Tuesday, February 21, 2012

சிவ ராத்திரி,நவ ராத்திரி,ரதி ராத்திரி,பார்வதி ராத்திரி -ஜோக்ஸ்

http://www.telugupedia.com/wiki/images/2/29/Nayanatara.jpg

1.நண்பரின் நண்பர், சிநேகிதியின் சிநேகிதி என்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அவர்களிடம் நாம் அனுசரித்துப்போகவேண்டி இருக்கிறது


---------------------------------------

2. கல்யாணம்  ஆகாத பெண் தன் மோகத்தை வெளில் கொட்டிடக்கூடாது, கல்யாணம்  ஆன ஆண் தன் கோபத்தை வீட்ல காட்டிடக்கூடாது # வீட்ல செம மாத்து எனக்கு 

---------------------------------

3. நான் கல்யாணம் செய்து வைத்த நடராஜன் கைதானது வருத்தம் -கலைஞர்.# நான் பிரித்து வைத்த சிம்பு-நயன் ஜோடி மீண்டும் சேருதே-பி தேவா வருத்தம்


--------------------------------

4. வாடகை வீட்டை காலி செய்து போகும்போது உடன் அழைத்துச்செல்ல முடிவதில்லை தோட்டத்து செடிகளை

--------------------------------

5. உச்சி வெயில் போல கோபத்தில் நீ என் மீது தகிக்கையில் ஆல மர நிழல் போல உன் மடியில் நான் சரணம் அடைகிறேன்

------------------------------------

6. நம் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து விடுகிறது, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்வதில்

---------------------------

7. வீட்டை காலி பண்ணிட்டு போறப்ப பக்கத்து வீட்டு ஃபிகரை ஏன் அம்போன்னு விட்டுட்டு போறே?

 காலி பண்ணச்சொன்னதே அவங்கப்பா தான்

----------------------------------

8. டாக்டர், என் புருஷன் 4 நாளா லொக் லொக்னு இருமிட்டே இருக்கார்..

 உங்க புருஷன் மட்டும் இல்ல, தம் அடிக்கற எல்லா புருஷன்களும் அப்படித்தான்

-------------------------------

9. டியர், இன்னைக்கு சிவராத்திரி.. என்ன பண்ணலாம்?

 வழக்கமா அவசர அவசரமா நாம போடற சண்டையை நிதானமா விடிய விடிய போடலாம்

-----------------------------

10. பெண்ணியவாதிகள் யாராவது கிளம்புவாங்க பாருங்க.. அது ஏன் பார்வதி ராத்திரின்னு வைக்காம சிவன் ராத்திரின்னு வெச்சாங்க?ன்னு கேட்டு

--------------------------


http://www.nayanthara.net/uploaded_files/photo_gallery/Nayanatara-2.JPG

11. ஏம்மா டோரா.. காலேஜ்ல கல்ச்சுரல் புரோகிராம்னே,இங்கே யார் கூடவோ கடலை போட்டுட்டு இருக்கே? 

டாடி, இது அக்ரிகல்ச்சுரல் புரோகிராம் ஹி ஹி

-----------------------------

12. உடன் பிறப்பே! பொறுத்திரு.. சங்க இலக்கியத்தில் தோசைக்கதை ஏதும் சொல்லப்பட்டிருக்கறதா? என தேடிக்கொண்டு உள்ளேன்,இட்லிக்கு மாற்று,உலகை ஏமாற்று

-----------------------------------

13. டியர், நீ என்னை மறந்துடுவியா?

 ச்சே! ச்சே! நீங்க தான் என்னோட 25 வது வெள்ளி விழா லவ்வர், எப்படி மறக்க? # 9 தாரா எஃபக்ட்

--------------------------------------

14. இவ்ளவ் மோசமா எக்ஸாம் எழுதி இருக்கியே, ஃபெயில் ஆகிட்டா என்ன செய்வே? 

நோ பிராப்ளம் டீச்சர், எக்சாமில் சொதப்புவது எப்படி?னு படம் எடுப்பேன்

--------------------------------------

15. மேடம், நீங்க யாரை லவ் பண்றதா இருந்தாலும் அவங்க இனிஷியலை பச்சை குத்திக்கறீங்களே, ஏன்? 

பேர் குத்துனா அப்புறம் அழிக்க சிரமம்,

-------------------------------------

16. மேடைல 70 கன்னிப்பெண்கள் இருக்காங்களே, எதுக்கு? 

தலைவரோட 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரே எல்லாரையும் மேரேஜ் பண்ணிக்கப்போறாராம்

--------------------------------

17. நான் போடற மொக்கை ட்வீட்ஸை RT  செஞ்சா நானும் பதில் மொய் வைப்பேன். டீலா? நோ டீலா? பை குறுக்கு வழி குஷ்பூ சுந்தர்

--------------------------------

18. பிரபல ட்வீட்டர்  நவீன்- மிஸ்!உங்க ட்வீட்ஸ் எல்லாம் பிரமாதம் !

லேடி ட்வீட்டர் வீல் பொண்ணு - தம்பி! நான் இன்னும் ட்வீட்ஸே போட ஆரம்பிக்கலை

--------------------------------

19. சங்கரன்கோவிலில் திமுக வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-அழகிரி# அண்ணன் டெபாசிட் வாங்கறதையே வெற்றின்னு நினைக்கறார் போல 

-------------------------------

20.உன் புருஷன் சாப்பாட்டு ராமனாமே?


 நல்லா சாப்பிடுவாரு, ஆனா ராமரா? கிருஷ்ணரா?ன்னு இனிமேத்தான் கண்டு பிடிக்கனும்


-------------------------------------

http://happyhyderabad.files.wordpress.com/2009/05/nayanatara-in-orange-saree.jpg

9 comments:

நவின் குமார் said...

பசங்க ,பொண்ணுங்கன்னு பார்க்காம எல்லாருக்கும் பரபட்சம் இல்லாம.பதில்.சொல்ற ஒரே பிரபலட்விட்டர் நான் தான் என்னோட பேர என் அனுமதியில்லாம யூஸ் பண்ணி மானத்த வாங்கிட்டீர்..இரும் காலம் பதில் சொல்லும் இதுக்கு.,

சாகசன் said...

தல !!! நயந்தாரா போட்டோ நல்லா இல்ல !!! அடுத்த வாட்டி வேற நடிகைய டிரை பண்ணுங்க !!!

மகேந்திரன் said...

நகைச்சுவைத் துணுக்கும் அத்தனையும் அருமை.
அதிலும் 9 வது துணுக்கை ரசித்தேன்..

Yaathoramani.blogspot.com said...

ஜோக்குகளும் படங்களும்
ஒன்றை ஒன்று மிஞ்ச போட்டிபோடுகின்றன
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

முத்தரசு said...

எல்லாமே சூப்பர் - ஒரே நயனா இருக்கே??

ஸ்ரீராம். said...

நாலு....உண்மை வேதனை.
ஆறு.....பலே...

Yoga.S. said...

ஜோக்ஸ் சுமாரா,பரவாயில்லை போல இருக்கு!ஸ்டில்ஸ் தேறவே,தேறாது!!!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லாம் நல்லாயிருக்கு...

இதோ தோசைக் கதை!