Friday, February 03, 2012

மெரீனா - குழந்தைக்கல்வியின் அவசியம் - சினிமா விமர்சனம்

http://moviegalleri.net/wp-content/gallery/marina-movie-wallpapers/marina_movie_wallpapers_150.jpgஒரு பிரமாதமான படைப்பை தன் முதல் முயற்சியாக தந்து வெற்றி பெறும் ஒரு புதிய  படைப்பாளி அதற்கான மக்கள் அங்கீகாரம்,வியாபார ரீதியான வெற்றி இரண்டையும் ஒருங்கே பெறுகையில் ஜென்ம சாபல்யம் அடைகிறான்.. அவனது அடுத்த படைப்பு எது மாதிரி வரும் என்ற அதீத எதிர் பார்ப்பை தூண்டி விடுகிறான்..ஆனால் சில சமயங்களில் அந்த வெற்றி அந்த படைப்பாளன் மனதில் அதீத தன்னம்பிக்கையையும்,நாம் எது சொன்னாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற தவறான எண்ணத்தையும் தானாகவே ஏற்படுத்தி விடுகிறது.. எடுத்துக்கொண்ட கரு பாராட்டும் விதமாக இருந்தாலும் சொன்ன விதம் சீராட்டும் விதமாக இல்லாமல் போவதற்கு வெற்றி கொடுத்த  லேசான கர்வமும் ஒரு காரணம் ஆகி விடுகிறது.. 

பசங்க படத்தின் மூலம் விருதை அள்ளிய பாண்டி ராஜ் வம்சம் படம் தந்து இப்போது மெரீனாவில் லேசாக சறுக்கி விட்டார்.. மெரீனாவில் சுண்டல் விற்கும் சிறுவர்கள் வாழ்க்கை, அவர்களை சுற்றிய மனிதர்களின் ஒரு மேலோட்டமான பார்வை இதுதான் கதை..

பசங்க படத்தின் பாதிப்பு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சிவ கார்த்திகேயன் -ஓவியா லவ் ஸ்டோரியை வலிய திணித்து இருக்கிறார்கள்.. அது அதிமுக -தேமுதிக கூட்டணி மாதிரி ஒட்டாமல் தனித்து தெரிகிறது.. 

http://moviegalleri.net/wp-content/gallery/marina-movie-images/marina_movie_stills_94.jpg
உலகப்புகழ் பெற்ற இட்லி, கெட்டி சட்னி பார்சல் கிஃப்ட் சீன் 


இயக்குநர் தனிப்பட்ட முறையிலோ, தன்னை சுற்றி இருப்பவர் வாழ்க்கை மூலமோ பெண்ணால் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.. அதற்காக பெண்ணையும், காதலையும் இவ்வளவு கொச்சைப்படுத்தி இருக்க வேண்டாம்.. 

இந்தக்காலப்பெண்கள் பைக்கையும், செலவு செய்யும் ஒரு ஆளும் கிடைத்தால் லவ்க்கு ஓக்கே சொலிவிடுவார்கள், டக்குனு கழட்டி விட்டுட்டு அடுத்த ஜோடியை தேடிப்போயிடுவாங்க என்ற ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தை காலேஜ் ஸ்டூடண்ட்ஸின் 2 நிமிஷ கை தட்ட்ல்க்கு ஆசைப்பட்டு வலிய திணித்து இருக்கிறார்.. 

 சிவ கார்த்திகேயன் டி வியில் கலக்கியவர் பார்க்க இதில் பரிதாபமாக இருக்கார்.. பிரமாதமான கிரியேட்டிவிட்டியும், டைமிம்ங்க் சென்ஸ்ம் உள்ள இவர் எஸ் எம் எஸ் ஜோக்ஸ் வெச்சு ஒப்பேற்றுவது சகிக்கலை.. அவர் கூட வரும் நண்பர் கேரக்டர் பரவாலை.. கொஞ்சம் மொக்கை கம்மியா போடறார்.. அடுத்த படமாவது கை கொடுக்க வாழ்த்துகள்.
ஓவியா பாவம் பம்ஸ் குட்டி லாபம் ஹி ஹி கொழுக் மொழுக் என்று ஆள் நல்லா தான் இருக்கார். கேனை கேரக்டர் கிட்டத்தட்ட.. வெச்சிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும்  சிவாவை அம்போ என விட்டு வேறு ஒருவருடன் மணம் புரியும் காட்சியில் காதல் கேலிக்குரியதாகி விடுகிறது;

சிவகார்த்திகேயனுக்காகவும்,சொப்பன சுந்தரிக்காகவும் (ஓவியா)படம் பார்க்கலாமா? அவங்க வர்றதே மொத்தம் 8 சீன் தான் ஹி ஹி கெஸ்ட் ரோல்

http://moviegalleri.net/wp-content/gallery/oviya-new-cute-pictures/oviya_cute_stills_marina_movie_97.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பத்து பைசா செலவில்லாமல் முழு படத்தையும் பீச்சில், சின்ன பசங்களை வேலை வாங்கியே முடிச்சது ( படத்தை, புரொடியூசரை) இதுல அண்ணன் தான் புரொடியூசர் வேற

2. சின்னப்பசங்களுக்கு வாழ்த்து கார்டு அனுப்புவது, தன் மகள் மேரேஜ்க்கு அழைப்பது என அந்த போஸ்ட் மேன் கேரக்டரின் நடிப்பும், கேரக்டரைசேஷனும் செம.. 

3.  ரெண்டு பசங்களுக்கும் ரன்னிங்க் ரேஸ் வைக்கும் போது வரும் துள்ளலான பின்னணி இசை மற்றும் லாங்க் ஷாட்டில் கடல் அலை நுரையாய் பொங்கி கரையை நனைக்கும் அந்த அட்டகாசமான ஒளிப்பதிவு ஸ்பெஷல் ஷாட்

4.  தன் மகன் மருமகளுடன் சேர்ந்து தன்னை ஒதுக்குவதால் மனம் வருந்தி அவனை பழி வாங்க வீட்டை விட்டு வெளீயேறி பீச்சில் பிச்சை எடுக்கும் பெரியவர் கேரக்டர் நடிப்பு கலக்கல்

5.  அப்பப்ப டைமிங்க் டயலாக் அடித்து கை தட்டல் வாங்கும் சேகுவாரா கெட்டப்பில் வரும் மன நிலை குன்றிய பாத்திரம் நடிப்பு, ஒப்பனை செம.. 

6. சிறுமியை வைத்து வித்தை காட்டி பிழைக்கும் பாட்டுக்காரன் நடிப்பு பாராட்டும் விதம்.. 

7. ஒளிப்பதிவு பக்கா.. கடற்கரையை அழகாக காட்டிய விதம். அப்புறம் பக்கோடா பாண்டி, கவுதம் புருஷோத் இரு சிறார்களின் நடிப்பு கன கச்சிதம்


8. பாடல்கள் மெலோடிஸ்.. வணக்கம் வாழ வைக்கும் சென்னை பாடலில் சென்னையையே ஒரு ரவுண்ட் வந்தது மாதிரி ஒரு ஃபீலிங்க்.. ஏலேலோ பொங்கும் கடல்,காதல் ஒரு தேவதையின் கனவா? , நண்பன் அருகில் இருந்தால் கிடையாது ஒரு கவலை என எல்லா பாடல்களுமே போர் அடிக்காமல் எடுத்த விதம்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/marina-movie-wallpapers/marina_movie_wallpapers_058.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய சில  லாஜிக் மிஸ்டேக்ஸ் & இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்காலத்துல பசங்க ரொம்ப ஷார்ப் மூளை, ஆனா சிவ கார்த்திகேயனை செம  பேக்கு மாதிரி காட்டி இருக்கீங்க, அது ஏன்?காதலிக்கு வித்தியாசமான கிஃப்ட் தர்றேன் பேர்வழின்னு  ஒரு பெரிய பார்சலை தர்றார்.. ஓவியா .. அதை பிரிச்சா மறுபடி உள்ளே ஒரு பாக்ஸ்,, இதே போல் 13 பாக்ஸ் , கடைசில பார்த்தா அதுல 2 இட்லி, கெட்டி சட்னி .. அட ஆண்டவா.. இது காமெடியா? ஓவியா பேக்கு மாதிரி அதை சாப்பிடறார்.. சாப்பிட்ட பின் அய்யே, கெட்டிருக்கே? என கேட்க அதுக்கு சிவா நேத்தே பேக் செஞ்சது அப்டிங்கறார் அய்யோ ஹய்யோ.. தேங்காய் சட்னி 5 மணி நேரத்தில் கெட்டு ஸ்மெல் அடிக்கும், 24 மணி நேரம் கழிச்சு ஓப்பன் பண்ணா ஊரையே தூக்கும்.. அதை எப்படி ஓவியா வாயில் போட்ட பின் கெட்டிருக்குனு கண்டு பிடிக்கறார்.. 

2.  ஒரு சீன்ல செம சூடான போண்டாவை வாயில் போட்ட ஃபிகர் சுடு தண்ணியை  கையில் ஊற்றியது போல் கையை உதறுகிறார்.. எங்க ஊர்ல எல்லாம் சூடா இருந்தா துப்பிடுவோம் ஹி ஹி 

3.  யதார்த்தமான சிறுவர் வாழ்க்கையை காட்றேன் பேர்வழின்னு யூரின் பாஸ் பண்ற சீன்கள் மட்டும் 8 முறை காட்டிய அஷ்டாவதானி அவ்வ்வ்வ்வ் 

4.  இடைவேளை சஸ்பென்ஸூக்காக காட்டப்படும் அந்த சிறுவனின் கைதுப்படலம் ரொம்ப நீளம்.. ஷார்ட்டா கட் பண்ணி இருந்தா சோகத்தின் வீரியம் தூக்கலா இருந்திருக்கும், இப்படி இழுத்தா போர் அடிக்கும்..

5.  அந்த வித்தை காட்டும் சிறுமி வாமிட் பண்ற சீனை அவர் முதுகுக்குப்பின் கேமராவை வைத்து எடுக்கக்கூடாதா? அவர் நேரா கேமராவில் எடுக்கார்.. நம்ம மேலயே எடுக்கற மாதிரி ஒரு ஃபீல் உவ்வே.. 

http://indianmirrors.com/wp-content/uploads/2010/07/HotActressOviya.jpg

6.  அந்த சின்னப்பசங்களுக்கு ஒரு போட்டி வைக்கற சீன்ல சும்மா ஓட்டப்பந்தயம் மாதிரி வெச்சிருக்கலாம்.. குதிரை ரேஸ் மாதிரி வெச்சா  சென்னைல எங்கே பீச்ல அத்தனை குதிரைங்க வரும்? ஜாக்கி வாடகை, குதிரை வாடகைக்கு எல்லாம் பசங்க என்ன செய்வாங்க?

7. இன்ஸ்பெக்டர் பையனை சுண்டல் விற்கும்  பையன் கல்லால் அடிச்சுடறான்.. அது தலைல பட்டு சீரியஸ் ஆகறான்.. உடனே இன்ஸ்பெக்டர் அவருக்குக்கீழே வேலை செய்யும் இரு போலீஸ்காரர்களை ஃபிக்ஸ் பண்ணி அந்தப்பையனை கண்டு பிடிக்க அனுப்பறார்.. யார் அடிச்சா? அவன் எப்படி இருப்பான்? ஃபோட்டோ எதுவுமே இல்லாம அந்த லூஸ் போலீஸ்ங்க படம் பூரா சுத்திட்டே இருக்கு.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அவனை கொண்டு போய்  எஸ் ஐ முன்னால நிறுத்துனா அவர் தன் பையனை விட்டு அவன் தலைல 10 கொட்டு வெச்சு அனுப்பிடறார்/ அவ்வ்வ்வ் ஆவ்வ்வ்

8. சிவ கார்த்திகேயன் யாரு? அவர் பேக் கிரவுண்ட் என்ன? ஓவியா யாரு? அவருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? என கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு பவர் ஸ்டார் -ன் ஆனந்த தொல்லை டி வி டி பார்சல்..

படத்தின் ஸ்டில்ஸ், பேப்பர் விளம்பரங்கள், போஸ்டர்கள் டிசைன் எல்லாம் சூப்பர்.. ஆனா படம் தான் ஹி ஹி 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 ( பசங்க -50)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

http://3.bp.blogspot.com/-aYLk2zvTndQ/Tw8AeUn1oTI/AAAAAAAAHpg/fDOC3zw8Jhg/s1600/Oviya%252C+hot+glamor+actress%252C+tamil+actress+Oviya+stills%252C+Oviya+photos.jpg

சி.பி கமெண்ட் - காதலி மேல் காண்ட் ஆனவங்க , பெண்கள் மேல் வெறுப்பு உள்ளவங்க, காதல் மேல் நம்பிக்கை இல்லாதவங்க ,பெண்களை எப்படி எல்லாம் டீஸ் பண்ணலாம்னு நினைக்கறவங்க, பொழுது போகாத பொம்முகள்,அனைவரும் இந்த படத்தை பார்க்கலாம் ஹி ஹி

 ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்.. அதே தியேட்டரில் தான் அடுத்த வாரம் முப்பொழுதில் உன் கற்பனைகள் வருதாம்.. தெரிஞ்சே தான் படத்தை புக் பண்ணி இருக்காங்க போல ஹா ஹா 

24 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

அடடா ... பின்றீங்களே தல. என்னா ஸ்பீடு. இருங்க வாசிச்சுட்டு வாறேன்.

ஹாலிவுட்ரசிகன் said...

அய்யோ ... ரொம்ப எதிர்ப்பார்த்தேனே??? பேசாம போய் ஏதாவது ஹாலிவுட் படம் ஒன்ன எடுத்து பார்க்கப்போறேன்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சிவா.

தாமரைக்குட்டி said...

அப்போ என் காப்பி? பீப்பீயா..... அவ்வ்வ்வ்....

sutha said...

thanx a lot for warning us : ))

தாமரைக்குட்டி said...

ரொம்ம்ம்பபப எதிர்பார்த்துட்டேனோ?

Unknown said...

யோவ் படம் எடுத்த மனுசன் முதல் நாள் எப்படிப்போகுதுன்னு தெரிஞ்சிக்கரதுக்குள்ளார இப்படி வெளுத்துட்டியே...ஹிஹி...மாட்னார் மம்பட்டியான்!

Anonymous said...

பெண்களை கேவலப் படுத்தரதும் கேவலமா காட்டரதும் காமெடினு நினச்சுகராங்க, ப்டம் தேறாதா?

சி.பி.செந்தில்குமார் said...

@எனக்கு பிடித்தவை

கோவிந்தா

Marc said...

ஆகா படம் அவ்வளவுதானா?பதிவு சூப்பர்

கும்மாச்சி said...

படம் ஊத்திக்கிச்சா.

ராஜ் said...

பாஸ்,
நான் இந்த படத்தை ரொம்ப எதிர் பார்த்தேன் .......உங்க விமர்சனம் அதை பொய் ஆக்கி விட்டது.....
ஒரு கருத்து......இந்த மாதிரி படம் பார்க்கும் போது நம்ப மனநிலை கூட ரொம்ப முக்கியம்....நல்ல சந்தோஷ மூடுல இருந்தா வேற பீல் கிடைக்கும்.....
எனக்கு பசங்க படம் முத தடவை பிடிக்கல...கொஞ்ச நேரத்துல படத்தை நிறுத்திட்டேன்....அதே படத்தை கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கும் போது ..எனக்கு ரொம்ப பிடிசிருந்து....

விச்சு said...

விமர்சனம் நன்று."அதிமுக - தேமுதிக மாதிரி" - நல்ல கமெண்ட்.

Anonymous said...

மொத்தம் 45 ஜோக்ஸ் தேறுச்சு..அது தனிப்பதிவு// எது நடந்தாலும் உங்க வேலைல கரெக்டா இருக்கீங்க சார்!

Anonymous said...

தமிழ்சினிமாவில் இன்னொரு தோல்விப்படமா? நமக்கே அயற்சியா இருக்கே அப்ப டைரக்டர்களுக்கு எப்டி இருக்கும்? விமர்சனத்தில் இருக்கிற முதல் பாராதான் சூப்பர். இது வெளியில் இருக்கும் நமக்குத் தெரிகிறது.அவர்களுக்குத் தெரிவதில்லை.

நெல்லை கபே said...

ஏது இவ்ளோ வேகமா விமர்சனம். விட்டா அவரோட அடுத்த படத்துக்கு விமர்சனம் போடுவீங்க போல. எனிவே...எச்சரித்ததுக்கு நன்றி!

நெல்லை கபே said...

இனி அவர்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி விஜய் டிவிலயோ இல்ல ராஜ் டி.வியிலயோ இன்று இல்ல நாளை எல்லாரும் வந்து கூட்டமா கதை அளக்கப் போகிறார்கள் இது வெற்றிப்படம் என்று!

நெல்லை கபே said...

இனி அவர்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி விஜய் டிவிலயோ இல்ல ராஜ் டி.வியிலயோ இன்று இல்ல நாளை எல்லாரும் வந்து கூட்டமா கதை அளக்கப் போகிறார்கள் இது வெற்றிப்படம் என்று!

Yoga.S. said...

தேங்காய் சட்னி ஐந்து மணி நேரத்தில் கெட்டுவிடும்!////அனுபவம் பேசுது!!!ஓவியா?????????

Anonymous said...

சிவாவுக்காக பார்க்கலாம்.....

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்

///கோவிந்தா....///

பாவம்ங்க சிவகார்த்திகேயன்

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

cheena (சீனா) said...

அட = வழக்கம் போல வேகமான பதிவு - எங்க ஊட்டுக்குப் பக்கத்துல ஓடுது - பாக்கலாம்னு நினைச்சேன் - சரி கொஞ்ச நாள் கழிச்சுப் பாக்கறேன் - நட்புடன் சீனா

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்றாக இருக்கு.
முதல் பத்தியில் ஒரு படைப்பாளி பற்றிய கருத்து சிறப்பாக சொல்லியிருக்கீங்க..

Riyas said...

சொந்தக்காச போட்டு உருப்படியா ஒரு படம் பண்ண முயற்சி பண்ணியிருக்கார்..

அதில் குறைகள் இருக்கலாம் ஆனால் அவர் சொல்ல வந்த விடயம் சிறப்பானதுதானே?

ஏன் இப்படி கண்டதையும் சொல்லி படம்பார்க்க போறவங்களயும் தடுக்கிறிங்க..

படத்தில் சிவகார்த்திகாயேயன் கேரக்டர் முக்கியமில்லை அதை விட அந்த குழந்தை தொழிலாளர்களைத்தானே அதிகம் காட்டியிருப்பார்..

நீங்கள் எதிர்பார்த்தது இல்லாததுக்கு படத்தை குறை சொல்ல முடியாது..