Wednesday, February 01, 2012

தேனி மாவட்டம் - விளைநிலங்கள்,விவசாயம் வாழ - சினிமாவிமர்சனம்

http://runtamil.com/wp-content/uploads/2012/01/00-00-2373.jpg 

பெரிய பெரிய மாஸ் ஹீரோக்கள் எல்லாம் தன் இமேஜை பில்டப் பண்ற கதைல மட்டும் தான் பெரும்பாலும் நடிக்கறாங்க.. சின்ன பட்ஜெட் படங்கள்ல பல சமயம் அரிதான மெசேஜ்கள் அசால்ட்டா சொல்லிட்டு சத்தம் இல்லாம நகர்ந்துடறாங்க.. சரியான மார்க்கெட்டிங்கோ, நல்ல ஓப்பனிங்க்கோ இல்லாம அமுங்கிடுது.. அந்த மாதிரி நல்லதொரு கதைக்கரு உள்ள படம் தான் தேனி மாவட்டம்..
வில்லி ஐஸ்வர்யா சசிகலா மாதிரி.. கிடைச்ச நிலத்தை மடக்கிப்போடு, எதிர்க்கறவங்களை அடக்குப்போடு டைப்.. அவர் இருக்கற கிராமத்துல ஹீரோவோட அப்பா நல்ல செல்வாக்கா நில புலன்களோட இருக்கார்.. ஃபாரீன் ஆட்கள் அந்த கிராமத்துல தொழிற்சாலை கட்ட விளைநிலங்களை விலை பேச வர்றாங்க.. ஹீரோவோட அப்பா தர்லை.. தொழிற்சாலை கழிவுகளால் விளைநிலங்கள், எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும்னு சொல்லி தானும் நிலங்களை தராம வேற யாரும் தராத மாதிரி பிரச்சாரம் பண்றாரு.. 

வில்லி ஹீரோவோட அப்பாவை போட்டுத்தள்ளிடறா.. ஹீரோ தன் அப்பாவை கொலை செஞ்சவளை பழி வாங்க கிளம்பாம தன் கிராமத்து  மக்களின் நன்மைக்காக பாடு படறார்.. வில்லி தன் நிலத்தை ஃபேக்டரி கட்ட தர முயலும்போது அதை கோர்ட் உத்தரவு மூலம் தடுக்கறார்.. கிடைச்ச கொஞ்ச நஞ்ச கேப்ல ஹீரோயினை லவ்வறார்.. 

தயாரிப்பாளர் ஜி கே தான் ஹீரோ.. இவர் செஞ்ச புத்திசாலித்தனமான 2 விஷயம்.. கதைக்கரு விளைநிலங்களை விற்கக்கூடாது. அப்டினு எடுத்துக்கிட்டது.. ஹீரோயின் கசக்கு மொசக்குன்னு அதாவது கும்முனு 2 பேரை புக் பண்ணது.. 

ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவருக்கு ஒரு ஜோடி.. ஹீரோ -ஹீரோயின் ஜோடி போரடிச்சா இந்த ஜோடியை குளிர பார்த்துக்கலாம்.. ஆஹா என்னே ஒரு ஐடியா.. 

ஹீரோ ஜி கே கறுப்பு ராமராஜனா , லோ பட்ஜெட் எம் ஜி ஆரா உலா வர்றார்.. க்ளோசப் காட்சிகள்ல பயப்படுத்தறார்.. பெரும்பாலும் லாங்க் ஷாட் தான், அதனால தப்பிச்சோம்.. :)ஆள் காட்டி விரல்ல தங்க மோதிரம் போட்ட முதல்  தமிழ் சினிமா ஹீரோ என்ற அந்தஸ்தை பெறுகிறார்:) சின்னக்கவுண்டர் விஜயகாந்த், புதுப்பாட்டு ராமராஜன் இருவரையும் மிக்ஸ் பண்ணுன நடிப்பு..

ஹீரோவின் அப்பாவாக வரும்  மகாதேவன் அமைதியான நடிப்பு..  பாராட்ட வைக்கும் தோற்றம்.. 

ஹீரோயின் நெம்பர் 1 -வர்ஷா 

http://www.cinehour.com/gallery/events1/audioreleases/Theni%20Mavattam%20Audio%20Launch/21524487Theni_Mavattam_Movie_Audio_Launch-(31).jpg

ஹீரோயின் நெம்பர் 1 உடல் சைஸ்   42 -42-42 என ஒரே அளவாக தென்பட்டாலும் ரசிக்க வைக்கிறார்.. கொழுக்கட்டை மாதிரி இருப்பதால் சி செண்ட்டர் ரசிகர்கள் விசில் அடிச்சு ரசிப்பார்கள்.. ( நான் அடிக்கலை.. எனக்கு விசில் அடிக்க தெரியாது)

ஹீரோயின் நெம்பர் 2 பாரதி ராஜா படத்துல அறிமுகம் ஆகும் கிராமத்து ஹீரோயின் ரஞ்சனி ( கவனிக்க ரஞ்சிதா அல்ல) மாதிரி பாந்தமாக வர்றார்.. அவருக்கு காட்சிகள் கம்மிதான் .. இருந்தாலும் மனசுல நிக்கறார்.. உக்காந்திருக்கார். 

வில்லி ஐஸ்வர்யா தெனாவடான நடிப்பு.. அவரது ஆண்மைத்தனமான  கர கர குரலே பாதி வேலையை செஞ்சுடுது.. ஆனா அவர் பொருத்தமே இல்லாம விக் வெச்சிருக்கறது கண்ணில் உறுத்தல்.. அந்தக்கால சரோஜா தேவி ,மஞ்சுளா போட்டிருக்கும் டோப்பா மாதிரி நல்லாவே இல்ல.. 

http://chennai365.com/wp-content/uploads/Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch-Stills-026.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  படத்தோட விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆனா கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம்.. படத்துல வர்ற எல்லா பெண் கேரக்டர்களுக்கும் பிரமாதமான நெக்லஸ் டிசைன், அதுக்கு மேட்சா தோடு ஜிமிக்கி எல்லாம் போட வெச்சு கலக்கியது.. குறிப்பா வில்லி ஐஸ்வர்யா, சபீதா ஆனந்த், ஹீரோயின் நெம்பர் 1 இந்த 3 பேரும் அணிந்து வரும் நெக்லஸ், மற்றும் பட்டுப்புடவை டிசைன் செம செம.. 
2. ஹீரோயின் நெம்பர் ஒன் ( பேரு வர்ஷா) திமிசு, சொகுசு,தினுசு, ரவுசு என நாட்டுக்கட்டையா இருந்தாலும் கண்ணியமா படத்துல காட்டிய இயக்குநரின் பொறுப்பு.. 


3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ்ல ஸ்கூல் குழந்தைங்க எல்லாம்  தேடியக்கொடி டிசைன் பண்ணும், ஆடும் சீன் செம கலக்கல்.. 

4. ஆக்க பூர்வமான திட்டமாக ஹீரோ சொல்லும் ஏ டி எஃப்  ( ATF ) எனி டைம் ஃபுட் செயலாக்க நடைமுறை விளக்கம் செம.. 

5.  பாடல் காட்சிகள் யதார்த்தம்.. யக்கா யக்கா டப்பாங்குத்து,கண்ணாலே கடிதம் போட்டு, சாமிக்கு உறக்கம் இல்ல, பொய் தானே,பூவுக்கும் காற்றுக்கும் திருமணம் செம ஸ்பீடு பாட்டு, கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ் என எல்லா பாட்டுமே தியேட்டர்ல கேட்கற அளவு இருக்கு.. 

ஹீரோயின் நெம்பர் 2 -ரேணு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUpDvJDb-9WQ8y5t-Mt2uTPolXj43_T4AjaffhmXERkX3rVUPB0ad8qEAIkyGVgXjSlt43iHT-dKydzipozWa7oJKZAt4PxxdLAg9fyIAhpMgo1-z5iehZw7KlfFNRIbDNfkMoxZRC6fA/s1600/theni_mavattam.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1.  கோடீஸ்வரியா வர்ற வில்லி ஐஸ்வர்யா ஒரு சீன்ல கோயில் அர்ச்சகர் சீட்டு தர்ற ஆள் கிட்டே அர்ச்சனை சீட்டு எவ்ளவ்?என கேட்டு அவர் ரூ 25 என சொன்ன பிறகு வாங்கறார்.. இந்தக்காலத்துல யார் ரேட் எல்லாம் கேட்கறாங்க?

2. வில்லி ஐஸ்வர்யாவை அரெஸ்ட் பண்ண பொலீஸ் வருது.. பெண் போலீஸ் யாருமே  கூட இல்லை.. ஒரு ஊரின் வி ஐ பி லேடியை இப்படி அரெஸ்ட் பண்ண முடியுமா? ( கோர்ட் ஆர்டர் படி ஒரு பெண்ணை கைது செய்ய கூட 2 பெண் போலீஸ் இருக்கனும்)

3. ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவோட தம்பி அவர் சொந்த ஊர்ல பஞ்சம்.. அவரை வேற ஊருக்கு அழைக்கறாங்க.. பிடிச்சா போகனும்.. பிடிக்கலைன்னா வர்லை.. இங்கேயே இருந்துக்கறேன்னு சொல்லனும்.. யாராவது இதுக்காக தற்கொலை செஞ்சுக்குவாங்களா? அதுவும் 5 வயசு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு கணவன், மனைவி 2 பேரும் சாகறாங்க கிணத்துல விழுந்து. ஏத்துக்கவே முடியலை.. 

4. விவசாயிகள் விழிப்புணர்வுக்கூட்டத்துல ஹீரோ பேசறப்ப “ உங்களை மாதிரி இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை”ங்கறார்.. ஆனா கூட்டத்துல எல்லாம் 60 வயசான பெருசுங்க தான் இருக்கு.. 

5. ஒரு சீன்ல ஹீரோ கார்ல போறாரு.. வில்லன் ஜீப்ல சத்தம் இல்லாம பின்னாலயே போய் இருந்தா ஈசியா பிடிச்சிருக்கலாம். ஆனா வில்லன் லூஸ் மாதிரி டாஆஆஆஆஅய்னு கத்தி ஊரைக்கூட்டி சேஸ் பண்றாரு.. ஹீரோ எஸ் அவ்வ்வ்வ்

6. ஒரு சீன்ல ஹீரோவோட தம்பியை குற்றுயிரும் கொலை உயிருமா வெட்டிட்டு போறார்.. காயம் பட்ட ஆள் கம்முனு இருக்காம என்னமோ அர்னால்டு கணக்கா  “ என்னை  முழுசா கொன்னுட்டு போயிடு, இல்லைன்னா உன்னை அழிச்சிடுவேன்னு வார்னிங்க் தர்றார்..திரும்ப வந்த வில்லன் சதக்.. அவ்வ்வ் 

http://www.funrahi.com/photos/tollywood/rwx/theni-mavattam-movie-audio-launch-event-007.jpg

மனம் கவர்ந்த வசனங்கள் (GOWMAARIMUTHTHU)

1.  இயற்கையை அழிக்க நம்ம யாருக்குமே உரிமை இல்ல.. மரம் பட்டுப்போனா வனம் கெட்டுப்போகும்.. 

2.  அவனைப்பாரு.. சைலண்ட்டா பிள்ளை பிடிக்கறவனாட்டமே போறதை.. டேய்.. இது உன் வீடுடா.. ஏன் பம்பறே?

3.  மாப்பி.. நேரா கிணத்துக்குப்போறோம்.. குளிக்கறோம்.. குடிக்கறோம்..

நோ முதல்ல . குடிக்கறோம்.. அப்புறமா குளிக்கறோம். ஹி ஹி 

4.  நீ ஏன் எப்போ பாரு பாட்டிலும் கையுமா இருக்கே?

அடிக்கடி தொண்டை நனைஞ்சிடுது.. நனைக்க வேணாமா?

5. ஏம்மா, எங்கம்மா லைசன்ஸ்? கவர்மெண்ட்டே அதை ரிட்டர்ன் வங்கிடுச்சா?

லைசன்ஸா?அப்டின்னா என்ன?

6. யோவ்.. யோவ்.. வண்டி நின்னுடுச்சு.. என்ன ரிப்பேர்னு கொஞ்சம் பாருய்யா.. 

அந்த நிப்பிளை தூக்கி விட்டா ஸ்டார்ட் ஆகிடும்.. 

யோவ்!!!!!!

ஓ சாரி.. நான் இக்னீஷியனை சொன்னேன்..

7.  ஏம்மா.. சாம்பாரை பார்த்து ஊத்து.. 

நீ இப்போ டாஸ்மாக்ல ஊத்திட்டு வந்ததுக்கு இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

8. நீங்க பாட்டுக்கு 500 ஏக்கர்ல ஃபேக்டரி கட்டுவீங்க, அது வெளீப்படுத்தும் கழிவுகள் 2000 ஏக்கரை பாதிக்கும்.. 

9. அந்தக்காலத்துல மிலிட்ரிக்கு ஆள் எடுக்கத்தான் அரசாங்கம் கூவி கூவி ஆட்களை அழைச்சுது.. அந்த நிலைமை இப்போ விவசாயத்துக்கும் வந்துடும் போல.. 

10.. நாம எல்லாம் சேர்ந்து விவசாயம் பண்ணலாமா?

அண்ணே, உங்களோட சேர்ந்து இப்போதான் சரக்கு அடிக்க கத்து இருக்கோம்.. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் பழகிக்கறோம்.. 

11.. எந்தத்தொழிலும் த்தெரியாமகூட ஒருத்தன் பொழப்பை ஓட்டலாம், ஆனா எந்த ஒரு குடி மகனும் விவசாயம் தெரியாம இருந்திடக்கூடாது..

டி வில போட்டா அவசியம் பாருங்க ஹி ஹி ஹி 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - ராமராஜன் ரசிகர்கள், விவசாயிகள், கிராமத்தில் சொந்த நிலம் வைத்திருப்போர் பார்க்கலாம்.. விழிப்புணர்வுப்படம்

ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்.

இந்தப்படம் 7 நாட்கள் தான் ஓடும். இதை எப்படி கண்டு பிடிச்சேன்னா தியேட்டர்லயே 3.2.2012 முதல் மெரீனா வருகிறதுன்னு ஸ்லைடு போட்டாங்க ஹி ஹி

12 comments:

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணர்,

அத்தி பூத்தாற் போல கிராமங்கள் இப்போது திரைப்படங்களில் வரும் நிகழ்வும் ஆகி விட்டது.

அந்தக் கவலையினை இந்தப் படம் நிறைவு செய்யும் என்பதற்குச் சான்றாக விமர்சனத் தலைப்பே சொல்லி நிற்கிறது.

பதிவினைப் படிச்சிட்டு வருகிறேன்.

நிரூபன் said...

என்னது ஹீரோயின் உடம்பை கூட அளவெடுத்திருக்கிறீங்களா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

விமர்சனப் பகிர்விற்கு நன்றி.

உங்கள் வர்ணனையின் பின்னர் ஹீரோயின் தான் மனசில நிற்கிறா

நிரூபன் said...

அண்ணே, அந்த மெமரி பவர் டாப்ளேட்டை எனக்கும் அனுப்பி வைச்சிடுங்க.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விமர்சனம்.வசனங்களின் 1 மற்றும் 9 நன்றாக இருக்கு.
டி.வி.ல போடும் போது பாத்துக்கிறேன்.நன்றி.

சசிகுமார் said...

டிவில போட்டா அவசியம் பாக்குறான் அவ்வவ் இருந்தாலும் உனக்கு ஓவர் குசும்புயா

முத்தரசு said...

சரிங்க...சொல்லிடீகே....
பார்த்த்டுவோம்ல டிவியில்

K.s.s.Rajh said...

படம் பார்க்கலாம் போலத்தான் இருக்கு பார்ப்போம்

rajamelaiyur said...

எண்கள் செலவை குறைக்கும் கடவுள் நீங்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, நாங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி...

உங்க விமர்சனத்தால் நாங்கள் தப்பிக்கிறோம்ல....

Ponchandar said...

தோடு, ஜிமிக்கி, நெக்லஸ் - இதையெல்லாம் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களே ! !

M.Senthil Kumar said...

அருவாளும் கையுமா அடாவடி வசனம் பேசிக்கிட்டு நடிச்சா கைதட்டிப் பார்க்க வசதியா இருந்திருக்கும்.

கருத்து சொல்லனும்னு நினைச்சு பணத்த போட்டவன கையெடுத்து கும்பிடனும்யா!

ஒங்க சந்தேக நம்பர் 3 பற்றி: லாஜிக் எதுவும் இல்ல, சொந்த ஊரவிட்டு போறத தவிற வேற வழி இல்லன்ற சூழ்நிலையில, செத்துப்போகலாம்ங்கிற மண்ணின் மீது கொண்ட செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட் தான் அது.

சந்தேகம் நம்பர்6: அமைதியா இருந்து உசுர காப்பாத்தி வைக்கனும்னு நினைக்காத ஜனங்கள் நிறைய இங்கு. ரோட்ல டிவிஎஸ்50ய சைடுவாங்கிட்டுப் போனான்னு சொல்லி மண்டைய ஒடைக்கிற பயலுகதான் இவிங்க!

இதையும் ரசிச்சு, அதுக்குள்ள இருக்க கருத்த படம் பார்த்தவய்ங்களவிட அதிக மக்களுக்கு எடுத்துச்சென்ற ஒங்களுக்கு கோயில் கட்டித்தான்ணே கும்புடனும்.