Thursday, February 09, 2012

சினம் - சத்யராஜ்,சத்யன் லூட்டி,பூமிகா,கிம் சர்மா கிளாமர் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi-xRQkzXK7FTHXbV-Ww4atThMfsCoy-ke5bYyCKMDLuoCR6Gx5bt7itsMcdw98vecR_q1xFOx8lNLO-bNmS25n1MOXPVHf9wDWEQbtSSPUzfZp0WVWiYNkqIYpyAyiXYGLXYH0Ba5pFQ/s1600/sinam-movie-stills-images-poster-photos-gallery-15.jpgபடத்தோட விமர்சனம் பற்றி பேசறதுக்கு முன்னால 2 காமெடியான மேட்டர் பட போஸ்டர்ல இருக்கு , முதல்ல அதை பார்க்கலாம்.. போஸ்டர்ல சத்யராஜ்-நவ்தீப் இணைந்து கலக்கும் சினம்னு போஸ்டர்ல இருக்கு.. 2 பேரும் கடைசி வரை இணையவே இல்லை.. ஏன்னா நவ்தீப் நடிச்ச யாகம்கற தெலுங்கு படத்தை தமிழ்ல டப் பண்ணி சத்யராஜ்-சத்யன் வெச்சு ஒரு 5 ரீல் எடுத்து ஒட்டி தமிழ்ப்படம் மாதிரி காட்டி இருக்காங்க.. (கிளைமாக்ஸ்ல 2 பேரும் சேர்ந்த மாதிரி காட்ற ஒரே ஒரு சீன் கூட கிராஃபிக்ஸ் தான் ).. 

2 வது மேட்டர்.. பட போஸ்டர்ல HMT  மூவீஸ் வழங்கும்னு  போட்டிருக்கே? தயாரிப்பாளர்க்கு வேற பேரே கிடைக்கலையா?  நிஜமாலுமே அதுக்கு அர்த்தம் தெரியாம போட்டுட்டாரா? அவ்வ்வ்வ்வ் 

ஜில்லுனு ஒரு காதல் படத்துல ஜில்லுனு வந்தாரே பூமிகா அவர் தான் ஹீரோயின் நெம்பர் ஒன்.. அவர் ஒரு ஃபிளைட்ல ஏர்ஹோஸ்டல்.. ஹீரோவோட லவ்வர்.. அவரை ஹீரோ வழி அனுப்பறார்.. ஏர்ஹோஸ்டல் ஃபிளைட்ல போய் ஒழுங்கா வேலையை பார்க்காம ஒரு கொலையை பார்த்துடுது.. 

அந்த கொலையை செஞ்ச வில்லன் குரூப் 3 பேரும் பூமிகாவை கொலை பண்றாங்க.. ஹோட்டல் ரூம்ல போதை ஊசியோ, விஷ ஊசியோ போட்டு கொலை செஞ்சுட்டு போயிடறாங்க.. அந்த ரூம் ஸ்வீப்பர் ஹீரோயின் நெம்பர் 2 கிம் சர்மா வந்து ரூமை க்ளீன் பண்றப்போ  பூமிகாவோட செல் ஃபோன் ஆட்டோமேடிக்கா அவரை வீடியோ எடுத்துடுது.. அதெப்பிடி?ன்னு எல்லாம் லாஜிக்கா கேள்வி கேட்கக்கூடாது, இது தெலுங்குப்படம்.. 


http://www.kollywoodtoday.in/wp-content/uploads/2009/08/sinam-aug2-2009.jpg

அந்த செல் ஃபோனை ஹீரோ பார்த்துட்டு கிம் சர்மாவை கொலையாளி அல்லது கொலைக்கு உடந்தைன்னு நினச்சு அவரை மடக்கறார்.. மேட்டரை முடிக்கறார்.. வில்லன் குரூப்பை கொலை பண்ணிடறார்.. 

வழக்கம் போல துப்பறியும் அதிகாரியா லூஸ் போல வரும் சத்யராஜ் கொலையாளியை கண்டு பிடிச்சாலும் அவர் நியாயமாத்தான் கொலை செஞ்சிருக்கார்னு விட்டுடறார்.. 

ஹீரோ ஹீரோயின் நெம்பர் 2 வோட குடும்பம் நடத்தறார்.. அவ்ளவ் தான் கதை.

நவ்தீப் ஹீரோ வா? அவ்வ்வ்வ்.. ஓப்பனிங்க் ஷாட்ல அவர் மலைப்பாம்பு கூட பண்ற ஓவர் பில்டப்பை விஜய் கூட செஞ்சதில்லை. யப்பா சாமி.. அவர் சேஸிங்க் காட்சிகளில் நல்ல சுறு சுறுப்பு.. ஓடிட்டே இருக்கார்.. நடிப்பு சுமாரா தான் வருது,... அண்ணன் ஸ்ட்ஃப்க்ரீன்ல வந்தா ஒண்ணா பூமிகா பக்கத்துல இருக்கார், அல்லது கிம் சர்மா பக்கத்துல அவ்வ்வ்வ் 

பூமிகா ஹீரோயினா வந்தாலும் மொத்தமே 20 நிமிஷம் தான்.. நான் மட்டும் இந்த படத்துக்கு புரொடியூசரா இருந்தா பூமிகாவை ரெண்டாவது ஹீரோயினா போட்டிருப்பேன்.. ஏன்னா அவ்லவ் செலவு பண்ணி புக் பண்ணி ஏன் அநியாயமா சாக விடனும்?

கிம் ஷர்மா பேசாம அவங்கம்மா கிட்டே சொல்லி பேரை கில்மா ஷர்மான்னு மாத்திக்கலாம்.. ஹி ஹி ஆள் முகம் பார்க்க சகிக்கலை.. குதிரை முகம்.. தமிழனுக்கு பிடிக்காது.. ஆனா உடம்பை  நல்லா எக்ஸ்போஸ் பண்றார்.. 

சத்யராஜ் கல கல கேரக்டர் என்றாலும்  அவர் லூசுத்தனமாய் சேஷ்டைகள் செய்வது அவர் கேரக்டரின் வீரியத்தை குறைக்கிறது.. ஏன்னா பொதுவா இந்த மாதிரி கேரக்டரை சுஜாதவின் கணேஷ் கேரக்டர் போலவும், சத்யன் கேரக்டரை வஸந்த் கேரக்டர் போலவும் வடிவமைக்கனும் .. ஜஸ்ட் மிஸ்.. 

சத்யன் காமெடி ஓக்கே .. நல்லா வர வாய்ப்பு இருக்கு.. 

http://mimg.sulekha.com/tamil/sinam/sinam_m.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தை இடைவேளைக்குப்பிறகு  பார்த்தாக்கூட புரியற மாதிரி எடுத்தது.. அதாவது முதல் பாதி சும்மா மூவ் ஆகுது அவ்ளவ் தான்.. சத்யராஜ் வர்றதும் கதையும் செகண்ட் ஆஃப்ல தான்.. 


2. முதல் பாட்டு சீன்ல கோஸாப்பழத்தை ( தர்பூசணி) கட் பண்ணி ஷங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமா யூஸ் பணியது செம.. 

3.  மொக்கை ஃபிகரான கிம் ஷர்மா போட்டு வரும் கொலுசு டிசைனும், அதில் உள்ள வைரக்கற்களும் செம ( நீதி - நான் ஹீரோயினோட கால் பாதத்தை மட்டும் தான் பார்த்தேன் ஹி ஹி )

4. பாராட்ட வேண்டிய முக்கியமான அம்சம் அவசரப்போலீஸ் 100 படத்துல பாக்யராஜ் எம் ஜி ஆர் நடிச்ச பட க்ளிப்பிங்க்சை யூஸ் செஞ்சது போல சத்யராஜ் நடிச்ச சீன்களை பேட்ச் ஒர்க் பண்ணி சேர்த்த விதம்ம் அந்த ஐடியா செம.. 

5. ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் பாட்டு ரீமிக்ஸ் என்றாலும் ரசிக்கும்படி இசை அமைப்பாளரிடம் ( மணி சர்மா) வேலை வாங்கியது.. லலாயி லலாயி பாட்டு நடன அமைப்பு ஆல் ஓக்கே 


http://1.bp.blogspot.com/_gOdUm6zSLXA/TO-cYHP4XZI/AAAAAAAACDM/gseJKWEDvzA/s1600/Sinam+-+movie+actress.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்

1.  ஹவுஸ் கீப்பாக வரும் கிம் சர்மா ஹவுஸ் ஓனர் மாதிரி ஆடம்பரமா இருக்காரே அது எப்படி? அவ்ளவ் மேக்கப்? டிரஸ்சில் ஆதீத ஆடம்பரம்

2.  ஹீரோ 68 அடி உயர பில்டிங்க்ல இருந்து  கீழே குதிச்சு எதுவும் ஆகாம சாதாரணமா நடந்து போறாரே, அது எப்படி?

3.  வில்லனா வர்ற போலீஸ் கிம் சர்மா சட்டைக்குள்ளே கை விட்டு லஞ்சப்பணத்தை எடுக்கறார்.. அது வரை பாப்பா ஆ-ன்னு வேடிக்கை பார்க்குது.. எங்க ஊர்ல எல்லாம் பஸ்ல கிட்டே நின்னாலே 10 அடி தள்ளி நிக்கறாங்க.. 
பளார்னு ஒண்ணு குடுக்க வேணாமா?


4.  கிம் சர்மா ஒரு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்ல ஏதோ பர்ச்சேஸ் பண்ணிட்டு கைல 2 பேக்கோட ( பேக்கு கையில் பேக்) வருது.. அப்போ ஒரு அதிர்ச்சியான செய்தி செல் ஃபோன்ல வருது.. பாப்பா உடனே அந்த 2 பேக்கையும் கீழே போட்டுட்டு வெறும் கையோட  2 கிமீ ஓடி அபார்ட்மெண்ட்க்கு போகுது.. அங்கே சோபால அந்த 2 பேக்கும் ஓரமா இருக்கு எப்படி?  அப்புறம்  ஏன் ஓடனும்? ஆட்டோ பிடிச்சே போலாமே?

5.  தாய்லாந்து , பாங்காங்க் ஆஃபீசர்ஸ் கிட்டே சத்யராஜ் தமிழ்ல கேள்வி கேட்கறார், அவங்க இங்கிலீஷ்ல பதில் சொல்றாங்க ஹா ஹ ஹா ( முறைப்படி இங்கெலீஷ்ல கேட்கற மாதிரி எடுத்து சப் டைட்டில்ல தமிழ் ஓடனும்)

6. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லன் கூட 20 நிமிஷம் சண்டை போடறார்.. ஏர்போர்ட் ஆஃபீசர்ஸ் யாருமே வர்லையே ஏன்?

சி.பி கமெண்ட் - செகண்ட் ஆஃப் மட்டும் டி வில போடறப்ப பார்க்கலாம்.. மற்ரபடி கிம் சர்மாவோட கில்மா சீன் பார்க்க ஆசைப்படறவங்க தியேட்டர்ல போய் பார்க்கலாம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhICk274fjVlm_XvxHPJclPbrRGDDDEhIIgfOBavsoGgU1so4JDDA16rIurpZJ7HMyD-zu0hIOQOJ9llOLC8R4HXG8UiUftGR4eDEVbDA0wEM_LLl52RQEKQ5cxoPQvzEblcZy6k7XXnVVw/s1600/Yagam-Movie-Poster-Designs-3.jpg

ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் ஓடுது 

ஆனந்த விகடன்ல விமர்சனம் போடமாட்டாங்க ,ஆனாலும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்


http://mimg.sulekha.com/telugu/yagam/stills/yagam-movie-stills25.jpg

14 comments:

Unknown said...

வணக்கம்னே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

அதென்ன குதிரை முகம் தமிழனுக்கு பிடிக்காது செம வர்ணிப்பு.

கோவை நேரம் said...

மொக்கை படம் வந்தாலும் விடமாட்டீங்க போல இருக்கே....உங்களோட தியாகத்திற்கு வணக்கம் ...

ராஜி said...

விமர்சனத்திற்கு நன்றி

இந்திரா said...

//கொலையாளியை கண்டுபிடிச்சாலும் நியாயமானவர்“னு விட்டுட்றார்.//


இதையே இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் காட்டுவாய்ங்களோ??

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்றாக இருக்கு.

Anonymous said...

Super review

K.s.s.Rajh said...

////கிம் சர்மா ////

முன்பு நம்ம கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் இந்த அம்மணியை இணைத்து கிசு கிசு வந்தது அவ்வ்வ்வ்....

K.s.s.Rajh said...

அப்ப படம் தேறாதுனு சொல்லுங்க.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் என்னலேய் ஆச்சு என் வீட்டம்மா அருவாளை வெப் காமிராவில் காட்டச்சொன்னதும் எடுத்து தந்துட்டாள், அதை போட்டு காட்டிட்டீங்களே முடியல....

Chandru said...

கில்மா சீன் பார்த்தாலும் அதே தீவிரத்தில் பேக்குகளையும் பார்க்குறீங்களே. உங்க பார்வையிலே எதுவும் தப்பாதோ?

rajamelaiyur said...

படத்தின் பெயரே கேட்டபோல இல்லையே ...

rajamelaiyur said...

எல்லா படமும் பாக்குற நின்ங்க ஒரு தெய்வம் தல

rajamelaiyur said...

மாணவர்களுக்காக ....

மாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொகுப்பு .