லாம் நல்லாவே நடத்துங்க. முடிவு நெருங்குகிறது. ஆக மொத்தம் மக்கள் நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடாவது (மாநில (அ) மக்கள் வளர்ச்சிக்கு) கொண்டு வந்திருக்கிறீர்களா இந்த 9 மாத காலத்தில்? கேட்டா கடந்த ஆட்சியின் ஊழலால் அரசு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறதுன்னு சத்தாய்ப்பீங்க? எப்படி ஒரு 5 வருஷம் ஆகுமா அதைச் சரிப்படுத்த? இதுல இந்த சசி, "கரன்"களின் பிரச்சினை வேறு. அதைச் சீர்படுத்துவதுதானே இப்போது தலையாய கடமை உங்களுக்கு? 96-ஆம் வருஷம் நீங்க போட்ட ரூட்ல தானே இப்போ "கரன்"களும் கன்டெய்னரில் பணத்தையும், பத்திரங்களையும் ஏற்றி அனுப்பிக்கிட்டு இருக்காங்க?


4. சந்த்ரு -விஜயகாந்தை விட மோசமாக பேசியுள்ளர் ஜெயா. அடுத்தவரை மதிக்கும் பண்பு இவரிடம் எப்போதும் இருந்ததில்லை.


5. அகிலன் -"தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம்," என்று விஜயகாந்தை ஆவேசமாக சாடினார். இதையெல்லம் சொல்ல்வதர்கு தகுதி உள்ளத என யோசித்து பேசியிருக்கலாமே எதிர் கட்சி என்றாலெதி கேள்வி கேட்கதான செய்வாங்க அது எதிர் கட்சி வரிசையில் உக்காந்திருந்தாதானே தெரியும் கொட நாட்டில போய் கொட்டிகிட்டா எப்டிப்ப தெரியும் மக்களே இவர்களை சட்ட பேரவயில் சட்டம் பேசத்தானே அனுப்பினோம்
சண்ட போடவா அனுப்பினோம் யார் வந்தாலும் இதை மட்டும்தான் உருப்படியா செய்றாங்க சட்ட மன்ற உறுப்பினர்களே நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்களின் வெற்றிக்கு காரணம் நீங்கள் இருவருமே அல்லடா ஆளுங்கட்சி காரர்களே நான்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வெற்றிக்கும் காரணம் தி மு க தானே தவிர உங்களின் மகதன சேவையை கண்டு யாரும் வாகாளிக்க வில்லை தி மு க வின் மேல் உள்ள வெறுப்பால் மற்று கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றே உங்களுக்கு வாக்களித்தார்கள் தயவு செய்து நீங்கள் மார்தட்டி கொள்ளாதீர்கள் மக்கள் உங்களை முட்டாள்கள் என்று நினைத்துவிடுவார்கள் தோழர் சந்திர மோகனுக்கு ஏன் நன்றி அவர் சரியாக தானே கேட்டிருக்கிறார் எப்பா மாமன்ற உறுப்பினர்களே கேள்ளவி கேட்ட பதில் சொல்ல கத்துகிட்டு சட்டபேரவைக்கு வாங்க தோழர்களே நீங்க வெட்க படாதீங்க உங்களுக்கேள்ளலாம் வாக்களித்தொமே என்று நாங்கள் வெட்க படுகிறோம்

23 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

ராஜி said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்

சத்ரியன் said...

அண்ணே! அசத்திட்டேள் போங்கோ!

கும்மாச்சி said...

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இருவருமே தகுதி இல்லாதவர்கள்தான், சினிமாவில் நடித்தார்கள் என்ற தகுதி தமிழக மக்களுக்கு போதும்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

எதிர் கட்சி என்றால் எப்படிதான் இருக்கனும்.
அந்த இரண்டாவது ஸ்டில் சான்சே இல்லை.
கலக்கிவிட்டார் .
பாவம் ஸ்டாலின் @ துரைமுருகன் அசந்து போய் உள்ளனர் .
விஜயகாந்துக்கு என் வாழ்த்துக்கள் .
யானைக்குட்டி
மு. ஞானேந்திரன்
திருநெல்வேலி .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

எதிர் கட்சி என்றால் எப்படிதான் இருக்கனும்.
அந்த இரண்டாவது ஸ்டில் சான்சே இல்லை.
கலக்கிவிட்டார் .
பாவம் ஸ்டாலின் @ துரைமுருகன் அசந்து போய் உள்ளனர் .
விஜயகாந்துக்கு என் வாழ்த்துக்கள் .
யானைக்குட்டி
மு. ஞானேந்திரன்
திருநெல்வேலி .

K.s.s.Rajh said...

////
சி.பி - என்னய்யா பேச்சு இது.. தமிழ் நாட்டின் சி எம் ஒரு சினிமா நடிகை ( முன்னாள்) எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சினிமா ஹீரோ.. பின்னே எந்த மாதிரி சபை நடவடிக்கைகள் இருக்கும்? சுதந்திரப்போராட்ட தியாகிகளா சட்ட சபைல இருக்காங்க////

ஹி.ஹி.ஹி.ஹி..... செம கலக்கல் பாஸ்

RAMA RAVI (RAMVI) said...

சி.பி. கமெண்ட்ஸ் சிறப்பாக இருக்கு. படத்தில் ஸ்டாலினின் நிலை வேடிக்கையாக இருக்கு.

Marc said...

அடுத்த அடி ஓட்டு போட்ட நமக்குதான்னு நினைக்குறேன்.ஓடுங்க ஓடுங்க .....


அருமை பதிவு வாழ்த்துகள்!!

Seetha said...

Vijayakanth superb man. Konjam minus iruku. Adhellam correct panita he is perfect.

KOMATHI JOBS said...

ஜெயலலிதாவின் தகுதி என்ன என்பது அந்த அதிமுக தொண்டர்களுக்கே தெரியும்!
ரோசே பவுடர், பிகினி டிரஸ், ஆரோட கீப்பாகவும் இருந்தது ( மத்த யார் யாருன்னு கேட்க்க கூடாது-அது இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது)

ராஜீவ் மரணம் என்னும் அனுதாப அலையில் அரசியல் வியாதியானவள்! இன்னைக்கு அரசியல் இலக்கணத்தைப் பற்றி பேசுகிறாள்!

நாவலரை "உதிர்ந்த ரோமம்" என்றும்,
75 வயது சென்ன ரெட்டியை, "என்னிடம் தாகத முறையில் நடக்க முயற்சித்தார்" என்றதும்,
ஜானகியை " ஆரை மோரில் விஷம் வைத்து கொன்றார்" என்றும் சொன்னவருக்கு
காளிமுத்துவால் --ப்பிட தோன்றுகிறது என விமர்சிக்கப் பட்டவருக்கு
மூன்று முறை ஆளும் தகுதி எப்படி வந்ததென்று தெரியவில்லை?

KOMATHI JOBS said...

ஒருவேளை நல்ல நேரம் சதீஷ் குமாருக்கு மட்டும் தெரியுமோ என்னவோ?

Anonymous said...

கலக்கிவிட்டீர்கள். நல்ல விவரமான பதிவு ப்ளஸ் உங்களின் கமென்ட்,பதிவர்களின் கருத்து...என்று அமோகம்.

Anonymous said...

இன்று என் வலையில்


எப்படி இருந்த அரவிந்தசாமி...

தியானம் - தியான் - ச்சான் - ஸென் - போதிதர்மா

Unknown said...

செந்தில்! கலக்கல் கமெண்ட்ஸ்! வீட்டுக்கு முன்னாடி ஆட்டோ/ஜீப் ஏதாச்சும் வரப்போகுது! பிகேர்ஃபுல்!

Yoga.S. said...

வணக்கம் சார்!என்னவோ தமிழ்நாடு சட்டசபையில் இதுபோல் நடக்காதிருந்தாலே ஆச்சரியமான விஷயம்!முன்பெல்லாம் அம்மாவின் சேலையைக் கூட இழுத்து............................விடுங்க,இதுவும் கடந்து போகும்!

காங்கேயம் P.நந்தகுமார் said...

குடிகாரன்களை உள்ளே விட்டா இப்படித்தான் இருக்கும். இன்னி என்ன 10நாள் சரக்கடிச்சுட்டு நிம்மதியா படுத்துக்கலாம்!

ஹாலிவுட்ரசிகன் said...

நமக்கும் அரசியலுக்கும் ரொம்பத் தூரம். ஆனாலும் எப்படி இவ்வளவு விஷயத்தையும் ஞாபகம் வச்சு எழுதினீங்க?

R. Jagannathan said...

ரொம்ப நல்ல பதிவு. இப்போதுதான் இட்லிவடையில் பின்னூட்டம் இட்டு வந்தேன். பிறகு காபி-பேஸ்ட் செய்து அநுப்புகிறேன்! - ஜெ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கேப்டன் இதுக்கு தான் காத்திட்டு இருந்த மாதிரி நேத்து ரொம்பவே பொங்கிட்டார்..

சசிகுமார் said...

மாப்ள மற்ற திரட்டில சேருங்க.

தனிமரம் said...

கேள்வி கேட்டா இப்படியா அம்மா விஜயகாந்த் மீது பாய்வது நல்ல கூத்துத்தான் சட்டமன்றத்தில்.
கலக்கல்சிரிப்புக்கு பஞ்சம் இல்லை சி.பி அண்ணா.

R. Jagannathan said...

R. Jagannathan said (in Idlyvadai post)...
அம்மாவின் உக்ரமான முகத்தைப் பார்த்தால், அடுத்த சட்டசபை தேர்தலுக்குப் பின் மற்றொரு சொர்ணாக்கா / நளினி ஆக திரையில் மீண்டும் வலம் வருவார் என்று படுகிறது!
எந்த கேள்விக்கும் அம்மாவிடமிருந்தோ, அமைச்சர்களிடமிருந்தோ நேரிடையான பதில் கிடையாது. ’எதிர் கட்சி உறுப்பினர் உளறுகிறார், விவரம் தெரியாமல் பேசுகிறார்’ என்றே அகம்பாவத்தின், மமதையின் உச்சியில் நின்று கத்துகிறார். முதலில் பதிலை நேரிடையாக, உண்மையாகச் சொல்ல வேண்டும், பிறகு அறிவுறுத்தலாம். எதெற்கெடுத்தாலும் சவால். நடுநிலை பேப்பர்களில் வரும் ந்யூஸைப் படித்தாலே தெரியும் இவர் ஆட்சி லக்‌ஷணம். ஒரு உறுப்பினர் பேசிமுடிக்கும் வரை எந்த கட்சியினரும், குறிப்பாக ஆளும் கட்சியினர் குறுக்கிடக்கூடாது என்ற நிலையை சபாநாயகர் எடுக்கவேண்டும். அதற்கு அவர் தான் இப்போது கட்சி சார்பற்ற பதவியில் இருப்பவன் என்பதை ஞாபகத்தில் வைக்கவேண்டும்.

மின்சாரப் பிரச்சனையில் அம்மா நெர்மையாக இன்றைய நிலைமையை சொல்வாரா? போன ஆட்சி கடன் வைத்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவ்வாட்சியின் ஏற்பாட்டினால் இந்த ஆட்சியின்போது கிடைக்கப் போகும் பவர் எத்தனை மெகாவாட்? இந்த 8 மாதத்தில் இந்த ஆட்சி எத்தனை மெகாவாட் பவருக்கு ஏற்பாடு செய்திருக்கிறது? மேட்டூரின் 630 மெ.வா இவர்கள் ஆட்சியிலா தொடங்கப்பட்ட திட்டம்? கூடங்குளத்தில் தயாராயிருக்கும் பவரை தமிழ்நாட்டுக்கு உடனே பெற்றுத் தர ஜெ என்ன செய்தார்?

தகுதி அற்றவர்கள் / தரம் தாழ்ந்து பேசுபவர்கள் அதிமுகாவா, தேதிமுகாவா என்பது டிவி பார்ப்பவர்கள்/ பேப்பர் படிக்கும் நடுநிலையாளர்களுக்குத்தெரியும். தேமுதிகாவுடனான ஒப்பந்தம் கட்சியினரின் விருப்பப்படி என்று சொல்லுவதை யாராவது ஏற்கமுடியுமா? ஜெ கட்சி அவரை கூழைக்கும்பிடு போடுபவர்களுக்கு மட்டுமே என்பது தெரியாதா?

ஜெ மாறவில்லை, மாற மாட்டார். இது நாம் வாங்கிய சாபம்.

-ஜெ

மேலும் என் கம்மென்ட்:
“சபாநாயகர் சொல்கிறார்: அவர்கள் (தேமுதிக) குழாயடி சண்டை போட்டர்கள், அதனால் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன்” என்று! குழாயடி சண்டையில் இரு பக்கமும் ஒரே சாக்கடை பாஷைதானே பேசியிருப்பார்கள். அப்ப்டியிருக்க, ஏன் ஒரு கட்சியினர் மீது மட்டும் உரிமை மீறல் ப்ரச்சனை?
-ஜெ.