Thursday, February 02, 2012

கேப்டன் ஆவேச பேச்சு யூடியூப் வீடியோ.,சன் நியூஸ் பேட்டி -. காமெடி கலாட்டா1. அசந்து போகுமளவு அறிவிப்புகள் வெளியிடுவேன் - ஜெ # அசந்தா அடிக்கறது உங்க பாலிசி, அசராம (சரக்கு) அடிக்கறது எங்க பாலிஸி - கேப்டன்


-------------------------------------

2. மேடம்,எதுக்காக எங்க கேப்டனை வெளீல அனுபுனீங்க?

சட்டசபைல மப்புல எங்க கட்சி ஆளுங்களை ”ஓட்டிட்டு” இருந்தார், டிரங்க்கன் டிரைவிங்க்னு ரிஜக்டட்

-------------------------------------

3. சட்ட சபைல கை நீட்டி பேசுனது தப்பு இல்லையா?

கேப்டன் - கை நீட்டி லஞ்சம் வாங்கறதுதான் தப்பு

-------------------------------------

4. உங்களுடன் கூட்டணி வைத்தற்காக நான் வெட்கப்படுகிறேன் -ஜெ # ஓக்கே மேடம், அதை ஏன் இவ்ளவ் கோபமா சொல்றீங்க? சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க- கேப்டன்

---------------------------------

5. ஜெ - என்னை எதிர்க்க திராணி இருக்கா?

கேப்டன் - லூசாம்மா நீங்க? அது இருந்தா தனியா நின்னிருக்க மாட்டேனா?

----------------------------------

6. டியர்,உன்னுடன் காதல் கூட்டணி வெச்சதுக்காக நான் வெட்கப்படறேன்...

ஏன்? ம்க்கும், ஒரு கிஸ் கூட தர்லை.. வேஸ்ட்

--------------------------------

7. காதலி - உங்க கிட்டே திராணி இருக்கா?

காதலன் - இல்ல, வாரா வாரம் வாங்கற ராணி தான் இருக்கு

-------------------------------

8. ஜெ-எனக்கு முன்னால இது வரை கை நீட்டி யாரும் பேசுனதே இல்ல. 

கேப்டன் -அதுக்கு பதிலாத்தான் நாக்கை  மடக்கி உள்ளே வெச்சுக்கிட்டேனே மேடம்?

-------------------------------------

9.ஜெ- கேப்டன் கிட்டே வேற ஏதாவது கல்யாண மண்டபம் இருக்கா? இடிக்கனும்.. 

ஓ பி எஸ் - பிரேமலதா தான் இருக்காங்க, நைஸா இடிச்சுட்டு வரவா?

----------------------------

10. ஜெ-என் கட்சிக்காரங்களை திருப்திப்படுத்தத்தான் நான் உங்களோட கூட்டணி வெச்சேன்  

கேப்டன் - கலைஞரை கடுப்பேத்தனும்கறதுக்காகத்தான் நான் அப்டி. கூட்டணி வெச்சேன்

--------------------------------

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijaykanth-manmohansingh-mullaiperiyar-dam.jpg

11. ஒரு CM முன்னால நாக்கை கடிச்சுக்கிட்டே பேசுனது முறையா?

கேப்டன் -வழக்கமா நான் ஊறுகாய்  கடிச்சுக்கிட்டுதான் பேசுவேன், ஆனா சட்டசபை என்பதால்.

----------------------------------

12. நிருபர் -சட்டசபைல கலக்கிட்டீங்க..

கேப்டன் - ச்சே, ச்சே வீட்லயே கலக்கி அடிச்சுட்டுதான் சட்டசபை போனேன்

---------------------------------

13. ஜெ- கேப்டன் பேசுன அருவெறுப்பான பேச்சுக்களை நான் பார்த்துட்டு தான் இருந்தேன் 

கேப்டன் - தீயனவற்றை பாராதே,கேளாதேன்னு பெரியவங்க சொன்னாங்களே?

----------------------------------

14. ஜெ- இனி கேப்டனுக்கு இறங்கு முகம் தான்


கேப்டன் - நல்ல வேளை குரங்கு முகம்னு சொல்லலை ஹி ஹி

----------------------------------

15. ஜெ- சங்கரன் கோயில்ல தனியா நிக்கறேன், உங்களால முடியுமா? 

கேப்டன் - அதெப்பிடி? நானும்வந்து அங்கே நின்னா ஜோடி ஆகிடுவோமே?தனியா நிக்கறது எப்டி?

----------------------------

http://3konam.files.wordpress.com/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands1.jpg?w=683&h=504

16. கேப்டன், எதுக்காக தல அஜித்தை பார்க்க வந்திருக்கீங்க?

நான் நடந்து கொண்ட விதம் சரி இல்லைன்னு ஜெ சொன்னாங்க , தல கிட்டே டிரெயினிங்க் எடுக்க

------------------------------

17. ஜெ -புள்ளி விவரம் சரியாய் தெரிஞ்சிட்டு தான் பேசணும்.

கேப்டன்: தமிழ் நாட்டில் மொத்தம் 2 கரும்புள்ளிகள் 1. கலைஞர் 2 ஜெ

---------------------------

18.ஜெ - கேப்டனைக்கூட மறுக்கா கவனிச்சுக்கலாம், என்னை சர்வாதிகாரின்னு சொன்ன ஸ்டாலினை முதல்ல உள்ளே தள்ளனும்

கமிஷனர் - மிட் நைட் 12 மணி OK?

---------------------------------

11 comments:

கும்மாச்சி said...

சி.பி. ரொம்பதான் கேப்டனை கலாய்க்கிறீங்க, அவர் தைர்யம் இப்பொழுது யாருக்குமில்லை.

கும்மாச்சி said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

sutha said...

pictures are funny and very relevant

ராஜி said...

படிக்கும்போதே போதை ஏறுற மாதிரி இருக்கு

R. Jagannathan said...

Simply Superb! You rock! - R. J.

Menaga Sathia said...

எல்லாமே சூப்பர்!!

Yoga.S. said...

என்னத்தக் கத்தி?என்னத்தக் குரைச்சு?இன்னம் நாலர வருஷம் ஒட்டித் தானாவணும்!!!!

Unknown said...

No.9 excellent...

காங்கேயம் P.நந்தகுமார் said...

மப்புல பட ஞாபகத்துல கை நீட்டி பேசிய குஜயகாந்த் இன்று பணிநீக்கம். இனி சட்டசபைக்கு போறதுன்னால தொடை நடுங்கும். ஆமா ஓபிஎஸ் பிரமேலதாவை இடிக்கிறது செம டாப்பு.

முத்தரசு said...

செம லொள்ளு

Jagath said...

Is it Democracy?

Jayalalitha should not forget that Because of OUR PUBLIC VOTES she got this CM post... she should not behave like a Queen of a Country...