Monday, February 27, 2012

GHOST RIDER - 2 - SPIRIT OF VENGEANCE - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.filmofilia.com/wp-content/uploads/2011/12/ghost_rider_2.jpgஅம்புலிமாமா, பாலமித்ரா படிக்கற சின்னப்பசங்கள் எல்லாம் வரிசையா வாங்க.. சண்டை போடாம வரிசையா உக்காருங்க, கதை விடறேன்.. சாரி. கதை சொல்றேன். குறுக்கே யாரும்  பேசக்கூடாது. எனக்கு சொல்ல வந்தது மறந்துடும். ஹி ஹி


கால பைரவன்னு ஒரு கேரக்டர்.. அவர் நம்ம இரும்புக்கை மாயாவி மாதிரி ஒரு இண்ட்ரஸ்ட்டிங்க் கேரக்டர்.. அதாவது கரண்ட்டை டச் பண்ணுனா அவர் மாயமா மறைஞ்சு கை மட்டும் தெரியும்.. (இப்போ அந்த கேரக்டரை வெச்சு படம் எடுக்க முடியாது, ஏன்னா கரண்ட்டே இப்போ அடிக்கடி மாயமா மறைஞ்சுடுதே.:( அவ்வ்)

அந்த மாதிரி அநியாயம் எங்கே நடக்குதோ, எங்கே தலை விரிச்சு ஆடுதோ அங்கே ரப்பர் பேண்ட் போடாமயே அதை அடக்குவார்.. அப்போ அதாவது கால பைரவன் அவதாரம் எடுக்கறப்ப அவர் தலை காணாம போயிடும் , அதுக்குப்பதிலா தீயில் எரியும் மண்டை ஓடு மட்டும் இருக்கும்.. கோட் சூட் எல்லாம் போட்டிருப்பார்.. அதெல்லாம் எரியாது. 

தீயை எதிரிங்க மேல கக்குவார்.. அதை விட காமெடி என்னான்னா  அவர் ஒரு பைக்ல தான் வருவார். அந்த பைக்கும்  24 மணி நேரமும் எரிஞ்சுட்டே இருக்கும், ஆனா டயர்க்கு எதும் ஆகாது.. அவர் ஒரு சங்கிலி வெச்சிருக்கார்.. பெண்களோட வாய் தான் அல்லது நாக்குதான் உலகத்துலயே ரொம்ப நீளம்னு சொன்னவங்க இவர் சங்கிலியை பார்க்கலை போல.. அந்த சங்கிலியை ஒரு வீசு வீசுனாருன்னா அது  எமனோட பாசக்கயிறு மாதிரி.. எதிராளிகளை அழிச்சிடும். 


http://wpc.556e.edgecastcdn.net/80556E/img.news/NEtFzUR0KHADxz_1_2.jpg

இஷ் அப்பாடா.. ஹீரோ அறிமுகம் முடிஞ்சுதா.  இப்போ வில்லன் அறிமுகம்.. சாத்தான் தான் வில்லன்.. இவர் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் செஞ்ச வேலையை செய்யறார். அதாவது  பூலோகத்துல இருக்கற மேரேஜ் ஆன பொண்ணை மேத்தமேட்டிக்ஸ் பண்ணி  அவங்க கிட்ட பிசிக்கல் டச் வெச்சு பயலாஜிக்கல் எஃப்ஃபக்ட் ஏற்படுத்திடறார்.. ரிசல்ட் ஒரு பேபி.. 

அதெப்பிடி ஒரு பேய் கம் சாத்தான் மனித பெண்ணுடன் ஜல்சா பண்ன முடியும்னு லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..... எனக்கும்  தெரியாது. 

பிறந்த குழந்தை 13 வயசு ஆகும்போது ஏதோ பூஜை செஞ்சா சாத்தானுக்கு இன்னும் பவர் அதிகமா வருமாம்.. ஏன் இப்போ சாத்தான் கிட்டே பவர் இல்லையா?ன்னு கேட்காதீங்க.. இப்போ சாத்தான் கிட்டே இருக்கறது கலைஞர் பீரியட்ல இருந்த மைனாரிட்டி ஆட்சி மாதிரி.. பூஜை முடிச்சுட்டா இப்போ நடக்கற ஜெ ஆட்சி மாதிரி... யாரும் கேள்வி கேட்க முடியாது.. சஸ்பெண்ட் பண்ணிடலாம்..

இப்போ ஹீரோயின் அறிமுகம். இவங்க தான் நயன் தாரா மாதிரி ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வெச்சவங்க. அதாவது கட்டுன கணவன் இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்கா சாத்தான் கூட ஃபிரண்ட்ஷிப் வெச்சு குழந்தை பெற்றவர்.. இப்போ சாத்தான் கிட்டே இருந்து குழந்தையை காப்பாற்ற  ஓடுபவர்.. 

இப்போ க்ளியரா.. வில்லன் தன் குழந்தையைத்தான் சேஸ் பண்றார்.. ஹீரோ  அதை தடுக்கறார்.. அவ்ளவ் தான் கதை.. 

ஹீரோ நிக்கோலஸ் கேஜ்க்கு நடிக்க வாய்ப்பு ரொம்ப குறைவு.. ஏன்னா 70% காட்சிகளில் அவர் கால பைரவனா அவதாரம் எடுத்துத்தான் வர்றார்.. மண்டை ஓடு தான் தெரியுது.. ஆனா அவர் அவதாரம் எடுத்து வர்றப்ப தியேட்டர்ல செம கிளாப்ஸ்.... சூப்பர் ஹீரோன்னாலே ஜனங்க கிட்ட ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது..

ஹீரோயின் ஹீரோக்கு ஜோடி இல்லை.. அதனால ”எதிர்ப்பார்த்த”  அளவு ஒண்ணும் இல்லை.. அந்த சின்னப்பையன் அசால்ட்டா நடிச்சு இருக்கான்.. வில்லனா வர்ற ஆள் நம்ம காதல் தண்டபாணி மாதிரி இருக்கார்.. 

ஆக்‌ஷன் காட்சிகள் சின்னப்பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.. காமிக்ஸ் கதை போல் இருக்கு.. 

http://www.indiewire.com/static/dims4/INDIEWIRE/003ae04/4102462740/thumbnail/680x478/http://d1oi7t5trwfj5d.cloudfront.net/19/e44be0598511e19869123138165f92/file/ghostriderspiritofvengeance-thismeanswar.jpg


மனதில் நின்ற வசனங்கள்

1.  உலகத்துல ஒவ்வொரு மனுஷனுக்கும் 2 முகங்கள் இருக்கு.. கொலை செய்ய்றது தப்புன்னா கொசுவை அடிக்கறதும் ஒரு கொலை தானே?

2. ஏய். மிஸ்டர்.. ஏன் ரொம்ப நேரமா என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?

 ஏன்? பார்க்கக்கூடாதா? நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. வந்து வந்து.....

மம்மி, சரியான பேக்கா இருக்கான்.. உங்க கிட்டே அவன் கடலை போட்டப்ப பிக் பாக்கெட் அடிச்சது கூட அவனுக்கு தெரியலை.. 

3.  பாஸ்.. பேசுனதை விட அதிக பணம் வேணும்,ஓவர் ரிஸ்க்..

 அக்ரிமெண்ட்டை மாத்த முடியாது.. என்ன பேசுனோம்னு மறந்துட்டியா?

ஆமா, நீங்க பெரிய அமெரிக்க அதிபரு, நான்  யுனைட்டட் கிங்க்டம் கவர்னரு மீற மாட்டோம்.. போய்யாங்க்..

4.  என் நிலைமையைக்கேட்டா உனக்கு கிண்டலா இருக்கா?

 மேடம்.. சும்மா ஊத்தாதீங்க, சாத்தான் கூடவே குடும்பம் நடத்திட்டு..... 


5.  இப்போ சாத்தான் எங்கே இருப்பார்?

 நாம பாட்டுக்கு போய்ட்டே இருப்போம்.. புனித மலைக்கு.. அவன் எப்படியும் அங்கே வந்து ஜாயின் பண்ணிக்குவான்.. 


http://scifipop.com/wp-content/uploads/2012/01/Ghost-Rider-Spirit-of-Vengeance-image-2.jpg


 இதுல லாஜிக் மிஸ்டேக்ஸ் எதுவும் கேட்கமுடியாது.. ஏன்னா இது அதையும் தாண்டி புனிதமானது.. 

 சி.பி கமெண்ட் -  போர் அடிக்காம பொழுது போக்கும் ஆக்‌ஷன் படம்..

14 comments:

Natesh said...

ஐயா! படத்த தமிழ்ல (தமிழ் டப்பிங்) பார்த்தீங்களோ.

Unknown said...

ரைட்டுங்னோவ்!

பவள சங்கரி said...

ஹ...ஹா... சூப்பருங்கோவ்.......

ராஜி said...

தாவது பூலோகத்துல இருக்கற மேரேஜ் ஆன பொண்ணை மேத்தமேட்டிக்ஸ் பண்ணி அவங்க கிட்ட பிசிக்கல் டச் வெச்சு பயலாஜிக்கல் எஃப்ஃபக்ட் ஏற்படுத்திடறார்.. ரிசல்ட் ஒரு பேபி..
>>>
மேத்தமேட்டிக்ஸ் ஓக்கே, பிசிக்ஸும் ஓக்கே. இந்த மேட்டர்ல பயாலிஜி எந்த லாஜிக்ல வந்துச்சுன்னு விளக்கம் குடுக்கவும்.

ராஜி said...

Natesh said...

ஐயா! படத்த தமிழ்ல (தமிழ் டப்பிங்) பார்த்தீங்களோ.
>>>
ஹலோ யாரை பார்த்து என்ன வார்த்த கேட்டீங்க. உலகத்துல எந்த மொழில சினிமா எடுத்தாலும் சிபி சாருக்கு புரிஞ்சுடும்.

உணவு உலகம் said...

இன்னும் ட்ராஃப்ட்ல எத்தனை படம் விமர்சனம் வெச்சிருக்கீங்க சிபி?

பி.நந்தகுமார் said...

சினிமா தொழிலை சிபி போன்றோரை நம்பி தான் ஓடுது.

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணானே பார்க்கோனும்னா நேரா தியேட்டர் வாசலுக்கு போகலாம் போல உள்ளது.

கிஷோகர் said...

டாகுடரோட படத்த பாத்ததுக்கு அப்புறமுமா உங்களுக்கு ஹாலிவுட் படத்துல லாஜிக் மிஸ்டேக்ஸ் தெரியுது?

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்றாக இருக்கு. அம்புலிமாமா கதைதானே? டி.வி. ல போடும் போது பார்த்துக்கலாம்..

ஹாலிவுட்ரசிகன் said...

இந்தமுறை நக்கல், நையாண்டி எல்லாம் கொஞ்சம் தூக்கலாக தெரியுது? கலக்கல் விமர்சனம் பாஸ்.

ஹாலிவுட்ரசிகன் said...

// மேரேஜ் ஆன பொண்ணை மேத்தமேட்டிக்ஸ் பண்ணி அவங்க கிட்ட பிசிக்கல் டச் வெச்சு பயலாஜிக்கல் எஃப்ஃபக்ட் ஏற்படுத்திடறார்.. //

கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகிச்சா???

ஹாலிவுட்ரசிகன் said...
This comment has been removed by the author.
ஹாலிவுட்ரசிகன் said...

//இவங்க தான் நயன் தாரா மாதிரி ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வெச்சவங்க.//

அப்போ ரொம்ப ““ஓபன்”” டைப் போல. ஹி ஹி