Tuesday, December 09, 2025

KALAM KAVAL - களம் காவல் (2025) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )

         

      கர்நாடகாவில் வாழ்ந்த சயனைடு மோகன் குமார் என்ற சீரியல் கில்லரின் வழக்கைத்தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.2003 ல் இருந்து 2009 க்குள் 20 பெண்களைக்கொலை செய்த சீரியல் கில்லர் இவன்


மம்முட்டியின்    சொந்தப்படம் இது.விமர்சகர்கள் பலரும் இது மாதிரி  நெகடிவ் ஷேடில் தமிழில் நடிக்க யாருக்குத்துணிச்சல் இருக்கிறது?என எழுதி இருந்தார்கள்.படத்தில் 18  ஜோடிகள் என்பதால் கமல்,கார்த்திக், சிம்பு  உட்பட பலரும் தயாராக இருப்பார்கள் என்பதே என் கருத்து.        


5/12/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி முதல் 5 நாட்களில் 44 கோடி  வசூல் குவித்த இந்தப்படம்  4/1/2026 முதல் சோனி லைவ் ஓடி டி யில் வெளி வர இருக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.ஒரு சாதியக்கலவரத்தில் ஒரு பெண்ணால் அபாண்டமாகக்குற்றம் சாட்டப்பட்டு ட்ரான்ஸ்பர் ஆகிறார்.அந்தப்பெண்ணைப்பற்றி விசாரிக்கும்போது அந்தப்பெண் மிஸ்சிங்க் கேசில் பைல் ஆகி இருப்பதைக்கண்டு பிடிக்கிறார்.அதைத்தொடர்ந்து கேரளா ,தமிழக பார்டரில் பல பெண்கள் மிஸ்சிங்க் ஆவதைக்கண்டு பிடிக்கிறார்.ஆனால் குற்றவாளியைப்பிடிக்க முடியவில்லை


வில்லன் ஒரு சைக்கோக்கில்லர்.பெண்களைத்தன் பேச்சில் மயக்கி  கரெக்ட் பண்ணி ,சம்பவம் பண்ணிக்கொலை செய்பவர் ( ஆனால் நிஜ சயனைடு மோகன் நகைக்காகக்கொலை செய்தானாம்).வில்லனுக்கு அழகான குடும்பமும் உண்டு.ஆனால் குடும்பத்தில் இந்த விஷயம் தெரியாது.


ஒரு பக்கம் வில்லன் தன் லீலைகளை,கொலைகளை அரஙகேற்றிக்கொண்டே இருக்க வில்லனைப்பிடிக்க நாயகன் போடும் திட்டஙகள் எப்படி ஒர்க் அவுட் ஆனது என்பது தான் மீதிக்கதை.


நாயகன் ஆக  வினாயகன் கச்சிதமாக நடித்திருக்கிறார்.அவரது உடல் மொழி அபாரம்.போலீஸ் யூனிபார்ம் இல்லாமலேயே டிபார்ட்மெண்ட் கம்பீரம் கொண்டு வருகிறார்.ஆனால் அவர் ஹேர் ஸ்டைல் சரி இல்லை.கவனம் காட்டி இருக்கலாம்.


வில்லன் ஆக மம்மூட்டி.ஜாலியான  கேரக்டர்.நடிக்கப்பெரிய சிரமம் இல்லை.பெண்களைக்கரெக்ட் பண்ற மாதிரி பேசுவதும் கொலை செய்வதும் அசால்ட் ஆக செய்கிறார்.அவர் சிகரெட் ஊதும் அழகே தனி 


ஜிபின் கோபிநாத் நடிப்பு கச்சிதம்.காயத்ரிஅருண்,ரஜிசா விஜயன்,ஸ்ருதி ராமச்சந்திரன்,மாளவிகாமேனன்,தன்யா அனன்யா அனைவர் நடிப்பும் கச்சிதம்


முஜீப் மஜித்தின் பின்னணி இசை அபாரம்.பல சீன்களில் டெம்ப்போ ஏற்றுகிறார்.பைசல் அலியின் ஒளிப்பதிவும் அபாரம்.18 பெண்களுக்கும் க்ளோசப் ஷாட்கள் அழகு.

பிரவீன் பிரபாகரின் எடிட்டிஙகில் படம் 144 நிமிடஙகள் ஓடுகிறது.முதல் பாதி நல்ல வேகம்.பின் பாதி கொஞ்சம் ஸ்லோ.

ஜிஷ்னு ஸ்ரீகுமாருடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர்  ஜிதின் கே ஜோஸ்


சபாஷ்  டைரக்டர்


1 நாயகனும் வில்லனும் சேர்ந்து கொள்ளும் இன்டர்வெல் பிளாக் சீன் அருமை

2 பொதுவாகக்கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படஙகளில் கையாளப்படும் பாணி இல்லாமல் புது பாணியில் விசாரணை நடப்பது அருமை.

3 வில்லனைப்பிடிக்க வில்லனே நாயகனுடன் சேர்வதும் வித்தியாசமான கான்செப்ட்டே

4 வில்லன் கரெக்ட் பண்ணும் 18 பெண்களையும் குடுன்பப்பாங்கான ,அழகான பெண்களாகத்தேர்வு செய்த  சாமார்த்தியம்

5  கதைக்களம் 18+ ஆக இருந்தாலும் காட்சி அமைப்பில் கண்ணியம் மாறாத தன்மை


  ரசித்த  வசனங்கள் 

1 டியர்.நியூஸ் பார்த்தீங்களா?நல்லாப்பழகுன பெண்ணைக்கொல்ல ஒருத்தனுக்கு எப்படி மனசு வரும்? எப்படிக்கொன்றிருப்பான் ?


இதோ இப்படித்தான்

2. நம்மைக்கடிக்கும் கொசுவைக்கொல்லும்போது நமக்கு ஒரு ஆத்ம திருப்தி வரும்.அது மாதிரி தான் கொலைகள் செய்யும்போது எனக்கு ஒரு திருப்தி

3.  சீறிவரும் பாம்பைக்கொல்வதில் ரிஸ்க் இருக்கு.சவாலும் இருக்கு.அதில் ஒரு எக்ஸ்ட்ரா திருப்தி இருக்கு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனுக்கு தான் தேடி வரும் பெண் காணாமல் போனதுக்கும் ,காணாமல் போன மற்ற பெண்கள் கேஸ்க்கும் சம்பந்தம் இருப்பதை எப்படிக்கண்டு பிடிக்கிறார்?என்ற விபரம் சொல்லப்படவில்லை

2 வில்லன் தான் கொல்லும் பெண்கள் ஒவ்வொருவரின் டெட் பாடியைப்பார்த்து விட்டுத்தான் இடத்தை விட்டு நகர்கிறார்.அந்த ஒரு பெண்ணை மட்டும் மாத்திரை மட்டும் தந்து விட்டு அசால்ட் ஆக நகர்வது எப்படி?

3 உயிர தப்பிய பெண்ணை உயிரோடு விடுவது ஆபத்து என்பது தெரியாதா? வீடுவரை வந்து மிரட்டி விட்டு மட்டும் போவது எப்படி? எத்தனையோ கொலை செய்பவர் அந்தப்பெண்ணையும் ஏன் கொல்லவில்லை?

4 வில்லனுக்கு நிஜத்தில் 70+ வயது.கதைப்படி 40+.ஆனால் பல பெண்களை ஈசியாகக்கரெக்ட் செய்கிறார்.அது எப்படி?என்ற டீட்டெய்லிங்க் இல்லை

.சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் எப்படி கரெக்ட் பண்றார் என்ற டீட்டெய்லிங்க் இருக்கும்.காரணம் திரைக்கதை உதவி கே பாக்யராஜ்.ஆனால் இதில் அது மிஸ்சிங்.ஆனால் அந்த விஷயத்தில் கோட்டை விட்டவர்கள் பிகர்கள் செலக்சனில் விட்டதைப்பிடித்தார்கள்.

5. வில்லனுக்கு கொலை செய்வதில் ஒரு இன்பம் கிடைக்கிறது எனில் அவன் பாட்டுக்கு எதிர்ப்பட்ட எல்லோரையும் கொல்லலாமே? ஏன் சிரமப்பட்டு கரெக்ட் பண்ணி அநுபவித்துப்பின் கொல்ல வேண்டும்? இது தனி ட்ராக்.அது தனி டிராக்.எதுக்கு மிக்ஸ் பன்றான்? இந்த விபரமும் இல்லை

6 க்ளைமாக்சில் நாயகனுக்குத்தன் சுயரூபம் தெரிந்து விட்டது என்பதை உணரும் வில்லன் டக்கென தப்பிக்கப்பார்க்காமல் அவர் கூட சோலோ பைட் போட்டுட்டு இருக்கான்.

7 கருத்தடை மாத்திரை எனப்பொய் சொல்லி வில்லன் தான் கரெக்ட் செய்த பெண்களுக்கு எல்லாம் தருகிறான்.குழந்தை பாக்யத்துக்கு ஆசைப்படும் பெண் அதை சாப்பிடாமல் விட வாய்ப்பு இருக்கு என்ற கோணத்தில் சிந்தித்து பிளான் பி எதுவும் வில்லன் போடாதது ஏன்?

8 வில்லன் 24 மணி நேரமும் பொம்பளைப்பொறுக்கியோகவே சுத்திட்டு இருக்கான்.சொந்த சம்சாரத்துக்கு டவுட் வராதது ஏன்?நாம 10 நிமிசம் வீட்டுக்கு லேட்டா வந்தாலே பாடாய்ப்படுத்தறாங்க.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மம்முட்டி ரசிகர்கள் மட்டுமல்லாமல் க்ரைம் திரில்லர் ரசிகர்களும் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5.



0 comments: