Tuesday, February 28, 2012

தமிழகம் தழுவிய மெகா , மகா ட்வீட்டர் கம் பதிவர் சந்திப்பு @சென்னை

http://www.technobaboy.com/wp-content/uploads/twitter-logo-1.jpg 

இது ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கான பதிவு. இந்த மெகா ட்விட்டப்பில் கழந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தான். உங்களின் கருத்துக்களையும், திறமைகளையும் வெளிக்கொணரத் தான் இந்த ஏற்பாடு. அவசியம் கலந்து கொண்டு இந்த வெளிச்சத்தில் உங்களை இந்த உலகிற்கு காட்டிக் கொள்ளுங்கள். நகைச்சுவை மிளிர இந்த அழைப்பு பதிவை எழுதிக் கொடுத்த அவினாசி அன்னாசி அடச்சே அண்ணாச்சி ,கொங்கு மண்டல சந்நியாசி நண்பர் ராஜன் லீக்ஸுக்கு TNmegatweetup என்றும் கடமைப்பட்டுள்ளது.
ஏப்ரல்-30ம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் [email protected] என்ற முகவரியில் உங்கள் Twitter handle குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளவும்.

விழா நடைபெறும் தேதி : 13-05-2012

நடைபெறும் இடமும், நேரமும் ஏப்ரல்-30ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.

R u want to know Mega tweetup updates plz follow our twitter handle : www.twitter.com/TNmegatweetup


@
டுவிட்டரப்பன் துணை
#Chennai Mega TweetUp
தமிழ் கூறும் நல்லுலகின் டுவிட்டர் சந்து/சமுதாய மக்கள் அனைவரையும் ஒரு குடைக்கீழ் கொணருமோர் பெருமுயற்சியாய் சென்னை மெகா ட்வீட் அப் 13-05-2012

சி.பி - இந்த 13ந்தேதி ஏன் செலக்ட் பண்ணோம்னா அந்த நாள்ல வேற நல்ல காரியம், அல்லது சுப முகூர்த்தம் எதுவும் இல்லை.. மாமா பொண்ணுக்கு திரட்டி, பக்கத்து வீட்டு பம்ஸ் குட்டிக்கு நிச்சயதார்த்தம்னு யாரும் சால்ஜாப்பு, ஒயிட் காலர் ஜாப்பு எதுவும் சொல்ல முடியாது..


இணையத்தின் மற்றெந்த சந்துகளையும் விட டுவிட்டர் சந்தில் நமது மக்களின் அளவளாவல் அடா, புடா ரேஞ்சில் மானாவாரியாக பொங்கி ஓடும் சமயத்தில், இயன்றவரை, எல்லாரையும் ஓரிடத்தில் சந்திக்கவைப்பது என்று முடிவு! மக்களனைவரும் குடும்பத்துடன் புளிசோறு கட்டிக் கொண்டு கிளம்பி வரலாம்! பொடுசுகளைத் தூக்கி வருவோர் பேப்பர்ஸ் சொந்த செலவில் கொண்டு வரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


சி.பி - ட்வீட்ஸ் போடும்போது நான் பிரமாதமா சமைப்பேன், என் சமையலை சாப்பிட்டு எங்க குடும்பமே மயங்கி (!!) கிடக்கும்னு ரீல் ரீலா விடும் தாய்க்குலங்கள் மாட்னாங்க.. )

தெருக்கள்தொறும் புண்ணியாத்மாக்களாய் உலவுவதால் கரண்ட் கட் எனும் கடுஞ்சாபமின்றி உய்யும் சென்னை மாநகரில் மேற்படி நிகழ்வை நடாத்துவதில்(!) புழுங்கிச் சாவும் பிறமாவட்ட மக்கள் நாங்கள் களிபேருவகை கொள்கிறோம்!

இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில், ரெஸ்டாரண்டுகள், உயர்தர ஜைவ உணவகங்கள், சோம்பேறி பார்க்குகள், புத்தகக் கண்காட்சிகள், பச்சை போர்டு டாஸ்மாக்குகள், பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிய வீடுகள் என சிறிய அளவில் டுவீட் அப்புகள் வெகுசிறப்பாக நடந்தேறியிருக்கலாம், ஆனால் இம்முறை வங்கக் கடலோரம் சிங்கத்தமிழரை அலைகடலென பெருந்திரளாய் ஒன்றிணைத்து, 2016 சட்டசபை தேர்தல் ரேசில் நாமும் இருக்கிறோம் என்பதனை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


சி.பி - ஒரு ரகசியச்செய்தி..இந்த ட்வீட்டப்புக்கு பாம்பு சட்டையை மாற்றுவது போல் தன் காதலரை மாற்றும் பிரபல கேரளா நடிகை வந்தாலும் வரலாம் . 

வழமை போல், சப்பைக் காரணங்கள் சொல்லி ஜகா வாங்கும் அப்பாட்டக்கர்கள் இம்முறையாவது திருமுகரையை வந்து காட்டிப் போகப் பிரையாசைப்பட்டே 2 மாதங்கள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிடுகிறோம்.ட்வீட் அப் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை கூட, டேமேஜர் கூப்பிட்டார், ஹோம் மினிஸ்டர் திட்டும்னு கூவறவங்க எல்லாம் அன்றைய தினம் தாத்தா பாட்டிகளைப் போட்டுத்தள்ளவோ, சுளுக்கு, பேதிகளால் பீடிக்கப்படவோ ஆயத்தமாவீர்களாக.

12 வருசம் முந்தி எடுத்த படங்களை டிபியில் வைத்துக் கொண்டு ஸ்டடி லீவில் இருப்பதாக ஸ்டேடஸ் போடும் பெர்சுகள், பாப்பா போட்டோ பூ போட்டோ போட்டிருக்கும் பாட்டிகள் என பலரையும் கண்டு களிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு!


சி.பி - மாறுவேடத்தில்  வரும் பெண்கள் மட்டுறுத்தப்படுவார்கள்

பதிவினைத் தந்தி போல் பாவித்து, கிளம்பத்தயாராகவும்! சனிக்கிழமை இரவே அவரவர் ஊர் காய்கறி மார்க்கெட்டிலிருந்து புறப்படும் உருளைக்கிழங்கு லோடு லாரிகளில் முன்பதிவு செய்து கொள்வீர்.

குடிவெறியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: சந்திப்பின் போது மட்டும் சாராயம் தவிர்ப்பீராக! போதையில் வரும் நபர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

( ஏன்னா எப்பவும் மப்புலயே இருக்கறவங்க அன்னைக்கு ஒரு நாளாவது தெளிவா இருக்கனும்கறதுதான் இந்த சந்திப்போட முக்கிய நோக்கமே.. )

சென்னை மெகா ட்விட் அப்பில் கலந்துகொள்ள உள்ளோர் தத்தமது டுவிட்டர் ஹேண்டில் உள்ளிட்ட விபரங்களுடன் chennaitweetup@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலிட்டு வருகையை உறுதி செய்யவும்.


( சி.பி - மெடிக்கல் ஷாப் மேனகா போனற வெவ்வேறு பெயர்களில் உலா வரும் ஒளிக்கதிர்கள் ஏதாவது ஒரு ஹேண்டில் மட்டும் குறிப்பிட்டால் போதும்.. )

எண்ணிக்கையை உத்தேசித்து, விரைவில் சென்னையில் நிகழ்வு நடைபெறும் அரங்கம் குறித்த விபரங்கள் வெளியாகும்.


சி.பி - க்ராசிங்க்20,000 ட்வீட்ஸ் முதல் தமிழ்ப்பெண் கொங்கு மண்டல தீக்கங்கு, ஆணாதிக்க வாதிகளுக்கு சங்கு, கோவை டேமேஜர் வாழ்த்துகள் (19780 ,கேள்விகள்,213 பதில்கள்,45 ஓய், 41கவிதைகள் ) இவர் விழா மேடையில் தோன்றி கேள்வி கேட்டே கொலையாய் கொல்லுவது எப்படி? என்ற தலைப்பில் உரை ஆற்றுவார்

மேலும் தகவல்களுக்கு டைம்லைனில் பதிலளிக்கக் காத்திருக்கிறோம்!5 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

முட்டாப்பையன் said...

இன்றைய வெடி.
http://www.etakkumatakku.com/2012/02/blog-post_28.html

சேகர் said...

நான் ட்விட்டர்கு புதுசு நானும் வரலாமா...

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.

Unknown said...

தங்குமிடம் இலவசம்? வாசமில்லா பூங்கா என்பதை முதலிலேயெ அறிவித்துவிட்டதால் வெளியூர் நண்பர்கள் வருத்தம்!