Tuesday, October 21, 2014

சூப்பர் ஸ்டார் ஒரு சிறந்த வர்த்தகர்.மார்க்கெட்டிங் மன்னர்.எப்படின்னா.....


மழை வந்தால் முதலில் சந்தோஷப்படுவது விவசாயி தான்.அவன் படும் எல்லா கஷ்டங்களையும் நட்டங்களையும் ஒரே ஒரு மழை போக்கி விடும்


================


எம் ஜி ஆர் ,கலைஞர் எல்லாரும் சம்பாதிச்சாங்க.ஆனா அதை பட்டவர்த்தமா யாரும் ஜெ போல் காட்டிக்கலை.அதான் மாட்டிக்கலை


==================
நம்மை மாதிரி நடுத்தர மக்களுக்கு என்ன திருப்தின்னா சம்பாத்யம் கம்மியா இருந்தாலும் குடும்பத்தோட சொந்த ஊர்ல இருக்கோம்


=================


4
கத்தி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு நான் கொஞ்சம் கொஞ்சமா இளைய தளபதி ரசிகனா ட்யூன் ஆகிட்டு வர்றேன்.================


5
பஸ்ல ஸ்டேண்டிங்கில் வரும் காலேஜ் /ஆபீஸ் பொண்ணுங்க ஹேன்ட் பேக் மடில வெச்சுக்க அடிச்சுக்கறானுங்க ;-)))


================


6
இளைய தளபதியின் வளர்ச்சிக்குக்காரணமாக இருந்தவர்களே இன்று அவருக்கு முட்டுக்கட்டையாகவும். 1SAC யின் அரசியல் ஆசை 2 ரசிகர்களின் போஸ்டர்


===============


7

பொது வெளியில் மற்றவர் முன் உங்கள் அன்புக்குரிய தோழி/காதலி/மனைவி யை நோஸ்கட் செய்து விடாதீர்கள்.நேசத்தில் விரிசல் விழுந்து விடும்


===============மழையில் நனைந்த பூமியும் ,முத்தத்தில் நனைந்த உதடும் அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்க வல்லவை


=================கத்தி யை 22 10 14 தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணாமல் 17 10 14 ரிலீஸ் செஞ்சா வசூல் ஒரு அள்ளு அள்ளிடலாம்


===============


10
ரப்பர் தோட்டமே சொந்தமா இருந்தாலும் ஒரு ரப்பர் பேண்ட் கூடப்போடாமல் கூந்தலை அலை பாய விடும் ரப்ரி தேவி நீ!


======================

11
சூப்பர் ஸ்டார் ஒரு சிறந்த வர்த்தகர்.மார்க்கெட்டிங் மன்னர்.அவர் படம் ரிலீஸ் ஆகும்போதுு அரசியல் பிரவேசம் பற்றிய பரபரப்பை கிளப்பிவிடுவார்================


12
வெத்தலை பாக்கும் போடலை.மருதாணியும் வைக்கலை.லிப்ஸ்டிக் வாங்கவும் உன் கிட்டே காசில்லை.ஆனா உதடு சிவந்திருக்கே எப்படி?# இது ஒரு கவிதை


===============


13 
தங்க விக்ரகம் மாதிரி இருக்கும் பொண்ணு தகர டப்பா மூஞ்சி தறுதலையிடம் கடலை போடுவதை அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பதும் ஜென் நிலை தான்================


14
கோயில் பக்கமே தலை வெச்சுப்படுக்காம இருந்து அன்னதானம் நடக்கும்போது மட்டும் மஞ்சள் கலர் கர்ச்சீப் போட்டு முதல் ஆளாய் இடம் பிடிப்பான் தமிழன்


==================


15 
நாளைய சூப்பர் ஸ்டார் படம் தீபாவளி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு கெட்டப் சேஞ்ச்/டிபி சேஞ்ச் பண்ணலாமா என யோசித்துக்கொண்டிருப்பது உங்கள் அபிமான சிபி


===================


16 
80 செமீ துணியில் எம்ப்ராய்டரி ஒர்க் எல்லாம் பண்ணி அசத்தும் அல்டாப் பிகரே!ஏக்கரா கணக்கில் முதுகுப்பரப்பை சிந்து சமவெளி ஆக்கியது ஏனோ?


====================


17
பஸ்ல ஏறுன காலேஜ் பொண்ணு என் பக்கத்து சீட் பையன் கிட்டே நேரா வந்து ஒரு பளார் அறை குடுத்துது.பதறி எந்திரிச்ட்டேன்.அப்புறம் குட் மார்னிங்குது


=================


18
தாலி கட்டிய சொந்த சம்சாரம் என்ன திட்டினாலும் இந்த காதுல வாங்கி அந்தக்காதில் விட்டுடும் எல்லோரும் அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியானவரே!


================


19
வெற்றிகரமான 3 வது வாரம் /திமுக வுக்கு துக்ககரமான 15 வது நாள் / அதிமுக வுக்கு பர பரப்பான 15 வது நாள் / மக்களுக்கு


===================


20 

டேமேஜர் போன் பண்ணி " ரிப்போர்ட்டை மெயில் பண்ணுங்க"ன்னாரு.நெட் கட்.அதனால் மெயில் போகமாட்டேங்குதுனு ஒரு மெயில் அனுப்பிட்டேன்


====================

1 comments:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்