Wednesday, February 22, 2012

காதல் ரசம் சொட்டும், காதல் சாம்பார் கொட்டும் வசனங்கள் இன் காதலில் சொதப்புவது எப்படி?

1.  நான் உன்னை சின்ன வயசுல பார்த்தேன், நீ அப்போ ஷப்பினெஸா இருந்தே.

இப்போ?

 ஹி ஹி . ஷப்பினெஸ் தான் அழகு... 


-------------------------------------

2. பாசத்துல,அன்புல பெண்கள் மாதிரி தீவிரம் காட்றது யாருமே இல்லை.. 

---------------------------------

3.  ஃபுல் வீடும் எங்கம்மா கண்ட்ரோல்ல தான்.. எங்கப்பா உட்பட.. 

----------------------

4.  என் லைஃப்ல சேலஞ்சிங்க்கா எதுவுமே இல்லை. அதனால தான் ஃபிகர் மேட்டர்லயாவது சேலஞ்சிங்கா ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தேன்..

------------------------------

5. மாப்ளே, உனக்கும், உன் ஆளுக்கும் ஃபைட்னு கேள்விப்பட்டேனே..?

ஆமா, அதுக்கென்ன இப்போ?

அவ நெம்பர் வேணும் ஹி ஹி 


-----------------------------------

6.  திரும்ப திரும்ப மனசை ஹர்ட் பண்ணி அப்புறம் சாரி கேட்கறே.. சும்மா சாரி கேட்டா மட்டும் மனசை புண் படுத்துனது சரி ஆகிடுமா?

--------------------------------------

7.  ஏன் என்னை விட்டு விலகறே?

நீ என்னை சந்தோஷமா வெச்சுக்குவேங்கற நம்பிகை எனக்கு போயிடுச்சு.. சாரி.

---------------------------------------------

8.  பொண்ணுங்க பெயிண்ட்டிங்க் மாதிரி.. மோனலிஸா ஓவியத்தை  ரூம்ல எங்கே நின்னு பார்த்தாலும் நம்மளையே பார்க்கற மாதிரி தெரியும். அது மாதிரிதான் பொண்ணுங்க யாரை பார்த்தாலும் நம்மளை பார்க்கறதா நாமளே நினைச்சுக்கறோம்.. 

--------------------------------------------------

9.  ஏன் பொண்ணுங்களை பற்றி நெகடிவ்வாவே பேசறே.?

 பாசிட்டிவ்வா பேசற அளவு எதுவுமே அவங்க சொல்லலை, நடந்துக்கலை.. 

-------------------------------

10.  இப்போவெல்லாம் பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை பிடிக்கவே மாட்டேங்குது..அவங்க மனசை கவர்றவனுங்க எல்லாம் பொறுக்கிங்க, ரவுடிங்க, திருடனுங்க,மொள்ளமாரிங்க தான்

--------------------------------


http://www.tamilyouthcafe.com/wp-content/uploads/2012/02/Amala-Paul-hot-Bezawada-movie.jpg

11.  காதல்ல முதல் முயற்சி பெரும்பாலான ஆட்களுக்கு சொதப்பல்லதான் முடியுது.. 

-----------------------------------


12. ‘இந்தக்காலத்தில எவன் உண்மையா லவ் பண்ணுறான். அப்பிடி எவனாச்சும் பண்ணினா அவன் பைத்தியமா தான் இருக்கணும்’

--------------------------------------

 13.  ஏதோ கேக்கனும்னு சொல்லிட்டு இருந்தே.. என் நெம்பர் சொன்ன பிறகு அந்த மேட்டரை மறந்துட்டியா?

 ஹி ஹி நான் பிட்டை போட்டதே உன் கிட்டே நெம்பர் வாங்கத்தான் ஹி ஹி

 அடப்பாவி

---------------------------------------------

14.  டாடி.. - டேய்.. உன் ஃபேஸ் புக் குக்கு ரெக்குவஸ்ட் அனுப்பி இருக்கேன், அக்செப்ட் பண்ணு.. 

 அய்யோ டாடி.. அங்கே யார் உங்களை போகச்சொன்னது?


-------------------------------------------------

15.  இந்த வீட்ல யார் ஆம்பளை? நீயா? நானா? 

பொண்டாட்டியை யார் சந்தோஷமா வெச்சிருக்காங்களோ அவன் தான் ஆம்பள.. 

-----------------------------------------------------

16. சாரி.. டியர்.. ஐ லவ் யூ சோ மச். 

 இதை சொல்றதுக்கு இவ்வளவு லேட்டாடா?

----------------------------

17. இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே? 

 ஹி ஹி சிறுத்தை மான் வேட்டைக்கு போறதுக்கு முன்னால பதுங்குமே அது மாதிரி லவ்வை சொல்றதுக்கு முன்னே பம்பிட்டு இருக்கேன் ஹி ஹி 

----------------------------------

18.  அவ எங்கெடா போறா.?

 நம்ம காலேஜ் லைபரரிக்கு.. அதான் ஃபாலோ பண்ணிட்டு போறேன்.. 

 அட!!! நம்ம காலேஜ்ல லைப்ரரி எல்லாம் இருக்கா?

-----------------------------

19.  நான் ஆல்ரெடி எல்லா புக்ஸும் எடுத்து படிச்சுட்டேன் மேடம்.. இந்தாங்க நீங்க படிங்க, எடுத்துட்டு போங்க.. உங்க லைப்ரரி கார்டு கொண்டு வர்லைன்னா என்ன? என்னுதுல இருந்து எடுத்துட்டு போங்க.. 

 இதுல ஒரு சைன் பண்ணுங்க.. 

 எதுக்கு?

 லைப்ரரில முதல் முதலா புக் எடுக்கறப்ப சைன் பண்னனும்.. 

--------------------------------------

20.  அவ என்னை அண்ணான்னு கூப்பிட்டாடா..

அடப்பாவி. தங்கச்சியையா லவ் பண்றே? ராஸ்கல்..

--------------------------------21.  பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்ற அளவு பசங்களால காட்டமுடியாது.. 

-----------------------

22.  அம்மா, அப்பாவையும் இந்த ஃபங்க்‌ஷனுக்கு கூப்பிடலாம்மா..

எதுக்கு?

ஃபேமிலி ஃபங்கஷனுக்கு ஃபேமிலி மெம்பரை கூப்பிடறது தப்பில்லையே? அவரும் நம்ம ஃபேமில ஒருத்தர் தானே?

-----------------------------------------


23. என்னண்ணே. கிளம்பறீங்களா? உன் ஆள் வந்ததாலா?

ச்சே ச்சே. கிளம்பல,.. சேர்ல நல்லா உக்காந்தேன் ஹி ஹி 

-----------------------------

24. நீ மட்டும் எபப்டி கரெக்ட் பண்ணுனே அவளை?

 லவ்ங்கறது மின்னல் மாதிரிடா மாப்ளை. டகார்னு மின்னும்போதே அதை பார்த்துடனும். 

----------------------------------

.25.  கேர்ள் - எனக்கு 5 பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. 

 என்னமோ நாய்க்குட்டி வெச்சிருக்கற மாதிரி சொல்றீங்க? 

-----------------------------------

26.  அவன் ஏன் சிரிக்கறான்? நம்மளை பார்த்தா?

 ச்சே ச்சே அவன் காமெடி டிராமா ஒண்ணு இங்கிலீஷ்ல பார்த்தான், அதுல வந்த ஜோக்ஸ் இப்போதான் புரிஞ்சுதாம் ஹி ஹி 

--------------------------------------

27.  வெரிகுட். எப்பவும் இதே மாதிரி ஃபிரண்ட்ஸாவே இருக்கனும்

 ஓக்கே அங்கிள்

 பை த வே , நானும், ஆண்ட்டியும் கூட காலேஜ் படிக்கறப்ப ஃபிரண்ட்ஸா தான் முதல்ல இருந்தோம் ஹி ஹி 

----------------------------------------

28.  அவ போனா போறா விடறா மச்சான், அடுத்த ஃபிகரை கரெக்ட் பண்ணு.. 

 டேய்.. முதல் காதல்ல எப்படி சொதப்புனேன்னே தெரியல. கண்டு பிடிக்க முடியல.. அதுக்குள்ள அடுத்த காதலா?

--------------------------------------------

29/.  YOU CANT CONTINUE YOUR LIFE WITH OUT ME... 

 YOU HAVE NO LIFE

-------------------------------------

30.  இவ லைஃப்ல எனக்குத்தெரியாம இன்னும் எத்தனை பசங்க இருக்காங்களோ?

-----------------------------


http://2.bp.blogspot.com/-U0QmM7dvTCY/TykoBPjyM0I/AAAAAAAAg6w/VnjJInXHYtU/s1600/gnanamuthu+com.png

31.  உங்க பாட்டி ஃபேஸ்புக்ல இருக்காங்களா? அதுவும் தமனா ஃபோட்டோவை டி பி யா வெச்சுட்டு.? என்னால நம்பவே முடியல/... 

 என்னது? தமனவா? போன வாரம் த்ரிஷா ஃபோட்டோவை வெச்சிருந்தாங்க? 

---------------------------------

32.  வயசான பாட்டிக்கு எதுக்கு தமனா ஃபோட்டோ டி பி?

 இந்தக்காலத்து பொண்ணுங்க மட்டும் யோக்கியமா? மொக்கை ஃபிகருங்க எல்லாம் அழகழகான நடிகைங்க ஃபோட்டோவை டி பில வெச்சு ஏமாத்துதுங்க


-------------------------------

. 33.  பொண்ணுங்க எதையும் மனசுல வெச்சுக்க மாட்டாங்க, பசங்க யோசிச்சு கேட்கலாமா? வேணாமா?ன்னு நினைச்சுட்டு இருக்கறப்பவே பொண்ணுங்க கேட்டு முடிச்சுடுவாங்க.


----------------------------------------------

34.  அம்மா, விஷயம் சின்ன பிரச்சனையா இருக்கறப்பவே அவர் கிட்டே நீ பேசித்தீர்த்திருக்கலாம்.. 

 ஆனா அவர் பேசவே மாட்டாரே?

--------------------------------------

35.  டியர்.. என் கிட்டே எதையும் இனிமே மறைக்க மாட்டேன், ஓப்பனா உண்மையை சொல்லிடுவேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணுங்க/..

ஓக்கே பிராமிஸ்..

 நான் போட்டிருக்கற இந்த புது டிரஸ் எப்படி இருக்கு?

 கேவலமா.. 

 பளார்.. 

--------------------------------

36.  நாங்க மனசுல என்ன நினைக்கறோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?


 அது தெரியாம தாண்டி பசங்க எல்லாம் அலைஞ்சுட்டு இருக்கோம்.. ?

------------------------------------

37.  உங்களுக்குள்ளே எப்படி பிரிவு வந்தது>?

 சிம்ப்பிள், நான் பையன் மாதிரி நடந்துக்கிட்டேன், அவ பொண்ணு மாதிரி நடந்துக்கிட்டா.. 

------------------------------------

38.  இவ எல்லார் கிட்டேயும் ஈசியா, ஃபிரண்ட்லியா பழகுவா மச்சி. வேணூம்னா இவளோட முன்னாள் ஆள் இவன் கிட்டே கேட்டுப்பாரேன் ஹி ஹி 

---------------------------------

39.  நீ அவலை பார்க்க ட்ரை பண்னலையா? 

ச்சே ச்சே அவ எனக்கு அக்கா மாதிரி.. 

 அப்போ  அவ அழகா இல்லையா? ஹி ஹி 

---------------------------

40. அவளைப்[பற்றி பேசுனாலே இவனுக்கு கோபம் வருதே ஏன்?

மோசம் பண்ணிட்டேன்.. பிரேக் அப்.... 

-------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirkvv4cVqCb8EF-CvNRWI7XpIuc-KrP9PtCeRC9-OjTxMuDP1B6uqCvItSwFvtzY2LnMUgRd08Xb2naiCDsY-sKjQ5Q_mElUheZ1IQVbHNhdlqGZMKNfhrIimBIPzapAlghyphenhyphen2vjl0kIYw/s1600/imagesccvcv.jpg

41.  பீச் எல்லாம் எப்படி இருந்தது?

 ம். பீச் மதிரி.. நானே கடுப்புல இருக்கேன் ., 

----------------------------------

42.  நாம தேடிப்பிடிச்சு லவ் பண்றதே பெருசு.. மறுபடியும் ரிஜக்ட் பண்னா எப்படி?


-----------------------------------

43. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது


---------------------------------------

44. மறக்கனும்னு முடிவு செஞ்சாத்தானே உன்னை மறக்க , நான் அப்படி மறக்கனும்னு நினைக்கவே இல்லையே?

----------------------------------------

45. லவ் பண்றது ஏன் இவ்ளவ் கஷ்டமா இருக்கு?

தெரில, காதல்ல சொதப்பறதுதான் ட்ரெயினிங்க் போல. :(

---------------------------

46. ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்

------------------------------------------

47. ஆம்பளைங்களால அரை மணி நேரம் எதைப்பற்றியும் யோசிக்காம சும்மா இருக்க முடியும், ஆனா பொண்ணுங்களால எதைப்பற்றியும் யோசிக்காம  ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது 


----------------------------------------

10 comments:

முத்தரசு said...

மாலை வணக்கம்

முத்தரசு said...

என்ன ஒரே பால் வாடை வீசுது

ராஜி said...

ஆம்பளைங்களால அரை மணி நேரம் எதைப்பற்றியும் யோசிக்காம சும்மா இருக்க முடியும், ஆனா பொண்ணுங்களால எதைப்பற்றியும் யோசிக்காம ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது
>>
பின்ன உங்களை போல சினிமா பார்த்தே சம்பளத்தை காலி பண்ணும் ஆசாமியை கட்டிக்கிட்டா எதிர்காலத்தை நினைச்சு யோசிக்காம என்ன பண்றதாம்?

சி.பி.செந்தில்குமார் said...

@மனசாட்சி

வணக்கம் பாஸ். உங்க இன்னொரு கமெண்ட் ஏனோ பப்ளீஷ் ஆகாம மக்கர் பண்ணுது, ரிப்பீட் ப்ளீஸ்

Anonymous said...

செம காமடியான ரசம், சாம்பார் சொட்டும் வசனங்களுடன் ரொம்ப டச்சிங்கான வசனங்களும்... சூப்பர்...

ராஜி said...

angusamy said...

யப்பா? இவ்வளவு ஞாபக சக்தி இருக்குதே?

இதை use பண்ணி நல்ல படிச்சி பரிச்சைல நல்ல மார்க் ஏதும் வாங்கி இருக்கீங்களா?
>>
12ல 200க்கு 250 வாங்கியிருக்காராம்

Unknown said...

உங்க மனசு எப்பவும் எப்படி லேசா இருக்கு? துணுக்கு மழை பொழிந்துவிட்டீர்! ஏதாவது லேகியம் சாப்டுறிங்களா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

கரண்டு போனப்ப எந்திரிச்சு கடுப்புல கமெண்ட் போடுவோர் சங்கம். அருமை நண்பரே

princely said...

@ராஜி

true..

முத்தரசு said...

என்ன எல்லாம் ஒரே பால் வாடை வீசுது