Tuesday, February 28, 2012

காதல் பாதை - சினிமா விமர்சனம்

http://5eli.com/Song/wp-content/uploads/2012/02/Kaadhal-Paadhai.jpg

இந்தப்படத்துல தயாரிப்பாளரோட பையன் தான் ஹீரோ.. அதனால ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் இருக்கற மாதிரி பார்த்துக்கறது ஒரு அப்பாவோட கடமை இல்லையா? அதை கரெக்ட்டா பண்ணி இருக்கார் புரொடியூசர்..  சாதாரண, நமக்குப்பழக்கப்பட்ட ஏழை ஹீரோ - பணக்கார ஹீரோயின் காதல் கதைதான்.. 

ஹீரோ காலணி பழுது நீக்கும் பொழுதுகளில் ஹீரோயினை சந்திக்கறார்.. ஒரு மழை நாளில்.. ( அதாவது அவர் செருப்பு  தைக்கறப்போ  ஹீரோயின் அவர் மனசை தைச்சுடுது)மழைல நனையற ஒரு நாய்க்குட்டியை ஹீரோயின் பத்திரமா காப்பாத்துது..  ( ஹூம், நாம நனைஞ்சா ஒரு நாயும் கண்டுக்கறதில்லை)

ஹீரோ ஹீரோயின் மழைல நனையாம இருக்க ஒரு மழைக்காகிதம் தர்றாரு.அவரோட நல்ல மனசை பார்த்து ஹீரோயினுக்கு லவ் வந்திடுது ( நான் ரொம்ப ரொம்ப யூத்தா இருக்கறப்ப இதே மாதிரி ஒரு ஃபிகர்ட்ட கொடுத்தேன், அது “உன் வேலை என்னவோ அதை பாரு, எங்களை பார்த்துக்க எனக்கு தெரியும்னு சொல்லிடுச்சி ஹி ஹி )

2 பேரும் கண்ணியமா லவ் பண்றாங்க. ( படத்துல ஒட்டல்,உரசல், கட்டிப்பிடி வைத்தியம் எதுவும் இல்லை) இப்படியே போனா படத்துல ஒரு சுவராஸ்யம் இருக்குமா? ஹீரோயின் அப்பா தலை வாசல் விஜய்க்கு இது பிடிக்கலை... ஆபிரஹாம் லிங்கனே வந்தாலும் செருப்பு தைக்கும் ஆள்க்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிடறார்.. 

படு கேவலமான , மொக்கையான ஒரு வில்லனை, அடியாளை பிடிச்சு ஹீரோவை போட்டுத்தள்ளுன்னு சொல்றார்.. ஹீரோ ம் ஹீரோயின் ஒரு 800 ரூபா சைக்கிள்ல ஊரை விட்டு போறாங்க.. கொடைக்கானல்ல இருந்து டெல்லி வரை போயிடறாங்க .. அடேங்கப்பா 

துரத்தல்கள், பம்மல்கள்னு படு போரா செகண்ட் ஆஃப் போகுது.. அவ்ளவ் தான் கதை

 ஹீரோ பார்க்க பாவமா இருக்கார்..  அவர் வசனம் பேசும்போது ரவி கிருஷ்ணா ஞாபகம் வருது.. ரொம்ப அன் மெச்சூர்டு..

 ஹீரோயின் ஓக்கே .. பூவே உனக்காக சங்கீதாவை நினைவு படுத்தும் கண்ணியமான , குடும்பப்பாங்கான தோற்றம்..   சொந்தப்படமாக இருந்தும் அவரை உரித்துக்காட்டாமல் கவுரமாக காட்டியதற்கு இயக்குநருக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்..

 மன்சூர் அலிகான் குடிகாரராக தத்ரூபமாக நடித்திருக்கிறார்.. அவருக்கு மப்புல இருக்கற மாதிரி நடிக்க சொல்லவா வேணும்? செம  செம.. ஆனா பல இடங்களில் அவர் லொட லொட என பேசிட்டே இருப்பது போர்.


http://www.tamilnow.com/movies/gallery/kaadhal-paadhai/tamil-movie-kaadhal-paadhai-stills-6244.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

 1. தலைவாசல் விஜய்க்கு 2 வது மனைவியாக வரும் ஜிகிடி நல்லா இருக்கார் ஹி ஹி

2. ஹீரோயின் செலக்‌ஷன் கன கச்சிதம். அவரது நளினம், ஆடை உடுத்துவதில் (உடுத்தும்போது பார்க்கலை)_ கண்ணியம் செம.

3. ஒளிப்பதிவு பக்கா.. ஒரு காட்சியில்  ஹீரோவுக்காக வெயிட் பண்ணும் ஹீரோயின்க்கு பின்பக்க ம் ஏரியில் ஒரு  தவளை இந்த கரையில் இருந்து அக்கரை வரை செல்லும் காட்சி செம செம..

4. உன் மனசுல இருப்பது நானா ? என் இதயத்தை உடைத்தது நானா?  பாடல் வரிகள் அழகு. ஹாட்ஸ் ஆஃப் முருகன் மந்திரம்.. என்னவோ நெஞ்சிலே, ஏதோ மாற்றம் பாட்டும் ஓக்கே ரகம்.

இயக்குநர்  சறுக்கிய இடங்கள்

1.  ஹீரோ செப்பல் தைக்கற ஆள்.. தப்பா நினைக்காதிங்க.. மேக்சிமம் அந்த தொழில்ல இருக்கறவர் அதிக பட்சம் ஒரு நாள்ல ரூ 200 சம்பாதிச்சாலே அதிகம். ஆனா ஹீரோ டெயிலி அவர் அப்பாவுக்கு சரக்கு அடிக்க குவாட்டர் கோட்டா ரூ 100 தர்றார்.. பிரியாணி வாங்க காசு தர்றார்.. இது போக ஹீரோயினுக்கு என்னென்னெமோ வாங்கித்தர்றார்.. ஏது காசு?

2.  ஹீரோவை அடிக்க ஹீரோயின் ஆளுங்க  118 கிமீ வேகத்துல மெயின் ரோட்ல வேன்ல வர்றாங்க, ஹீரோயின் குறுக்குப்பாதையில் 2 கி மீ வேகத்துல ஓடியே 8 கி மீ கிராஸ் பண்ணி வார்ன் பண்றாங்க. !!!!!

3. ஒரு சீன்ல கமிஷ்னர் பேசற மாதிரி மிமிக்ரி பண்ணி இன்ஸ்பெக்டரை ஏமாத்தறார் ஹீரோவோட ஃபிரண்ட்... அவர் ஏன் லேண்ட் லைன்ல பேசனும்? கமிஷனர் கிட்டே இன்ஸ்பெக்டரோட செல் ஃபோன் நெம்பர் இல்லையா?


4.  க்ளைமாக்ஸ்ல வில்லனோட ஆளுங்க 6 பேர் காட்டுல அவுட் சைடு போற மாதிரி சீன்ல ஹீரோ அவங்க எல்லா டிரஸ்சையும் எடுத்து ஒளிச்சு வைக்கற மாதிரி ஒரு சீன்.. அவங்க எதுக்கு ஸ்விம்மிங்க் பூல்- ல குளிக்கப்போற பூனம்  பாண்டே மாதிரி அத்தனை டிரஸ்சையும் கழட்டனும்?

5. இடைவேளைக்குப்பிறகு திரைக்கதை தடுமாற்றம்.. வில்லனை காமெடியன் ஆக்கி ஆளாளுக்கு லந்து பண்ணும்போது வில்லன் மேல் எப்படி பயம் வரும்?


http://123tamilgallery.com/images/2011/10/Kaadhal-Paadhai-218.jpg

 ரசித்த வசனங்கள்


1.  அட.. எந்த புண்ணியவதி பெத்த மகனோ?

 அவருக்கு அம்மா இல்லை

 அதான், எல்லாரையும் நேசிக்கும் மனசு..2.  லேடி- சாப்பாடு ஆறிடும், வா மாமா சீக்கிரம்..


 என்னைத்தவிர வேற  யார்டி என் சாப்பாட்டை சாப்பிடப்போறாங்க? ( டபுள் மீனிங்க்)


3.  ஏய்.. கோபம் வரும்போது கூட நீ ரொம்ப அழகா இருக்கே.

 சமாளிக்காதே


4. ஒரு பொண்ணுக்கு முதல்லா யாரைப்பிடிக்குதோ அவனை வாழ்நாள் பூரா மறக்க மாட்டா..


5. ஸ்டேட்டஸ்.. பணம் பற்றிப்பேசறவங்களுக்கு லவ் பற்றி தெரியாது


6.  ரூ 100 கோடி சேர்த்து வெச்சு சாப்பிட முடியாம கஷ்டப்படற பணக்காரனை விட டெயிலி ரூ 100 சம்பாதிச்சாலும் நினைச்சதை சாப்பிடற ஆரோக்கியம்  உள்ள ஏழை தான் சிறந்தவன்

7.  நல்லாருக்கியாம்மா?

 ஹும்... இருக்கேன்..


8. ஆசைப்பட்டதை புத்தர் சிலை  காதுல போய் சொன்னா அது நிறைவேறுமாம்.. நீ போய் ஏதாவது சொல்லு.

 நான் ஆசைப்பட்ட நீயே எனக்கு கிடைச்சுட்டே.. இனி நான் கடவுள் கிட்டே கேட்க என்ன இருக்கு?


http://g.ahan.in/tamil/Kaadhal%20Paadhai%20Audio%20Launch/Kaadhal%20Paadhai%20Audio%20Launch%20(40).jpg

படம் டி வி ல போட்டா பார்த்துக்கலாம்

 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 35

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் -  ம்ஹூம், தேறாது

 டிஸ்கி - இந்தப்படத்தின் பாடல் ஆசிரியர் என் நெருங்கிய நண்பர். அவரைப்பற்றி..

முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ய பம்‌பர்‌ ஹி‌ட்‌ கா‌தல்‌ பா‌டல்‌
"இருவி‌ழி‌யி‌ல்‌ கலகம்‌ நூ‌று, இமை‌களி‌லே‌ அவளி‌ன்‌ பே‌ரு!".


வி‌ருந்‌தா‌ளி‌ படத்‌தி‌ன்‌ மூ‌லமா‌க பா‌டலா‌சி‌ரி‌யர்‌ ஆக அறி‌முகமா‌ன முருகன்‌ மந்‌தி‌ரம்‌  "கா‌தல்‌ பா‌தை‌" படத்‌தி‌ல்‌‌ இடம்‌பெ‌ற்‌றுள்‌ள அனை‌த்‌து பா‌டல்‌களை‌யும்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்‌ இசை‌யி‌ல்‌ வெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள இப்‌படத்‌தி‌ன்‌ இடம்‌ பெ‌ற்‌றுள்‌ள நா‌ன்‌கு பா‌டல்‌களும்‌ மெ‌லடி‌ பா‌டல்‌கள்‌ என்‌பது குறி‌ப்‌பி‌டத்‌தக்‌கது. 

"கா‌தல்‌ பா‌தை‌" படத்‌தி‌ன்‌ பா‌டல்‌களை‌ கே‌ட்‌டவர்‌கள்‌ வரி‌களை‌யு‌ம்‌ சி‌லா‌கி‌த்‌துப்‌ பே‌சுவதா‌ல்‌, உற்‌சா‌கத்‌துடன்‌ அடுத்‌தடுத்‌த படங்‌களி‌ன்‌ பா‌டல்‌களி‌ல்‌ கவி‌தை‌ மழை‌ பொ‌ழி‌ய தயா‌ரா‌கி‌க்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌.படத்துக்குப்போஸ்டர் டிசைனும் இவர் தான்
http://reviews.in.88db.com/images/kaadhal-paadhai-audio-launch/kaadhal-paadhai-audio-launch-image.JPG

உதா‌ரணமா‌க, கா‌தல்‌ பா‌தை‌ படத்‌தி‌ல்‌ இடம்‌பெ‌ற்‌றுள்‌ள ஓம்‌ மனசுல இருப்‌பது நா‌னா‌ நா‌னா‌ பா‌டலி‌ல்‌ இடம்‌ பெ‌ற்‌றுள்‌ள, 


"இருவி‌ழி‌யி‌ல்‌ கலகம்‌ நூ‌று
இமை‌களி‌லே‌ அவளி‌ன்‌ பே‌ரு

தே‌வதை‌யி‌ல்‌ உறவு‌ உறவு‌
எனக்‌கு அது, இரவல்‌ சி‌றகு"

மற்‌றும்‌

"இலை‌களும்‌ கீழே‌ வி‌ழுந்‌தா‌ல்‌ 
நதி‌ அதை‌ இழுத்‌துப்‌ போ‌கும்‌
நி‌ழல்‌களை‌ இழுத்‌துப்‌ போ‌கா‌தே‌

வெ‌ளி‌ச்‌சத்‌தி‌ல்‌ தெ‌ரி‌யு‌ம்‌ வண்‌ணம்‌
இருளி‌லே‌ கருப்‌பா‌ய்‌ப்‌ போ‌கும்‌
கண்‌ணோ‌டு குற்‌றம்‌ கி‌டை‌யா‌தே‌"

போ‌ன்‌ற கவி‌த்‌துவமா‌ன பா‌டல்‌ வரி‌களை‌ சொ‌ல்‌லலா‌ம்‌.


ஏற்‌கனவே‌, எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்‌ இசை‌யி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன "வி‌ருந்‌தா‌ளி‌" படத்‌தி‌ல்‌ 4 பா‌டல்‌களை‌யு‌ம்‌, எஸ்‌.எஸ்‌.குமரன்‌ தயா‌ரி‌த்‌து, இயக்‌கி‌, இசை‌யமை‌த்‌த "தே‌நீ‌ர்‌ வி‌டுதி‌" படத்‌தி‌ல்‌ 3 பா‌டல்‌களை‌யு‌ம்‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌.

தற்‌போ‌து, எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இயக்‌கம்‌ மற்‌றும்‌ இசை‌யி‌ல்‌ தயா‌ரா‌கி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ "கே‌ரள நா‌ட்‌டி‌ளம்‌ பெ‌ண்‌களுடனே‌", "ரா‌ஜா‌ பா‌ரதி‌ சவு‌ண்‌ட்‌ சர்‌வி‌ஸ்‌", "மும்‌பை‌யி‌ல்‌ ஒரு கா‌தல்‌" உள்‌பட  படங்‌களி‌ல்‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌ பா‌டல்‌கள்‌ எழுதுகி‌றா‌ர்‌. 

இதுவரை‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ வெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள பா‌டல்‌கள்

பே‌சுவது கி‌ளி‌யா‌ / இசை‌: ஏ.ஆர்‌. ரெ‌ஹா‌னா‌ / 1 பா‌டல்‌
வி‌ருந்‌தா‌ளி‌ / இசை‌: எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்‌
கா‌தல்‌ தோ‌ழி‌ / இசை‌:  வீ‌.தஷி‌ / 1 பா‌டல்‌
கா‌தலை‌ பறி‌க்‌கா‌தீ‌ர்‌ / இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்‌
தே‌நீ‌ர்‌ வி‌டுதி‌ / இசை‌:  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ /  3 பா‌டல்‌கள்‌
பயபு‌ள்‌ள / இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்‌
கா‌தல்‌ பா‌தை‌ / இசை‌ :  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்‌

7 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

இன்னும் நிறைய ஆஸ்கார் படங்கள் பார்க்கவேண்டி இருக்கு. இந்த மொக்கையெல்லாம் பார்க்க முடியாது. விமர்சனம் மட்டும் படிச்சிக்கிறேன்.

Anonymous said...

விமர்சனம் சூப்பர்...படம்????

Anonymous said...

nandri

ப்ளாக்கில் பல்பு (குண்டு பல்ப் ) மாட்டுவது எப்படி ??? ( Blog Light )

ராஜி said...

படம் மொக்கையா? அதையும் சகிச்சுக்கிட்டு பார்த்துட்டு வந்தீங்களா? ஈரோடுல “பொறுமையர் திலகம்”ன்னு சிலை வைக்க சொல்லுறேன்.

Yoga.S. said...

பிகருக்காக பாக்கலாம்னு சொல்லுறாரு!

ஹேமா said...

ம்...எப்பவும்போல விமர்சனம்.பார்க்கலாமா வேணாமான்னு தீர்மானிக்கலாம் !

பவள சங்கரி said...

ம்ம்ம்ம்ம்... நல்ல நியாயமான விமர்சனமாத்தான் தெரியுது... அனாவசியமா போய் 21/2 மணி நேரம் வேஸ்ட் பண்ண வேண்டாம் பாருங்க... நன்றிங்க..