Friday, February 17, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - சைக்கோ லவ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/October_2011/07.10.11/muk.jpg
சில கதைகளை நேரடியா சொன்னா ரொம்ப சாதாரணமான கதையா தோணும்.. ஆனா சாதா கதையையே சுவராஸ்யமா சொல்ற வித்தை வெகு சிலருக்கே கை வருது.. இந்தப்படத்தோட டைரக்டரும் டேலண்ட்டான ஆள் தான்.. ஆல்ரெடி குடைக்குள் மழை படத்துல ஆர் பார்த்திபன் சொன்ன கதையையே கொஞ்சம் பாலீஷ் பண்ணி புது கதை மாதிரி சொல்லி இருக்கார்.. 

செல்வராகவன் பாணில சொன்னா மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே, ராஜேஷ் குமார் பாஷைல சொன்னா 3 வெவ்வேற தளம் அமைச்சு மூன்றையும் ஒன்றாக இணைக்கும் கோட்டு வரிசை கதை தான் திரைக்கதை உத்தி..

அதர்வா சென்னைல கம்ப்யூட்டர் செக்‌ஷன்ல வேலை பார்க்கறார்..அந்த கம்பெனில அம்லா பால் எம் டி.. அதர்வா  படம் போட்ட முதல் ரீல்லயே அந்நியன் டைப்ல ஒரு கொலை பண்றார்.. 

பெங்களூர்ல அடிக்கடி ஃபோன் போட்டு பேசறார்.. அங்கே ஒரு அமலா பால்.. அவங்க பேரு சாரு.. அடிக்கடி ஃபோன்ல சாரு சாருன்னு உருகறார்.. சென்னைல இருக்கற அமலா பால் பேரு லதா.. அவருக்கு டவுட்.. அந்த சாரு யாரு?





http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132937593751.jpg

கடைசில பார்த்தா பெங்களூர்ல அப்டி ஒரு கேரக்டரே கிடையாது.. இவரா கற்பனை பண்ணிக்கறார்.. ஃபிளாஷ் பேக்.. அவங்கம்மா ரொம்ப அன்பா மகனை வளர்த்தறாங்க.. சின்ன வயசுல இருந்தே அதர்வா ஒட்டுண்ணியா அதாவது அம்மா கோண்டா , 24 மணி நேரமும் அம்மா பிள்ளையா வளர்றார்.. பெரிய பையன் ஆனதும் வேலைக்காக கிராமத்துல அம்மாவை விட்டு சென்னைக்கு போறார்.. 

அங்கே அமலா பால் மீட் பண்றார்.. அமலா பால் அமெரிக்கா ரிட்ட்டர்ன்... அவங்க கல்ச்சர் வேற.. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கட்டிப்பிடிச்சு , அணைச்சு ( டேய் 2 ம் 1 தான்) அன்பை , மரியாதையை வெளிப்படுத்துவாங்க.. அதை லவ்னு தப்பா நினைக்கறார்.. ஆனா அமலா பால் அவரை லவ் பண்னலை.. அவருக்கு வில்லன் கூட நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு.. 

இப்போ ஒரு பார்ட்டி நடக்கறப்ப வில்லன் கோஷ்டில 3 பேரு அமலா பால் கையை  பிடிச்சு இழுத்துடறாங்க.. அதர்வா ஓவர் எமோஷன் ஆகி அந்த ஆட்களை போட்டுத்தள்ளிடறார்.. 

இந்த சைக்கோத்தனமான காதலனை அமலா பால் எப்படி சமாளிக்கறாங்க.. என்ன ஐடியா பண்றாங்க.. அப்டிங்கறதுதான் கதை.. ( யாருக்காவது கதை புரிஞ்சுதா? ஹி ஹி )

அதர்வாக்கு இது 2 வது படம்.. பாணா காத்தாடில அசால்ட்டா லவ்வர் பாயா வந்துட்டுப்போனவர்க்கு அழுத்தமான வேடம்.. சிட்டி பாய்க்கான ரிச், ஸ்டைல் எல்லாம் ஓக்கே.. நடன ஸ்டெப்களில் அடடே.. சண்டைக்காட்சிகளில் சுறு சுறுப்பு.. அப்பா முரளியை விட செம  பர்சனாலிடி தான்.. நல்ல எதிர் காலம் உண்டு.. 

அம்லா பால்.. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, கிளாமர் இந்த 3 மட்டும் வெச்சுக்கிட்டு குப்பை கொட்ட முடியாது பாப்பா.. ஹி ஹி கொஞ்சம் நடிக்கனும்.. ட்ரை த ட்ரை.. தேவதை டிரஸ் காஸ்ட்யூம்ல ( டிரஸ்னா  என்ன?காஸ்ட்யூம்னா என்ன? 2ம் 1 தான் ) வர்ற சீன்ல லோ கட் சீன் ஹி ஹி தியேட்டர்ல செம கிளாப்ஸ்.. 

படத்துல சந்தானம் வர்ற 4 சீன்கள் செம கல கல .. இறுக்கமான திரைக்கதையில் அவர் ஒரு ரிலாக்ஸ்..  ஆடை வடிவமைப்பு தீபாலி நார் செம கலக்கு கல்க்கிட்டாங்க.. பாடல்கள் அனைத்தும் தாமரை.. படம் ரிலீஸ் ஆகும் முன்பே 3 செம ஹிட்.. ஆனா படத்துல அது வேக தடைக்கல்

பொதுவா சைக்கோ த்ரில்லர் லவ் ஸ்டோரில பாடல்களை தவிர்க்கனும்.. ( ஆனா ஆடியோ மார்க்கெட் வேணுமே..)ஜி வி பிரகாஷ் இசை ஓக்கே.. 3 பாடல்கள் ஹிட்.. பின்னணி இசை சூப்பர்னு சொல்ற அளவு இல்லை.. ஆல்டைம் ஃபேவரைட் இன் பேக் கிரவுண்ட் மியூசிக் ஈஸ் இளையராஜா தான்.. 

http://tamil.oneindia.in/img/2011/09/06-amala-paul300.jpg

படத்தில் இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அமலா பாலின் காலை எடுத்து ( தனியா பிச்சுன்னு நினைக்காதீங்க )கிதார் மாதிரி வாசிக்கும் இடத்தில் அப்ளாஸ்... அது போக பல இடங்களில் ஹீரோ ஹீரோயின் பாடி கெமிஸ்ட்ரி  , நெருக்கம்.. எல்லாம் ஓக்கே.. ( மனசு குளிர்ந்து சொல்றேன் நல்லா இருங்கடே..  ஹி ஹி ) 

2. சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் , ஒளிப்பதிவு ,லொக்கேஷ்ன்கள் எல்லாம் பாராட்டும் விதத்தில்./. அதே போல் திரைக்கதை.. இதை நேரடியாக , சாதா கதையாக சொல்லி இருந்தால் சப்பென்று போய் இருக்கும்.. 

3.  மழை பொழியும் மாலையில், மர நிழலின் சாரலில், அவள் நினைவின் ... பாடலில் தாமரையின் வரிகள், இசை இரண்டும் நம்மை தாலாட்டும் விதம்.. செம.. ஓ சுநந்தா சுகந்தானா? பாட்டு, அன்பே உன் ( பாப்சாங்க்),யார் அவள் யாரோ..? கண்கள் நீயே.. காதல் நீயே..  ( அம்மா செண்ட்டிமெண்ட் பாட்டு) சொக்குப்பொடி போட்ட ( க்ளைமாக்ஸ் ஸ்பீடு பாட்டு) என  எல்லா பாடல்களும் கேட்கும் விதத்தில், ரசிக்கும் விதத்தில் அமைத்தது.. 




http://2.bp.blogspot.com/-kdvlTOwGWxs/ToXFavZSx9I/AAAAAAAAOPE/dBuEtFCIHNY/s400/05mptb_lead_GPA36SS_747090e.jpg

இயக்குநர் செய்த சில தவறுகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. ராங்க் கால் ராணி கம் பொய்யான சாரு அதர்வா ஃபோன்ல பேசறப்ப  சாரு மாதிரியே பேசி சமாளிக்கறார் ஓக்கே, அமலா பால் , டாக்டர் 2 பேரும்  அதர்வா கூட பேசிட்டு இருக்கறப்ப பொய்யான சாரு கிட்டே இருந்து வந்த ஃபோனை உண்மையான சாரு அமலா பால் அட்டெண்ட் பண்றப்ப அந்த பொண்ணு ஏன் உண்மையை சொல்லலை? ( ஏன்னா அப்பவே சொல்லி இருந்தா இவங்க பொழப்பைக்கெடுத்துட்டு பெங்களூர் அலைஞ்சிருக்கத்தேவை இல்லை)

2. அதர்வாவோட அம்மா தான் தனிமைல  இருக்கறதாலயும்,அழகா  இருக்கறதாலயும்தான் ஆம்பளைங்க சிலர் தன்னை அடைய அப்ரோச் ( எவ்லவ் டீசண்ட்டான வார்த்தை) பண்றாங்கன்னு  யோசிச்சு ஒரு முடிவு எடுக்கறார்.. அது இன்னான்னா அவர் மொட்டை அடிச்சுக்கறார்.. அடங்கொய்யால நம்மாளுங்க  ரேப் பண்னனும்னு முடிவு எடுத்துட்டா ரஜினியே வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. மொட்டை அடிச்சுட்டா மட்டும் ரேப் பண்ண வராம சும்மா இருந்துடுவாங்களா? ( அந்த ஊர் ஆளுங்க எல்லாம் பக்கிப்பசங்க போல. மொட்டை அடிச்ச பெண்ணை ஏறெடுத்து,  பார்க்க மாட்டாங்களாம்.. அவ்வ்வ்வ் 

3.  அதர்வா வேலைக்காக சென்னை வர்றார் ஓக்கே.. அம்மா அவரை பிரிஞ்சு ஏக்கத்துல நோய் வாய்ப்படறார்// எதுக்கு அவர் அங்கே தனியா கஷ்டப்படனும்?அன் மேரீடுதானே அதர்வா? லட்சக்கணக்குல சம்பளம் வாங்கறவர்.. அம்மாவை கூடவே கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாமே.. இதை ஏன் கேட்கறேன்னா கதையே அம்மா பாசத்தால, அந்த அன்புக்காகத்தான் , ஒரு தேடலுக்காகத்தான் அமலா பாலை சைக்கோத்தனமா லவ் பண்றதா வருது..

4. அமலா பால்க்கு அதர்வா மேல உண்மையான லவ் கடைசி வரை வர்லை.. அதர்வா தான் லவ்வறாரு.. இந்த மைனசை சரி பண்றதுக்காக அமலா பாலை நிச்சயம் செஞ்ச ஆள் ஒரு ஹோமோ என கடைசில லாஸ்ட் ரீல்ல காட்டி, அவனோட சகாக்கள் ஆல்ரெடி 3 கொலைகள் செஞ்சதாவும், இப்போ அமலா பாலை கொன்னுட்டா ரூட் க்ளியர் எனவும் சொல்லி ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்கு ஆசைப்பட்டு கதையோட மைய கருல ஒரு மைனஸ் கொண்டாந்துட்டீங்களே.. அமலா பால்க்கு அதர்வா மேல லவ் வர , அல்லது வந்த மாதிரி காட்டி இருக்கலாமே.. ஏன்னா ஒரு லவ் ஸ்டோரி ஓட 2 பேர் அட்டாச்மெண்ட் முக்கியம். அம்லா பால் லவ் ஏதோ ஒப்புக்குச்சப்பாணி மாதிரி இருக்கு.. 

http://www.gulte.com/content/2012/02/news/Amala-Paul-Hot-Photos-from-Tamil-Movie---Pics-1156.jpg

யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? காதல்ல தோல்வி அடைஞ்சவங்க,ஃபிகர் வேற எவனையோ உஷார் பண்ணுனாக்கூட தன்னைத்தான் லவ்வுதுன்னு  பேக்கு மாதிரி நினைக்கறவங்க,காதல் தெய்வீகமானதுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கறவங்க, சைக்கோ த்ரில்லர் ஸ்டோரியை ரசிக்கறவங்க, அமலா பால் கிளாமரையாவது பார்ப்போம்னு ஏக்கப்படற என்னை மாதிரி சின்னப்பசங்க , காலேஜ் ஸ்டூடன்ஸ், லவ்வர்ஸ் இவங்க எல்லாம் பார்க்கலாம்.. ஹி ஹி 

ட்ரெய்லர்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்துன அளவு படம் சூப்பரும் இல்லை. மோசமும் இல்லை, ஓக்கே ரகம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன்  மார்க் - 41

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - யூத்துங்க பார்க்கலாம் ஹி ஹி 

ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


http://www.screen4screen.com/album%20main%20page/muk%20working%20stills/mywebalbum/iwebalbumfiles/46cb55eebaa44afe86f3b53a1bf3f0d2.jpg

22 comments:

shanthi said...

எப்பயும் போல விறுவிறு விமர்சனம் ..super

தாமரைக்குட்டி said...

சூடான விமர்சனம்!!! நல்லாயிருக்கு சண்டே ஸ்பெஷல் ஷோ. சத்யம்ல!!!

Anonymous said...

நிறைய layerல ஒரு layer, ஹிந்தியில karthic calling karthicன்னு ஒரு படத்துல இருந்து directer எடுத்திருகாறு போல,

sutha said...

First day First show paarthacha?

ராஜி said...

காதலில் சொதப்புவது எப்படி படத்துக்குதான் போய் இருப்பீங்கன்னு நினைச்சேன்.

Anonymous said...

இதைப் படிச்சு முடிக்கிறதுக்குள்ள 'கா.சொ.எ.' விமர்சனம் வந்துரும்னு எதிர்பார்த்தேன்...வரலை..
யாரெல்லாம் இந்தப் படம் பார்க்கலாம் என்ற லிஸ்டுதான் பெஸ்ட் இதுல. மொத்தத்துல கதை ஹீரோவோட தலைக்குள்ளயே நடக்குது.படம் மட்டும் தியேட்டர்ல ஓடுது...

Unknown said...

நானும் பார்த்தேன், குவைத்- ல் நீங்க சொன்ன கிளைமாக்ஸ் வில்லன பத்தின விஷயம் எதுவும் காட்டல கட் பண்ணிட்டான். (ஒருவேளை வளைகுடா தணிக்கையாக இருக்கும்).
உங்க விமர்சனம் படித்த பிறகுதான் இனிமேல் படம் பாக்கணும், அற்புதமான ரசனை உங்களுடையது. நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

ஓ இன்னைக்கு வெள்ளி கிழமையா அண்ணே...?

மன்மதகுஞ்சு said...

டிரையிலரை பார்த்திட்டு காத்திருந்தேன் எப்போடா படம் வெளீவரும் உங்க விமர்சனம் படிச்சதும் பிபி இன்னும் எகிறிட்டு, உங்களைப்போல யூத்து பசங்க பார்க்கலாம்ன்னு எழுதி இருந்தீங்க.. ஏன் கே.ஆர் விஜயா எல்லாம் வாறாங்களா

தம்பி said...

நல்ல இருக்கு..நீங்க YOUTH ah அண்ணே.. அல்லது சின்ன வயசு பையனா அண்ணே...

rajamelaiyur said...

அப்ப படம் பாக்கலாம் ...

சசிகுமார் said...

நடத்துங்க ராசா நடத்துங்க...

பால கணேஷ் said...

அமலாபால் கிளாமைரையாவது பாப்போம் ஏக்கப்படற என்னை மாதிரி சின்னப் பசங்க...

-அதெல்லாம சரி... உம்மைவிட சின்னப் பையனாகிய நான் பாக்கலாமா கூடாதான்னு சொல்லலியே... ஹி... ஹி...

ஹாலிவுட்ரசிகன் said...

வெள்ளிக்கிழமை ஷ்பெஷல் ... சூடான விமர்சனம். நன்றி சி.பி.

சைக்கோ த்ரில்லர். ம்ம்ம் ... கட்டாயம் பார்க்கணும்.

Anonymous said...

/////படத்துல சந்தானம் வர்ற 4 சீன்கள் செம கல கல .. இறுக்கமான திரைக்கதையில் அவர் ஒரு ரிலாக்ஸ்..////

வெறும் நாலே நாலு சீனா?

Unknown said...

ஆனந்தவிகடன் மார்க 41 அப்ப கண்டிப்பா படம் பார்க்கலாம்....

KANA VARO said...

செவ்வாய்க்கிழமை ஒரு படத்துக்கு மட்டும் போற ஐடியா. கெதியா மிஞ்ச விமர்சனங்களையும் எழுதுங்கோ!

ஹேமா said...

பாக்கலாம் பாக்கலாம் !

Francis Rajesh said...

anna kelapuringa

முத்தரசு said...

சரிங்க பார்கிறேன்.....

N.H. Narasimma Prasad said...

கலக்கல் விமர்சனம் சிபி அண்ணே. பகிர்வுக்கு நன்றி.

N.H. Narasimma Prasad said...

கலக்கல் விமர்சனம் சிபி அண்ணே. பகிர்வுக்கு நன்றி.