Sunday, February 12, 2012

தி மு க வின் ஆட்சியை ஜெ ஆட்சி முந்துகிறது .. எப்படி? ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2wyDlOluPDHAocqVf6F1_ktZb8I2BISbmAvxI-OT-K1CDQPkFN8-1HOp72gUlX2-ucxJCiw7w7dhRNZN_V0LHggTFB0bZ-3RPhyphenhyphen2ApKRrjBKs7ThlZbKWVfysYdiS1JRxlgc3coyIwSc/s640/1+(13).JPG

1. சட்டசபை என்ன சினிமா எடுக்கும் இடமா ?- ராமதாஸ்#  இல்லை, சினிமாக்காரங்க உள்ளே போய் பொறுப்பான பதவியில் இருந்துகொண்டே பொறுப்பில்லாம நடப்பது

----------------------------------

2. நெட்ல நியூஸ் பார்ப்பது = மாடர்ன் கேர்ள்சை சைட் அடிப்பது மாதிரி ஜாலிதான் ஆனாலும் சுவ்ராஸ்யம் கம்மி , டீக்கடைல பேப்பர் படிப்பது = தாவணியில் பவனி வரும் மாமன் மகளை கலாய்ப்பது மாதிரி, பாரம்பரியம் மிக்கது செம கிக் ஹி ஹி

-------------------------------------------------

3.எனக்கு குழந்தை மனசுன்னு   ஒவ்வொருத்தர்ட்டயும் தனித்தனியா சொல்லிட்டு இருக்க நேரம் இல்லை, அதனால ட்விட்டர் டி பில என் மழலை பருவ பிம்பம், ஹி ஹி

--------------------------------------

4. வாக்காளர்களை கொச்சைப்படுத்தி பேசவில்லை-கருணாநிதி# ஆமா, எங்க தலைவர் மானம் உள்ளவர், வாக்கு அளிக்காதவங்களைத்தான் திட்டுவார்

-----------------------------

5. ஒளிமயமான எதிர்காலத்தை காங்கிரஸ் மட்டுமே தரும்: ராகுல் காந்தி! #  கிலி மயமான நிகழ்காலம் உணர்த்தியதே போதும் அண்ணே

--------------------------------

6. ஒளிமயமான எதிர்காலத்தை காங்கிரஸ் மட்டுமே தரும்-ராகுல்.,# இதை நம்ப நாங்க டியூப்லைட்ஸ் இல்லை

---------------------------------

7. வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞன்தான்-ஸ்டாலின் # ஜாக்கிரதை ஜாக்கிரதை தாய்க்குலமே ஜாக்கிரதை

------------------------------

8. ட்விட்டரில் நிறைய செந்தில்கள்.அந்தளவுக்கு கவுண்டமணிகள் இல்லாமல் போனது குறைதான்


நாங்க உதை வாங்கறதுல சவுமிகளுக்குத்தான் எவ்ளவ் சந்தோஷம்?

---------------------------------

9. சொரணை கெட்டவன்தான் அதிமுக கூட்டணியில் இருப்பான் - விஜயகாந்த் # மானம் கெட்டவன் தான் அரசியலில் இறங்குவான் - பொது ஜனம்

----------------------------------

10. சங்கரி & சவுமி - என்னை ஏன் அக்கான்னு கூப்பிடறீங்க?

  யாராவது என்னை கோபத்துல அடங்கொக்காமக்கா?ன்னு கேட்டா “ஆமா, மக்கு”னு சொல்ல ஹி ஹி

----------------------------------

http://thebollywoodactress.com/wp-content/uploads/2010/08/Nayantara1.jpg

11.மிஸ், வீட்டை விட்டு வெளீல போகாம இருக்கீங்களே, ஏன்?

இன்னைக்கு உலக முத்த தினமாம்,ஊர்ல இருக்கற பசங்க எல்லாம் மொத்தமா ரோட்ல, எதுக்கு வம்பு?

------------------------------------

12. தலைவருக்கு முன்னால நாக்கை மடிச்சு பேசுனாராமே?

ஆமா, நல்ல வேளை, அவரை கூட்டிட்டு போய் அயர்ன் பண்னாம விட்டாங்களே?

-------------------------------

13. நீங்க டெயிலி ஒரே கலர்ல தான் சட்டை போடறீங்க, ஏன்?

எந்த பொண்ணும் என்னை சட்டை பண்றதில்லை,டெயிலி சட்டை மாற்றி மட்டும் என்ன யூஸ்?

-----------------------------

14. ஆசீர்வாதம் பண்ணுங்க குருவே!

மகராசியா இருக்கனும்.. 

என் ஜாதகம் பார்க்காமயே பலன் சொல்லுங்க பார்க்கலாம்.

மகர ராசியா இருக்கனும்?

-----------------------------------

15.தி மு க வின் ஆட்சியை ஜெ ஆட்சி முந்துகிறது # கரண்ட் கட் அய்யா ஆட்சில தினசரி 4 மணி நேரம், அம்மா ஆட்சில 7 மணி நேரம், சபாஷ்!!

----------------------------------
16. ஒவ்வொரு வேளை பசி எடுக்கும்போதும் உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களில் எல்லோருக்கும் அவரவர் அம்மா நினைவு வந்து விடுகிறது

-----------------------------------

17. கோவிச்சுட்டுப்போன சம்சாரத்து கிட்டே ஒரு புருஷன் - அன்பே! இரவு வணக்கத்தை உங்கப்பாட்ட சொல்லிட்டு கிளம்பு,   நமக்காக காத்திருக்கிறது இரவு

-------------------------------

18. டயட்ல இருக்கனும், கம்மியா சாப்பிடுங்க -மனைவி! இவ்ளவ் கம்மியாவா சாப்பிடுவாங்க?நல்லா சாப்பிடறா!கல்லையும் ஜீரணீக்கும் வயசு-அம்மா # பாசம்

--------------------------------

19.  போலீஸ் - உடம்புல இவ்ளவ் அடி பட்டிருக்கே, யார் அடிச்சது? 

நல்ல நேரம் சதீஷ் - ஸாரி சார், தாலி கட்ன சம்சாரத்தை காட்டிக்குடுக்க மாட்டேன்

-----------------------------------

20. டெயிலி உங்களுக்கு சமைச்சுப்போட நான் என்ன சமையல் காரியா? 

டெயிலி உன்னை ஆஃபீஸ்ல டிராப் பண்றேனே? நான் என்ன டிரைவரா? # வாக்கு வாதங்கள்,பேக்கு

----------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtoFfuSFHl_ayDxTRHeLazSMNqjzc6rtP6dT1jtU3Jh2pLxRcrs_n_PyFTJ1H0B3gJGHiYsrrXz1YsXnHAbELD6KTrMZEHvX7bPNUG0mkPKjkznB_hZypeCPawva9Fid2NZ-GN1p-Jx58/+Latest+Photos+%25281%2529.jpg

8 comments:

மன்மதகுஞ்சு said...

சோக்குகள் எல்லாம் சூப்பர் .. ஆனா சம்மந்தமில்லாம ஏன் நயன் அன்ரியோட பீலிங் ...உங்களுக்கு பிஞ்சு மனசுங்கிரதை நாமளும் ஒத்துகிறோம்

ராஜி said...

எல்லா ஜோக்ஸும் சூப்பர். நீங்க குழந்தையா இருந்தப்போ எடுத்த போட்டோவை டிபியா போட்டால் உங்களுக்கு குழந்தை மனசுன்னு நாங்க நம்பிடுவோமாக்கும்.

கோவக்காரகுமாரு said...

நல்லா இருக்கு...அட!நல்லாதான் இருக்கு...9தாராவுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு சொன்னிங்கனா இன்னும் நல்லா இருக்கும்.

மூ.ராஜா said...

சிபி குடுத்து வைத்தவர் போல '7 மணி'நேரம்தான் கரண்ட் கட்...! ஆனால் இங்கே கரண்டா...! அப்படீன்னா...!

காங்கேயம் P.நந்தகுமார் said...

அநியாயத்துக்கு பொய் சொல்லாதீங்க டெய்லி 9மணி நேரம் மின்வெட்டு.

Anonymous said...

அல்லக்கை நிரூபன்னின் பொன்னான வரிகள்.....உங்களை பற்றியா...???

///கில்மாப் படத்திற்கு விமர்சனம் எழுதும் ஒரு ஆண் பதிவரை விட,
தமிழ்ப் பதிவுலகில் பெண்கள் நன்றாக எழுதுறாங்க தானே சார்?
அப்புறம் எதுக்கு தமிழ்ச் சினிமா உலகை இதற்குள் கொண்டு வந்து நுழைக்கிறீங்க?////

சாவி said...

Nice Jokes, even nice was nayanthaara.

சாவியின் தமிழ் சினிமா உலகம்

ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்

ADAM said...

SUPER