Saturday, February 25, 2012

பொண்டாட்டிகளிடம் புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்

http://lh5.ggpht.com/_lkcXFetrPfk/S2_rQvFPY9I/AAAAAAAABwI/wGactMu7sKA/kanaka4%5B4%5D.jpg

சாத்தான் சொல்லை தட்டாதேன்ற  படத்துல செந்தில் பூதமாவும், ஜனகராஜ், சந்திரசேகர்,பாண்டியன் ஹீரோக்களாகவும், கனகா ஹீரோயினாகவும் நடிச்சிருப்பாங்க. அந்த படத்துல ஒரு சீன், ஹி ஹி அந்த சீன் இல்லை. இது வேற சீன். எங்க மூணு பேருல யாரை கனகா லவ் பண்றாங்கன்னு கண்டுபிடிச்சு சொல்லுன்னு அந்த பூதத்துக்கிட்ட சொல்வாங்க. பூதமும் கொஞ்ச நேரம் டிரை பண்ணி பார்த்துட்டு..., ஓன்னு அழும், அப்போ மூணும் பேரும் என்ன விஷயம், ஏன் அழுகுறேன்னு கேட்பாங்க. மாளிகை கட்டி குடுங்கன்னு கேட்டீங்க, கட்டி குடுத்தேன், கடல் ஆழத்தை கண்டுபிடிக்க சொன்னீங்க அதையும் ஈசியா செஞ்சு முடிச்சேன். ஆனால் ஒரு பொண்ணு மனசுல இருக்குறதை என்னன்னு கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லி அழுவும்.

ஜெகஜ்ஜால வித்தை படைச்ச அந்த பூதத்தாலயே முடியாத விஷயம் சாமான்ய மனுஷங்களான நம்மால மட்டும் முடியுமா என்ன? அதனால, அவங்களா   மனசு விட்டு சொன்னாதான் உண்டு. எனக்கு தோணுன சந்தேகத்தை நான் உங்ககிட்ட கேட்குறேன். அதுக்கு யாராவது விளக்கம் சொல்லி வெளங்க வைங்க...

1. கல்யாணம் நிச்சயம் பண்ண பிறகு, மிஸ்டு கால் குடுத்து நாங்க போடுற  போன்ல உங்க அம்மாவை கொசு கடிச்சது, உங்க வீட்டு ஜிம்மி குட்டி போட்டதுன்னு மணிக்கணக்கா கடலை போடுற நீங்க ஒரு நிமிசம் செலவு பண்ணி அத்தை நல்லா இருக்காங்காளா? மாமா உடம்பு நல்லா இருக்கா? மச்சினன் பரிட்சையில பாசான்னு ஏன் கேட்க மாட்டேங்குறீங்க.

2. கல்யாணம் முடிஞ்சு மறுவீட்டுக்கு கிளம்பும்போது என்னமோ ஆப்பிரிக்காவுக்கும், அண்டார்டிக்காவுக்கும் போற மாதிரி அழுது தீர்க்குற நீங்க, தனிக்குடித்தனம் போகும்போது அம்மா அப்பாவை நினைச்சு ஒரு வார்த்தை பேசினால் கூட ”அம்மா கோண்டு”, என்னை ஏன் கட்டிக்கிட்டீங்கன்னு ஒப்பாரி வைக்குறது ஏன்?

3. உங்க அம்மா, அக்கா, ஒண்ணுவிட்ட தம்பி, ரெண்டு விட்ட அத்தைகள்கிட்டலாம் மணிக்கணக்கா போன்ல பேசும்போது பொங்காத பாலும், போகாத டவரும் எங்க அம்மா, அக்காகிட்ட பேசி இரண்டாவது நிமிசத்துல பால் பொங்கிடுது, சிலிண்டர்காரன் வந்துடுறானே எப்படி?

4. உங்க த்த்தூதூதூரத்து சொந்தங்காரங்க வீட்டு விசேசம்னா மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே புடவை, பிளவுஸ் இஸ்திரி பண்ணி, மேட்சிங் நகைலாம் எடுத்து வச்சுட்டு  பண்ணி சாய்ந்தரம் ஏழு மணி பங்க்‌ஷனுக்கு காலை அஞ்சு மணில இருந்து ரெடியாவுற நீங்க, எங்க வீட்டு பக்கம் விசேஷம் காலை பத்து மணிக்குன்னா புடவை இஸ்திரி பண்ணலை, பிளவுஸ் மேட்சில்லைன்னு சொல்லி திட்டிக்கிட்டே   வேண்டாவெறுப்பா 9.50க்கு  கிளம்புறிங்களே எப்படி?

5. உங்க அண்ணனோட மச்சினிச்சியோட சகலை பையன் வீட்டுக்கு வந்தால் நெய் மணக்க கேசரி,  முந்திரி, திராட்சை மிதக்க பாயாசம், மெதுவடை, மசால்வடைன்னு வகைக்கொணா, சாம்பார், காரக்குழம்புன்னு சமைக்குற நீங்க,எங்க அப்பா வரும்போது தலை வலிக்குதுங்க ஒரு சாம்பார், ரசம் வச்சுடுறேன், கடையில் பக்கோடா வாங்கி வந்துடுங்கன்னு சொல்றீங்களே. உங்க வீட்டு மனுசாளுங்க வரும்போது வராத ஒத்தை தலைவலி எங்க வீட்டு மனுசாள்ங்க  வரும்போது மட்டும் எப்படி கரெக்டா வருதே அதெப்படிங்க?

6.  நாள் முழுக்க கடையே தலைக்கீழாய் புரட்டி உங்க அக்கா, தங்கச்சி, அண்ணிக்கெல்லாம் சேலை எடுக்கும் நீங்க, எங்க அக்கா, தங்கச்சி, அம்மாக்கு எடுக்கும்போது பத்தே நிமிசத்துல புடவை செலக்ட் பண்றீங்களே எப்படி?

7.  கடைவீதியில் இண்டெர்வியூக்கு வந்த உங்க ஊர் பையனை பார்த்து, ஏங்க ஒரு வாரம்தானே  நம்ம வீட்டுலயே தங்கட்டும்ங்க அவன்  ஊருக்கு புதுசுங்கன்னு சொல்லும் உங்களுக்கு..., அக்கா மகன் ஏதோ ட்ரெய்ன் மிஸ் பண்ணிட்டு நைட் தங்கிட்டு காலையில போய்டுறேன் மாமான்னு பெட்டியும் கையுமா வந்து நிக்கும்போது  பொண்ணு வயசுக்கு வந்து வீட்டில் இருக்கு. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல பக்கத்துல வைக்கனுமான்னு தோணுதே எப்படிங்க?

8.  கூட பிறந்த தோசத்துக்காக அக்கா சமையலை புகழ்ந்து பேசிவிட்டு வந்த நைட்டே அதேபோல் சமைக்குறேன்னு வாய்லயே வைக்க முடியாத சமையலை சகிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, முன்ன பின்ன சாப்பாடையே பார்க்காத ஆளு மாதிரி ரசம் சூப்பர்க்கா இன்னும் கொஞ்சம் ஊத்துன்னு 4 தரம் கேட்டு வாங்கி குடிக்க தெரியுது. இங்க மட்டும் வாயில் எதோ ஒட்டிக்கிட்ட மாதிரி எதுவுமே சொல்லாம சாப்புடறதை பாருன்னு ஏழரையை கூட்டுறீங்களே எப்படி?

9.  உங்க வீட்டு விசேஷத்துக்கு நமக்குன்னு ப்ரு ஸ்டேட்டஸ்  இருக்குங்கன்னு சொல்லி இருக்குற லோன்ல போட்டு சீர் செய்ய தெரிஞ்ச உங்களுக்கு நாமளும் வீடு கட்டனும், பையனை படிக்க வைக்கனும், பொண்ணை கட்டி குடுக்கனும் அதனால் பணத்தை தண்ணியா செலவு பண்ணாஆதீங்க உங்க அக்கா பொண்ணு சடங்குக்கு சிம்பிளா சீர் பண்ணா போதும்ன்னு சொல்றீங்களே. அப்போலாம் “நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குங்குறதை மறந்துடுறீங்களே எப்படீங்க?


10.பிளாக், பேஸ்புக், ட்விட்டர், பத்திரிகைன்னு மத்த ஆம்பிள்ளைங்க படுற இம்சையை படிச்சு  எம்புட்டுதான் ஜாக்குறதையா நடந்துகிட்டாலும் எதாவது குத்தம் கண்டுபிடிச்சு நைட் எட்டு மணிக்கு மேல கரெக்டா கண்ணை கசக்குறிங்களே எப்பட்?

டிஸ்கி: இந்த பதிவை படிச்சு மகளிர் அணிலாம் சிபி மன்னிப்பு கேட்கனும் மான நஷ்ட வழக்கு போடுவோம்  இல்லாட்டி டீ குடிப்போம்  சாரி தீக்குளிப்போம்ன்னு போராட்டம்லாம் பண்ணாதீங்க. அதுக்குலாம் எனக்கு டைம் இல்ல. ஒரு நாளைக்கு 3 போஸ்ட் ரெடி பண்ணவே எனக்கு சரியா இருக்கு.இதுல கரண்ட் வேற அடிக்கடி கட் ஆகுது. நண்பர்கள் பிளாக் போக டைம் இருக்கறதில்லை. இங்கனயே, இப்பவே மன்னிப்பு கேட்டுக்குறதோட பிராயசித்தமா புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு போஸ்ட் போட்டுடுறேன்.

டிஸ்கி 2 - முதலில் இருக்கும் ஃபோட்டோ கனகா வந்த புதுசுல எடுத்தது, கீழே இருப்பது லேட்டஸ்ட் ஃபோட்டோ :((https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimV4xQCaQyA6mfpfHrnmbe4qTgHd9Qw7vmoUf2dSgF_ev-6_hVDxFDzNgwpIPR4zpGFoy8ivX3kDkcn2GEZwE9LFdcZqDpP7fvqauiJ_N3XPSDLgJIcF9mvhyphenhyphenvX_SzfFAnrTcI4D8xEw4c/s1600/kanaka2.gif

24 comments:

சாகசன் said...

தல ஆகச்சிறந்த டவுட்டுகள்

இத அப்படியே உங்க வீட்டுகாரம்மாக்கிட்ட கேளுங்க . நீங்க கேக்க மாட்டீங்க . பிகாஸ் கேட்டா பூரி கட்டையும் தோசை திருப்பியும் அப்புறம் உங்கள கொஞ்சி விளையாடும்

டிஸ்கி : மீ த பர்ஸ்ட்

ராஜி said...

இல்லற வாழ்க்கைல ரொம்ப அடிபட்டிருப்பீங்க போல.

Pulavar Tharumi said...

கலக்கலான பதிவு. பெண்களின் இந்த செயல்களுக்கு காரணம் சுயநலம் என்றே நினைக்கின்றேன். இல்லத்தரசிகளின் மீது உள்ள பற்றால் இல்லத்தரசர்களால் அவர்களை எதிர்க்கவும் முடிவதில்லை. இதே சூழ்நிலையில் ஆண்களும் இது போல் தான் நடந்து கொள்வார்கள் என்று கருதுகின்றேன் :)

கோகுல் said...

டிங் டிங் டிகானா டங் டங் டகானா.
சின்ன வயசுல தூர்தர்சனில் இந்த படம் பாத்த ஞாபகம் வந்துடுச்சு.

கோகுல் said...

லேட்டஸ்ட் போட்டோவுக்கு கண்டனங்கள்.

பொன் மாலை பொழுது said...

அதாவது ஆம்பளைகள பழி வாங்குறாங்களாம்! வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டாலும் தப்பாத்தா போகும். அந்த கருமதுக்காகவே ஏழரை நாட்டான் ரெடியா வாசல வந்து நிக்கும்.அதுசரி எதுக்கையா அந்த புள்ள கனகாவோட படத்த போட்டீரு? பாவமா இருக்கய்யா.

முத்தரசு said...

வணக்கம்..

Anonymous said...

1. நாங்க மச்சினன பாசானானு கேட்டாதானே, நீங்க மச்சினி, கொழுந்தியா பத்தி கேட்க முடியும் அதுக்கு தான... அதான் நாங்க உசாரா கேட்கறதில்லை...

முத்தரசு said...

கனகாவா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

முதல் கேள்விக்கு எப்படியோ பதில் சொல்லிட்டாலும், மத்த கேள்விக்கெல்லாம் பதிலே வரலை, நாங்க அப்படிதான், நாங்க கேள்வி கேட்டா பெரிய லிஸ்டே இருக்கு,

Unknown said...

வீட்டுக்காரம்மா பதிவை படிக்கமாட்டாங்க என்பதால், தைரியமாக பதிவு போட்ட தைரிய திலகத்துக்கு வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கும் உன் மேல ரொம்பநாளா டவுட்டு இப்போதான் கிளியர் பண்ணி இருக்கே அண்ணே, நல்லாத்தான் உன் சொம்பு நசுங்கி இருக்கு மாட்டுனியா ராஸ்கல்.

MANO நாஞ்சில் மனோ said...

இந்தவார ஆனந்தவிகடனில் உன் ஜோக் ஒன்னு வந்துருக்கு வாழ்த்துக்கள்டா அண்ணா...!!!

முரளிகண்ணன் said...

100% உண்மை

Anonymous said...

சரியா போட்டீங்க கொண்டை ஊசியை அம்மணிகள்மேல்.பெண்பதிவர்கள் ஜீரணிக்கிறாங்களா? இல்லை சிபிக்கு துறவற வாழ்க்கை வழங்கனுமென்று போர்க்கொடி தூக்கிக்கிறாங்களா?பார்ப்பம்.
இன்று என் வலையில் பெண்களை Touching செய்வது எவ்வாறு? என்று செயல் விளக்க பதிவு இட்டுள்ளேன்.அந்தப்பக்கமும் கொஞ்சின்டு தலை காட்டுங்களேன்.
http://www.googlesri.com/2012/02/touching.html

முத்தரசு said...

இந்த பதிவை மெயிலில் எனக்கு அனுப்புக.

Jaleela Kamal said...

கரகாட்டக்காரன் கனகாவா?

ஹாலிவுட்ரசிகன் said...

அதானே ... கட்டாயம் கேட்கவே வேண்டிய கேள்விகள். சொந்த அனுபவங்கள் பதிவில் இருக்கிறா மாதிரி தெரியுது???

Yoga.S. said...

நல்லா "பட்டிருக்காரு"ன்னு தெரியுது!ஆழ்ந்த அனுதாபங்கள்!(எப்புடியோ,ரொம்ப தாங்க்சுங்க!நம்மளால முடியாதத............!)

RAMA RAVI (RAMVI) said...

டிஸ்கியெல்லாம் சரி..உங்க வீட்டம்மாகிட்ட இந்த கேள்வி எல்லாம் கேட்டு பதில ஒரு பதிவா போடுங்க....

கடைசில படம் கனகாவா?? என்ன இப்படி இருக்காங்க??

மகேந்திரன் said...

எல்லாம் போக போக பழகிடும் நண்பரே..

விஸ்வநாத் said...

ஊட்ல அக்கா browse பண்ண மாட்டாங்கன்ற தெகிரியத்துல தான எழுதுனிய,
பிரிண்ட் அவுட் எடுத்து போஸ்ட் பண்ணிர்ரே; அட்ரஸ் குடுங்க நண்பா;

இரா .லட்சுமணன் said...

அருமையான பதிவு ,சி பி க்கு வீடுகாரம்மா ப்ளாக் படிக்கிறதில்லை அதனால தையிரியமா எழுதுறார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

5-வது கேள்வில மச்சினிச்சியோட சகலைன்னு சொல்லி இருக்கீங்களே அது எப்படிண்ணே மச்சினிச்சிக்கு சகலை வரும்? டெகினிகல் ஃபால்ட்.......