Saturday, February 25, 2012

சென்னை - பெண் ட்வீட்டர்கள் சந்திப்பு - இன்னா பேசுனாங்கோ? ஜாலி கலாட்டா கற்பனை

pic.twitter.com/WfS1xPRa 
வர வர பொண்ணுங்களோட ஆதிக்கம் அதிகம் ஆகிடுச்சு.. ஆண்கள் எல்லாம் சமையலை முடிச்சுட்டு ஆஃபீஸ் போன பின்பு இவங்க சும்மா  இருக்காம காலண்டர்ல, பஞ்சாங்க புக்ல இருக்கற தத்துவங்களை எல்லாம் ட்வீட்ங்கற பேர்ல தத்துவமா போட்டு கொலையா கொல்லறாங்க.. அப்புறம் ஆண்கள் ட்வீட் அப் , பதிவர் சந்திப்பு நடத்தறதை பார்த்து இவங்களுக்கும் ஆசை வந்துடுச்சு.. இப்போ சென்னைல பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ட்வீட் அப்.. அங்கே என்னத்தை பேசிக்கிழிச்சிருப்பாங்கன்னு இப்போ பார்க்கலாம்.. சும்மா ஜாலிக்கு ./. யாராவது சண்டைக்கு வந்தா உடனே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுவோம்.. நாங்க எல்லாம் வீரபிரதாபன் பரம்பரை ஹி ஹி

மொதல்ல மாதர் குல மாணிக்கம்  பாட்டிகள் சங்கத்தலைவி மெடிக்கல் ஷாப் மேனகா  மெரீனா பீச் வந்து சேர்ந்தாங்க..

அடுத்ததா ஆண்ட்டியோ அம்பிருந்தா வம்பிருந்தா  சொம்பிருந்தா வர்றாங்க 

- ஹாய் , ஆண்ட்டி.. இந்த சேலை சூப்பரா இருக்குக்கா.. எங்கே எடுத்தீங்க?

 ஜவுளிக்கடைல கடைக்காரன் பார்க்காதப்ப எடுத்தேன் ஹி ஹி 

அக்கா, உங்க கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல இருக்காராமே? ரொம்ப கஷ்டமான வேலையா?

 இல்ல, அங்கே ஈசியாத்தான் வேலை செய்வாரு.. இங்கே வீட்டுக்கு வந்ததும் தான் அவருக்கு ஏகப்பட வேலை, சமையல் வேலை, பசங்களூக்கு படிப்பு சொல்லித்தர்றது.. இப்படி

 அப்புறம் நீங்க என்ன தான் செய்வீங்க? 

 விளையாடறியா? காலைல 7 மணிக்கு சிஸ்டம் ஆன் பண்ணி உக்காந்தா நைட் 1 மணி வரை நான் ட்விட்டர்ல தானே இருக்கேன்? உனக்கு தெரியாதா?  டைம் லைனை நல்லா பாரு.. அப்பப்ப சாப்பிட, டீ குடிக்க மட்டும்  10 நிமிஷம் பிரேக்  எடுத்துக்குவேன்  ...

அடுத்து சாவி தராதே பூட்டை விடாதே  வர்றாங்க  - உஷ். அப்பா.. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டேன் ,.. ஐ ஜாலி 

நீங்க எப்போ ஆஃபீஸ் போய் இருக்கீங்க? இப்போ புதுசா கட் அடிச்சதா சொல்றீங்க?

 அப்படி எல்லாம் சொல்லாதே, மாசாமாசம் ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்க போய்த்தானே ஆகனும்?

இளிச்சவாய் டேமேஜர் உங்க ளை மாதிரி எல்லாருக்கும் சிக்கறதே இல்லையே?

 அப்போ கன் ஃபைட் காஞ்சனா  வாட்டர் கேன்ல சிறுவாணித்தண்ணியோட வர்றாங்க..

  ( ஓப்பனிங்க் சாங்க்... சிறுவாணித்தண்ணி குடிச்சு நான் ஃபைட் மாஸ்டரா பொறந்து வளர்ந்தவ... )

 டேமேஜர் பற்றி தப்பா பேசாதீங்க.. ஏன்னா மீ ஆல்சோ எ டேமேஜர்..

ஓகே , காந்தி சிலைக்கு போலாமா ? அப்போ தான் “அமைதி”யா பேச முடியும்./. 

 சாரி.. எனக்கு ஆம்பளைங்கன்னாலே அலர்ஜி.. கண்ணகி சிலைக்கு போயிடலாம்.. 

ஓக்கே.. அக்கா, ஆம்பளைங்களை திட்டறதுக்கு என்ன பண்னலாம்?

இப்போ நான் அதைத்தானே டெயிலி பண்ணிட்டு இருக்கேன்?

இன்னும் கேவலமா திட்ட ?

ஃபேக் ஐ டி ஓப்பன் பண்ணிக்க வேண்டியதுதான்.. பசங்கள்ல சிலர் எப்படி பொண்ணுங்க ஐ டில வர்றாங்களோ அந்த மாதிரி.. 

 அப்போ வள் வள் பொண்ணு ,சைதை பண்ணு எல்லாம் யாரு?

 யாருக்குத்தெரியும்? இப்போ அதுவா முக்கியம்.. நாட்டுக்கு உபயோகமான சில விஷயங்களை இப்போ டிஸ்கஸ்  பண்ண்ப்போறோம்././

 அது இருக்கட்டும்.. உங்க கூந்தல் இவ்லவ் கரு கருன்னு இருக்கே..  மீரா ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா? சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு குளிப்பீங்களா? 

 2ம் இல்லை பிளாக் மேஹந்தி போடுவேன். டை அடிச்சா அலர்ஜி ஆகிடுது.. அதனால.. நீங்க?

 நான் சவுரி வெச்சுக்குவேன்.. 

ஏய் கீரைக்காரம்மா... எவ்ளவ் கீரை?

 ஏய்.. என்னை அடையாளம் தெரியலை?

 சொன்னாத்தானே தெரியும்?

 நான் தான் யூ மலையாளச்சி

 அட விடிகாலைல 3.30 மணிக்கே ட்வீட்ஸ் போடுவீங்கள்ளே? அது நீங்க தானா?

 யா யா .. 

 நீங்க ஏன் நெற்றில  பொட்டில்லாம இருக்கீங்க?

 நல்லா பாரம்மா, சந்தனக்கலர்ல பொட்டு வெச்சிருக்கேன்.. உற்றுப்பார்த்தாத்தான் தெரியும்.. ஏன்னா மீ ஆல்சோ சந்தனக்கலர் ஹி ஹி 

அக்கா சுண்டல் வேணுமா?  

 வேணாம், போம்மா.. 

 அய்யோ அக்கா என்னைத்தெரியல ? நான் தான்க்கா திருச்சி மலைக்கோட்டைல அன்னதானம் ஸ்பான்சர்..... 

 ஸ்பான்சர் பண்ணுவீங்களா?

 ச்சே ச்சே டெயிலி லஞ்ச்க்கு அன்னதானம் அங்கே தான் ஸ்பான்சர் ஹி ஹி  என் பேரு டூப்ளிகேட் மானு.. 

எங்கே ஸ்கூட்டி காணோம்?

 கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்கக்கா.. அந்த டப்பா ஸ்கூட்டி எங்க வீட்ல இருந்து ஆஃபீஸ் போகவே 6 டைம் நின்னுடும்,, எவனாவது இளிச்சவாயன் சிக்குனான்னா அவனை தள்ளிட சொல்லி ஸ்டார்ட் பண்ணுவேன், அதுல எப்படி சென்னை வரை வர முடியும்?

http://p.twimg.com/AmgCh91CIAELodm.jpg
a

இடமிருந்து வலமாக மங்கை எனும் சந்தியா சாரு அவர்களின் தவப்புதல்வர்கள் 2 பேர்.. 3 வதாக இருப்பவர் ராஜ குமாரி சோனியா பெற்றெடுத்த ராஜகுமாரன்

இந்தியா சாரு  வர்லையா?

 அட உனக்கு மேட்டரே தெரியாதா? மேனகா, சாரு 2ம் ஒரே ஆள் தான்.. 

 ஓஹோ , எப்படி அடையாளம் கண்டு பிடிக்க? 

 அடிக்கடி கர்ர்ர் புர்ர்ர்-னு ரிப்ளை குடுத்தா, இளைய தலைவலியை பாராட்டி போடற ட்வீட்சை ஆர் டி செஞ்சா அது மேனகா ...  ஒன்றரை லைன்ல சோக தத்துவமா போட்டா  அது  இந்தியா சாரு..

 ஓஹோ, காதல் கவிதை எல்லாம் பின்றீங்களே, அது எப்படி?

 1980 ல நான் +2 படிச்சப்ப ரிலீஸ் ஆன இளையாராஜா இசை அமைச்ச பட பாடல்களை எல்லாம் டைரில எழுதி வெச்சிருக்கேன். இந்த கடன் கார  பசங்களுக்கு முதல் நாலு லைன்ஸ் தான் தெரியும்.. நான் நடுவால இருந்து 2 லைன் எடுத்து விடுவேன் ஹய்யோ அய்யோ 

ஓஹோ,, அக்கா ஏன் சுத்தி முத்தியும் பார்க்கறீங்க?

சுத்தி பாருங்கடி நம்மளை படம் புடிச்சு டிவிட்டரில போட்டிட போறாங்க.இன்னைக்குனு  பார்த்து நான் சவுரி முடி வைச்சிட்டு வரல

எனக்கு ஒரு டவுட்

 கேளு

அப்பளம் எப்பிடி பொரிக்கிறது ..?

 ரைஸ் குக்கர் எதுக்குடி இருக்கு அதுல போடுடி

என்ன ஒரு அநியாயம்,போயும் போயும் இந்த செல்வம் இப்படி மாறுவான்னு நான் கனால கூட நினைச்சு பாக்கல 

 அது யாரு? உன் பாய் ஃபிரண்டா?

 ச்சே, ச்சே, சீரியல்ல வர்ற கேரக்டர்டி. 

ஓ.. சரி நாம என்ன மாதிரி ட்வீட் போடலாம்?

நம்மள என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் நம்ம தத்துவம் போடுறத நிறுத்தவே கூடாதுடி 

 அதெல்லாம் காலண்டர்ல வந்ததுன்னு கண்டு பிடிக்க மாட்டாங்களா? 

 அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.. நான் ரெகுலரா தத்துவம் தான் போடறேன், அதுக்கே ஆர் டி பறக்குது 


ஓ.. ஹேய் உனக்கு பத்மினி புடிக்குமா இல்ல சரோஜாதேவியா?

 அஞ்சலி தேவி, வைஜய்ந்தி மாலா வை எல்லாம் விட்டுடே.. சரி நாம இப்போ பேசுன மேட்டர் வேளில தெரிய வேணாம்

 ஏன்>

 இதை வெச்சு நம்ம வயசை கண்டு பிடிச்சுடுவானுங்க.. நாம எப்பவும் போல 20 + அப்டினு மெயிண்ட்டெயின் பண்ணுவோம்.. 

ஒரிஜினல் போட்டோவ DPயா யாரும் வச்சுறாதீங்க, அப்புறம் ஒரு பய பாலோவ் பண்ணமாட்டான் 

 அக்கா , ந நி கீ அப்டின்னா என்ன? 

 நடு நிசிக்கீச்சு

 அப்டின்னா?

 ஏ ஜோக்ஸை பசங்க நைட் 12 மணில இருந்து 2 மணி வரை போடுவாங்க.. நாம அப்போ அவங்களுக்குத்தெரியாம வேடிக்கை மட்டும் பார்க்கனும்.. 

ஓஹோ ,இப்போ எல்லாம் விகடன் வலை பாயுதே, குங்குமம் வலைப்பேச்சு, குமுதம் ரிப்போர்ட்டட் ஆன் லைன் ஆப்பு, மல்லிகை மகள் வலைப்பேச்சு இதுல எல்லாம் பெண்களாகிய நாம் தான் வர்றோம்? இதுல இருந்து என்ன தெரியுது?

 பசங்களுக்கு ஆஃபீஸ் வேலை, வீட்டு வேலைன்னு ஏகப்பட்ட டென்ஷன்.. நமக்கு ஒரு கவலையும் இல்லை.. பொழப்பே இங்கே தான் ஓடுது.. அதான் காரணம்.. 

சரி லஞ்ச் சாப்பிடப்போலாமா?

 வேணாம்க்கா..  வீட்ல புருஷன் ஆசையா ஆக்கி வெச்சிருக்கார் , வேஸ்ட்டா போயிடும்.. 

 சரி, நாலைக்கு டைம் லைன்ல பசங்க என்ன பேசுனீங்கன்னு கேட்டா சமையல், கோலம்,  சவுரி, மேக்கப் மேட்டர் பேசுனோம்னு சொல்லிட வேணாம்.. 

 ஏன்?

 நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்கில்ல?அது டேமேஜ் ஆகிடும்.. ஹி ஹி 

http://upload.wikimedia.org/wikipedia/commons/d/df/Young_girls_in_bunad.jpg

டிஸ்கி -1 முதலில் உள்ள பெண் ட்வீட்டர்கள் படத்தை எடுத்து உதவி செய்தது  மை மாப்ஸ் கோவை ஷேக் .. மேலும் பல ஐடியாக்களை டைம் லைனில்  தந்து உதவிய அனைத்து ஆண் சிங்கங்கள்க்கும் நன்னீஸ்  ஹி ஹி

 டிஸ்கி 2 - பெண் ட்வீட்டார்ஸ் சந்திப்பு முதல் முறை நடந்த போதே ரெடி செய்யப்பட்ட பதிவு இது.. இப்போ கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டிருக்கேன்

 டிஸ்கி 3 - முன்நாள் உலக அழகியும் இந்திய சினிமாவில் பிரபல்யமானவருமான ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பேரு அபிலாஷா..28 comments:

கட்டதொர said...

ஹ..ஹா...தலை...பட்டைய கிளப்பீட்டீங்க...! ஒரு வாரம் ஊர விட்டு ஓடிருங்க..! கைல சிக்காதீங்க..! வெல்டன்..ஃபுல் என் ஜாய் ....டேங்ஸு..! கட்டதொர

Harry Gowtham said...

எப்படி அதுக்குள்ள இவ்வளவு யோசிச்சு ஒரு பதிவ போட்டுடிங்க? அட்ராசக்க அட்ராசக்கதான்:-)

காங்கேயம் P.நந்தகுமார் said...

பெண் டிவிட்டர்களை கற்பனை என்ற பெயரில் சும்மா டோஸ் கொடுத்திட்டீங்களே

erodethangadurai said...

சூப்பர்...! அதுவும் அந்த டூப்ளிகேட் மானு கேரக்டர் ... செம காமெடி மாமு ..!

anandrajah said...

தவீட்டு பொம்பளைகளின் உண்மையான நிழல் படம் பாம்படத்தோடு.. அருமை. தலீவா..! Keep it up.

Unknown said...

வந்திட்டிருக்காங்க..கூட்டமா வந்திட்டிருக்காங்க..உஷாருங்கோ..உஷாரு!

Butter_cutter said...

மாத்து விழுகறது உறுதி மாம்ஸ்

Rami said...

கலக்கிடிங்க அண்ணே..

தல தளபதி said...

ROFL தல.. டிவிட்டர் பக்கம் வந்துடாதிங்க..

ஹாலிவுட்ரசிகன் said...

யாராவது சீக்கிரம் ஹாஸ்பிட்டல்ல ஒரு பெட் புக் பண்ணுங்கப்பா ...

senthil kumar said...

//தத்துவம் எல்லாம் கேலண்டர்ல வந்ததுன்னு கண்டுபிடிக்க மாட்டாங்களா?//....அதுவொன்னும் பிரச்சனை இல்லமா ஒரு மாசம் கழிச்சி இருக்குற தேதியில என்ன இருக்கோ போடு கண்டுபிடிக்க மாட்டாங்க

chinnapiyan said...

நக்கலோ நக்கல்.ஒரே சிரிப்புத்தான்.வெளுத்துக்கட்டிட்டீங்க.

அபி said...

போதும் தல அப்புறம் நம்பள பத்தி வளைத்து டிவிட் போடுவாங்க

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணே நீ யாரை எல்லாம் போட்டு தாக்கி இருக்கேன்னு போட்டு குடுக்கட்டுமா?

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணே நீ யாரை எல்லாம் போட்டு தாக்கி இருக்கேன்னு போட்டு குடுக்கட்டுமா?

தனிமரம் said...

ஆஹா அண்ணாச்சி செமயாக உள்குத்துப் போட்டுவிட்டார். சி.பி அண்ணா அந்த ஸ்கூட்டர் மட்டும் தள்ள யாராவது வருவாங்களா சூப்பர் கடி.

பவள சங்கரி said...

அன்பின் சிபி,

என்னது இது..... ஐஸ்வர்யா ராயின் குழந்தை படம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னைக்குத்தான் பார்க்கிறேன்.

Athammohamed said...

ஹஹஹா... சூப்பர். கலக்கிடீங்க.

மாதேவி said...

:))))

ILA (a) இளா said...

அடக்கடவுளே!

K.Arivukkarasu said...

பெண் கீச்சர்களும் இதை sportive ஆக எடுத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்! அவர்களும் இந்த பதிவை ரசிப்பார்கள். இதே மாதிரி கம்ண்ட்டுகளும் அவர்களும் அடித்திருப்பார்கள். செந்தில், உங்களைப் பற்றி கண்டிப்பாக கமண்ட் அடித்திருப்பார்கள் :))

aalunga said...

ஆகா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆணாதிக்கவாதி சிபி ஒழிக........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கட்டதொரக்கு கட்டம் சரியில்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அபிலாஷான்னு ஒரு நடிகை இருந்தாங்க...... (சிபிக்கு தெரியாததா...?)

Unknown said...

இது கற்பனை மாதிரியே தெரியவில்லை ,நிஜமாவே இதைத்தான் பேசியிருப்பாங்க போல :-)

மன்மதகுஞ்சு said...

ஆணாதிக்க சண்முகம் சிபி வாழ்க.. பின்னி பெடல் எடுத்திட்டீங்க வார்த்தைக்கள் ஒவ்வொன்றூம் மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறீர்கள் மாதர் சங்கத்தின் போரை தவிர்ப்பதற்காக.. சிரித்து மகிழ மட்டுமெ என்ற வன் லைனுடன் அருமை பதிவு

Mohamed Mydeen said...

தல என்ன நடந்தாலும் தாங்கிகிடனும், அழ மட்டும் கூடாது :)